Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்
Page 1 of 1 • Share
கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்
-
-
கொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.
ஏப்ரல் 03, 05:15 AM
பகோடா,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மீட்புப்பணியில் 2,500 பேர்
நிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
254 பேர் பலி
நேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
தொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
200 பேர் மாயம்
கொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
நிதி வழங்க கோரிக்கை
கொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.
மொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.
-
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
» இந்தோனேசிய கப்பலில் தீ விபத்து: 20 பேர் பலி; காயம் 17
» ரஷ்ய விமானம் மாயம்: 10 பேர் கதி என்ன?
» சென்னை ஏர்போர்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: 5 பேர் காயம்
» கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
» இந்தோனேசிய கப்பலில் தீ விபத்து: 20 பேர் பலி; காயம் 17
» ரஷ்ய விமானம் மாயம்: 10 பேர் கதி என்ன?
» சென்னை ஏர்போர்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: 5 பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum