Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட படித்துறை கிணறு
Page 1 of 1 • Share
புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட படித்துறை கிணறு
Rani_Ki_Vav_1குஜராத்தில் உள்ள 11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணற்றை சர்வதேச புராதனச் சின்னமாக ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் படான் நகரில் அமைந்துள்ள ராணி கி வாவ் என்ற படித்துறை கிணறு கிழக்கு முகம் நோக்கிய படிகட்டுகளைக் கொண்டது. 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும், 27 மீட்டர் ஆழமும் உடையது.
குஜராத் பகுதியை ஆண்ட ராணி உதயநிதி, மறைந்த தனது கணவரும், மகாராஜாவுமான பீம்தேவ் நினைவாக 1063ஆம் ஆண்டு இதனை கட்டியுள்ளார். பிறகு சரஸ்வதி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இந்த கிணறு முற்றிலும் புதைந்துவிட்டது. பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இந்த கிணறு 1098ஆம் ஆண்டுகளில் வெளி உலகுக்குக் கொண்டு வரப்பட்டது.
விஷ்ணு பகவானின் திருவுருவங்கள் அமைந்த ஏராளமானச் சிற்பங்கள் இந்த கிணற்று படிகளில் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதிலும் கல்கி, ராமர், நரசிம்மர், வராகி, வாமனன் உட்ட தசாவதாரங்களும் இங்கு மிக அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 – 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணற்றைச் சுற்றி மிகச் சிறந்த ஆயுர்வேத மூலிகைகளை வளர்த்துள்ளனர். இதன் வாயிலாக இந்த தண்ணீர் பல மருத்துவ குணம் வாய்ந்த மருந்தாகவும் இருந்துள்ளது.
இந்த கிணறை புராதனச் சின்னமாக அறிவித்துள்ளது குறித்து மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் : நாட்டின் நீர்வளப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ராணி-கி-வாவ் கிணற்றுக்கு சர்வதேச புராதனச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்திருப்பது அதற்கு கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் நடைபெற்றுவரும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கமிட்டி கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. பிரளயத்தின் காரணமாக சரஸ்வதி நதி அழிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தக் கிணறும் பூமிக்குள் புதையுண்டது.Rani_ki_Vav_scul
இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 700 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. 7 அடுக்குகள் கொண்ட ராணி-கி-வாவ் படித்துறை கிணற்றின் கட்டுமான அமைப்புகள் தற்போதும் உறுதியாக உள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் கலைநயத்துடன் கூடிய அழகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரூ-குர்ஜாரா வம்சத்தினரால் அமைக்கப்பட்ட ராணி-கி-வாவ் கிணறு அந்த காலகட்டத்தில் கட்டடத்துறை சிறப்பாக விளங்கியதை எடுத்துக் காட்டுகிறது.
நாட்டில் ஏற்கெனவே யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 30 உலகப் பாரம்பரியச் சின்னங்கள் உள்ளன. இதில் 24 கலாசார தலங்களும், 6 இயற்கை தலங்களும் அடங்கும். தற்போது ராணி-கி-வாவ் கிணற்றுக்கும் அந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மேலும், கத்தாரில் நடைபெறும் உலகப் பாரம்பரிய கமிட்டி கூட்டத்தில் ,ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள இமயமலை தேசிய பூங்காவையும் உலகப் புராதனச் சின்னமாக அறிவிப்பது குறித்து திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட படித்துறை கிணறு
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட படித்துறை கிணறு
அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வாஸ்து விதி படி ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு அமைக்கும் முறை:
» உலக பாரம்பரிய சின்னமாக பத்மநாபபுரம்அரண்மனை தேர்வு
» இந்திய புராதனச் சின்னங்களை 360 டிகிரி கோணத்தில் இன்டர்நெட்டில் பார்ப்பதற்கான சேவையை
» தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்
» பஹ்ரைன் நாட்டில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிப்பு
» உலக பாரம்பரிய சின்னமாக பத்மநாபபுரம்அரண்மனை தேர்வு
» இந்திய புராதனச் சின்னங்களை 360 டிகிரி கோணத்தில் இன்டர்நெட்டில் பார்ப்பதற்கான சேவையை
» தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்
» பஹ்ரைன் நாட்டில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum