தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்ததில் பிடித்தது...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

படித்ததில் பிடித்தது... Empty படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Sep 20, 2013 12:17 pm

தாய்!
ஒருகவளம் சோறும், ஒருகுவளை நீரும்
தருபவரெல் லாமெனக்குத் தாய்!
அடக்கமில் லாமல் அதிர நடந்தால்
தடுக்கிடும் கல்லுமென் தாய்!
முலைப்பால் கொடுத்தென் முகத்தையும் சேலைத்
தலைப்பால் துடைப்பவள் தாய்
அம்மாநீ எந்தன் அருகிருக்கும் தைரியத்தில்
சும்மா இருத்தல் சுகம்!
பன்னுமாக மத்தாள் பசித்தவர் ஓட்டிலிடும்
அன்னவாக னத்தாள் அவள்.
ஓயா தியங்கி இயக்கத் துறங்குவாள்
மாயா மனோன்மணி தாய்!
எண்ணமும், எண்ணும் மனமும்ஆங் கெண்ணத்தால்
எண்ணப் படுவதும் தாய்.
மூலத் துறங்கி முனைப்பிற் கிளர்ந்தெழுவாள்
கோலக் குமிண்சிரிப் பாள்.
ஸ்ரீபுரத்தாள், மாமதுரைக் கோபுரத்தாள், பண்ணிசைக்கும்
நூபுரத்தாள் நெஞ்சே நினை.
அன்பே சிவம் அதன் ஆன்மா அவள் எனவே
அன்பே அவளேன் றறி!

சு.ரவி
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Sep 20, 2013 12:22 pm

மரணம்
-----------
மரணம் அழகாக தெரிகிறது
மலைகள் என்னை கட்டியணைத்து
முத்தமிட அழைக்கிறது
சுத்தமான காற்றை தந்து
என் உயிர்க் காற்றை கேட்கிறது,
மனது முதல்முறை சாதல் வேண்டுகிறது
இயற்கையோடு இணைத்துக்கொள்ள துடிக்கிறது,
நடக்கிறேன் மரணத்தின் பாதையில்
அழகான தேவதைகள் ஊர்வலத்தோடு,
பரவசம் மரணத்தோடு தொடர்புடையது
என்பதை இப்போது அறிகிறேன், 
தவிர்க முடியாத பந்தங்களிலிருந்து
மரணம் ஒரு விடுதலையாகவே தெரிகிறது!!!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Sep 20, 2013 12:23 pm

கொதிநிலையில்...
கொதிநிலையில்
குளிர்விக்கத் தேவை
ஒரு சொட்டுக் கண்ணீர்
அல்லது 
ஒரு முன்னுச்சி முத்தமேனும்...
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Fri Sep 20, 2013 12:24 pm

குடி குடியைக்கெடுக்கும்.

குடும்பம் நாசமாய்ப் போனாலும், 
குடித்துக் குடித்து 
நாட்டை வாழ வைக்கும் 
நல்ல குடிமகன்களே...!! 

சாகப் போவது தெரிந்தும் 
சாயந்திர நேரம் வந்ததும் 
சரக்கடிக்க துடிக்கும் 
சரித்திர நாயகர்களே..!! 

கை உதறினால் போதும், 
கையாலாகாமல் 
கை கட்டி வாய்மூடி 
கள்ளுக்கடை வரிசையில் நிற்கும் 
கலாச்சார சிங்கங்களே..!! 

மனைவியின் தாலி விற்று, 
மகளின் எதிர்காலம் அழித்து, 
மனித மிருகமாய் மாறும் 
மிகச் சிறந்த மனிதர்களே..!! 

மது குவளையில் மயங்கி 
மதிகெட்டு போன பின் 
மானம் தொலைத்து 
மரியாதை தொலைத்து வாழும் 
மாண்புமிகு பெரியோர்களே...!! 

சுய சிந்தனை இல்லாமல் 
குடித்துவிட்டு, 
சுய நினைவின்றி 
ஆடை களைந்து 
தெருவில் கூத்தடிக்கும் 
நிகழ்காலக் கோமாளிகளே..!! 

ஒரு பாட்டில் சாராயத்திற்கு 
ஓட்டுப் போட்டு 
ஆண்டுகள் பல 
அடிமையாய் கிடக்கும் 
அறிவு ஜீவிகளே...!! 

எங்கேயோ போய்கொண்டிருக்கும் 
எம தர்மனை 
குடித்துக் குடித்தே 
வம்பிற்கு இழுக்கும் 
விளங்காமல் போனவர்களே..!! 

முட்டாள் மட்டுமே 
முழுமுயற்சி செய்து 
தன்னைத் தானே 
தரம் தாழ்த்தி கொள்கிறான்..!! 
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு 
குடித்துக் கொண்டே இருந்தால் 
நின்று விடும் உன் மூச்சு...!!!


முக நூலுக்கு நன்றி!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Sat Sep 21, 2013 12:06 pm

மலிவாய்ப் போனது ....

வானம் இன்னும் 
கறுத்துத்தான் விரிகிறது...
இருளெனத் துயரும்
பாதையெலாம் நீள்கிறது...
கற்பனைக் மட்டும் தான்
மலிந்துபோய்க் கிடக்கின்றன..!

நிஜங்களுக்கு சிறைவாசம்...!
சரசரப்பும் ஆர்ப்பரிப்பும்
பொய்மைகளும் எஞ்சி,
புழுதியென வாழ்வையெற்றி
படுகுழியில் தள்ளும்...

பகற்கனவில் விழிதிறந்தும்
விழிமூடி வாழுகின்ற 
எம் மயக்கம் அறுப்பதுயார்...?
மாற்றான் வருவானோ
நம் மடமை துடைப்பதற்கு??

தேற்றும் மொழிதேடி
தெருவெல்லாம் திரிந்தாலும்
தூய உள்ளத்தோடு
துணைவருவார் யாருமில்லை..
இப்படி இருக்கையில்
எப்படி நம் இடர் தவிர்ப்பார் பிறர்..?

அன்பின் உயிர்ப்பை,
அழகான புன்னகையை 
எங்களின் தேசம் 
மறந்து தொலைந்துதான் போனது..
அட்டகாசங்களும் பகட்டாரங்களும்
பட்டாடை கட்டி 
பவனி வருகின்றன...

நிஜங்கள் இற்றுப்போன 
எங்கள் வாழ்வியலில்
இன்னும் இன்னும்
ஏமாற்றங்கள் தான்
குடியேறுகின்றன...

வானம் இன்னும் 
கறுத்துத்தான் விரிகிறது...
இருளெனத் துயரும்
பாதையெலாம் நீள்கிறது...
கற்பனைக் மட்டும் தான்
மலிந்துபோய்க் கிடக்கின்றன..!

-கவின்மகள்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by முரளிராஜா Sat Sep 21, 2013 1:07 pm

ரசிக்கபடவேண்டிய கவிதைகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Sat Sep 21, 2013 3:32 pm

நாகரீக கோமாளிகள் :
--------------- --------------
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.


காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .


ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.


அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?


பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.


முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
கோமான் போல திரிவார்..


நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.


பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..


நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்


அன்பெனும் அம்மா
Mummy ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.


நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.
அரசியலில் தான் விடுதலை பெற்றோம்


நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.


பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள்.


-வை.நடராஜன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Sat Sep 21, 2013 3:34 pm

மலிவாய்ப் போனது ....


வானம் இன்னும் 
கறுத்துத்தான் விரிகிறது...
இருளெனத் துயரும்
பாதையெலாம் நீள்கிறது...
கற்பனைக் மட்டும் தான்
மலிந்துபோய்க் கிடக்கின்றன..!


நிஜங்களுக்கு சிறைவாசம்...!
சரசரப்பும் ஆர்ப்பரிப்பும்
பொய்மைகளும் எஞ்சி,
புழுதியென வாழ்வையெற்றி
படுகுழியில் தள்ளும்...


பகற்கனவில் விழிதிறந்தும்
விழிமூடி வாழுகின்ற 
எம் மயக்கம் அறுப்பதுயார்...?
மாற்றான் வருவானோ
நம் மடமை துடைப்பதற்கு??


தேற்றும் மொழிதேடி
தெருவெல்லாம் திரிந்தாலும்
தூய உள்ளத்தோடு
துணைவருவார் யாருமில்லை..
இப்படி இருக்கையில்
எப்படி நம் இடர் தவிர்ப்பார் பிறர்..?


அன்பின் உயிர்ப்பை,
அழகான புன்னகையை 
எங்களின் தேசம் 
மறந்து தொலைந்துதான் போனது..
அட்டகாசங்களும் பகட்டாரங்களும்
பட்டாடை கட்டி 
பவனி வருகின்றன...


நிஜங்கள் இற்றுப்போன 
எங்கள் வாழ்வியலில்
இன்னும் இன்னும்
ஏமாற்றங்கள் தான்
குடியேறுகின்றன...


வானம் இன்னும் 
கறுத்துத்தான் விரிகிறது...
இருளெனத் துயரும்
பாதையெலாம் நீள்கிறது...
கற்பனைக் மட்டும் தான்
மலிந்துபோய்க் கிடக்கின்றன..!


-கவின்மகள்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by செந்தில் Sat Sep 21, 2013 7:33 pm


பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள்.
கைதட்டல் சூப்பர் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Sun Sep 22, 2013 10:42 am

ஐயா கொஞ்சம்
மெதுவாக ஓட்டுங்கள்!


மாடுகள் கொஞசம்
மெதுவாக நடக்கட்டும்!
மீண்டும் ஒருமுறை
உங்கள் உழவு
இங்கு எடுபடாது!
நாங்கள் நெருங்கி விட்டோம்
உங்களை விரட்டியடி விட
முப்போகம் விளைவித்து
எப்போகம் அடைந்தீர்கள்!
தென்னை நடாதீர்கள்
விண்ணைத் தொடும்
கட்டிடங்களை நாங்கள்
விதைக்கப் போகிறோம்!
விவசாயம் என்று
வீண் கூப்பாடு போடாதீர்
வீதி சமைக்க இதை
விற்றுவிட்டு ஓடுங்கள்!
அரிசி பருப்பெல்லாம்
அடிக்கடி பயன்படுத்தாதீர்
உணவு மாத்திரை வடிவில்
வரும்காலம் தூரமில்லை
நூறாண்டுக்கு உணவு சேமிக்கும்
வசதியெல்லாம்
கணிணிக்குள்
கொண்டு வரும் காலமாகலாம்..!
இதையெல்லாம் பார்க்க
மனிதன் இருப்பானா
எனும் கேள்விக்குறி கூட
காணாமல் போயிருக்கும்!


-
முத்துப்பேட்டை மாறன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by mohaideen Sun Sep 22, 2013 5:13 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Sun Sep 22, 2013 7:36 pm

நன்றி! நன்றி! நன்றி! புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by பித்தன் Mon Sep 23, 2013 11:18 am

sawmya wrote:கொதிநிலையில்...
கொதிநிலையில்
குளிர்விக்கத் தேவை
ஒரு சொட்டுக் கண்ணீர்
அல்லது 
ஒரு முன்னுச்சி முத்தமேனும்...
சற்று உயிர்ப்புடன் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Sep 23, 2013 4:23 pm

நன்றி! படித்ததில் பிடித்தது... Icon_smile 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by ஸ்ரீராம் Tue Sep 24, 2013 10:07 am

அனைத்தும் அருமை சகோதரி

உணவு மாத்திரை வடிவில்
வரும்காலம் தூரமில்லை
உண்மை உண்மை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Tue Sep 24, 2013 11:32 am

ம் ம் ம்... நன்றி! படித்ததில் பிடித்தது... Icon_smile 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Sep 26, 2013 4:56 pm

யாராருக்கோ
கவிதை எழுதிய என்
கைகள் 
உனக்காக எனும் போது ...
சுருங்கிக் கொண்டது.

கேட்டேன் கைகளை ...
கேள்விக் கணைகளால்.

என் கணை செல்லும் முன்னே
மறு கணை வந்தது.

முதலில் என் கேள்விக்கு பதில் ...
கேள்!

கவிஞனுக்கு தற்பெருமை அழகா?
அசிங்கம்.

நீ கவிஞனா?
காலம் பதில் சொல்லும்.

யாருக்காக இந்த கவிதை?
நண்பனுக்காக.

பெயர்?
அருணன்.

அர்த்தம்?
சூரியன்.

எதற்காக இக்கவிதை?
பார்க்காத நான்
பார்ப்பதே அவன் எழுத்துக்கள் மட்டும் தான்
அந்த எழுத்துக்கள் பிறப்பதற்காக
என் எழுத்துக்கள்.

நண்பனென்றால்?
உயிர்.

உனக்கு?
எனக்கும் அப்படித்தான்.

செய்வாயா உன் நண்பன் சொல்வதை?
வீணான கேள்வி.

காரணம்?
உயிர் சொல்வதைத் தானே உடல் செய்யும்.

பிடித்தது?
யாரிடம்.

அவனிடம்?
மரியாதை ...

மன்னிக்கவும். அவரிடம்?
எல்லாம்.

பிடிக்காதது?
எல்லாம்.

உயிரைத் தருவாயா உன் நண்பனுக்காக?
உயிரே அவன் என்கிறேன்.

நட்பைப் பற்றி ஒரு கவிதை ?
அன்பைத் தருவாள் அன்னை
அனுபவம் தருவார் தந்தை
அறிவைத் தருவார் ஆசான்
உள்ளம் தருவாள் மனைவி
புகழைத் தருவான் பிள்ளை
இவை அனைத்தும் தருவான்
"நண்பன்"

நண்பனுக்காக?
வாழ்வேன்.

நண்பனில்லாமல்?
வீழ்வேன்.

உலகில் உயர்ந்தது உங்கள் நட்பா?
உலகில் தாழ்ந்தது  உன் கேள்வி.            


உன் கேள்வி?


ஏன் கவிதை எழுதாமல் சுருங்கினாய்?
மடையா!
உன் மனதில் உன் நண்பன்
அவன் மனதில் நீ !
இருவரும் ஒருவரே ..


உடலால் வேறுபட்டாலும் 
உள்ளத்தால் ஒருவரே !

சுற்றி வளைக்காதே ...
பதில் கூறு .


கடைசியாக ஒரு கேள்வி?
கேள்.


கவிதை தோன்றுமிடம்?
உள்ளம்.


உள்ளம் ஒன்று எனும் போது
உன் நண்பனை பற்றிய கவிதை என்பது...
உன்னைப் பற்றியாகாதா?
தற்பெருமை ஆகாதா?
கவிஞனுக்கு அழகா?
போதுமா விளக்கம்.


புரிந்தது .
மன்னித்து விடு.


என் வாழ்த்துக்கள் உன் நண்பனுக்கு...
என் வணக்கங்கள் உங்கள் நட்பிற்கு.

-சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Sep 26, 2013 4:57 pm

நட்பு.

நல்லவை நண்பர்க்கு நினைத்தலும்
நயம்பட நடப்பை நவிலலும்
நன்நெறி நடவா நாளில்
நண்ணுநரை நல்லாங்கு நடத்துதலும்
நண்ணார் நடக்கை நன்குறைத்தலும்
நட்பை நற்பயிராய் நெடிதுயர்த்தலும்
நட்புக்கு நண்பர்செய்யும் நற்கதியாம்.


* * *

அருஞ்சொற் பொருள்:

நண்ணுநர் � நண்பர்
நண்ணார் � பகைவர்
நெடிது � நீண்டு
நவில்தல் � சொல்லுதல்
நல்லாங்கு � நன்று, நன்கு
*** 


-நட்புடன்,
மா. கலை அரசன்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Sep 26, 2013 4:59 pm

என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காதுஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....

நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...

வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்.. 

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்.. 

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...- மணிகண்டவேல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Sep 26, 2013 5:00 pm

நட்பு 
நட்பு என்பது நாம் 
கருவறையில் கால் உதைத்து
 
கல்லறையில் கால் பதிக்கும்
 
இடைப்பட்ட காலங்களின்
 
ஒரு அழகான - நாட்குறிப்பு

 

- மோகன சுந்தரி
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Thu Sep 26, 2013 5:10 pm

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?


அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.


பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்


அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.


நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.


கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.


“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.


யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !


-
சேவியர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Sun Sep 29, 2013 9:27 am

துணிந்து நில் தொடர்ந்து செல்....!!!

உறவுகள் தொலைவாகி,
உணர்வுகள் நிலைமாறி,
உயிர் மாயும் நிலையாகி,
எம் காலம் முடிவாகலாம்...!

எம் தாயின் மார்பிலே
நாம் உண்ட பாலென்றும்
நஞ்சாக மாறாது
என்னுயிர்ச் சகோதரா...!
எம் இலட்சியம்
சாகாது வாழுமடா...!

எமக்குள்ளே நரிகளும்
கழுகுகள் பாம்புகள்
உருவாக விடலாமோ
இனியும் இங்கே..?
தன்மானத் தமிழனாய்
தாய்நாட்டின் விடிவுக்காய்
ஒன்றாகச் சேர்ந்துநாம்
இழிவை வெல்வோம்...!

அறியாமை இருளிலே
அகப்பட்ட காலங்கள்
நேற்றோடு போட்டும்
எந்தன் சோதரா..!
அறிவின் கூர்மையால்
எதிர்ப்போரை வெல்கின்ற
ஆயுதம் ஏந்துவோம்
எந்தன் சோதரா...!

விழிமூடி காரிருள்
மயக்கத்தில் மாய்கின்ற
மடமையைக் கொழுத்துவோம்
எந்தன் சோதரா..!
வழியுண்டு வென்றிட
வாடாமல் புறப்படு..
வருங்கால வரலாறு
எம்வெற்றி உரைத்திடும்...

நிறைவேறும் நிறைவேறும்
என்றிங்கே எண்ணிடு
நிலையான நம்பிக்கை
உன்மீது கொண்டெழு..!
நிகரில்லை உனக்கென்றும்
உண்மைகள் ஜெயித்திடும்...!
தமிழ்த்தாயின் குழந்தையாய்
உறுதிகொண்டெழுந்திடு...!

-கவின்மகள்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Sun Sep 29, 2013 9:59 am

...விதியின் விடியல்.....

சிந்திக்கும் திறன் வலுவிழந்துவிட்டது, உன்னை
சந்தித்து நாட்கள் பல நகர்ந்து விட்டதால்,
முந்திக்கொண்டு வரும் கண்ணீர் துளிகளை,

தந்திரமாக மறைக்கின்றேன் யாருமறியாமல்......

மேகத்தினைச் சிலிர்த்திட வைக்கும் மழைத்துளி போல்,
தேகத்தினைச் சிலிர்த்திட வைக்கின்றது உன் நினைவுகள்,
மோகத்தில் அன்று நீ மீட்டிய ராகங்களின் சுகம்,
சோகத்தில் இன்று என்னை மூழ்க வைக்கின்றது....

தொட்டும்...... தொடாமலேயே நீ புரிந்த காதல்,
விட்டும்..... விடாமலேயே என்னைத் தொடர்வதால்,
கட்டுக்கடங்காமலேயே தறிகெட்டு ஓடும் எண்ணங்கள்,
மட்டுப் படாத சோகங்களை மலையாய் குவிக்கின்றன.....

கரைகின்ற விழிகளில் மறைந்திடாத உன்னுருவம்....
விரைகின்ற காலங்களில் விலகிடாத உன்னுருவம்....
அரைகுறையாய் கலைந்த ஒவியமாய் உன்னுருவம்..
புரையோடிய இதயத்தில் நிரந்திரமாய் உன்னுருவம்...

நான் நானாக வாழ்ந்த காலம் முடிந்து....
நான் நமதாக வாழ்ந்த காலம் கரைந்து...
நாம் நானாக பிரிந்த காலம் விடிந்து...
நான் நானாக வாழும் நிலை விதிக்கப்பட்டு விட்டது....!!!




-மகேஸ்வரி
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Sep 30, 2013 3:26 pm

........இடர்பாடு.......
----------------------------
என்னையோ !
என் உணர்வுகளையோ !
என் உடமைகளையோ
நீ தீண்டினால் அது உன் உரிமை !!
அதையே !
எனை சூழ்ந்தவரோ வேறு எவரோ,
செய்தால் அது அத்துமீறல் !
பொறுக்காது அவர்செயலை,
மதிக்காத மனம் !
உனக்கானவள் மட்டிலுமே நான் !
என்ற வேட்கைதான்,
வெந்து கங்காகி ஆறும் அடங்காமல் !!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by sawmya Mon Sep 30, 2013 3:27 pm

காசு இல்லாதவன் 
மெழுகுவத்தி ஒளியில் உண்கிறான் 
தன் வீட்டில்

காசு உள்ளவன் விலைகொடுத்து 
காண்டில் லைட் டின்னரில் உண்கிறான் 
நட்சத்திர உணவகத்தில். 

காசு இல்லாதவன் 
வீட்டுக்கு வெளியில்
நட்சத்திரங்கள் கொண்ட வானத்தை பார்த்துக்கொண்டு உறங்குகிறான்.

காசு உள்ளவன் 
வீட்டு விட்டத்தில் 
நட்சத்திர சுவரொட்டிகளை பார்த்துக்கொண்டு உறங்குகிறான். 

காசு இல்லாதவன் 
வயிறை வளர்க்க ஓடி உழைக்கிறான்.

காசு உள்ளவன் 
வயிறை குறைக்க ஓடி களைக்கிறான்.

உழைப்பை கொண்டு சாதிப்பான் 
காசு இல்லாதவன்.

சாதிப்பவனை பணத்தை கொண்டு வாங்குவான் 
காசு உள்ளவன்.

காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு கிடைப்பது நிச்சயம் கிடைக்கும்.
 

- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படித்ததில் பிடித்தது... Empty Re: படித்ததில் பிடித்தது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum