Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தப்பு செய்தால் உயிரை குடிக்கும் பாம்புத் தாய் :ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோதம்
Page 1 of 1 • Share
தப்பு செய்தால் உயிரை குடிக்கும் பாம்புத் தாய் :ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோதம்
சேலம் மாவட்டம் மல்லியக்கரையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது மேல்தொம்பை. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராமம். ‘வனத்துறை அனுமதியின்றி பாம்புத் தாய் கோயிலுக்கு சென்றால் தண்டிக்கப்படுவீர்கள்’ என்ற மிரட்டலுடன் வரவேற்கிறது ஊர் எல்லையில் இருக்கும் போர்டு. இதை கடந்து, அடர்ந்த வனப்பகுதியின் கரடு முரடான பாதையில் நடந்து சென்றால் தண்ணீர் தேங்கிய குட்டை. அதன் அருகே குதிரை சிலைகளுடன் தொட்டிச்சி அம்மன், நூற்றுக்கும் அதிகமான வேல்களுடன் கருப்பசாமி கம்பீரமாக காட்சி அளிக்கின்றனர். இந்த தெய்வங்களைத்தான் ‘பாம்புத் தாயம்மன்’ என்று ஒரே பெயரில் பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர் மக்கள்.
பாம்புத் தாயம்மன் இருக்கும் பகுதி முழுவதும் ஆண்களை மட்டுமே காண முடிகிறது. ஏன், பெண்கள் இங்கு வருவதில்லையா? பாம்புத் தாயம்மன் வழிபாடு பற்றி ஊர் பெரியவர் காவேரி, முனியன் ஆகியோர் சொல்லத் தொடங்குகின்றனர்...
‘‘பல நூறு வருஷம் முன்னாடி காவல் தெய்வமான கருப்பசாமியை நெனச்சு கடுமையா தவம் செஞ்ச ஒருத்தரு ஜீவசமாதி அடைஞ்சிட்டாரு. சில வருஷம் கழிச்சு, ஊர் முக்கியஸ்தர்களோட கனவுல வந்தாரு. எல்லைப் பகுதியில நம்ம குலதெய்வமான தொட்டிச்சி அம்மனையும் காவல்தெய்வமான கருப்பசாமியையும் ‘பாம்புத் தாய்’னு அழைச்சி கும்பிட்டா ஊருக்குள்ள தீய சக்திகள் வராதுனு சொல்லிட்டு மறைஞ்சு போய்ட்டாரு.
பாம்புனா படையும் நடுங்கும்பாங்க. பாம்புத் தாயம்மன் பேரை சொன்னா திருட்டுப் பசங்களும் தப்பு செய்றவங்களும் தலைதெறிக்க ஓடுவானுங்க. இந்த அம்மன் சத்தியத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப்பட்டது. இந்த சாமிக்கு தீட்டு ஆகாதுங்கறதால 200 வருஷமா ஆம்பிளைங்க மட்டும்தான் பூஜை செய்து, படையல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துறாங்க.
யாராச்சும் தப்பு செய்தா பாம்புத் தாயம்மன் உடனே அவங்க உசிரை எடுத்துடும்கிறது எங்க நம்பிக்கை. தப்பு செய்யும் யாரும் பாம்புத் தாயி பக்கம் வரமாட்டாங்க. அம்மன் பேரை உச்சரிக்கவும் மாட்டாங்க. திருடுறவங்க, அடுத்தவங்க சொத்த ஏமாத்துறவங்கள பாம்புத் தாய் சும்மா விடாது. அவங்களுக்கு உடனே தண்டனை கொடுத்துடுவா. பொருளையும், சொத்தையும் பறிகொடுத்தவங்க, அதை எடுத்தவங்களை நினைச்சுக்கிட்டே பாம்புத் தாய் முன்னாடி வேலை தலைகீழா பூமியில குத்தினா, ஏமாத்துனவங்க உயிரை ஆத்தா கொஞ்ச காலத்திலயே எடுத்துடுவா.
பாம்புத் தாய்க்கு ஞாயிறு, செவ்வாய் விசேஷம். பக்தர்கள் கிடா வெட்டி, ரத்தசோறு படையலிட்டு வேண்டுதலை நிறைவேத்துவாங்க. தீட்டோட யாரும் போனா கருப்பசாமி அடிச்சிடும். பாம்புத் தாய்க்கு கிடாவை பலியிடும் ஆம்பிளைங்க அதை அங்கயே சமைச்சு சாப்பிடுவாங்க. படையல் போட்ட கறியை ஊருக்குள்ள எடுத்து வரக்கூடாது. அந்த கறியைக்கூட பொம்பளைங்க சாப்பிடறதில்ல’’ என்கின்றனர் ஊர் மக்கள்.
“150 வருஷமா மலைகிராம மக்களின் குலதெய்வமாக பாம்புத் தாய் விளங்குது. தம்மப்பட்டி, மல்லியகரை, சேலம், தர்மபுரி, நாமக்கல்னு பல ஊர்லேந்தும் வர்றாங்க. சாமிகிட்ட குறைகளை சொல்றாங்க. அதை நிறைவேத்துனா ரத்தக் காவு கொடுக்கிறதா வேண்டிக்கிட்டு, நேர்த்திக் கடனை பயபக்தியோட செலுத்துறாங்க. தப்பு செய்றவங்களை பாம்புத் தாயி விடமாட்டா. ஆனா, நல்லவங்களுக்கு ரொம்ப துணையா இருப்பா. பக்தியோட எது வேண்டுனாலும் உடனே நிறைவேத்தி வச்சுடுவா. முக்காவு (ஆடு, பன்றி, கோழி) கொடுத்து சாமிக்கு வேண்டுதலை நிறைவேத்துறது இங்க வழக்கம்’’ என்கிறார் பூசாரி லட்சுமணன்.

Guest- Guest
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» கோயிலில் வழிபடும் முறை!
» ஆஹா !அற்புதம் !! வினோதம் !!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum