தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Mar 27, 2014 9:57 am

பொருட்பால்
29. இன்மை
(பொருளில்லாமையின் இழிவை உணர்த்துவது.)

281 அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை.

(பொ-ள்.) அத்து இட்ட கூறைஅரைச்சுற்றி வாழினும் பத்து எட்டு உடைமைபலருள்ளும் பாடு எய்தும் - துவர் ஊட்டிய ஆடையைஇடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில்வாழ்ந்தாலும் பத்தானும் எட்டானும் பொருளுடைமைபலரிடத்திலும் பெருமையடையும்; ஒத்தகுடிப்பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் செத்தபிணத்தின் கடை - ஏற்ற உயர்குடிக்கண் பிறந்தாலும்ஒரு பொருளில்லாதார் செத்த பிணத்தினுங்கடைப்பட்டவராவர்.

(க-து.) துறவு நிலையும் உயர்குடிப்பிறப்பும் உடையவராயினும் வறுமையில்லாமையேபெருமை தரும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Mar 28, 2014 9:18 am

282 நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்பினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்;- தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து.

(பொ-ள்.) நீரினும் நுண்ணிது நெய்என்பர் - நெய் நீரைப் பார்க்கினும்நுட்பமானதென்று அறிந்தோர் கூறுவர்; நெய்யினும்புகை நுட்பம் யாரும் அறிவர் - இனி, நெய்யைப்பார்க்கினும் புகை நுட்பமென்பதை அனைவரும்அறிவர், தேரின் - ஆராய்ந்தால்நிரப்பிடும்பையாளன் புகையும் புகற்கு அரிய பூழைநுழைந்து புகும் - வறுமையாகிய துன்பமுடையோன் அப்புகையும் புகுதற்கு அரிய மிக நுண்ணிய புழையிலும்நுழைந்து புகுவான்.

(க-து.) வறுமைத் துன்பமுடையோன் மிகமெல்லியனாவான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Mar 29, 2014 9:18 am

283 கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; -கொல்லைக்
கலாஅற் கிளிகடியுங் கானக நாட!
இலாஅஅர்க் கல்லை தமர்.

(பொ-ள்.) கல் ஓங்கு உயர் வரைமேல்காந்தள் மலராக்கால் செல்லா செம்பொறிவண்டினம் - கற்கள் வளர்ந்துள்ள உயர்ந்தமலையின்மேல் காந்தள் முதலிய மலர்கள்மலராவிட்டால் சிவந்த புள்ளிகளையுடைய வண்டின்திரள் அங்கே செல்லமாட்டா: கொல்லைக்கலால்கிளி கடியும் கானக நாட! இலார்க்கு இல்லைதமர் -ஆதலால், தினை முதலிய புனங்களில் கிளி முதலியபறவைகளைச் சிறுசிறு கற்களால் ஒட்டுகின்றகாட்டையுடைய நாடனே, பொருளில்லாதவறியோரிடத்தில் உறவினர் வருவதில்லை.

(க-து.) வறியோரை எவரும் அணுகார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Mar 30, 2014 10:45 am

284 உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே; -வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.

பொ-ள்.) உடைந்துழிக்காகம்போல் உண்டாய போழ்தின் தொண்டு ஆயிரவர்தொகுப - ஒருவன் இறந்து விட்டபோது அவனுடம்பைக்காகங்கள் சூழ்ந்து மொய்த்துக்கொள்வதுபோல்ஒருவற்குச் செல்வமுண்டான காலத்தில் அவனுக்குஒன்பதனாயிரம் பேர் ஏவல் புரிவோராய் வந்துகூடுவர்; வண்டாய்த்திரிதருங் காலத்துத்தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத்து இல் -ஆனால் வறுமையினால் உணவுக்காக ஒருவர் வண்டுபோற்பலவிடங்களிலும் அலையுங்காலத்தில் அவரைத்தீங்கில்லாம லிருக்கிறீர்களா என்று நலம்உசாவுவார் இவ்வுலகத்தில் ஒருவரும் இல்லை.

(க-து.) பொருளில்லாதவர்களைஉலகம் பொருள் செய்யாது
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by செந்தில் Sun Mar 30, 2014 10:52 am

அறிய பல பயனுள்ள பகிர்வுகளை அள்ளி வழங்கி வருகிறீர்கள் அண்ணா.

உங்களுக்கு நன்றி சொல்லி மாளாது.

தினம்தோறும் பயனடைந்து வரும் வகையில் சொல்கிறேன் நன்றி அண்ணா...
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sreemuky Sun Mar 30, 2014 1:36 pm

வாழ்த்துக்கள் 
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Mar 31, 2014 11:26 am

285 பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.

(பொ-ள்.) கறங்கு அருவி கல்மேல்கழூஉம் கணமலை நல் நாட - பாய்ந்து ஒலிக்கின்றஅருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்றகூட்டமான மலைகளையுடைய சிறந்த நாடனே!. இன்மைதழுவப்பட்டார்க்குப் பிறந்த குலம் மாயும்பேராண்மை மாயும் சிறந்த தம் கல்வியும் மாயும் -உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்தகுலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல்கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்விநிலையுங் கெடும்.

(க-து.) வறுமை பொருந்தியவர்க்குஇருமை நலங்களுங் கெடும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Apr 01, 2014 5:10 pm

286 உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான்; உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தின னாதலே நன்று.

(பொ-ள்.) உள் கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு உள்ளூர் இருந்தும் ஒன்றுஆற்றாதான் - உடம்பில் மிகுகின்ற பசித்துன்பத்தால் தான் இருக்குமிடத்தை நாடிவந்தவர்கட்குத் தான் உள்ளூரிலிருந்தும் நன்று உதவஇயலாதவன், உள்ளூர் இருந்து உயிர்கொன்னே கழியாதுதான் போய் விருத்தினனாதலே ஒன்று-அவ்வாறுஉள்ளூரில் இருந்து தனது உயிர் வாழ்க்கையை வீணேகழிக்காமல் தான் வெளியூர்கட்குப் போய்ப்பிறர் இல்லத்தில் விருந்தினனாயிருந்து உண்ணுதலேநலமாகும்.

(க-து.) பிறர்க்கொன்று உதவ இயலாதவறியோனது உயிர்வாழ்க்கை வீண் என்க.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Tue Apr 01, 2014 5:54 pm

அருமை அருமை தொடருங்கள் அண்ணா சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Apr 02, 2014 9:03 am

287 நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; -கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.

(பொ-ள்.) கூர்மையின் முல்லைஅலைக்கும் எயிற்றாய் - தமது கூர்மையால்முல்லையரும்புகளை வெல்லும் பற்களையுடைய பெண்ணே!,நிரப்பு என்னும் அல்லல் அடையப்பட்டார்நீர்மையே, யன்றி நிரம்ப எழுந்து தம் கூர்மையும்எல்லாம் ஒருங்கு இழப்பார் - வறுமை என்னும்இன்னலால் தாக்குண்டவர் தமது இயற்கையறிவையேயன்றி நிரம்ப வளர்த்த தமது கூரியசெயற்கையறிவையும் என எல்லாம் ஒருங்கேஇழந்துவிடுவர்.

(க-து.) பொருளில்லாதவர்க்குத்தம் இயற்கை செயற்கை யறிவுகளும் மழுங்கிவிடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 04, 2014 9:16 am

288 இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

(பொ-ள்.) இட்டு ஆற்றுப்பட்டு ஒன்றுஇரந்தவர்க்கு ஆற்றாதுமுட்டு ஆற்றுப்பட்டு முயன்றுஉள்ளூர் வாழ்தலின் - சிறுமையாகிய வறுமை வழியில்அகப்பட்டுத் தம்மிடம் ஒன்று இரந்தவர்கட்கு உதவமாட்டாமல் முட்டுப்பாடான முறைமையில்இருந்துகொண்டு முயற்சியோடு உள்ளூரில் உயிர்வாழ்தலைவிட, நெடு ஆற்றுச் சென்று நிரை மனையில்கை நீட்டும் கெடு ஆறு வாழ்க்கையே நன்று - தொலைவழிநடந்துபோய் அங்கங்கும் வரிசையாக உள்ளவீடுகளிற் கை நீட்டி இரந்துண்ணுங் கெடுவழிவாழ்க்கையே நன்றாகும்.

(க-து.) பிறர்க்கொன்றுஉதவமாட்டாத வறுமை வாழ்வினும் நாடு கடந்துபோய்இரந்துண்ணும் இழிவு வாழ்வே நன்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Apr 05, 2014 9:26 am

289 கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.

(பொ-ள்.) துப்புரவு சென்றுஉலந்தக்கால் - நுகரப்படும் பொருள்கள் நீங்கிவறுமையுற்றவிடத்து, கடகம் செறிந்த தம் கைகளால் -முன்பு செல்வராயிருந்தபோது கடகம் செறிந்திருந்ததம் கைகளினால், வாங்கி அடகு பறித்து - தூறுகளைவளைத்து அதிலுள்ள கீரைகளைப் பறித்து, கொண்டுஅட்டு - அதனையே முதன்மையாகக் கருதி உப்பில்லாமல்அவித்து, குடை கலனா உப்பு இலிவெந்தை தின்று உள்அற்று வாழ்ப - பனையோலையின் முடக்கே உண்கலானகஅவ் வுப்பில்லாததான அவியலைமென்று வாயாறிஅமைதியற்று உயிர் வாழ்வார்கள்.

(க-து.) வறுமை நிலையினும்அமைதியிழந்த இழிந்த நிலை வேறில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Apr 06, 2014 11:10 am

290 ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்; -நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் நண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.

(பொ-ள்.) ஆர்த்த பொறியஅணிகிளர் வண்டினம் பூத்து ஒழி கொம்பின்மேல்செல்லா - நிறைந்த புள்ளிகளையுடைய அழகுமிக்கவண்டுக்கூட்டங்கள், பூத்தல் மாறியபூக்கொம்புகளிடத்திற் செல்லமாட்ட, நீர்த்துஅருவி தாழாது உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட -இனிய நீரருவி அறாது ஒழுகுகின்ற மிக்கசிறப்பினையுடைய குளிர்ச்சியான மலைகளையுடையஉயர்ந்த நாடனே!. வாழாதார்க்கு இல்லை தமர் -ஆதலாற் பொருள் மலர்ச்சியில்லாத வறியோர்க்குஉறவாவோர் இல்லை.

(க-து.) நுகர்பொருள்கள் மாறியவறியோரை எவரும் நாடார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Sun Apr 06, 2014 12:28 pm

சிறப்பான பதிவு. தொடருங்கள் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Apr 07, 2014 10:16 am

பொருட்பால்
30. மானம்
[என்றது, தாழ்வு தாளாத உள்ளவியல்பு]


291 திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே,
மன முடையார் மனம்.

(பொ-ள்.) திரு மதுகையாகத் திறன்இலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் -செல்வம் வலிமையாகக் கயவர் செய்யும்வரம்புகடந்த செயல்களைப்பார்த்தவிடத்தும், எரிமண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போல் கனலும்மானமுடையார் மனம் - மானமுடைய நன்மக்களின் மனம்எரிதல் மிகுந்து காட்டில் உண்டான காட்டுத்தீப்போல் அனல் கொள்ளும்.

(க-து.) தகாத செயல்களைக் கண்டால்மானமுடையார் மனம் அழல்கொள்ளும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Apr 08, 2014 11:51 am

292 என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பா டுரைப்பரோ தம்முடையார்; -தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.

(பொ-ள்.) என்பாய் உகினும்இயல்பிலார் பின் சென்று தம் பாடு உரைப்பரோ தம்உடையார் - தன்மானமுடையோர், தாம் எலும்பாகித்தசை சிதையினும், குணமில்லாதவர் பின் சென்றுதம்முடைய இடுக்கண்களைச்சொல்லிக்கொள்ளமாட்டார்; தம் பாடு உரையாமைமுன்னுணரும் ஒண்மையுடையார்க்குத் தாம் உற்ற நோய்உடையரோ - தம்முடைய துன்பங்களைத் தாம்எடுத்துரையாமைக்கு முன்பே அவற்றை உணர்ந்து உதவும்அறிவு விளக்கமுடைய குணசாலிகட்கும் தாம் அடைந்தஇன்னல்களை அவர் உரையார்போலும்!(மானமுடையாரியற்கை அத்தகைத்து!)

(க-து.) மானமுடையார் தம்துன்பங்களைப் பிறர்க்குப் புலப்படுத்தார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Apr 09, 2014 9:57 am

293 யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுசு செல்வர் தொடர்பு.

(பொ-ள்.) யாமாயின் எம் இல்லம்காட்டுதும் - வறியேமாகிய யாமாயின் செல்வர்கட்குஉண்ணவும் இளைப்பாறவும் எம் இல்லத்தை இடமாகஉதவுகின்றோம். தாமாயின் காணவே கற்பு அழியும்என்பார்போல் நாணிசோறும் புறங்கடைவைத்துஈவர்-ஆனால் அச்செல்வர்களாயின் யாம்காணுமளவிலும் தம் மனைவியரின் கற்புக்கெடும் என்றுகருதுவார்போல் மனங் கூசிச், சோறும் வாயிலின்வெளியில் வைத்துப் போடுவர்; அதனால் மறந்திடுகசெல்வர் தொடர்பு - ஆதலால் பிறரைப்பொருள்செய்யாத செல்வர்களின் தொடர்பை மக்கள்மறந்துவிடுவார்களாக!

(க-து.) தாம் வறியராயினும் தம்மைமதியாத செல்வர்களின் தொடர்பை மானமுடையோர்மறந்து விடுதல் வேண்டும்
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Apr 10, 2014 10:00 am

294 இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா
தும்மையும் நல்ல பயத்தலால், -செம்மையின்
நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.

(பொ-ள்.) செம்மையின் -நடுநிலையாக நோக்குமிடத்து, நானம் கமழும்கதுப்பினாய் - கத்தூரி மணக்குங் கூந்தலுடையபெண்ணே!: மானமுடையார், மதிப்பு - மானமுடையார்நடக்கை, இம்மையும் நன்றாம் -புகழும் இன்பமுந்தருதலால் இம்மையிலும் நன்றாகும்; இயல்நெறியும்கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால் நன்றேஉண்மை நெறியும் வழுவுதலின்றி மேலுலகிலும்இன்பமாவன உண்டாக்குதலால் மறுமைக்கும்நல்லதேயாம்.

(க-து.) மானமுடையார் ஒழுக்கம்இருமைக்கும் இன்பந் தரும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 11, 2014 10:14 am

295 பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; -சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.

(பொ-ள்.) பாவமும் ஏனைப் பழியும்பட வருவசாயினும் சான்றவர் செய்கலார் -மறுமைக்குத் தீவினையும் இம்மைக்கு மற்றைப்பழியும் உண்டாகும்படி நேர்வனதாம் இறப்பதாயினும்சான்றோர் செய்யமாட்டார்: சாதல் ஒருநாள்ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல்இன்று - ஏனென்றால், இறத்தல் என்பது ஒரு நாளில் ஒருநேரத்துத் துன்பம்; ஆனால் அப் பாவமும்பழியும்போல் என்றுந் துன்பத்துக் கேதுவானபெருங்குற்றம் பயப்பிப்பது வேறொன்றும் இல்லை.

(க-து.) மானமுடையோர்,பழிபாவஞ்கட்கு அஞ்சியொழுகுவர்
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ந.கணேசன் Fri Apr 11, 2014 11:42 am

அருநவை - கொஞ்சம் விளக்குங்க சார்...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ந.கணேசன் Fri Apr 11, 2014 11:43 am

அருநவை - கொஞ்சம் விளக்குங்க சார்...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Apr 12, 2014 9:55 am

296 மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.

(பொ-ள்.) மல்லல் மா ஞாலத்துவாழ்பவருள் எல்லாம் - வளப்பமிக்க இப் பெரியஉலகில் உயிர்வாழ்பவரெல்லாருள்ளும், செவ்வர்எனினும் கொடாதவர் நல் கூர்ந்தார் -பொருளுடையராயினும் பிறர்க்கொன்று உதவாதஇயல்புடையார் வறியரேயாவர்; நல்கூர்ந்தக்கண்ணும் பெருமுத்தரையரே செல்வரைச் சென்றுஇரவாதார் - வறுமையுற்ற விடத்தும்பொருளுடையாரிடம் சென்று ஒன்று இரவாதவர்பெருமுத்தரையரையொத்த பெருஞ் செல்வரேயாவர்

(க-து.) உலகத்தில் ஒன்று உதவும்நிலையும் இரவா நிலையுமே செல்வ நிலையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ந.கணேசன் Sat Apr 12, 2014 10:01 am

இன்றைய சிந்தனை நன்று.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Apr 12, 2014 11:39 am

ந.க.துறைவன் wrote:அருநவை - கொஞ்சம் விளக்குங்க சார்.

நண்பருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் 



இப்பாடலில் அருநவை  சொல்லுக்கு 


தீர்க்கப்படாத எளிதில் மறையாத ,மாற்றமுடியாத தண்டனை  பழிச்சொல் குற்றம் என்று பல பொருள் கொள்ளலாம் என்று சில ஆசிர்யர்கள் சொல்கிறார்கள் 


இப்பாடலின் பொதுவான கருத்து யாதெனில் 


பாவமும் மற்றப் பழியும் தோன்றக் கூடிய செயல்களைச் சான்றோர் தாம் சாவதாயினும் செய்ய மாட்டார்கள். ஏனெனில் சாவுத் துன்பம் ஒரு நாளில் அதுவும் ஒரு கணப் பொழுதில் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும அந்தச் சாவுத் துன்பம் அப்பாவமும் பழியும்போல உயிர் உள்ள அளவும் நிலைத்து நின்று துன்பம் தருவதன்று.



இன்னும் விளக்கம் வேண்டுமானால் எமது பேராசிரியர் அவர்களிடம் கேட்டு பதிவிடுகிறேன் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Apr 14, 2014 11:22 am

297 கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெல்லாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த
விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.

(பொ-ள்.) புடை பரந்த வில் புருவவேல் நெடு கண்ணாய் - பக்கங்களில் தசை பருத்தவில்போலும் புருவங்களையுடைய வேல்போலும் நீண்டகண்களமைந்த பெண்ணே!; கடை எலாம் காய் பசிஅஞ்சும், இடை எலாம் இன்னாமை அஞ்சும், மற்று ஏனைத்தலை எல்லாம் சொல்பழி அஞ்சிவிடும் - மக்களிற்கடையானவரெல்லாரும் தம்மை வருத்தும்வயிற்றுப்பசிக்கு அஞ்சி மானங் கைவிடுவர்;இடைப்பட்டவ ரெல்லாரும் தம் வாழ்க்கையில் வரும்உயிரிறுதி முதலிய துன்பங்களுக்கு அஞ்சி மானத்தைவிட்டொழுகுவார்; ஆனால் மற்றத்தலையானவரெல்லாம் பழிச் சொற்களுக்கு அஞ்சிமானம் விடாது நடந்து கொள்வர்.

(க-து.) பழிச்சொல்லுக்கு அஞ்சுகின்ற மானத்தோடுஉயிர் வாழ்தலே தலைமக்களின் செயலாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 19 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum