Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாவட்டங்கள் வரிசை :::::: விருதுநகர் மாவட்டம்
Page 1 of 1 • Share
மாவட்டங்கள் வரிசை :::::: விருதுநகர் மாவட்டம்
[You must be registered and logged in to see this image.]
இணையதளம்:
[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 04562-252525
எல்லைகள்: இதன் வடக்கில் மதுரை மாவட்டமும்; வடகிழக்கில் சிவகங்கை மாவட்டும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில் தூத்துக்குடி மற்றும் நிருநெல்வேலி மாவட்டங்களும், மேற்கில் கேரள மாநிலத்தின் சிறு பகுதியும், மதுரையும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வட்டங்கள்:
இம்மாவட்டம் 8 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை
காரியாப்பட்டி
இராஜபாளையம்
சாத்தூர்
சிவகாசி
ஸ்ரீவில்லிப்புத்தூர்
திருச்சுழி
விருதுநகர்
அடிப்படைத் தகவல்கள் | |
தலைநகர் | விருதுநகர் |
பரப்பு | 5,232 ச.கி.மீ |
மக்கள்தொகை | 17,51,548 |
ஆண்கள் | 8,70,820 |
பெண்கள் | 8,80,728 |
மக்கள் நெருக்கம் | 413 |
ஆண்-பெண் | 1,012 |
எழுத்தறிவு விகிதம் | 73.70% |
இந்துக்கள் | 16,37,939 |
கிருத்தவர்கள் | 68,295 |
இஸ்லாமியர் | 43,309 |
புவியியல் அமைவு | |
அட்சரேகை | 110-120N |
தீர்க்க ரேகை | 770.28-78.50E |
[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 04562-252525
எல்லைகள்: இதன் வடக்கில் மதுரை மாவட்டமும்; வடகிழக்கில் சிவகங்கை மாவட்டும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில் தூத்துக்குடி மற்றும் நிருநெல்வேலி மாவட்டங்களும், மேற்கில் கேரள மாநிலத்தின் சிறு பகுதியும், மதுரையும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வட்டங்கள்:
இம்மாவட்டம் 8 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை
காரியாப்பட்டி
இராஜபாளையம்
சாத்தூர்
சிவகாசி
ஸ்ரீவில்லிப்புத்தூர்
திருச்சுழி
விருதுநகர்
Last edited by மகா பிரபு on Fri Aug 23, 2013 4:56 pm; edited 1 time in total
Re: மாவட்டங்கள் வரிசை :::::: விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் வரலாறு
வரலாறு
[You must be registered and logged in to see this image.]
1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ராமநாதபுர மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது. விருதுநகரின் முதல் மாவட்ட கலெக்டர் எல்.என். விஜயராகவன் ஐ.ஏ.எஸ்., விருதுநகர் மாவட்டத்தின் தலைமையிடம் விருதுநகராகும். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி, காரியாபட்டி, திருச்சுழி, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கியதாகும். அருப்புக்கோட்டை ரெவின்யூ டிவிஷனில் காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. சிவகாசி ரெவின்யூ டிவிஷனில் சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தாலுகாக்கள் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 3 பார்லிமென்ட் தொகுதிகள் உள்ளன. ஆறு முனிசிபாலிட்டிகள் உள்ளன. அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகியன. 11 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. 10 டவுன் பஞ்சாயத்துகள், 450 கிராம பஞ்சாயத்துகள், 598 கிராமங்கள் உள்ளன.மதுரையிலிருந்து 43 கி.மீ தொலைவில் விருதுநகர் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் வடக்கில் மதுரை உள்ளது. வடகிழக்கில் சிவகங்கையும், கிழக்கே ராமநாதபுரமும், தெற்கே திருநெல்வேலி, தூத்துக்குடியும் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தாலூகாக்கள் மற்ற தாலுகாக்களை விட வித்தியாசமானதாகும். இங்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாப்பட்டி ஆகிய பகுதிகள் கரிசல் மண் பகுதிகளாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் சராசரி உயரம் 1500 மீட்டராகும். சில குன்றுகள் 1700 மீட்டரும் உள்ளது. பேய்மலை மொட்டை, கொட்டமலை ஆகியவை மிகப்பெரிய மலைக்குன்றுகள்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜீவ நதிகள் எதுவும் இல்லை. வைப்பாறு, அர்ஜூனா நதி மற்றும் குண்டாறு போன்ற சிறிய நதிகள் விருதுநகரின் நீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்த நதிகளிலில் இருந்து பல கிளைகள் பிரிந்து வாய்க்கால்களாகவும், ஓடைகளாகவும் உருவாகியுள்ளன. செங்கல் செய்வதற்கான சிவப்பு களிமண், செம்மண், கரிசல் மண், போன்றவை இங்கு பரவலாக காணப்படுகிறது. சுண்ணாம்புகல், ஜிப்சம், களிமண், மணல் போன்றவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மாவட்டத்தின் தெற்கு பகுதியில் கிரானைட் ஏற்றுமதி இங்கு சிறிய அளவில் நடைபெறுகிறது.
காடுகள்: மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவு பகுதியில் காடுகள் நிறைந்து காணப்படுகிறது. காடுகளின் மூலம் மாவட்டத்திற்கு கிடைக்கும் வருவாய் 1999-2000ம் ஆண்டில் ரூ.53 லட்சமாக இருந்தது. மாவட்டத்தின் பரப்பளவில் 6.3 சதவீதம் காடுகள் உள்ளன. தேசிய காடு வளர்ப்பு மையத்தின் பரிந்துரைப்படி மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது. இங்குள்ள மழையளவு மற்றும் மண்வளம் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் இது சற்று சாத்தியமற்றது.
விலங்குகள் மற்றும் தாவரங்கள்: மலைப்பகுதியில் பல அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் காணப்படுகின்றன. 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 1989ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டது. சரணாலயத்தில் பறவைகள், பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்குகள், ஊர்வன, மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. யானைகளும் உள்ளன. அங்கு அரிய வகை சாம்பல் நில அணில் உள்ளது. மேலும் புலி, சிறுத்தை, புள்ளி மான், சிங்கவால் குரங்கு, லாங்கூர், நீலகிரி லாங்கூர், கரடி, பறக்கும் அணில் மற்றும் 100க்கும் மேற்பட்ட பறவைகள் காணப்படுகின்றன. அரிய வகை கொம்பு போன்ற அலகுடைய பறவையும் காணப்படுகிறது. மலை மற்றும் காட்டுபகுதியில் பழமரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அழகர்கோவில், மற்றும் சதுரகிரி பகுதியில் மூலிகை தாவரங்கள் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 275 வகை மூலிகைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
விவசாயம் : மாவட்டத்தின் 37 சதவீத நிலத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயத்தினால் 52 சதவீத மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இங்கு கரிசல் மண்ணே அதிகம் காணப்படுவதால் பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தினை போன்ற தானியங்கள் விளைகின்றன. கிணற்று பாசனம் இருக்கும் இடங்களில் நெல், கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது.
தொழிற்சாலைகள் : சிமென்ட் தொழிற்சாலைகள், டெக்ஸ்டைல் மில்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. பருத்தி இந்த மாவட்டத்தின் முக்கிய பயிராகும். ராஜபாளையத்தில் ஸ்பின்னிங், ஜின்னிங் மில்கள் அதிகம் காணப்படுகிறது. சர்ஜிகல் காட்டன், பேண்டேஜ் துணிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. டெக்ஸ்டைல் மில்கள் விதவிதமான காட்டன் நூல்களை உற்பத்தி செய்கின்றன. தாதுக்களான, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் போன்றவை கிடைப்பதால் சிமென்ட் உற்பத்தி இங்கு நடைபெறுகிறது. பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமென்ட் ஆலங்குளத்திலும், தனியார் சிமென்ட் ஆலையான மெட்ராஸ் சிமென்ட்ஸ் துலுக்கன்பட்டியிலும் உள்ளன. தமிழ்நாடு சிமென்ட்ஸ் ஆண்டிற்கு 4 லட்சம் டன் போர்ட்லேண்ட் சிமென்ட் உற்பத்தி செய்கிறது. மெட்ராஸ் சிமென்ட் 4.15 லட்சம் டன் உற்பத்தி செய்கிறது.பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு அஸ்பெஸ்டாஸ் சிமென்ட் ஷீட்களை உற்பத்தி செய்கிறது.

Last edited by மகா பிரபு on Fri Aug 23, 2013 5:18 pm; edited 1 time in total
Re: மாவட்டங்கள் வரிசை :::::: விருதுநகர் மாவட்டம்
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்
i. சென்னையிலிருந்து 512 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
ii. விருதுநகரிலிருந்து இலங்கை, துபய், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகின் பல நகரங்களுக்கு சமையல் எண்ணெய், பருத்தி, மிளகாய், ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. |
iii. வைணவ சமய பெண்பாற் புலவரான ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த இடம் ஸ்ரீ வில்லிப்பத்தூர். |
iv. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரமே தமிழக அரசின் அதிகார பூர்வ முத்திரையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. |
v. பகவான் ரமண மகிரிஷி பிறந்த இடம் - திருச்சுழி |
vi. விருதுநகர், சாத்தூர், இராஜபாளையம், சிவகாசி வியாபார மையங்கள் |
vii. பருத்தி ஆராய்ச்சி மையம், பாலிமர் ஆராய்ச்சி மையம், (ஸ்ரீவில்லிப்புத்தூர்), வட்டார ஆராய்ச்சி நிலையம் (அருப்புக் கோட்டை),கோழிப்பண்ணை ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் (ராஜபாளையம்) போன்றவை குறிப்பிடத்தக்கன. |
viii. சிவகாசி ஒறகண்டி கனகய்யா நாயுடுவின் 'சரஸ்வதி மகால்' வரலாற்றுக் காட்சிக் கூடம் ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கியது. |
Re: மாவட்டங்கள் வரிசை :::::: விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் சுற்றுலா
காமராஜர் இல்லம்:
[You must be registered and logged in to see this link.]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவராவார். அவர் பிறந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அவருடைய புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு, அவர் உபயோகித்த பொருட்கள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
ரமண மகரிஷி ஆசிரமம்:

ரமண மகரிஷி 1879ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி திருச்சுழியில் பிறந்தார். அவரது தாயார் அழகம்மாள், தந்தை சுந்தரம் ஐயர். அவர் வாழ்ந்த வீடு சுந்தர மந்திரம். சேதுபதி ஆரம்பப்பள்ளியில் அவர் கல்வி பயின்றார். அவருடைய பெயரால் 1988ம் ஆண்டு குண்டாற்றின் கரையில் ஆசிரமம் அமைக்கப்பட்டது.
ஆண்டாள் கோயில்:

ஆண்டாள் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனில் அமைந்துள்ளது. விருதுநகரில் இருந்து தென்காசி செல்லும் ரயில் பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளது. இங்குள்ள பெருமாள் வடபத்ரசாயி ரங்கமன்னார் என அழைக்கப்படுகிறார். விருதுநகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
தொலைப்பேசி : 04563 - 260254
பூமிநாத சுவாமி கோயில்:
பூமிநாதசுவாமி கோயில் திருச்சுழியில் உள்ளது. பாண்டிய நாட்டின் புகழ் பெற்ற 14 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். விருதுநகரில் இருந்து 40 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள கடவுள் பூமிநாதர், தாயார் துணைமாலை அம்மன். இந்த தலம் சைவ நாயன்மார் சுந்தரமூர்த்தி மற்றும் சேக்கிழாரால் பாடப்பெற்றதாகும். முத்துராமலிங்க சேதுபதியால் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு புதிய சன்னதிகள் அமைக்கப்பட்டன. குண்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட போது சுவாமி விவேகானந்தர் இந்த கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்தார்.
திருமேனிநாத சுவாமி கோயில்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பார்த்திபனூர் செல்லும் வழியில் திருச்சுழியில் திருமேனிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒன்பது தீர்த்தங்களும், எட்டு வகையான லிங்கங்களும் உள்ளன. தென்பாண்டி நாட்டில் பாடல் பெற்ற 14 தலங்களில் இது 10வது தலம்.
அய்யனார் அருவி:

விருதுநகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அய்யனார் அருவி உள்ளது. காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோயிலை ஒட்டி அருவி அமைந்துள்ளது. பதினைந்து அடி உயரத்தில் இருந்து அருவி விழுகிறது. விருதுநகர் மக்களின் முக்கிய சுற்றுலா தலமாக இது உள்ளது.
குகன்பாறை :
கழுகுமலையில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் வழியில் குகன் பாறை அமைந்துள்ளது. இதை ஒட்டியுள்ள கிராமமும் குகன்பாறை என்றே அழைக்கப்படுகிறது. பாறையின் அடிப்பகுதியில் ஒரு குகை உள்ளது. இதில் ஜென துறவிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பாறைகளில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
குல்லூர் சந்தை நீர்தேக்கம்:
கவுசிக மகாநதியில் குல்லூர்சந்தை நீர்தேக்கம் அமைந்துள்ளது. இது ஒரு பொழுதுபோக்கு இடமாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி வரை ஏராளமான நீர்பறவைகளை இங்கு காணலாம்.
பள்ளிமடம்:
குண்டாற்றின் கிழக்கு கரையில் பள்ளிமடம் அமைந்துள்ளது. 10ம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் இந்த இடத்தில் தனது உயிர் நீத்தார். அவரது சகோதரர் வீர பாண்டியன் இங்கு பள்ளிபடை என்ற நினைவு இடத்தை நிறுவினார். இங்குள்ள கோயில் கலைநாதசுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. பள்ளிப்படை என்ற சொல் மருவி பள்ளிமடம் என ஆகியது.
பிளவக்கல் அணை:
பிளவக்கல் அணைப்பகுதி பொழுதுபோக்கு இடமாகும். இந்த அணை பெரியார் அணை, கோவிலார் அணை என இரு பகுதியாக உள்ளது. இயற்கை சூழ்ந்த இந்த இடத்தில் அழகான தோட்டங்கள் உள்ளன. படகு சவாரியும் உள்ளது.
சவேரியார் சர்ச்:

பிரான்சிஸ் அசோசியேஷனால் 2003ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி இந்த சர்ச் கட்டப்பட்டது. புனித பிரான்சிஸ் நினைவாக இந்த சர்ச் நிறுவப்பட்டது. சர்ச்சின் சுவர்களின் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்து கீதை உபதேசிப்பது, இஸ்லாமியர்களின் பிறை, ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது.
செண்பகதோப்பு சரணாலயம் :
ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு என்ற இடத்தில் 480 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் புலி, சிறுத்தை, மான், குரங்குகள், சிங்கவால் குரங்குகள், லாங்கூர்கள், பறக்கும் அணில்கள், 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் அரிய வகை அணில்கள் வேறு எங்கும் காண கிடைக்காததாகும்.
வெம்பக்கோட்டை :
வெம்பக்கோட்டை நீர்தேக்கம் வைப்பாறு மூலம் நீரை பெறுகிறது. வைப்பாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
திருத்தங்கல்:
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் திருத்தங்கல் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் வாழ்ந்த கவிஞர்களான முடக்கோரனார், பொற்கொல்லன் வெண்ணகனார், ஆதிரேயன் செங்கண்ணனார் ஆகியோர் திருத்தங்கலில் வாழ்ந்தவர்களாவர்.
சிவகாசி :

சிவகாசி முக்கியமான தொழில் நகரமாகும். லித்தோகிராபிக், ஆப்செட் பிரிண்டிங்கிற்கு புகழ்பெற்ற நகர். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் நகரின் முக்கிய தொழிலாகும். சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஏறக்குறைய 4500 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. 400 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவின் 70 சதவீத பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி இங்கு நடைபெறுகிறது. அதிக அளவிலான பட்டாசு ஏற்றுமதியும் நடைபெறுகிறது. சிவகாசி ஆப்செட் பிரின்டிங் தொழிலுக்கு பெயர் பெற்றதாகும். புத்தகங்கள், போஸ்டர்கள், வாழ்த்து அட்டைகள், டைரிகள் போன்றவை இங்கு தயாரிக்கப்படுகின்றன.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் :

விருதுநகரில் இருந்து 32 கி.மீ தூரத்திலும், மதுரையில் இருந்து 90 கி.மீ தூரத்திலும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. வைப்பாறு, அர்ச்சுணன் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே மணல் திட்டாயிருக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் :

விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட பெரியதாக, சாம்பல் நிறத்தில் இந்த அணில் இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பறக்கும் அணில், சிங்கவால் குரங்கு, யானை, மான் மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
தகவல் உதவி : தொழில்நுட்பம், தினமலர், தினகரன், விக்கிபீடியா இணையதளங்கள்

இந்த வினா நேற்று நடந்த TNPSC தேர்வில் கேட்டு இருந்தார்கள்..விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது.
Re: மாவட்டங்கள் வரிசை :::::: விருதுநகர் மாவட்டம்
வாவ் அப்படியா? மகிழ்ச்சி தம்பிமகா பிரபு wrote:இந்த வினா நேற்று நடந்த TNPSC தேர்வில் கேட்டு இருந்தார்கள்..விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மாவட்டங்கள் வரிசை: திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: மதுரை மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: திருவள்ளூர் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை: தஞ்சாவூர் மாவட்டம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum