தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்ததில் பிடித்தது...

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Sep 20, 2013 12:17 pm

First topic message reminder :

தாய்!
ஒருகவளம் சோறும், ஒருகுவளை நீரும்
தருபவரெல் லாமெனக்குத் தாய்!
அடக்கமில் லாமல் அதிர நடந்தால்
தடுக்கிடும் கல்லுமென் தாய்!
முலைப்பால் கொடுத்தென் முகத்தையும் சேலைத்
தலைப்பால் துடைப்பவள் தாய்
அம்மாநீ எந்தன் அருகிருக்கும் தைரியத்தில்
சும்மா இருத்தல் சுகம்!
பன்னுமாக மத்தாள் பசித்தவர் ஓட்டிலிடும்
அன்னவாக னத்தாள் அவள்.
ஓயா தியங்கி இயக்கத் துறங்குவாள்
மாயா மனோன்மணி தாய்!
எண்ணமும், எண்ணும் மனமும்ஆங் கெண்ணத்தால்
எண்ணப் படுவதும் தாய்.
மூலத் துறங்கி முனைப்பிற் கிளர்ந்தெழுவாள்
கோலக் குமிண்சிரிப் பாள்.
ஸ்ரீபுரத்தாள், மாமதுரைக் கோபுரத்தாள், பண்ணிசைக்கும்
நூபுரத்தாள் நெஞ்சே நினை.
அன்பே சிவம் அதன் ஆன்மா அவள் எனவே
அன்பே அவளேன் றறி!

சு.ரவி
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down


படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 10, 2013 3:56 pm

தொகுப்பு அருமை கைதட்டல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by ஸ்ரீராம் Thu Oct 10, 2013 4:21 pm

நம் முகநூல்களே போதும்; 
தலைவர் வாழ்கின்றார் என்பதற்கு! 
முகநூல்களில் ஆட்சி செய்கின்ற 
தலைவர் படங்களே சாட்சி! 
அவர் பேசிய வார்த்தைகள்... 
அவர் பற்றிய கருத்துக்கள்... 
அவரின் சிந்தனைகள் என்று 
இன்னும் ஏராளம்.... 
தினம் தினம் 
நம் முகநூல்களில் பகிரப்படுகின்றன...
உண்மைதான் எற்றுக்கொள்கிறேன் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Oct 10, 2013 6:21 pm

நன்றி! நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Oct 11, 2013 2:53 pm

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...


மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...


காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...


வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...


முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...


நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...


தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...


நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...
-முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Oct 11, 2013 3:02 pm

மண்வாசனை...!! 


மணக்கும் மண்குடிசைகள், 
ஒழுகா ஓட்டு வீடுகள், 
ஒதுங்கி நிற்கும் 
ஒற்றை பெரிய ஆலமரம், 
ஒய்யார அய்யனார் சாமி என 
மொத்தமும் சுத்தமாய் 
மண்வாசனையுடன் கிராமம்..!! 

புழுதி பறக்கும் தெரு, 
புரவியில் பறக்கும் வேகம், 
சட்டை கழற்றும் பொடுசுகள், 
சகதி மண் களங்கள், 
உருண்டு புரண்டு வீடு சேரும் வரை 
பூமி அன்னையின் மடியில்..!! 

ஓரமாய் நிற்கும் மாட்டுவண்டி, 
ஒரு பக்கம் மேயும் மாடு, 
துணையாய் மாட்டுக்காரன், 
தூரத்தில் பனிப்புல், 
இயற்கையுடன் காதல், 
வானின் மொத்த புகைப்படமும் 
இவர்களை சுற்றியே..!!! 

கட்டாந்தரை வீடு, 
சாணி மெழுகிய தரை, 
வீடு முழுக்க கோலம், 
நுழைந்தவுடன் வாசம், 
நோய் தவிர்க்கும் சுவாசம், 
அத்தனை அறிவியலுக்கும் 
அடித்தளம் இங்கே தான்..!!! 

ஒற்றைப் பனைமரம், 
பாழடைந்த வீடு, 
வற்றிப் போன கிணறு, 
வழிநெடுக நெருஞ்சி முள், 
ஆள் அரவமில்லா காடு, 
செவி வழியாய் பேய்க் கதை என 
கற்பனையில் மிரட்டிய 
கிழவி இயக்குனர்கள் பிறப்பிடம்..!! 

பொய்யில்லாப் பாசம், 
பொல்லாப்பில்லாத நேசம், 
எல்லாரும் சொந்தம், 
மொத்தமாய்ப் பந்தம், 
சோகத்தில் பாதி, 
சந்தோஷத்தில் மீதி, 
என்றும் நகத்துடன் சதையாகி 
மண்வாசனை மாறா மக்களுடன் 
மக்கிப் போகாத கிராமங்கள்..!!!

- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Oct 11, 2013 3:03 pm

ஆபாசமும், பாலியல் பகுத்தறிவும்...!!!


தோலும் சதையும் சூடி 
காற்று நிரப்பிய வெற்று உடம்பை 
உப்பில்லாத உணர்ச்சி பூட்டி 
திரையிட்டு மூடிக் கொண்டால் 
ஐம்புலன்களும் அடங்குமென 
எப்படி ஒப்புக் கொள்வது..?? 

தீயதைப் பார்க்காதே என்றால் 
எதுவெல்லாம் தீயதென 
தீயிலடித்து சொல்லியிருக்கலாம்..!! 
நினைப்பவை எல்லாம் தீயதாகவும் 
ஒவ்வாத செய்கையெல்லாம் 
தீக் கொடியதெனவும் எவர் அறுதியிட்டது..!! 

வயதிற்கு புறம்பான செய்கை 
அர்த்தமில்லா தொடுதல் குற்றம், 
பழக்கமில்லா பார்வை குற்றம், 
விளக்கமில்லா பேச்சு குற்றமென 
குழந்தைக்கு கற்பித்தலை விட்டுவிட்டு 
குறைகூறி காரணமின்றி குற்றமாய் 
பாவித்தல் பாவமென விளங்கவில்லையோ..?? 

தாய் தாயாக தனை மறந்து 
தந்தை தோழனாகி தினம் வளர்ந்து 
இலைமறை காய் போல, 
பருவம் கடக்கும் பிள்ளைகளுக்கு 
அழகிய அனுபவம் பகிர்ந்து 
பருவ வயது பாலின மாற்றத்தை 
பக்குவப் படுத்தி விளக்கி 
உணர்வுக்களுக்கு உயிர்ப்பூட்டி 
புதியதொன்றை புரிய வைப்பது 
கடமையென தெரியவில்லையோ..?? 

மிகத் தெளிந்த குளத்தில் 
சிறு கல் எறிய நேரும்போது 
களங்கம் என்னவோ குளத்திற்கு தான்..!! 
குளத்து நீரின் மனதாய் பருவமிருக்க 
சீரழிக்கும் கற்களை எறிய 
சுற்றுப்புறமும் சூழ்நிலையும் 
சேர்ந்தே தயாராகிவிட்டனர்..!! 

விளம்பர இடைவேளை அலங்கரிக்கும் 
அரைகுறை ஆடை காட்சியும், 
நாளிதழ் பக்கமொன்று திருப்புகையில் 
அருவெருக்கத்தக்க புகைப்படமும், 
பருவ வயதில் புதிதாகவே தெரியும்..!! 

ஆபாசம் என்பதற்கும் 
பாலியல் பகுத்தறிவிற்கும் 
வித்தியாசம் உண்டென்பதை 
மறுக்கும் பெற்றோர்களே, 
குற்றமென பார்த்தால் எல்லாம் குற்றமே 
பாலியலும் ஒரு உணர்வுப்பூர்வமான 
புரிதல் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Oct 11, 2013 3:04 pm

இதோ ஒரு மூடன்... 

கண்முன் தெரியாமல்,
உன்னை கை பிடிக்க,
துடிக்கும் மூடன்... 

காதலன் என்றாலும்,
கணவன் என்றாலும்,
உணக்கேன்று என்னிடத்தில்,
எல்லைகள் உண்டு...

எல்லைகள் தாண்டினால்,
ஈட்டிகள் உறுதி,
அதில் குருதிகள் என்றால்,
எனக்கோ மறதி...

மூடிய கதவுகள்,
காற்றுக்கு ஆடாது... 
கூச்சலும் போடாது... 
என் நெஞ்சமும்,
அப்படி தான்,
காதலனுக்காகவும் திறவாது,
கணவனாய் மாறினாலும் திறவாது...

- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Oct 11, 2013 3:07 pm

இன்றோடு,
என் கவிதைகளுக்கு முற்றுபுள்ளி.
ஏன் தெரியுமா...?
என்னை விட நீ அவகளை தானே அதிகம் விரும்புகிறாய்...


- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Oct 11, 2013 3:14 pm

அன்பு தோழி அவள்,
அடக்கமாய் அவள் கையில் நான்,
ஆழமாய் அவள் நெஞ்சில் நான்,
அழிக்க முடியாத உறவு தந்தவள் அவள்,
ஆச்சரியமாய் என்றும் திகழ்பவள்,
அள்ளி கொடுத்தாலும்,
கிள்ளி கொடுத்தாலும்,
அவள் முடிவு சரி என்பேன்,
முதுர்ச்சி வந்த பின்பும்,
தளர்ச்சி இல்லாமல் எனக்காக துடிப்பவள்,

அம்மா... 
- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Oct 11, 2013 3:17 pm

பெண்மை என்பது தாய்மை... 

பெண்மை என்பது மென்மை,
பறவையின் இறகு கூட தோற்கும்,
தாயின் வருடலில்...

பெண்மை என்பது உண்மை,
பொய்யான பாசங்கள் கூட தோற்கும்,
தாயின் உண்மையான அன்பில்...

பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...

பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...
- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by ரானுஜா Fri Oct 11, 2013 4:40 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Oct 14, 2013 12:56 pm

நட்பு 
நட்பு என்பது நாம் 
கருவறையில் கால் உதைத்து 
கல்லறையில் கால் பதிக்கும் 
இடைப்பட்ட காலங்களின் 
ஒரு அழகான - நாட்குறிப்பு

- மோகன சுந்தரி
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Oct 14, 2013 12:58 pm

நட்பு
பிசிராந்தையாரது நட்பு
பிசிரற்ற ஒரு நட்பு
சுகம் பார்ப்பதல்ல நட்பு
சுவையான சுமையே நட்பு
நலம் நாடி மகிழும்
நன்மை கோடி பெறும்
நட்பால் பெற்ற புகழும்
நாளும் சுடர் விடும்
வாள் வீச்சின் வன்மைக்கும்
தேள் கொடுக்கின் கொடுமைக்கும்
வேள்வித் தீயின் நன்மையாய்,
தோள் கொடுக்கும் தோழமை.
நட்பென்ற மேம்பாலம்
கடலையும் கடக்கும்.
இணைப்பில்லா இரும்பும்
காந்தமென ஈர்க்கும்.

நிலைக்கும் நினைவலை
நெஞ்சத்தை நனைக்கும்.
நலிந்தாலும் நட்பு வேர்
பதமாக துளிர் விடும்.

http://www.kavithai@facebook.com
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Oct 14, 2013 12:59 pm

தாலாட்டு
குதூகலமே குழந்தைதானே!
அமைதிப்படுத்த ஆர்ப்பாட்டமா?
நிர்ப்பந்தம் செய்தாவது,
தூக்கம் தரப்பட வேண்டுமா?
பக்குவமான பாடலோ
பல மொழி தாலாட்டல்லவா?
பரப்பரப்பாய் பறக்கும் பலரும்
பயமுறுத்தியே தூங்கச் செய்வர்.
தாய்மார்களுக்கோ தவிப்பு.
தாலாட்டுப் பாட தயக்கம்.
தவறிப்போய் பாடிவிட்டாலோ,
தப்பாமல், பாப்பா மூடிவிடும் வாயை.
ஓராண்டு ஓடிவிட்டால், பாப்பா..நீ
ஒழுங்காய் பள்ளிக்கு ஓடிவிடு.
ஓயாது அழுதிட்டால், போடுவாள் இனி
ஒரு சத்தமெனும் தாலாட்டு

 http://www.kavithai@facebook.com
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Oct 14, 2013 12:59 pm

நீ......
நான் அழும்போது, சாய்ந்துகொள்ள
தோள் கொடுக்க, நீ
நான் சிரிப்பது ஒன்றே
உன் வாழ்வின் குறிக்கோள்.
நீரைப் பிரித்தால், மூலக்கூறுகள்
ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மட்டுமே, - இந்த
'நீ' ஐப்பிரித்தால், உன்னில்
நானும், நீயும் மட்டுமே.
துப்பாக்கிக்கு குண்டுகள் போல்,
நானின்றி இயங்க முடியாது நீ.
பூமியின் உள்மையம் அனற்குழம்பல்லவா?
'நீ'யும் என்னுள் எரியும் பெருந்'தீ'தான்.
அறிந்துகொள்ள இயலவில்லை இன்னும்,
அந்த 'நீ' யாரென்று.

http://www.kavithai@facebook.com
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Oct 14, 2013 12:59 pm

வானவில்
சொல்லால் வடிக்கவியலா
வில்லாக நீயிருந்தாலும்,
பார்வை அம்புகள் பல
பாய்வதென்னவோ உன்மீதுதான்.
வானிற்கு நான் வர வேண்டும்.
வளைவதற்கு வரம் வேண்டும்.
வண்ணங்களைக் காட்டி விடு.
எண்ணங்களைத் தீட்டிக் கொடு.
விண்ணில் விடுதலை, பெற்றாயோ
வானில் விளைந்த விசால ஓவியமே!
வீணான கண்கள் உனைக் காணாதவை.
விட்டுப் போகாதே பட்டான நிறக் கொத்தே!

http://www.kavithai@facebook.com
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Oct 14, 2013 1:01 pm

பணிவே பண்பு  

தன்னடக்கம் உன் 
தலைக்கு மகுடம் 
தற்பெருமை உன் 
கழுத்துக்கு கத்தி.. 
பணிவே பண்பு - தற் 
பெருமை சிறுமை..!


நன்றி! முக நூல்...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Oct 14, 2013 1:01 pm

உன்னைத்தான் தேடுகிறது மனம்
முதலாகவும் முடிவாகவும்….

எனக்குத்தெரியும்
நீ நேசிப்பது என்னை மட்டும்தான் என்று.
ஆனாலும் உள்ளே உறுத்தல்கள்.
எனைவிடவும் உனக்கென்று
புதிது புதிதாய் நண்பர்கள்
சிற்றீசல்போல் தோன்றியுள்ளனர்.
எனக்கென்றும் நீ மட்டும் தானடீ
என் முதலும் முடிவுமாக.

உரத்துக் கூச்சலிட்டாலும்
அதைக் கேட்கும்படி அருகில் நீ இல்லை.
உரத்துக் கூச்சலிட முடியாதவனாய்,
உள்ளம் எரிக்கும் வார்த்தைகளை
அள்ளி வீசியது உண்மைதான்.
ஆனாலும் நீ விளங்கிக்கொள்,
அனாதைக்குழந்தையின்
சிறிய ஏக்கங்கள் கூட
புறக்கணிக்கப்டும் இந்த உலகில்,
அன்புக்காய் ஏங்கும் என்னை
ஒரு தாயைப்போலே ஏற்றுக்கொள்.

எனக்கானவள் நீ.
உனக்கானவன் நான் என்று
உயில் எழுதி விட்ட அந்த ஆண்டவன்
ஏன் அதை எம் கரம் தர மறுத்தானடீ.
விண்ணும் மண்ணும் அதிர
ஒருதரம் உன்பெயர் உச்சரித்து
எனக்காய்ப் பிறந்தவள் நீ
என்று வானுலகும் கேட்க
உரத்துக் கூறிவிடத் துடிக்கிறது என் இதயமடீ!
அதன் பிறகே எனை
மரணம் தழுவட்டும்!
உனை வாழ்த்தி விடைபெறுவேன்
சந்தோசமாக,
நான் உனைக் காயப்படுத்திய
இந்தப் பொழுதுக்காக மன்னிப்புக்கேட்டு.

-----------------------------------
கவிதையின் காதலன்


நன்றி! முக நூல்...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 15, 2013 12:30 pm


ஒளியினில் இருந்தேன்
உணர்ந்ததும் பிரிந்தேன் 
உலகினில் பிறந்தேன் 
உழல்வதில் விழுந்தேன் 

நடப்பதில் தெரிந்தேன் 
நாயகன் அறிந்தேன் 
இடர்பட நினைத்தேன்
இதுவரை வாழ்ந்தேன் 

மனமது கடந்தேன்
கடலது அடைந்தேன் 
ஒரு வினை கரைத்தேன் 
ஒடுங்கி விழித்தேன். 

ஓம் எனும் பெரும் தேன் 
ஓசையும் சுவைத்தேன். 
நாவினில் இரு தேன் 
நாதனும் நாமமும் எழுத்தேன்

முக்தியும் சக்தியும் முடித்தேன் 
மூலமும் முதலும் படித்தேன் 
காலமும் நேரமும் கடந்தேன்
கருவினில் மீண்டும் கிடந்தேன் 

- யாத்தவர் 
உதயகுமார் 

sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 15, 2013 12:40 pm

ஆசைதான்
எனக்கு
மனைவியாய்
இறுதிவரை
ஒரு தோழியாய்
வரப்போகும்
அவள்
யார் என்று அறிய
ஆசை!
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு
முன் எழுந்து
அவள் தூங்கும்
அழககை ரசிக்க
ஆசை
தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என்
இதழ் சேர்க்க
ஆசை
அனைவரும் இருக்கும்
நேரத்தில்
கள்ளவனாய்
அவள் இடைக்கில்ல
ஆசை
யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில் அவளை
நனைக்க
ஆசை
குழந்தையாய் அவள்
செய்யும் தவறுகளை
ரசிக்க
ஆசை
யாரும் இல்லா
சாலையில்
அவள்
கைபிடித்து நடக்க
ஆசை
முதன் முதலில்
நான்
வாங்கும் வாகனத்தில்
அவளோடு
அமர்த்து வெகுதூரம்
செல்ல
ஆசை
மழை நேரத்தில்
ஒரு குடைக்குள்
அவளுடன்
இருக்க
ஆசை
மழையில் நனைந்த
என் தலையை
அவள்
புடவை நுனிகொண்டு
துடைக்க
ஆசை
என் உயிர் சுமக்கும்
அவளை
அன்று
என் கண்ணுக்குள்
வைத்து பார்க்க
ஆசை
என் உயிர் பிறந்த
பின்பும்
அவள்
முகம் முதல்
பார்க்க
ஆசை
இப்படியே
60 ஆண்டு காலம்
அவளோடு
நான் வாழ
ஆசை
60 ஆன பின்பும்
அவள் முகத்தில்
விழுந்த ரேகையும்
கன்னத்தில் விழுந்த
குளியையும்
மூக்கு கண்ணாடி
போட்டு ரசிக்க
ஆசை
அன்றும்
கோலுன்றி
அவள் நடவாமல்
என் தோல்
பிடித்து நடக்க
ஆசை
இருவர் இறக்கும்
நேரத்திலும்
அவள் மடியில்
என் தலை இருக்க
அவள் என்னை
பார்த்து புன்னகைக
இருவரின் உயிர்பிரிய
ஆசை.

நன்றி! முக நூல்...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 15, 2013 12:41 pm

மறந்துவிடாதே ...

நான் கருவில் உருவான போதே கலைக்க மறந்த நீ 
நான் பிறந்ததும் கள்ளிப்பால் கொடுக்கவும் 
மறந்துவிட்டாய். 

... நான் உன் வயிற்றில் இருந்த போது உதைத்தேன் என்பதற்காகவா என்னை இந்த நரகத்தில் தனியே விட்டு வதைக்கிறாய்? 

நீ முத்தமிட்ட எச்சில் கூடக் காயவில்லை அதற்குள் எங்கு சென்றாய் என்னை இந்த குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு? 

ஆனால் பாரதி கண்ட புதுமைப் பெண் நீதானோ? 
அனாதை என்றொரு ஜாதியையே எனக்காக உருவாக்கிவிட்டாய்!!! 

உன் தொப்புள் கொடியை அறுத்த நீ உன் கருவறையையும் அறுத்தெறிய மறந்துவிடாதே. 

காரணம்... 

வேண்டாம் அதில் இன்னொரு அனாதையின்
"ஜனனம்" !!!



நன்றி! முக நூல்...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 15, 2013 12:42 pm

என் கோலம்,
உன் வாசல் வராமல் போகலாம்,
என் கால்கள்,
உன் பாதைகளை பின்பற்றாமல் போகலாம்,
என் கண்கள்,
உன் பிம்பத்தை பாராமல் போகலாம்,

என் நெஞ்சத்தில் நீ இருக்கும் வரை,
தூரமும் தெரியாது,
ஒரு துயரமும் கிடையாது...


நன்றி! முக நூல்...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Sat Oct 19, 2013 3:33 pm

ஈனும் முன்னே கருவில் சுமந்தவள்
ஈன்ற பின்னும் இதயம் தாங்கியவள்
வானின் அளவு அன்பில் கனிந்தவள்
வண்ணம் பேனி வாழ்வு தந்தவள்!
பாலை ஊட்டி பாசம் பொழிந்தவள்

படிப்பும் அறிவும் பகிர்ந்து கொடுத்தவள்
நாளை எண்ணி நடையாய் நடந்தவள்
நன்றாய்ப் பணிகள் நயமாய்ச் செய்தவள்!
இரவும் பகலும் விழித்துக் காத்தவள்

இறைவன் அடியைப் பார்த்து வணங்கி
வரவும் செலவும் பாரா வண்ணம்
வாழ்வு முழுதும் மகனுக் குழைத்தவள்!


பிள்ளை இளைஞன் ஆன உடனே
பெண்ணை பேசி திருமணம் முடித்தவள்
நல்ல மகனும் நல்ல மகளும்
நட்புடன் வாழ நாளும் உழைத்தவள்!


வயது போக கிழவி ஆனாள்
வறுமை நோயும் வந்து சேர்ந்தது
தயவு காட்ட உறவு இன்றி
தனிமை கொடுமை வாழ்வில் நலிந்தாள்!


ஊதியம் தேடா தாய்க்கு மகனும்
ஒதுப்புறம் ஒன்றே தேடிக் கண்டான்
நாதியற்ற நடை பிணம் ஆனாள்
நல்ல நாளே மரண நாளே!
ஊரார் கூடி பிரார்த்தனை செய்வர்

உறவார் கூடி கட்டி அழுவர்
தேரா உலக தெய்வ மாந்தரே
தெளிந்து நோக்க திருவருள் உணர்வீர்!



முக நூல்...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Oct 24, 2013 4:25 pm

நம்பிக்கை வை....

முடியும் முடியும்
என்று சொன்னால்
உன்னால் முடியும் பாரடா !!

உண்மை உழைப்பு
ஊக்கம் உயர்வை
உணர்ந்து நீயும் பாரடா !!

அதிர்ஷ்டம் நம்பி
தினமும் வெம்பி
கரையேர நீ காத்திருந்தால்..

காலம் உன்னைக்
கொன்று விடும் - இது
ஞாலம் கண்ட உண்மையன்றோ !!

இன்பம் துன்பம்
இரண்டையும் ரசிக்கும்
இதயத்தை நீ பெற்றிடுவாய் !!

கோபம் என்னும்
கொடிய விஷத்தை
முழுமையாகக் கொன்றிடுவாய் !!

மரமாய் விலங்காய்
மண்ணில் மட்கிடவா
மானிடா நீயும் அவதரித்தாய்?

ஆறறிவு உடைய
மனிதா இதை
உணர்ந்தால் உனக்கே வெற்றியன்றோ !!

நம்பி கை வை
நம்பிக்கை வை !!
நிச்சயம் நமக்கே வெற்றியன்றோ !!!



முக நூல்...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Oct 29, 2013 2:29 pm

இனிக்கவில்லை இந்த தீபாவளி 

எங்களின் தீபாவளி 
ஒரு மாதத்திற்கு 
முன்பே தொடங்கிவிடும் 

காலண்டரின் தேதி 
கிழிகையில் 
மனதில் நாட்களின் 
எண்ணிக்கை குறையும் 

வகுப்பிலும் தெருவிலும் 
வாங்கும் பட்டாசும் 
உடுத்தபோகும் ஆடையின் 
பேச்சாயிருக்கும் 

தூப்பக்கியே 
எங்களின் 
தீபாவளி 
தொடங்கிவைக்கும் 

அப்பாவுடனும் 
அம்மாவுடனும் 
தொடங்கும் 
எங்கள் பட்டண பிரவேசம் 

அம்மன் சந்நிதியுளும் 
விளக்குதூண்களில் தொடங்கும் 
தேடல் வேட்டை 
செலக்சன் ஹாஜி மூசாவிலும் 
வந்து முடியும் 

எனக்கும் பேண்ட் வேணும் 
என கேட்டுக்கும் 
தம்பியின் அழுகை
கரும்பு சாறில் சமாதான படுத்தப்படும் 

அந்த புதிய வாசனை 
முகர்ந்து பார்க்க 
திட்டுகளை பொருத்து கொண்டு 
எடுத்து எடுத்து பார்போம் 
அலமாரியில் இருந்து 

முறுக்கு பிழிகிறேன் 
என்று எண்ணெய் 
சுட்டதும் வலிக்கவில்லை 

சாமிக்கு வைக்காமல் 
தரபடுவதிலை தின்பண்டங்கள் 
ஆயினும் 
வெண்ணை திருடிய கண்ணாய் 
முறுக்கு திருடினோம் 

என்றும் சோம்பலாய் 
எழும் நாங்கள் 
அன்று மட்டும் 
சூரியனக்கு முன்பாய் 
கண் விழிப்போம் 

எண்ணெய் குளியலுமாய் 
வேகும் கறி மணமாய் 
தீபாவளி தொடங்கும் 

மாமன் கைபிடித்து 
சரஸ்வதி 
லட்சுமி 
பொருளாதார தடை விதிக்காத 
அணுகுண்டுகளை 
வெடித்து மகிழ்ந்தோம் 

தெருவெங்கும் 
குப்பையாய் 
அடுத்தநாள் 
வெடிக்காத வெடி தேடி 
வீதியில் திரிந்தோம் 

அத்தையும் மாமனும் 
சித்தியும் சித்தப்பாவும் 
தாத்தாவும் பாட்டியும் 
என 
சந்தோசமாய் கொண்டாடிய 
தீபாவளி அது 
அந்த சந்தோசத்தின் 
அடையாளமாய் இன்றும் 
கையில் உண்டு 
வெடி வெடித்த தழும்பு 

அன்று 
சொந்தங்கள் சூழ 
உண்டும் 
வெடித்தும் 
அந்த தீபாவளி 
நினைவாய் மட்டுமே 

இன்று 
அடுக்குமாடி குடியிருப்பில் 
என் குடும்பமாய் 
தனித்து கொண்டாடுகையில் 
இனிக்க வில்லை
இந்த தீபாவளி !!!!!!!!!!!!!!!!

பாண்டிய இளவல் (மது)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... - Page 3 Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum