தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 11:14 am

First topic message reminder :

வணக்கம் தமிழ் ஆர்வலரே

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன்
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் சின்னா...சத்தியா..ரதிதேவி..
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் ..இந்த அகராதியின் அனைத்து
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும்
மிக்க நன்றி இதை நான் கண்டதற்கு ..அதை பதிந்தவர்களுக்கும்

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:47 am

சங்காயம் - கரும்புத் தோகைச் சருகு : ஆனைப்பால்.
சங்காரம் - அழிக்கை : ஒடுக்குகை : அடக்குகை.
சங்காலம் - விரைவு.
சங்காளர் - சாமூகர் : கலவியையே நாடுபவர்.
சங்கிதை - சரித்திரம் : விஷயத் தொகுதி : வேதத்தின் ஒரு பகுதி.


சங்கித்தல் - ஐயுறல் : கனப்படுத்துதல்.
சங்கியை - எண் : எண்ணிக்கை : புத்தி : சூரியனது தேவி : விசுவகர்மனுடைய பெண்.
சங்கிரகம் - சுருக்கம் : உயர்ச்சி : நாடுகாத்தல் : கைச்சண்டை : உடன்பாடு : திரட்சி : திரள்.
சங்கிரகணம் - ஏற்றுக் கொள்ளுகை.
சங்கிராந்தவாதம் - மலம் நீங்கிய ஆன்மாவின் கண் திருவருள் பிரதிபலித்து அதனை அருட்சொரூபம் ஆக்கும்
என்று கூறும் சமயம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:48 am

சங்கிராந்தி - உத்தராயண நாள் : பொங்கற் பண்டிகை.
சங்கிராமம் - போர் : மலைமேல்வழி.
சங்கீதம் - இசைப்பாட்டு.
சங்கீரணம் - ஓர் அலங்காரம் : கலப்பு : நெருக்கம் : மத்தள வகை.
சங்கீர்த்தனம் - புகழ்ந்து பாடுகை : சொல்லுகை : பாவ அறிக்கை.


சங்கு - இயங்கு : இராச சின்னத்தொன்று : ஒன்றிப்பு : ஓரெண் : கடிகார ஊசி : கணைக்கால் : கூடுதல் : கைவளை :
சவ்வாதுப் பூனை : நெற்றி : படைக்கலம் : தரா : கூடுகை : ஒரு செடி : ஒரு சலஞ்சலம் : பாஞ்சசன்னியம் என்னும்
நீர்வாழ் சங்கு : ஐம்படை என்னும் அணியின் ஒரு உரு : சங்கினாற் செய்த வளை : குரல் என்னும் இசை : மிடறு :
ஒரு பேரெண் : தூண் : ஆணி : ஆப்பு : இப்பி : ஊரி : முனை : கூனல் : கடுகு ரோகினி : சங்கை : நாழிகையறிய
நடப் பெறுங்கோல்.
சங்குகர்ணம் - ஒட்டகம் : கழுதை.
சங்குதல் - பல்லாங்குழியில் ஆட்ட முறை இலாபமின்றி நின்று விடுதல் : தைரியங் கெடுதல்.
சங்குதிருகி - சங்கறுக்குங் கருவி.
சங்குநிதி - கிலுகிலுப்பை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:48 am

சங்குமதம் - புனுகு.
சங்குமரு - வேம்பு.
சங்குருளை - ஆமை.
சங்குலம் - எதிர்மொழி : கூட்டம் : நஞ்சு : போர்.
சங்குலை - உளி.


சங்குவடம் - பரிசு.
சங்கேதம் - ஏற்பாடு : கட்டுப்பாடு : குழுஉக்குறி : குறிப்பு : நியமம் : பொருத்தம் : குறி : உறுதிமொழி : கோயிலுக்கு
இறையிலியாக விடப்பட்ட மானிய நிலம்.
சங்கை - அச்சம் : அளவு : ஐயம் : களம் : சுக்கு : சுண்டி : மதிப்பு : வழக்கம்.
சங்கோசம் - அடக்கம் : வெட்கம் : சுருங்குகை : கூச்சம் : மஞ்சள்.
சசம் - ஆடவர்வகை நான்கனுள் ஒன்று : முயல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:51 am

சசன் - முயற்சாதி ஆடவன்.
சசி - இந்திராணி : இந்துப்பு : ஐக்கம் : கருப்பூரம் : சந்திரன் : பச்சைக் கருப்பூரம் : கடல் : மழை.
சசிகன்னம் - பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம்.
சசிமணாளன் - இந்திரன்.
சசியம் - ஆச்சா : கஞ்சா : கனி : நிலப்பனை : பயிர் : மராமரம் : விளைவு : இந்துப்பு.


சசிவன் - மந்திரி : நண்பன்.
சசேதனம் - அறிவு.
சச்சடம் - தாமரை.
சச்சடி - கலம்பகம் : சன நெருக்கடி.
சச்சந்தன் - ஏமாங்கத நாட்டரசன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:51 am

சச்சம் - மெய் : உண்மை.
சச்சரவு - கலகம் : சண்டை.
சச்சரி - ஒரு வாத்தியம் : சச்சரை.
சச்சற்புடம் - ஞானம் : பஞ்சதாளத் தொன்று.
சச்சாரம் - யானைக் கூடம்.


சச்சிதம் - அலங்கரித்து வைக்கை.
சச்சிதாநந்தம் - [ சத்து, சித்து ஆநந்தம் ] உண்மை, அறிவு, இன்பம் என்னும் முக்குணங்களையுடைய பரம்பொருள்.
சச்சு - அற்பம் : மட்டமான புகையிலை : பறவை மூக்கு : பதர் : சந்தடி : நீர்ச்சுண்டி : தொந்தரவு.
சச்சை - ஆராய்ச்சி : ஓதுகை.
சஞ்சம் - பூணூல் : கச்சு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:52 am

சஞ்சயம் - கூட்டம் : சந்தேகம்.
சஞ்சயணம் - காடாற்றுதல்.
சஞ்சயன் - கௌரவர் புரோகிதன்.
சஞ்சரம் - உடல் : கொலை : சங்கடம் : பாதை : வழி.
சஞ்சரி - தேனீ.


சஞ்சரிகம் - வண்டு : சஞ்சரீகம்.
சஞ்சரித்தல் - திரிதல் : நடமாடுதல் : வசித்தல்.
சஞ்சலம் - அசைவு : காற்று : நோய் : துன்பம் : நிலையில்லாமை : மனக்கவலை : நடுக்கம்.
சஞ்சலை - திருமகள் : திப்பிலி : மின்னல்.
சஞ்சன் - நான்முகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:52 am

சஞ்சாயம் - குடிவாரம் : அற்றைக் கூலி : இலவசம் : அதிக இலாபம்.
சஞ்சாரணம் - தூண்டுதல் : நடத்துதல்.
சஞ்சாரம் - ஏற்றியிறக்கிப் பாடுதல் : கூடியிருத்தல் : யானைக் கூடம் : நடமாட்டம் : யாத்திரை : நெறி தப்பிய ஒழுக்கம்.
சஞ்சாரன் - உயிர்.
சஞ்சாரிகன் - தூதன் : ஒற்றன் : பாடகன்.


சஞ்சாலி - பெரிய துப்பாக்கி.
சஞ்சகளிகம் - வண்டு.
சஞ்சிகை - புத்தகப் பகுதி.
சஞ்சிதம் - ஈட்டியது : கட்டுப்பட்ட வினை : அனுபவித்தது போக எஞ்சியுள்ள கருமம்.
சஞ்சீவகரணி - புளியமரம் : மூர்ச்சை தீர்த்து உயிர் தரு மருந்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:52 am

சஞ்சீவனம் - உயிர்ப் பிச்சை.
சஞ்சீவன் - மாமரம்.
சஞ்சீவி - உயிர் தரும் மருந்து.
சஞ்சு - ஆமணக்கு : பறவை மூக்கு : சாயல் : குலதருமம்.
சஞ்சேபம் - அடையாளம் : சுருக்கம் : சோறு : தருக்கம்.


சஞ்சேயம் - ஈட்டியது.
சடகம் - ஊர்க்குருவி : தேன் : வட்டில் : கரிக்குருவி.
சடகோபம் - திருமாலின் திருவடி.
சடகோபன் - நம்மாழ்வார்.
சடக்கு - செருக்கு : உடல் : வேகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:56 am

சடங்கம் - ஆறுசாத்திரம் : பதினாறு தூக்குக் கொண்ட ஒரு நிறை.
சடங்கர், சடங்கவி - மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன்.
சடம் - யாறு : உடல் : குங்குமம் : கொடுமை : சடத்தீயினொன்று : தகரம் : பொய் : வஞ்சமனம் :
அறிவற்ற பொருள் : ஒருவகை வாயு : சோம்பல்.
சடரம் - வயிறு.
சடரக்கினி - உதராக்கினி : மூலாக்கினி.


சடர் - அறிவற்றவர்.
சடலபுடலம் - பருத்திருப்பது.
சடலம் - உடல்.
சடன் - அறிவற்றவன்.
சடாங்கம் - உடலுறுப்பு ஆறு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:56 am

சடாங்கன் - சிவன்.
சடாட்சரம் - ஆறெழுத்து மந்திரம் : இது முருகனுக்குரியது.
சடாட்சரி - உமை : சந்திமந்திரம்.
சடாதரன் - சிவன் : வீரபத்திரன்.
சடாதரி - பார்வதி.


சடாதாரம் - ஆறாதாரம் : அஃதாவது : மூலாதாரம் : சுவாதிட்டானம் : மணிபூரகம் : அனாகதம் : விசுத்தி : ஆஞ்ஞை.
சடாதாரி - சடையுள்ளோன் : சிவன்.
சடாமகுடம் - சடாமுடி.
சடாமாஞ்சி - ஒரு சரக்கு.
சடாயு - ஒரு கழுகு : அருணன் மக்களில் ஒருவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:56 am

சடாய்த்தல் - அதட்டல் : இடித்துரைத்தல் : துப்பாக்கி கெட்டித்தல் : செழித்தல் : பெருமிதமாகப் பேசுதல்.
சடாலம் - ஆலமரம் : தேன்கூடு.
சடானனன் - ஆறுமுகன்.
சடி - சடை : துப்பட்டி.
சடிதி - விரைவாக.


சடிலம் - குதிரை : சடாமாஞ்சில் : சடை : சிங்கம் : நெருக்கம் : செறிவு.
சடினம் - சடை மரம் : வசம்பு : நெட்டிவேர்.
சடுத்தம் - போராட்டம் : போட்டி : வீரவாதம் : நிர்ப்பந்திக்கை.
சடுலம் - நடுக்கம்.
சடை - அடைக்குந் தடி : ஆணியின் கொண்டை : இரேகை : கூட்டம் : சடைச்சி : சடாமாஞ்சில் : சடையென்னேவல் :
பிரபை : பின்னல் மயிர் : வேர் : வேதபாட பேதம் : நெட்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:57 am

சடைதல் - சோர்வடைதல் : உள்ளடங்குதல் : தடுத்தல்.
சடைத்தல் - கிளைத்து நெருங்குதல்.
சடைநாகம் - மகளிர் தலையணி.
சடைவாறுதல் - இளைப்பாறுதல்.
சடை விழுதல் - பயன்படாது போதல்.


சட் - ஆறு.
சட்சமயம் - ஆறு சமயம்.
சட்சு - கண்.
சட்சுவை - ஆறு சுவை.
சட்ட - செவ்விதாக : விரைவாக : முழுதும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:57 am

சட்டகம் - உடல் : வடிவு : பிணம் : சட்டம் : மக்கட் படுக்கை.
சட்டதிட்டம் - ஒழுங்கு.
சட்டந்தட்டுதல் - புனுகு வழித்தல்.
சட்டம் - எழுதும் ஓலை : கட்டளைத் திட்டம் : கட்டில் முதலியவற்றில் சட்டம் : திருத்தம் : நாவிச்சட்டம் :
பூரணம் : மரச்சட்டம் : கம்பியிழுக்குங் கருவி : நகையின் உம்மச்சு : நியாய ஏற்பாடு : செப்பம் : நேர்மை :
புனுகுச் சட்டம் : புனுகுப் பூனையிடம் இருந்து எடுக்கப்படும் திரவப் பொருள் : திட்டம் : மாதிரிச் சட்டம்.
சட்டம்பி - உவாத்தியாயர் : எசமான்.


சட்டவளை - குறுக்குவளை.
சட்டன் - மாணாக்கன்.
சட்டாம்பிள்ளை - வகுப்புத் தலைமை மாணவன்.
சட்டால் - வில்வம்.
சட்டி - ஆறாந்திதி : ஆறு : ஒரு பாண்டம் : தாமரை : அறுபது : சட்டியென்னேவல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:59 am

சட்டியெடுத்தல் - இரத்தல்.
சட்டு - அழிவு : ஆறு : சேதம் : சிக்கனம்.
சட்டுவம் - அகப்பை : தோசை திருப்பி.
சட்டை - அங்கி : கணிப்பு : சிறகு : தைவேளைப்பூண்டு : பாம்பின் தோல் : பொதி : மதிப்பு.
சட்டைநாதன் - சிவன் : வயிரவன்.


சட்பதம் - வண்டு : அறுகால்.
சட்பதாதி - சண்பகம் : மாமரம்.
சட்பம் - அறுகு : சிறுபயிர் : பசும்புல் : மயிர் : இளம்புல்.
சட்பாவம் - உடலுக்குண்டாகும் இருத்தல் : தோன்றல் முதலிய ஆறு நிலைகள்.
சணப்பு - சணல் : கஞ்சா.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:59 am

சணைப்பு - கிளைப்பு : செழிப்பு.
சண்டதாண்டவம் - காளியோடு சிவன் ஆடிய கூத்து.
சண்டப்பை - கருப்பை.
சண்டமாருதம் - பெருங்காற்று.
சண்டம் - உறைப்பு : எருது : கருப்பம் : கொடுமை : கோபம் : விரைவு : பேடு : நரகவிசேடம்.


சண்டன் - கடுங்கோப முடையவன் : அசுரன் : அலி : தாலன் : சிவன் : சூரியன் : நமன் : புளிய மரம் : பேடி : வேகி.
சண்டாளம் - துரோகம் : புலைத்தன்மை.
சண்டி - கொடியவள் : துர்க்கை : இடக்குச் செய்பவன் : பிடிவாதக்காரன் : மானமற்றவன் : இலச்சை கெட்ட மரம்.
சண்டு - ஒரு வண்டு : பதர் : கூளம் : பயிரில் விழும் வண்டு வகை.
சண்டுதல் - பண்ணுதல் : தாக்குதல் : மோதுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:00 am

சண்டை - பிணக்கு : போர்.
சண்ணம் - ஆண்குறி : கோசம் : இலிங்கம்.
சண்ணித்தல் - பூசுதல் : சார்ந்திருத்தல்.
சண்பு - கோரை வகை.
சண்பை - சீர்காழி.


சண்பையர்கோன் - திருஞானசம்பந்தர்.
சண்முகன் - ஆறுமுகன் : முருகன்.
சதகம் - தான்றி மரம் : நூறு செய்யுட் கொண்ட பிரபந்தம் : நூற்றாண்டு.
சதகும்பம் - ஒரு மலை.
சதகோடி - இடி : நூறு கோடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:00 am

சதக்கினி - நூற்றுவரைக் கொல்லக் கூடிய பொறி.
சதங்கை - கிண்கிணி.
சதசதப்பு - ஈரப்பற்று.
சதசத்து - சத்தும் அசத்துமாயிருத்தல் : ஆன்மா.
சதசல்லியம் - பெருந்தொந்தரவு : துன்பம்.


சதசிருங்கம் - குந்தி பாண்டவரைப் பெற்ற மலை.
சதசு - கற்றோர் கூடிய சபை.
சததளம் - தாமரை.
சததாரை - இடி.
சதபத்திரம் - கிளி : வெண் நாரை : மயில் : சததளம் : தச்சன் கருவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:00 am

சதமகன் - இந்திரன்.
சதம் - நூறு : அறுபடு பயிர் : இடி : இலை : இறகு : எல்லாம் : கமாலமரம் : தாழ்தல் : நித்தியம் :
நிலைமை : போதல் : இறுதி.
சதயம் - ஒரு நாள்.
சதளக்காரன் - பெருங் குடும்பக்காரன்.
சதளம் - கூட்டம்.


சதனம் - வீடு : இலை : இறகு : உறை : நீர்.
சதா - எப்பொழுதும் : மரக்கலம் : மரத்தினுட் பழுது.
சதாகதி - ஓயா நடை : காற்று : பேரலை : நிர்வாணம்.
சதாதநன் - அழியாதவன் : திருமால்.
சதாபலம் - அத்திமரம் : எலுமிச்சை : தெங்கு : வில்வமரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:03 am

சதாபிடேகம் - எண்பது வயதிற்கு மேற்பட்டு வாழ்ந்து ஆயிரம் பிறை கண்டவர்க்குச் செய்யும் சடங்கு.
சதாரம் - இடி : சததாரை : நூறு கோடி : இந்திரலோகத்தொன்று.
சதாநந்தன் - நீங்கா மகிழ்ச்சியுள்ளவன்.
சதாவர்த்தன் - விட்டுணு : திருமால் : விண்டு.
சதானகம் - சுடுகாடு : இடுகாடு : மயானம் : நன்காடு.


சதி - அழிவு : அனுமரணம் : உரோகிணி : கற்புடையாள் : விரைவு : சோறு : தாழ்வாரம் : தாளவொத்து : பார்வதி :
மனைவி : வஞ்சனை : வட்டம் : இறந்த கணவனோடு மனைவி உடன் கட்டையேறுதல்.
சதித்தல் - வஞ்சித்தல்.
சதிமகள் - இந்திராணி.
சதிரம் - சரீரம் : கக்கரி : சதுரம்.
சதிர் - இலகு : எல்லை : குறைந்த விலை : சதுர் : பெருமை : பேறு : அழகு : நிலைமை : செட்டு : நாட்டிய சபை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:04 am

சதுக்கம் - சதுரம் : சத்திரம் : தலை : தலையுருமால் : திண்ணை : நாற்றெருக் கூடுமிடம் : நான்கு கூடியது.
சகதுமுன் - நான்முகன்.
சதுரகராதி - பொருளகராதி : பேரகராதி : தொகையகராதி : தொடையகராதி என்று நாற் பிரிவுகள் உடையதாக
18 ஆம் நூற்றாண்டில் வீரமா முனிவர் இயற்றிய அகராதி.
சதுரங்கசேனை - நால்வகைப் படை.
சதுரங்கம் - நாற்கோணம் : ஒரு விளையாட்டு.


சதுரந்தயானம் - சிவிகை : பல்லக்கு.
சதுரப்பாடு - சதுரம் : விவேகம் : ஆற்றல் மிகவுடைமை.
சதுரம் - அகலம் நீளம் ஒத்த நாற்கோணம் : சதுரக்கள்ளி : சமர்த்து : நாகரிகம் : யானைப்பந்தி : விரைவு : விவேகம்.
சதுரர் - அறிஞர் : திறமுடையோர் : பேரவாக்காரர்.
சதுர் - கூத்து : நான்கு : அறிவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:04 am

சதுர்குணி - நாற்குணம் உடையவன்.
சதுர்த்தம் - நான்காவது.
சதுர்த்தர் - நான்காம் வருணத்தார் : சமர்த்தார்.
சதுர்ப்பாடு - சதுரப்பாடு.
சதுர்ப்புயன் - சிவன் : திருமால்.


சதுர்வேதி - நான்கு மறைகளிலும் வல்லவன்.
சதுவல் - சதுப்பு நிலம் : கழிநிலம் : சேற்று நிலம் : சேறு.
சதுனி - வௌவால்.
சதேகமுத்தி - சீவன் முத்தி.
சதோடம் - குற்றத்துடன் கூடியது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:05 am

சத்தகம் - சிறு கத்திவகை ஏழு கூடியது : உத்தரகிரியை வகை.
சத்தசாத்திரம் - எழுத்துச் சொற்களைப் பற்றிய இலக்கண நூல்.
சத்த தன்மாத்திரை - ஒலிப் பிரகிருதி.
சத்தநதி - கங்கை : யமுனை : சரசுவதி : நருமதை : கோதாவரி : காவிரி : குமரி என்ற யாறுகள்.
சத்தமன் - யாவரினுஞ் சிறந்தவன்.


சத்ததானம் - வெடியுப்பு.
சத்தப் பிரமம் - எழுத்தொலியே தெய்வம் என்னும் நூல்.
சத்தப் பிரமவாதம் - நாதமே பிரமம் என்னும் கொள்கை.
சத்தம் - ஒலி : சொல் : ஏழு.
சத்தன் - சிவன் : ஆற்றலுடையவன் : அருவத்திருமேனி கொண்டவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:06 am

சத்தார்த்தம் - சொற்பயன்.
சத்தி - இந்துப்பு : உபாயவழி : கக்கல் : கந்தகம் : குடை : குமட்டிக் கொடி : கைவேல் : சத்தி சாரணை :
சத்திசாரம் : சத்தியென்னேவல் : சவுக்காரம் : சிவதத்துவம் ஐந்தில் ஒன்று : சூலம் : தேரிடக்கியம் : சுரோணிதம் :
நிமிளை : நீர் முள்ளி : நெல்லிக்காய்க் கந்தகம் : பார்வதி : பெண் : பெண்கலை : பெலம் : பேய்ப்புடல் : பொன்னி மிளை :
மறியல் : மூன்று வலிமை : வேம்பு : விருதுக் கொடி : வெண்குடை.
சத்திகம் - குதிரை.
சத்திகீலம் - வீணை முறுக்காணி.
சத்திசாரணை - மூக்கிரட்டைக் கொடி.


சத்தி செய்தல் - வாந்தியெடுத்தல்.
சத்தியநாதர் - நவநாத சித்தர்களில் ஒருவர்.
சத்திநிபாதம் - பக்குவான்மாக்களிடம் திருவருள் பற்றுதல்.
சத்திய நிருவாணம் - பிறவியறுத்தல்.
சத்தியம் - ஆணை : குறிஞ்சா : சபதம் : மெய் : உண்மை : பிரமாணம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:06 am

சத்தியவாசகம் - மெய்மொழி.
சத்தியோசாதம் - சிவபிரானுடைய ஐம்முகங்களில் மேற்கு நோக்கியது.
சத்திரசாலை - அறச்சாலை : ஆயுத சாலை.
சத்திரம் - அன்னசாலை : இரண மருத்துவம் : கத்தி : கவிழ் தும்பை : கைவிடாப்படை : கைவேல் : குடை :
பாணம் : மடம் : வேள்வி : வெண்குடை.
சத்திரி - யானை.


சத்திரியர் - இரண்டாம் வருணத்தோர்.
சத்து - அவுபலபாஷாணம் : அறிவு : கற்பூரசிலாசத்து : சாரம் : நன்மை : பிரமம் : பெரியோர் : சத்து பலன் : மாவு.
சத்துரு - பகைவன்.
சத்துருசகம் - பொறுமை.
சத்துவம் - சாத்துவீகக் குணம் : சுபாவம் : நன்மையையே நோக்குந் தன்மை : உளதாந்தன்மை : சாரம் : செந்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 8:07 am

சந்தகபுட்பம் - கிராம்பு.
சந்தகம் - இடியப்பம் : மகிழ்ச்சி.
சந்தடி - இரைச்சல் : கூட்டம்.
சந்தணி - அகரு : சந்தனம் : செஞ்சந்தனம்.
சந்தணுகி - பாம்பு.


சந்ததம் - எப்பொழுதும்.
சந்ததி - வழித்தோன்றல் : கோத்திரம் : சந்தானம் : பிள்ளை : மகன் : வித்தாரம் : வமிசம்.
சந்தம் - அழகு : ஆசை : கவியின் வண்ணம் : கற்பரி பாஷாணம் : குணம் : சந்தனம் : நிறம் : வடிவு : செய்யுள் :
கருத்து : துளை : சுகம்.
சந்தயம் - ஐயப்பாடு : ஐயுறவு.
சந்தரி - துளசி : வெண் துளசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 37 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum