தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 22 of 43 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 32 ... 43  Next

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:33 pm

First topic message reminder :

சாதனக்காணி _ அரசனால் கொடுக்கப்பட்ட உரிமை நிலம்.
சாதனபத்திரம் _ உரிமைப் பத்திரம்.
சாதனம் _ கருவி : பயிற்சி : துணைக்காரணம் : உருத்திராக்கம் முதலிய சின்னம் : இலாஞ்சனை : இடம் : நகரம் : ஆதார பத்திரம்.
சாதனம் பண்ணல் _ உறுதி செய்தல் : பழகுதல்.
சாதனன் _ பிறந்தவன்.



சாதனை _ செயல் முடித்தல்: விடாத முயற்சி : பிடிவாதம் : சலஞ் சாதிக்கை : நடித்துக் காட்டுகை : பொய்.
சாதன்மியம் _ ஒப்புமை.
சாதா _ சாதாரணமாக : பகட்டு இல்லாத.
சாதாரண _ ஒரு தமிழ் வருடம்.
சாதாரணம் _ பொதுவானது: எளிது : தாழ்வானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:54 pm

தைசம் _ பூச நாள்.
தைதம் _ விரல் நுனி.
தைதிலம் _ காண்டாமிருகம்.
தைதேயர் _ அரக்கர்.
தைத்தல் _ தையலிடுதல்: பொருத்துதல்: இணைத்தல்: வலை பின்னுதல்: தொடுத்தல்: கோத்தல்: பதித்தல்: அடைத்தல்: ஊடுருவுதல்.


தைத்திய குரு _ அசுரர் குருவான சுக்கிரன்.
தைத்தியர் _ திதி என்பவளின் மைந்தரும் பதினெண் கணத்துள் ஒரு வகையினருமான அசுரர்.
தைத்தியாரி _ அசுரர்களின் பகைவரான திருமால்.
தைத்திரீயம் _ யஜுர் வேத சாகைகளுள் ஒன்று: ஒரு உபநிடதம்.
தைப்பான் _ தையற்காரன் ஊசி.



தைப்பை _ சட்டை.
தையல் _ பெண்: புனையப்படுவது: தைப்பு : மேகம் : கட்டழகு.
தையற்காரன் _ துணி தைப்பவன்.
தைரியம் _ குதிரையின் பெருமித நடை: மனத் துணிவு.
தைலபீதம் _ அத்திப்பிசின்.


தைலம் _ எண்ணெய் : மரச்சந்து : மணப் பண்டங்களுள் ஒன்று.
தைலா _ மரப்பெட்டி.
தைலி _ பணப்பை.
தைலிகன் _ எண்ணெய் வாணிகன் : மருத்துவன்.
தைவதம் _ தெய்வம் : தெய்வ ஆராதனை: ஏழு சுரங்களுள் ஒன்று : ஆறாவது சுரம்.



தைவதீபம் _ தெய்வம் அருளிய விளக்கான கண்கள்.
தைவம் _ கடவுள்: தெய்வத்தின் வடிவம் : பரார்த்த லிங்க வகையுள் தேவர்களால் நிறுவப்பட்டது.
தைவரல் _ வருடுதல்: தடவுதல்: அலங்கரித்தல்.
தைவிகம் _ பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பட்டது : தெய்வத்தன்மையுடையது.
தைனியம் _ எளிமை : கீழ்மை : பொருளாசை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:55 pm

தொகம் - மதிப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:55 pm

தொகல் - கூடல் : சுருங்கல் : சேர்தல்.
தொகாநிலை - வேற்றுமை முதலியன விரிந்து நிற்பது.
தொகு - கூடு : தொகையாகு : சேரு : சுருங்கு : கூட்டு : தொகைசெய்.
தொகுதல் - கூடுதல் : சுருங்குதல் : நெருங்குதல் : ஒன்றாதல் : அடுக்கி வருதல் : மொத்தமாதல் :
ஒடுங்குதல் : வீணாதல் : குட்டையாதல்.
தொகுதி - அளவு : கூட்டம் : பகுதி : வரிசை : சேர்க்கை : சாதி : மொத்த எண்.


தொகுதிப் பெயர் - குழூஉக் குறிப் பெயர்.
தொகுத்தல் - அளவு படுத்தல் : ஒழுங்காக்குதல் : கூட்டல் : சம்பாதித்தல் : சுருக்குதல் : தொக்கு நிற்கச் செய்தல்.
தொகுத்துக் காட்டல் - தொகையாகக் காண்பித்தல்.
தொகுத்துச் சுட்டல் - நூல் உத்தியின் ஒன்று.
தொகுத்துரை - பொழிப்புரை.


தொகுநிலைத் தொடர்மொழி - வேற்றுமை யுருபு முதலியன நடுவே தொக்கு நிற்கச் சொற்கள் தொடர்ந்து வருவது.
தொகுபு - கூடி.
தொகுபுலப் பொருட்டற் குறிப்பு - ஓர் அணி : அஃது உபமேய உபமானங்கட்குரிய தருமவிடயந் தொக்கு நிற்பது.
தொகுப்பு - தொகுத்தல்.
தொகை - கணக்கு வகை நான்கின் ஒன்று : கூட்டம் : சுருக்கம் : தொக்கு நிற்றல் : கூடுதல்.


தொகைச் சூத்திரம் - பலதிறப் பொருள்களையும் வேறு வேறாகத் தொகுத்துச் சொல்லும் சூத்திரம்.
தொகைத்தல் - தொகைப் படுத்துதல்.
தொகைநிலை - தொக்கு நிற்கும் நிலை : சமுகமாய் நிற்கை : சுருங்கி நிற்கை : புறத்துறை வகை.
தொகைநிலைச் செய்யுள் - ஒரு வகைப் பிரபந்தம்.
தொகைப் பொருள் - முதலிற் பல காரணங்களால் விரித்துச் சொன்ன பொருளை முடிவிற் சுருக்கிச் சொல்லுதல் :
பிண்டப் பொருள் : தொகை நிலைத் தொடரின் பொருள்.


தொகையுவமம் - உபமான உபமேயங்களின் உவம உருபும் பொதுத் தன்மையும் தொக்கு நிற்கச் சொல்லப்படும் அணி.
தொகையுவமை - பண்பு முதலாயின தொக்கு நிற்பது.
தொகைவிரி - தொகுத்தாலும் விரித்தலுமாயிருப்பது.
தொக்கடம் போடுதல் - உடம்பு பிடித்தல் : கசக்கிச் சாறு பிழிதல்.
தொக்கடவு - குறுக்கு வழி : ஊடு பாதை.


தொக்கடி - குடலை : காவற்குடிசை : சிறுகூடை.
தொக்கடை - வறுமை : தரித்திரம்.
தொக்கம் - தொங்கல் : வழக்கு : சீரணமாகாமல் வயிற்றில் சிக்கிக் கொள்ளும் பொருள்.
தொக்கார் - அடுத்தோர் : தோழர்.
தொக்கிந்திரியக் காட்சி - ஓர் அளவை : அது பரிசம் அறிதல்.


தொக்கு - அற்பம் : உடல் : தோல் : அது பஞ்ச விந்திரியத்தொன்று : சருமம் : மரப்பட்டை.
தொக்குநிற்றல் - உருபு முதலியன சுருங்கி நிற்றல்.
தொங்கட்டான் - தொங்கலாயுள்ள அணிவகை : உடையைத் தளர்வாகக் கட்டுகை.
தொங்கணி - ஆபரணத்தின் கடைப் புணர்வு.
தொங்கல் - ஆண்மயிர் : ஆபரணக் கடைப்பூட்டு : காதணி : குதித்தல் : தங்கல் : தொங்குதல் : பீலி : பீலிக் குஞ்சம் :
பீலிக் குடை : பூமாலை : மயிர் : மயில்தோகை : முந்தல் : மூலைமூடும் உத்தரீயம் : முனை : வெண்குடை.


தொங்கல் விழுதல் - குறைவாதல்.
தொங்கண் - கள்வன் : சோம்பேறி.
தொங்காரம் - ஏளனம்.
தொங்கி - கள்ளி : திருடி : ஏடா கூடி.
தொங்கிசம் - அழிவு : நட்டம்.


தொங்கிப் போதல் - வைத்தது காணாமற் போதல் : பொருள் மோசம் போதல் : வழியிற் களைத்துத் தங்குதல் :
சாதல் : ஓடிப்போதல்.
தொங்கு கிழவன் - தொண்டு கிழவன்.
தொங்குதல் - குதித்தல் : தங்குதல் : தூங்குதல் : அண்டிக் கிடத்தல் : திடமாதல் : கிடைத்தல் : சாதல் : முடிவு பெறாது
தாமதித்திருத்தல் : உதவியற்றிருத்தல்.
தொசம் - துவசம் : கொடி.
தொடக்கம் - ஆதி : செல்வம் : துவக்கம் : வருக்கம்.


தொடக்கு - துடக்கு : கட்டு : பாசம் : பற்று : சூதகம் முதலிய தீட்டு : குஞ்சம்.
தொடங்கல் - முயலல்.
தொடங்கு - காலணி : தொடங்கென்னேவல் : விலங்கு.
தொடராமுறி - விடுதலைப் பத்திரம்.
தொடரி - ஒரு செடி : தொடர்ந்து : நாற்றி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:55 pm

தொடரெழுத்து - நிலைமொழியீற்றையும் வருமொழி முதலையும் தழுவி நிற்கும் எழுத்து.
தொடர் - கோவை : சங்கிலி : தொடரென்னேவல் : தொடர்பு : நூல் : பஞ்சிநூல் : பழைமை : பிசின் : பூமாலை : வாசம் : விலங்கு.
தொடர்ச்சி - உரிமை : ஒழுங்கு : தொடர்பு : பற்றுதல் : பூத்திரள் : முயற்சி : வழக்கு.
தொடர்ச்சொற்புணர்த்தல் - தந்திர உத்தியின் ஒன்று : அஃது ஒன்றற்கொன்று தொடர்புடைய சொற்களைச் சேர்த்து வைத்தல்.
தொடர்தல் - கட்டல் : தேடல் : பின்போதல் : பின்தொடர்தல் : முயற்சியாயிருத்தல் : வழக்கிலே அழைத்தல்.


தொடர்நிலைச்செய்யுள் - பொருளால் ஆயினுஞ் சொல்லால் ஆயினும் தொடர்ந்து நிற்கும் பாடல்.
தொடர்பு - உறவு : ஒழுங்கு : நண்பு : சேர்மானம் : தொடர்ச்சி : பழைமை : பா : பாட்டு : முறைமை.
தொடர்ப்பாடு - தொடர்ச்சி : பற்று : காமநுகர்ச்சி.
தொடர்மொழி - புணர்மொழி.
தொடர்வட்டி - வட்டிக்கு வட்டி.


தொடலை - மகளிர் விளையாட்டு : மாலை : விளையாட்டு : தூக்கு : தொங்க விடுகை : மணிக் கோவைகளால்
தொடுக்கப்பட்ட மேகலை.
தொடல் - சார்தல் : தீண்டல் : தோண்டல் : பீடித்தல் : புசித்தல்.
தொடி - ஒரு பலம் : கங்கணம் : கைவளை : பூண் : வளைவு : தோள்வளை : வீரவளை : சுற்று வட்டம்.
தொடிசு - உடந்தை : தொடர்பு.
தொடிமகள் - விறலி.


தொடு - அணாப்பு : தொடுவென்னேவல் : தோண்டல் : தோட்டம் : பரிசம் : மருதநிலம் : வஞ்சம் : வயல்.
தொடுகழல் - செருப்பு : தொடுதோல்.
தொடுகை - தோண்டுகை : பரிசம்.
தொடுக்கம் - பொன்.
தொடுசு - தொடிசு.


தொடுதல் - அணிதல் : இணைந்திருத்தல் : உண்ணல் : எய்தல் : தீண்டல் : தொடங்கல் : தோண்டல் : பிடித்தல்.
தொடுதுணை - உதவி.
தொடுதோல் - செருப்பு.
தொடுத்தல் - அணிதல் : அறிமுகமாதல் : உருவாக்கல் : கட்டல் : கோத்தல் : செலுத்தல் : சேர்த்தல் : தொடங்கல் :
பற்றல் : பாத்தொடுத்தல் : பிணைத்தல் : பொருத்தல் : வில்வளைத்தல் : வைத்தல்.
தொடுபதம் - சோறு.


தொடுப்பி - புறங்கூறுவோன்.
தொடுப்பு - கட்டு : கலப்பை : கூட்டு : கோவை : கோள் : சங்கிலி : சேர்க்கை : தந்திரம் : துவக்கம் : பழக்கம் :
பாதரட்சை : மரக் கொம்பு : வழக்கு : வெறும் புறங் கூறல்.
தொடுப்புக்கத்தி - பட்டாக்கத்தி.
தொடு வழக்கு - கள்ள வழக்கு.
தொடுவாய் - ஆறுங் கடலுஞ் சேரும் இடம்.


தொடுவான் - அடிவானம் : பிணையடி மாடுகளைத் தொடுக்குங் கயிறு.
தொடுவை - கூட்டாளி : தொடுத்திருப்பது : புது யானையைப் பழக்கும் யானை.
தொடுவை வள்ளம் - துணைச் சிறு படகு.
தொடை - அம்பு : உத்திரந் தாங்குங் கட்டை : செய்யுளைத் தொடுத்தல் : துடை : தொடர்ச்சி : நாணி : பூங்கொத்து :
பூமாலை : மதில் : மாலை : வீணை முதலியவற்றின் நரம்பு : கட்டு.
தொடை தட்டி வேளாளர் - நாவிதர்.


தொடையல் - தொடர்ச்சி : கட்டுகை : தோளணிமாலை : தொடுத்த மாலை : தேன்கூடு : நாசம்.
தொடைவாழை - ஒரு செடி : ஒரு நோய்.
தொட்டல் - தோண்டல் : தீண்டுகை : கட்டுகை : உண்ணுகை.
தொட்டவிரல் தரித்தான் - பெருங் குறிஞ்சி.
தொட்டாட்டுமணியம் - குற்றேவல்.


தொட்டால் சுருங்கி - ஒருவகைச் செடி : தொட்டால் வாடி.
தொட்டி - காஞ்சொறி : கெண்டம் : தொட்டில் : வேலி : குறுந்தொட்டி : நீர்த்தொட்டி : அழி : குப்பைத் தொட்டி : தொட்டிக் கட்டு :
அம்பாரி : கள் : சிறுகாஞ்சொறி : சிற்றாமுட்டி மரம் : முத்துச் சிப்பி விற்கும் இடம் : சிற்றூர் : பத்தல் : முன்னணை.
தொட்டிமை - ஒற்றுமை : அழகு.
தொட்டியம் - ஒரு நாடு : ஒரு மொழி : ஒரு வித்தை.
தொட்டியர் - ஒரு சாதியார்.


தொட்டில் - சிறுகட்டில் : தொட்டி.
தொட்டு - தொடங்கி : பற்றயெனெச்சம் : தோண்டி : தொடர்தல் : தொடங்கி : செறிந்து : தோண்டுங் கருவி.
தொண்டகம் - குறிஞ்சிப்பறை : ஆகோட்பறை : தொண்டு பூண்ட இருதயம்.
தொண்டலம் - யானைத் துதிக்கை.
தொண்டிக்கள் - நெல்லாற் சமைத்த கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:56 pm

தொண்டிச்சி - அடியாள்.
தொண்டியோர் - சோழ குலத்தோர் : சேரர்.
தொண்டீரன் - தொண்டைமான்.
தொண்டு - அடிமை : ஒன்பது : ஒரு பூடு : பணி : பழமை : கடவுள் வழிபாடு : ஒழுக்கங் கெட்டவன்[ள்] :
ஒடுக்க வழி : உருவு சுருக்கு.
தொண்டை - ஆதொண்டைச் செடி : இனிய குரல் : கொவ்வைச் செடி : பெருங்குரல் : மிடறு : யானைத் துதிக்கை.


தொண்டைத் தூரு - உள்நாக்கு வளரும் நோய்.
தொண்டையுடைதல் - பருவத்தாற் குரல் மாறுதல்.
தொதி - பப்பரப்புளி.
தொத்தன் - அடிமைக்காரன்.
தொத்தியேறுதல் - அதிகாரங்காட்டுதல் : பற்றியேறுதல்.


தொத்து - அடிமை : ஒட்டு : சார்பு : பழமை : பூங்கொத்து : திரள் : சம்பந்தம் : பற்று : வைப்பாட்டி : தொத்து நோய்க் குணம்.
தொந்தப்பழி - நீடித்து நிற்கும் பழி.
தொந்தம் - அன்னியோன்னியம் : இரட்டித்தது : சலஞ்சாதித்தல் : சேர்க்கை : தொடர்பு : பழைமை : போர் :
புணர்ச்சி : இரட்டை : பகை : ஆயுதவகை : நெருங்கிய பழக்கம்.
தொந்தயுத்தம் - விடாப்போர்.
தொந்தரவு - வருத்தம்.


தொந்தவினை - பழவினை.
தொந்தி - சதைமடிப்பு : தொப்பை : பெருவயிறு : நோய் வகை.
தொந்தித்தல் - தொடர்தல்.
தொந்திப்பு - இரட்டிப்பு : தொடர்பு : பேதம் : தாதுக் கலப்பு : சந்திப்பு : தீராப்பகை.
தொப்பணம் - தோப்புக்கரணம்.


தொப்பற - நன்றாய்.
தொப்பாரம் - கொப்புளம் : தோள் பாரம் : நெடுஞ் சப்பாத்து : பேரில்லம் : பொட்டணம் : துணிப் பெருமூட்டை :
முகமூடி வகை : புற்கட்டு.
தொப்பி - கள் : குல்லா.
தொப்புள் - கொப்பூழ்.
தொப்பை - தொந்தி : தோற்பை : கொப்புளம்.


தொம்பம் - கம்பக் கூத்து.
தொம்பரம் - புந்தி : பேரில்லம்.
தொம்பரை - ஊர் சுற்றி.
தொம்பர் - கழைக்கூத்தர்.
தொம்பறை - களஞ்சியம் : பெரு வயிறன்.


தொம்பை - தானியங்களைத் தொகுத்து வைக்குங் குதிர்.
தொம்மனை, தொம்மை - மிகப் பருத்தது.
தொயில் - தொய்யில்.
தொய் - குற்றம் : தொய்ந்து போ : சோர் : தளரு : வளை.
தொய்தல் - இளகல் : இளைத்தல் : தளர்தல் : துவளுதல் : வளைதல் : பயன் குறைதல்.


தொய்தன் - துவிதன்.
தொய்யகம் - தலைப்பாளை : தலைக் கோலத்தின் ஓர் உறுப்பு : தலையணியில் ஒன்றுள்.
தொய்யப்போடுதல் - ஒரு பயனுக்காகக் காரியத்தைச் சிறிது தாழ்த்துதல்.
தொய்யல் - அகமகிழ்ச்சி : இளைத்தல் : இன்பம் : உழவு : மகிழ்ச்சி : சேறு : சோர்தல் : துன்பம்.
தொய்யவாங்குதல் - மெல்ல மூச்சு வருதல் : நிலை தாழ்த்துதல்.


தொய்யவிடுதல் - கயிறு முதலியவற்றைத் தளர விடுதல் : காரியத்தை நிறுத்தி வைத்தல் : விலையேறுதற்
பொருட்டு விலைப் பொருள்களை நிறுத்தி வைத்தல்.
தொய்யா - துயிலி : கெடாத : தொய்யாக் கீரை.
தொய்யாது - உழாது : கெடாது.
தொய்யில் - உழுநிலம் : ஒரு கீரை : சாந்தினால் உடலில் இடுங்கோலம் : நீர்க் கொடி வகை : நீங்குகை : அழகு : கிளர்ச்சி.
தொய்வு - இளைப்பு : ஈளை : சுவாசமுட்டு : தொய்தல்.


தொலி - உமி : தொலியென்னேவல் : தோல்.
தொலித்தல் - உரித்தல்.
தொலை - உவமை : எல்லை : துலை தூரம் : தொலையென்னேவல்.
தொலைச்சிய - கொன்ற : அழித்த.
தொலைதல் - ஒழிதல் : கெடுதல் : சாதல் : நீங்குதல் : முடிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:56 pm

தொலைதூரம் - தொலைவெட்டு : மிகுதூரம்.
தொலைத்தல் - அழித்தல் : கொல்லல் : நீக்குதல் : சிதைத்தல் : கெட்டுப் போக்குதல் : சேதப்படுத்தல் : முற்றுப் பெறச் செய்தல்.
தொலைபு - கெடுதல் : அழிகை.
தொலைப்பி - கெடுதி : இழிவு : நட்டம்.
தொலைவு - அழிவு : தூரம் : தோல்வி.


தொலைவெட்டு - வெகுதூரம்.
தொல் - பழைய : இயற்கையான.
தொல்லியல் - பழைய உழுவலன்பு.
தொல்லெழில் - இயற்கையழகு.
தொல்லை - தொந்தரவு : பழைமை : துன்பம் : செயல்.


தொல்லையார் - தேவர்.
தொல்வரவு - பழங்குடியொழுக்கம்.
தொழல் - தொழுதல்.
தொழிதல் - சிதறுதல்.
தொழித்தல் - சினத்தல் : ஒலித்தல் : சிதறச் செய்தல்.


தொழிலி - தொழிலையுடையாள்.
தொழில் - அலுவல் : செயல் : தன்மை : வினைச்சொல் : வேலை.
தொழில் முடக்கம் - தொழில் செய்ய மறுத்திருக்கை.
தொழிற்கை - அபிநயங் காட்டுங்கை.
தொழிற்படுதல் - காரியப்படுதல்.


தொழிற்று - தொழிலையுடையது.
தொழின்மொழி - வினைச் சொல்.
தொழு - இரேவதி : குட்ட நோய் : தொழுமரம் : தொழுவென்னேவல் : பசுக்கூடம் : மாட்டுக் கொட்டில் :
சிறைக்கூடம் : நீர் நிலை.
தொழுகண்ணி - அரவாட்டிப் பச்சை.
தொழுகல்லீர் - தொழமாட்டாதீர்.


தொழுகுலத்தோர் - ஒழுக்கமுடைய குலத்தவர் : பார்ப்பார்.
தொழுகை - தொழுதல்.
தொழுக்கன் - அடிமை.
தொழுதல் - கும்பிடுதல் : வணங்கல்.
தொழுதி - கூட்டம் : திரட்சி : பறவைக் கூட்டத் தொலி : தொழுகிறாய் : திரள் : புட்கூட்டம்.


தொழுத்தை - அடிமைப் பெண் : கற்பில்லாதவள் : வேலைக்காரி.
தொழுநோய் - குட்ட நோய்.
தொழுந்தகை - தொழத்தக்கவன்.
தொழுப்பு - உழு தொழில் வளைப்பு.
தொழுமரம் - உழலை : துலங்குமரம்.


தொழும்பர் - அடிமைகள் : குற்றேவல் செய்வோர்.
தொழும்பு - அடிமை : அடிமை வேலை : கடவுள் கைங்கரியம்.
தொழுவம் - தொழுவோம் : பட்டி.
தொழுவறை - மாட்டுக் கொட்டில் : தொழுவம்.
தொழுவர் - மருதநில மாக்கள் : தொழில் செய்வோர்.


தொழுவை - மடு.
தொழுனை - யமுனையாறு.
தொளி - சேறு : தொளியென்னேவல்.
தொளியடித்தல் - வயலில் சேறு கலக்குதல்.
தொளை - உட்டுளை : துளைமூங்கில்.


தொள்கு - வலை : சேறு : பள்ளம் : குழி.
தொள்ள - துளைக்க : நெகிழ.
தொள்ளம் - சேறு : தெப்பம்.
தொள்ளல் - துளை : துளைத்தல் : நெகிழ்வானது.
தொள்ளாடுதல் - தளர்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:57 pm

தொள்ளாயிரம் - ஒன்பது நூறு.
தொள்ளி - குழை சோறு.
தொள்ளுதல் - துளைத்தல்.
தொள்ளை - துளை : துளையுடைப் பொருள் : மரக்கலம் : மரக்கால் : குழி : குற்றம் : அறியாமை.
தொறு - அடிமை : கூட்டம் : தொழில் பயிறல் : பசுக் கூட்டம் : பொலிவு : மிகுதி : தொழு : இடைச்சாதி.


தொறுத்தி - இடைச்சி.
தொறுப்புதல் - அலப்புதல்.
தொறுவர் - இடையர்.
தொறுவி - இடைச்சி : தொறுத்தி.
தொறுவிடம் - மாட்டுத்தொழு.


தொறுவு - தொறு : செய்தொழில் : அடிமை : தொழில் : பசுக் கூட்டம் : அடியாள்.
தொற்ற - ஏறுதல் : ஒட்டு : தொற்றென்னேவல் : பற்று : பொருத்து : மூலைக்கையோடணைத்த மரம்.
தொனி - ஒலி : தொனியென்னேவல்.
தொனித்தல் - ஒலித்தல் : குறிப்புப் பொருள் தோன்றுதல் : சொல்லுதல்.
தொனிப்பு - ஒலி : கூச்சல்.


தொன்மரம் - ஆலமரம்.
தொன்மை - பழைமை : பாவின் எண்வகை வனப்பின் ஒன்று.
தொன்றுதொட்டு - அனாதி காலமாய்.
தொன்று - பழைமை : பழையது ஊழ்.
தொன்னீர் - கடல்.
தொன்னை - இலையாற் செய்த ஏனம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:57 pm

தோ - நாயைக் கூப்பிடும் ஒலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:57 pm

தோகசம் _ பால்.
தோகதம் _ விருப்பம்.
தோகம் _ சிறுமை : துயரம் : பால் : இளங்குழந்தை.
தோகலி _ அசோக மரம்.
தோகை _ மயில் : மயிற்பீலி : இறகு : பெண் : விலங்கின் வால்: முன்றானை : பெருங்கொடி : நெல் கரும்பு வாழை முதலியவற்றின் இலை: பெண் மயிர்: ஆடை : கொய்சகம் : தொங்கல்: ஆண் குறியின் நுனித்தோல் : மீன் வகை.


தோகைப்பகை _ மயிலுக்குப் பகையான ஓந்தி.
தோகை மயில் _ ஆண்மயில்.
தோக்கு _ கைத்துப்பாக்கி.
தோக்குமம் _ காதின் குறும்பி: முகில்.
தோக்கை _ சீலை : முன்றானை : கொய்சகம் : மேற்போர்வை.



தோசை _ மாவாலான ஒரு பணிகார வகை.
தோடகம் _ தாமரை : கொப்புளம்.
தோடம் _ குறை : பாவம் : பிணி : சன்னி : விடக்காய்ச்சல்.
தோடயம் _ நாடகத்தின் முன் தொழிப்பாட்டு.
தோடா _ கையணி வகை : கல்வித்திறனுக்குப் பரிசிலாகப்பெறும் பொற்காப்பு.


தோடி _ ஒரு பண்.
தோடு _ பூ : பூவிதழ் : ஓலை : காதணி : பழத்தின் ஓடு : தோல் : இலை.
தோடை _ ஆடாதோடை : கிச்சிலி வகை : முத்துக்குளியலில் ஒரு முழுக்கில் கிடைக்கும் சிப்பிகள் : மாட்டு நோய் வகை.
தோட்காப்பு _ தோள் வளை.
தோட்டக்கால் _ கொல்லை நிலம்.


தோட்டப்பயிர் _ காய்கறிகள்.
தோட்டம் _ படப்பை : வீட்டுக்கொல்லை : சோலை.
தோட்டா _ துப்பாக்கி வெடி மருந்து.
தோட்டி _ காவல் : கதவு : ஆணை : மனைவாயில் : செங்காந்தள் மலர் : நெல்லி மரம் : அங்குசம், கொக்கி : வெட்டியான் : துப்பரவு செய்வோன்.
தோட்டுணை _ கணவன்.



தோணாமுகம் _ அகழ் சூழ்ந்த பெரிய நகரம்.
தோணி _ ஓடம் மிதவை : மரக்கலம் : நீர் : சேறு : நீர்த்தொட்டி : மதிலுறுப்பு : அம்பு : இரேவதி நட்சத்திரம் : சிறு வழு துணங்காய்.
தோணித்துறை _ துறைமுகம்.
தோணிபுரம் _ சீகாழி.
தோணியம் _ அம்பு.



தோணோக்கம் _ மகளிர் விளையாட்டு வகை.
தோண்டான் _ ஓநாய்.
தோண்டி _ நீர் இறைக்கும் சிறு பாத்திரம்.
தோண்டுதல் _ அகழ்தல் : குடைதல்: முகத்தல்.
தோண்முதல் _ புயவலிமை.



தோண்மேல் _ பிடரி.
தோதகம் _ வஞ்சகம் : வருத்தம் : சாலவித்தை : கற்பொழுக்கமின்மை.
தோதம் _ பசுவின் கன்று : வருத்தம்.
தோதனம் _ அங்குசம் : ஈட்டி.
தோது _ வசதி : பொருத்தம் : ஒப்பு : உபாயம் : தொடர்பு : போட்டி.



தோத்திரம் _ புகழ்ச்சி : வணக்க மொழி.
தோப்பி _ நெல்லாற் சமைத்த கள்: கள்.
தோப்பு _ அடர்ந்த மரங்கள் உள்ள இடம் : சோலை.
தோப்புக்கரணம் _ இரு கை மாறிச் செவியைப் பிடித்து இருகால் முடக்கி அமர்ந்து எழுதல்.
தோமம் _ கூட்டம் : சாம வேதத்தின் தொகுதி.



தோமரம் _ எறியாயுதம் : கைவேல்: தண்டாயுதம்.
தோம் _ குற்றம் : தீமை : துன்பம்.
தோம்பு _ சிவப்பு : நிலவிவரக் கணக்கு.
தோயசம் _ தாமரை.
தோயசூசகம் _ தவளை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:58 pm

தோயதம் _ மேகம் : வெண்ணெய் : நெய்.
தோயதரம் _ நீர் விளங்கும் மேகம்.
தோயதி _ கடல்.
தோயம் _ கடல் : நீர்.
தோயல் _ கலத்தல் : குளித்தல் : தயிர் : தோய்தல்.



தோய்ச்சல் _ உறைகை.
தோய்தல் _ முழுகுதல்: நனைதல் : நிலத்துப்படிதல் : செறிதல்: அணைதல் : உறைதல்: கலத்தல் : பொருத்துதல்: ஒத்தல்.
தோய்த்தல் _ நனைத்தல் : சாய மேற்றுதல்: ஆடை துவைத்தல்.
தோரணம் _ அலங்கார வாயில் : தெருவில் அலங்கரிக்கும் மாலை வகை : தராசு தாங்கி: யானை நடை.
தோரணன் _ யானைப்பாகன்.



தோரணை _ நல்லொழுங்கு : முறை.
தோரத்தம் _ தொந்தரவு : கட்டாயம் : போர்க்குணம்.
தோராயம் _ எதிர்பார்ப்பு.
தோரி _ சோறு.
தோரிதம் _ குதிரை நடை.




தோரியம் _ கூத்து : வாச்சியம்.
தோரிய மகள் _ நாட்டியம் ஆடி முதிர்ந்தவள்.
தோரை _ மூங்கிலரிசி : மலை நெல்: இரத்தம் : பனை மர வகை : மங்கல் நிறம் : மயில் விசிறி : நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை.
தோர்த்தல் _ தோல்வியுறுதல் : இழத்தல்.
தோர்வை _ தோல்வி.


தோலனம் _ நிறுத்தல்.
தோலன் _ புல்லன் : அற்பன்.
தோலா _ ஒரு ரூபாய் எடை.
தோலாட்டம் _ கயமைத்தனம்.
தோலாண்டி _ இழிஞன்.



தோலாமை _ தோல்வியின்மை.
தோலி _ ஒரு மீன் வகை : அரக்கு : பழத்தோல்.
தோலிகை _ காது : ஊஞ்சல்.
தோல் _ சருமம் : உடம்பின் மேலுள்ள தோல்: கேடகம் : துருத்தி : புகழ் : அழகு : சொல் யானை : உடம்பு : தோல்வி : நற்பேறின்மை : பக்கரை : மூங்கில்.
தோல்வி _ வெற்றியிழப்பு.


தோவத்தி _ ஆடவர் அரையாடை.
தோவம் _ ஒரு கால அளவு.
தோவாளம் _ கிணற்றைச் சுற்றி எழுப்பிய சுவர்.
தோழமை _ நட்பு.
தோழம் _ பேரெண் : மாட்டுக்கொட்டில் : கடல்.



தோழன் _ நண்பன்.
தோழி _ பணி செய்பவள்: நட்புடையவள்: தேவி: பாங்கி.
தோழ் _ மாட்டுத்தொழுவம்.
தோளணி _ தோளில் அணியப்படும் அணிகலன்.
தோளாமணி _ இரத்தினம்.



தோளி _ அரக்கு : அவுரிப்பூண்டு.
தோள் _ புயம் : கை : தொளை.
தோள் கொடுத்தல் _ உதவுதல் : சுமையைத்தாங்குதல்.
தோள்வளை _ தோளில் அணியும் அணி.
தோறும் _ ஒவ்வொன்றும் என்னும் பொருள் தரும் இடைச்சொல்.



தோற்கருவி _ தோலால் செய்யப்பட்ட இசைக்கருவி வகை.
தோற்பரம் _ கேடகம்.
தோற்பு _ தோல்வி.
தோற்றம் _ காட்சி : விளக்கம் : சாதி : படைப்பு : சாயை : புகழ் : உயர்ச்சி : பிறப்பு : வலிமை : எண்ணம் :மாயை.
தோற்றுதல் _ தோன்றுதல்.


தோற்றுவாய் _ தொடக்கம் : பாயிரம்.
தோன்றல் _ தலைமை : தோற்றம் : விளக்கம் : தலைவன்: முல்லை நிலத் தலைவன்: அரசன் :மகன்.
தோன்றி _ இரத்தம் : காந்தள்: ஒரு மலை.
தோன்றிகர் _ வணிகர் : செல்வர்.
தோன்றுதல் _ வெளிப்படுதல்: முளைத்தல் : வருதல்: விளங்குதல்: உண்டாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:59 pm

தௌகித்திரன் - மகளுக்கு மகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 4:59 pm

தெளகித்திரி _ மகளின் மகள்.
தெளசாரம் _ குளிர் :பனி.
தெளதசிலம் _ பளிங்கு.
தெளதம் _ வெள்ளி : குளியல்: துவைத்த ஆடை.
தெளதிகம் _ முத்து.



தெளத்தியம் _ துதி : தூது.
தெளரிதம் _ குதிரை நடை.
தெளர்ப்பல்லியம் _ வலுவின்மை.
தெளர்ப்பாக்கியம் _ நற்பேறின்மை.
தெளலம் _ துலாக்கோல்.


தெளலிகன் _ ஓவியன்.
தெளலேயம் _ ஆமை.
தெளவல் _ கேடு.

தெளவாரிகன் _ வாயில் காப்போன்.
தெளவுத்தல் _ கெடுதல்.
தெளவை _ தவ்வை : தாய்: தமக்கை: மூதேவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by ஸ்ரீராம் Sun Nov 24, 2013 7:12 pm

அருமை அருமை தொடருங்கள் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 24, 2013 7:14 pm

நன்றி நன்றி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by ஸ்ரீராம் Mon Nov 25, 2013 9:22 am

கே இனியவன் wrote:நன்றி நன்றி தொடரும்
சரி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:44 pm

ந - இன்மைப் பொருள், எதிர்மறைப் பொருள், பிறிதின் பொருள் இவற்றைக் காட்டுமோர் உபசருக்கம் :
ஓர் எழுத்து : மிகுதிப் பொருள் உணர்த்தும் இடைச் சொல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:44 pm

நசு - ஒளிவிட : புன்னகை கொள்ள.
நசுக்குத்தன் - அம்பட்டன்.
நகசம் - யானை.
நகச்சுற்று - நகக்க்கண்ணில் வரும் ஒரு நோய்.
நகடு - உடல் வெளுக்கை.


நகட்டுதல் - அரைத்தல் : நகரச் செய்தல் : இடம் விட்டுப் பெயரச் செய்தல் : காலந் தாழ்த்துதல் : ஆவலுடன் உண்டு விடுதல்.
நகதி - பொன் கட்டி : நிலத்தீர்வை : ரொக்கக்காரன்.
நகத்தல் - அரக்குதல் : நகர்த்தல் : குத்துதல்.
நகம் - உகிர் : நாகணம் : பங்கு : பூமி : மரம் : மலை : அடிக்குளம்பு.
நகரசம், நகரநாதம் - யானை.


நகரம் - ந என்னும் எழுத்து : பட்டணம் : மருதநிலத்தூர் : பேரூர் : அரண்மனை : கோயில் : வாழிடம்.
நகரவிரம் - மயில்.
நகரா - ஒரு பறை.
நகரி - இராசமாநகரம் : வறட்சுண்டி : பட்டிணம் : சர்க்கார்க்குரிய புறம் போக்கு.
நகரிபகம் - காகம்.


நகரை - ஒருவகை மரம் : ஒருவகை அரிசி.
நகர் - கோயில் : நகரம் : நகரென்னேவல் : மருதநிலத்தூர் : வீடு.
நகல் - நகுதல் : மகிழ்ச்சி : நட்பு : சிரிக்கை : படி : பிரதி.
நகழ்தல் - துன்பப்படுதல் : நகர்ந்து செல்லுதல்.
நகழ்வு - துன்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:45 pm

நகவிலேகம் - நகரேகை.
நகாசு - நெற்றி : நகாசு வேலை.
நகாதிபன் - இமயமலை.
நகாயுதம் - சிங்கம் : சேவல் : நகமுள்ளவை : புலி.
நகாரி - இந்திரன்.


நகார் - பல்.
நகிலம், நகில் - முலை.
நகு - துலங்கு : மலர் : நகுவென்னேவல்.
நகுடம் - மூக்கு.
நகுதல் - இகழ்தல் : ஒளிவிடுதல் : நகைத்தல் : புட்பித்தல்.


நகுலம் - கீரி : விலங்குவகை.
நகுலன் - பஞ்சபாண்டவரில் ஒருவன்.
நகூஉம் - நகைக்கும் : இகழும்.
நகேசன் - இமயமலை : மலையரசு.
நகை - அணிகலம் : இகழ்ச்சி : இகழ்ச்சி மகிழ்ச்சி தோன்றக் கூறும் அலங்காரம் : இன்பம் : எயிறு : ஒளி :
களிப்பு : சிரிப்பு : நகையென்னேவல் : பல் : பூ : மொட்டு : மலர்ச்சி.


நகைச்சொல் - நகைத்துப் பேசுதல் : பரிகாசம் பேசுதல்.
நகைத்திறச்சுவை - விதூடக் கூத்து : வசைக்கூத்தெனினுமாம்.
நகைப்பு - சிரிப்பு : பரிகாசம்.
நகைரசம் - நகைக்குந் தன்மை : பரிகாசப் பேச்சு.
நகைவர் - நண்பர் : நகைக்குக் காரணமான பாணர் : கூத்தர் முதலியோர்.


நகைவேழம்பர் - நகையுண்டாக்குங் கோமாளிகள் : விகடஞ் செய்வோர்.
நக்க - சுடுக : மலர : தீண்ட : கெடுக்க : மலர்ந்த : சிரித்த : இகழ்ந்த : உவமவாசகம் : மலர்ந்தன :
தீண்டின : நக்குதலால் தீண்ட.
நக்கசாரணர் - நாகர் சாதி வகையினர்.
நக்கம் -அம்மணம்.
நக்கரம் - முதலை.


நக்கரித்தல் - அரக்குதல் : அழுந்துதல் : தவழுதல்.
நக்கல் - நால்வகை உணவில் ஒன்று : சோறு : எச்சில் : உண்டல் : தீண்டுகை : சிரிப்பு : பரிகாசம் : ஒளி.
நக்கவாரம் - வறுமை : ஒரு தீவு.
நக்கன் - அருகன் : சிவன் : நரி : நிருவாணி : தேவதாசிகள் சிறப்புப் பெயர்.
நக்கிரப்பலகை - முதலை வடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:45 pm

நக்கிரா - தேட்கொடுக்கி.
நங்கூரம் - மரக்கலத்தை நிறுத்தி வைக்குங் கருவி.
நசற்காரன் - நோயாளி.
நசாரி - எட்டி.
நசியம் - மூக்கிலிடும் மருந்து.


நசிவு - கேடு : மூக்குப் பொடி.
நகை - அன்பு : ஆசை : ஈரம் : ஒழுக்கம் : குற்றம் : பரிகாசம் : விருப்பம்.
நசைகுநர் - நண்பர்.
நசைதல் - விரும்பல் : அன்பு செய்தல்.
நசைநர், நசையுநர் - நண்பர் : விரும்பினோர் : உறவினர்.


நசைய - விரும்ப.
நசைவினை - நன்னடக்கை.
நசைவு - ஈரம்.
நச்சல் - விரும்பல்.
நச்சினி - குரக்கன்.


நச்சு - ஆசை : சிறுமை : தொனுப்பு : நச்சென்னேவல் : விரும்பப்படும் பொருள் : தொந்தரை : அலப்பல் : அலட்டு : நஞ்சு.
நச்சுக்கண் - கொடும்பார்வை.
நச்சுக் கொடி - கொப்பூழ்க் கொடி.
நச்சுச்சொல் - தீச்சொல்.
நச்சுதல் - அலட்டல் : ஆசைப்பெருக்கம் : விரும்பல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:45 pm

நச்சுப்பார்வை - கொடும் பார்வை.
நச்சுப்பிச்சு - ஓயாத் தொந்தரவு.
நச்சுமரம் - எட்டி மரம்.
நச்சுமழை - விடாத சிறு தூறல் : கேடு விளைவிக்கும் மழை.
நச்சுவிறகு - கள்ளி : எருக்கு முதலிய நஞ்சுச் சாரமுள்ள விறகுகள்.


நச்செலி - சுண்டெலி : மூஞ்சூறு.
நச்செழுத்து - நஞ்சுத்தன்மையுள்ள எழுத்து : அவை யா, யோ, ரா, ரோ, லா, லோ, ய், ர், ல் இவையும்
ஏழு நெட்டுயிரும் ஆய்தமுமாம்.
நஞ்சம் - நஞ்சு : விடம்.
நஞ்சன் - தீயவன்.
நஞ்சி - குன்றுமணி.


நஞ்சீடு - விடமிடப்படுகை.
நஞ்சு - தீமை : நஞ்சுக்கொடி : விடம் : தீயது.
நஞ்சுச் சுரம் - பிரசவக் காய்ச்சல்.
நஞ்சுணி - சிவன்.
நஞ்சுண்டம் - மரவகை.


நஞ்சுண்டான் - சிவபிரான்.
நஞ்சு பாய்ச்சுதல் - வஞ்சகஞ் செய்தல்.
நஞ்சுவிழியரவு - திட்டி விடம்.
நட - செல் : போ.
நடக்கை - ஒழுக்கம் : செய்கை : நடத்தல் : நடப்பு.


நடத்தல் - இயற்றுதல் : காரியம் பலித்து வருதல் : சம்பவித்தல் : செலுத்தல் : செல்லுதல் : போகல்.
நடத்துதல் - இயற்றுதல் : நடத்தல்.
நடத்தை - ஒழுக்கம் : நடக்கை : செல்வாக்கு சுபாவம்.
நடந்தேறுதல் - நிறைவேறுதல்.
நடபடி - ஒழுக்கம் : நடவடிக்கை : நிகழ்ச்சி : வழக்கம்.


நடப்பன - இயங்குமுயிர்வருக்கம்.
நடப்பு - சலுகை : நடக்கை : போக்கு வரவு : தீய காமத் தொடர்பு : தற்காலம் : செல்வாக்கு : செல்லுதற்குரிய இடம்.
நடமண்டனம் - அரிதாரம்.
நடமாடி - சிவன்.
நடமாடுதல் - கூத்தாடுதல் : வழங்கல் : பரவியிருத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:46 pm

நடம் - ஒரு பண் : கூத்து.
நடராசர் - கூத்தப்பிரான்.
நடர் - கூத்தர்.
நடலமடித்தல் - தொந்தரவு பண்ணுதல்.
நடலம் - ஒய்யாரம் : செருக்கு : நடலை : வீண் செலவிடுகை : பாசாங்கு : இகழ்ச்சி : அதிநாகரிகங் காட்டுகை.


நடலை - கபடம் : துன்பம் : நடுக்கம் : நாகரிகம் : பொய் : வஞ்சனை.
நடல் - ஊன்றுகை : நடுதல் : நடவு.
நடவ - செலுத்த.
நடவு - நடவுதல் : நடவென்னேவல் : நாற்று நடுகை.
நடவுகொத்து - நடுகைக்காக கொடுக்கப்படுங் கூலி.


நடவுதல் - செலுத்தல் : நடத்துதல்.
நடவை - கடவுமரம் : தணக்கு மரம் : வழங்குமிடம்.
நடனசாலை - கூத்துப் பயிலிடம்.
நடன் - கூத்தன் : சிவன்.
நடி - நடியென்னேவல் : நாடகக் கணிகை : பெருமை.


நடித்தல் - கூத்தாடுதல் : நாகரிகம் பண்ணுதல்.
நடிப்பு - கூத்து : நாகரிகம்.
நடு - அரை : இரை : ஊடு : தொழில் : நடுவென்னேவல் : நீதி : பூமி : மிதம் : மய்யம் : வானத்தின் உச்சி : இடுப்பு : நடுநிலை.
நடுக்கம் - அச்சம்.
நடுக்கல் - நடுங்குதல்.


நடுக்காரர் - நடுவர்.
நடுக்கு - கிறுகிறுப்பு : நடுக்கம் : நடுக்கென்னேவல்.
நடுங்க நாட்டம் - தோழி தலைவி நடுங்குமாறு பேசும் ஒரு துறை.
நடுங்கலன் - அச்சமுடையோன்.
நடுங்குதல் - அசைதல் : அஞ்சுதல் : அதிர்தல் : பதறுதல் : மனங்குலைதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:46 pm

நடுச்சாமம் - பாதியிரவு.
நடுச்செல்வம் - இடையில் வந்த செல்வம்.
நடுச்சொல்லுதல் - நியாயஞ் சொல்லுதல் : சான்று கூறுதல்.
நடுச்சொல்வார் - சான்று கூறுவோர்.
நடுதல் - நாட்டல்.


நடுத்தரம் - இடைப்பட்டது.
நடுத்துஞ்சல் - அவமிருத்து.
நடுநாயகம் - ஆபரணத்தின் மத்தியிற் பதிக்கு மணி.
நடுநிலை - நீதி.
நடுப்பேசுதல் - ஒருவருடைய வழக்கை எடுத்துப் பேசுதல்.


நடுமையம் - உச்சம் : நடுமத்தி.
நடுவறுத்தல் - சீர்தூக்கிப் பார்த்தல் : வழக்குத் தீர்த்தல்.
நடுவன் - நமன் : நியாயாதிபதி : நடுநிலைமையுடையோன்.
நடுவாந்தரம் - உதவியற்ற நிலை.
நடுவெழுத்து - பத்திரம் எழுதுபவன் : பத்திரப் பதிவு உத்தியோகத்தன்.


நடை - ஒழுக்கம் : கூத்து : செலவு : செல்வம் : தொடர்பு : நடத்தை : பழக்கம் : முறை : வழக்கம் : வழி :
வாயிற்கடை : கோயில் : நீண்ட நாள்.
நடைக்காவணம் - நடைப்பந்தல்.
நடைச்சலங்கு - சிறு படகு.
நடைச்சாரி - குதிரையின் மந்தகதி.
நடைத்தேர் - சிறுதேர்.


நடைநாயகம் - அன்னப்புள்.
நடைபாவி - படி.
நடைப்பரிகாரம் - பத்தியமில்லாத மருந்து : பயணச் சாமான் : பலபண்டம் : வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்கள்.
நடைமலை - யானை.
நடையன் - உழுமாடு ஏறு : குதிரை முதலியன : பாதக்குறடு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:47 pm

நடையுடைபாவனை - மக்களின் வழக்கவொழுக்க முதலியன.
நட்கல் - நட்டல் : நேசித்தல்.
நட்சத்திரமண்டலம் - விண்மீன் வட்டம்.
நட்சத்திரேசன் - திங்கள்.
நட்டணை - கடியம் : கொடூரம் : வெறுப்பு : கூத்து : கோமாளிக் கூத்து : ஒற்றுமையின்மை : கொடுமை : யோசனையின்மை.


நட்டநடுப்பெற - நடுமத்தி.
நட்டபாடை - ஒரு பண் : நைவளம்.
நட்டம் - அம்மணம் : அழிவு : கலைஞானம் அறுபத்து நான்கில் ஒன்று : கூத்து : கேடு : நட்டோம் : நிறுதிட்டம்.
நட்டராகம் - குறிஞ்சிப் பண்.
நட்டவர் - பகைவர்.


நட்டார் - உறவோர் : நண்பர்.
நட்டாமுட்டி - ஒரு நூல் : கீழ்மை : நடுத்தரம் : வெறுவிலி : வஞ்சகம்.
நட்டாறு - நடு ஆறு.
நட்டு - கீழ்மை : சரிநடு : நட்டம் : நட்டுவன் : நாட்டியம் : நட்டி : நாடகம் : நடு : நண்டு.
நட்டுவம் - நாட்டியம் பழக்கி ஆட்டுவிக்குந் தொழில்.


நட்டுவன் - நடனமாட்டுவோன்.
நட்டோர் - உறவோர்.
நட்பாளர் - உற்ற நண்பினர்.
நட்பு - நண்பு : சுற்றம் : கேள் : தொடர்பு : நண்பன் : யாழின் நான்காம் நரம்பு : கேண்மை : காதல்.
நணந்தம் - சணம் : புன்கு : காட்டுப் பச்சிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:48 pm

நணி - அணிமையான இடம் : அணி.
நணிது - அணியது.
நணுகலர் - பகைவர் : விரோதிகள்.
நணுகல் - கிட்டல்.
நணுகார் - பகைவர்.


நணுகுதல் - இணைதல் : கிட்டல் : சார்தல்.
நண்டு - கற்கடவிராசி : ஞெண்டு.
நண்டுச்செலவு - நண்டு இருக்கும் வளை.
நண்டுத்தெறுக்கால் - நட்டுவாக்காலி.
நண்டுநசுக்கு - சிறு குழந்தைகள்.


நண்ணம் - சிறிது.
நண்ணலர் - பவைர்.
நண்ணல், நண்ணுதல் - கிட்டல் : நெருங்கல்.
நண்ணார் - பகைவர்.
நண்ணுநர் - நண்பர்.


நண்பகல் - நடுப்பகல்.
நண்பல் - இரு பற்களின் இடை.
நண்பன் - குறிஞ்சி நிலத் தலைவன் : தோழன் : கணவன்.
நண்பாலம் - வெட்பாலை.
நண்பு - நட்பு : உறவு.


நண்மை - அண்மை.
நதம் - ஆண்யாறு : உச்சத்திருந்து கிரகத்திற்குள்ள தொலை : மேற்கு நோக்கியோடும் ஆறு : நந்தியாவட்டை.
நதி - யாறு : வணக்கம்.
நதுத்தல் - அவித்தல் : கெடுத்தல் : மறைத்தல்.
நத்தப்பாழ் - அழிந்து போன சிற்றூர்.


நத்தம் - ஆக்கம் : இரவு : இருள் : ஊர் : எருக்கு : கடிகார வூசி : சங்கு : நடு : நத்தை : புன்கமரம் : பூங்கு : வாழை :
ஊரின் குடியிருப்பிடம் : மனைநிலம் : இடம் : கிராமத்தில் பார்ப்பனரல்லாதார் வசிக்குமிடம்.
நத்தாசை - பேராசை.
நத்தாமணி - வேலிப் பருத்தி.
நத்து - ஓர் அணிகலம் : ஒரு பறவை : சங்கு : நத்தென்னேவல் : மூக்கணி.
நத்துதல் - விரும்பல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:48 pm

நத்தை - ஒரு பூண்டு : கடுகு : கருநந்து.
நந்த - ஓர் உவம உருபு : பெருக : விளங்க.
நந்தகம் - வாள் : திருமாலின் வாள்.
நந்தகோபாலர் - இடையர்.
நந்தாவிளக்கு - அவியாத விளக்கு.


நந்தம் - இடையர் : கத்தூரி : சங்கநிதி : சங்கு : பெருமுயற்சி : நாரத்தை : எருக்கு : புன்கு : வாழை : காக்கை.
நந்தர் - இடையர்.
நந்தல் - ஆக்கம் : கெடுதல் : நிந்தை : வளர்தல்.
நந்தவனம் - நந்தனவனம்.
நந்தனம் - இந்திரன் பூந்தோட்டம் : நந்தன ஆண்டு : தவளை : பூந்தோட்டம் : நத்தை : நாரத்தை.


நந்தனன் - மகன் : மால்.
நந்தாமணி - உத்தாமணி : சிறந்த மணி.
நந்தி - அட்டாதச உப புராணத்தொன்று : இடபவிராசி : எருது : ஓர் அரசன் : ஒரு மலை : சிவன் : சிறுபறை :
செக்கான் : நந்தி தேவன் : நாகம்.
நந்தியாவட்டத்தாமன் - துரியோதனன்.
நந்திவிரட்சம் - சின்னிமரம்.


நந்தினி - மகள்.
நந்து - ஆக்கம் : சங்கு : நத்தை : நத்தென்னேவல்.
நந்துதல் - நந்தல் : கெடுதல் : சாதல் : வளர்தல் : தழைத்தல் : அவிதல் : விளங்குதல் : செகுத்தல் : தூண்டுதல்.
நந்தை - ஏகாதசி : கலப்பையை நுகத்தொடு பிணைக்குங் கயிறு : கபிலைப் பசு : தேற்றா மரம் : பிரதமை.
நபம் - ஆகாயம் : ஆவணி மாதம் : கார்காலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 22 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 43 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 32 ... 43  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum