தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 24 of 43 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 33 ... 43  Next

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:33 pm

First topic message reminder :

சாதனக்காணி _ அரசனால் கொடுக்கப்பட்ட உரிமை நிலம்.
சாதனபத்திரம் _ உரிமைப் பத்திரம்.
சாதனம் _ கருவி : பயிற்சி : துணைக்காரணம் : உருத்திராக்கம் முதலிய சின்னம் : இலாஞ்சனை : இடம் : நகரம் : ஆதார பத்திரம்.
சாதனம் பண்ணல் _ உறுதி செய்தல் : பழகுதல்.
சாதனன் _ பிறந்தவன்.



சாதனை _ செயல் முடித்தல்: விடாத முயற்சி : பிடிவாதம் : சலஞ் சாதிக்கை : நடித்துக் காட்டுகை : பொய்.
சாதன்மியம் _ ஒப்புமை.
சாதா _ சாதாரணமாக : பகட்டு இல்லாத.
சாதாரண _ ஒரு தமிழ் வருடம்.
சாதாரணம் _ பொதுவானது: எளிது : தாழ்வானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 9:01 pm

நாவழி _ நாக்கு வழிக்கும் கருவி.
நாவறட்சி _ நீர் வேட்கை.
நாவாய் _ மரக்கலம் : இரேவதி நாள் : ஒரு பறவை வகை.
நாவி _ கொப்பூழ் : கத்தூரிமான் : புழுகு பூனை : புழுகு : மரக்கலம்: ஊமத்தை.
நாவிகன் _ கப்பற்காரன்.



நாவிக்குழம்பு _ புழுகு.
நாவிசம் _ நாவிதத் தொழில்.
நாவிதன் _ அம்பட்டன் : கார்த்திகை நாள் : பூர நாள்.
நாவித்தண்டை _ எருமுட்டை : பீநாறிப்பூண்டு.
நாவிப்பிள்ளை _ கத்தூரி விலங்குக் குட்டி.



நாவிப்புழுகு _ புழுகு : மான்மதம்.
நாவியம் _ காந்தள் மலர்.
நாவிலை _ வெற்றிலை.
நாவின்கிழத்தி _ கலைமகள்.
நாவினார் _ நாவலர்.



நாவு _ நாக்கு.
நாவுதல் _ கொழித்தல் : நாவினால் குறிகாட்டி நகையாடுதல்.
நாவை _ கலப்பை நுனி : கொழு நுனி.
நாழம் _ வசை.
நாழி _ அளக்கும் கருவி : காற்படி: நாழிகை : அம்பறாத்தூணி : பூரட்டாதி நாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 9:02 pm

நாழிக்கிணறு _ சிறு கிணறு : திருச்செந்தூர்க் கடற்கரையிலுள்ள தீர்த்தக் கிணறு.
நாழிகை _ கால அளவு : அறுபது விநாடி கொண்டது : கோயிற் பகுதி : உத்திரட்டாதி நாள் : நாடா.
நாழிகைப் பறை _ நாழிகை அறிவிக்க அடிக்கும் பறை.
நாழிகை வட்டம் _ சூரியக் கடிகாரம் : நாழிகை வட்டில் : கடிகாரம்.
நாழிகை வட்டில் _ நாழிகையை அறிவிக்கும் கருவி.



நாழ் _ குற்றம் : செருக்கு : திறமை : நாள் : இல்லாதது சொல்லுதல்.
நாழ்மை _ குற்றம் : செருக்கு.
நாளகம் _ இலாமிச்சம் புல்.
நாளங்காடி _ பகலில் வாணிபம் செய்யும் கடை.
நாளது _ நடைபெறும் காலம் : நிகழ்காலம்.




நாளம் _ உள் துளை : தண்டு : நரம்பு : பொன்னாரிதாரம்.
நாளவை _ அன்றாடம் நடைபெறும் அளவைக் கூட்டம்.
நாளார் _ இயமன்.
நாளி _ நாய் : ஞாளி : கள் : அறுபது விநாடி கொண்ட நேரம்.
நாளிகம் _ வெள்ளைக் கொடி : தாமரை : மதிற் சுவரில் அமைக்கப்படும் எறிபடை.



நாளிகேரம் _ தென்னை.
நாளிதழ் _ தினசரி செய்தித்தாள்.
நாளினி _ புளி மாமரம்.
நாளும் _ தினந்தோறும்.
நாளுலத்தல் _ இறத்தல் : நாட் கழிதல்.



நாளை _ அடுத்த நாளில்: நாளுக்குரிய.
நாளோதி _ பஞ்சாங்கம் : ஓதுவோன்.
நாளோலை _ சாதகம் : முகூர்த்த ஓலை.
நாள் _ தினம் : காலம் : வாழ் நாள்: நன்னாள் : நட்சத்திரம் : திதி : வெண்பாவின் ஈற்றடியில் வரும் ஓரசைச் சீரின் வாய்ப்பாடு.
நாறல் _ நாறுதல்: தீ நாற்றம்.


நாறுகட்டி _ பெருங்காயம்.
நாறுதல் _ மணத்தல்: தோன்றுதல்: மோத்தல் : தீய நாற்றம் வீசுதல்.
நாற்சி _ தொங்குதல்.
நாற்பாட்டன் _ பாட்டனுக்குப் பாட்டன்.
நாற்பான் _ நாற்பது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 25, 2013 9:02 pm

நாற்பொருள் _ உறுதிப்பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு.
நாற்றம் _ மணம்: கள்: தோற்றம் : தொடர்பு.
நாற்றி _ நான்கு மடங்கு.
நாற்று _ பிடுங்கி நடும் பயிர்.
நாற்றுதல் _ தொங்கவிடுதல்.


நானச்செப்பு _ புழுகு செப்பு.
நானமா _ கத்தூரி விலங்கு.
நானம் _ மணப்பண்டம் : கத்தூரி : கத்தூரி விலங்கு : புழுகு : பூசுவன: கவரிமான்: ஞானம் : புனித நீராடல்.
நானா _ பல.
நானிலம் _ பூமி : குறிஞ்சி : முல்லை,மருதம்,நெய்தல் என்னும் நிலம்.


நான்கு _ ஓர் எண்.
நான் மாடக் கூடல் _ மதுரை நகரம்.
நான்முகத்தோன் _ பிரமன்.
நான்முத்தோன் _ பிரமன்.
நான்முகன் _ பிரமன்: அருகன்.
நான்முகன் தேவி _ கலைமகள்: நான்று :காலம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 3:57 pm

நி - இன்மை : அன்மை : அதிகம் : சமீபம் : நிறைவு : உறுதி : ஐயம் : வன்மை : விருப்பம் முதலிய
பொருள்களை உணர்த்தும் ஒரு வடமொழி இடைச்சொல் : ஓர் எழுத்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 3:57 pm

நிகடம் _ அண்மை.
நிகணம் _ வேள்விப்புகை.
நிகண்டு _ சொற்பயன் விளக்கும் நூல்: அகராதி : உறுதி : படலம்.
நிகதம் _ பேச்சு.
நிகப்பிரபை _ இருள்.


நிகம் _ ஒளி.
நிகரம் _ கூட்டம் : மொத்தம் : கொடை : பொருள்.
நிகரார் _ பகைவர்.
நிகரிடுதல் _ ஒப்பிடுதல்.
நிகருவம் _ அடக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 3:57 pm

நிகர் _ ஒப்புமை : சமானம் : ஒளி: போர்.
நிகர்ப்பு _ ஒப்பு : போர்.
நிகர்வு _ ஒப்பு.
நிகலம் _ பிடரி.
நிகழ்காலம் _ தற்காலம்.



நிகழ்ச்சி _ சம்பவம் : செயல்.
நிகழ்தல் _ நடத்தல் : தங்குதல் : விளங்குதல்.
நிகளம் _ தளை : நீளம் : யானைக் காற் சங்கிலி : விலங்கு.
நிகற்பம் _ பத்து லட்சங்கோடி.
நிகாசம் _ உவமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 3:58 pm

நிகாதம் _ நரகம்.
நிகாதன் _ வஞ்சகன்.
நிகாயம் _ இடம் : வீடு : நகரம் : கூட்டம்.
நிகாயன் _ வடிவமற்ற கடவுள்.
நிகாரணம் _ காரணமற்றது : கொலை.


நிகாரம் _ அவமரியாதை : பணி : தவறு : தூற்றுதல்: விழுங்குதல்.
நிகிதம் _ படை : இதம் : இன்மை.
நிகிருதி _ வறுமை : பொல்லாங்கு : நிந்தை.
நிகிலம் _ எல்லாம்.
நிகீனன் _ கீழ்மகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 3:58 pm

நிகுஞ்சம் _ புதர்வீடு : குகை : சிறுகுடிசை.
நிகுஞ்சனம் _ கொலை.
நிகுட்டம் _ தொனி.
நிகுத்தை _ கதவு.
நிகூடம் _ ஆழம் : மறைவு.


நிகேதனம் _ வீடு : கோயில்: நகரம்.
நிகோதம் _ விலங்கினம் : கொடிய நரகத்துன்பம்.
நிக்கந்தன் _ அருகன்.
நிக்கிரகம் _ தண்டனை : அடக்குதல்: அழித்தல்: வெறுப்பு : வாதத் தோல்வி : எல்லை.
நிக்குரோதம் _ ஆலமரம்: கட்டாமணக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 3:58 pm

நிசகரம் _ உறுதியளித்தல்.
நிசங்கம் _ அம்புக்கூடு : இணக்கம்.
நிசதி _ தவறாது : நாள்தோறும்.
நிசப்தம் _ அமைதி.
நிசம் _ உண்மை.


நிசா _ இரவு.
நிசாகசம் _ இரவில் மலரும் ஆம்பல்.
நிசாகம் _ மஞ்சள்.
நிசாகரன் _ சந்திரன்: சேவல்.
நிசாசரம் _ ஆந்தை : பாம்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 3:59 pm

நிசாசரன் _ அசுரன்: சந்திரன்: இராக்கதன்.
நிசாசரி _ கூகை : அரக்கி : விலைமகள்.
நிசாசலம் _ பனி.
நிசாடம் _ ஆந்தை.
நிசாடு _ மஞ்சள்.


நிசாதனம் _ வீடு: இடம் : நகரம் :உடல்.
நிசாதன் _ வஞ்சகன்: இழிஞன்.
நிசாதி _ மாலை வெளிச்சம்.
நிசாந்தம் _ விடியற்காலம்.
நிசாபதி _ சந்திரன்: கருப்பூரம்.



நிசாமணி _ மின்மினி : சந்திரன்.
நிசாமனம் _ கேள்வி : பார்வை : நிழல்.
நிசாமானம் _ இராக்கால அளவு.
நிசாரணம் _ கொலைகாரன்.
நிசாரம் _ வருத்தம் : சத்தற்றது.


நிசாரி _ சூரியன்.
நிசார்த்தம் _ உண்மை.
நிசாளம் _ ஒரு கட்பறை.
நிசான் _ கொடி.
நிசி _ நள்ளிரவு : இருள்: மஞ்சள்: பொன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 3:59 pm

நிசிசரன் _ அசுரன்: சந்திரன்: கள்வன்: காவற்காரன்.
நிசிதம் _ இரும்பு : கூர்மை: பொய்: இகழ்ச்சி.
நிசிதன் _ அசுரன்: இழிந்தன்.
நிசிந்தன் _ ஈசன்.
நிசீதம் _ நள்ளிரவு : இரவு : கூர்மை : புன்மை.



நிசீதிகை _ உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுதல்.
நிசுளம் _ நீர்க்கடப்பமரம்.
நிசூதனம் _ அழித்தல்.
நிசை _ இரவு.
நிச்சயம் _ உறுதி : மெய்.


நிச்சயித்தல் _ உறுதிப்படுத்தல்.
நிச்சலம் _ நித்தியத்துவம் : அசைவின்மை.
நிச்சலை _ பூமி : சத்திவிசேடம்.
நிச்சல் _ எப்போதும்.
நிச்சாயகம் _ உறுதிப்படுத்துவது.



நிச்சாரகம் _ காற்று.
நிச்சாலங்கம் _ மலை.
நிச்சித்தம் _ மனோலயம் : கவலையின்மை.
நிச்சிந்தன் _ அருகன்: ஈசன்.
நிச்சிரேணி _ ஏணி.




நிச்சிரேயசம் _ வீடு பேறு.
நிடதம் _ ஒரு நாடு : ஒரு மலை.
நிடலம் _ நெற்றி.
நிடலாட்சன் _ சிவபிரான்.
நிடாதம் _ ஏழிசையுள் ஏழாவது.



நிடூதனம் _ கொலை.
நிடூதனன் _ கொலைகாரன்.
நிடேகம் _ விலக்கு : விலக்கப் பட்ட பொருள்.
நிட்கண்டன் _ பகையற்றவனாகிய சிவபிரான்.
நிட்கம் _ நாணயவகை : பொன்: பறைவகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:00 pm

நிட்களங்கம் _ மாசின்மை.
நிட்களம் _ தூய்மை : உருவமின்மை.
நிட்களர் _ சிவபிரான்.
நிட்காமியம் _ விருப்பமின்மை : பயனை விரும்பாது செய்யும் செயல்.
நிட்காரம் _ நிந்தை.


நிட்குடி _ ஏலம்.
நிட்டூரம் _ கொடுமை.
நிட்டை _ தியானம் : நோன்பு நோற்றல்.
நிட்பிரபஞ்சம் _ பிரபஞ்சத்தைக் கடந்தது.
நிட்பிரபஞ்சன் _ சாந்தமுள்ளவன்.



நிணச்செருக்கு _ உடற் கொழுப்பாலாகிய ஆணவம்.
நிணம் _ கொழுப்பு : ஊனீர் : ஊன்.
நிணர்தல் _ கட்டுதல் செறிதல்.
நிணவை _ பிணிப்பு : பின்னிச் செய்யப்பட்டது.
நிணறு _ உருக்கம் : இதழ்.



நிண்ணயம் _ ஏற்பாடு : உறுதி : ஆராய்வு.
நிதகம் _ நீர்முள்ளிப் பூண்டு.
நிதம் _ தினமும்.
நிதம்பம் _ தோள் : மலைப்பக்கம்: பிருட்டம் : அல்குல்: கரை: கற்பரிபாடாணம்.
நிதரிசனம் _ எடுத்துக்காட்டு : உவமையணி.




நிதலம் _ கீழேழுலகத்துள் ஒன்று.
நிதனம் _ வறுமை : அழிவு : சாவு: பிறந்த நாளுக்கு ஏழாம் நாள்.
நிதாகரன் _ சூரியன்.
நிதாகம் _ வெப்பம் : வியர்வை.
நிதாந்தன் _ மேன்மையுள்ளவன்.



நிதார்த்தம் _ உறுதி : நேர்மை : உண்மை : சமன் செய்கை.
நிதானம் _ பொன்: இரத்தினம் : படை : தீர்மானம் : நோக்கம் : நேர்மை : சமம் : பிரமாணம் : அமைதி : பெளத்தர் கூறும் 12 நிதானங்கள்.
நிதானவான் _ அறிவாளி.
நிதானன் _ கடவுள்.
நிதி _ பொன்: பொருட்குவை.




நிதிக்கோன் _ குபேரன்.
நிதிநிட்சேபம் _ புதையல்.
நிதிப் பொதி _ பொற்கிழி.
நிதீசன் _ குபேரன்.
நிதுவனம் _ கலப்பு : புணர்ச்சி: மகிழ்ச்சி : விளையாட்டு.



நிதேசம் _ கட்டளை : சொல்: அண்மை.
நிந்தகன் _ இழிவாகப்பேசுவோன்.
நிந்தம் _ தனியுரிமை.
நிந்தனை _ இகழ்ச்சி.
நிந்தாத்துதி _ இகழ்தல் போலப் புகழ்தல்.




நிந்திதம் _ பரிகாசம் : ஏளனம் : தடை.
நிந்து _ வயிற்றில் இறந்த பிள்ளையைப் பெற்றவள்.
நிந்தை _ நிந்தனை.
நிபதனம் _ கீழ் இறக்குதல்.
நிபத்தி _ உண்மை : தோன்றுமிடம் : உதவி.



நிபத்தியை _ போர்க்களம்.
நிபந்தம் _ கோயிற் கட்டளைக்கு விடப்பட்ட சொத்து : தாவரப் பொருள் : அணை : கடமை : யாப்பு.
நிபந்தனை _ கட்டுப்பாடு : பொது விதி : தண்டனை.
நிபம் _ உவமை: வஞ்சனை : கோள் : காரணம்.
நிபாதம் _ இறப்பு : செயலொழிதல்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:00 pm

நிபாதனம் _ கொல்லுகை.
நிபானம் _ கிணறு : பாற்குடம்.
நிபீடனம் _ மல்வித்தை.
நிபுடம் _ நெருக்கம்.
நிபுணம் _ திறமை : சிறப்பு.



நிப்பரம் _ பாராமின்மை : அசைவின்மை.
நிப்பாட்டுதல் _ தாமதித்தல் : நிறுத்துதல் : நேராக நடுதல்.
நிமந்தக்காரர் _ கோயில் வேலைக்காரர் : திருவடி தாங்குவோர்.
நிமந்தம் _ கோயில் ஊழியம்.
நிமலம் _ மாசின்மை.



நிமலன் _ தூயன் : கடவுள்.
நிமலை _ உமாதேவி.
நிமிடம் _ கால நுட்பம் : தாளத்தின் காலவகை.
நிமிடன் _ திறமையாளன்.
நிமிடிபாதம் _ கண்டிப்பு : பிடிவாதம்.



நிமிடு _ திறமையான வேலை.
நிமிண்டி _ சிறு திருடன் : ஓர் எறும்பு வகை.
நிமிண்டுதல் _ கசக்குதல் : கிள்ளுதல்.
நிமிதல் _ வாய் நெளிதல்.
நிமித்தம் _ அடையாளம் : காரணம் : சகுனம் : காரணம்.



நிமிரல் _ சோறு.
நிமிர்தல் _ உயர்தல் : வளர்தல்: ஏறுதல்: நடத்தல்:உறுதியாதல்.
நிமிளன் _ கெட்டிக்காரன்.
நிமிளை _ செவ்வெண்மையான கல்வகை.
நிமை _ இமை.


நிமைத்தல் _ இமைத்தல்.
நிம்பம் _ வேப்ப மரம்.
நிம்பன் _ பாண்டியன்.
நிம்பிரி _ பொறாமை.
நிம்பை _ திருமகள்.


நிம்மதி _ மனஅமைதி.
நிம்மளம் _ களங்கமற்றது : மனஅமைதி.
நியக்கி _ மான்.
நியக்குரோதம் _ ஆலமரம்.
நியதம் _ அடக்கம் : எப்பொழுதும்.



நியதி _ கட்டுப்பாடு : ஒழுக்கவிதி : வரையறை.
நியதுதல் _ விடுதல்.
நியந்தா _ கடவுள்: கட்டளையிடுவோன்.
நியமம் _ விதி : அட்டயோக விதி : உறுதி : முடிவு: நகரம் : கோயில்: மண்டபம் : வீதி: இடம்.
நியமனம் _ ஆணை :கட்டளை : நியர்: ஒளி.


நியர்ப்புதம் _ பதினாயிரங்கோடி.
நியாசம் _ கரியை : வேம்பு : ஈடுவைத்த பொருள்: தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்தல்.
நியாமகன் _ ஓட்டுநன் : மாலுமி.
நியாயசபை _ நீதிமன்றம்.
நியாய மலைவு _ தருக்க நூலுக்கு மாறான கூற்று.



நியாயமுரசு _ அரசன் நீதி வழங்குவதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு.
நியாயம் _ நீதி : வாய்மை : சட்டம் : நன்னெறி : கட்டுப்பாடு.
நியாய வாதி _ வழக்கறிஞன்.
நியாயவான் _ நீதிபதி.
நியாளம் _ ஒரு பறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:00 pm

நியுதம் _ நூறாயிரம் : பத்து நூறாயிரம்.
நியுத்தன் _ ஒரு செயலைச் செய்ய அமர்த்தப்பட்டவன்.
நியூனம் _ குறைவு.
நியோகம் _ கட்டளை : தத்துவம் : உறுதி : முயற்சி : நியமித்த தொழில்.
நியோசனம் _ இசைவு : கட்டளை.



நிரக்கு _ நேர்மை: அகவிலை.
நிரங்குசம் _ கட்டுப்படாமை.
நிரசம் _ சுவையின்மை : சத்தற்றது.
நிரசனம் _ பட்டினி : அழித்தல்: கக்குதல்.
நிரஞ்சனம் _ பட்டினி : அழித்தல்: கக்குதல்.




நிரஞ்சனம் _ குற்றமில்லாதது: வெளி : நிறைவு : வீடு பேறு : இரசகற்பூரம்.
நிரஞ்சனன் _ சிவன் : கடவுள்: அருகன்.
நிரஞ்சனி _ பார்வதி தேவி.
நிரட்சம் _ நிலநடுக்கோடு : பூமத்தியரேகை.
நிரதம் _ எப்பொழுதும்.



நிரதி _ பற்று.
நிரதிசயம் _ உயர்ந்த நிலைமை.
நிரந்தம் _ முடிவற்றது : குரங்கு: நெருக்கிடை.
நிரந்தரம் _ இடைவிடாமை : எப்போதும் இருப்பது : நெருக்கம் : அழிவு : சாராசரி: குரங்கு.
நிரபராதி _ குற்றமற்றவன்.



நிரப்பம் _ முழுமை : இறப்பு : ஒப்புமை : கற்பு : சமம்.
நிரப்போர் _ வறியர்: இரப்போர்.
நிரம்ப _ நிறைய : மிகுதியாக.
நிரம்பரன் _ ஆடையில்லாதவன்: அருகன்: சிவன்.
நிரம்பாமொழி _ மழலைச்சொல்.



நிரம்பியம் _ வாழை.
நிரயபாலர் _ நரகத்தில் உள்ளவர்.
நிரல் _ வரிசை: ஒப்பு.
நிரவதி _ எல்லையற்றது.
நிரவம் _ ஒலியின்மை.



நிரவயன் _ அழிவில்லாத கடவுள்.
நிரவுதல் _ சமனாதல்:தீர்தல்: பரவுதல்: குறைதீர்த்தல்: அழித்தல்: சரிப்படுத்துதல்.
நிரனிறை _ ஒழுங்காக நிறுத்தல்: பொருள் கோள் தன்மையில் சொற்களை நிறுத்தல்.
நிராகம் _ உடலின்மை.
நிராகரணம் _ மறுப்பு.



நிராகாரம் _ புறக்கணிப்பு : உருவமின்மை : வானம் : வீடு பேறு: உணவின்மை.
நிராகுலம் _ கலக்கமின்மை.
நிராங்குதல் _ நருங்குதல்: தேய்தல்: நொறுங்குதல்.
நிராசை _ விருப்பமின்மை.
நிராதபகை _ இரவு.



நிராதாரம் _ ஆதாரமின்மை.
நிராமயம் _ நோயற்றது.
நிராமயன் _ கடவுள்.
நிராயுதன் _ ஆயுதமற்றவன்: அருகன்.
நிராலம்பம் _ பற்றுக்கோடின்மை : வெளி: 108 உபநிடதங்களுள் ஒன்று.



நிராலம்பன் _ கடவுள்.
நிரியாணம் _ யானைக் கடைக் கண்: இறப்பு : வீடு பேறு.
நிரீட்சண சுத்தி _ கண்ணேறு கழித்தல்.
நிரீட்சணம் _ பார்வை : மதிப்பு.
நிரீச்சுரம் _ கடவுள் இல்லை என்னும் மதம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:01 pm

நிருணயம் _ ஆராய்வு : உறுதி.
நிருதர் _ அரக்கர்.
நிருதி _ தென்மேற்குத்திக்குப் பாலகன் : அரக்கி.
நிருதூளி _ தூளி : அழுக்கு.
நிருத்தம் _ நடனம் : பற்றின்மை.




நிருத்தாசனம் _ தீர்மானம்.
நிருபர் _ செய்தி திரட்டுபவர்.
நிருபன் _ அரசன்.
நிருமதம் _ யானை.
நிருமலம் _ மாசின்மை.



நிருமாலியம் _ பூசித்துக் கழித்த பொருள்.
நிருமிதி _ படைப்பு.
நிருவாகம் _ ஆளுகை : பொறுப்பு : மேற்பார்வை : ஒம்புகை.
நிரூபணம் _ மெய்ப்பித்தல்: ஆராய்ச்சி.
நிரை _ வரிசை : ஒழுங்கு : படை வகுப்பு : பசுக்கூட்டம் : நிரையசை.



நிரைகிளம்பி _ சினையாடு.
நிரைதல் _ நிரப்புதல்: ஒழுங்காக்குதல்: முடைதல்: முறைப்படுதல்.
நிரையம் _ நரகம்.
நிரோதம் _ தடை : அடக்கம்.
நிரோதனை _ புலனடக்கம்.


நிர்க்கதி _ கதியின்மை.
நிர்க்குணம் _ குணமின்மை : இழி குணமில்லாமை.
நிர்ணயம் _ உறுதி : ஆராய்வு.
நிர்ப்பந்தம் _ கட்டாயம் : தொந்தரவு.
நிர்மலம் _ மாசின்மை.



நிர்மலன் _ கடவுள்.
நிர்மாலியம் _ பூசித்துக் கழித்த பொருள்.
நிர்மூலம் _ பாழாதல்: காரணமற்றது.
நிர்வகித்தல் _ செயல் நடப்பித்தல்: ஆளுதல்.
நிர்வாகி _ மேலாளர் : பொறுப்பாளர்.



நிர்வாணம் _ சமண பெளத்தரின் முத்திநிலை : வீட்டின்பம் : அம்மணம்.
நிர்விகற்பம் _ வேறு பாடின்மை : ஐயமின்மை.
நிர்விசாரம் _ கவலையின்மை: துயரின்மை.
நிலக்கடலை _ வேர்க் கடலை : மணிலாக் கொட்டை.
நிலக்கரி _ பூமியிலிருந்து எடுக்கப்படும் கரிவகை.



நிலக்கிழார் _ நிலத்துக்கு உரியவர்.
நிலக்குழி _ உரக்குழி.
நிலத்தாமரை _ ரோசா மலர்.
நிலநடுக்கம் _ பூகம்பம் : பூமி அதிர்வு.
நிலபுலம் _ நன்செய் புன்செய் : விளை நிலம்.



நிலமகள் _ பூமதேவி.
நிலமகன் _ செவ்வாய்.
நிலமடந்தை _ நிலமகள்.
நிலம் _ தரை : மண்: பூமி : இடம் : வயல்.
நிலம்பி _ கொசு.



நிலவடலி _ சிறுபனை மரம்.
நிலவரம் _ நிலைபேறு : நிலைமை : அன்றாட வேலை.
நிலவரி _ அரசாங்கத்துக்குச் செலுத்தும் வயலில் பயிரிடுவதற்கான வரி.
நிலவாரம் _ பயிரிடுவோன் நிலச் சாந்தக்காரருக்குக் கொடுக்கும் தானியத்தின் ஒரு பகுதி.
நிலவு _ சந்திரன்: நிலவொளி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:01 pm

நிலவுதல் _ தங்குதல்: நிலைத்திருத்தல்:வழங்குதல்: பரவுதல்.
நிலவுலகம் _ பூமி.
நிலா _ நிலவு : நிலாக்கொழுந்து : இளம்பிறை.
நிலாவுதல் _ நிலைத்திருத்தல்.
நிலுவை _ வரவு பாக்கி.


நிலை _ தன்மை : இடம் : உறுதி : தூண் : பசு ஒரு தடவை கழிக்கும் சாணி.
நிலைக்களம் _ தங்குமிடம்.
நிலைகுலைதல் _ சிதறவடித்தல்: ஒழுக்கம் கெடுதல்.
நிலைகெடுதல் _ தடுமாறல்.
நிலைத்தல் _ நிலைபெறுதல்.


நிலைத்தானம் _ கோயில்.
நிலை _ நீர்: கடல்.
நிலைப்பாடு _ உறுதிப்பாடு.
நிலை மண்டிலம் _ ஆசிரியப்பாவகை.
நிலைமை _ இயல்பு : நிலவரம் : திண்மை : உண்மை.



நிலையகம் _ மனை.
நிலையம் _ தங்குமிடம் : கோயில் : படி: கூத்து : மருதநிலத்தூர் : இலக்கு.
நிலையாமை _ அழிந்து படும் தன்மை.
நில் _ நிற்றல்: நில்னென்னேவல்.
நில்லாமை _ உறுதிப்படாமை: அழிவது.




நிவகம் _ கூட்டம்.
நிவசதி _ வீடு.
நிவசனம் _ ஆடை.
நிவத்தல் _ உயர்தல் : படர்தல் : வளர்தல் : மேலாதல் : தோன்றுதல்.
நிவந்தம் _ கோயில் தொண்டு : நிபந்தனை : கடவுளை வழிபடும் இடம்.



நிவப்பு _ உயரம்.
நிவம் _ தோளின் மேலிடம்.
நிவர்தல் _ ஓங்குதல்.
நிவறுதல் _ மொய்த்தல்: பொடியாதல்.
நிவாசம் _ தெய்வம் வாழிடம்.



நிவாதம் _ காற்றின்மை.
நிவாரணம் _ தடுக்கை : தடை : ஒழிப்பு : துன்ப நீக்கம்.
நிவாரம் _ தடை.
நிவி _ மாமரம்.
நிவிர்த்தி _ விடுதலை : துறவு: ஒழிப்பு.



நிவிர்த்திகலை _ ஆன்மாக்களைத் தளையின்ன்று விடுவிப்பது.
நிவேசம் _ வீடு.
நிவேசனம் _ இடம் : வீடு : ஊர்: 2400 சதுர அடிகொண்ட மனையளவு.
நிவேதனம் _ கடவுளுக்குப் படைக்கும் அமுது : ஒப்புவித்தல்.
நிழத்துதல் _ தின்றழித்தல் : இன்மையாக்குதல்.




நிழலாடுதல் _ எதிரொளித்தல் : நிழல் தோன்றுதல்.
நிழலி _ ஒளி : நீதி : காற்று : நோய்.
நிழலுதல் _ ஒளி செய்தல்.
நிழல் _ சாயை : எதிரொளி : அச்சு : குளிர்ச்சி : அருள் : ஒளி : நீதி : புகலிடம் : கொடை : செல்வம் : மரக்கொம்பு : நோய் : பேய்.
நிழறுதல் _ ஒளிவிடுதல்.



நிழற்றுதல் _ ஒளிவிடுதல் : நிழல் செய்தல் : அடங்குதல் : காத்தளித்தல்.
நிறக்கேடு _ புகழ்க்குறைவு.
நிறங்குணம் _ இயல்பு.
நிறம் _ வண்ணம் : இயல்பு : ஒளி : புகழ் : இசை : மார்பு : நடுவிடம் : உயர்நிலை : உடல் : தோல்.
நிறுத்தல் _ நிலை நிறுத்தல் : எடை பார்த்தல் : தீர்மானித்தல் : படைத்தல் : தடை செய்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:01 pm

நிறுப்பான் _ துலா : துலா ராசி.
நிறை _ தராசு : எடை : துலா ராசி : கற்பு வழி நிற்றல் : மனவடக்கம் : வலிமை : அறிவு : அழிவின்மை : நீதி : மிகுதி : கவனம் : நீர்ச்சால்.
நிறைகுடம் _ பூரண கும்பம் : கல்வி, செல்வம் முதலியன நிறையப் பெற்றும் தற்பெருமை கொள்ளாதவன்.
நிறை கோல் _ துலாக்கோல் : தராசு.
நிறைதல் _ நிரம்புதல் : மிகுதல்: பரவியிருத்தல்.



நிறை நரம்பு _ ஏழு சுரமுள்ள பண்.
நிறை நாழி _ மங்கல அறிகுறியாக நெல் நிரப்பி வைக்கப்பட்ட படி.
நிறை மணி _ விநாயகருக்குச் செய்யப்படும் திருமஞ்சனம்.
நிறைமதி _ முழு நிலவு.
நிறை மொழி _ பலிக்கும் வாக்கு: மந்திரம்.



நிறை மொழியாளர் _ புலவர் : முனிவர்.
நிறைய _ நிரம்ப.
நிறையழிதல் _ கற்பழித்தல்: ஒழுக்கங்கெடுதல் : யானை மதம் பிடித்தல்.
நிறைவு _ முழுமை : மிகுதி : மன நிறைவு :மாட்சிமை : வீடு பேறு : மகிழ்ச்சி.
நிறைவேறுதல் _ செயல் கை கூடுதல்.



நிற்காரம் _ இகழ்ச்சி.
நிற்புதம் _ பதினாயிரங்கோடி.
நினவ _ உன்னுடையன.
நினாதம் _ ஒலி.
நினைதல் _ கருதுதல்: தியானித்தல் : அறிதல்.



நினைப்பு _ எண்ணம் : கவனம் : நோக்கம்.
நின் _ உனது.
நின்மலம் _ மாசின்மை.
நின்மலன் _ கடவுள் : அருகன்.
நின்மலி _ வில்வம்.



நின்மாலியம் _ பூசித்துக் கழித்த மலர் முதலிய பொருள்.
நின்று _ எப்பொழுதும் : ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஓர் இடைச்சொல்.
நின்னாமன் _ பெயரில்லாதவன்: சிவன் : அருகன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:02 pm

நீகம் - தவளை : முகில்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:02 pm

நீகாசம் - ஒப்பு : மெய் : நிகர் : சமம் : நிசம்.
நீகாமன் - நீகான்.
நீகாரம் - சங்கையீனம் : பனி : ஆணவமலம் : அவமதிப்பு.
நீகான் - மீகாமன் : மாலுமி.
நீக்கம் - நீக்கல் : நீளம் : பிரிவு.


நீக்கல் - அகற்றல் : கண்ணறை : கொல்லல் : நீக்கம் : நீட்டல் : நீளல் : மாறுபாடு : மாற்றம்.
நீக்கு - நீக்கல் : நீக்கென்னேவல் : பிளப்பு : மீதி : விலக்கு.
நீக்குதல் - அகற்றுதல் : கழித்தல் : குலைக்குதல் : நீத்தல் : பிரித்தல்.
நீக்குப்போக்கு - இடைவெளி : உபாயம் : வழிவகை : இணக்கமாயிருத்தல் : மரியாதை.
நீங்கல் - பிரிதல்.


நீங்கள் - முன்னிலைப் பன்மைப் பெயர்.
நீங்காமை - பிரியாமை.
நீங்குபு - நீங்கி.
நீசகம் - நீர்.
நீசகன் - கீழ்மகன்.


நீசகை - நீசப்பெண் : யாறு.
நீசத்தனம் - இழித்தன்மை.
நீசநடை - தீயொழுக்கம்.
நீசம் - ஈனம் : உச்சத்திற் கேழாமிடம் : கொடுமை : இழிவு : தாழ்ச்சி : மஞ்சள்.
நீசர் - கீழ்மக்கள்.


நீசாரம் - கம்பளிப் புடைவை : திரைச் சீலை.
நீச்சல் - ஆழம் : நீந்தல்.
நீச்சு - நீந்துதல் : வெள்ளம் : மீன் கவிச்சு.
நீடசம் - குருவி.
நீடம் - இருப்பிடம் : பறவைக் கூடு.


நீடல் - நீளல்.
நீடிப்பு - நீடித்தல்.
நீடு - நெடுங்காலம் : நீண்ட காலம் : நெடுந்தொலை : சிறப்பு : உயர்வு : பெருமை.
நீடுதல் - செழித்தல் : நீறுதல் : நெடுங்காலத்திருத்தல் : நிலைத்திருத்தல்.
நீடுநினைந்திரங்கல் - அகப் பொருட்டுறையினொன்று : அது தலைவியை மிக நினைத்துத் தலைவன் இரங்கல்.


நீடூழி, நீடூழிகாலம் - மிகப் பல காலம்.
நீட்சி - நீளம் : விசாலம்.
நீட்டல் அளவை - கோல் முதலியவற்றால் அளத்தல்.
நீட்டல் அளவையாகுபெயர் - நீட்டியளத்தற்குரிய கருவியின் பெயர் அதனால் அளக்கப்படுவதற்கு வழங்குவது
[உ-ம்] கீழைத்தடி விளைந்தது.
நீட்டாள் - நெடியவன்.


நீட்டித்தல் - தாமதித்தல் : நெடும் பொழுது செல்லல்.
நீட்டு - நீட்டென்னேவல் : நீளம் : நெடும்பொழுது : திருமுக ஓலை.
நீட்டு முடக்கு - கொடுக்கல் வாங்கல்.
நீட்பம் - நீளம் : நீட்டுப் போக்கு.
நீணெறி - நீண்ட வழி.


நீண்டது - நெடியது.
நீண்டமயல் - பெரு மயக்கம்.
நீண்டவன் - திருமால்.
நீண்டாயம் - நீளம் : நீட்பம் : நீட்டம் : நீட்சி.
நீதம் - தானியம் : நன்னெறி : நீதி : பாக்கியம் : தகுதி.


நீதவான் - நீதித்தலைவன்.
நீதி - நியாயம் : முறைமை : மெய்.
நீதிகேடு - அநியாயம்.
நீதிநெறி - சன்மார்க்க முறை.
நீதிபரன் - அரசன் : கடவுள் : நீதியினின்றுந் தவறாதவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:03 pm

நீதியற்றவன் - அநியாயக்காரன்.
நீத்தம் - வெள்ளம் : ஆழம் : கடல் : மிகுதி.
நீத்தல் - பிரிதல் : துறத்தல் : தள்ளுதல் : வெறுத்தல்.
நீத்தவன் - அருகன்.
நீத்து - நீந்தல் : நீந்து : புனல்.


நீத்தோர் - துறவோர்.
நீபம் - உத்திரட்டாதி நாள் : கடம்பு : வெண் கடம்பு : காரணம்.
நீப்பு - துறவு : பிரிவு.
நீமம் - ஒளி.
நீம்பல் - வெடிப்பு.


நீயம் - ஒளி.
நீயல் - நீங்கல் : விடுதல்.
நீயாத - விடாத.
நீயான் - மாலுமி.
நீயிர் - நீவிர்.


நீர் - குணத்தையுடையன.
நீரகம் - கடல் சூழ்ந்த இடம் : பூமி.
நீரசம் - தாமரை : மாதுளை : சுவையற்றது.
நீரணி - நீர் விளையாட்டுக் கோலம்.
நீரணிமாடம் - பள்ளியோடம்.


நீரதம் - முகில்.
நீரதி - கடல் : சாறு.
நீரத்தி - ஒரு மரம்.
நீரநிதி - கடல்.
நீரம் - நீர்.


நீரரண் - நான்கரணில் ஒன்று.
நீரரமகளிர் - நீரில் வாழுந் தெய்வப் பெண்கள்.
நீராசனம் - நீராஞ்சனம் : நீராரத்தி.
நீராஞ்சனம் - ஆலாத்தி.
நீராட்டுதல் - முழுக்காட்டுதல்.


நீராணிக்கம் - நீர்வளம் : ஈரம் : நீர் பாய்ச்சுவோனுக்குக் குடிகள் தரும் சுதந்திரம்.
நீராம்பல் - ஆம்பல்.
நீராவி - கேணி : புகை : தடாகம்.
நீராழிமண்டபம் - குளத்தின் நடுவே கட்டப்பட்ட மண்டபம்.
நீராளம் - நீர்த்தன்மை : நீர் மிகுதி : நீருடன் கலந்த உணவு : மயக்கம் இல்லாத இனிப்புக்கள்.


நீருபம் - ஆகாயம் : காற்று.
நீரேற்றம் - ஒரு நோய் : நீர்ப்பெருக்கு.
நீரோடி - மதகு.
நீரோருகம் - தாமரை.
நீர் - கடல் : குணம் : சாறு : தன்மை : நீரென்னேவல் : நீவிர் : புனல் : அட்ட மூர்த்தத் தொன்று :
பஞ்ச பூதத் தொன்று : பூராட நாள்.


நீர்க்காவி - கருங்குவளை.
நீர்க்குடம் - பூரண கும்பம் : அட்டமங்கலத்தொன்று : இராசசின்னத் தொன்று.
நீர்க்கைக்கதவு - மதகு.
நீர்க்கோப்பு - சலதோடம்.
நீர்க்கோவை - நீர்ப்பிடிப்பு.


நீர்ச்சால் - தண்ணீர் : மிடா : நீர் இறைக்கும் நீர் கலந்த சால்.
நீர்த்தாரை - சலதாரை : ஆண்குறி.
நீர்த்திவலை - நீர்த்துளி.
நீர்த்தூம்பு, நீர்போகி - மதகு.
நீர்நாள் - பூராடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:03 pm

நீர்பிரிதல் - சினத்தல்.
நீர்பெய்கலன் - கமண்டலம்.
நீர்ப்பஞ்சு - கடற்காளான்.
நீர்ப்பரிசை - ஆமை.
நீர்ப்பாடு - விடக்கிராணி : நீரிழிவு : நீர்க்குறைவு.


நீர்ப்பீனசம் - சளிவகை.
நீர்ப்பூ - நால்வகைப் பூவினொன்று.
நீர்மை - ஒப்புரவு : குணம் : நிலைபரம் : சிறந்த குணம் : நீரின் தன்மை : அழகு : ஒளி.
நீர்வாரம் - குளநெல் : நீர்வஞ்சி.
நீலகண்டம் - மயில்.


நீலகண்டன் - சிவன் : திருநீல கண்ட நாயனார்.
நீலகண்டி - பாம்பின் நச்சுப் பல்லில் ஒன்று : பொல்லாதவள்.
நீலகமலம் - கருங்குவளை.
நீலக்கிரீவன் - சிவன்.
நீலங்கட்டுதல் - நீலச் சாயந் தோய்த்தல் : பொய்கற்பித்தல்.


நீலபங்கம் - கருஞ்சேறு.
நீலமணி - கண்ணில் உள்ள கருமணி : மரகதமணி.
நீலமேகம் - நீருண்ட மேகம்.
நீலமேனியன் - திருமால்.
நீலர் - இராக்கதர் : அரக்கர்.


நீலம் - இருள் : ஒரு நிறம் : கருங்குவளை : கறுப்பு : காற்று : நஞ்சு : நவமணியின் ஒன்று : நீலக்கட்டி :
துரிசு : கண்ணிலிடும்மை : பனை மரம்.
நீலம்பற்றவைத்தல் - கதை கட்டுதல்.
நீலவண்ணன் - சனி : திருமால்.
நீலவருணம் - தீப்பொழியும் முகில்.
நீலவழுதலை - நீலக் கத்திரிக்காய் : நீலவழுதுணை.


நீலன் - சனி : வானரவீரன் : கொடியவன் : குதிரை வகை : மாங்கனி வகை.
நீலாங்கம் - புழு : மலைத்தேள்.
நீலாஞ்சனை - மின்னல்.
நீலாட்சம் - அன்னப்புள்.
நீலாம்பரன் - பலபத்திரன்.


நீலாம்புசம் - கருங்குவளை.
நீலி - நீலநிறமுடையவள் : அவுரி : கருநொச்சி : கறுப்பு : காளி : துட்டை : துருசு : துர்க்கை : பாம்பின்
நச்சுப்பல்லில் ஒன்று : பார்வதி : மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி மரம் : பெண் பேய்.
நீலிகை - அவுரி : தழும்பு.
நீலோற்பலம் - கருங்குவளை.
நீல் - காற்று : நீலம் : வாதம் : கறுப்பு : அவுரி : கருங்குவளை.


நீவரம் - சேறு : நீர் : வியாபாரம் : நாடு.
நீவல் - நீவுதல் : தடவுதல் : வருடுதல் : பூசல்.
நீவாரம் - செந்தினை : நாடு : வனநெல்.
நீவான் - மீகாமன்.
நீவி - கொய்சகம் : சீலை : முதற்பணம் : ஆடை : இறகு.


நீவியம் - சீலை.
நீவுதல் - தடவுதல் : தட்டுதல் : துடைத்தல் : பூசுதல்.
நீழல் - ஒளி : நிழல் : நோய்.
நீழை - ஒளி.
நீளத்தில் விடுதல் - காலந் தாழ்த்தல்.


நீளம் - தாமதம் : தொலை : நெடுமை.
நீளிடை - சேய்மை : நெடியவழி : காடு.
நீளித்தல் - தாமதித்தல் : நீளுதல் : நெடுநாள் இருத்தல்.
நீளியது - நெடியது.
நீள் - உயரம் : ஒளி : நீளம் : நீளென்னேவல்.


நீள்கை - உயர்வு : நீண்டகை : வளர்தல்.
நீள்சடையோன் - கொன்றை.
நீறணிந்தோன் - சிவன்.
நீறாடுதல் - அழித்தல் : பொடிப்படுத்தல்.
நீறு - சாம்பர் : சுண்ணம் : துகள் : நீறென்னேவல் : புழுதி : திருநீறு : நீற்றின சுண்ணாம்பு.


நீறுபடுதல் - அழிதல்.
நீறுபூத்த நெருப்பு - சாம்பல் படிந்த கட்டைத் தணல் : கோபத்தை வெளிக்காட்டாதவன்.
நீற்றறை - சுண்ணாம்புச் சூளை.
நீனிறவியலகம் - கடல் : முந்நீர் : மகராலயம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:04 pm

நு - ஆயுதப் பொது : ஐயம் சங்கை வினா என்பவைகளைக் காட்டும் ஓர் உபசருக்கம் : தியானம் : தோணி :
நிந்தை : நேரம் : புகழ்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:04 pm

நுகக்கால் - நுகம் : ஏர்க்கால்.
நுகம் - நுகத்தடி : பாரம் : நடுவு நிலைமை : வலிமை : காவின் கணைய மரம்.
நுகம்புரட்டி - ஒழுங்கு தவறுகிறவன் : கட்டுக்கமையாத எருது.
நுகர்ச்சி - அநுபவம் : உணவு : உண்டல்.
நுகர்தல் - அனுபவித்தல் : புசித்தல் : விழுங்கல் : செய்தல்.


நுகர்வு - நுகர்ச்சி.
நுகும்பு - மடல் விரியாத குருத்து : பனையோலை.
நுகைதல் - இளகுதல் : தளர்தல்.
நுகைத்தல் - இளக்குதல் : தளர்த்தல்.
நுகைவு - இளக்கம் : தணிவு : தளர்வு : மிருது : மனக்கனிவு : பொருள் உதவி.


நுக்காங்குலை - காய் விழுந்த பனங்குலை.
நுக்கு - எட்டி மரம் : நுக்கென்னேவல் : நுங்கு : பொடி.
நுக்குடம் - காஞ்சிரை.
நுக்குதல் - பொடியாக்குதல் : புடைத்தல் : அழித்தல்.
நுங்கல் - பருகல் : விழுங்கல்.


நுங்கு - நுங்கென்னேவல் : பனங்காயின் நுங்கு.
நுங்குக்குவளை - நுங்கு எடுத்துப் போட்ட பனங்காய்.
நுங்குதல் - குடித்தல் : விழுங்குதல் : ஆர்ப்பருகுதல் : கைக்கொள்ளுதல் : கெடுதல்.
நுங்கை - உன் தங்கை : உன் தாய்.
நுசுப்பு - இடை : மருங்குல் : மத்திமம் : நடு.


நுசை - சிவதைவேர்.
நுடக்கம் - தள்ளாட்டம் : நுட்பம் : முடக்கம் : வளைவு.
நுடக்கு - முடக்கு : முடை : முட்டுப்பாடு.
நுடங்கல் - நுடங்குதல்.
நுடங்கு - நுடக்கம் : நுடங்கென்னேவல்.


நுடங்குதல் - ஆடல் : துவளல் : முடங்கல் : தள்ளாடுதல் : வளைதல் : நுட்பமாதல் : அடங்குதல் : ஈடுபடுதல்.
நுட்பம் - எளிது : ஓர் அலங்காரம் : அது குறிப்பாற் கருத்தறிவித்தல் : நுண்மை : கரந்துறை கோள்களுல் ஒன்று :
நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை.
நுட்பவுரை - நுண்ணியதாய் விளக்கும் உரை.
நுணக்கம் - நுணங்கல்.
நுணங்கல் - துவளல் : நுண்மை : முடங்கல்.


நுணங்கியோர் - நுணுகிய அறிவுடையோர்.
நுணங்கு - தேமல் : நுணங்கென்னேவல் : நுண்மை.
நுணங்குதல் - நுண்மையாதல் : வளைதல் : வாடல்.
நுணலை - தவளை : ஒரு மீன்.
நுணல் - தவளை : தவளையினோர் பேதம் : கடல் மீன் வகை.


நுணவு - தணக்க மரம் : நுணா மரம் : கட்டில்.
நுணவை - தணக்க மரம்.
நுணா - நுணா மரம்.
நுணாவுதல் - தடவித் தெரிதல் : நாவால் தடவியுணர்தல்.
நுணித்தல் - குணம் : நுணுக்கம் : கூர்மையாக்குதல் : பொடியாக்குதல் : நுணுகி ஆராய்தல்.


நுணுகுதல் - நுண்மையாதல் : நுட்பமாதல் : கூர்மையாதல் : மெலிதல்.
நுணுக்கம் - அடக்கம் : சூட்சம் : கூர்மை : நுண்மை.
நுணுக்கல் - நுண்மையாக்குதல்.
நுணுங்கல் - நுண்மை.
நுணுங்கு - நுணுங்கென்னேவல் : நுண்மை.


நுண் - அணு : நுண்மை.
நுண்ணுணர்வு - கூரிய அறிவு.
நுண்பொடி - புழுதி.
நுண்பொருள் - நுட்பமான கருத்து : நுண்ணிய பொருள்.
நுண்பொறி வெள்ளை - சிலமரையின் ஏறு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:05 pm

நுண்மணல் - மெல்லிய மணல்.
நுண்மருங்குல் - நுண்ணிடை.
நுண்மை - கூர்மை : நுட்பம் : மிகுதி : சிற்றுண்டி : இரகசியம்.
நுதம்புதல் - நனைந்து இளகுதல் : ஈரமாதல்.
நுதலணி - சுட்டி.


நுதலல் - கருதல் : குறித்தல்.
நுதல் - சொல் : நுதலென்னேவல் : நெற்றி : புருவம் : மேலிடம்.
நுதற்கண்ணன் - சிவன்.
நுதற்கடிகை - சுட்டி.
நுதனாட்டன் - சிவன்.


நுதனாட்டி - துர்க்கை.
நுதி - புகழ் : முனை : வணக்கம் : நுனி : அறிவுக் கூர்மை : தலை.
நுதித்தல் - அடைசுதல்.
நுதுத்தல் - அவித்தல் : அழித்தல் : நீக்குதல்.
நுதுப்பு - தணிப்பு.


நுந்துதல் - தள்ளுதல் : தூண்டுதல் : ஏவுதல்.
நுந்தை - உங்கள் தந்தை.
நுபம் - எருக்கு.
நுமர் - உம்மவர் : நும்மவர் : உங்களவர்.
நுமள் - உம்மவள்.


நும்பி - உந்தம்பி.
நும்முன் - உன்முன்னோன் : உன் தமையன் : உமக்கு முன்பாக.
நும்மோர் - உம்மவர்.
நுரு - நொரு : காய்ப்பு மாறின பின் அரும்பும் பிஞ்சு : அறுத்த நாளில் முளைக்குந் தளிர்.
நுரை - குமிழி : நீர் முதலியவற்றின் நுரை : நுரையென்னேவல் : வெள்ளை : வெண்ணெய்.


நுரையீரல் - மார்பின் இருபுறத்துள்ளதும், அசுத்தக் காற்றை வெளியிட்டுச் சுத்தக் காற்றை உட் கொண்டு
இரத்தத்தைச் சுத்திகரிப்பதுமான உறுப்பு.
நுரையிலி - ஊமை.
நுவணம், நுவணை - கல்வி நூல் : பைந்தினை மாவு : நுண்மை : பஞ்சி நூல் : நுட்பம் : இடித்த மா.
நுவலல் - சொல்லுதல்.
நுவலாநுவற்சி - ஓர் அலங்காரம்.


நுவல் - சொல் : நுவலென்னேவல்.
நுவல்கை - சொல்லுதல்.
நுவலுதல் - அராவுதல்.
நுவ்வை - உன் தங்கை.
நுழுந்துதல் - களவு செய்தல் : நகர்தல் : நழுவுதல் : பதுங்குதல் : முடித்தல் : நுழைத்தல் : கவர்தல்.


நுழுவல் - நழுவல்.
நுழை - நுண்மை : நுழையென்னேவல் : நுழைவாயில் : பலகணி : துவாரம் : சிறுவழி : குகை : புத்தி : நுட்பம்.
நுழைகடைவை - நுழை கண்டாயம்.
நுழைபு - நுழைந்து : நுழைவு : நுழைதல்.
நுழைபுலம் - நுண்ணறிவு.


நுழைவாயில் - சிறுவாயில்.
நுளம்பாடி - மைசூர் ராச்சியத்தின் பகுதியாய் நுளம்ப வேந்தரால் ஆளப்பட்ட ஒரு நாடு.
நுளம்பு - கொசுகு : மின்மினி.
நுளை - வலைச்சாதி : ஈனம் : குருடு.
நுளைச்சி - நெய்தல் நிலப் பெண்.


நுளையர் - நெய்தனில மாக்கள்.
நுள் - கிள்ளு : நுள்ளென்னேவல்.
நுள்ளான் - ஓர் எறும்பு.
நுள்ளு - கிள்ளு : சிறுதுண்டு.
நுறுங்கு - குறுநோய்.


நுனித்தல் - கூர்ந்து நோக்குதல் : கூராக்குதல்.
நுனிப்புல் மேய்தல் - மேலெழுந்த வாரியாகப் படித்தல்.
நுனை - முனை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 4:05 pm

நூ - எள் : யானை : ஆபரணம் : ஓர் எழுத்து : நூவென்னேவல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 24 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 43 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 33 ... 43  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum