தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jun 24, 2014 10:23 am

356 மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்தநன் றுள்ளுவர் சான்றோர் : கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.

(பொ-ள்.) மலைநலம் உள்ளும் குறவன்- குறவன் தனக்கு வளந்தந்த மலையினது நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; பயந்தவிளைநிலம் உள்ளும் உழவன் - உழவன் தனக்குவிளையுள் பயந்த விளைநிலங்களின் நன்மையைநினைந்து பாராட்டிக்கொண்டிருப்பான்; சிறந்தஒருவர் செய்த நன்று உள்ளுவர் சான்றோர் - அவைபோல, ஒருவர் அருட்குணம் மிகுந்து தமக்குச் செய்தநன்றியை நினைந்து பாராட்டிக்கொண்டிருப்பர்சான்றோர்; கயம் தன்னை வைததை உள்ளிவிடும் -ஆனால் தாழ்ந்த அறிவினன், தன்னைப் பிறர்பழித்ததை நினைத்துப் பகைமை கொண்டுவிடுவன்கண்ணீர் வடிநலம் பாராட்டான் என்பது.)

(க-து.) மெலிந்த அறிவினர், பிறர்தீமைகள் உள்ளுதலை விலக்கி நலந்தேடி உள்ளும்ஆற்றலில்லா தவராவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jun 25, 2014 10:04 am

357 ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்: - கயவர்க்
கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்
எழுநூறுந் தீதாய் விடும்.

(பொ-ள்.) ஒரு நன்றி செய்தவர்க்குஒன்றி எழுந்த பிழை நூறுஞ் சான்றோர் பொறுப்பர் -தமக்கு ஒரு நன்மை செய்தவர்க்குச் சான்றோர்அவரால் பின்பு தொடர்ந்து உண்டான நூறுகுற்றங்களும் பொறுத்து நிற்பர்; கயவர்க்கு எழுநூறுநன்றி செய்து ஒன்று தீதாயின் எழுநூறுந் தீதாய்விடும் - ஆனால், அறிவில் தாழ்ந்தோர்க்கு ஒருவர்எழுநூறு நன்மைகள் செய்து பின்பு தவறுதலால் ஒன்றுதீமையாக நேர்ந்துவிட்டால் அவ்வெழுநூறுநன்மைகளும் தீமைகளாய்க் கருதப்பட்டு விடும்.

(க-து.) கயவர் அறிவு, நன்மைகளில்அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்தெண்ணிநிற்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jun 26, 2014 11:28 am

358 ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்; பன்றி
செயிர்வேழ மாகுத லின்று.

(பொ-ள்.) ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் - பொருளில்லாமை முதலியவற்றால் தளர்வுண்டான காலத்திலும் உயர்குடியிற் பிறந்த சான்றோர் செய்யும் நற்செயல்களைச் செல்வமுள்ள காலத்திலும் கயவர்கள் செய்யார் : கோட்டை வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி செயிர்வேழம் ஆகுதல் இன்று - ஒளிமிக்க கண்களையுடைய பெண்ணே! பன்றியின் கொம்பை வயிரம் பொருத்திப் பூண்கட்டினும் அது போர்ச்சினமுடைய யானையாதலில்லை.

(க-து.) நல்லன செய்தல் கயவரியல்பன்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jun 27, 2014 10:05 am

359 இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந் - தொன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

(பொ-ள்.) இன்று ஆதும் இந்நிலையேஆதும் இனிச்சிறிது நின்று ஆதும் என்றுநினைத்திருந்து ஒன்றி உரையின் மகிழ்ந்து - இன்றுசெல்வராவோம், இப்பொழுதே செல்வராவோம்,இனிச் சற்றுப் பொறுத்துச் செல்வராவோம் என்றுஎண்ணமிட்டுக்கொண்டிருந்து அதிற்படிந்துவாய்ப்பேச்சினாற் களித்து, தம் உள்ளம் வேறாகி-ஆனால் அதற்குரிய முயற்சியிலராய்த் தம் இயல்புவேறுபட்டு, மரை இலையின் மாய்ந்தார் பலர் -தாமரையிலையைப் போல், இருந்த நிலையிலேயேமாய்ந்தொழிந்த கயவர் பலராவர்.

(க-து.) அறிவின் மெலிந்தோர்வீண் எண்ணமும் வாய்ப்பேச்சும் உடையவராய் உரியசெயலில்லாதவராவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jul 01, 2014 10:53 am

360 நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்க லன்னா ருடைத்து.

(பொ-ள்.) நீருள் பிறந்து நிறம்பசியதாயினும் ஈரம் கிடையகத்து இல்லாகும் -நீரினுள் தோன்றி மேலே நிறம்பசுமையுடையதாயிருந்தாலும் நெட்டியின் உள்ளே ஈரம்இல்லையாம் ; நிறைப்பெருஞ் செல்வத்துநின்றக்கடைத்தும் அறைப்பெருங்கல் அன்னார்உடைத்து - அதுபோல, நிறைந்த பெரிய செல்வநிலையில் நின்றாலும், பாறையாகிய பெரியகல்லைப்போல் வன்மையான உள்ளம் படைத்த கயவரைஉடைத்து இவ்வுலகம்.

(க-து.) கயவர்க்கு ஈர உள்ளம்இல்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Tue Jul 01, 2014 3:17 pm

நாலடியார் பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jul 02, 2014 10:32 am

பொருட்பால்
37. பன்னெறி
[பலவகைப்பட்ட ஒழுகலாறுகளை உணர்த்துவது]

361 மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம்? -விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு.

(பொ-ள்.) மழை திளைக்கும்மாடமாய் மாண்பு அமைந்த காப்பாய் இழை விளங்குநின்று இமைப்பின் என்னாம் - மேகங்கள் தவழும்உயர்ந்த மாளிகையாய்ச் சிறப்பமைந்தபாதுகாப்புடையதாய்மணிகளால் இழைக்கப்பட்டவிளக்குகள் அங்கங்கும் இருந்து ஒளிவிடினும் என்னபயனாகும்?, விழைதக்க மாண்ட மனையாளையில்லாதான்இல்லகம் காண்டற்கு அரியதோர் காடு - மாட்சிமைவாய்ந்த விரும்பத்தக்க இல்லக்கிழத்தியையில்லாதவனது வீடு கண்கொண்டுபார்த்தற்கியலாததொரு கொடிய காடாகும்.

(க-து.) மனையாள் இல்லாத வீடுவீடன்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jul 03, 2014 11:21 am

362 வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.

(பொ-ள்.) வழுக்கு எனைத்தும்இல்லாத வாள்வாய்க்கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவராயின் - சோர்வு சிறிதுமில்லாத வாளின்காவலில் இருந்தும் மகளிர் ஒழுக்கந்தவறுதலைத்தாம் உறுவராயின், இழுக்கு எனைத்தும் செய்குறாப்பாணி சிறிதே அச் சின்மொழியார் கையுறாப் பாணிபெரிது - குளிர்ந்த மொழிகளைப் பேசும் அம்மகளிர் தமது வாழ்நாளிற் குற்றம் சிறிதுஞ்செய்யாத காலம் சிறிதே; மற்றுத் தம் கணவர்க்குவயப்பட்டொழுகாக் காலம் பெரிதென்க.

(க-து.) மகளிர்க்கு நிறை காக்குங்காப்பே தலை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Thu Jul 03, 2014 3:18 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jul 04, 2014 10:13 am

363 எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய்; - இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.

(பொ-ள்.) எறி என்றுஎதிர்நிற்பாள் கூற்றம் - தன் கணவற்குச் சினத்தைமூட்டி ‘அடி' என்று எதிரில் அடங்காது நிற்கும்மனைவி அவனுக்குக் கூற்றுவனாவாள்; சிறு காலை அட்டில்புகாதாள் அரும்பிணி - காலை நேரத்தில்அடுக்களையிற் சென்று உணவு சமைக்காதவள் தன்கணவனுக்குக் கொடிய நோயாவாள், அட்டதனை உண்டிஉதவாதாள் இல்வாழ் பேய் - சமைத்ததை அவனுக்குரியஉணவாக இடமால் உண்பவள் இல்லத்தில் வாழும்பேயாவாள், இ மூவர் கொண்டானைக் கொல்லும் படை -இம் மூவகையியல்புடைய மாதரும் தம்மை மணந்துகொண்டகணவன்மாரை உயிரோடு வருத்தும் கருவிகளாவர்.

(க-து.) இல்வாழ் பெண்டிர்அடக்கமும் சுறுசுறுப்பும் அன்புமுடையவராய்விளங்கவேண்டும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Jul 05, 2014 11:15 am

364 கடியெனக் கேட்டுங் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான், - பேர்த்துமோர்
இற்கொண் டினிதிரூஉம் ஏமுறுதல் என்பவே,
கற்கொண் டெறியுந் தவறு.

(பொ-ள்.) கடி எனக் கேட்டும்கடியான் - இனி மணவாழ்க்கையை முனிந்துவிடு என்றுதக்கோ ரறிவுரைகள் கேட்டும் முனியானாய், வெடிபடஆர்ப்பது கேட்டும் அது தெளியான் - தலைவெடிக்கும்படி உலகிற் சாப்பறைகள் முழங்குவதுகேட்டும் அத் துறவியல்பைத் தெளியானாய்;பேர்த்தும் ஓர் இல்கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல்கல்கொண்டு எறியும் தவறு என்ப - மீண்டும் இரண்டாமுறையாக ஓர் இல்லக்கிழத்தியைமணம்புரிந்துகொண்டு இன்புற்றிருக்கும்மயக்கத்தையடைதல் தன்னையே தான்கற்கொண்டெறிந்துகொள்ளும் தவறென்று சான்றோர்கூறுவர்.

(க-து.) இரண்டாம் முறையாகவும்மனைவாழ்க்கையிற் புகாமல் மக்கள் துறவுடையராய்உலகப் பெரும்பணிகள் செய்து விளங்குதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by செந்தில் Sat Jul 05, 2014 5:54 pm

அறிய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jul 06, 2014 10:43 am

365 தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்
கிடையே இனியார்கட் டங்கல், - கடையே
புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.

(பொ-ள்.) தலையே தவம் முயன்றுவாழ்தல் ஒருவர்க்கு - மக்கட்பிறவியில் வந்தஒருவர்க்கு, தம் வாழ்க்கையில்தவமுயற்சியுடையராய் வாழ்தல் தலையானதாகும்;இடையே இனியார்கண் தங்கல் - தமக்குஇனியராயிருக்கும் மனைவி மக்கள் முதலியஉறவினரிடத்து மனந்தங்கி அவாவோடொழுகுதல்இடைத்தரமான வாழ்வாகும்; கடையே புணராது என்றுஎண்ணிப் பொருள் நசையால் தம்மை உணரார்பின்சென்று நிலை - மேற் கூறிய இருவகை வாழ்வின்முயற்சியும் தமக்குக் கைகூடாதென்று நினைந்து வெறும்பொருள் விருப்பத்தால் தம் குடிப்பிறப்பு கல்விமுதலிய தகுதிகளையுங் கருதிப்பாராது நடத்துஞ்செல்வர்களின் பின் சென்று நிற்கும் அடிமைநிலைகடைப்பட்ட வாழ்வாகும்.

(க-து.) வாழ்க்கையிற் பற்றின்றியொழுகும் அறப் பணியாளர் தலையானமுயற்சியுடையோராவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Sun Jul 06, 2014 7:22 pm

நல்ல பயனுள்ள பகிர்வு அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jul 07, 2014 10:16 am

366 கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம்2 என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.

(பொ-ள்.) கல்லாக் கழிப்பர்தலையாயார் - மக்களில் உயர்ந்தோர்,நற்கருத்துக்களை ஆழ்ந்து அறிந்து தெளிவு பெறுதலைமேற்கொண்டு அம்முறையில் தம் வாழ்நாட்களைக்கழிப்பர்; நல்லவை துவ்வாக் கழிப்பர் இடைகள் -இடைத்தர மக்கள், இனிய பண்டங்களைஐம்புலன்களானும் நுகர்ந்தின்புறுதலை மேற்கொண்டுஅம் முறைமையில் வாழ்நாள் கழிப்பர்; கடைகள்இனிது உண்ணேம் ஆரப்பெறேம் யாம் என்னும்முனிவினால் கண்பாடு இலர் - கடைத்தர மக்கள்,‘யாம் பண்டங்களை இன்பமாய் நுகரப் பெற்றிலேம்,நிறையப் பெற்றிலேம்' என்னும் வெறுப்பினால்இரவிலும் உறக்கமில்லாதவராவர்.

(க-து.) உலகப் பொருள்களின்வாயிலாகத் தம்மைத் தெளிவுடையராக்கிக்கொள்ளும் மக்களே உயர்ந்தோராவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jul 08, 2014 11:27 am

367 செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய லூர!
மகனறிவு தந்தை யறிவு.

(பொ-ள்.) செந்நெல்லாலாயசெழுமுளை மற்றும் அச் செந்நெல்லேயாகி விளைதலால்- சாலி என்னும் உயர்ந்த செந்நெல்லின்விதையினால் உண்டான செழுவியமுளை பின்னும் அச்செந்நெற் பயிராகவே தோன்றி விளைதலால்,அந்நெல் வயல் நிறையக் காய்க்கும் வளவயல் ஊரமகனறிவு தந்தை யறிவு - அச் செந்நெல் வயல் நிறையவிளைந்து கிடக்கும் வளமான கழனிகளையுடைய ஊரனே!புதல்வன் அறிவு அவன் தந்தையின் அறிவு வகையைஒத்ததாகும்.

(க-து.) புதல்வனுடைய அறிவுஒழுக்கங்களை விரும்புந் தந்தை, தான் நல்லறிவுநல்லொழுக்கமுடையவனாய் விளங்குதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by செந்தில் Tue Jul 08, 2014 8:32 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jul 09, 2014 9:52 am

368 உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போற்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.

(பொ-ள்.) உடைப்பெருஞ் செல்வரும்சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும்கீழும் பெருகி தமது பொருளைப் பலர்க்கும் வழங்கும்அன்புரிமையுடைய பெரிய செல்வ வளம் வாய்ந்தஇல்லறத்தாரும் ஏனைத் துறவாசிரியரும் வறியராய்நிலைசுருக்கிச் சார்ப்பெண்டிராகிய வேசையரின்மக்களும் ஏனைக் கயவர்களும் செல்வமுடையவர்களாய்நிலைபெருகி, கடைக்கால் தலைக் கண்ணதாகிக்குடைக்கால்போல் கீழ்மேலாய் நிற்கும் உலகு -அவ்வாற்றால், குடையினது தண்டு கீழ்மேலாகநிற்பதுபோல் இவ்வுலகம் தலைகீழாய் நிற்கும்இயல்புடையதாயிருக்கின்றது.

(க-து.) உலகநிலை கொண்டு மக்களைமதித்தலாகாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jul 10, 2014 9:44 am

369 இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார், - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.

(பொ-ள்.) மணி வரன்றி வீழும்அருவி விறல் மலை நல் நாட - மணிகளை வாரிக்கொண்டுவீழ்கின்ற அருவிகளையுடைய வென்றிமிக்கமலைகளமைந்த சிறந்த நாடனே!. இனியார் தம்நெஞ்சத்து நோய் உரைப்ப அந்நோய் தணியாதஉள்ளம் உடையார் - தமக்கு இனியராயிருப்போர் தமதுஉள்ளத்திலுள்ள கவலையைத் தாமே ஆற்றிக்கொள்ளவியலாது எடுத்துச் சொல்ல அக் கவலைக்கு ஏதுவானகுறையைத் தீர்த்து அதனைத் தணிவிக்காதஇரக்கமற்ற வன்னெஞ்சுடையார், வாழ்வின் வரைபாய்தல் நன்று - இவ்வுலகில் உயிர் வாழ்தலினும்ஒரு மலையின்மேல் ஏறி வீழ்ந்து உயிர் மாய்த்துக்கொள்ளுதல் நலமாகும்.

(க-து.) பிறர்க்குஉதவியாயிராதவர் இருப்பதும் இறப்பதும் ஒன்றே.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Jul 12, 2014 10:36 am

370 புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.

(பொ-ள்.) புதுப் புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பு அற நாடின் வேறுஅல்ல - புதுநீர்ப் பெருக்கும் அழகிய தோடணிந்தவேசையரின் றொடர்பும் விரை தலின்றிஆராய்ந்தால் அவை தம் தன்மையில் வேறு வேறு அல்ல;புதுப் புனலும் மாரி அறவே அறும் அவர் அன்பும் வாரிஅறவே அறும்-புது வெள்ளமும் மழை நிற்க நின்றுவிடும்;அவ் விலைமகளிர் அன்பும் பொருள் வருவாய் நீங்கநீங்கிவிடும்.

(க-து.) பொருட் பெண்டிர்,பொருளைமட்டுங் கொண்டு பொருள் கொடுப்பாரைக்கொள்ளாதவராகலின், அவர் தொடர்புகொள்ளத்தக்கதன்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by செந்தில் Sat Jul 12, 2014 3:29 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Sat Jul 12, 2014 9:46 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jul 13, 2014 11:17 am

பொருட்பால்
38. பொதுமகளிர்
[பொருள் கொடுப்பார் பலர்க்கும் உரிய பொதுப் பொருளாயிருக்கும் வரைவில் மகளிரின் இயல்பு.]


371 விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.

(பொ-ள்.) விளக்கொளியும்வேசையர் நட்பும் இரண்டும் துளக்குஅற நாடின் வேறுஅல்ல - விளக்கின் ஒளியும் விலைமகளிர் உறவுமாகியஇரண்டும் கலக்கமின்றி ஆராய்ந்தால் அவை தம்தன்மையில் வேறு அல்ல; விளக்கொளியும் நெய்அற்றகண்ணே அறும் அவர் அன்பும் கை அற்றகண்ணேஅறும் - விளக்கின் ஒளியும் நெய்வற்றியபோதேஅவியும், அம் மகளிரின் அன்பும் பொருள்வற்றியபோது இல்லையாய்விடும்.

(க-து.) பொதுமகளிர் அன்புவிலைக்கே அல்லது விலை கொடுப்பார்க்கன்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jul 14, 2014 11:27 am

372 அங்கோட் டகலல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின
மேற்காணம் இன்மையான் மேவா தொழிதாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.

(பொ-ள்.) அம் கோடு அகல் அல்குல்ஆய் இழையாள் நம்மோடு செங்கோடுபாய்துமேஎன்றாள் மன் - அழகிய பக்கங்கள் உயர்ந்த அகன்றஅல்குலையுடைய ஆராய்ந்தெடுத்த இழைகளையணிந்தவிலைமகள் நாம் பொருளுடையமாயிருந்த காலத்துநம்மோடு செங்குத்தான மலையுச்சியில் ஏறிக்கீழ்விழுந்து ஒன்றாய் உயிர் துறப்போம் என்றுஅன்புரை கூறினாள்; காணம் இன்மையான்செங்கோட்டின்மேல் மேவா தொழிந்தாளே கால்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து - இப்போது நமதுகையிற் பொருளில்லாமையால் தனது காலில்வாதநோயென்று காட்டிப் போலியாக அழுது அம்மலையுச்சியின்மேல் வராமற் போனாளே!

(க-து.) பொதுமகளிரின் அன்புரைபோலியென்றொழிக.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jul 15, 2014 11:40 am

373 அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மா லாயினும் ஆகமன், - தங்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
விடுப்பர்தங் கையாற் றொழுது.

(பொ-ள்.) அங்கண் விசும்பின்அமரர் தொழப்படும் செங்கண்மால் ஆயினும் ஆக -அழகிய இடமகன்ற விண்ணுலகத்தின் தேவர்களால்வணங்கப்படுகின்ற சிவந்த தாமரைக் கண்களையுடையதிருமாலை ஒப்பவனாயினுமாக; தம் கைக்கொடுப்பதுஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார் விடுப்பர்தம் கையால் தொழுது - கொடுக்கத்தக்க பொருள் தமதுகையில் ஒன்றுமில்லாத ஆடவரை கொய்தற்குரியஇளந்தளிர் போன்ற மேனியையுடைய பொதுமகளிர் தம்கைகளால் வணங்கி விடைகொடுத்தனுப்பிவிடுவர்.

(க-து.) பொதுமகளிர்பொருளொன்றல்லது வேறு தகுதி கருதார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 23 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 25 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum