தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்ததில் பிடித்தது...

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Sep 20, 2013 12:17 pm

First topic message reminder :

தாய்!
ஒருகவளம் சோறும், ஒருகுவளை நீரும்
தருபவரெல் லாமெனக்குத் தாய்!
அடக்கமில் லாமல் அதிர நடந்தால்
தடுக்கிடும் கல்லுமென் தாய்!
முலைப்பால் கொடுத்தென் முகத்தையும் சேலைத்
தலைப்பால் துடைப்பவள் தாய்
அம்மாநீ எந்தன் அருகிருக்கும் தைரியத்தில்
சும்மா இருத்தல் சுகம்!
பன்னுமாக மத்தாள் பசித்தவர் ஓட்டிலிடும்
அன்னவாக னத்தாள் அவள்.
ஓயா தியங்கி இயக்கத் துறங்குவாள்
மாயா மனோன்மணி தாய்!
எண்ணமும், எண்ணும் மனமும்ஆங் கெண்ணத்தால்
எண்ணப் படுவதும் தாய்.
மூலத் துறங்கி முனைப்பிற் கிளர்ந்தெழுவாள்
கோலக் குமிண்சிரிப் பாள்.
ஸ்ரீபுரத்தாள், மாமதுரைக் கோபுரத்தாள், பண்ணிசைக்கும்
நூபுரத்தாள் நெஞ்சே நினை.
அன்பே சிவம் அதன் ஆன்மா அவள் எனவே
அன்பே அவளேன் றறி!

சு.ரவி
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down


படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Sep 30, 2013 3:30 pm

தாமதமாய் வென்றாலும் - இவன்
தரணியையே வெல்லுவேன் ...
அழியாத கவிபடைத்து - உலக
ஆயுளையே மிஞ்சுவேன் ...

தமிழனென்ற கர்வத்தை - எம
தர்மனிடமும் காட்டுவேன் ...
உயிர்பிரியும் நேரம்கூட - தமிழனென்று
உரக்ககுரல் மீட்டுவேன் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...

கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by முரளிராஜா Tue Oct 01, 2013 7:14 am

படித்து ரசிக்க வேண்டிய கவிதைகள்
நன்றி சகோதரி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:48 pm

கண்மணியே !
உலகில் பெண்களிடம் 
சொல்லப்படும்
ஆண்களின் காதல் அனைத்தும்
பெண்களால் கொள்ளப்பட்டு
கடைசியில் கல்லறைதான்
காண்கிறது என்றால்...

என் காதல் மாத்திரம்
உன்னிடம் 
சொல்லப்படாமலே
இருக்கட்டும்.....
- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:49 pm

தாயை
மகிழ்விக்க எதையுமே வாங்கிதர வேண்டாம்,
என்ன வேண்டுமென்று கேட்டாலே போதும்...!!!
நன்றி! முக நூல்! 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:49 pm

நண்பா நினைவில் கொள்
இதுவும் கடந்து போகும்.
சிகரத்தின் உயரம் தொடுகிறாய்
நினைவில் கொள் 
இதுவும் கடந்து போகும்.
பாதாளத்தின் கீழ் நிற்கிறாய்
நினைவில் கொள் 
இதுவும் கடந்து போகும்
அடக்க முடியாது
அழுதோம் ஒரு நாள்
அந்த அழுகையே 
நகைப்புக்கு உள்ளானது 
இன்று
நினைத்து நினைத்து சிரித்தோம்
ஒரு நாள் 
அந்நினைவே துயரமானது 
மற்றோர் நாள்
நண்பா நினைவில் கொள்
இதுவும் கடந்து போகும் 
நிலையாமையே நிலையானது 
நினைவில் கொள்
மாற்றம் ஒன்றே மாறாதது 
மறந்திடாதே
நண்பா நினைவில் கொள்.
நன்றி! முக நூல்! 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:51 pm

பஸ்யில் பயணம் செய்யும் முதிர் கன்னியின் கவிதை :

நாங்கள் கூட 
பாபர் மசூதி தான் ,
எல்லோரும் எங்களை 
இடிக்க தயாராக 
இருகிறார்கள் ,
ஆனால் 
யாரும் கட்ட 
தயாராக இல்லை ....!!
 
வயித்துக்காக திருடுபவர்களை
துறத்தும் அதிகாரிகள்
வசதிக்காக திருடும் அரசியல்வாதிகளை
தொட்டால்...
துறத்தப்படுகிறார்கள் ..
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:51 pm

பஸ்யில் பயணம் செய்யும் முதிர் கன்னியின் கவிதை :

நாங்கள் கூட 
பாபர் மசூதி தான் ,
எல்லோரும் எங்களை 
இடிக்க தயாராக 
இருகிறார்கள் ,
ஆனால் 
யாரும் கட்ட 
தயாராக இல்லை ....!!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:52 pm

வயித்துக்காக திருடுபவர்களை
துறத்தும் அதிகாரிகள்
வசதிக்காக திருடும் அரசியல்வாதிகளை
தொட்டால்...
துறத்தப்படுகிறார்கள் ..

#
பணி மாற்றம்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:53 pm

விமானத்துல பறக்கும் போது சக்கரம் தேவை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் மீண்டும் கீழ இறங்க சக்கரம் தேவைப்படும்.

எப்பவுமே ஏறி வந்த ஏணிய எட்டி உதைக்காதீங்க...
 

விடைபெறுகின்றன
வண்ணத்து பூச்சிகள் ! --

கர்ப்பித்தவரை 
கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்,
தண்டித்ததையும் மறந்து.....

மனதிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!...

உருவங்களுக்கு இடையில்
புருவங்களை சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!♥♥♥!♥╣ 

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை
கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!

பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:54 pm

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்

"
கவலைப்படவில்லை" என அப்பாவிடமும்

"
அடுத்த மா"தத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும்

"
முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி" என தங்கையிடமும் சொல்ல முடிந்தது..

"
காலையிலிருந்து சாப்பிடல...
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது....

-
யாரோ ஒரு அனுபவசாலி!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:54 pm

நேற்றுவரை
அழகிய நட்பை 
சுமந்து திரிந்தோம் !..

நாளை முதல்...
பழகிய பல நினைவுகளை...
சுமந்து அலைவோம்!

நாம் அனைவரும் சுற்றித் திரிந்து
தேன் குடித்த மலர்வனம்..
நாளை பறக்க இருக்கும்
வண்ணத்து பூச்சிகளாய் ..
மணம் வீசும்.....

அந்த வனத்தில் வீசிய மணம்
நம் மனதில் வீசும் தினம்...
விரைவில் ..நம்மை உருக்க போகிறது ...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 01, 2013 1:55 pm

நின்ற பொழுதில் நின்றுவிட்டு 
கண்ட பொழுதில் பேசிவிட்டு 
உன் நினைவாலே 
தவித்து கிடக்கிறேன்... 
வரம் ஒன்று தந்தால் 
உன்னோடு வாழ்ந்து பார்க்கிறேன் 
இல்லையென்று போனால் 
உன் நினைவோடே 
வீழ்ந்து போகிறேன்..
 
 
எத்தனை வெறுப்பை சுமர்த்தி 
நீங்கள் என் பாரம் கூட்டினாலும் 
மனமுடைந்து போகமாட்டேன்...

மிரட்டி நிற்கும் 
வெறுப்பின் பயமின்றி

உயிரை 
புரட்டிப் போடும் புறக்கணிப்பின் 
கோரமுகம் பார்த்து ரசித்து... 

என் வழியில் இன்னும் கொஞ்சம் 
ஆழமாய் நேசித்தே கிடப்பேன்...

நீங்கள் விரும்பினால் அதன் பின்னும் 
என்னுடன் இருக்கலாம்...

அதன் பின்னும் நேசிப்பேன் !
 
 
உன் நினைவுகள் 
என்னுள் வந்ததற்கான 
சுவடுகள் தான் 
எனது கவிதைகள்...
 

என் பழைய நினைவுகளை புரட்டும் பொழுது மீண்டும் ஒரு முறை அவளுடன் வாழ்ந்துவிட்ட சந்தோஷம் எனக்குள் !


நன்றி! முக நூல்! 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Wed Oct 02, 2013 3:05 pm

உன்னைவிட
அழகாகவும்
அற்புதமாகவும்
அமைதியாகவும்
வார்த்தை என்ற
கத்திகளை
எடுத்து, ரத்தம் 
சொட்ட சொட்ட,
சொட்டும் ரத்தம்
வெளியே தெரியாமல்
சொருக தெரியும்....

வார்த்தை என்ற
கத்தியின் 
வலியின் வீரியம்
தாங்கியவன் அதனால்
வார்த்தையின்றி
மெளனமாக
விலகி செல்கிறேன்...

-செந்தில் வேல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Wed Oct 02, 2013 3:09 pm

குறிப்பு: 
மகாத்மாவின் சீடர்கள் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும், கர்ம வீரர் காமாராஜ் அவர்களுக்கும் கூட இன்று நினைவு நாள்.

லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் பிறந்த நாள். தமிழகம் கண்ட கர்ம வீரர் காமராஜருக்கு மறைந்த நாள்.

மகாத்மாவுடன் இரண்டறக் கலந்த இந்த நல்ல ஆத்மாக்களையும் இன்றைய நன்னாளில் நினைவு கூறுவதுடன் வாழ்த்துவோம்.

நன்றி.
அண்ணல் மகாத்மா நினைவஞ்சலி...

தந்தையா, தாத்தாவா, அண்ணலா, ஆத்மாவா?
      தனிமனிதச் சுதந்திரத்தின் மனமெனும் அங்கமா?
அத்தனையும் ஒன்றான அற்புத மானுடம்
      அகிம்சையே காட்டிய ஆற்றலின் மகிமை
மொத்த அகிலத்தின் முதன்மேன்மைச் சிந்தனை
      முயற்சிக்கே பரிணமித்த முழுமையின் எளிமை
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

சத்தியமே சோதித்த சோதனைச் சத்தியம்
      சமத்துவம் நடாத்திய சமதரும உத்தமம்
கத்தியும் ரத்தமும் காணாத போர்க்களம்
      கருணையும் உரிமையும் வற்றாத நிலைக்களம்
பித்தமும் போக்கிடும் அறிவில் நிறைகுடம்
      பெண்மையைப் போற்றிடும் அன்பின் உறைவிடம்
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

சுத்தமும் சுகமும் அகமும் புறமுமாம்
      சுதந்திரம் என்பதே பிறரையே மதிப்பதாம்
எத்தனை புகழிலும் வழுவாத ஒழுக்கமாம்
      எண்ணம் யாவிலும் நேர்வழி யோகமாம்
புத்தனைப் போலவே வாழ்ந்ததும் உதாரணம்
      புரிந்துகொள்ள ஏதுவாய்ப் புனிதமான மானுடம்
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

சித்தராய் வாழ்விலே இயற்கையின் வைத்தியம்
      சிந்தனை செயலிலே நேர்மையில் பைத்தியம்
உத்தமராய் உண்ணலில்; ஊட்டலில் அகிம்சையாம்
      உலகமதம் யாவையும் ஒன்றுகண்ட ஞானியாம்
சத்தியமாய்ச் சுயநலத்தைக் காணாநல் யோகியாம்
      சக்தியொடு நல்லறத்தைக் காத்தமா மானுடம்
இத்தனை பெருமையும் இலங்கிடும் இமயமே
      இந்தியத் தந்தையெம் காந்தி மகாத்மா!

அகிலத்திற்கே அருமைப் புதல்வனை; அண்ணல்காந்தியை;
      அன்னைபாரதம் அளித்தபெரும் பொன்நாள்; இன்னாள்;
சகிப்பையும் அன்பையும் சமதருமச் சிந்தனையும்
      சமுதாயம் நினைவுகொள்ளும் சத்தியத் திருநாள்
அண்ணல்தம் பிறந்தநாள் ஆனந்த நினைவுநாள்
      ஆன்மச் சோதனைக்கு ஆண்டில்வரும் நன்நாள்
அன்புடையோர் மேன்மைக்கு அடிவைக்கும் பெருநாள்
      அறம்போற்றும் அறிவுடையோர் கொண்டாடும் திருநாள்!

      அண்ணலே வாழி!!! எமது அன்பு நெஞ்சமே வாழி!!!

-உத்தம புத்திரா
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Wed Oct 02, 2013 3:12 pm

காமராஜர் ! 
விருதுபட்டியில் முளைத்த விதையாய் 
வெடித்து சிதறிய மண்ணில் 
வேரூன்றிய திங்கள் மகனாய் 

எளிமையில் பிறந்து வறுமையில் 
பயின்ற கல்வியை ஆறாம் 
படை வீட்டில் தடைபட்ட 
அறிவு கூட்டை தாண்டி 

உழைப்பின் நாயகனாய் 
உண்மை தோழனாய் நாடே 
வீடு நம் தேசமே குடும்பம் என்று 
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க 

அறவழிப் போரும் மது கடை 
மறியலும் தீண்டாமை ஒழிப்பும் 
ஒத்துழையாமை இயக்கமும் 
நடந்த போரில் தாமும் கலந்து 
சிறை பட்ட சிங்கமாய் 

ஏழைப் பங்காளராய் 
கோழை மாணவர்களுக்கு 
விடியும் கல்விக் கண்ணை 
விதைத்த அறிவு பெட்டகமே 

நீ படிக்காத மேதையாய் 
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த 
கர்ம வீரராய் காலம் வைத்த பெயரில் 
கருப்பு காந்தியாய் மாறி 

அணைகள் பல கட்டி 
அகிலம் செழிக்க மனைகள் தோறும் 
மண்ணில் கலந்த சிமெண்டாய் மாறி 
நலமும் வளமும் சிறக்க .... 

காகித ஆலைகள் கட்டி 
மக்கள் வளம் உயர 
தரை வழி கடல் வழி 
சாலையில் தன் உயிர் 
வழி தந்த ஆட்சியால் 

அணையா விளக்காய் 
அமைதியின் சொருபமாய் 
உறங்குகிறாய் நம் அன்னை மடியில் ....! 
- hishalee
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by முழுமுதலோன் Wed Oct 02, 2013 3:17 pm

undefined wrote:விமானத்துல பறக்கும் போது சக்கரம் தேவை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் மீண்டும் கீழ இறங்க சக்கரம் தேவைப்படும்.

எப்பவுமே ஏறி வந்த ஏணிய எட்டி உதைக்காதீங்க...
படித்ததில் பிடித்தது...
சூப்பர் சூப்பர் சூப்பர் 


அண்ணலே வாழி!!! எமது அன்பு நெஞ்சமே வாழி!!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Wed Oct 02, 2013 3:23 pm

எங்கள் இந்திய தேசம்

முப்பக்கமும் கடலால் சூழ்ந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
ஒரு பக்கம் மட்டும் தீவாய் நிறைந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பார் எங்கிலும் பசுமையாய்
பயிர்கள் விளைந்திருக்கும்!
எங்கள் இந்திய தேசம்!
அந்த பசுமையிலே எங்கள்
பாரத மக்களின் பசி போக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு என்று
அன்றே பாடினான் எங்கள் கவி பாரதி!
எம்மதமும் சம்மதமே? 
என்று மத சார்பற்று வாழும்
எங்கள் இந்திய தேசம்!
வேற்று தாய் மக்களும்கூட
ஒரு தாய் பிள்ளை போல்
சகோதர உணர்வுகளுடன்
வாழ்ந்திடும் எங்கள் இந்திய தேசம்!
பெண்களை கண்களாய்
போற்றிடும் எங்கள் இந்திய தேசம்!
அயலவர் எல்லாம் கண்டு
சிறப்பு கொள்ளும்
எங்கள் இந்திய தேசம்!
இந்த புனித பூமியில்
நான் ஒரு இந்திய குடிமகன் 
என்று பெருமையோடு சொல்லி கொள்வேன்!
- நித்யஸ்ரீ
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Wed Oct 02, 2013 3:24 pm

எங்கள் தேசம் இந்திய தேசம் 
வாழ்க வாழ்க வாழ்கவே! 
இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள் 
எல்லாரும் சகோதரர்கள்! 

--சரணங்கள்-- 

வேறு வேறு வண்ணப் பூக்கள் 
சேர்ந்த வாச மாலை நாங்கள்! 
வண்ணம் வேறு வேறென் றாலும் 
வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! 
--1(எங்கள் தேசம்... 

சிந்து கங்கை பிரம்ம புத்ரா 
கிருஷ்ணா காவேரி 
சென்று சேரும் கடலில் என்றும் 
நீரின் தன்மை ஒன்றுதான்! 
--2(எங்கள் தேசம்... 

பேசும் மொழியும் வாழும் இடமும் 
வேறு வேறு ஆனால் என்ன? 
பாச உணர்வும் பண்பும் அன்பும் 
தேசம் முழுதும் ஒன்றுதான்! 
--3(எங்கள் தேசம்... 

இமயத் தலையில் பனிப்பூ மேகம் 
குமரி அலையில் கொலுசுகள் நாதம் 
குஜரத் வங்கத் தோளில் மோதும் 
கொஞ்சும் தாயின் ஒற்றுமை கீதம்! 
--4(எங்கள் தேசம்... )
--- நா.முத்து நிலவன் -- 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Wed Oct 02, 2013 3:26 pm

"கண்ணீர் தேசம்" 
"கண்ணீர் தேசம்" 

வெளிப்புற பார்வைக்கு 
வெள்ளைப்பற்கள் இடற்கொண்டு 
எள்ளி நகையாடி இன்பம் 
இனியில்லை என்றறியா ஒரு கூட்டம்,,, 

அக்கம்பக்கத்து உறவுகளோடு 
அணைக்கட்டி விளையாடி 
ஆசையென்னும் சுதந்திரம் 
எக்கணம் கிடைக்குமோவென 
காத்துக்கிடக்கும் அக்கூட்டம்,,, 

அறிந்திரவில்லை அடுத்தென்னவென்று 
அவரது நிலையற்ற வாழ்க்கையின் 
முடிவுத்தாழ்பாள் எங்கே என்று 

அங்கே பார் கறையான்களின் 
கைவண்ணத்தால் வேரிழந்து 
சாய்ந்துக்கிடக்கும் மரப்பொந்துகள்,, 
அதிலும் நிழலில்லை அங்கேயும் 
நிற்கிறது ஒரு பாவப்பட்ட 
மனிதக்கூட்டம் கிடைக்காத நிழல்தேடி,, 

ஒற்றை வேளை உணவிற்கு 
நெருப்பிட அஞ்சும் நிலையேனின்று ,,, 

நெருப்பில் குளித்து வாழும் 
நிலைகெட்ட நிலைதனில் 
நிர்பந்தமாய் நிறுத்தப்படிலும் 
அஞ்சாது பறைசாற்றிக் 
கொண்டிருக்கும் என்றும் 
எம்பழந்தமிழ் செருக்கு 

ஒட்டிக்கிடக்கும் வயிற்றோடு 
சட்டையின்றி சாகசம் செய்யும் 
சிறுவர்கள் அங்கே வறண்ட 
மண்ணாடை பூசிக்கொண்டு 
அடுத்தவேளை பசிமறந்து சாவுதனை 
எதிர்க்கொள்ளும் சுடுகாடு,,,இதில் 
பூமியெங்கும் இரத்தவாசம்,,, 

இடுப்பில் கட்டிய ஈரத்துணி 
காயும்வரையாவது 
உத்திரவாதம் இருக்குமோ 
இவர்கள்தம் உயிர்க்கு,,, 

உறக்க வேளைகளில் கூட 
தட தடவென கதவுடைக்கும் 
சத்தம்தனில் சவமாவதற்கு 
நொடிகளை எண்ணிக்கொண்டு 
சற்றும் தளராமல் துப்பாக்கித் 
தோட்டாக்களை வரவேற்கிறது,, 
உணவின்றி உடல்வற்றி 
எலும்புக்கூடாய் மாறியப்பொழுதும்,, 

ஆயுளரியா வாழ்கையின் 
ஆயுளிழக்கும் விதி ,,, 
பக்கத்து வீட்டு நண்பனின் 
சவப்படலத்தை கண்டபின்னும் 
உறுதியாய் சுற்றித்திரிகிறது ,,, 
வெள்ளை மனதோடு புறத்துக்கீற்றினிலே 
விளையாடி மகிழும் மழலைக் கூட்டம் 

கிரீச்சிடும் ஓநாய்களின் 
ஓல சப்தங்களாய் வான ஊர்திகள் 
வான்மேகத்தை கிழித்துச்செல்ல 
அங்கே இங்கே அணுகுண்டுப்பாய்ச்சல் 

அடுத்த நொடியை எப்படி 
கடப்பதென்பதில் அலைப்பாய்ந்துக் 
கொண்டிருக்கும் அவலக்குரலேந்திய 
அப்பாவி மக்களின் கனவு தேசம் ,, 
இன்றொரு கண்ணீர் தேசமாய் மாறியதேனோ,,, 
-
அனுசரன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Wed Oct 02, 2013 3:28 pm

ஒட்டு வேட்டைக்கு
நாட்டை வேட்டையாடும்
நரிகளின் செய்யலால்
கூட்டு வேட்டையில்
எங்கள் இரத்தம்
குளம் போல்!

எல்லா மதமும்
இரத்தம் குடிக்க!
எங்கள் தேசம்
கண்ணீர் வடிக்கிறது!

என் மக்கள்
பூசிக்கும் தெய்வங்கள்
யாசிக்கும் மக்களை
நேசிக்க மறுக்கும்
மூர்க்கர்களை வேரருக்க
என் தேசத்துக்கு
துணை செய்யட்டும்!
-சின்னு
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Oct 03, 2013 11:26 am

தலைவர் இருக்கின்றார்..! 

"இல்லாத கடவுளை இருக்கு என்கிறார்கள்; 
இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்"
இதுதான் என் பதிலாக இருந்தாலும்... 
அவர்கள் அனைவருக்கும் 
பொதுவாக சொல்லி விடுகின்றேன்! 
என் அன்பானவர்களே..! 
"தலைவர் இருக்கின்றார்!" 
இப்போது கூட... 
இந்தக்கணம் கூட இருக்குன்றார்! 
வேறு எந்தவிதமான 
தடயங்களுக்கும் 
நாம் போக வேண்டாம்..! 
ஆராயவும் வேண்டாம்..! 

நம் முகநூல்களே போதும்; 
தலைவர் வாழ்கின்றார் என்பதற்கு! 
முகநூல்களில் ஆட்சி செய்கின்ற 
தலைவர் படங்களே சாட்சி! 
அவர் பேசிய வார்த்தைகள்... 
அவர் பற்றிய கருத்துக்கள்... 
அவரின் சிந்தனைகள் என்று 
இன்னும் ஏராளம்.... 
தினம் தினம் 
நம் முகநூல்களில் பகிரப்படுகின்றன... 

முகநூல்களில் படங்களுடன் 
பகிரப்படுகின்ற கருத்துக்களிலும்.... 
நீங்கள் கேட்கின்ற கேள்விகளிலும்.... 
இந்தக் கணப்பொழுது 
நான் சொல்லுகின்ற பதில்களிலும்.... 
எனக்குள்ளும்.... 
உங்களுக்குள்ளும்.... 
கேள்விகள் கேட்கின்ற 
பதில்கள் சொல்லுகின்ற 
அனைத்து அன்பானவர்களின் 
உள்ளங்களிலும்.... 

விமர்சனம் செய்கின்ற
வஞ்சித்துப் பேசுகின்ற 
அனைத்து வஞ்சகர்களின் 
உள்ளங்களிலும்.... 

போராட்ட வெறி கொண்ட 
ஆழமான தமிழ் உணர்வு கொண்ட 
விடுதலை வேட்கை கொண்ட 
தாய்மண்ணை நேசிக்கும் 
அனைத்து 
போராளிகளின் உள்ளங்களிலும்.... 

சுதந்திர தேசத்திற்காக 
சுதந்திர விடியலுக்காக 
அடுத்தவர் தேசத்திலிருந்து 
ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் 
புலம் பெயர் வாழ் 
அனைத்து தமிழ் உறவுகளின் 
உள்ளங்களிலும்.... 

தாயக தேசத்தில் 
சிங்களவன் பிடிக்குள் 
அகப்பட்டு, அடிமைப்பட்டு 
கற்பையும், உயிரையும் 
பாதுகாக்க தினம் தினம் 
செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் 
அனைத்து தாயக உறவுகளின் 
உள்ளங்களிலும்....

தாயகத்தில் நித்தமும் 

தமிழன் செத்துப் பிழைக்க 
தாய்த் தமிழகத்தில் இருந்து 
குரல் எழுப்பி, கை கோர்த்து
உதவிக்கரம் நீட்ட 
துடித்துக் கொண்டிருக்கும் 
அனைத்து தாய்த் தமிழகத்து 
உறவுகளின் உள்ளங்களிலும்.... 
தலைவர் பத்திரமாக 
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்..! 
அவர் பத்திரமாக 
வாழ்ந்து கொண்டிருப்பதால்தான்.... 
அவர் பற்றி அடிக்கடி 
நானும்...
நீங்களும்.... 
அவர்களும்....
பேசிக் கொண்டிருக்கின்றோம். 
இப்போது கூட... 
நான் எழுதும் 
என் எழுத்துக்களில் கூட 
தலைவர் இருக்கின்றார்! 
அவர் மிகவும் 
பத்திரமாக இருக்கின்றார்..! 

திரும்பவும் 
ஒருதடவை சொல்லுகின்றேன். 
"இல்லாத கடவுளை இருக்கு என்கிறார்கள்; 
இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்"! 
இல்லாத கடவுள் இருக்கும் போது.... 
இருக்கின்ற தலைவர் 
எப்படி இல்லாமல் போனார்..? 

ஆகவே, தேடல் கொள்ளும் 
அனைத்து அன்பான உள்ளங்களிலும் 
அவர் பத்திரமாக இருக்கின்றார்..! 

- வல்வை அகலினியன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Oct 03, 2013 11:27 am

.......காந்தியம்........
----------------------------
இருபது வயதில்...............
----------------------------------------
தன்மேல் அடிவிழுந்த பிறகுதானே, 
இந்த மனிதன் துடித்து எழுந்தான் !
பிறர் நலம் பேணுபவன் தானாகவே,
மனமுவந்து போராடியிருக்க வேண்டாமோ?

நாற்பது வயதில்............
-------------------------------------
தன்மேல் விழுந்த அடி,
தாய்நாட்டு மனிதன் எவனுக்கும்,
விழவே கூடாது வலி என்னோடு போகட்டும்,
என்று தன்னலம் மறந்து தகித்து வந்தவன் !

அறுபது வயதில்...........
------------------------------------
தன்நாட்டு மக்களின் நிலை உணர்ந்து,
விழிகசிந்து ஆடை துறந்து,
அன்னியப்பொருள் அனைத்தையும் வீசி,
ராட்டை சுழற்றி சுயகௌரவம் பேணி,
தமது தேவைக்கு தானே என உணர்த்தியவன் !

என்பது வயதில்..........
----------------------------------
எதையும் துறப்பது எளிதானதல்லவே !
போராட தலைமை ஏற்று,
போதித்து அஹிம்சையினை !
மிதிபட்டு வதைபட்டு உடலெல்லாம் ரணப்பட்டு,
எல்லாமே துறந்து நமை சுவாசிக்க வைத்தவன் !!

ஆயுளின் முடிவில்............ 
-----------------------------------------
தேசப்பிதா ! மகாத்மா !
எங்கள் குலதெய்வம் !!
அமைதியும் பொறுமையும்,
கற்பித்த கடவுள் எங்கள் தாத்தா !
"காந்தி அடிகள்"

-பரத் கண்ணன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Oct 03, 2013 11:29 am

நீ எந்த ஜாதி என்று கேட்டா
பூமி உன்னை சுமக்கின்றது!

நீ எந்த மதம் என்று பார்த்தா
நிலம் நீர் கொடுக்கிறது!

நீ எந்த இனம் என்று அறிந்தா
காற்று சுவாசிக்க அனுமதிக்கிறது!

மரமோ செடியோ கொடியோ
மிருகமோ பறவையோ நுன்னுயிரோ
ஜாதியோ மதமோ இனமோ பார்ப்பதில்லை.

அறிவும் பண்பும் தெளிவும் இருந்தும்
மூடனாய் மூர்க்கனாய் மூளையிழந்து
ஜாதியை பேசி மனிதனாய் வாழ மறந்தாய்யடா!

முட்டள் மானிடா!இனியாவது விழித்திடடா..
நன்றி! முக நூல்!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Oct 10, 2013 11:08 am

அனைத்தும் ஆகி அன்பாகி
அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
--விவேகானந்தர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 3:51 pm

தொகுப்பு அருமை கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum