தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 2:10 pm

First topic message reminder :

கனிமொழி

அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 3:17 pm

கண்ணீரைக் காணாததுபோல்
திரும்பிக் கொள்ள
முயற்சிக்கிறாய்.
கண்ணீரீன் தீவிரம்
உன்னைக் குலுக்கினாலும்
தவறு யாருடையதோ போல்
பாவனைச் செய்கிறாய்

அ.வெண்ணிலா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 3:18 pm

நானைக் கரைத்து
எலும்புருக்கி
கொல்கலன் அற்ற நீராய்
எனை வழிந்தோட செய்த
புன்னகை
மறக்கச் செய்தது மரணத்தை…
மரணத்தின்
சாயலோடு இருந்தது
உன் புன்னகை

அ.வெண்ணிலா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 3:18 pm

உச்சி வெயில்
சுடுமணல்
துப்பட்டா நிழலில்
காதலர்கள்
வழியும் வியர்வைத் துளி
பொங்குமாங்கடல்
இருவருக்குள்ளும்

அ.வெண்ணிலா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 3:18 pm

அடந்த வனத்தில்
ஆதாமிடம் கேட்க
ஆயிரம் இருந்திருக்கும் ஏவாளுக்கு
ஆதியிலேயே விலக்கப்பட்ட
அன்புக் கனியைக் கேட்டு
விலக்கப்பட்ட கனியானாள் ஏவாள்
அன்பு புதைகுழி
வெளியேற கைக்கொள்ளும்
முயற்சிகளெல்லாம்
உள்ளிறங்கவே செய்யும்

அ.வெண்ணிலா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 06, 2013 7:48 pm


தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள்
மழையும் மழை நிமித்தமும் !

பிள்ளைக்குத் தலை துவட்டி
கதவடைத்துப் படுத்த பின்பு
கனவிலே வந்து போகும்
மழை நனைத்த என் முகம்
துடைத்த அப்பாவின்
'சார்லி சென்ட்' கைக்குட்டை.

மழை துவங்கு முன்பு
வீட்டைவிட்டுப் புறப்பட்டவர்களாய்
மழை நின்ற பின்பு
வீடு திரும்புபவர்கள் இருப்பதில்லை.
சல்லாபிப்பவர்களாகவோ
சபிப்பவர்களாகவோ
இடையில் பெய்த மழை
எப்படியோ மாற்றிவிடுகிறது நம்மை.

மாற்றுத் துணியற்ற
மாதாந்திரச் சுழற்சியுடன்
ஊர் ஊராய் இடம் பெயர்ந்த
தமிழச்சிகளின் கடுந்துயரைப்
புலம்பியடி என் மேல்
அடித்துப் பெய்கிறது அசுர மழை
அந்த அவஸ்தையான நாளொன்றில்
அவசரமாய்ச் சாலை கடக்கையில்.

எரியூட்டப்படாமல்
ஒன்றின் மேல் ஒன்றாய்க்
கூப்பிடு தூரத்தில்
புதைக்கப்பட்டவர்களை
இங்கிருந்தே புரட்டிப் பார்த்துப்
பெருங்குரல் எடுத்து
அழுகின்றது பேய் மழை!

மழைபற்றிய கவிதை
எழுதாமலே முடிந்துவிடுகிறது
எதிரே
மீன் பிடிக்கும் சவரிமுத்துவைப்
'புதுசாக் கண்ணாலம் கட்டியிருக்கும்'
ரோஸ்மேரியைப் பார்த்தவுடன்.


நேசித்தவர்களைப் பிரிந்து செல்லும்

முடிவை மழைக் காலத்தில்

எடுக்க முடிவதில்லை.

கதவைச் சாத்திய பின்பும்,

கேவும் மழையில்

தொலைதூரம் கடந்து வரும்

உன் குரல்.உறை மூடிய வீணையில்

உயிர் நரம்பொன்றைத்

தட்டி எழுப்ப

மழைக்கால இரவொன்று வரலாம்.

காத்திரு.

கோடையின் கடைசிப் பகல் ஒன்றில்

அதனை உனக்குப் பரிசளிப்பேன்.கைக்குள்ளே நிற்காத மழையைப்

போலத்தான்

ஒளிந்துகொள்வதில் நீயும்

ஓடிப் போவதில் காலமும்!மாலையில் பள்ளிவிட்ட பின்பும்

வீடு திரும்பாமல் விளையாடிவிட்டுத்

தாமதமாக நனைந்து வரும்

குழந்தையின் பூனை நடையோடு

மழையும் வீடு வருகிறது.

கவனிக்காத பாசாங்கில்

கோபித்திருக்கும் எனைக் கோதும்

உன் ஈரக் கைகள்

ஊடலின் வெப்பத்தில் கனிகின்றன.

சேர்த்துவைத்த மழை

வெட்கப்பட்டு வெளியே பெய்கிறது!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 06, 2013 7:49 pm

“சுடு சோறு கொதி கஞ்சி

வேப்பம் பழம்

பொசுக்கியதே இல்லை

ஊர் வெயில்.

குளிரூட்டப்பட்ட

நகரத்து அறைகளில் வசிக்கும்

என் மகள் கேட்கிறாள்”

தமிழச்சி தங்கபாண்டியன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 06, 2013 7:50 pm

சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு…


தமிழச்சி தங்கபாண்டியன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 06, 2013 7:50 pm

‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.

தமிழச்சி தங்கபாண்டியன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 06, 2013 9:15 pm

ரசனை
பதிவுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:30 pm

அவர்கள் பார்வையில்

எனக்கு-
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை

அவர்களின் பார்வையில்-
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன

சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைக்ள் ஆகும்

-கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்

கணவன் தொடக்கம்
கடக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.

-அ.சங்கரி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:33 pm

இன்று நான் பெரிய பெண்

நான்
கல்லாய் மாறிய பூ
பாறையாய் இறுகிய காற்று
பனியாய் உறைந்த நீர்

பூவைப் போலவும்
காற்றைப் போலவும்
நீரைப் போலவும்
குதித்துத் திரிந்து
சுற்றிய பருவத்தில்

காலை உதைத்து
வீரிட்டு அழவும்
கல கல என்று
கை தட்டிச் சிரிக்கவும்
கோபம் வந்தால்
கொப்பியைக் கிழிக்கவும்
முடிந்ந கால்ம்.

மரத்தில் ஏறவும்
மாங்காய் பிடுங்கவும்
பக்கத்து வீட்டுப்
பிள்ளைகளுடனே
கிட்டி அடிக்கவும்
ஒளித்துப் பிடிக்கவும்
ஒன்றும் பேசிலர் எவரும்.

இன்று
நான் பெரிய பெண்.
உரத்துச் சிரித்தல் கூடாது.
விரித்த புகையிலை
அடக்கம்; பொறுமை;
நாணம்
பெண்மையின் அணிகலம்.
கதைத்தல்; சிரித்தல்;
பார்த்தல்; நடத்தல்;
உடுத்தல்
எல்லாம் இன்னபடி என்றெழுதி.....

நான்
கல்லாய்
பாறையாய்
பனியாய்
பெண்ணாய்.....

-அ. சங்கரி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:34 pm

விடுதலை வேண்டினும்

எனது-
ஓராயிரம் சிறகுகளை
விரிக்கவும்
விண்ணிற் பறக்கவும்
ஏங்கினேன்.

வானின்
நட்சத்திரங்களையும்
சூரியனையும்
தொட்டுப் பார்க்க
அவாவிற்று என் ஆன்மா.

பூமியின் பரப்புக்கு
அப்பால்
அண்ட வெளியில்
ஸ்பேஸ் ஒடிசியின் விண்கலம் போல
எல்லையின்றிச் சுழலவும்
எண்ணினேன்.

வானிற் பறக்கும்
புள் எல்லாம் நானாக
மாறாவும் எண்ணினேன்.

ஆனால்--
காலிற் பிணைத்த
இரும்புக் குண்டுகள்
அம்மியும் பானையும்
தாலியும் வேலியும்

என்னை--
நிலத்திலும்
நிலத்தின் கீழே
பாதாள இருட்டிலும்
அழுத்தும்.

அ. சங்கரி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:34 pm

இடைவெளி

உனது கையினைப் பற்றி
இறுக்கிக் குலுக்கியும்
நெற்றியில் ஒரு சிறு
முத்தம் இட்டும்
எனது அன்பினை
உணர்த்தவே விரும்பினேன்.

நண்பனே
இராக்குயில் கூவும்
சோளகக் காற்றின் உறுமல் கேட்கும்
நடுநிசிப் போதிலும்
கூர் உணர்திறனும்
விழித்த கண்ணுமாய் கடமையாற்றுவாய்.

என்றும்
மனித வாழ்க்கை பற்றியும்
எமது அரசியற்சூழல் பற்றியும்
உயிர்ப்பாய் இயங்கும்
உன்னை நோக்கி
வியப்பும் உறுவேன்
அவ் வியப்பும்
நீண்ட கால நெருக்கமும்
என்னிற் காதலை விளைக்கும்.

அக்காதலை
முத்தமிட்டும்
நெற்றியை வருடியும்
உன்னிரு கைகளை
இறுகப் பற்றியும்
உணர்த்த விரும்பினேன்.

எனது காதல்
சுதந்திரமானது
எந்தச் சிறு நிர்ப்பந்தமும்
அற்றது;
எனது நெஞ்சில் பெருகும்
நேசத்தின் ஒரு பரிமாணம்.

எனினும் நண்பனே
ஒரு பெண்ணிடம்
சொல்வது போலவும் உணர்த்துவது போலவும்
உன்னை அணுக அஞ்சினேன்.

பறவைகள் போலவும்
பூக்கள் போலவும்
இயல்பாய்
மனிதர்
இருக்கும் நாளில்
நானும் உனது அருகில் நெருங்குவேன்.

பெண்ணை
என்றும் பேதையாகவும்
ஆணை
வீரபுருஷ நாயகனாகவும்
நோக்கும் வரைக்கும்
எனது நேசமும்
பேதை ஒருத்தியின் நேசமாகவே
உனக்கும் தெரியும்.

அதை நான் விரும்பினேன்
எனது ந்ண்பனே
இந்த இடைவெளி
எமக்குள் இருப்பின்
எனது கதலை
உணரவே மாட்டாய்.

என்ன செய்வது?
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால் அந்த உச்சிக்கு
வரமுடியாதே!

-அ. சங்கரி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:35 pm

துள்ளும் வலியும்
மின்னலென வெட்டும்
வேதனையும்
உச்சமாய் எகிற
உயிரை அசைத்து
இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணி விலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என் மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?

-சுதிர்தராணி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:35 pm

பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க் கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காம நெய்யின் உருகிய வாசனை
மலர்ந்த இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்தாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
. . . . . . . . .
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாகையை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகுகாலமாயிற்று

-சுதிர்தராணி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:36 pm

இருப்பும் இறப்பும்

உன்னை முன்னர்
ஒருபோதும் அறியேன்
மூவாயிரம் மாணவருள் ஒருவனாய்
நீ மிக மிகச் சாதாரணமாய்
இருந்திருப்பாய்.

நாடகம் என்றோ
ஸ்ரைக் என்றோ
மாணவர் அவை வேலைகள் என்றோ
எதிலுமே அக்கறை அற்றவனாக
வந்து போயிருக்கலாம்.

எதோ ஒருநாளில்
உன்னை நான்
எதிர்ப்பட்டிருத்தலும் கூடும்
வளர்ந்து பரந்த
வாகையின் நிழலில்
நூலக வாயிற் படிகளில்

அன்றேல்
பல்கலைக்கழக முகப்பு வாயிலில்
பின்புறமாகப் பலாலி வீதியில்
எங்கேனும்
கண்டும் இருக்கலாம்.

எனினும்
அப்போது உன்னை அறியேன்
இன்று
உனது அவலச் சாவை
உணர்த்திய நோட்டீஸ்
நூலகச் சுவரிலும்
விஞ்ஞானபீட வாயில் முன்னும்
கண்டு கனத்தது நெஞ்சு.

இளைஞனே
இன்று முழுவதும்
உனது முகமும்
இன்றுதான் அறிந்த
உனது பெயரும்
மனதை அரித்தன
மெதுவாய்.

உனது பெயரினை
உனது ஊரினை
உனது இருப்பினை
அறிவித்தது அந்த
மரண நோட்டீஸ்.
வாழ்ந்ததை உணர்த்திய
மரணம்!
நான்
துயர் மிகக் கொண்டேன்.

-அ. சங்கரி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:36 pm

முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.

என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்.
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.

எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும்.

ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட

என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.

ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.

--சி. சிவரமணி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:37 pm

எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?

விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்

தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?

நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!

தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.

--சி. சிவரமணி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:38 pm

மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்
அழிக்கப்படாத காடுகளைப் போல
கம்பீரம் வீசுகிறது
இயற்கையின் பிஞ்சு நிறத்தில்
ஆழ்ந்து கிடக்கும் என்னுடலை
தூர நின்று கவட்டுக் குச்சியால்
கிளறிப் பார்க்கின்றாய்
. . . . . . . . .
அவிழ்ந்த ஆடையை இறுக்கியபடி
நகரத் தெருக்களில்
சொல்லிக்கொண்டு ஓடுகிறாய்
ஆதிவாசியருத்தி கரை கடப்பதாக.

-சுதிர்தராணி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:38 pm

வையகத்தை வெற்றி கொள்ள

என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.

காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.

ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.

எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.

வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.

சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.

புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.

--சி. சிவரமணி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:39 pm

ஒரு தாயின் புலம்பல்

தெருப்புழுதியில் உன் உடம்பு
முதுகெல்லாம் இரத்த வெள்ளம்
நீதானா என்று குனிந்து பார்த்தேன்
ஓம் ராசா, நீயே தான்
"ஏன் ஆச்சி அழுகின்றாய்"
என்று கூடிநிற்கும் சனம்கேட்க
"பெடியனைத் தெரியுமா உனக்கு?"
என்று மிரட்டுகிறான் காக்கிச் சட்டை.
அவன் கையில் துவக்கு வெயிலில் மின்னுகிறது
"தெரியாது" என்று தலையசத்தேன்
நான் பெற்ற முதல் முத்தை
நெஞ்சம் பதறுதையா.

குருஷேத்திரத்தில் கர்ணன்வீழ
"ஐயோ மகனே" என்று குந்தி
ஓடிச்சென்று அணைத்தாளே
ஐயோ ராசா நான் பாவி
இப்போ வந்து பிறந்து விட்டேன்
என் பிள்ளை என்று சொல்ல
முடியாத பாவியானேன்.
எனக்கு மட்டும் பலமிருந்தால்
இரவிரவாய் உன்னை எடுத்துச் சென்று
செம்மணியில் எரித்திருப்பேன்.
முந்தநாள் சாமம் உனக்குப்
பழஞ்சோறு போட்ட கை
இந்தக் கடனையும்
துணிவோடு செய்திருக்கும்.

இராவணன் கொடுமை தாங்காது
காடாறுமாதம் போனவன் நீ.
நமது தலைவர்கள் போல
ஏதாவது சாட்டுச் சொல்லி
அங்கேயே இருந்திருக்கலாகாதோ?
திரும்பி வந்து ஏழுநாளில்
உன்னைச் சுட்டார்களோ கொடும்பாவிகள்.
ஏன் ராசா திரும்பி வந்தாய்?
உன்னை மகனென்று நான் வீட்டே
கொண்டு போனால் உன்தம்பிமாரை
விட்டு வைப்பாரோ கொடியவர்கள்?
வேட்டையாடித் தீர்த்துவிட்டுக்
கொட்டிலையும் எரிப்பார்கள்
மாட்டையும் லொறியில் ஏத்தி
பலாலி போய்ச் சேர்வார்கள்.
யாரென்று கேட்க யாரிருக்கிறார்
மகனே நான் ஏழையெல்லோ!

பெரிய இடத்துப் பிள்ளையெல்லாம்
மேல்நாடோடி டாக்டராக
நீயேன் ராசா எல்லாத்தையும்
உன் தோள்மேல் ஏற்றாய்?
உன்னை நம்பி வாழ்ந்த எம்மை
என்னென்று மறந்து போனாய்?
என் ஒருத்தி கூலியிலே
உங்களை நான் வளர்த்தெடுத்தேன்
நீங்கள் வளர்ந்து மரமாகி
எனக்கு நிழல் தரும் வேளை
என் கனவெல்லாம் தெருப்புழுதியில்
அப்படியே அழிஞ்சுபோச்சு.
என் கடைசிக் காலம்வரை
என் கைதான் எனக்குதவி.
மெய்யே ராசா, நான் போய்வாறன்
மிச்சத்தை வீட்டில் அழ்
என் வயித்தெரிச்சல் ஒருநாள்
இப்பாவிகளை எரிக்குமெல்லோ.
தனிநாடு கேட்டு மேடையேறி
கனக்கக் கதைத்தவர்கள்
அயல் நாட்டில் விருந்துண்டு
பாதுகாப்பாய் இருக்கையிலே
ஊருக்காய் மடிந்தபிள்ளை
தெருப்புழுதியில் கிடக்கின்றான்.
அவனை அங்கு விட்டுச்செல்ல
என் நெஞ்சம் விம்முதையா.
என்பிள்ளை என்று சொல்ல
முடியாத பாவியானேன்.

--சன்மார்க்கா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:39 pm

விழிப்பு

சமையல் செய்யும் இயந்திரமாக
ஆண்டுகள் பல தூங்கிக் கிடந்தாய்
உன்சிறு வீடே உனதுலகானது
உப்பும் புளியுமே பிரச்சனையானது
உனது வாழ்நாள் இவ்வாறாக
உழுத்துப் போனது
உன்னைச் சுரண்டி வாழ்ந்தது உலகம்
உன்னை நினத்து அழுதவர் கொஞ்சம்.

அனால்--
தாயே! நீ இன்று விழித்துக் கொண்டாய்
தெருவில் இறங்கி ஊர்வலம் வந்தாய்
அன்னையருடன் அணி
திரண்டு விட்டாய்
அகப்பை பிடித்த கைகளில் பதாகை;
போதும் கொடுமைகள் என்ற முடிவு
பிள்ளைகள் பற்றி நெஞ்சில் ஏக்கம்
கண்களில் சோகம்
நடையில் வேகம்
இறுதியில் வெற்றி உனக்கே தாயே!

உலகில் பாதி பெண்கள் ஆனதால்
உங்கள் பலத்தை உணர்ந்து விட்டீர்கள்
நித்திரை செய்த காலம் முடிந்து
நீதியக் கேட்கும் காலம் வந்தது.
வீட்டுக்கு வீடு அன்னையர் வந்தனர்
உன்பலம் உணர்ந்து
நீ நிமிர்ந்த வேளை
தாயே எமக்கு விடிவு வந்தது.

--சன்மார்க்கா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:40 pm

செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று

-சுதிர்தராணி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:41 pm

தெளிவு பெற்ற மதியினாய்

இறப்பவர் பலபேர் இளைஞர்கள் ஆனதால்
இளம் பெண்கள் பலர் விதவைகள் ஆனார்.
வீட்டுக்கு வீடிளம் விதவைகள் எத்த்னை?
தந்தையை இழந்த பிள்ளைகள் எத்தனை?
நாட்டில் நிலமைகள் இப்படித் தொடர்ந்தால்
இங்கிவர் படுந்துயர் எப்ப்டித் தீர்வது?

இவர்களின் வாழ்வு இத்தோடு முடிந்ததா?
பயனுள்ள வாழ்வு வாழ முடியாதா?
காலம் முழுவதும் கைமைக் கோலமா?
குடும்பச் சுமையெனக் குமைந்தவர் வாழ்வதா?
மறுமணம் ஒன்றுதான் வாழ்வென்று இல்லை.
உழைத்துண்டு வாழும் சுதந்திரம்ம் வேண்டும்

திரௌபதி மானம் காத்திடக் கண்ணன்
பாரதக் கதையிலே பக்க்மாய் வந்தான்
தேடுதல் வேட்டையில் அகப்பட்ட மான்கள்
துயரினைத் துடைக்க எவரிங்கு வந்தார்?
விம்மி அழுதிடும் பிஞ்சு மனங்களை
வாழ்வு கொடுத்துத் தேற்றலும் வீரமே!

உலகினில் பாதி பெண்களானாலும்
சுதந்திரம் என்பது பெண்களுக்கில்லையே!
தாலியும் வேலியும் இடையினில் வந்தது.
"நாணும் அச்சமும் நாய்கட்கு" உகந்தது
எத்தனை காலம் பழமையில் அழிவது
நவயுகம் காண நங்கையீர் வாரீர்.

--சன்மார்க்கா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 9:42 pm

உண்மையிலும் உண்மையாக

விரிந்து கிடந்த
கூந்தலை முடிந்து
கலைந்து போன ஆடைகளை
அணிவதற்காய் நானும்
மெதுவாக எழுந்த போது
'இவள் அவனோட விரும்பித்தான்....'
வார்த்தைகள் என்னை
அறுத்து வதைத்தன
திரும்பிப் பார்த்தேன்
அம்மா, அக்கா, அண்ணா அனைவருமே
என்னைப் பிழையாக....
"தான் செத்திருக்கலாம்
இல்லாட்டி
அவனைச் சாக்காட்டியிருக்கலாம்
இரண்டு மில்லாமல் எங்கட மானத்தை...."?

தொடர்ந்தன பொறிகள்.
ஆனால்....நான் சிரித்தேன்
"இராணுவக் கற்பழிப்புக்காய் கலங்கிடலாகாது" என
மேடையேறி முழங்கிய அண்ணன்
புத்தகங்களில் ஊதிய அக்கா
இன்று.... எனது ஊரவன்
அதே நிலையில்....

எனக்குப் புரியவில்லை
அந்நியன் ஆத்திரத்தில்
அடக்கு முறையின் வடிவில் நடந்து கொண்டான்
ஆனால்... இவனோ...
காமனாய்... கயவனாய்...
இவனை என்ன செய்யலாம்?

கற்புக்காய் கண்ணீர் வடிக்க
நான் ஒன்றும் கண்ணகியல்ல
மானத்தை நினைத்து நிற்க,
நான் ஒன்றும்
இழக்கவில்லை.
தற்கொலையில் உயிரைமாய்க்க
நான் ஒன்றும் கோழையில்லை

இராணுவத்தை விட்டுத் தள்ளினோம்.
ஆனால்... நமது இனத்தவனை வெறிபிடித்தவனை
திருமணமாகி இரு குழந்தையும் பெற்றவனை
என்னைப்போல் இன்னும்
எத்தனை பேர்?
இவனைப்போல் இன்னும்
எத்தனை பேர்?
இவர்களுக்கு என்ன செய்யலாம்?
குழம்பினேன்
நான் குழறவில்லை
குடும்ப கௌரவத்திற்காக
என்னைக் கொல்லலாம்
ஆனால் நானாக...
அது நடக்காது.

எனது பாதங்கள் தொடரும் பயணத்தில்
முடிந்தால்.... துணிவிருந்தால்
உண்மையிலும் உண்மையாக
எவராவது வாழ வரலாம்.

--ரங்கா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை - Page 3 Empty Re: பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum