தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

View previous topic View next topic Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by மகா பிரபு Mon Aug 26, 2013 5:30 pm

மன்னராட்சியின் சுவடுகளைத் தாங்கிய வரலாற்று நகரம்.

[You must be registered and logged in to see this image.]


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் புதுக்கோட்டை
பரப்பு 4,663 ச.கி.மீ.
மக்கள்தொகை 14,59,601
ஆண்கள் 7,4,300
பெண்கள் 7,35,301
மக்கள் நெருக்கம் 314
ஆண்-பெண் 1,015
எழுத்தறிவு விகிதம் 71.12
இந்துக்கள் 12,94,101
கிருத்தவர்கள் 66,432
இஸ்லாமியர் 97,723

புவியியல் அமைவு

அட்சரேகை: 90.50-100N
தீர்க்கரேகை: 780.25-790.15E

இணையதளம்

[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 04322-221663

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்-2: புதுக்கோட்டை அறந்தாங்கி

தாலுகாக்கள்-11:
இலுப்பூர், மணம் மேல் குடி, கந்தர்வக் கோட்டை, குளத்தூர், ஆவலங்குடி, திருமயம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், கரம்பக்குடி, பொன்னமராவதி

நகராட்சிகள்-2:
புதுக்கோட்டை, அறந்தாங்கி

ஊராட்சி ஒன்றியங்கள்-13:
அறந்தாங்கி, கந்தவர்க்கோட்டை, ஆவுடையார் கோவில், கரம்பக்குடி, பொன்னமராவதி, மணல்மேல்குடி, திருவரன் குளம், புதுக்கோட்டை, அரிமனம், குன்னாந்தார் கோவில், திருமயம், விராலிமலை.

எல்லைகள்: இதன் வடக்கு மற்றும் மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், வடகிழக்கில் தஞ்சாவூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.


Last edited by மகா பிரபு on Mon Aug 26, 2013 5:42 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by ஸ்ரீராம் Mon Aug 26, 2013 5:35 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by மகா பிரபு Mon Aug 26, 2013 5:38 pm

வரலாறு

[You must be registered and logged in to see this image.]
தற்போதைய புதுக்கோட்டை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. நூறாண்டுகளுக்கு முன் இந்த மாவட்டம் சோழ, பல்லவ, ஹொய்சாள மன்னர்களால் ஆளப்பட்டது. 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் இருந்த போது விஜய நகர மன்னர்கள் முஸ்லிம் மன்னர்களுடன் பல போர்களை புரிந்துள்ளனர். 1565ம் ஆண்டு தளிகோட்டாவில் நடந்த போரில் விஜயநகர மன்னர் தோற்றதால் பேரரசு நலிவடைந்தது. விஜயநகர பேரரசின் மாகாண பொறுப்பாளர்களாக இருந்த நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டனர். 16 முதல் 17ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் நாயக்கர்கள் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர்.

தொண்டைமான் பரம்பரை


புதுக்கோட்டை என்ற பகுதியை ஏற்படுத்தியவர் ரகுநாதராய தொண்டைமான் ஆவார். இவர் திருமயம் என்ற பகுதியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் ராமநாதபுர மகாராஜா ரகுநாத கிழவன் சேதுபதியின் மைத்துனர் ஆவார். தொண்டைமானின் சிறப்பான செயல்கள் காரணமாக சேதுபதி புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அளித்தார்.பின்னர் இந்த பகுதியை தொண்டைமான் மன்னர்கள் ராமநாதபுர அரசை சார்ந்தே இருந்து வந்தனர். 


1763ம் ஆண்டு புதுக்கோட்டை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. 1948- மார்ச் 4-ம் தேதி புதுக்கோட்டை சாம்ராஜ்யம் இந்திய யூனியனில் இணைப்பட்டது. (திருச்சி மாவட்டத்துடன்).இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1948ம் ஆண்டு வரை தொண்டைமான் மன்னர்கள் புதுக்கோட்டையை ஆண்டு வந்தனர். 1948- மார்ச் 4-ம் தேதி புதுக்கோட்டை சாம்ராஜ்யம் இந்திய யூனியனில் இணைப்பட்டது. (திருச்சி மாவட்டத்துடன்).


1974ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி புதுக்கோட்டை திருச்சி, தஞ்சையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by மகா பிரபு Mon Aug 26, 2013 5:45 pm

புதுக்கோட்டை சுற்றுலா

ஆவூர்
[You must be registered and logged in to see this image.]
புதுக்கோட்டையில் இருந்து 28 கி.மீ தொலைவில் ஆவூர் உள்ளது. இங்குள்ள சர்ச் 1547ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இந்த சர்ச் ஜான் வெனடியஸ் பொக்கெட் என்பவரால் கட்டப்பட்டது. இந்த இடத்தில் 1747ம் ஆண்டு கத்தோலிக்க சர்ச் கட்டப்பட்டது.


அரசு அருங்காட்சியகம்
புதுகோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தில் புவியியல், உயிரியல், வரலாறு தொடர்பான அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பபட்டுள்ளது. இங்கு அரிய ஐம்பொன் சிலைகளும் உள்ளன.

திறந்திருக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 5 மணி வரை. அனுமதி இலவசம். வெள்ளி விடுமுறை. தொலைபேசி : 04322-236247.


கட்டுபாவா பள்ளிவாசல்

புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ தொலைவில் கட்டுபாவா பள்ளிவாசல் உள்ளது. திருமயம் மதுரை நெடுஞ்சாலையில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்துக்களும் இந்த பள்ளிவாசலுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

குமாரமலை

புதுக்கோட்டையில் இருந்து 10 கி.மீ தொலைவில் குமாரமலை உள்ளது. மலை உச்சியில் முருகன் கோயில் உள்ளது. கோயிலின் அருகே புனித குளம் உள்ளது.


நர்த்தமலை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை முத்தரையர்களின் தலைமை இடமாக விளங்கியது. இங்குள் கற்கோயில் முத்தரையர்களால் கட்டப்பட்டதாகும். விஜயாலய சோழீஸ்வரம் குகைக்கோயில் விஜயாலய சோழனால் கட்டப்பட்டது. கதம்பர்மலை கோயிலும் பார்க்க தகுந்ததாகும். இந்த ம�லு புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by மகா பிரபு Mon Aug 26, 2013 5:46 pm

சித்தன்ன வாசல்



[You must be registered and logged in to see this image.]
'உலகப் புகழ் பெற்ற குகை ஓவியங்களை உள்ளடக்கியது சித்தனவாசல்'' புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் அன்னல்வாயிலுக்கு (அன்னவாசல்) அடுத்த சிற்றூராக இருப்பதாலும், சித்தர்கள் வாழ்ந்து வந்ததாலும் சித்தர் அன்னல்வாயிலானது மறுவி சித்தன்னவாசல் எனத் தற்போது அழைக்கப்படுகிறது. இங்கு காணப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள், முதுமக்கள் தாழிகள், கிமு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டு, உலகப் புகழ் வாய்ந்த ஓவியங்களுடன் விளங்கும் குகைக் கோயில் இந்தச் சிறிய கிராமத்தின் தொன்மைச் சிறப்பை உலகுக்கு உணர்த்துகிறது. இங்குள்ள குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். ஆரவார உலகை வெறுத்து அமைதியை நாடிய சமண முனிவர்கள் தங்கியிருந்த இடமாகும். இந்தக் குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியில் இருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள 7 படிக்கட்டுகளைக் கடந்து குகையினுள் நுழைவதால் இந்த இடம் ஏழடிப்பட்டம் என அழைக்கப்படுகிறது.

ஆனால், உலக வாழ்வைத் துறந்து 7 விதமான ஆன்மிக உறுதிகளை மேற்கொண்டு உண்ணாநோன்பிருந்து, உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனவும் பெயர் பெற்றதாக மற்றொரு செய்தி கூறுகிறது. குகைக் கோயிலில் 160 சதுர அடி அளவுள்ள முக மண்டபமும், அதையடுத்த 100 சதுர அடி அளவுள்ள சிறிய கருவறையும் உள்ளன. முன்மண்டபத்தின் முகப்பில் 2 தூண்கள் உள்ளன. மண்டபத்தின் வடக்குச் சுவரில் சமண ஆசிரியரின் சிற்பம், தெற்கில் 5 தலைபாம்புடன் கூடிய 23 சமண தீர்த்தங்கரர், பார்சுவநாதர் சிற்பங்களும் உள்ளன. குகைக் கோயிலின் தரை நீங்கலாக, மற்ற பகுதிகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. இங்குள்ள ஓவியங்கள் ச்ழ்ங்ள்ஸ்ரீர்-நங்ஸ்ரீஸ்ரீர் என்னும் முறையில் தீட்டப்பட்டுள்ளன. கருங்கல் பரப்பை பொலிந்து, சமப்படுத்தி, சுண்ணாம்புச் சாந்து பூசி அதன் மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு வழுவழுப்பாகத் தேய்த்து அப்பரப்பில் ரேகைகளும், வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன.

முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்திரிக்கப்பட்ட தாமரை தடாகம் அனைவரின் சிந்தையையும் கவரும். சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்தத் தாமரைத் தடாகம்தான். மணிமேகலை கூறும் வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியங்கள் இவைதானோ என எண்ணத்தோன்றுகிறது. பசுமையான இலைகளுடன், தாமரையும், அல்லியும் இந்தத் தடாகத்தில் பூத்துக்குலுங்குகின்றன.

பலவிதமான மீன்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. யானைகள் நீரைக் கலக்கி களித்திருக்கின்றன. அன்னம், சிறகி, வாத்து போன்ற பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் குலாவுகின்றன. சுற்றுச்சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றமுடைய ஓவியங்கள் இயல்பாக உள்ளன. மேலும், அஜந்தா ஓவியங்களிலும், பல்லவர் ஓவியங்களிலும் காணப்படும் அழகையும், அமைதியையும் பண்பட்ட கலைத் திறனையும் சித்தன்னவாசல் ஓவியங்களில் காண முடியும். இந்திய ஓவியக்கலை பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கை சித்தன்னவாசல் உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்க பயணியர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. உணவு வசதி இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சியிலோ அல்லது 15 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கோட்டையிலோ தங்கலாம்.

புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் அனைத்து பஸ்களும் இந்த ஊர் வழியாகச் செல்லும். ஆனால், சுற்றுலாத் தலம் பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளதால், பஸ்ஸில் செல்வோர் நடந்து செல்ல வேண்டும். இதன்காரணமாக, புதுக்கோட்டையில் இருந்து வாடகை கார் மூலம் சென்ற வர 4 நபர்களுக்கு சுமார் ரூ. 1000 செலவாகும். திருச்சியில் இருந்து செல்ல சுமார் ரூ. 3 ஆயிரமும், சென்னையில் இருந்து பஸ், ரயில் மூலம் திருச்சி வழியாக வந்து செல்ல ஒரு நபருக்கு ரூ. 2000 செலவாகும்.

தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளதால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்க முடியும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by மகா பிரபு Mon Aug 26, 2013 5:47 pm

ஆவுடையார்கோயில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழர்களின் சிற்பகலைக்கு எடுத்துக் காட்டாக ஆவுடையார்கோயில்உள்ளது. இங்குள்ள மூலவர் ஆத்மநாத சுவாமி என அழைக்கப்படுகிறார். மாணிக்க வாசகர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல் புராணம் இக்கோயிலுடன் தொடர்புடையதாகும். கோயில் தாழ்வாரங்கள் கொடுங்கை என்னும் கல்லினால் உருவாக்கப்பட்ட கலையெழில் மிக்க சிற்பங்களை உள்ளடக்கியது. இங்குள்ள ராஜகோபுரம் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சிவபுராண காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. புதுக்கோட்டையிலிருந்து 46 கிலோமீட்டர் தூரத்தில் ஆவுடையார்கோயில் உள்ளது. திறக்கும் நேரம்: காலை 5.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 8.30 மணி. தொலைபேசி - 04371 - 23330.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by மகா பிரபு Mon Aug 26, 2013 5:51 pm

கொடும்பாளூர்

புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் கொடும்பாளூர் உள்ளது. சோழர்களுடன் உறவாக இருந்த இருக்கு வேளிர் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்த இந்த ஊரில்

பூதி விக்கிரமகேசரி 10 ஆம் நூற்றாண்டில் மூன்று கோயில்களைக் கட்டியுள்ளார். இவற்றில் தற்போது இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளன. தென்னிந்திய கட்டுமானக் கலைக்கும் சிற்பக் கலைக்கும்

இந்தக் கோயில்கள் எடுத்துக் காட்டாக உள்ளன. இவற்றில் அமைந்துள்ள களரி மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, அர்த்தநாரி, கங்காதர மூர்த்தி ஆகியவை சிற்பக் கலையின் உன்னத சாட்சியங்களாகும்.

இதன் அருகே சோழர்கால முச்சுகொண்டேஸ்வரர் கோயிலும் உள்ளது. கொடும்பாளூர் என்றாலே மூவர் கோயில்தான் நம் நினைவுக்கு வரும்.

திருக்கோகர்ணம்


திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் குகைக்கோயில் சிற்பக்கலையில் ஆர்வமுள்ளவர்களை பெரிதும் கவரும் கோயில். புதுக்கோட்டை நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மூலவர் சிவபெருமான் திருக்கோகர் ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருக்கோகர்ணேஸ்வரர் குடிகொண்டுள்ளதால் அப்பகுதி திருக்கோகர்ணம் என்று அழைக்கப்படுகிறது. பாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயில் தமிழ்நாட்டில் உள்ள குகைக்கோயில்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இங்கு ராமாயண காட்சிகள் அடங்கிய ஓவியம் ஓவியக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி மெயின் ரோட்டில் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது.


திறக்கும் நேரம்: காலை 6.30 - பகல் 1 மணி, மாலை 4.30 - இரவு 8.30 மணி.

குடுமியான்மலை


[You must be registered and logged in to see this image.]
சிற்பக்கலைகளுக்கு எடுத்துக்காட்டாக குடுமியான்மலை அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் மூலவர் சிகாநாதசாமி என்றும், அம்மன் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். மலையின் உச்சியில் முருகப் பெருமான் குடிகொண்டுள்ளார். கிழக்குப்பகுதியில் இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் இல்லாத, கர்நாடக சங்கீத ஸ்வரம் குறித்த கல்வெட்டுகளும், மேற்கு பகுதியில் 63 நாயன்மார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. உள்மண்டபத்தில் உள்ள கல்தூண்களில் கலையழகுமிக்க சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் குடுமியான்மலை உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து கார், வேனில் செல்லலாம். திறக்கும் நேரம்: காலை 7 - மாலை 4 மணி வரை.

திருமயம்


புதுக்கோட்டையில் இருந்து 19 கி.மீ தொலைவில் திருமயம் உளளது. இங்குள்ள கோட்டையில் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் உள்ளன. இங்குள்ள கோட்டை தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தது. கி.பி. 1687ம் ஆண்டு 40 ஏக்கர் பரப்பளவில் சேதுபதி விஜயரகுநாத தேவரால் கட்டப்பட்டது. மலையின் மீது சிவன் கோயில் மற்றும் கல்வெட்டுகளை அவர் அமைத்தார். மலையின் அடிவாரத்தில் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளன. இதில் விஷ்ணு கோயில் இயற்கையாக அமைந்ததாகும்.

வேந்தன்பட்டி


புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ தொலைவில் பொன்னமராவதி செல்லும் வழியில் இந்த டடம் உள்ளது. இங்குள் மீனாட்சி சொக்கேஸ்வரர் கோயிலில் உள்ள நெய் நந்தி அனைவராலும் அறியப்பட்டதாகும். இந்த நந்திக்கு சுத்தமான நெய்யால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

விராலிமலை


[You must be registered and logged in to see this image.]
புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் இந்த மலை அமைந்துள்ளது. மலை மீது 15ம் நூற்றாண்டை சேர்ந்த சுப்ரமணியர் கோயில் உள்ளது. இங்கு மயில்கள் சரணாலயம் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலில் உள்ள மூலவர் மயிலில் அமர்ந்திருப்பது போல உள்ளது.




விராலிமலை பற்றி மேலும் அறிய: [You must be registered and logged in to see this link.]




தகவல் உதவி: தொழில்நுட்பம், தினமலர், தினகரன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by மகா பிரபு Mon Aug 26, 2013 5:53 pm

புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு  உட்படாத தனி நாடு.தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம்  ( இந்தியக்   காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக “கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை” என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம். 

 
தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
 
புதுக்கோட்டை அம்மன் காசு
[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by மகா பிரபு Mon Aug 26, 2013 6:01 pm

சித்தனாவாசல் பற்றிய கூடுதல் தகவல்கள்>>>>>> [You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by முழுமுதலோன் Tue Aug 27, 2013 9:58 am

சூப்பர் அருமையான தகவல்கள்.இது போன்ற நல்ல தகவல்களை தரும் பதிவுகளுக்கும் பதிந்தவருக்கும் வாழ்த்துக்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎: புதுக்கோட்டை மாவட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum