Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முன்னோடி விளையாட்டரங்கம் விளையாட்டு கிராமத்தில் அமைகிறது.......
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
முன்னோடி விளையாட்டரங்கம் விளையாட்டு கிராமத்தில் அமைகிறது.......
முன்னோடி விளையாட்டரங்கம்
விளையாட்டு கிராமத்தில் அமைகிறது.......
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி டூ தஞ்சாவூர் சாலையில் உள்ளது வடுவூர் கிராமம். இக்கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் அதிகம், குறிப்பாக கபடி, வாலிபால், தடகளப் போட்டிகளில் சர்வதேச, தேசிய அளவில் முத்திரை பதித்தவர்கள் பலர் உள்ளனர்.
இக்கிராமத்தில் சுமார் 200 பேருக்கும் மேலாக காவல்துறையிலும், ரயில்வே, மின்சார வாரியம், போக்குவரத்து என மத்திய, மாநில அரசு துறைகளில் விளையாட்டால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் பலர், குடும்பத்திற்கு ஒருவர் விளையாட்டு வீர்ராக திகழ்கின்றனர்.
இதனால் “வடுவூர்” விளையாட்டு கிராமம் என்று அழைக்கப்டுகின்றது.
வடுவூரில் மேலும் சாதனையாளர்களை உருவாக்கும் வகையில் விளையாட்டு அரங்கம் (ஸ்டேடியம்) வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டது. இது குறித்து பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக கருத்தை பதிவு செய்தனர். மக்களின் தொடர் முயற்சியால், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்களின் முயற்ச்சியில், தஞ்சை – மன்னை சாலையில் வடவாறு கரையோரம் விளையாட்டு அரங்கத்திற்க்கு வாங்கப்பட்டுள்ள 4 ஏக்கர் நிலத்தில், முன்னாள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அஜய் மக்கானிடம் உதவி கோரப்பட்டது.
ஊர் மக்களின் ஆர்வம், மற்றும் திரு.டி.ஆர்.பாலு அவர்களின் தொடர் முயற்சியைத் தொடர்ந்து, வடுவூரில் ரூ.6 கோடி செலவில் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கம் அமைக்க மத்திய அமைச்சர் அனுமதியளித்துள்ளார். இதன்படி, சர்வதேச தரத்தில் கபடி, வாலிபால், கூடைப்பந்து மற்றும் தடகள மைதானங்களுடன் கூடிய உள் விளையாட்டரங்கம், அமைகிறது. இதன் தரைத் தளம் தேக்கு மரத்தாலும், மேற்கூரை அலுமினியத்தாலும் அமைக்கப்படும்.
இந்தியாவில் ஒரு கிராமத்தில் இதுப்போன்ற விளையாட்டரங்கம் அமைக்கப்படுவது. இதுவே முதல் முறையாகும். எனவே நாட்டின் முன்னோடி திட்டம் இப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தில் விளையாட்டரங்கம் அமைவதால், வடுவூர் மட்டுமள்ளாது ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தினை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நீண்ட இடைவெளிக்கு பிறகு கபடி, கைபந்து பயிற்ச்சி முகாம் தற்போது நடத்தப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். விளையாட்டு அரங்கம் அமைந்ததும் உலகளவில் தடம் பதிக்கும் வீரர்கள் இங்கு பட்டை தீட்டப்படிவார்கள். அவர்களால் ஊருக்கும் நாட்டிற்கும் பெருமை சேரும் என்று வடுவூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்..............
அடித்தளம் அமைத்தவர்:
இந்தியாவின் முன்னோடி திட்டமாக வடுவூர் கிராமத்தில் விளையாட்டு அரங்கம் அமைகிறது.
இதற்க்கு அடித்தளமிட்டவர்.
அதே ஊரைச் சேர்ந்த பத்திரிகையாளர் திரு.ஜோ.மகேஸ்வரன் ஆவார்.
கபடி வீரரான இவர், வடுவூரின் பெருமை குறித்து 2010ம் ஆண்டு பிப்ரவர் 8ம் தேதி (பக்.52-55) குங்குமம் இதழில் சிறப்பு செய்திக் கட்டுரை எழுதினார். பிற ஊடங்களிலும் இதை தொடர்ந்து பதிவு செய்தார்.
இதையடுத்து அப்போதைய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு.சந்திரசேகரன், வடுவூர் பகுதியினரை நேரில் அழைத்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விளையாட்டரங்கம் அமைக்க அறிவுறுத்தினார்.
விளையாட்டரங்கம் அமைக்க நிலம் வாங்க, மக்களிடம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்ட்து. இதை முன்னேடுக்க வடுவூர் விளையாட்டு குழுமம்ன் (ஸ்போர்ட்ஸ் அகாடமி) ஏற்ப்படுத்தப்பட்டது.
வடுவூரினை சேர்ந்த தொழிலதிபர்கள் திரு.பந்தல் சிவா, திரு.அன்புவேல்ராஜன், திரு.அருட்செல்வம், திரு.கமலகண்ணன் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் வழங்கி நிதியுதவி அளித்தனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் நன்கொடை அளித்தனர்.
திரு.இராமசாமி ஐயங்கார் மனைவி திருமதி.பூமா மற்றும் அவரது வாரிசுகள் தங்களது ஒரு ஏக்கர் நிலத்தினை தானமாக வழங்கினர். இத்துடன் சுமார் 3 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்ட்து. அந்த இடத்தில் தான் விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்களுக்கும், பத்திரிக்கையாளர் திரு.ஜோ.மகேஸ்வரன் அவர்களுக்கும், மற்றும் நன்கொடை அளிதவர்களுக்கும், முயற்ச்சி செய்தவர்களுக்கும் ஒட்டுமொத்த திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மக்களும், தங்களது நன்றியினையிம், வாழ்த்துகளையிம் இவர்களுக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Vaduvur Raja Cholan- புதியவர்
- பதிவுகள் : 2
Similar topics
» கொங்கோ கிராமத்தில் பெற்றோல் வாகனம் வெடித்து 100 பேர் பலி _
» கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!
» மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்
» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
» ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
» கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!
» மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்
» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
» ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum