தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

View previous topic View next topic Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by anuradha20 Mon Apr 13, 2015 12:04 am

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Azhagar1
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Lig
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Kaju-katli
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 13-1421119526-thai-pongal-600
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Tamil-new-year-palangal-2012
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Fruit-Wallpaper-HD-Downloads-640x400
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 30-Beautiful-Onam-Photography13
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. IMG_1239-Version-4
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Ellu-bella-tatte
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Sankranthi-rangoli
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 10
புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் 14.04.2015 செவ்வாய் கிழமை மதியம் மணி 1.42க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக லக்னம் எட்டாம் பாதத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்னி ராசியில், சுபம் நாம யோகம் பத்தரை நாம கரணத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் நான்காம் சாமத்தில் மயில் ஊண் கொள்ளும் நேரத்தில் செவ்வாய் மகா தசையில், சனி புக்தியில், சுக்ரன் அந்தரத்தில், அங்காரகன் ஓரையில் மன்மத வருடம் சிறப்பாக பிறக்கிறது.
மன்மத வருடம் தமிழ் வருடங்களான 60 வருடங்களில் 29வது ஆண்டாக வருவது ஆகும். கலி பிறந்து 5116வது வருடமாகும். சூரியன் மேஷம் ராசியில் நுழைவதை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ்-இந்துக்களின் புது வருடப்பிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 14-1426319311-temple-1-2-600
ஆலயத்தில் நாம் அங்கப்பிரதஷ்டை செய்யும்போது நாமும் சுழன்று கொண்டு ஆலயத்தையும் சுற்றி வலம்வருவதுபோல்; பூமியானது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம்வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.

பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே வருடப் பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. இத்தினத்தையே சிங்கள பௌத்த மதத்தினரும் இந்து மதத்தினரைப்போல் தமது புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். (இயற்கையாகவே பூமியும் எல்லாக் கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்ற போதிலும்; பூமியை  சுற்றியுள்ள  Zodiac என ஆங்கிலதில் அழைக்கப்படும் கற்பனையான இராசி மண்டல வலயத்தினூடாக சூரியன் உள்ளிட்ட எல்லாக் கிரகங்களும் பூமியை சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கின்றது.)

இப் பூவுலகம் தோன்றியதில் இருந்து பூமியானது சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. சூரியனும், பூமியும் கோள வடிவினதாகவும், ஈர்ப்பு விசையுடன் சுழன்று கொண்டு இருப்பதனால் அவை குறிப்பிட்ட காலத்தின் பின்னர் சுற்றத் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அப்படி வந்தும் (திரும்பவும்) தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதனால்  சுற்று ஆரம்பித்த அந்த நிகழ்வானது பிறப்பாகவும், அச்சுற்றை திரும்பத் திரும்ப ஆரம்பிக்கும் தினம் பிறந்த தினமாகவும் கொண்டாடுவதாக கூறலாம். அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (பூமியின் பிறந்த நாளே) சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Surya03a

சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நிகழ்வானது வருடத்தில் ஒருமுறை நிகழ்கின்ற போதிலும், எல்லா நாடுகளுக்கும் வெவ்வேறு நேரங்களாக அமைந்து விடுகின்றன. எல்லா நாடுகளுக்கும் இடையே அனுசரிக்கப் பெறும் நேர வித்தியாசங்களுக்கு ஏற்ப நிகழ்வின் நேரம் மாற்றமடைகின்றது.

பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது சைவ மக்களின் மராபாகும். மேலும் தான, தர்மங்கள் செய்வதுடன், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, பொங்கல், பலகாரங்கள் பரிமாறி அனைவரும் மகிழ்வோடு கொண்டாடுவது வழக்கமாகும்.

புதுவருட விழாவானது; உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் பின்பற்றும் சமையங்களின் நியதிகளுக்கு அமைவாக புதுவருடத்தினை கொண்டாடுகின்றார்கள்.  அதற்கேற்ப சித்திரைமாத முதல் நாளை இந்து சமயத்தைப் பின்பற்றும் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.
புதுவருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில்(விஷூ புண்ணிய காலம்)  மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

தமிழ் மாதக் கணிப்பானது சூரியன் மேட இராசிக்குள் நுழைவது முதல் அவ் இராசியை விட்டு விலகும் நாட்களை சித்திரை மாதம் எனவும்; சித்திரை மாதமே (இந்துக்களின்) தமிழ் மக்களின் வருடத்தின் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.


மருத்து நீர்

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 15291691437_0228ede2d5_o
மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருத்து நீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். இவற்றுள் பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம். விஷூ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.

 
தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும். இலங்கையில் இரு இனங்களுக்கும் பொதுவான தமிழ், சிங்கள புத்ததாண்டாக கொண்டாடப்படுகின்றது. சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம்.
அதன் காரணமாக இப் புத்தாண்டு தினத்திலும் முதலில் பிள்ளையார் ஆலயங்களில் சிறப்புப் பூசைகளும் மஹோற்சவ விழாக்களும் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம், தாவடி விநாயகர் ஆலயம், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் புத்தாண்டு தினத்தில் தேர்த்திரு விழா நடைபெறுவது வழக்கம். மருதடி விநாயகர் ஆலயம் தற்போழுது புனர் நிர்மாணம் செய்யப்பெற்று வருவதனால் அலங்காரத் திருவிழா நடைபெறுவதாக அறிய முடிகின்றது. இத் தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் மட்டுமன்றி எல்லா ஆலயங்களில் விசேட அபிஷேக ஆராதனைகளும், பூசைகளும் நடைபெறும். இத்தினத்தில் அனேகமான ஆலயங்களில் பிரதம குரு கைவிசேஷம் வழங்கும் வழக்கமும் வழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

வருடப்பிறப்புக் கருமங்கள்:
 
புத்தாடை தரிசனம்

ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும். மஞ்சள் நிற ஆடை அமையா விடில், ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விடுவதும் நன்மை தரும்.
பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.

தெய்வ வழிபாடு

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Melkote-Vairamudi-and-Rajamudi-sevai-2014-0017

வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது.
நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம். சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள். காலை, நடுப்பகல், பிற்பகல் என்கிற தினப் பிரிவுகளாகிய மூன்றும் இருசுக் கோர்த்திருக்கும் இடமாயிருக்கும் ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடா வஸ்த்ரம், அநுவஸ்தரம், இத்வத்ஸரம் ஆகிய ஐவகை வருஷங்கள், அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்.

இளவேனில் (வசந்த ருது), ருதுவேனில் (கரிஷ்ம ருது), கார் காலம் (வர்ஷ ருது), குளிர் காலம் (சரத் ருது), முன்பனிக் காலம் (ஹேமந்த ருது), பின் பனிக் காலம் (சிசிர ருது). ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள். காயத்திரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, திருஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி ஆகிய ஸப்த சந்தஸ்ஸுகள் ஏழு குதிரைகளாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வாரத்தின் ஏழு நாட்கள் பெயரிடப்பட்டன, துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு. தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. சூரியனே `தேவயான மார்க்கம்’ அது அர்ச்சிராதி மார்க்கம் எனவும் சொல்லப்படும். புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்க்கம் செல்லப் பயன்படும் வழி `பித்ருயாணம்’ என்றும் `தூமாதி மார்க்கம்’ என்றும் அழைக்கப்படும்.

வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் “ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.
சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது ஐதீகம்.

இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற எந்த பேதமுமில்லாமல், முதல் நாள் இரவே குருவாயூர் கோயிலுக்குச் சென்று, அங்கேயே தங்கி, நள்ளிரவுக்குப் பின் சித்திரை மாதப் பிறப்பன்று விஷுக்கனி காணல் என்று வருஷ ஆரம்பத்திலே குருவாயூர் கிருஷ்ணனைக் கண்குளிரத் தரிசித்து, வருடம் முழுவதும் இனியதாக இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்வார்கள்.

பஞ்சாங்கம் பார்த்தல்:
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Mammatha_tamil_book_panchangam_400x600
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Balaji

சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.
 புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும்.
அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

அறுசுவை உணவு
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Ente_Keralam_TOT
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Sadyapage-picture
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Thali
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.
மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன்  உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாகமாறியது.

கைவிஷேடம்
சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர். சித்திரைப் புதுவருடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் கைவிசேடமாகும். ஆரம்ப காலத்தில் வீட்டின் தலைவி உரிய சுப நேரத்தில் சிறிய மூலிகைப் பொட்டலம் ஒன்றினை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பிறக்கும் புத்தாண்டு நிமித்தம் முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்பதையே கை விசேடமாக கருதப்பட்டது. ஆயினும் நாளடவில் கைவிசேடம் என்பது சுபமுகூர்த்தத்தில் பணத்தை கொடுப்பதும் எடுப்பதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நல்ல நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற்சாலைகள் என்பவைகளில் வேலை செய்வோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் புதுவருடத்தில் முதல் அன்பளிப்பாக வெற்றிலையில் பாக்கு, நெல்லு காசு என்பவற்றை வைத்து குத்து விளக்கின் முன்னாலே வைத்து கொடுப்பர்கள். பணத்தை கைவிசேடமாக பெற்றுக்கொள்வார்கள். கொடுக்க பட்ட எல்லாவற்றையும் எண்ணி (நெல்லு உட்பட) அது ஒற்றை விழுந்தால் நல்ல பலன் என்பது ஐதீகம். கைவிசேடம் பரிமாறிக்கொள்வது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கமாகும்.
மூத்தோர்களிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கைவிசேடமாக பெற்ற பணத்தை அந்த ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

சித்திரைப் புதுவருடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பெருவிழாவாக இங்கு சிறப்புப் பெறுவதுடன், தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தாலும் கொண்டாடுவதில் சில தனித்தனியான பாரம்பரிய கலாசார நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.

சமாதானம் சந்தோஷம் ஆகியவற்றை சுமந்து வெள்ளைநிற வண்டியில் வரும் இந்திரதேவ குமரனின் வருகையினை கொண்டாடும் விதத்திலேயே சித்திரை புத்தாண்டை சிங்கள பெளத்தர்கள் கொண்டாடுவதாக வரலாறு கூறுகின்றது. புத்தாண்டு பிறக்கும் செய்தியினை ‘குயில்’ தன் குரலால் உலகறியச் செய்வதாக நம்பப்படுகின்றது.
சிங்கள மக்கள் தமது புதுவருடத்தில் புத்தாண்டுக்கான ஏற்பாடுகள் அதற்கான சுபநேரத்தில் அரிசி இடித்து அடுப்புக்கட்டி பலகாரம் சுடுவதுடன் ஆரம்பிக்கப்படுவது வழக்கமாகும்.அடுத்ததாக பழைய வருடத்திற்கான ஸ்நானம் இடம்பெறும். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும் நோக்கி இடம்பெறும் இந்த குளியில் பழைய வருடத்திற்கான இறுதிக் குளியலாகும். புத்தாண்டுக்கான விசேட நீராடல் சிங்களவர் மத்தியில் வழக்கத்தில் இருந்து வருகின்றது.
புத்தாண்டு பிறப்பதற்கு முன் எழுந்து மருந்து எண்ணை வைத்து குளிப்பார்கள். விகாரைக்கு சென்று வழிப்பட்டு புத்தாண்டு பிறப்பு நேரத்தில் பட்டாசு கொளுத்துவர். புத்தாடை உடுத்தி பால் பொங்குதல், பால்சோறு சமைத்தல் அத்துடன் தின்பண்டங்கள் தயாரித்தலில் ஈடுபடுவர். இத்துடன் பணியாரம், வாழைப்பழம் மற்றும் தின்பண்டங்களும் வைத்து படையல் இடுவர்கள். இப் படையலில் முக்கியமாக பால்சோறு (பால்ப்புக்கை) இருக்கும். நல்ல நேரத்தில் குத்து விளக்கேற்றி ஊதுவர்த்தி கொழுத்தி சாம்பிராணிப் புகைப் பிடிப்பர். குடும்பத்துடன் உணவு பரிமாறி உண்பர். அயலவர்களிடமும் உணவு பரிமாறிக்கொள்வர்.

பெரியோரை மதித்து வணங்குவர் அத்துடன் கைவிசேடம் பெறுவர். புண்ணியக் காலம் என்று குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு முன்பாக கொடுக்கல் வாங்கல்கள் செய்வர். ஒரு சம்பிரதாயத்திற்காக தத்தமது வேலை/தொழில் செய்வர். பின்னர் அநேகமானோர் புத்தர் விகாரைகளிற்கு “பண” (பௌத்த உரை) கேட்பதற்காகவும் வேறு விசேட நிகழ்வுகளுக்காகவும் செல்வர். இப் புண்ணியக் காலம் முடிந்தப் பிறகு, புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர். பெண்கள் “றபான்” அடிப்பர். இது தமிழரிடம் இல்லாத ஒரு வழக்கமாகும். சிலவேளை புண்ணியக்காலம் இரவில் முடிவடையுமாயின், இந்நிகழ்வுகள் அடுத்த நாளிலோ அல்லது அடுத்து சில நாட்களிலோ தமது வசதி்க்கேற்ப வைத்துக்கொள்வர்.
சிங்கள பெளத்தர்கள் சித்திரைப் புத்தாண்டை பகைமை ஒழிப்புக்கான சிறந்த வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. நீண்ட காலமாக பகைமை கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை பார்க்கச் சென்று பகைமை தீர்த்துக் கொள்ளப்படும்.

கலை கலாச்சார நிகழ்வுகள்
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Pongal-Festival
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 272173_10150384927943902_823993901_10259438_305816_o
நாட்டின் முக்கிய பகுதிகளிலும் கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளுடன் சித்திரைப் புதுவருடம் சிறப்பாகவே கொண்டாடப்படும். இடத்துக்கு இடம் அந்தந்தப் பிரதேச கலாசார மரபுகளுக்கு அமைய வைபவ நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும் பாரம்பரியமான நிகழ்ச்சிகளான போர்த்தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும்.
இத்துடன் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, ராபான் அடித்தல், சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு. அத்துடன் மாட்டு வண்டிச் சவாரி, துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தலையணை சண்டை வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம்.

புதுவருடத்திற்காக அடுப்பு மூட்டுவதும் ஒரு பழக்கமாகும். பழைய வருடத்தின் முடிவில் அனைத்து அடுப்பு வேலைகளும் முடிவிற்குக் கொண்டுவரும் வீட்டுத் தலைவி அடுப்புச் சாம்பலையும் அப்புறப்படுத்தி அடுப்பை தூத்துவிடுவான். அதன் பின் புத்தாண்டு பிறக்கும் வரை வீட்டில் அடுப்பு பத்த வைப்பதில்லை. உரிய நேரம் காலம் பார்த்து மீண்டும் புதுப்பானை வைத்து பொங்குவதற்காக வீட்டுத் தலைவி சுபமுகூர்த்தத்தில் அடுப்பை பத்த வைப்பதே வழக்கத்தில் இருந்து வருகின்றது.

குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒன்றிணைந்து பட்டாசு வெடிகளுடன் புதுவருடத்தை வரவேற்று குதூகலமாகக் கொண்டாடும் நிலைமையானது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியதாகும். புதுவருடத்தின் சுபநேரம் பார்த்து தங்கள் தொழிற்கருமங்களை ஆரம்பிப்பதும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் நல்ல நாள் பார்த்து தங்கள் உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும், பெரியோர்களைச் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொள்வதும் சிறப்பான பாரம்பரிய நிகழ்வுகளாகும்.

புதுவருடம் பிறந்ததன் பின் பஞ்சாங்க கணிப்பின்படி சுப தினத்தில் சுப நேரத்தில் தொழிலிலுக்குச் செல்வது அல்லது தொழிலை ஆரம்பிப்பதன் மூலம் தொழில் விருத்தி அடையும் என்பதே எதிர்பார்ப்பாரும், ஆரம்ப காலத்தில் முற்றத்தில் விளக்கேற்றி வைத்து, அதன் அருகே வைக்கப்பட்டிருக்கும் மண்வெட்டியைக் கொண்டு வீட்டிjavascript:;ன் தந்தை மண்ணை வெட்டி கத்தியால் ஒரு பிலா மரத்தின் கிளையினை வெட்டுவதே வழக்கத்தில் இருந்து வந்தது. காலப் போக்கில் அந்தந்த ஆண்டிற்கு ஏற்ப பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட வர்ண உடைகளை அணிந்து, சுப திசை சுப நேரம் ஆகியவற்றுக்கு அமைய அலுவலகத்திற்குச் செல்வதே வழக்கமாகி விட்டது.
வருடப்பிறப்பு என்பது வருடத்தினுடைய பிறந்தநாள். அதை நம் மனம் போல மாற்றிக் கொள்ள முடியாது. நம் பிறந்த நாளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியுமா? அதுபோலத்தான். நாம் என்றைக்குப் பிறந்தோம் என்பதை நம் பெற்றோர் சொன்னதைக் கேட்டுத்தான் நாம் தெரிந்து கொள்கிறோம். நாம் பிறந்தது முதல் நம் பெற்றோர் நம் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு வரவே, நம்முடைய பிறந்த நாள் என்றைக்கு வருகிறது நமக்குத் தெரிகிறது. அதுபோலவே வருஷம் பிறக்கும் நாளை சித்திரை மாதத்தில் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கொண்டாடிக் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அதை அப்படியே பின்பற்றி, சித்திரை மாதத்தில் கொண்டாடுவதுதான் சரியான செயலாகும்.

பிறந்த நாள் என்பதே ஜோதிடம் சம்பந்தப்பட்டது. இப்பொழுதெல்லாம் நாம் ஆங்கில மாதம், ஆங்கிலத் தேதி என்று பின்பற்றி வந்தாலும், குழந்தை பிறந்தவுடன், ஜோதிடரிடம் சென்று அந்தத் தேதியில் என்ன நாள், என்ன நட்சத்திரம் என்று கேட்டுக் கொண்டுதான், பிறந்த நாளை நிர்ணயம் செய்கிறோம். அந்தக் குழந்தை நல்ல ஆயுசுடனும், அமோகமாகவும் இருக்க வேண்டும் என்று அந்த நட்சத்திரத்தில்தான் ஆயுஷ் ஹோமம் செய்கிறோ.ம். கோவிலில் அர்ச்சனையும் செய்கிறோம். இதே முறையில் தமிழ் வருஷப் பிறப்பும் அமைந்துள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு என்று நாம் சொல்லும் வருஷப் பிறப்பு, உலகத்துக்கே பிறந்த நாள் ஆகும். உலகம் என்றால் மக்கள் சமூகம் மற்றும் பிற உயிரினங்களும் சேர்ந்த ஒரு தொகுப்பாகும். இவை அனைத்தும் தோன்றிய நாள் உலகத்துக்குப் பிறந்த நாள் ஆகிறது. அந்தப் பிறந்த நாள் முதற்கொண்டு சதுர்யுகங்கள் கணக்கிடப்பட ஆரம்பித்தன. அன்றைக்கு சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராகு, கேது நீங்கலாக) மேஷ ராசியில் பூஜ்யம் பகையில் இருந்தன. அந்த இடத்தில் ஆரம்பித்து விண் வெளி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடம் என்பதாகும். விண்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கவே, அதில் 360 பாகைகள் உள்ளன. அவற்றை 12 ஆகப் பிரித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது 30 பாகை கொண்டது ஒரு மாதமாகும். 12 மாதங்கள் கொண்டது ஒரு வருடமாகும். இந்தப் பயணம் ஆரம்பித்த நாளை வருஷப் பிறப்பு என்று வழி வழியாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர்.

இதில் தமிழ் வருஷப் பிறப்பு, தெலுங்கு வருஷப்பிறப்பு என்று வித்தியாசங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். இரண்டும் ஒன்றுதான், தெலுங்கு வருஷப் பிறப்பை ‘யுகாதி’ என்று சொல்வதிலிருந்து சதுர் யுகம் ஆரம்பித்த முதல் நாளையே அது குறிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். சதுர் யுகம் ஆரம்பித்த நேரத்தில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இருந்தனர். சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது அமாவாசை ஆகும். அதற்கு மறுதினமான வளர்பிறை பிரதமையில் யுகங்கள் ஆரம்பித்தன. அது மேஷ ராசியின் பூஜ்யம் பாகையில் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு அனைத்துக் கிரகங்களும் அதே இடத்தில், மேஷ ராசியின் பூஜ்யம் பாகையில் சந்தித்துக் கொள்வதில்லை. ஒவ்வொறு கிரகத்துக்கும் இருக்கிற வேக வித்தியாசத்தால் இப்படி இருக்கிறது. தமிழ் நாட்டில் சூரியனது நிலையை மட்டுமே நாம் கணக்கில் கொள்கிறோம், தெலுங்கர்கள் உட்பட பிற மாநிலத்தவர்கள் சந்திரன் இருந்த இடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சூரியன் மேஷ ராசியின் பூஜ்யம் பாகையில் நிழைவதற்கு முன், சூரியனும், சந்திரனும் சேரும் நாளின் அடிப்படையில் அவர்கள் வருடப் பிறப்பு கொண்டாடவே, தமிழர்கள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டுக்கும், மற்ற மாநிலத்தவர் கொண்டாடும் யுகாதிப் பண்டிகைக்கும் சிறிது வித்தியாசம் வருகிறது. ஆனால் இரண்டுமே சித்திரையில் சூரியன் நுழைவதை முன்னிட்டுக் கணக்கிடப்படுகின்றன.
சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள், பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
anuradha20
anuradha20
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 27

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by anuradha20 Mon Apr 13, 2015 12:16 am

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Pesara+garelu+recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Boondi%2Bladdu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Poornam+boorelu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Poornalu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Pesara+Boorelu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Godhuma%2Bkudumulu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Kesar+peda
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Mango+kulfi
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Kasi+halwa+jaggery
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Khoya+coconut+jaggery+laddu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Rajgira+flour+burfiதமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Rajgira+burfi
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Gulab+jamuns+rabriதமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Jamuns+with+rabdi
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Custard+halwa
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Pumpkin+poli
anuradha20
anuradha20
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 27

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by anuradha20 Mon Apr 13, 2015 12:18 am

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Daddojanam
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Banana%2Bhalwa
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Banana%2Bsajjige%2Brecipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Banana%2Bkesari%2Bbath
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Banana%2Bsuji%2Bhalwa
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Prasadacha%2Bsheera%2Brecipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Banana%2Bsheera%2Brecipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Prasadacha%2Bsheera
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Bellam%2Bthalikalu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Poornam+kudumulu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Puranpoli
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Chakra+pongali
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Pakam%2BGarelu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Panchamrutham
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Lobia
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Bellam+paramannam
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Annam+paramannam
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 7+cup+sweet
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 7+cups+burfi
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Seven+cup+sweet
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Chakli
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Khara+sev+recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Pakundalu+copy
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Dates+peanuts+ladoo
anuradha20
anuradha20
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 27

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by anuradha20 Mon Apr 13, 2015 12:19 am

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Rava+pulihora
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Rice+rava+pulihora+recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Appalu+recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Rava+appalu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Poha%2Bladdu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Aval%2Bladdu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Coconut+Laddu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Nuvvula+appalu+recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Sesame+appalu+recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Rava+kudumulu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Rava+kudumulu+recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Rava+bellam+kudumu
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Wheat+kheer
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Vermicelli+payasam
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Sanagapappu+payasam
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Milk+kesari+recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Semolina+laddu+recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Pulihora+1
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Pulihora+4
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Andhra+Pulihora
anuradha20
anuradha20
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 27

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by anuradha20 Mon Apr 13, 2015 12:20 am

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Vrat-thali
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Navratri-special-vrat-thali
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 36
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 39
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Navratri-special-food
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 38
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 37
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Nariyal+ke+laddoo
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Spices-herbs-for-navratari-fast
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Cooking_tips_indian_food
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Navratri_vrat_recipes
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Kuttu_puri_navratri_vrat
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Kuttu_puri_navratri_vrat
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. INDIAN-THALI
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Thali_by_unitedcba-d5h3d5g
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Thali
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Gujrati-catering-london
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Post-6607-0-40229900-1394777219
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Recipes-indian-bread-bhakri-oota
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. DSC_0008
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Revival+2
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 3
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 2.-Maharashtrian-Thali
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 1360162763_479738493_1-Pictures-of--60-North-indianSouth-indianRajasthani-Thali-MEALS
anuradha20
anuradha20
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 27

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by anuradha20 Mon Apr 13, 2015 12:23 am

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Poli0000028
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Vella-cheedai19
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Vella-cheedai21
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Uppu-cheedai17
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Uppu-cheedai19
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Uppu-cheedai14
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. KheerIndianRicePudding13
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. KheerIndianRicePudding15
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. KheerIndianRicePudding18
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Main-img10
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Main-img7
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 8191415784_6af1ba851e_o
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 6921453632_b5016227c6_z
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 8738280986_1fee2957e4_o
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 8738281398_5e5dbe87ee_o
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Oatsappam1
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Oatsappam4
anuradha20
anuradha20
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 27

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by anuradha20 Mon Apr 13, 2015 12:24 am

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Savory%252520Diamond%252520Cuts%252520Recipe_thumb%25255B2%25255D
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Maida%252520Khara%252520Biscuits%252520recipe_thumb%25255B2%25255D
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Rava+ladoo
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Suji+Ladoo
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 7%252520Cup%252520Burfi%252520Recipe_thumb%25255B2%25255D
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 7%252520Cup%252520Burfi_thumb%25255B2%25255D
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 14602337432_dcd7c035ee_o
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 14623005123_245c230eb0_o
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Cornflakes-Mixture_thumb6
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. DSCN5945_thumb6
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. DSCN5947_thumb6
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. DSCN5952_thumb17
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Kara+Pori+Recipe
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 11206020365_50da60471d_o
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Carrots_thumb5
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Carrot-Halwa-Recipe_thumb2
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Carrot-Halwa_thumb2
anuradha20
anuradha20
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 27

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by anuradha20 Mon Apr 13, 2015 12:25 am

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. IMG_8203_thumb1
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. IMG_6192-1_thumb%25255B1%25255D
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 10049084493_74cbd5babc_z
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Easy-paal-kozhukattai-recipe_thumb1
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Paal%252520kozukattai_thumb%25255B2%25255D
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 15480510681_3f129a63f6_z
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 8144192678_f5772a8cf9_z
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Kummayam-cut-610x300
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 15374737729_15b5b41459_z
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Jalebi
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Tumblr_lk7wybql0g1qgbsmeo1_500
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Jalebi-type-things
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 2111917983_bae200618c1_0
anuradha20
anuradha20
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 27

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by anuradha20 Mon Apr 13, 2015 12:35 am

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 8157834038_5cd59f9211_o
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 10343805766_8c89bb234a_z
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 10343986863_5c9c3ed365_z
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 10406682294_859cc44799_z
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 10406852063_e38d183637_z
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 10406681194_575e7a87f8_o
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 6465363367_7da6396ba0_b
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 8191415784_6af1ba851e_o
தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. 8138374907_798395637a_o
anuradha20
anuradha20
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 27

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by முரளிராஜா Mon Apr 13, 2015 1:52 pm

தமிழ் மன்மத வருட வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழ்  மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது. Empty Re: தமிழ் மன்மத வருடம் 14.04.2015 பிறக்கிறது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum