தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Nov 14, 2013 9:23 am

170 பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியா ருரிமை யடக்கம்; - தெரியுங்கால்,
செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்.

(பொ-ள்.) பெரியார் பெருமை சிறுதகைமை - கல்வி கேள்விகளிற் பெரியாருடையபெருமைக் குணமாவது யாண்டுந்தாழ்வுடைமையாயிருத்தல்; ஒன்றிற்கு உரியார்உரிமை அடக்கம் - வீடுபேற்றிற்கு உரியரானமெய்யுணர்வாளர்க்கு உரிமையான பண்பாவாதுமனமொழி மெய்கள் அடக்கமாயிருத்தல்;தெரியுங்கால் - ஆராயுமிடத்து, செல்வமுடையாரும்செல்வரே தற் சேர்ந்தார் அல்லல் களைப எனின் -தம்மை அடைந்தவர்களுடைய வறுமைத் துன்பங்களைநீக்குவார்களாயின் செல்வம் படைத்தவர்களும்செல்வரேயாவர்.

(க-து.) செல்வமும் கல்வியும்மெய்யுணர்வுமுடைய பெரியோர், யாண்டும் உதவியும்பணிவும் அடக்கமு முடையராயிருப்பர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Thu Nov 14, 2013 12:12 pm

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Thu Nov 14, 2013 4:54 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by மகா பிரபு Fri Nov 15, 2013 7:29 am

அருமையான தகவல்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Nov 15, 2013 9:57 am

பொருட்பால்
18. நல்லினம் சேர்தல்
[உயர்ந்த பண்புடையார் கூட்டத்திற் சேர்ந்து பழகுதல்.]

171 அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

(பொ-ள்.) அறியாப் பருவத்துஅடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகியவும் -அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில்அடங்கியொழுகாத தீயோருடன் சேர்ந்துமுறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும்,வெயில் முறுகப் புல் பனிப்பற்றுவிட்டாங்கு-வெயில் கடுகுதலால் புல்நுனியைப்பனியின் பற்றுதல் விட்டாற்போல, நெறியறிந்தநற்சார்வு சாரக் கெடும் - நன்னெறிதெரிந்தொழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச்சார்ந்து பழகுதலால் கெடும்.

(க-து.) தீய குணங்கள் நீங்கும்பொருட்டு நல்லாரினத்திற் சார்ந்து பழகுதல்வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Fri Nov 15, 2013 1:40 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Nov 16, 2013 1:56 pm

172 அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

(பொ-ள்.) அறிமின் அறநெறி - கடமையொழுங்கை அறிந்தொழுகுங்கள்; அஞ்சுமின் கூற்றம் -நமன் வருதற்கு அஞ்சி யொழுகுங்கள்; பொறுமின்பிறர் கடுஞ்சொல்-பிறர் கூறும் வன்சொற்களைப்பொறுத்துக் கொள்ளுங்கள்; போற்றுமின் வஞ்சம் -வஞ்சித்தொழுகுதலைக் காத்துக் கொள்ளுங்கள்;வெறுமின் வினை தீயார் கேண்மை - செய்கை தீயவரதுநட்பை வெறுத்தொதுக்குங்கள்; எஞ்ஞான்றும்பெறுமின் பெரியார்வாய்ச் சொல் -எக்காலத்திலும் பெரியார் வாயிலிருந்து வரும்நன்மொழிகளை ஏற்று ஒழுகுங்கள்.

(க-து.) நல்லாரினத்தைச் சார்ந்துபழகி அதனால் அறநெறியறிதல் முதலிய நலன்களைப்பெறுதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Nov 26, 2013 10:05 am

173 அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.

(பொ-ள்.) அடைந்தார்ப் பிரிவும்அரு பிணியும் கேடும்- இயற்கையாகவும்செயற்கையாகவுஞ் சார்ந்தவரான உறவினர் நண்பர்முதலியோரைப் பிரிந்து நிற்றலும், தீர்தற்கரியநோயும், இறப்பும், உடங்கு உடம்பு கொண்டார்க்குஉறலால் -பிறவியெடுத்தவர்க்கு ஒருங்கேபொருந்துதலால், தொடங்கி - ஆராயத் தொடங்கி,பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை -பிறப்புத் துன்பந் தருவது என்றுணர்ந்துபற்றற்றொழுகும் பெரிய அறிவினரான ஞானியரை,உறப் புணர்க என் நெஞ்சு - என் உள்ளம் மிகக் கூடுக.

(க-து.) துன்பந் தரும் பிறப்பைஅதன் இயல் பறிந்து பற்று நீங்கி யொழுகும்ஞானியரான நல்லாரினத்தைச் சார்ந்தொழுகுதல்வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Tue Nov 26, 2013 11:57 am

விளக்கம் அருமை. நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Tue Nov 26, 2013 7:26 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Nov 27, 2013 9:46 am

174 இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்; - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டேஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.

(பொ-ள்.) பிறப்பினுள் - தாம்பிறந்த பிறப்பில், பண்பு ஆற்றும்நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் நண்பு ஆற்றிநட்கப்பெறின் - பிறர்க்கு உதவிசெய்யும்நெஞ்சமுடையவர்களான பெரியார்களோடு எப்போதும்நேயஞ்செய்து அணுகியிருக்கப் பெற்றால், இறப்பநினையுங்கால் இன்னாது எனினும் பிறப்பினை யாரும்முனியார் - மிக ஆராயுமிடத்துத்துன்பந்தருவதென்றாலும் அப்பிறப்பினை யாரும்வெறுக்கமாட்டார்கள்.

(க-து.) பிறவி துன்பந் தருவதாயினும்நல்லாரினத்தோடு நேயங் கொண்டிருக்கப் பெறின்அதனை யாரும் வெறார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 27, 2013 10:12 am

நாளும் படித்து நடந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Nov 28, 2013 10:08 am

175 ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓருங்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

(பொ-ள்.) ஊர் அங்கண் நீர்உரவுநீர் சேர்ந்தக்கால் - ஊரின் சாக்கடை நீர்கடலைச் சேர்ந்தால், பேரும் பிறிதாகித்தீர்த்தம் ஆம் - பேரும் கடல் நீர் என்று வேறாகிஅருள் நீராகும், ஒரும் குலமாட்சி இல்லாரும் -மதிக்கத்தக்க நற்குலப் பெருமையில்லாதகீழோரும், குன்றுபோல்
நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து -குணப்பெருமை வாய்ந்த நல்லாரைச் சார்ந்து அவர்நற்றன்மையில் மலைபோல் அசைதலின்றி நிலைத்துவிளங்குவர்.

(க-து.) கீழோரும் மேலோரைச்சேர்ந்தால், மேலோரேயாவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Nov 29, 2013 9:48 am

176 ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
குன்றன்னார் கேண்மை கொளின்.

(பொ-ள்.) ஒள் கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின்முயலும் தொழப்படும் - இனிய கதிர்களையுடைய ஒள்ளியதிங்களைச் சேர்தலால் அழகிய இடமகன்றவானத்தின்கண் முயலும் மாந்தரால் வணங்கப்படும்;குன்றிய சீர்மையராயினும் சீர்பெறுவர்குன்றன்னார் கேண்மை கொளின் - ஆதலால், குறைந்தநிலைமையுடையராயினும் மக்கள் மலைபோன்றபெருமையுடைய நல்லாரது நேயத்தை யடைந்தால்நிறைந்த சிறப்பினைப் பெறுவர்.

(க-து.) மக்கள், நல்லார்நேயத்தராயிருப்பின் சிறப்புறுவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Fri Nov 29, 2013 7:11 pm

நாலடியார் விளக்க பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Nov 30, 2013 9:07 am

177 பாலோ டளாயநீர் பாலாகு மல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; -தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.

(பொ-ள்.) பாலோடு, அளாய நீர்பாலாகுமல்லது நீராய் நிறம் தெரிந்துதோன்றாது-பாலோடு கலந்த நீர் பாலாகித்தோன்றுமல்லது நீராய்த் தன் நிறம் விளங்கித்தோன்றாது; தேரின்-ஆராய்ந்தால், சிறியார்சிறுமையும் தோன்றாது நல்ல பெரியார் பெருமையைச்சார்ந்து - உயர்ந்த பெரியாருடையபெருந்தன்மையைச் சார்தலால் சிறியார்குறைபாடுந் தோன்றாமற் பெருமையேயாகும்.

(க-து.) மக்கள் பெரியாரோடுசேர்ந்திருந்து தம் குறை நீங்கிப் பெருமையடைதல்வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Dec 01, 2013 10:05 am

178 கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம்.

(பொ-ள்.) கொல்லை இரு புனத்துக்குற்றியடைந்த புல் - கொல்லையாகிய பெரியநிலத்திலுள்ள மரக்கட்டையைச் சேர்ந்து வளர்ந்தபுல். ஒல்கா ஆகும் உழவர் உழுபடைக்கு - உழவரதுஉழுகின்ற படையாகிய கலப்பைக்குக் கெடாதனவாகும்;மெல்லியரேயாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்செல்லா செற்றார் சினம்-வலிமையில்லாதவரேயாயினும் நல்லினத்தாரென்னும் வலிய சார்பினைச்சார்ந்தவர்மேல் பகைவரது சினம்பயன்படாமற்போம்.

(க-து.) நல்லாரினத்திற்சேர்ந்திருப்பார்மேற் பகைவர் சினம் செல்லாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Dec 02, 2013 10:37 am

179 நிலநலத்தால் நந்திய நெல்லேயோல் தத்தங்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும்.

(பொ-ள்.) நிலநலத்தால் நந்தியநெல்லேபோல் தத்தங் குலநலத்தால் ஆகுவர்சான்றோர் - நிலத்தின் வளத்தினாற் செழித்துவளர்ந்த நெற்பயிரைப்போல் தத்தம் இனநலத்தால் நல்லோர் மேன்மேலும் சான்றாண்மையுடையோராவர்; கலநலத்தைத் தீவளி சென்றுசிதைத்தாங்கு - மரக்கலத்தின் வலிமையைக்கொடியபுயற்காற்றுச் சென்று கெடுத்தாற்போல,சான்றாண்மை தீ இனம் சேரக் கெடும் - தீயஇனத்தவரைச் சேர அதனால் அச் சான்றாண்மைஅழியும்.

(க-து.) இயல்பாகவேநல்லோராயிருப்பவர்க்கும் நல்லினச் சேர்க்கைநன்மையையும் தீயினச் சேர்க்கை தீமையையும்உண்டாக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Dec 03, 2013 8:56 am

180 மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்; - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,
எறிபுனந் தீப்பட்டக் கால்.

(பொ-ள்.) புனத்துவெறி கமழ்சந்தனமும் வேங்கையும் வேம் எறிபுனம் தீப்பட்டக்கால் - காட்டினுள்ள மணங் கமழ்கின்றசந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்றுவீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும்; மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்தஇனத்தால் இகழப்படுவர்-ஆதலால், சான்றோர் தம்மனநலத்தால் மாசிலராயினும் தாம் சேர்ந்த தீயஇனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.

(க-து.) சான்றோர் மனநலம் நன்குடையராயினும்தீயினச் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Dec 04, 2013 10:21 am

பொருட்பால்
19. பெருமை
[நல்லினத்தாரது பெருந்தன்மை உணர்த்துவது]

181 ஈத லிசையா திளமைசே ணீங்குதலால்
காத லவருங் கருத்தல்லர்; - காதலித்து
ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.

(பொ-ள்.) ஈதல் இசையாது - உலகவாழ்க்கையானது வறியவர்க்கு ஒன்று விரும்பியபடிகொடுத்தல் இயலாததாயிருக்கின்றது; இளமை சேண்நீங்குதலால் காதலவரும் கருத்தல்லர் - இளமைநிலையும் நெடுந்தொலைவில் நீங்கிப் போதலால்காதலன்புடைய மனைவியரும் வரவர விருப்புடையரல்லர்;காதலித்து ஆதும் நாம் என்னும் அவாவினைக்கைவிட்டு போவதே போலும். பொருள்-ஆதலின்உலகவாழ்க்கையிற் பற்றுக்கொண்டு நாம் ஆக்கமுறுவோம் என்னும் அவாவினைக் கைவிட்டுத்துறவுநெறியில் ஒழுகுவதே பயன்றருவதாகும்.

(க-து.) பற்றில்லாமலிருந்தலேபெருந்தன்மையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Dec 05, 2013 9:36 am

182 இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.

(பொ-ள்.) இல் சார்வின்ஏமாந்தேம் - மனை வாழ்க்கைச் சார்பினால்களித்திருக்கின்றேம்; ஈங்கு அமைந்தேம் -உலகத்தில் அதற்கு வேண்டிய பொன் முதலிய எல்லாநலங்களிலும் நிறைத்திருக்கின்றேம்; என்று எண்ணிபொச்சாந்து ஒழுகுவர் பேதையர் - என்று கருதிஅறிவிலா மாந்தர் அவற்றின் பொய்ம்மையை மறந்துஒழுகுவர்; அச் சார்பு நின்றனபோன்று நிலையா எனஉணர்ந்தார் என்றும் பரிவது இலர் - ஆனால்,அச்சார்புகள் நிலைத்திருப்பனபோற்காணப்பட்டுப் பின் நிலையாமற்போம் என்றுஉணர்ந்த மேலோர் எக்காலத்திலும் அவற்றைவிரும்புதலின்று யொழுகுவர்.

(க-து.) எல்லா உலக நலங்களும்ஒருங்கமைந்த காலத்தும் அவற்றிற் பற்றின்றிநிற்றலே பெருந்தன்மை யாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Dec 06, 2013 10:31 am

183 மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம்
இன்றிப் பலவு முள.

(பொ-ள்.) மறுமைக்கு வித்துமயலின்றிச் செய்து சிறுமை படாதே நீர் வாழ்மின்அறிஞராய்-மறுமைக்கு வித்தாகிய அறச்செயலைவாழ்க்கையில் மயங்குதலில்லாமற் செய்துஎஞ்ஞான்றுந் துன்புறாமல் நீவிர் அறிஞராய்வாழுங்கள்; ஏனென்றால், நின்றுழி நின்றே நிறம்வேறாம் - நின்ற நிலையில் நின்றே உடம்பினஇளமையொளி வேறாய் மாறும்; காரணமின்றிப் பலவும்உள - அன்றியுங் காரணமில்லாமலே பல இடையூறுகளும்வாழ்க்கையில் உள்ளன.

(க-து.) மறுமை நினைவோடு ஒழுகுதலேபெருந்தன்மையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Dec 07, 2013 11:16 am

184 உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது.

(பொ-ள்.) உறைப்பு அரு காலத்தும்ஊற்றுநீர்க் கேணி இறைத்து உணினும் ஊர் ஆற்றும்என்பர்-மழை துளித்தலில்லாத காலத்திலும் ஊற்றுநீரையுடைய சிறிய நீர்நிலை இறைத்துஉண்ணுவதாயினும் ஊரிலுள்ளாரனை வர்க்கும் உதவும்என்று பெரியோர் கூறுவர், கொடைக் கடனும் - அதுபோலவறியோர்க்கு ஒன்று கொடுத்தலாகிய கடமையும்,சாயக்கண்ணும் பெரியார்போல் மற்றையார்ஆயக்கண்ணும் அரிது - தமது நிலைமை குறைவானகாலத்தும் பெரியோர் மேற்கொள்ளுதல்போலப்பெரியரல்லாதார் தமது நிலைமை நிறைவடைந்தகாலத்தும் மேற்கொள்ளுதல் அரிதாகும்.

(க-து.) நிலைமை குறைந்த காலத்தும்பிறர்க்கு இயன்றது உதவ முற்படுதலேபெருந்தன்மையாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Dec 08, 2013 10:24 am

185 உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
1செய்வர் செயற்பா லவை.

(பொ-ள்.) உறுபுனல் தந்து உலகுஊட்டி-நீருள்ள காலத்தில் மிக்க நீர் தந்துஉலகுயிர்களை உண்பித்து, அறுமிடத்தும் கல் ஊற்றுழிஊறும் ஆறேபோல் - நீர் வறளுங் காலத்தும்தோன்றுகின்ற ஊற்றினிடத்தில் ஊறியுதவும்ஆறேபோல், செல்வம் பலர்க்கு ஆற்றி-உள்ளகாலத்திற் பொருளைப் பலர்க்கும் உதவிசெய்து,கெட்டு உலந்தக் கண்ணும் சிலர்க்கும் ஆற்றிச்செய்வர் செயற்பாலவை - அப் பொருள் கெட்டுநிலையழிந்த காலத்தும் மேன்மக்கள்,சிலர்க்கேனும் உதவிகள் செய்து தாம்செய்தற்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பர்.

(க-து.) எந் நிலையிலுந் தங்கடமைகளைச் செய்தலே பெரியோர் தன்மையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Sun Dec 08, 2013 3:31 pm

தொடர் பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 12 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum