by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
No user |
வரலாற்றில் இன்று
Page 17 of 24 • 1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24
வரலாற்றில் இன்று
நவம்பர் 01
1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.
1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.
1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.
1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.
1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.
194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.
1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.
1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.
1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.
1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.
2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
மே 20
1835: நவீன கிறீஸின் முதலாவது மன்னராக ஒட்டோ தெரிவு செய்யப்பட்டார்.
1932: அமேலியா எர்ஹார்ட் எனும் பெண், அத்திலாந்திக் சமுத்திரத்தை தனியாக விமானத்தில் கடக்கும் பயணத்தை கனடாவிலிருந்து ஆரம்பித்தார். மறுநாள் அவர் அயர்லாந்தை வந்தடைந்தார்.
1940: போலந்தின் அஸ்விட்ஸ் நகரில் ஜேர்மனியின் நாஜி ஆட்சியாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட வதை முகாம்களுக்கு கைதிகள் கொண்டுவரப்படத் தொடங்கினர்.
2000: பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்- செரி பிளேயர் தம்பதிக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. 150 வருடகாலத்தில் பதவியிலிருக்கும் போது தந்தையாகிய முதலாவது பிரித்தானிய பிரதமரானார் டொனி பிளேயர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 0996 | புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான். |
1502 | போர்த்துக்கீச மாலுமி ஜொவாவோ டா நோவா புனித ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார். | |
1792 | ஜப்பானில் ஊன்சென் மலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர். | |
1851 | கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. | |
1859 | பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது. | |
1864 | ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது. | |
1871 | பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 கொம்ம்யூன் மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர். | |
1894 | 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான். | |
1904 | பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது. | |
1917 | அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது. | |
1941 | இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது. | |
1991 | முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார். | |
1991 | எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. | |
1994 | யேமன் மக்களாட்சிக் குடியரசு யேமன் குடியரசில் இருந்து விலகியது. | |
1996 | தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். | |
1998 | 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார். | |
2003 | வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். | |
2006 | மட்டக்களப்பு மாவட்டத் துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவு நாள். | |
2006 | சுதுமலை புவனேசுவரியம்மை கொடியேற்றம். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
334: மகா அலெக்ஸாண்டரின் மெசிடோனிய படை பேர்சியவின் 3 ஆம் டேரியஸ் மன்னின் படையை தோற்கடித்தது.
1762: சுவீடனும் பிரஸ்யாவும் ஹம்பர்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1809: வியன்னாவுக்கு அருகில் நடைபெற்ற அஸ்பேர்ன் ஈஸ்லிங் யுத்தத்தில் நெப்போலியன் முதல் தடவையாக தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டார்.[You must be registered and logged in to see this image.]
1906: அமெரிக்காவில் ரைட் சகேதரர்கள் தமது 'பறக்கும் இயந்திரத்திற்கான' காப்புரிமையைப் பெற்றனர்.
1915: ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 227 பேர் பலி.
1958: இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
1960: சிலியில் 9.5 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. சுமார் 6000 பேர் பலியாகினர். இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய பூகம்பம் இதுவாகும்.
1962: அமெரிக்காவில் விமானமொன்றில் குண்டு வெடித்ததால் 45பேர் பலியாகினர்.
1968: அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கியொன்று 99 பேருடன் கடலில் மூழ்கியது.
1972: இலங்கையில் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. இலங்கை குடியரசாகியது. சிலோன் எனும் அதன் பெயர் ஸ்ரீலங்காவாக மாற்றப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1430: பிரான்ஸின் வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க் பர்கன்டிய படையினரால் கைது செய்யப்பட்டாள்.
1568: ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக நெதர்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1805: இத்தாலிய மன்னனாக பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போர்னபார்ட் முடிசூட்டப்பட்டார்.
1846: மெக்ஸிகோ ஜனாதிபதி மரியானோ பரதீஸ் உத்தியோகபூர்வமற்ற வகையில் அமெரிக்கா மீது யுத்தப் பிரகடனம் செய்தார்.[You must be registered and logged in to see this image.]
1915: முதலாவது உலக யுத்தத்தில் நேச நாடுகளின் பக்கம் சேர்ந்த இத்தாலி ஆஸ்திரிய-ஹங்கேரி மீது போர் பிரகடனம் செய்தது.
1949: ஜேர்மன் சமஷ்டி குடியரசு (மேற்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது.
1951: திபெத் மக்களின் அமைதியான விடுதலைக்காக திபெத்தியர்கள் சீனாவுடன் 7 அம்ச உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.
1995: ஜாவா எனும் கணினி மொழியின் முதல் பதிப்பு வெளியாகியது.
1998: வட அயர்லாந்து சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவாக 75 சதவீதமான வட அயர்லாந்து மக்கள் வாக்களித்தனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1798: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக அயர்லாந்தில் கிளரச்சி ஆரம்பித்தது.
1832: முதலாவது கிறீஸ் இராஜ்ஜியம் லண்டன் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.
1844: சாமுவேல் மோர்ஸ் முதலாவது டெலிகிராவ் தகவலை அமெரிக்காவின் பழைய உயர் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து அமெரிக்க தலைநகரிலுள்ள தனது உதவியாளர் அல்பிரட் வெய்லுக்கு அனுப்பினார்.
1948: அரபு - இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலின் கிப்புட்ஸ் நகரை எகிப்து கைப்பற்றியது.
1976: முதலாவது கொன்கோர்ட் விமான சேவை லண்டனிலிருந்து வாஷிங்டனுக்கு ஆரம்பிக்கப்பட்டது.
1980: ஈரானில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை விடுவிக்குமாறு சர்வதேச நீதிமன்றம் கோரியது. எனினும் அடுத்த ஜனவரி வரை அக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை.
1991: எத்தியோப்பியாவிடமிருந்து எரித்திரியா சுதந்திரம் பெற்றது.
1991: எத்தியோப்பியாவிலுள்ள யூதர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது.
1994: 1993 ஆம் அண்டின் உலக வர்த்தக நிலைய குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கு 240 வருடகால சிறைத்தண்டனை அனுபவிக்கப்பட்டது.
2000: தென் லெபனானிலிருந்து 22 வருடங்களின்பின் இஸ்ரேலிய படைகள் வெளியேறின.
2001: 15 வயதான ஷேர்ப்பா டெம்பா டிஷேரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மிக இளமையான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.
2002: அமெரிக்காவும் ரஷ்யாவும் மொஸ்கோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1837: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கனடாவின் கியூபெக் மாநிலத்தில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1865: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் பலி.
1946: ட்ரான்ஸ் ஜோர்தான் நாடாளுமன்றம் முதலாம் அப்துல்லாவை அமீராக தெரிவு செய்தது.
1953: அமெரிக்காவின் முதலாவதும் கடைசியுமான அணு ஆட்லரி சோதனை நடைபெற்றது.
1961: பிரிட்டனைச் சேர்ந்த ஜோ பிரவுன் தலைமையிலான குழுவொன்று உலகின் 3ஆவது மிக உயரமான சிகரமான கஞ்சன்ஜுங்காவின் உச்சியை முதல் தடவையாக அடைந்தது.
1961: தசாப்தத்தின் இறுதிக்குள் அமெரிக்கர்கள் சந்திரனை அடைவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி சூளுரைத்தார்.
1963: ஆபிரிக்காவில் வெள்ளையின ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 32 நாடுகள் ஒன்றிணைந்து ஆபிரிக்க ஐக்கிய ஸ்தாபனத்தை ஸ்தாபித்தன.
1979: அமெரிக்க விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 271 பேர் பலி.
1981: பஹ்ரெய்ன், குவைத், ஓமான், கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து வளைகுடா கூட்டுறவு சபையை ஸ்தாபித்தன.
1985: பங்களாதேஷில் வீசிய சூறாவளியினால் சுமார் 10,000 பேர் பலி.
1997: சியாரா லியோன் ஜனாதிபதி டெஜான் கப்பா சதிப்புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
2001: அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயதான எரிக் வீஹென்மாயர் பார்வையற்ற முதல் நபரானார்.
2002: சீன விமானமொன்று தாய்வான் நீரிணையில் வீழ்ந்ததால் 225 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1293: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 30,000 பேர் பலி.[You must be registered and logged in to see this image.]
1822: நோர்வேயில் தேவாலயமொன்றில் ஏற்பட்ட தீயினால் 116 பேர் பலி. நோர்வேயில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ அனர்த்தம் இதுவாகும்.
1868: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜோன்ஸனுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விசாரணையில் ஒரு வாக்கினால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
1917: அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியினால் 101 பேர் பலி.
1918: ஜோர்ஜிய ஜனநாயக குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1966: பிரிட்டனிடமிருந்து கயானா சுதந்திரம் பெற்றது.
1983: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 104 பேர் பலி.
1986: ஐரோப்பிய கொடி அங்கீகரிக்கப்பட்டது.
1991: தாய்லாந்து விமானமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 223 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1941: ஜேர்மன் யுத்தக் கப்பலான பிஸ்மார்க், அத்திலாந்திக் சமுத்திரத்தின் வடக்கில் மூழ்க்கடிக்கப்பட்டது. 2100 பேர் பலியாகினர்.1960: துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. ஜனாதிபதி செலால் பயாரும் அவரின் அமைச்சர்களும் பதவிநீக்கப்பட்டனர்.
1963: கென்யாவின் முதலாவது பொதுத் தேர்தலில் ஜோமோ கென்யாட்டா தலைமையிலான கட்சி வெற்றியீட்டியது.[You must be registered and logged in to see this image.]
1964: இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார்.
1967: அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களையும் சனத் தொகைக் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தி அவர்களுக்கும் நன்மைகள் வழங்குவதற்கான சட்டங்களை ஏற்படுத்துவதற்கு அதிகாரமளிக்கும் சட்டமூலத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலிய மக்கள் வாக்களித்தனர்.
1996: ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சின், செச்னிய தீவிரவாதிகளை முதல் தடவையாக சந்தித்து யுத்த நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1997: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு வழக்குத் தொடர பௌலா ஜோன்ஸ் எனும் பெண்ணுக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
1999: யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் மற்றும் நால்வர் மீது மனித குலத்திற்கு எதிரான மற்றும் போர்க் குற்றம் புரிநத்தாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டது.
2006: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6,600 பேர் பலி..
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
கி.மு.585 – கிரேக்க மெய்யிலாளரும் விஞ்ஞானியுமான Thales என்பவர் முன்னறிவித்தபடி சூரிய கிரகணம் இடம் பெற்றது.
1737 - வீனஸ் கோள் மெர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜான் பேவிஸ் என்ற வானியலாளர் கண்டார்.
1937 – கலிபோர்னியாவின் சான் பிரான்செஸ்கோவில் கோல்டன் கேட் பாலத்தை அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
1940: ஜேர்மனியிடம் பெல்ஜியம் சரணடைந்தது.
1952 – கிரீசில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
1964 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
1977: அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 165 பேர் பலி.
1995: ரஷ்யாவில் ஏற்பட்ட பூகம்பததினல் குறைந்தபட்ம் 2000 பேர் பலியாகினர்.
1998: பாகிஸ்தான் அணுகுண்டுகளை வெடிக்கச் செய்து சோதனை நடத்தியது. அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகள் பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதித்தது.
2004: ஈராக்கில் சதாம் ஹுஸைனின் நீண்ட கால எதிர்ப்பாளரான ஆயத் அலாவி பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.
2008 – நேபாளத்தில் 240 வருட ஷா பரம்பரை ஆட்சி முடிவுக்கு வந்து அந்நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1864: மெக்ஸிகே மன்னர் முதலாம் மெக்ஸிமிலியன் (ஆஸ்திரியாவில் பிறந்தவர்) முதல் தடவையாக மெக்ஸிகோவை சென்றடைந்தார்.
1867: ஆஸ்திரிய - ஹங்கேரிய பேரரசு ஸ்தாபிக்கப்பட்டது. [You must be registered and logged in to see this image.]
1903: சேர்பிய மன்னர் அலெக்ஸாண்டர் ஓப்ரெனோவிக் அவரின் மனைவி ட்ராகாவும் தலைநகர் பெல்கிரேட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
1948: ஐ.நா. சமாதானப் படை ஸ்தாபிக்கப்பட்டது.
1953: நியூஸிலாந்தைச் சேர்ந்த எட்மன்ட் ஹிலாரியும் நேபாளத்தைச் சேர்ந்த டென்ஸிங் நோர்கேயும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர்கள் எனும் சாதனைக்குரியவர்களாகினர்.
1988: பெல்ஸியத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது மதிலொன்று சரிந்து வீழ்ந்ததால் 39 பேர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1990: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் தெரிவானார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
மே 30
[You must be registered and logged in to see this image.]1431: பிரெஞ்சு வீரப் பெண்ணான ஜோன் ஒவ் ஆர்க்கிற்கு ஆங்லேயே ஆதிக்க விசாரணைக்குழுவினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தீயிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1967: நைஜீரியாவின் 'பயாப்ரா' பிராந்தியம் சுதந்திரப் பிரகடனம் செய்ததையடுத்து சிவில் யுத்தம் மூண்டது.
1967: இஸ்ரேலுக்கு எதிராக எகிப்தும் ஜோர்தானும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன.
1972: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஜப்பானிய செம்படையின் இஸ்ரேலிய பிரிவினால் 24 பேர் கொல்லப்பட்டனர்.
1981: பங்களாதேஷ் ஜனாதிபதி ஸியாவுர் ரஹ்மான் இராணுவத்தின் கிளர்ச்சிக் குழுவொன்றினால் கொல்லப்பட்டார்.
1996: ஆப்கானிஸ்தானில் பூகம்பத்தினால் 5000 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
526: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 250000 பேர் பலி.
1859: லண்டன் பிக் பென் கடிகாரம் முதல் தடவையாக ஒலித்தது.
1889: அமெரிக்காவில் அணைக்கட்டொன்று உடைந்ததால் சுமார் 2200 பேர் பலி[You must be registered and logged in to see this image.]
1935: பாகிஸ்தானின் குவேட்டா பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 40,000 பேர் பலி.
1962: மேற்கிந்திய சம்மேளன கூட்டரசு கலைக்கப்பட்டது.
1970: பெரு நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் 47,000 பேர் பலி.
1981: ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70,000 நூல்களுடன் தீக்கிரையாக்கப்பட்டது.
1985: அமெரிக்காவில் பூகம்பத்தினால் 76 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this link.]1215: பெய்ஜிங் நகரம் செங்கிஸ் கான் தலைமையிலான மொங்கோலிய படையினால் கைப்பற்றப்பட்டது.
1533: இங்கிலாந்தின் அரசியாக ஆன் போலெய்ன் முடிசூடினார்.
1812: பிரிட்டன் மீது யுத்தப் பிரகடனம்செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மெடிசன் நாடாளுமன்றத்தை கோரினார்.
1979: ஸிம்பாப்வேயில் வெள்ளையின ஆட்சி முடிவுக்கு வந்தது.
1990: அமெரக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ், சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவ் ஆகியோர் இரசாயன ஆயுத உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
2001: நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி, ஐஸ்வர்யா மற்றும் பல அரச குடும்பத்தினர் உட்பட 9 பேர் முடிக்குரிய இளவரசர் திபேந்திராவினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இளவரசர் திபேந்திராவும் தன்னைதானே சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.
2009: பிரேஸிலில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பிரெஞ்சு விமானம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் வீழ்ந்தால் விமானத்திலிருந்த 228 பேரும் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1882 - நவீன இத்தாலியை உருவாக்கிய ஜூசப்பே கரிபால்டி இறந்தார்
1896 - மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1924 – அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்த அனைத்து பழங்குடி மக்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்.
1946 - இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னன் நாட்டை விட்டு வெளியேறினான்.
1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.
1966 - நாசாவின் சேர்வேயர் 1 (Surveyor1) விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1886: அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லன்ட், பிரான்செஸ் போல்சொம் எனும் பெண்ணை வெள்ளை மாளிகையில் திருமணம் செய்தார். [You must be registered and logged in to see this image.]வெள்ளை மாளிகையில் வைத்து திருமணம் செய்த முதல் ஜனாதிபதி இவராவார்.
1946: இத்தாலியில் மன்னராட்சியை ஒழித்து குடியரசாக்குவதற்கு ஆதரவாக சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்தனர் .
1953: பிரித்தானிய மகா ராணியாக இரண்டாம் எலிஸபெத் முடிசூடினார்.
1979: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர், தனது சொந்த நாடான போலந்துக்கு விஜயம் செய்தார். கம்யூனிஸ்ட் நாடான போலந்துக்கு விஜயம் செய்த முதலாவது பாப்பரசர் இவராவார்.
1985: பெல்ஜியத்தில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 39 பேர் பலியானதையடுத்து, இங்கிலாந்து கழகங்கள் இங்கிலாந்துக்கு வெளியே ஐரோப்பாவில் போட்டிகளில் பங்குபற்ற ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கம் தடை விதித்தது.
1999: பூட்டானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1839: சீன அதிகாரி லீன் சே ஹூவினால் பிரித்தானியர்களின் 12 இலட்சம் கிலோகிராம் ஓபியம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது ஓபியம் யுத்தத்திற்கு வழிவகுத்தது.
1937: பிரிட்டனின் மன்னர் 8 ஆம் எட்வர்ட், ஏற்கெனவே இரு தடவை திருமணமான வல்லிஸ் சிம்ஸன் எனும் அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தார். இத்திருமணம் காரணமாக அவர் அரசுரிமையை இழக்க நேரிட்டது.[You must be registered and logged in to see this image.]
1962: பிரெஞ்சு விமானமொன்று பாரிஸ் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 130 பேர் பலி.
1963: அமெரிக்க விமானமொன்று பசுபிக் சமுத்திரத்தில் விழுந்ததால் 101 பேர் பலி.
1969: தென் வியட்நாம் கரையோரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய விமானந்தாங்கி கப்பலொன்று மோதியதால் அமெரிக்க யுத்த கப்பல் இரண்டாக உடைந்தது.
1982: லண்டனில், இஸ்ரேல் தூதுவர் ஷ்லோமோ ஆர்கோ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
1984: சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவில் மறைந்திருந்த சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் 'ஒபரேஷன் புளூ ஸ்டார்' எனப் பெயரிடப்பட்டபட்ட தாக்குதலை ஆரம்பித்தது.
1998: ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தினால் 101 பேர் பலி.
2006: சேர்பியா- மொன்டேனேக்ரோ கூட்டரசிலிருந்து பிரிந்து மொன்டேனேக்ரோ சுதந்திரப் பிரகடனம் செய்தது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1896: பெற்றோலில் இயங்கும் தனது வாகனத்தின் முதல் சோதனை ஓட்டத்தை ஹென்ரி போர்ட் வெற்றிகரமாக நடத்தினார்.[You must be registered and logged in to see this image.]
1917: ஊடக, இலக்கிய, இசைத்துறைக்கான புளிட்ஸர் விருது முதல் தடவையாக வழங்கப்பட்டது.
1928: சீனக் குடியரசு ஜனாதிபதி ஸாங் ஸுவோலின் ஜப்பானிய முகவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1961: கிழக்கு ஜேர்மனிக்குள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் செல்வதை தடுக்கும் வகையில் கிழக்கு ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக சோவியத் அதிபர் நிகிட்டா குருசேவ் வியன்னா மாநாட்டில் அச்சுறுத்தினார்.
1967: பிரித்தானிய விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 72 பேர் பலி.
1970: பிரிட்டனிடமிருந்து டொங்கா சுதந்திரம் பெற்றது.
1988: சோவியத் யூனியன் ரயிலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 91 பேர்பலி. 1500 பேர் காயம்.
1989: ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆன்மீக தலைவராக ஆயதுல்லா கொமேய்னி தெரிவுசெய்யப்பட்டார்.
1989: சீனாவின் தியன்னமென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சீன இராணுவத்தினரால் துப்பாக்கியால் சுடப்பட்டும் இராணுவத் தாங்கிகள் ஏற்றப்பட்டும் கொல்லப்பட்டனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1849: டென்மார்க் அரசிலமைப்பின்படி முடிக்குரிய இராஜ்ஜியமாகியது.
1917: அமெரிக்காவில் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆரம்பமாகியது.[You must be registered and logged in to see this image.]
1942: 2 ஆம் உலக யுத்தத்தில் பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மீது அமெரி;க்கா யுத்தப் பிரகடனம் செய்தது.
1944: பிரித்தானிய குண்டு வீச்சு விமானங்கள் நோர்மன்டி கரையோரத்தில் ஜேர்மன் நிலைகள் மீது சுமார் 5000 தொன் எடையுள்ள குண்டுகளை வீசின.
1967: எகிப்து, ஜோர்டான், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. 6 நாள் யுத்தம் ஆரம்பம்.
1959: முதலாவது சிங்கப்பூர் அரசாங்கம் பதவியேற்றறது.
1968: படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியின் இளைய சகோதரரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ரொபர்ட் எவ். கென்னடி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தார். மறுநாள் அவர் உயிரிழந்தார்.
1975: 6 நாள் யுத்தத்தின்பின் சுயஸ் கால்வாய் முதல் தடவையாக திறக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1644: சீனாவில் மிங் வம்ச ஆட்சி முடிந்து குய்ங் வம்ச ஆட்சி ஆரம்பமாகியது. இது 1912 வரை தொடர்ந்தது.
1674: மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவாஜி மன்னராக முடிசூட்டப்பட்டார்.[You must be registered and logged in to see this image.]
1752: மொஸ்கோ நகரில் ஏற்பட்ட பாரிய தீயினால் 18000 வீடுகள் உட்பட பெரும் எண்ணிக்கையான கட்டிடங்கள் அழிந்தன.
1808: நெப்போலியன் போனபார்ட்டின் சகோதரரர் ஜோஸப் போனபார்ட் ஸ்பெய்ன் மன்னராக முடிசூடினார்.
1859: அவுஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து பிரிந்து குயின்ஸ்லாந்து மாநிலம் ஸ்தாபிக்கப்பட்டது.
1882: பம்பாய் நகரில் வீசிய சூறாவளியினால் சுமார் 100,000 பேர் பலி.
1944: 2 ஆம் உலக யுத்தத்தில், ஜேர்மனிக்கு எதிராக நேச நாடுகளைச் சேர்ந்த சுமார் 155,000 துருப்புகள் பிரான்ஸின் நோர்மண்டி கடற்கரையில் தரையிறங்கின.
1981: இந்தியாவில் ரயிலொன்று பாலத்திலிருந்து விலகி, பக்மதி நதியில் விழுந்ததால் 300 இற்கும் அதிகமானோர் பலி.
1993: மொங்கோலியாவில் முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1654: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னரானார்.[You must be registered and logged in to see this image.]
1692: ஜமைக்காவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1600 பேர் பலியாகினர்.
1905: சுவீடனிலிருந்து பிரிவதற்கு நோர்வே நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
1945: வெளிநாட்டில் வசித்த நோர்வே மன்னர் 7 ஆம் ஹக்கோன், 5 வருடங்களின்பின் குடும்பததுடன் தாயகம் திரும்பினார் .
1975: முதலாவது உலகக்கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் ஆரம்பமாகியது
1989:; ஈராக்கின் அணு உலையை இஸ்ரேலிய விமானங்கள குண்டுவீசி அழித்தன.
1989: சூரினாம் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் விமானத்திலிருந்த 187 பேரில் 176 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]1783: ஐஸ்லாந்தின் லேக்கி எரிமலை வெடித்தது. தொடர்ச்சியாக 8 மாதங்கள் எரிமலை குழம்பு வெளியாகிய நிலையில் சுமார் 9000 பேர் பலியாகினர். 7 வருடகால பஞ்சம் ஆரம்பித்தது.
1941: 2 ஆம் உலக யுத்தத்தில் சிரியா, லெபனான் மீது நேச நாடுகள படையெடுத்தன.
1953: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் டோர்னடோ சுழற்காற்றினால் 115 பேர் பலி.
1959: அமெரிக்க தபால் திணைக்களம் ஏவுகணை மூலம் தபால் அனுப்புவதற்கான சோதனையை மேற்கொண்டது. அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ். பார்பெரோவிலிருந்து தபால்கள் அடங்கிய ஏவுகணையொன்று ஏவப்பட்டது. எனினும் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.
1984: அவுஸ்திரேலியாவின் நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
68: ரோம மன்னன் நீரோ தற்கொலை செய்துகொண்டார்.
1885: சீன –பிரெஞ்சு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. தற்போதைய வியட்நாமின்பெரும்பகுதி உட்பட பல பகுதிகள் பிரான்ஸுக்கு வழங்கப்பட்டன.[You must be registered and logged in to see this image.]
1946: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் முடிசூடப்பட்டார்.
1959: அமெரிக்கா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகi கொண்ட முதலாவது நீர்மூழ்கியை வெள்ளோட்டம் விட்டது.
1967: சிரியாவிடமிருந்து கோலான் குன்று பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.
1974: சோவியத் யூனியன் - போர்த்துக்கல் ராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது.
1975: பிரித்தானிய நாடாளுமன்ற விவாதம் முதல்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
1999: யூகோஸ்லாவியாவும் நேட்டோவும் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1786: சீனாவின் தாடு நதியின் அணைக்கட்டொன்று பூகம்பததினால் உடைந்ததால் சுமார் ஒரு லட்சம் பேர் பலி.[You must be registered and logged in to see this image.]
1829: பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான முதலாவது படகோட்டப்போட்டி ஆரம்பமாகியது.
1886: நியூஸிலாந்தின் தரவேரா எரிலை வெடித்ததால் 153 பேர் பலி.
1898: அமெரிக்கப்படை கியூபாவில் தரையிறங்கியது.
1940: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மனியிடம் நோர்வே சரணடைந்தது.
1944: பிரான்ஸின் ஒரடோர் - சுர் கிளான் எனும் இடத்தில் சிறார்கள் உட்பட 642 பேர் கொல்லப்பட்டனர்.
1967: இஸ்ரேல் - அரபு '6 நாள் யுத்தம்' முடிவடைந்தது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 17 of 24 • 1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24
» வரலாற்றில் இன்று Today in History
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிரோஷிமா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #2
» பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3