தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jul 16, 2014 10:16 am

374 ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு.

(பொ-ள்.) ஆணம்இல் நெஞ்சத்துஅணிநீலக் கண்ணார்க்குக் காணம் இலாதார் கடுஅனையர் - அன்பில்லாத உள்ளமும் அழகிய நீலமலர்போன்ற கண்களுமுடைய பொதுமகளிர்க்குப்பொருளில்லாதார் எத்துணை உயர்ந்தவராயினும்நஞ்சையொப்பத் தோன்றுவர்; காணவே செக்கூர்ந்துகொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம்அன்னார் அவர்க்கு - பலருங் காணச்செக்காட்டிப்பிழைப்பாரும் ஈட்டிய செல்வமுடையார்அவர்க்குச் சர்க்கரைபோல் விரும்பத்தக்கவராவர்.

(க-து.) எந்நிலையினும் பொருளுடையாரையேவிலைமகளிர் விரும்புவர்
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jul 17, 2014 10:16 am

375 பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.

(பொ-ள்.) பாம்பிற்கு ஒரு தலைகாட்டி ஒரு தலைதேம் படு தெள் கயத்து மீன் காட்டும்மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார் -இன்சுவை மிக்க தெளிந்த நீர்ப்பொய்கையில்பாம்புக்குத் தனதுடலின் ஒரு புறமாகிய தலையைக்காட்டி மற்றொரு புறமாகிய வாலை மீனுக்குக் காட்டிஅவ்வவற்றிற்கினமாயிருந்து உயிர் பிழைத்து வரும்விலாங்கு மீனைப் போன்ற கள்ளச் செயலுடையவிலைமகளிரின் தோள்களைக் கூடுங் காமுகர்,விலங்கு அன்ன வெள் அறிவினார் - விலங்கைப்போற்பகுத்தறிவில்லாத அறியாமையுடையவராவர்.

(க-து.) விலைமகளிர்கள்ளவுருவினராகலின் அவரைக் கூடற்க வென்பது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jul 18, 2014 8:30 am

376 பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்த்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.

(பொ-ள்.) பொத்த நூல் கல்லும்புணர் பிரியா அன்றிலும்போல் நித்தலும் நம்மைப்பிரியலம் என்று உரைத்த பொன் தொடியும் போர்த்தகர்க் கோடு ஆயினாள் - நாம் பொருளுடையமாயிருந்தகாலத்தில், கோத்த நூலோடு பொருந்திய மணியும்சேர்க்கை பிரியாத அன்றிற் பறவைகளும்போலஎந்நாளும் நம்மைப் பிரியோம் என்று உறுதி கூறியபொன்னாற் செய்த வளையலையணிந்த பொது மகள்,இப்போது, போர்த்தொழில் செய்கின்ற ஆட்டுக்கடாவின் கொம்புபோல் மனம் முறுக்குண்டுவன்மையாய்ப் பின்வாங்கி விட்டாள்; நல்நெஞ்சே நிற்றியோ போதியோ நீ - கவடற்றநெஞ்சமே! இனி நீ அவளிடமே நயந்து நிற்பாயோஅன்றி நன்னெறியில் திரும்பி வருவாயோ?

(க-து.) விலைமாதர்நம்பத்தக்கவரல்லர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jul 20, 2014 11:47 am

377 ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉஞ் சில்லைக்கண் அன்பினை
ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.

(பொ-ள்.) ஆமாபோல் நக்கி அவர்கைப்பொருள் கொண்டு சேமாபோல் குப்புறூஉம்சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதுஎன்றிருந்தார் - முதலிற் காட்டாவைப் போல்மெத்தென ஊற்றின்பந்தந்து காமுகரின் கையிலுள்ளபொருளைப் பறித்துக்கொண்டு பின்பு காட்டெருதைப்போற் பிறவிடத்துப் பாய்ந்தோடிவிடும்தீயொழுக்கமுடைய பொதுமக ளுள்ளத்துப் போலியன்பினை மதிமயங்கி எமக் குரியதென்றுநம்யிருந்தவர், பெறுப பலரால் நகை - உலகிற்பலரால் நகைத்தலைப் பெறுவர்.

(க-து.) பொருட்பெண்டி ருறவைநம்பியிருந்தவர் பின்பு வறிய நிலையில் அவராற்கைவிடப்பட்டுப் பலரால் நகைத்தலுக் கிடமாவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jul 21, 2014 1:15 pm

378 ஏமாந்த போழ்தின் இனியார்போன் றின்னாராய்த்
தாமார்ந்த போதே தகர்க்கோடாம் - மானோக்கின்
தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்துமென் பார்.

(பொ-ள்.) ஏமாந்த போழ்தின்இனியார்போன்று இன்னராய்த் தாம் ஆழ்ந்தபோதேதகர்க்கோடு ஆம் - காமுகர் தம்பால்மயங்கியிருந்த காலத்தில் புறத்தே அவர்க்குஇனியாரைப்போலிருந்து அகத்தே வஞ்சம்மிக்கவராய்த் தாம் அவர் பொருளையெல்லாம்உண்டுவிட்டவுடனே ஆட்டுக் கடாவின் கொம்புபோல்திருக்குண்டு செல்கின்ற, மான் நோக்கின் தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேரார் செந்நெறிச்சேர்தும் என்பார் - மான் போன்ற மருண்டபார்வையினையுடைய தம் மனம் போன வழியே யொழுகும்பொருட் பெண்டிரது அகன்ற மார்பினைஅருணெறியிலொழுகுவே மென்றிருப்பார் கூடார்.

(க-து.) விலைமாதரது சேர்க்கையால்அருணெறியொழுக்கங் கெடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jul 22, 2014 11:04 am

379 ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்குந்
தமரல்லர் தம்உடம்பி னார்.

(பொ-ள்.) ஊறு செய் நெஞ்சம் தம்உள்ளடக்கி ஒள் நுதலார் தேற மொழிந்த மொழிகேட்டு - பிறர்பாற் பொருள் பறித்துக்கொள்ளுதலாகிய தீமையைச் செய்யுந் தமது நினைவைப்புறத்தே புலப்படாதபடி தம் உள்ளத்தில்அடக்கிக்கொண்டு ஒளிமிக்க நெற்றியையுடையபொருட் பெண்டிர் புறத்தே மனந் தெளியும்படிமொழிந்த பசப்பு மொழிகளைக் கேட்டு, தேறி எமர்என்று கொள்வாரும் கொள்ப-அவற்றை நம்பி அப்பெண்டிர் எமக்குரியரென்று உரிமை கொள்வாருங்கொள்வர்; யார்க்கும் தமர் அல்லர் தம்உடம்பினார் - அம் மாதரார் எவர்க்கும்உறவினராகார் அவர் தமக்கே உரியஉடம்பினையுடையர்.

(க-து.) வேசையர் தமதுடம்பைத்தமதாக்கத்துக்குப் பயன்படுத்துவரான்றிப்பிறரெவர்க்கும் உரிமையாக்கார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jul 23, 2014 2:35 pm

380 உள்ளம் ஒருவன் உழையாத ஒண்ணுதலார்
கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாந் - தெள்ளி
அறிந்த விடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.

(பொ-ள்.) உள்ளம் ஒருவன்உழையதா-தமது நெஞ்சம் வேறொருவனிடத்ததாக, ஒள்நுதலார் கள்ளத்தால் செய்யுங் கருத்தெல்லாம் -ஒளிபொருந்திய நெற்றியையுடைய பொருட்பெண்டிர்வஞ்சனையால் தம்மிடஞ் செய்யும் நினைவெல்லாம்,தெள்ளி அறிந்தவிடத்தும் அறியாராம் பாவம்செறிந்த உடம்பினவர் - ஆராய்ந்து நன்றாகத்தெரிந்த நிலையினும் தீவினைமிக்கபிறப்பினையுடையவர் அத்தெரிவினைத்தமதொழுக்கத்திற் கொண்டுவரும்அறிவாற்றலில்லாதவராவர்.

(க-து.) தீவினை மிக்கார்விலைமாதரின் வஞ்சங்களை நன்கு தெரிந்திருந்தும்அவரின் நீங்கியொழுகும் ஆற்றலில்லாதவராவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by செந்தில் Wed Jul 23, 2014 4:08 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jul 24, 2014 10:59 am

பொருட்பால்
39. கற்புடை மகளிர்
[கணவன்பால் ஆழ்ந்த அன்புணர்வுடைய இல்லற நிகழ்த்தும் மகளிரது இயல்பு.]


381 அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப்
பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.

(பொ-ள்.) அரும்பெறல் கற்பின்அயிராணி அன்ன பெரும் பெயர்ப் பெண்டிர்எனினும்-பெறற்கரிய கற்பொழுக்கமுடைய அயிராணிஎன்னுந் தேவர்கோன் மனைவிபோல் வாழ்க்கையிற்பெரிய புகழ்வாய்ந்த மகளிராயினும், விரும்பிப்பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும்நறுநுதலாள் நன்மைத்துணை - அவருள், உணவு முதலியபொருள்களை விரும்பி அவற்றை அடையும் வேட்கையால்தன் பின்னே இரந்து நிற்கும் இரவலர்இல்லாமையையே தனது இல்லற வொழுக்கத்தாற்காத்தொழுகும் இயற்கை மணங் கமழு நெற்றியையுடையபெண்ணே அவ் வில்லறத்தின் பயன்களாகியமேன்மேல் நன்மைகட்குத் துணையாவாள்.

(க-து.) கற்புடை மகளிர்க்கு விருந்துபுறத்தரும் இயல்பு இன்றியமையாதது
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jul 25, 2014 2:27 pm

382 குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.

(பொ-ள்.) குடம் நீர் அட்டுஉண்ணும் இடுக்கண் பொழுதும் கடல் நீர் அற உண்ணும்கேளிர் வரினும் - குடத்திலுள்ள நீரையேகாய்ச்சிப் பருகிப் பசியாறும் இன்னாக்காலத்தும் கடல் நீர் முழுமையும் உண்டுபசியாறுதற்குரிய அத்தனை உறவினர் ஒருங்குவிருந்தாக வந்தாலும், கடன் நீர்மை கை ஆறாக்கொள்ளும் மடமொழி மாதர் - அந்நேரத்தில், தன்கடமையாகிய விரும்தோம்புமியல்பைச்செயன்முறையாக மேற்கொள்கின்ற மென்மையானசொற்களையுடைய பெண்ணே, மனை மாட்சியாள் - இல்லறவாழ்க்கைக்குரிய மாட்சிமையுடையவளாவாள்.

(க-து.) எந்நிலையிலும்விருந்தோம்பும் இயல்பே மனை மாட்சியாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Jul 26, 2014 10:54 am

383 நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

(பொ-ள்.) நால் ஆறும் ஆறாய், நனிசிறிதாய், எப்புறனும் மேல் ஆறு மேல்உறை சோரினும்- வீடு நாலாபக்கமும் இடிந்து வழியுடையதாய்; மிகவுஞ்சிறியதாய், எந்தப் பக்கமும் கூரை கலனாகிமேல்வழியாய்த் தன்மேல் மழை ஒழுகுவதாய் அத்துணைவறிய நிலையிலிருப்பினும், மேலாயவல்லாளாய்வாழும் ஊர் தன் புகழும் மாண்கற்பின் இல்லாள்அமர்ந்ததே இல் - உயர்ந்தஇல்லறவொழுக்கங்களில் திறமையுடையவளாய் அதனால்தான் வாழும் ஊரவர் தன்னைப் புகழ்ந்தேத்துகின்றமாட்சிமையான கற்பு நிலையுடைய மனைவிஅமர்ந்திருக்கும் வீடே வீடெனப்படும்.

(க-து.) செல்வம் முதலியவற்றைவிடஇல்லக்கிழத்தியின் நற்குணமே இல்வாழ்க்கைக்குமுதன்மையானது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jul 27, 2014 10:59 am

384 கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி
இடனறிந் தூடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.

(பொ-ள்.) கட்கு இனியாள் காதலன்காதல் வகை புனைவாள் - பார்வைக்கு இனியஇயற்கையழகுடைய வளாய்த் தன் காதலன் விருப்பப்படிசெயற்கைக் கோலங்கள் செய்து கொள்வாளும், உட்குஉடையாள் ஊர்நாண் இயல்பினாள் - தனதுகற்பொழுக்கச் சீரினாற் கண்டாரெவரும் அஞ்சும்மதிப்புடையவளாய்த் தான் வாழும் ஊரிலுள்ளமகளிரெல்லாரும் தன்னுடைய இல்லறச் செய்கைகளின்திறமைக்கு வியந்து நாண்கொள்ளற்குரியமாட்சிமையுடையாளும், உட்கு இடன் அறிந்து ஊடிஇனிதின் உணரும் மடமொழி மாதராள் - தன்கணவன்பால் உள்மதிப்புக்கொண்டு செவ்வியறிந்துஊடியும் அஃது இனிதாம்படி அவ்வூடல் நீங்கியும்இன்பம் விளைக்கும் மென்மையான மொழிகளையுடையபெண்ணே, பெண் - இல்வாழ்க்கைக்குரிய வாழ்க்கைத்துணையாவள்.

(க-து.) தோற்றமும் ஒழுக்கமும்காதலுமுடைய மாது சிறந்த வாழ்க்கைத் துணையாவாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jul 28, 2014 11:20 am

385 எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையாற்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

(பொ-ள்.) எஞ்ஞான்றும் எம் கணவர்எம் தோள் மேல் சேர்ந்தெழினும் அஞ்ஞான்றுகண்டேம்போல் நாணுதும் - எம் கணவர் எந்நாளும்எம் தோள்மேல் முயங்கியெழுந்தாலும் தலைநாளிற்கண்டேம்போல் அவர் பால் யாம்நாணமுடையமாயிருக்கின்றேம்; எஞ்ஞான்றும் பொருள்நசையாற் பன் மார்பு சேர்ந்தொழுகுவார் என்னைகெழீஇயினர் கொல்லோ - அவ்வாறிருக்க, பொருள்வேட்கையால் எந்நாளும் ஆடவர்பலர் மார்புகளைச்சற்றும் நாணின்றிக் கூடியொழுகும் பரத்தையர்தமதுள்ளத்தில் என்னதான்உடையராயிருக்கின்றனரோ;

(க-து.) கற்புடை மகளிர்க்கு நாணமுதலிய பெண்மை யியல்புகள் அணிகளாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jul 29, 2014 10:32 am

386 உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; -தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.

(பொ-ள்.) உள்ளத்து உணர்வுடையான்ஓதிய நூல் அற்று - உள்ளத்தில் இயற்கைநுண்ணுணர்வுடையதா னொருவன் கற்ற கல்வியறிவையொத்த தாயும், வள்ளன்மை பூண்டான்கண்ஒண்பொருள் அற்று - இயற்கையிற் கொடைக்குணம்உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒள்ளியசெல்வத்தை ஒத்ததாயும், தெள்ளிய ஆண் மகன்கையில் அயில்வாள் அனைத்து - வாட்பயிற்சியில்தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில்விளங்கும் கூரிய வாட்படையை ஒத்ததாயும்இருக்கின்றது, நாண் உடையாள் பெற்ற நலம் - நாணம்முதலிய பெண்ணீர்மைகளுடைய கற்புடைப்பெண்ணொருத்தி பெற்ற அழகு முதலிய நலங்களென்க.

(க-து.) மகளிர்க்கு நாண முதலியபெண்மைப் பண்புகளிருப்பின், அவர்க்கு ஏனைநலங்களுஞ் சிறக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Tue Jul 29, 2014 12:41 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jul 30, 2014 11:29 am

387 கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன்; -ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையுந் தோய வரும்.

(பொ-ள்.) கருங்கொள்ளும்செங்கொள்ளும் தூணிப்பதக்கு என்று ஒருங்கு ஒப்பக்கொண்டானாம் ஊரன் - மருதநிலத்து ஊரில்இருந்துகொண்டே அவ்வூரானொருவன் தாழ்ந்தகருங்கொள்ளையும் உயர்ந்த செங்கொள்ளையும் ஒரேவிலைக்குத் தூணிப்பதக்கு என்று ஒரே அளவாகஒன்றாய் வாங்கினானாம்; ஒருங்கு ஒவ்வாநல்நுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாதுஎன்னையும் தோயவரும் - அதுபோலப்பெண்மையியல்பில் என்னோடு ஒருங்கு ஒவ்வாத நல்லநெற்றியையுடைய பரத்தையரை மருவிய மலைபோலும்பெரிய மார்பினையுடைய என் கணவன் நீராடுதலுஞ்செய்யாது என்னையும் மருவ வருகின்றனன். (ஈதென்னமுறை)

(க-து.) கற்புடை மகளிர் தூயர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by செந்தில் Wed Jul 30, 2014 2:16 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jul 31, 2014 11:25 am

388 கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
வலக்கண் அனையார்க் குரை.

(பொ-ள்.) கொடியவை கூறாதி பாண -பாண! கேட்க இன்னாதனவான தலைவனைப் பற்றியநயவுரைகளை எம் மிடங் கூறாதே; நீ கூறின் - நீகூறுவதானால், துடியின் இடக்கண் அனையம் யாம் ஊரற்குஅதனால் - ஊரனான எம் தலைவனுக்கு யாம் உடுக்கையின்இடப்பக்கத்தை ஒத்துப் பயன்படாமலிருக்கின்றேமாதலால், அடி பைய இட்டு ஒதுங்கிச் சென்று வலக்கண்அனையார்க்கு உரை - மெல்ல அடியிட்டு நீங்கிப்போய் அவ்வுடுக்கையின் வலப்பக்கம்போற்பயன்படுதலுடைய பரத்தையர்க்குக் கூறு.

(க-து.) கற்புடை மகளிர் தமதூடுதலாற்கணவரது திருத்தத்தை நாடுதற்குரியர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Aug 01, 2014 10:43 am

389 சாய்ப்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன், - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான்.

(பொ-ள்.) சாய் பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது ஈப் பறக்கநொந்தேனும் யானேமன் - கோரைகளைப்பறித்துவிடுதலால் நீர் நன்கு விளங்கித்தெரிகின்ற குளிர்ந்த வயல்களையுடைய ஊரனாகிய என்தலைவன் மேல் முன்னெல்லாம் ஓர் ஈ வந்து உட்காரஅதுபொறாமல் வருந்தியவளும் யானே; தீப்பறக்கத்தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம்நோக்கி இருந்தேனும் யான் - தீப்பொறி பறக்கப்பரத்தையர் தம் கொங்கைகளால் ஞெமுக்கிக்கலவிசெய்த, குளிர்ந்த சந்தனமணிந்த அவனது அகன்றமார்பினை இப்போது பார்த்துப்பொறுத்திருந்தவளும் யானே காண்.

(க-து.) கற்புடைய மகளிர்க்குத் தங்கணவர் மாட்டு அன்பு எந்நிலையிலும் குன்றாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Aug 02, 2014 10:22 am

390 அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை.

(பொ-ள்.) அரும்பு அவிழ் தாரினான்எம் அருளும் என்று பெரும்பொய் உரையாதி பாண -அரும்புகள் போதாகி மலரும் மாலையை யணிந்த எம்தலைவன் எமக்குத் தலையளி செய்ய வருகின்றனன்என்று பெரியதொரு பொய்ம்மொழியை, பாண!எம்மிடம் மொழியாதே கரும்பின் கடைக்கண்அனையம் நாம் ஊரற்கு அதனால் இடைக்கண்அனையார்க்கு உரை - ஊரனாகிய எம் தலைவர்க்கு யாம்கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவையிலேமாயிருக்கின்றனமாதலின் அதன் நடுக் கணுக்களையொப்ப அவற்குச் சுவை மிக உடையரானபரத்தையரிடம் அதனைச் சொல்.

(க-து.) கற்புடை மகளிர், கணவன்வருகையில் அன்புடையராயிருப்பர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Sun Aug 03, 2014 10:04 am

அருமை அண்ணா
தொடருங்கள்....
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Aug 03, 2014 1:15 pm

40. காமநுதலியல்

‘இன்பத்தின் இயல்பு நுவலும் அதிகாரம்' என்பது பொருள்; இன்பமாவது, பொருள்களின் வாயிலாகப் புலன்களால் நுகர்வதோர் உணர்வு. அதன்கண், ஒருகாலத் தொருபொருளால் ஐம்புலனும் ஒருங்கு நுகருங்காமவின்பம் சிறத்தலின், அதுவே ‘இன்ப' மென் றெடுத்துக்கொள்ளப்பட்டது. அஃது, ஒத்த தலைவனுந் தலைவியும் இயற்கையன்பினால் ஒருவரையொருவர் இன்றியமையாராய்த் தம்முட் கூடுங்கால், அவருள்ளத்துணர்வாய்த் தோன்றுவதோ ருணர்வுநிலை. அந்நிலை மாட்சிமைப்பட்டன்றி அதனினுஞ் சிறந்ததொன்று கைவாராமையின், அது மாட்சிமைப்படும் வாயில்கள் இவ் வதிகாரத்தா னுவலப்படும்.
391 முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.
(பொ-ள்.) முயங்காக்கால் பாயும் பசலை - தலைவியை மருவாவிடின் அவளுடம்பிற் பசலைநிறம். பரவும்; மற்று ஊடி உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் - ஆனால் அவள் இடையிடையே ஊடல்கொண்டு உள்ளம் மெலியாவிடின் காமவுணர்வு சுவையில்லாததாகும்; வயங்கு ஓதம் நில்லாதத் திரை அலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப புல்லாப் புலப்பதோர் ஆறு - ஆதலால் விளங்குகின்ற கடலானது ஒரு படியிலும் நில்லாத தன் அலைகளால் அலைத்தெதிர்கின்ற நீண்ட கழியினையுடைய குளிர்ந்த துறைவனே! காமத்திற்கு ஊடிப் புணர்வது ஓர் இனிய நெறியாகும்.

(க-து.) ஊடலுங் கூடலும் காமம் மாட்சிமைப்படுதற்கு ஏது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Aug 04, 2014 2:05 pm

392 தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

(பொ-ள்.) தம் அமர் காதலர் தார் சூழ் அணி அகலம் விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு - தம்மால் அன்பு செய்யப்படுங் காதலரது மலர்மாலை யணிந்த அழகிய அகன்ற ஆகத்தைக் கொங்கைகள் பூரிக்க மருவியின்புறுமோர் ஆதரவில்லாத எம்போலும் பிரிந்த மகளிர்க்கு, இம் எனப் பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து - இம்மென்று மழை பொழிய மேகம் இடித்தொலிக்குந் திசையெல்லாம் சாப்பறை அறைந்தாற் போன்ற தன்மையுடையது.

(க-து.) பிரிவின்கண் அன்புசெய்து இரங்குவார்க்குக் காமம் மாட்சிமைப்படும்
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Aug 05, 2014 11:15 am

393 கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

(பொ-ள்.) கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள். - கம்மத்தொழில் செய்கின்ற மக்கள் தொழிலை நிறுத்தித்தம் கருவிகளை ஏறக்கட்டிச் சென்ற மயங்கஞ் செய்யும் இம் மாலைப்போதில் மலர்களை ஆராய்ந்து மாலை தொடுப்பவள், கைம்மாலை இட்டுக்கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு இம் மாலை என்செய்வதென்று - நின் பிரிவு கேட்டுத் தனது கையிலிருந்த மாலையை நழுவவிட்டுத் தலைவராகிய துணையைப் பிரிந்த மகளிர்க்கு இந்த மலர்மாலை என்ன பயன் தருவதென்று சொல்லி அழுவாளாயினள்.

(க-து.) பிரிவினாற் காதலருள்ளம் மென்மையடையும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Aug 06, 2014 11:01 am

394 செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.

(பொ-ள்.) செல் சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்ட நீர் மெல் விரல் ஊழ் தெறியா விம்மி - கதிரவன் மறையும் மாலைப்போது நோக்கிச் சிதறிய செவ்வரி பரந்த கண்கள் ஆற்றாமையால் நிறைத்த நீரைத் தனது மெல்லிய விரலால் முறையே எடுத்தெறிந்துகொண்டு அழுது, மெல்விரலின் நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் தோள் வைத்து அணைமேல் கிடந்து - தன்கையே தலையணையாகப் படுக்கையின்மேல் ஒருக்கணித்துக் கிடந்து மெலிந்துபோன தன் விரல்களினால் பிரிந்த நாளைக் கணக்கிட்டுக் காலத்தில் இல்லஞ் சேராத நமது குற்றத்தை நினைத்து, ஆ, இந்நேரம் நம் துணைவி வருந்துமோ?

(க-து.) பிரிவு அருளிரக்கத்தை உண்டாக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 24 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum