தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 23 of 43 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 43  Next

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:33 pm

First topic message reminder :

சாதனக்காணி _ அரசனால் கொடுக்கப்பட்ட உரிமை நிலம்.
சாதனபத்திரம் _ உரிமைப் பத்திரம்.
சாதனம் _ கருவி : பயிற்சி : துணைக்காரணம் : உருத்திராக்கம் முதலிய சின்னம் : இலாஞ்சனை : இடம் : நகரம் : ஆதார பத்திரம்.
சாதனம் பண்ணல் _ உறுதி செய்தல் : பழகுதல்.
சாதனன் _ பிறந்தவன்.



சாதனை _ செயல் முடித்தல்: விடாத முயற்சி : பிடிவாதம் : சலஞ் சாதிக்கை : நடித்துக் காட்டுகை : பொய்.
சாதன்மியம் _ ஒப்புமை.
சாதா _ சாதாரணமாக : பகட்டு இல்லாத.
சாதாரண _ ஒரு தமிழ் வருடம்.
சாதாரணம் _ பொதுவானது: எளிது : தாழ்வானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:48 pm

நபனம் - திருமஞ்சனம் : நீராட்டம்.
நபகம் - இருள்.
நபி - முகமது : தீர்க்கதரிசி.
நபுஞ்சகம் - பேடித்தன்மை : ஆண் தன்மையின்மை.
நபுஞ்சகலிங்கம் - அலிப்பால்.


நபுஞ்சமகன் - ஆண்குறி யில்லாதவன்.
நப்பின்னை - திருமகள்.
நம - வணக்கம்.
நமகம் - உருத்திர மந்திரம்.
நமக்காரி - ஆடு தின்னாப் பாளை : வறட்சுண்டி.


நமசம் - இணக்கம்.
நமசன் - அனுகூலன்.
நமசிதன் - வழிபடத்தக்கவன்.
நமடுகடித்தல் - குழந்தைகள் உதட்டைக் கடித்தல்.
நமரன் - நம்மவன் : உறவினன் : நண்பன்.


நமருதல் - ஊறுதல் : பெருகுதல்.
நமர் - சுற்றத்தார் : நம்மவர்கள் : உறவினர்கள்.
நமலுதல் - வணங்கல்.
நமள் - நம்மவள்.
நமன் - இயமன் : சுற்றத்தான் : நம்மவன்.


நமித்திரர் - பகைவர்.
நமுகுதல் - குழைதல்.
நமுடு - ஈர் : கீழுதடு : கொக்கு.
நமேரு - புன்னை : சுரபுன்னை.
நமை - ஒரு மரம் : செறிவு : தினவு : நமைவென்னேவல்.


நமைக்காய் - கத்தரிக்காய்.
நமைச்சல் - தினவு.
நமைத்தல் - சொறிதல் : தின்றல் : சூட்டுதல் : வருந்துதல்.
நமைப்பு - சொறிவு : தினவு : சிரங்கு வருத்தம்.
நம்பல் - ஆசைப்பெருக்கம் : நம்புதல் : விசுவாசித்தல் : விரும்பல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:49 pm

நம்பன் - கடவுள் : சிவன் : நம்பிரான்.
நம்பி - ஆடவரிற் சிறந்தவன் : அகப்பொருள் இலக்கணம் செய்த ஆசிரியர் : வேடுவராசன் : கடவுள்.
நம்பிக்கைத் துரோகம் - இரண்டகம்.
நம்பியான் - நம்பி.
நம்பிராட்டி - அரசன் தேவி.


நம்பிரான் - கடவுள் : தலைவன்.
நம்பு - நம்பென்னேவல் : நாவல் : விருப்பம் : பற்று : ஆசை : அருச்சகம்.
நம்புதல் - நம்பல்.
நயக்கண் - நாய்.
நயத்தகுதல் - விரும்பல்.


நயத்தல் - அதிகப்படல் : ஆசைப்பெருக்கம் : சிறத்தல் : சினேகித்தல் : நன்மைப்படல் : பலன்படல் :
பின்செல்லுதல் : மதித்தல் : மலிவாதல் : விரும்பல் : அன்பு செய்தல் : நீதி செய்தல்.
நயத்தவிலை - மலிந்த விலை.
நயந்து கேட்டல் - இரந்து கேட்டல்.
நயப்பாடு - பயன் : மேம்பாடு.
நயப்பித்தல் - கனப்படுத்தல் : மகிழ்வித்தல் : உடன்படுத்தல் : சிறப்பித்தல்.


நயப்பு - அன்பு : ஆசை : இலாபம் : மகிழ்ச்சி : மலிவு.
நயப்புணர்வு - கண்ணோட்டம்.
நயப்புரை - விருப்பு மொழி.
நயம் - அதிகம் : அருள் : அரசாட்சி : இலாபம் : இன்பம் : உபசாரம் : சரி : நடத்தம் : நன்மை : நீதி :
பலன் : மலிவு : மிகுதி : மேன்மை : பக்தி : அன்பு : பயன் : நுண்மை.
நயவர் - நண்பர் : காதலர் : நீதியுடையோர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:50 pm

நயகாசம் - கண்மேற் படர்சதை.
நயனதீட்சை - அருட்பார்வையால் சீடனுக்கு ஞானம் உண்டாக்குதல்.
நயனபாடை - கண்சாடை.
நயனம் - கண்.
நயனவாரி - கண்ணீர்.


நயனை - கண்மணி.
நயன் - இன்பம் : கொடையாளி : நன்மை : பலன் : மகிழ்ச்சி : அருள் : ஈரம் : ஒழுகலாறு : செவ்வி : நியாயம்.
நயிட்டிகர் - நிட்டை தவறாதோர்.
நரகர் - கீழ் உலகத்தவர்.
நரகலித்தல் - அருவருத்தல் : அழுக்குடைத்தாதல்.


நரகல் - அசுத்தம்.
நரகாரி - திருமால்.
நரகீலகன் - குருவைக் கொலை செய்தவன்.
நரகு - நரகம்.
நரகேசரி - நரசிங்கமூர்த்தி : மக்களுள் சிறந்தவன்.


நரங்குதல் - தேய்ந்து தேய்ந்து கெடுதல்.
நரந்தம் - கத்தூரி மிருகம் : காகம் : நாரத்தை : வாசனை : வாசனைப் புல்வகை.
நரபதி - அரசன்.
நரம்புக்கருவி - வீணை முதலிய வாத்தியம்.
நரம்புக் கருவியாளர் - யாழ் முதலியன வாசிப்போர்.


நரமடங்கல் - நரசிங்கம்.
நரமேதம் - நரபலியிட்டுச் செய்யும் வேள்வி.
நரம்பின்மறை - யாழ் நூல்.
நரம்பு - இலை முதலியவற்றின் நரம்பு : தந்தி : நாடி : நாணி : நார் : வில் நாண் : தசைநார் : இரத்தக் குழாய் : யாழ் நரம்பு.
நரம்புக்காய் - முருங்கைக்காய்.


நரம்புச் சுற்று - நரம்பின் வீக்கம்.
நரர் - மனிதர்.
நரலல், நரலுதல் - ஒலித்தல் : பேசலால் எழும் ஒலி.
நரலை - கடல்.
நரலோகம் - மண்ணுலகம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:50 pm

நரல் - ஒலி : கத்து : செத்தை : சனக் கூட்டம்.
நரல்வு - உள்ளோசை : ஓசை.
நரவாகனம் - சிவிகை : ஊர்தி : குபேரனது ஊர்தி.
நரவாகனன் - குபேரன்.
நரளி - கடலை.


நரற்றல் - ஒலித்தல் : ஓசையிடல்.
நரன் - அருச்சுனன் : மனிதன் : இருடி : இயக்கன்.
நரா - தழும்புபட்டது : நருங்கப்பட்டது.
நராந்தகம் - இறப்பு.
நராந்தகன் - இயமன் : கொடியோன்.


நராரி - திருமால்.
நராலை - நரகம்.
நரிக்கொன்றை - ஒரு மரம்.
நரிதல் - நெரிதல்.
நரித்தலை - முழங்கால் முட்டு.


நரித்தல் - நருக்குதல் : இகழ்தல்.
நரிப்பு - வியப்பு : இகழ்வு : நருக்கம் : நரித்தன்மை.
நரிமகன் - கேசகம்பளன்.
நரிமருட்டி - கிலுகிலுப்பை.
நரியன் - கள்ளத்தனம் உள்ளவன் : சூதன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:50 pm

நரியுணி - நண்டு.
நருக்கல் - நொருக்கல்.
நருக்கு - நருக்குதல் : நருக்கென்னேவல்.
நருக்குதல் - நொருக்குதல்.
நருக்கெனல் - ஒலிக்குறிப்பு : விரைவுக் குறிப்பு.


நருங்குதல் - நொருங்குதல்.
நரை - வெளுத்த மயிர் : இடபவிராசி : கருமை கலந்த வெண்மை : சரை : சாமரை : சிரை : நரையென்னேவல் :
நாரை : வெண்மை : மூப்பு : வெள்ளைக் குதிரை.
நரைதல் - மெலிதல்.
நரைத்தல் - வெளுத்தல்.
நரையல்லி - வெள்ளாம்பல்.


நரையன் - ஒரு பருந்து : நரை நிறம் உள்ளது : வல்லூறு.
நரையான் - காகம் : சின்னது : செங்கானாரை : மீன்குத்திப் புள் : நெல்வகை : நருங்கின குழந்தை.
நர்த்தகம் - ஆண்யானை.
நர்த்தகி - பெண்யானை.
நலக்குதல் - அழுக்காக்குதல் : கசங்கச் செய்தல்.


நலங்கல் - அழுக்காதல்.
நலங்கு - ஒரு கலியாணச் சடங்கு : அரைத்த குழம்பு : நலங்கென்னேவல்.
நலங்குதல் - நலங்கல்.
நலதம்பு - வேம்பு.
நலதை - சடாமாஞ்சி.


நலத்தல் - சிந்தித்தல் : நயத்தல்.
நலப்பால் - நன்மை : ஆதாயம் : அதிர்ஷ்டம்.
நலப்பு - நன்மை.
நலம் - அழகு : இன்பம் : உபகாரம் : உயர்வு : கண்ணோட்டம் : சுக்கு : நன்மை : பயன் : விருப்பம் : புகழ் :
செம்மை நிறம் : எருத்து விதை.
நலம் பாராட்டுதல் - தலைமகன் தலைமகளின் இன்ப நலத்தைப் புகழ்ந்து கூறுதல்.


நலம்பொலம் - நன்மையும் தின்மையும்.
நலவு - நலம் போடுதல் : நன்மை.
நலன் - நலம்.
நலி - நலியென்னேவல் : நோய்.
நலிதல் - சரிதல் : தவறுதல் : மெலிதல் : வருந்தல் : அழிதல் : தோற்றல் : உச்சாரணத்தில் ஓசை நடுநிலையாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:51 pm

நலிநம் - தாமரை : நீர் : வெண்ணாரை.
நலிபு - ஆய்தவெழுத்திற்குச் செய்யுளால் வழங்கும் பெயர்.
நலிபுவண்ணம் - ஆய்தவெழுத்து அடிக்கடி பயின்று வருஞ் சந்தப் பாட்டு.
நலிவு - அழிவு : மெலிவு : வருத்தம்.
நல்கல், நல்குதல் - ஈதல் : கடாட்சித்தல் : விரும்பல்.


நல்குரவு - வறுமை.
நல்கூர்தல் - வறுமைப்படுதல் : களைப்படைதல் : துன்புறுதல்.
நல்கூர்வேள்வியார் - சங்கப் புலவர்களில் ஒருவர்.
நல்ல - நன்மையான : அதிகமான : கடுமையான.
நல்லது - செம்மை : நன்மையானது.


நல்லது பொல்லாதது - நன்மை தீமை : சுபாசுப காரியங்கள்.
நல்லப்பன் - தந்தையுடன் பிறந்தவன்.
நல்லம் - கறுப்பு : மங்கல் : கரி : இஞ்சி.
நல்லம்மாள் - தாயுடன் பிறந்தாள் : மாதுலன்.
நல்லவர் - அறிஞர் : நண்பர் : பிறருக்குத் தீமை செய்யாதவர் : நல்லோர் : பெண்கள் : நல்ல பாம்பு.


நல்லவை - மேன்மையானவை.
நல்லவையோர் - பெருமையிற் சிறந்தோர்.
நல்லறம் - நல்வாழ்க்கை : மேன்மையான தருமம் : சமய தருமம் : நல்லொழுக்கம்.
நல்லாங்கு - நன்மை : நன்று.
நல்லாப்பு - நன்மை.


நல்லார் - அறிஞர் : உத்தமர் : மாதர்.
நல்லாள் - அழகுடையாள் : பெண்.
நல்லி - நல்லாள் : பெண் : முதுகெலும்பு : விலங்குக் காலின் எலும்பு.
நல்லிளம்படியார் - அழகிய இளம் பெண்கள்.
நல்லேறு - இடபம் : எருமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:53 pm

நல்வினை - இருவினைகளில் நன்மையைச் செய்யும் வினை.
நவகோடிசித்தபுரம் - திருவாவடு துறை.
நவகோணத்தாள் - பார்வதி.
நவக்கிரகம் - ஒன்பது கோள்கள்.
நவச்சாரப்பற்று - நவசாரத்தினால் உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்துமாறு செய்யும் பற்று.


நவதம் - யானைமேல் தவிசு.
நவதாரணை - சதுரங்க தாரணை : சத்ததாரணை : சித்திரதாரணை : நாமதாரணை : பேததாரணை : மந்திரதாரணை :
மாயாதாரணை : வச்சிரதாரணை : வத்துத்தாரணை.
நவதி - பொருதலை : தொண்ணூறு.
நவதிகை - தூரியக் கோல்.
நவதை - புதுமை.


நவநிதி - கச்சபநிதி : கற்பநிதி : சங்கநிதி : பதுமநிதி : மகாநிதி : மகாபதுமநிதி : முகுந்தநிதி : நந்தநிதி :
நீல நிதி ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி.
நவநீதம் - புதுமை : புதுவெண்ணெய்.
நவபல்லவம் - தளிர்.
நவபாஷாணம் - தேவி பட்டினம்.
நவம் - ஒன்பது : கார்காலம் : கேண்மை : சாரணை : நண்பு : புதுமை : பூமி.


நவரசம் - சிங்காரம் ஆசிரமம் : கருணை முதலிய ஒன்பது சுவைகள்.
நவவருடம் - பூமியின் ஒன்பது பெரும் பிரிவுகள்.
நவியம் - புதியது : கோடாரி : புதுமை : மழு.
நவலோகம் - பொன் : இரும்பு : செம்பு : ஈயம் : வெள்ளி : பித்தளை : தரா : துத்தநாகம் : வெண்கலம்.
நவிரம், நவிர் - ஆண்மயிர் : உச்சி : தலை : புன்மை : மயில் : மருத யாழ்த் திறம் : நன்னனது மலை : வாள்.


நவிலல் - சொல்லுதல் : கற்றல் : பெரிது ஒலித்தல் : செய்தல் : தாங்குதல் : பழகுதல் : விரும்புதல் : குறித்தல் : மிகுதல்.
நவின்றோர்க்கினிமை - நூலின் பத்தழகின் ஒன்று.
நவீனம் - புதுமை.
நவை - இகழ்ச்சி : குற்றம் : தண்டணை : இழிவு : அலட்சியம் : குறைவு : நடுக்கம் : அவமதி.
நவைக்குற்று - நடுங்கி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:54 pm

நவைதல் - இழித்தல் : வருத்துதல்.
நவைத்தல் - கொல்லுதல்.
நவைல் - நாவல் : சம்பு : நேரேடு.
நவ்வி - அத்தநாள் : அழகு : இளமை : தோணி : பெண்மான் : மான்குட்டி.
நவ்வியம் - புதியது.


நவ்வு - ஆடு : தோணி : நன்மை.
நழுநழுத்தல் - பிடிகொடாது பேசுதல்.
நழுக்கம் - ஆழமின்மை : கூர்கெட்டது : மழுங்கல்.
நழுக்கு - நழுக்குதல் : நழுக்கென்னேவல் : மழுகுதல்.
நழுங்கல் - மழுங்கல் : வழுவுதல்.


நழுவர் - நளவர் : கள்ளிறக்குஞ் சாதியார்.
நழுவல் - வழுவுதல் : விலகல் : பிடிகொடாது பேசுகை : மறைந்து செல்லுகை.
நள - ஐம்பதாவது ஆண்டு.
நளம் - கலம் : கள்ளிறக்குஞ் சாதி : சிற்பநூல் முப்பத்திரண்டின் ஒன்று : தாமரை.
நளி - அகலம் : குளிர்ச்சி : கூட்டம் : தோள் : நெருக்கம் : பெருமை : வெண்சாரணை : தேன்.


நளிதல் - செறிதல் : பரத்தல் : ஒத்தல்.
நளிர் - குளிர் : நண்டு : பகை : பெருமை.
நளினம் - இங்கிதம் : தாமரை : நிந்தை : நீர் : நீலம் : பரிகாசம் : நயச்சொல்.
நளினி - திருமகள் : ஒரு பண் : தாமரைவாவி.
நள் - உச்சிப் பொழுது : திருவோணம் : நடு : நள்ளென்னேவல் : மருங்கு : மிகுதிப் பொருள் தரும் ஓர்
இடைச்சொல் : இரவு : செறிந்த.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:54 pm

நள்ளலர் - பகைவர்.
நள்ளல் - நட்டல்.
நள்ளார் - பகைவர்.
நள்ளுதல் - நட்புக் கொள்ளுதல் : செறிதல் : விரும்புதல்.
நள்ளிருணாறி - இருவாட்சிப் பூ.


நள்ளு - நடு : நள் : மருங்கு.
நள்ளுதல் - நட்புக் கொள்ளுதல்.
நள்ளுநர் - நண்பர்.
நறவம் - அனிச்ச மரம் : கள் : குங்கும மரம் : ஞாழல் : தேன் : வாசனை : நன்மை : மயிற் கொன்றை.
நறவு - நறவம்.


நறளை - ஒருவகைப் பூண்டு.
நறா - கள் : தேன் : வாசனை.
நறுக்கு - ஊது குழலின் நாக்கு : ஓலையுறுதி : துண்டு : நறுக்கென்னேவல்.
நறுக்குதல் - துண்டித்தல் : நொறுக்குதல் : வெட்டுதல்.
நறுங்காழ் - அகில் : சந்தனம் முதலியன.


நறுஞ்சுதை - நல்ல பசும்பால்.
நறுநாற்றம் - சுகந்தம்.
நறுநுதல் - பெண் : மணங்கமழ் நெற்றி.
நறுமா - அற்பம் : எளியவன் : அலட்சியம் : வெறுமை.
நறுமை - சுகந்தவருக்கம் : நன்மை : வாசனை.


நறுவியது - நல்லது : வாசனைப் பண்டம்.
நறுவிலி - ஒருவகை மரம்.
நறை - கள் : குற்றம் : தேன் : நறும்புகை : வாசனை : பச்சிலைக் கொடி : சாதிக்காய்.
நற்சாந்து - சுண்ணச் சாந்து.
நற்சார்வு - நல்லோர் கூட்டம் : நல்லடைக்கலம் : தரும சிந்தை.


நற்சிலை - கருங்கல்.
நற்பலம் - வெட்பாலை.
நற்றாய் - பெற்ற தாய்.
நற்றிறம் - நீதி நெறி : நோன்பு.
நற்று - நன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:55 pm

நனந்தம் - புன்கு.
நனந்தலை - உச்சி : நடு : அகன்றவிடம் : திசை : மண்டலம்.
நனம் - அகற்சி.
நனவு - அகலம் : இடம் : சாக்கிரம் : தெளிவு : பரப்பு : மயக்க நீங்கல் : தோற்றம் : பகல் : மெய்ம்மை.
நன - நனாவு.


நனனி - நெருக்கம் : பெருமை : மிகுதி.
நனை - கள் : தேன் : நனையென்னேவல் : பூ : மொட்டு : யானை மதம்.
நனைதல் - ஈரலித்தல் : நீர் கலித்தல் : அரும்புதல் : தோன்றுதல்.
நனைப்பு - ஈரமாக்குகை.
நனைவிற்கூ - ஓதமறுபூமி.


நனைவு - ஈரம் : நனைதல்.
நன்கனம் - நன்றாக.
நன்காடு - சுடுகாடு.
நன்கு - அழகு : இலாபம் : நன்மை : மிகுதி.
நன்குணர்தல் - கற்றறிதல்.


நன்கொடை - உதவிப் பொருள்.
நன்செய் - நெல்விளை புலம்.
நன்சொல் - இன்சொல்.
நன்பொருள் - தத்துவார்த்தம் : மகன்.
நன்மார்க்கம் - நல்வழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:55 pm

நன்மை - அதிட்டம் : உதவி : நன்கு : பயன் : நலம் : மேம்பாடு : அழகு : சிறப்பு : ஆக்கம் : நல்வினை :
மிகுதி : புதுமை.
நன்றி - நன்மை.
நன்றிகேடு, நன்றியீனம் - செய் நன்றி மறக்கை.
நன்று - சுகம் : நல்லது : நன்மை : பெருமை : வாழ்வு : சிறப்பு : பெரிது : அறம் : இன்பம் : நல்வினை.
நன்னயம் - நன்மை : நினைவு.


நன்னராளன் - நல்லவன் : பாங்கன்.
நன்னர் - நன்மை : மேன்மை : நலம்.
நன்னாரி - பாற்கொடி.
நன்னாள் - விழவுநாள் : சுபநாள்.
நன்னி - சிறியது.


நன்னிலம் - நன்செய்.
நன்னிலை - உலகம் : சுகம் : தவம் : நல்லொழுக்கம் : நல்ல நிலைமை.
நன்னிறம் - வெண்மை.
நன்னுதல் - நல்ல நெற்றியை உடைய பெண் : நறுக்குதல் : துணித்தல்.
நன்னூல் - பவணந்தி முனிவர் செய்த இலக்கண நூல் : அறிவு நூல் : நல்ல நூல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:56 pm

நா - அயலார் : அயல் : சுவாலை : திறப்பு : மணி முதலியவற்றின் நாக்கு : நடுநாக்கு : பொலிவு : துலைநா :
பூட்டின்தாள் : நாதசுரத்தின் ஊதுவாய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:56 pm

நாகர்ணம் _ செவ்வாமணக்கஞ்செடி.
நாககற்பம் _ செவ்வீயம்.
நாககன்னிகை _ நாகலோகப்பெண்.
நாககெந்தி _ நேர்வாளம் : வஞ்சிக்கொடி.
நாகக்குவடு _ செம்பு மலை.


நாகசம் _ சிந்தூரம் : ஈயம்.
நாகசுரம் _ துளைக்கருவி வகை.
நாகசேதகன் _ மலைகளின் சிறகுகளை அரிந்தவனான இந்திரன்.
நாகணவாய்ப் புள் _ பூவைப் பறவை.
நாகணை _ திருமாலின் பாம்புப் படுக்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:57 pm

நாகணையினான் _ பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமால்.
நாகதந்தம் _ யானைக்கொம்பு : பாம்பின் பல்.
நாகதாளி _ சப்பாத்துக்கள்ளி.
நாகதீபம் _ ஐந்தலை நாகத்தின் வடிவம் போன்ற விளக்கு.
நாகதேவன் _ ஆதிசேடன்.


நாகதொனி _ மருதப் பண்களுள் ஒன்று.
நாகத்திசை _ வடமேற்கு.
நாகநாடு _ துறக்கம் : நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு : பவணலோகம்.
நாகநாதன் _ தேவேந்திரன் : ஆதிசேடன் : சிவபிரான்.
நாகபடம் _ நல்ல பாம்பின் படம்: ஒரு வகை அணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:57 pm

நாகபந்தம் _ ஒரு சித்திரக்கவி வகை.
நாகபந்து _ அரசமரம்.
நாகபாசம் _ பாம்புருவான படைக்கலம்.
நாகப் பச்சை _ பச்சைக் கல்வகை.
நாகப் பாம்பு _ நல்ல பாம்பு : வயிற்றுப் பூச்சி.


நாகப் பூ _ ஒரு மரவகை.
நாகப் பூச்சி _ நாக்குப் பூச்சி.
நாகமணி _ நாகரத்தின மணி.
நாகமல்லி _ கொடி வகை.
நாகமாதா _ துளசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:57 pm

நாகமாபுரம் _ மதுரை.
நாகமுகன் _ யானை முகத்துவனான விநாயகன்.
நாகம் _ துறக்கம் : வானம் : மேகம் : ஒலி : நல்ல பாம்பு : நாவல்: பாம்பு நஞ்சு : நாகலோகம் : யானை : குரங்கு : துத்த நாகம் : காரீயம் : நற்சீலை : மலை : புன்னை மரம் : ஞாழல்: சுகம்.
நாகம்மா _ பாம்புத் தேவதை.
நாகரகன் _ கள்வன்.


நாகரம் _ வடமொழியெழுத்து : சுக்கு : தேன் தொடை.
நாகர வண்டு _ பொன் வண்டு : நத்தை வகை : சிறு குழந்தை.
நாகரன் _ சிறந்தோன் : கணவன்: உடன் பிறந்தான்.
நாகராசன் _ ஆதிசேடன்.
நாகரி _ குருக்கத்திக்கொடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:57 pm

நாகரிகம் _ நகரவொழுக்கம் : செப்பம் : கண்ணோட்டம் : மரியாதை.
நாகரிகர் _ வல்லோர் : காமுகர்: சதுரர்: சுவைஞர் : கண்ணோட்டம் உடையவர்.
நாகர் _ தேவர் : நாகலோக வாசிகள்.
நாகலிங்கம் _ நாகம் கவிக்கப் பெற்றது போன்று இலிங்க உருவம் கொண்ட பூவுள்ள மரவகை.
நாகலோகம் _ தேவலோகம் : கீழேழு உலகத்துள் ஒன்று : பாதலம் : தேவலோகம்.


நாகல் _ நாவல்.
நாகவராளி _ ஒரு பண் வகை.
நாகவல்லி _ வெற்றிலைக்கொடி: திருமணச் சடங்குகளில் ஒன்று.
நாகவள்ளி _ வெற்றிலைக்கொடி : வள்ளிக் கிழங்கு.
நாகவாயு _ தச வாயுக்களுள் ஒன்று : விக்கல் முதலியவற்றை உண்டாக்கும் வாயு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:58 pm

நாகவாரிகம் _ மயில் : கருடன் : அரசர் ஏறுதற்குரிய யானை.
நாகவாரிகன் _ யானைப் பாகன்.
நாகன் _ நாக வாயு.
நாகாசனன் _ கருடன்.
நாகாதிபன் _ இந்திரன் : ஐராவதம் : ஆதிசேடன் : இமயமலை : மேரு மலை : குறிஞ்சித் தலைவன்.



நாகாத்திரம் _ நாகபாசம்.
நாகாந்தகன் _ நாகங்களைக் கொல்லும் கருடன்.
நாகாபரணன் _ சிவபிரான்.
நாகாரி _ கருடன் : தேவேந்திரன்.
நாகாலயம் _ பாதலம் : தேவர்களிருப்பிடம்.



நாகியர் _ தேவமாதர்.
நாகினி _ வஞ்சிக் கொடி: வெற்றிலை.
நாகு _ இளமை : பெண்மை : எருமை : மரை : பெற்றம் : நத்தை : பசு : கிடாரிக் கன்று : சங்கு : இளமரம் : புற்று : மலை.
நாகு கன்று _ கிடாரிக் கன்று.
நாகேசுரம் _ சிறு நாகப் பூ.



நாகேசுவரன் _ ஆதிசேடன்.
நாகை _ சோழ நாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டினம்: நாக்கு என்னும் உறுப்பு : சொல்: நடு : துலைநா : நா: மணியின் நாக்கு : தீயின் சுடர் : படகு வலிக்கும் தண்டு.
நாக்குப்புண் _ நாவில் தோன்றும் நோய்.
நாக்குப் புரட்டு _ பொய்.
நாங்கு _ மரவகை : தானியமாகச் செலுத்தும் வட்டி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:58 pm

நாங்குதல் _ ஆற்றல் குறைதல்.
நாங்கூழ் _ நாக்குப் பூச்சி.
நாசகாரி _ கேடு செய்பவன்.
நாசகாலம் _ அழிவு காலம்.
நாசநட்சத்திரம் _ சுக்கிரன் நின்ற நாளுக்குப் பத்தாம் நாள்.



நாசம் _ அழிவு : சாவு.
நாசன் _ இயமன் : அழிப்போன்.
நாசி _ மூக்கு : சலதாரையின் வாய்.
நாசிகாமலம் _ மூக்குச்சளி.
நாசிகேது _ அக்கினி.



நாசிகை _ மூக்கு.
நாசியம் _ மூக்கணாங்கயிறு.
நாசுக்கு _ அழகு.
நாசுவன் _ அம்பட்டன்.
நாச்சி _ தலைவி.



நாச்செறு _ வசை.
நாஞ்சில் _ கலப்பை : மதிலுறுப்பு : நாஞ்சில் நாடு : வள்ளுவன் என்ற தலைவனின் மலை.
நாஞ்சிற் படையோன் _ கலப்பையாயுதம் உடைய பலராமன்.
நாடகக் கணிகை _ நாட்டியப் பெண்.
நாடகசாலை _ கூத்து நிகழும் இடம்.



நாடக சாலையர் _ கூத்தர் : நடிகர்.
நாடகம் _ கலை அறுபத்துநான்கினுள் ஒன்று.
நாடக வழக்கு _ புனைந்துரை வழக்கு.
நாடல் _ ஆராய்தல் : சென்று காணுதல்.
நாடவர் _ தேசத்தார்.



நாடன் _ தேசத்தான் : குறிஞ்சி நிலத்தலைவன் : கார்த்திகை நாள்.
நாடா _ நூற்பட்டை.
நாடி _ மூச்சுக் குழாய் : யாழின் நரம்பு : மூக்கு : நாழிகை : சோதிடநூல் : தாது நரம்பு : இலை நரம்பு.
நாடு _ நாட்டுப் பகுதி : இடம் : பூமி : உலகம் : நாட்டுப்புறம் : மருத நிலம் : பக்கம் : இடப்பரப்பு : ஒரு பேரெண் : நாடு என்னேவல்.
நாடுதல் _ தேடுதல் : விரும்புதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:59 pm

நாடுபடுதிரவியம் _ நாட்டில் விளையும் பொருள்களான நெல், பயறு, கரும்பு முதலியன.
நாடுரி _ ஒன்றரை நாழி கொண்ட முகத்தல் அளவை.
நாடோடி _ ஊர்சுற்றுபவன்.
நாடோறும் _ தினமும் : நாள் தோறும்.
நாட்கடன் _ தினக்கடன்.



நாட்காலை _ ஏற்றபருவம் : விடியற்காலம்.
நாட்கூலி _ தினக்கூலி.
நாட்கொல்லி _ ஆயுளைப்போக்கும் இயமன்: வீண் பொழுது கழிப்பவன்.
நாட்டம் _ நோக்கம் : கண்: பார்வை : அழகு : சோதிட நூல் : விருப்பம் : ஐயம் : வாள்.
நாட்டவன் _ நாட்டுக்காரன்.



நாட்டார் _ தேசத்தார் : ஒரு சாதியரின் பட்டப்பெயர்.
நாட்டியக்காரன் _ கூத்தாடுபவன்.
நாட்டியக்காரி _ கூத்தாடுபவள்: பகட்டுக்காரி.
நாட்டியம் _ கைமுதலியவற்றால் காட்டும் குறிப்பு: கூத்து.
நாட்டுக்காவல் _ நாடு காக்கும் தொழில்.


நாட்டுதல் _ நடுதல்: படைத்தல்: நிலை நிறுத்தல்: எழுதுதல்.
நாட்டுத்தேவர் _ அந்தணர்.
நாட்டுப்புறம் _ பட்டிக்காடு.
நாட்டை _ ஒரு பண்.
நாட்பூ, நாட்போது _ அன்றலர்ந்த பூ.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 8:59 pm

நாணக்கேடு _ வெட்கமின்மை.
நாணம் _ வெட்கம் : அறிவு : மானம் : கூச்சம்.
நாணயம் _ நேர்மை : மனசாட்சி : முத்திரையிடப்பட்ட காசு : கட்டுப்பாடு : விலங்கின் மூக்கிலிடும் கயிறு.
நாணயவான் _ நேர்மையானவன்.
நாணல் _ வெட்கப்படுதல் : தருப்பை வகை : ஒரு புல் வகை.



நாணி _ வில்நாண்.
நாணீர் _ புதுப்புனல்.
நாணுகம் _ குதிரை.
நாணுதல் _ மனங்குன்றுதல் : அஞ்சுதல் : அடங்குதல்: வெட்கப்படுதல்.
நாணுவம் _ நாகணவாய்ப்புள்.



நாண் _ கூச்சம் : வெட்கம் : வில் நாண் : கயிறு : மாங்கலியம் கோத்த சரடு.
நாண்மங்கலம் _ பிறந்த நாள் சிறப்புச் சொல்லும் புறத்துரை.
நாண் மலர் _ அன்றலர்ந்த பூ.
நாண் மீன் _ அசுவினி முதலிய விண்மீன்.
நாண் முல்லை _ போரின் பொருட்டுக் கணவன் பிரிந்த நிலையில், இல்லின் தலைவன் தற்காத்துத் தங்கிய நிலைமை சாற்றும் புறத்துறை.



நாண்முழவு _ காலை முரசு : நாழிகைப் பறை.
நாண்மை _ வெட்கம் : மகளிர் கூச்சம்.
நாதகீதன் _ சிவபிரான்.
நாதக்குடம் _ சங்கு.
நாதக்குழல் _ ஊது கருவி.



நாதம் _ ஒலி: வாச்சிய ஓசை : இசைப்பாட்டு.
நாதரவி _ உடற்கொழுப்பு.
நாதன் _ தலைவன்: அரசன் : கணவன் : குரு: அருகன்.
நாதாங்கி _ பூட்டு : தாழ்ப்பாள் : சங்கிலி இவற்றை மாட்ட உதவும் கதவு நிலை உறுப்பு.
நாதாந்தம் _ ஞான நெறிகளுள் ஒன்று.



நாதார் _ ஏழைக்குடிகள்.
நாதி _ உறவினன் : ஞாதி : காப்பாற்றுவோன்.
நாந்தகம் _ திருமாலின் வாள் : வாள்.
நாந்தல் _ மந்தாரம் : ஈரம்.
நாந்தி _ நாடக முன்னுரை : பாயிரம் : முதுகு :சிராத்தவகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 9:00 pm

நாந்திகந்துரு _ மரமஞ்சள்.
நாந்துதல் _ நனைதல்.
நாபதி _ பேச்சாற்றல் : உடையவன்.
நாபி _ கொப்பூழ் : கத்தூரி.
நாபிசன் _ நான்முகன்.


நாபிரம் _ விந்து.
நாப்பண் _ நடு : தேர்நடு : யாழின் உறுப்பு.
நாப்பாடம் _ மனப்பாடம் பண்ணியது.
நாப்பு _ ஏளனம்.
நாப்புதல் _ வஞ்சித்தல் : ஏளனம் செய்தல்.



நாமகரணம் _ பெயரிடும் சடங்கு.
நாமகள் _ கலைமகள்.
நாமக்கட்டி _ திருமண் கட்டி.
நாமடந்தை _ நாமகள் : கலைமகள்.
நாமதேயம் _ கடல்.



நாமநீர் _ கடல்.
நாமம் _ திருமண் கட்டி : அச்சம் : நிறைவு : புகழ் : திருமண் காப்பு : பெயர்: தன்மைச் செடி : முள் தராசின் நடு.
நாமயம் _ தற்போதம்.
நாமவைகுண்டம் _ தும்மைப்பூடு.
நாமறுதல் _ முற்றும் அழிதல்.



நாமாவளி _ திருப்பெயர் வரிசை.
நாமிதம் _ வளைவு.
நாமுடி _ நாவின் நுனி : நுனி நாக்கு.
நாம் _ அச்சம் : தன்மைப் பன்மைப் பெயர்.
நாம்பு _ மெலிந்தது.



நாம்புதல் _ இளைத்தல்.
நாயகமணி _ அணிகலன் நடுவில் விளங்கும் இரத்தினமணி.
நாயகமுத்து _ பெருமுத்து.
நாயக மேனி _ மரகதப் பச்சை.
நாயகம் _ மேம்பாடு : தலைமை : கிரந்தி நாயகச்செடி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 9:00 pm

நாயகன் _ தலைவன் : கணவன் : அரசன் : கடவுள்.
நாயகி _ மனைவி : தலைவி : பார்வதி : ஒருபண்.
நாயக்கன் _ படைத்தலைவன் : ஒரு சாதிப்பெயர் : ஒரு பட்டப்பெயர்.
நாயரஞ்சி _ நாயுருவிச் செடி.
நாயனம் _ நாதசுரம்.



நாயனார் _ தலைவர் : சிவனடியார் : திருவள்ளுவர்.
நாயன் _ கடவுள் : அரசன் : தலைவன்.
நாயன்மார் _ பெரியபுராணத்தில் கூறப்படும் சிவனடியார்கள்.
நாயிகை _ தலைவி.
நாயுருவி _ ஒரு பூண்டு வகை.



நாயுள்ளி _ நரிவெண்காயம்.
நாயுறக்கம் _ பொய்யுறக்கம்.
நாயோட்ட்ம் _ குதிரை நடையில் ஒன்று.
நாயோட்டு மந்திரம் _ திருவைந்தெழுத்தில் சி என்னும் எழுத்து.
நாய் _ ஒரு விலங்கு : சூதாடு கருவி.



நாய்க்கரந்தை _ குன்றிக் கொடி.
நாய்த்திசை _ தென்மேற்குத் திக்கு.
நாய்த்துளசி _ கஞ்சாங் கோரைப் பூண்டு.
நாரகர் _ நரகத்துக்குரிய பாவிகள்.
நாரசிங்கம் _ உபபுராணத்துள் ஒன்று : மருந்து வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 9:00 pm

நாரணவன் _ கிருமி வகை : மாட்டு நோய்.
நாரணன் _ திருமால்.
நாணி _ துர்க்கை.
நாரதம் _ மேகம் : பெரியயாழ்: பதினெண் புராணத்துள் ஒன்று.
நாரதன் _ பிரம புத்திரராகிய பெருமுனிவர் : புத்தருள் ஒருவர்: கவகம் செய்பவன்.


நாரநிதி _ கடல்.
நாரம் _ நீர் : பாசி : நீர் வாழ்ப்பறவை: பசுவின் கன்று : ஆன்மாக்கள் : மக்கட் கூட்டம் : மரவகை.
நாரன் _ மன்மதன்.
நாராங்கி _ கதவின் தாழ்ப்பாள் : நாதாங்கி.
நாராசம் _ இரும்பாணி : எழுத்தாணி : விட்டம் : குறுக்குச் சந்து.



நாராயண கோபாலர் _ திருமாலுருவுடையோர்.
நாராயண கெளளம் _ ஒரு பண்.
நாராயணப்பிரியன் _ சிவபிரான்.
நாராயணம் _ அரச மரம் : நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று : கடல் மீன் வகை.
நாராயணன் _ நீரை இடமாக உடைய திருமால்: சிவபிரான்: நான்முகன் : வருணன் : சந்திரன்: திருமாலின் அவதாரமான ஒரு முனிவன் : நாரை வகை.



நாராயணாத்திரம் _ ஓர் அம்பு.
நாராயணி _ துர்க்கை : திருமகள்: பார்வதி : கங்கா தேவி: தண்ணீர் விட்டான் கிழங்கு : குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று.
நாராயம் _ அம்பு : எழுத்தாணி : அளவுப் படிவகை.
நாரி _ வில்லின் நாண் : பன்னாடை : யாழ்நரம்பு : பெண் : கள் : தேன்: பார்வதி : மணம் : சேனை : நன்னாரி : இடுப்பு.
நாரிகேரம் _ தென்னை : தேங்காய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 9:01 pm

நாரிகை _ பெண்.
நாரிபாகன் _ சிவபிரான்.
நாரிப்பிடிப்பு _ இடுப்புவலி.
நாரியங்கம் _ கிச்சிலி வகை.
நாரை _ வெண் கொக்கு : ஒரு நீர்ப்பறவை : பறவை வகை.



நார் _ மட்டை முதலியவற்றின் நார் : கயிறு : வில்லின் நாண்:பன்னாடை : கல் நார் : அன்பு.
நார்ச்சீலை _ மரவுரி.
நார் மடி _ பட்டாடை போன்றதும் நாரால் செய்ததுமான ஆடை வகை.
நார் மட்டை _ பனை மட்டை.
நாலம் பலம் _ கோயிலுள் ஒரு பகுதி.



நாலா _ பல : வாய்க்கால்: பள்ளத்தாக்கு.
நாலாரைச் சக்கரம் _ சித்திரகவி வகை.
நாலாவிதம் _ பலவிதம்.
நாலி _ முத்து : கார்த்திகைப்பூ : கந்தைத்துணி.
நாலிகம் _ எருமை : காகம் : தாமரை.



நாலிகை _ மூங்கில்.
நாலு _ நான்கு : சில : பல : நாலடியார்.
நாலுதல் _ தொங்குதல்: கழுத்திற் சுருக்கிட்டுக் கொள்ளுதல்.
நாலைங்கள்ளி _ இலைக்கள்ளி மரம்.
நால் _ நான்கு : நாலடியார் என்னும் தமிழ் நூல்.



நால்வாய் _ யானை தொங்கும் வாய்.
நாவடக்கம் _ மோனம்.
நாவணம் _ உள்நாக்கு.
நாவமிர்தம் _ அறிவுரை : பேச்சு.
நாவரசர், நாவரையர் _ திரு நாவுக்கரசு நாயனார்.



நாவலந்தீவு _ ஏழு தீவுள் உப்புக்கடல் சூழ்ந்த தீவு.
நாவலம் பொலம் _ சாம்பூநதம் என்னும் பொன்.
நாவலர் _ பேசுதலில் வல்லவர் : புலவர்: அமைச்சர்.
நாவலர் கோன் _ நாவலூரினரான சுந்தரர்.
நாவல் _ நாவல் மரம் : வெற்றியொலி : துன்பக் குறிப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 23 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 43 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 43  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum