தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3

View previous topic View next topic Go down

பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3 Empty பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3

Post by ஸ்ரீராம் Thu May 02, 2013 9:49 am


உலக வரலாற்றை புரட்டிப் பார்த்தால், பல சாம்ராஜ்யங்கள் எதிரிகளைக் காட்டிலும், சுற்றியிருப்பவர்களின் சூழ்ச்சியால் அழிந்திருப்பதைக் காண முடியும். ஆட்சியைக் கவிழ்க்க, எந்த எல்லைக்கும் செல்ல சூழ்ச்சியாளர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம், பவேரியா சாம்ராஜ்யம். கலை உணர்வு மிக்க, ஏழைகளின் நண்பனாக இருந்த ஒரு மன்னனுக்கு பைத்தியம் என்ற பட்டத்தை சுமத்தி, அவரது உயிரையே பறித்த சூழ்ச்சியைப் பற்றித் தான் இங்கு காணப் போகிறோம்.

ஜெர்மனியில் உள்ள ஒரு நிலப் பகுதியான பவேரியா நாட்டின் மன்னர் மேக்ஸிமிலியன் -மேரி தம்பதிக்கு 1845ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூத்த மகனாகப் பிறந்தார் லூத்விக் II. தங்களுக்கு இளவரசன் பிறந்து விட்டான் என்ற பூரிப்புடன் கோலாகலமாகக் கொண்டாடினர் அரச குடும்பத்தினர். தங்கள் ஆசை மகனுக்கு ஓட்டோ எனப் பெயரிட்டனர். ஆனால் மன்னரின் தகப்பனார் லூத்விக் I, "இந்தக் குழந்தைக்கு என் பெயரைத் தான் வைக்க வேண்டும். இல்லையெனில் இறந்த பின் என் ஆத்மா சாந்தையடையாது" என உறுதியாகக் கூறிவிட்டார்.

தாத்தாவின் பெயரைச் சுமந்த லூத்விக் II, இளவயதில் துறுதுறுவென இருந்தார். சில ஆண்டுகள் கழித்து மன்னருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. ஓட்டோ எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை மீது அனைவரும் அதீத கவனம் செலுத்தத் தொடங்கினர். பெற்றோர் தன்னை கண்டுகொள்ளாததால், அரண்மனையின் கடைநிலை ஊழியர்களின் குழந்தைகளுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் லூத்விக். சில ஆண்டுகள் கழித்து அண்ணன், தம்பி இருவருக்கும் கடுமையான போர்ப் பயிற்சி, ராஜதந்திர பயிற்சிகள் அளிக்க மன்னர் உத்தரவிட்டார். ஓவியங்கள், கட்டிடக் கலையில் அதிக நாட்டம் கொண்டிருந்த லூத்விக், வேறு வழியின்றி பயிற்சிகளை மேற்கொண்டார். 18 வயது நிரம்பியபோது, தன் தந்தை இறந்ததால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் லூத்விக்.

காண்பதற்கு கம்பீரமாகவும், அழகாகவும் இருந்த லூத்விக், மன்னர் பதவிக்கு பொருத்தமானவர் என்று பவேரியா முழுவதும் மக்கள் பேசிக் கொண்டனர். பதவியேற்ற உடனே, சிறுவயதில் தான் விளையாடி மகிழ்ந்த ஃபுஸ்ஸன் பகுதியிலுள்ள தங்கள் அரண்மணையில் புதிய ஓவியங்கள் தீட்டி, கண்கவர் வண்ணங்களில் அழகுபடுத்தினார் லூத்விக். அடுத்து, மியூனிச்சில் உள்ள தனது அரண்மனையை, புராணக் கதைகளில் வரும் அரண்மனனகள் போல மாற்றியமைத்து, அங்கு ஆடல், பாடல் என அனைத்து எப்போதும் கலை நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடுகள் செய்தார்.

1864ம் ஆண்டு தன்னுடன் அறிமுகமான இசைக் கலைஞர் ரிச்சர்ட் வாக்னர் மூலமாக முதல் சர்ச்சையில் சிக்கினார் லூத்விக். தனது இசைத் திறமையால் மன்னரின் மனம் கவர்ந்த வாக்னர், மியூனிச் நகரில் தகாத செயல்களில் ஈடுபட்டார். இந்த விஷயம் லூத்விக் மன்னரின் காதுகளில் மிகத் தாமதமாகவே எட்டியது. மன்னரின் பெயரைச் சொல்லி பல பேரை வாக்னர் துன்புறுத்தியிருப்பது தெரிய வந்தது. இப்படி ஒருவரை மன்னர் நெருக்கமாக வைத்திருக்கிறாரே, என பொதுமக்கள் குறைபட்டு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். ஒருவழியாக வாக்னரை நாட்டை விட்டு வெளியேற்றி, இந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் லூத்விக்.

1867ம் ஆண்டு லூத்விக் சந்தித்த இரண்டு சிக்கல்கள் தான், பின்னாளில் அவர் வாழ்க்கையையே குப்புறத் தள்ளி மண்ணைக் கவ்வச் செய்தது. 1. லூத்விக் திருமணம் செய்ய மறுத்து, அடுத்த வாரிசை உருவாக்காமல் இருப்பது 2. ஜெர்மனியின் மற்றொரு நிலப் பகுதியான புருஸியா நாட்டுடன் நல்லுறவு கொள்ளாமல் இருந்தது.

முதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது உறவினரான சோஃபி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதன்படி இருவருக்கும் நிச்சயம் நடக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பல முறை தேதி தள்ளி வைக்கப்பட்டது. இறுதியில் 1867ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விழாவுக்கு சில நாட்களே இருந்த நிலையில், சோஃபியுடனான தனது நிச்சயத்தை நிரந்தரமாக நிறுத்துவதாக லூத்விக் அறிவித்தார். தான் ஆழமான மன உளைச்சலில் இருப்பதால் திருமணத்தை நிறுத்துவதாக, சோஃபியிடம் லூத்விக் கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இசைக் கலைஞர் வாக்னரை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு மக்கள் வற்புறுத்தியதால், மன்னர் கவலை கொண்டிருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகின. இதை பொருட்படுத்தாத லூத்விக், இனி தன் வாழ்வில் திருமணமே இல்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தப் பிரச்சனை சற்று ஓய்ந்த நிலையில், புருஸியா சிக்கல் பூதாகரமாக எழுந்தது. ஆஸ்திரிவாவுடன் புருஸியா ஏழு வாரங்கள் கடும் போர் புரிந்தது. போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. லூத்விக் ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால், புருஸியாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இது தான் சூழ்ச்சியின் வலைப்பின்னலின் ஆரம்பம்.

நீண்ட பேச்சுவார்த்தையின் முடிவில், புருஸியா ஒரு நிபந்தனையை முன்வைத்தது. லூத்விக்கை நிலைகுலையச் செய்த அந்த நிபந்தனை என்ன தெரியுமா...ஜெர்மனியின் அனைத்து நிலப் பகுதிகளையும் ஒன்றிணைத்து, புருஸியா மன்னர் வில்ஹெல்ம் I ஆட்சியமைக்க வேண்டும், பவேரியா உள்பட அனைத்து நிலப் பகுதிகளின் பேரரசு அங்கீகாரம் குறைக்கப்பட்டு, புருஸியா மன்னரின் கட்டுப்பாட்டுக்குள் செயல்பட வெண்டும். ஏனைய நிலப் பகுதிகளின் மன்னர்கள் பல்வேறு நிர்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு இந்த முடிவுக்கு ஒப்புக் கொண்டனர். ஆனால் லூத்விக் தனது அதிகாரத்தையும், பேரரசர் என்ற கவுரவத்தையும் விட்டுத் தர தயாராக இல்லை. அதன் பின் நடந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் அவர் தலையிடவில்லை.

அமைச்சரவையில் இருப்போர் தனது நிலையை அதரிப்பார்கள் என்று நம்பிய லூத்விக்கிற்கு, ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. லூத்விக்கின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முக்கியமானவர்களுக்கு, புருஸியாவின் தலைமை அமைச்சர் மூலம் பொன், பொருள் அனுப்பப்பட்டது. இது போதாதா, சூழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு? லூத்விக்கின் கருத்துக்களை ஒட்டுமொத்த அமைச்சரவையும் நிராகரித்து, ஒன்றிணைந்த ஜெர்மனியை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர்.

சூழ்ச்சி நிறைந்த அமைச்சரவையில் உள்ளோர் மற்றும் நண்பர்களின் தூண்டுதலால், 1870ம் ஆண்டு பவேரியா நிலப் பகுதி ஜெர்மனியின் ஒன்றிணைந்த பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன் பின் தன் அதிகாரங்கள் குறைக்கப்படுவதைக் கண்டு மனம் வெதும்பிய லூத்விக், ஒன்றிணைப்பு விழாவைப் புறக்கணித்தார். அத்துடன் முக்கியமான அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினார்.

ஜெர்மனியின் மற்ற பகுதிகளைப் போல, பவேரியாவிலும் பல திட்டங்கள் நிறைவேற்றவும், வளங்களை பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இந்த சூழலைப் பயன்படுத்தி ஊழலில் திளைக்கலாம் என்று கனவு கண்ட அமைச்சரவையினருக்கு, லூத்விக் எரிச்சலூட்டினார். முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடாமல், கேள்விகள் கேட்டதால் அதிகாரிகளும் அமைச்சர்களும் அவர் மீது வஞ்சம் கொண்டனர்.

இதைப் புரிந்து கொண்ட லூத்விக், மனம் வெறுத்து மீண்டும் ஓவியம் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஆர்வம் செலுத்தினார். மியூனிச் உள்பட, பவேரியாவின் பல்வேறு பகுதிகளில் மாயாஜாலக் கதைகளில் வரும் தேவலோகத்தைப் போன்ற கோட்டைகளைக் கட்டினார். அதில் அவர் நேரடிப் பார்வையில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. இதற்கெல்லாம் அரசு பணத்தை எடுக்காமல், தனது சொந்தப் பணத்தை செலவிட்டார். ஒரு கட்டத்தில் தனது கையிருப்பு தீர்ந்ததும், மற்ற நாடுகளிடமிருந்து கடன் வாங்கி, அரண்மனைகளைக் கட்டினார். அதில் அழகிய கண்ணாடி மற்றும் உலோக வேலைப்பாடுகளைச் செய்தார். அத்துடன், பவேரியாவின் கிராமப்புறங்களுக்கு பயணம் மேற்கொண்டு ஏழை மக்களிடம் நெருங்கிப் பழகினார்.

தங்களுக்குப் பயனில்லாத மன்னருக்கு, மக்களிடம் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்டு எரிச்சலடைந்த அமைச்சர்கள், மன்னருக்கு எதிராக பல்வேறு புரளிகளை பரவ விட்டனர். அரண்மனைகளையும், ஆடம்பர கோட்டைகளையும் கட்டி, அரசு கஜானாவை காலியாக்குவதாக புகார் எழுப்பினர். அத்துடன் நிர்வாகத்தை கவனிக்காமல் கேளிக்கைகளில் மன்னர் திளைப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதை நிரூபிக்கும் விதமாக, திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களிடம் அவப்பெயரை சம்பாதிக்கும் படி செய்தனர்.

1885ம் ஆண்டு பல அரண்மனைகள், கலை அரங்குகளை நிர்மாணித்த லூத்விக், பவேரியாவின் அமைச்சரவை மேற்கொள்ளும் இந்த சூழ்ச்சியை உணர்ந்து கொண்டார். உடனே, அமைச்சரவையில் உள்ளவர்களை நீக்கி விட்டு, புதியவர்களை அமைச்சர்களாக நியமிக்க முடிவு செய்தார். இதை அறிந்த அமைச்சர்கள், லூத்விக்கை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு தங்களுக்கு கீழ்ப்படியும் பொம்மை மன்னர் ஒருவரை அமர்த்த ரகசிய முடிவெடுத்தனர். லூத்விக்கின் மாமா லூயிட்போல்ட் இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்ததால், அவரையே மன்னராக நியமிக்க அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

தங்கள் திட்டத்தை 1886ம் ஆண்டு ஜனவரி மாதம் செயல்படுத்தத் தொடங்கினர். முதல்கட்டமாக, மன்னரை ஊதாரி என குற்றம் சாட்டிய அமைச்சர்கள், அடுத்து மன்னருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவலை பரப்பினர். தொடக்கம் முதலே லூத்விக் பைத்தியமாக இருந்ததால் தான் இசைக் கலைஞருக்கு ஆதரவளித்ததாகவும், மக்களின் பணத்தை கோட்டைகள் கட்டி வீணாக்கியதாகவும் கூறினர். அதே ஆண்டு மார்ச் மாதம் யாரும் எதிர்பாராத விதமாக, மியூனிச்சில் உள்ள அரண்மனையில் லூத்விக் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவர் வெளியேறாதவாறு பலத்த காவல் போடப்பட்டது. அவசர, அவசரமாக மருத்துவ அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டு, மன்னருக்கு பைத்தியம் என கூறப்பட்டது.

அரசு தலைமை மருத்துவர் பெர்னார்ட் வோன் குட்டென், தனது இறுதி அறிக்கையில் இதை உறுதி செய்தார். இதையடுத்து, பவேரியாவின் தலைமை விசாரணை மன்றம் ஜூன் மாதம் லூத்விக் பைத்தியம் என்பதை ஏற்றுக் கொண்டது. ஆனால் குட்டென் நேரடியாக லூத்விக்கை பரிசோதிக்காமல் அறிக்கை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இக்குற்றச்சாட்டு அப்படியே மறைந்து போனது.

1886ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி லூத்விக்கை மன்னர் பதவியிலிருந்து அகற்றுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவரை கைது செய்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. உடனே லூத்விக் தங்கியிருந்த நியூஸ்வான்ஸ்டின் அரண்மனைக்குள் சென்ற அரசு உயரதிகாரிகளுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இறுதியில் லூத்விக் கைது செய்யப்பட்டார். தன்னிலை விளக்கம் கொடுக்க அவரை அனுமதிக்காததால், தனது ஆதரவாளர்கள் மூலம் பாம்பர்க் என்ற செய்தித்தாளில் தனது விளக்கத்தை அளித்தார்.

அதில் "பவேரிய மக்களே, என் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. என்னை யாரும் பரிசோதிக்கவில்லை. நம் தாய் நிலம் சுரண்டப்படுவதைத் தடுக்க ஒன்றுசேருங்கள்" என தெரிவித்திருந்தார். ஆனால் பத்திரிகை அதிகாலையில் விநியோகிக்கப்படும் முன்னரே, அனைத்து பதிப்புகளையும் அரசு கைப்பற்றியது. ஜூன் 12ம் தேதி லூத்விக்கை தெற்கு மியூனிச் பகுதியில் ஸ்டான்பெர்க் ஏரியின் கரையில் உள்ள பெர்க் கோட்டையில் காவலில் வைப்பதற்காக கொண்டு சென்றனர். அங்கு நின்றிருந்த மருத்துவர் குட்டைப் பார்த்த லூத்விக், " எதை வைத்து என்னை பைத்தியம் என்று கூறினீர்கள். இதற்கு முன் என்னை பார்த்திருக்கிறீர்களா...உங்கள் தொழிலுக்கு துரோகம் செய்து விட்டீர்களே?" என வேதனையுடன் கேட்டார். இதற்கு குட்டெனால் பதிலளிக்க முடியவில்லை.

அடுத்த நாள், மாலை 6 மணிக்கு, குற்ற உணர்வு காரணமாக லூத்விக்கை சந்திக்கச் சென்றார் குட்டென். அவரிடம், "ஏரிக்கரையில் சற்று நடைபயிற்சி செல்லலாம், வருகிறீர்களா," என்று அழைத்தார் லூத்விக். தங்களை பின்தொடர வேண்டாம் என்றும் காவலாளிகளை கேட்டுக் கொண்டார். ஏரிக்கரைக்குச் சென்ற இருவரும் அதன்பிறகு திரும்பவே இல்லை. அன்றிரவு 11 மணிக்கு, இருவரது உடல்களும் ஏரியில் மிதந்து கொண்டிருந்தன.

இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக அரசு அந்த விவகாரத்தை மூடிவிட்டது. அவசர, அவசரமாக லூத்விக்கின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவுகளும் வெளியிடப்படவில்லை. லூத்விக்கும், குட்டெனும் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், லூத்விக் நன்றாக நீந்தக் கூடியவர் என்பதாலும், ஏரியில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே இருந்தது என்பதாலும், சந்தேகம் வலுத்தது. மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், எல்லாம் முடிந்து விட்டது.

சில நாட்கள் கழித்து, ஏரிக்கரையில் நடந்தது என்ன என்பதை, நேரில் கண்ட ஒரு படகோட்டி வெளிச்சம் போட்டுக் காட்டினார். லூத்விக் நடந்து வரும் போது, திடீரென தப்பி விடலாம் என குட்டெனிடம் கூறி விட்டு ஒரு படகில் ஏறும் போது இருவரும் சுட்டுக் கொள்ளப்பட்டனர் என்று தெரிவித்தார். ஆனால் இந்தத் தகவல்களை மட்டுமல்ல, படகோட்டியையும் அமைச்சர்கள் மூடி மறைத்து விட்டனர். அதன் பின் 'ஒப்புக்கு' சில நாட்கள் லூத்விக்கின் தம்பி ஓட்டோ மன்னராக நியமிக்கப்பட்டார். அவரும் மனநிலை சரியில்லாதவர் என அகற்றி விட்டு, தங்களுக்கு ஆதரவான லூயிட்போல்ட்டை 'பொம்மை' மன்னராக நியமித்துக் கொண்டனர்.

லூத்விக்கின் வாழ்வும் மரணமும் மர்ம முடிச்சுக்களால் சூழப்பட்டிருந்தாலும், அன்று அனைவராலும் கேலி பேசப்பட்ட அவரது கலைநயமிக்க அரண்மனைகளும், கோட்டைகளும் தான் இன்று ஜெர்மனியின் பெருமையை உலகெங்கிலும் பறைசாற்றுகிறது.

நன்றி அம்புலிமாமா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3 Empty Re: பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3

Post by மகா பிரபு Thu May 02, 2013 1:39 pm

படிக்க விறுவிறுப்பாக இருக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3 Empty Re: பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 5:19 pm

மண்ணுக்கும் பொன்னுக்கும் பெண்ணுக்கும் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போவுதோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3 Empty Re: பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum