தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரலாற்றில் இன்று

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

View previous topic View next topic Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Nov 01, 2012 11:54 am

First topic message reminder :

நவம்பர் 01


1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.

1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.



1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.


1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.


1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.


194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.


1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.


1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.


2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.

[You must be registered and logged in to see this link.]

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down


வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Oct 23, 2013 5:50 pm

ஒக்டோபர் 15
 
 
1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியனுக்கு அத்திலாந்திக் சமுத்திரத்தின் சென் ஹெலினா தீவில் சிறைவாசம் அனுபவிக்க ஆரம்பித்தார்.
 
1878: எடிசன் எலெக்ரிக் லைட் கம்பனி செயற்படத் தொடங்கியது.

1964:சோவியத் யூனியனின் தலைவர் பதவியிலிருந்து நிகிட்டா குருசேவ் ஓய்வுபெற்றார்.

1969: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் மில்லியன் கணக்கானோர் பேரணி.

1971: பேர்சியா உருவாக்கப்பட்டதன் 2500 ஆண்டுநிறைவு கொண்டாட்டங்கள் ஈரானில் இடம்பெற்றன.

1990: பனிப்போர் பதற்றத்தை குறைக்கவும் சோவியத் யூனியின் இரும்புத் திரை விலகவும் பங்காற்றியமைக்காக சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
1997: சனிக்கிரகத்தை நோக்கி நாசாவினால் காசினி விண்கலம் ஏவப்பட்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Oct 23, 2013 5:54 pm

ஒக்டோபர் 16
 
 
1905: இந்தியாவில் வங்காள மாநிலம் கிழக்கு மேற்காக பிரிக்கப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]1951: பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் ராவல்பிண்டி நகரில்  படுகொலை செய்யப்பட்டார்.

1962: அமெரிக்கா, கியூபாவுக்கிடையில் ஏவுகணை சர்ச்சை ஆரம்பமாகியது.

1978: போலந்தைச் சேர்ந்த கர்தினால் கரோல் வொஜ்டிலா புதிய பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பராக தெரிவானார். 400 வருடகாலத்தில் இத்தாலியைச் சாராத முதல் பாப்பரசர் இவர்.

1996: எகிப்தில் கால்பந்தாட்ட அரங்கொன்றில் ஏற்பட்ட சனநெருக்கடியில் சிக்கி 180 பேர் பலி, சுமார் 47,000 பேர் காயம்.

1998: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் அகஸ்டோ பினோசெட் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Oct 23, 2013 5:57 pm

ஒக்டோபர் 17

 
1610: பிரான்ஸில் 13 ஆம் லூயி மன்னனுக்கு முடிசூடப்பட்டது.

1888: தோமஸ் அல்வா எடிசன் முதலாவது திரைப்படத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.
1907: மார்கோணியின் நிறுவனம் அத்திலாந்திக் சமுத்திரத்திற்கிடையிலான முதலாவது வயர்லெஸ் சேவையை ஆரம்பித்தது.

1912: பல்கேரியா, கிறீஸ், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக யுத்தப்பிரகடனம் செய்தன.

1917: முதல் உலக யுத்தத்தில் பிரிட்டன் முதல் தடவையாக ஜேர்மனி மீது குண்டுத்தாக்குதல் நடத்தியயது.
 
1933: விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்ரைன் நாஸி ஜேர்மனியிடமிருந்து தப்பி அமெரிக்காவுக்குச் சென்றார்.

1941: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலொன்று முதல் தடவையாக அமெரிக்க கப்பலொன்றைத் தாக்கியது.

1941: கிறீஸின் சேரெஸ் நகரிலுள்ள ஆண்கள் அனைவரையும் ஜேர்மன் படைகள் கொலை செய்து வீடுகளுக்குத் தீ வைத்தன.
1966: பொட்ஸ்வானா, லெசத்தோ ஆகியன ஐ.நாவில் இணைந்தன.
1968: மெக்ஸிகோ ஒலிம்பிக் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற இரு தொமி ஸ்மித், வெண்கலம் வென்ற ஜோன் கார்லோஸ் ஆகிய அமெரிக்க கறுப்பின வீரர்கள் இருவரும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, பரிசளிப்பின்போது அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்படுகையில் தலைகுணிந்தவாறு, கறுப்பு நிற கையுறை அணிந்த கையை உயர்த்திக்காட்டி மௌனமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
1973: சிரியா மீதான இஸ்ரேலின் யுத்ததிற்கு ஆதரவாக விளங்கிய மேற்கு நாடுகளுக்கு எண்ணெய் விநியோகிப்பதற்கு ஒபெக் அமைப்பு தடைவிதித்தது.
1979: அன்னை தெரேசாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1980: பிரிட்டனின் இரண்டாம் எலிஸபெத் மகாராணியார் வத்திகானுக்கு விஜயம். வத்திகானுக்கு விஜயம் செய்த முதலாவது பிரிட்டிஸ் அரசகுடும்பத் தலைவர் இவர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Oct 23, 2013 6:00 pm

ஒக்டோபர் 18


1386: ஜேர்மனியில் ஹைடில்பேர்க் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1648: பொஸ்டன் நகர சப்பாத்து தயாரிப்பாளர்கள் அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்தினர்.
1867: ரஷ்யாவிடமிருந்து 72 லட்சம் டொலர்களுக்கு வாங்கப்பட்ட அலஸ்கா மாநிலம் உத்தியோகபூர்வமாக அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1898: பியூர்ட்டோ ரிக்கோவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
1912: தென்கிழக்கு ஐரோப்பாவில் முதலாவது பால்கன் யுத்தம் ஆரம்பம்.
1963: பிரிட்டனில் சேர் அலெக் டக்ளஸ் ஹோம் பிரதமராகத் தெரிவானார்.
1967: சோவியத் யூனியனின் விண்கலமொன்று வெள்ளி கிரகத்தின் மேகப்பரப்பை முதல் தடவையாக அடைந்தது.
1989: கிழக்கு ஜேர்மனியின் தலைவர் எரிக் ஹோன்கர், பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Oct 23, 2013 6:03 pm

ஒக்டோபர் 19
 
 
[You must be registered and logged in to see this image.]
1216: இங்கிலாந்தில் மன்னன் ஜோன் மரணமடைந்ததால் அவரின் 9 வயது மகன் புதிய மன்னனானான்.
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்டின் லூதர் டாக்டர் பட்டம் பெற்றார்.
1812: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன், ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து பின்வாங்கினான்.
1813: லீப்ஸிக் சமர் முடிவடைந்தது. நெப்போலியனுக்கு மோசமான தோல்விகளில் ஒன்றாக இது அமைந்தது.
1912: ஒட்டோமான் பேரரசிடமிருந்து லிபியாவின் திரிபோலி நகரை இத்தாலி கைப்பற்றியது.
1933: எத்தியோத்திப்பியா மீது படையெடுத்தமைக்காக இத்தாலி மீது லீக் ஒவ் நேசன்ஸ் பொருளாதார தடை விதித்தது,
1944: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸில் தரையிறங்கின.
1950: சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
2003: அன்னை திரேஸா, பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரினால் புனிதராக பிரகடனப்படுத்தபட்டார்.
2005: மனித குலத்திற்கு எதிராக குற்றமிழைத்ததாக குற்றம்சுமத்தப்பட்ட ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Oct 23, 2013 6:05 pm

ஒக்டோபர் 20
 
 
1818: அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில்  '1818 ஆம் ஆண்டு ஒப்பந்தம்' கையெழுத்திடப்பட்டது. கனேடிய- அமெரிக்க எல்லை விவகாரம் இதன் மூலம் தீர்க்கப்பட்டது.

1827: நவோரினோ யுத்தத்தில் பிரித்தானிய, பிரெஞ்சு, ரஷ்ய படைகளால் துருக்கி, எகிப்து படைகள் தோற்கடிக்கப்பட்டன.
 
1910: டைட்டானிக்கின் சகோதர கப்பலான ஆர்.எம்.எஸ்.ஒலிம்பிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரிலிருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.

1935: சீனாவில் மாவோ சேதுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் 'நீண்ட பவனி' முடிவடைந்தது.

1944: அமெரிக்க ஜெனரல் மெக் ஆர்தர் மீண்டும் பிலிப்பைன்ஸுக்குத் திரும்பியதன் மூலம், 'நான் மீண்டும் வருவேன்' என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

1968: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடியின் மனைவி ஜாக்குலின், எகிப்திய கோடீஸ்வரர் ஒனாசிஸை திருமணம் செய்தார்.

1973:சிட்னி நகரின் புகழ்பெற்ற கட்டிடமான ஒபாரா ஹவுஸ் திறக்கப்பட்டது.

1982: மொஸ்கோ நகரில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியின்போது சனநெரிசலில் சிக்கி 66 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Oct 23, 2013 6:08 pm

ஒக்டோபர் 21
 
 
1512:  புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்ட்டின் லூதர், ஜேர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

1520: பேர்டினான்ட் மகலன் தென் அமெரிக்காவில் அத்திலாந்திக் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மகலன் நீரிணை என அறியப்பட்ட நீரிணையை கண்டுபிடித்தார்.

1805: நெப்போலிய யுத்தத்தில், ஆங்கிலேயே தளபதி நெல்சன் தலைமையிலான படைகள் பிரெஞ்சு, ஸ்பானிய கூட்டுப்படைகளை ஸ்பானிய கரையோரத்தில் தோற்கடித்தன.

1805: ஆஸ்திரிய ஜெனரல் மெக் தனது படைகளை நெப்போலியனின் படைகளிடம் சரணடையச்செய்தார். 30 அயிரம் படையினர் கைது செய்யப்பட்டனர்.

1816: மலேஷியாவின் பெனாங் ஜோர்ஜ் டவுனில் வண. ஹட்சிங்ஸினால் இலவச பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பழைமையான ஆங்கில மொழிப்பாடசாலை இதுவாகும்.

1824: போரட்லண்ட் சீமெந்துக்கு ஜோசப் அஸ்பிடின் காப்புரிமைசெய்தார்.

1854: புளோரன்ஸ் நைட்டிங்கேலும் மேலும் 38 தாதிகளும் கிறீமியன் யுத்த களத்திற்கு சேவைக்காக அனுப்பப்பட்டனர்.

1945: பிரான்ஸில் பெண்களுக்கு முதல்தடவையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1959: விண்வெளிப்பயண முன்னோடியான வார்னர் வொன் பிரவுன் உட்பட ஜேர்மன் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க இராணுவத்திலிருந்து நாஸா நிறுவனத்திற்கு ஜனாதிபதி டி.ஐஸனோவரினால் மாற்றப்பட்டனர்.

1933 லீக் ஒவ் நேசனிலிருந்து அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி விலகியது.

1944: முதலாவது கமிகாஸ் தாக்குதல்: ஜப்பானிய விமானமொன்றின் மூலம் எச்.எம்.ஏ.எஸ். அவுஸ்திரேலியா கப்பல்;மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

1967: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

1969: சோமாலியாவில் இடம்பெற்ற சதிப்புரட்சியை அடுத்து சயீட் பாரே ஆட்சியைக் கைப்பற்றினார்.

1983: மீற்றர் அளவு, 7 ஆவது நிறுவை- அளவை மாநாட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. வெற்றிடத்தில் 1/299,792,458  பங்கு விநாடியில் ஒளி பயணம் செய்யும் தூரமே ஒரு மீற்றர் என அங்கீகரிக்கப்பட்டது.

1987: யாழ் வைத்தியசாலையில் இந்திய அமைதிப் படையினரால் 70 தமிழ்பொதுமக்கள், மருத்துவர்கள், தாதிகள், ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1994: வடகொரியா, அணுவாயுத சோதனைகளை நிறுத்துவத்றகும் தனது அணுசக்தித் திட்டங்களை பார்வையிடப்படுவதற்கும் இணங்கி, அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.

1994: தென்கொரியாவின் சியோல் நகரில் பாலமொன்று இடிந்து வீழ்ந்து 32 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Oct 23, 2013 6:11 pm

ஒக்டோபர் 22
 
 
[You must be registered and logged in to see this image.]1838: போர்த்துக்கலில் மன்னன் பெர்னாண்டோ, ஆண் வாரிசின்றி இறந்ததால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போட்டி சிவில் யுத்தத்திற்கு வழிவகுத்தது.
1707: மத்தியத் தரைக்கடலில் சிசிலி தீவுக்கருகில் நான்கு பிரித்தானிய கப்பல்கள் தவறான முறையில் செலுத்தப்பட்டதன் காரணமாக கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கான படையினர் பலியாகினர்.
1784: அலாஸ்கா பிராந்தியத்தின் கோடியாக் தீவில் ரஷ்யா கொலனியொன்றை ஆரம்பித்தது.
1797: பாரிஸில் 1000 மீற்றர் (3200 அடி உயரத்திலிருந்து)  அந்ரே ஜாக் கார்னரின் என்பவர் முதல் பரசூட் மூலம் குதித்தார். உலகின் முதலாவது பரசூட் குதிப்பாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
1877: ஸ்கொட்லாந்து சுரங்க விபத்தில் 207 பேர் பலி.
1924: மேடைப்பேச்சாற்றலை வளர்க்கும் சர்வதேச அமைப்பான 'டோஸ்ட்மாஸ்ட்டர் இன்டர்நெஷனல்' ரால்ப் சி ஸ்மெட்லியினால் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1944: பிரித்தானிய விமானப்படை விமானங்கள் ஜேர்மனியின் கசெல் நகரில் தாக்குதல். 10 ஆயிரம் பேர் பலி.
1953: பிரான்ஸிடமிருந்து லாவோஸ் சுதந்திரம் பெற்றது.
1957: வியட்நாம் யுத்தத்தில் முதல் அமெரிக்க படைவீரர் பலி.
1960: பிரான்ஸிடமிருந்து மாலி சுதந்திரம் பெற்றது.
1962: கியூபாவில் சோவியத் அணுஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி அறிவித்தார்.
1963: கனடாவின் தேசிய கொடியை நாடாளுமன்ற பல்கட்சி குழுவொன்று வடிவமைத்தது.
1975: சோவியத் யூனியனின் வனேரா9 விண்கலம் வெள்ளி கிரகத்தில் தரையிறங்கியது.
2007: அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாரிய தாக்குதல்.
2008: சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா சந்திரனுக்கு ஏவியது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Oct 23, 2013 6:16 pm

 ஒக்டோபர் 23
 
 
 
கி.மு.42: ரோமன் குடியரசின் சிவில் யுத்தத்தில் மார்க் அன்டனி, ஒகஸ்டஸ் சீசர் ஆகியோர் புரூட்டஸின் படைகளை தோற்கடித்தனர். புரூட்டஸ் தற்கொலை செய்துகொண்டார்.

1915: நியூயோர்க்கில் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி சுமார் 25000 – 33000 பெண்கள் இணைந்து பேரணியொன்றை நடத்தினர்.

1917: ரஷ்யாவில் ஒக்டோபர் புரட்சிக்கு லெனின் அழைப்பு விடுத்தார்.

1929: நியூயோர்க் நகரிலிருந்து லொஞ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமான சேவை ஆரம்பம். அமெரிக்கக் கண்டத்தை கடக்கும் விதமான முதலாவது விமான சேவை இது.

1983: லொபனானின் பெய்ரூத் நகரில் இடம்பெற்ற வாகன குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கப் படையினர் பலி. அன்று நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் 58 பிரெஞ்சு படையினரும் பலியாகினர்.

1992: ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிட்டோ சீனாவுக்கு விஜயம். சீன மண்ணில் காலடி வைத்த முதலாவது ஜப்பானிய மன்னர் இவர்.

1998: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தும் "சமாதானத்திற்கான நிலம் " ஒப்பந்தத்தை அங்கீகரித்தனர்.

2002: ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் திரையரங்கொன்றில் 700 பேர் செச்னிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by முரளிராஜா Wed Oct 23, 2013 7:24 pm

பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by முரளிராஜா Wed Oct 23, 2013 7:24 pm

பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by நண்பன் Wed Oct 23, 2013 10:23 pm

பயனுள்ள தொகுப்பு
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by Muthumohamed Wed Oct 23, 2013 11:40 pm

நல்ல தொடர் பதிவு நன்றி பகிர்வுக்கு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Oct 24, 2013 6:57 pm

ஒக்டோபர் 24
 
 
[You must be registered and logged in to see this image.]1795: போலந்து நாட்டை ரஷ்யா, ஆஸ்திரியா , பிரஷ்யா ஆகியன தமக்கிடையில் பிரித்துக்கொண்டன.
1945: ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1946: அமெரிக்காவின் வி-2 ரொக்கட் மூலம் விண்வெளியிலிருந்து பூமி முதல் தடவையாக படம்பிடிக்கப்பட்டது.
1948: பனிப்போர் என்ற சொற்பதம் முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டது. யுத்தம் குறித்த அமெரிக்க செனட் விசாரணைக்குழுவின் முன் பேசுகையில் பேர்னார்ட் புரூச் என்பவர் இதைப் பயன்படுத்தினார்.
1949: நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1990: இத்தாலியப் பிரதமர் கியூலியோ அன்ட்ரியோட்டி தமது நாட்டில் நேட்டோவின் கிளாடியோ எனும் இரகசிய படையினர் இருப்பதை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

2003: கொண்கோர்ட் பயணிகள் விமானத்தின் கடைசிப் பயணம் -நியூயோர்க்கிலிருந்து லண்டனுக்கு மேற்கொள்ளப்பட்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Oct 27, 2013 6:14 pm

ஒக்டோபர் 25


1760: பிரிட்டனில் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் ஆட்சிக்கு வந்தார்.


1920;: பிரிட்டனில் 74 நாட்கள் உண்ணாவிரதமிருந்த பின்னர், சின்பெய்ன் அமைப்பின் டெரன்ஸ் மெக்ஸ்வினி மரணமடைந்தார்.


1945: நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்தபின், தாய்வான் நிர்வாகத்தை சீனக்குடியரசு கைப்பற்றியது.


1962: ஐ.நாவில் உகண்டா அங்கத்துவம் பெற்றது.


1962: நெல்சன் மண்டேலாவுக்கு 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


1964: பிரிட்டனிடமிருந்து ஸாம்பியா சுதந்திரம் பெற்றது. ஜனாதிபதியாக கவுண்டா பதவியேற்றார்.


1971: ஐ.நா. அமைப்பில் சீனக்குடியரசுக்குப் பதிலாக சீன மக்கள் குடியரசு அங்கத்துவம் பெற்றது.


1983: கிறனடாவில் இராணுவப் புரட்சியில் பிரதமர் மௌரிஸ் பிஷப், கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கத் துருப்புகள் படையெடுத்தன.


1984: எத்தியோப்பியாவில் 1984 ஆம் ஆண்டில் பட்டினியால் மரணமானதையடுத்து ஐரோப்பிய நாடுகள் அவசர உதவிகளை வழங்கின.


1991: 10 நாள் யுத்தத்தின்பின் ஸ்லோவினியாவிலிருந்து கடைசி யூகோஸ்லாவிய படைவீரர் வெளியேறினார்.




mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Oct 27, 2013 6:16 pm

ஒக்டோபர் 26
 
 
1597: இம்ஜின் யுத்தத்தில் 300 கப்பல்களைக் கொண்ட ஜப்பானிய கடற்படையை கொரிய தளபதி யின் சுன் சின், 13 கப்பல்களைக் கொண்ட கடற்படை மூலம் வெற்றிகொண்டார்.
1640: ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1775: அமெரிக்க சுதந்திரப் புரட்சியை இராணுவ ரீதியாக அடக்குவதற்கு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் அனுமதியளித்தார்.[You must be registered and logged in to see this image.]
1905: சுவீடனிடமிருந்து நோர்வே சுதந்திரம் பெற்றது.
1947:காஷ்மீர் மஹாராஜா தனது இராஜ்ஜியத்தை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்தார்.
1967: ஈரானின் மன்னராக மொஹமட் ரெஸா பஹ்லவி முடிசூடிக்கொண்டார்.
1979: தென்கொரிய ஜனாதிபதி பார்க் சுங் ஹீ, அந்நாட்டு புலனாய்வுத்துறைத் தலைவர் கிம் ஜே கியூவினால் விருந்தொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
1994: 46 வருடகால யுத்தத்தின் பின் இஸ்ரேல்- ஜோர்டான் நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Oct 27, 2013 6:18 pm

ஒக்டோபர் 27
 
 

1275: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரம் உருவாக்கப்பட்டது.
1806: பிரெஞ்சு இராணுவம் ஜேர்மனியின் பேர்லின் நகருக்குள் நுழைந்தது.
1904 நியூயோர்க் பாதாள ரயில் சேவை சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1922: தென்னாபிரிக்க ஒன்றியத்துடன் இணையும் திட்டத்தை ரொடீஸியா வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நிராகரித்தது.
1936: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் 8 ஆம் எட்வர்ட் இளவரசரை மணப்பதற்காக திருமதி வல்லிஸ் சிம்ஸன் தனது கணவரை விவகாரத்துக்கு செய்வதற்கு விண்ணப்பித்தார்.
[You must be registered and logged in to see this image.]
1958: பாகிஸ்தானின் முதலாவது ஜனாதிபதி இஸ்கந்தர் மிர்ஸா, ஜெனரல் அயூப்கான் தலைமையிலான இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது பாகிஸ்தானின் முதலாவது இராணுவப் புரட்சியாகும்.
1961: மௌரிட்டானியா, மொங்கோலியா ஐ.நா.வில் இணைந்தன.
1971: கொங்கோ ஜனநாயக குடியரசின் பெயர் ஸயர் என மாற்றப்பட்டது. (1997 இல் அந்நாட்டிற்கு மீண்டும் கொங்கோ எனப் பெயரிடப்பட்டது).
1991: சோவியத் யூனியனிடமிருந்து துருக்மேனிஸ்தான் சுதந்திரம் பெற்றது.
1999: ஆர்மேனிய நாடாளுமன்றத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தி, பிரதமர் வஸ்ஜென் சார்ஜிஸ்யான் உட்பட 6 பேரை கொன்றனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Fri Nov 01, 2013 11:55 am

ஒக்டோபர் 28






1707 ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5000 பேர் பலி.

1886: நியூயோர்க் துறைமுகத்தில் அமெரிக்க சுதந்திரச் சிலை ஜனாதிபதி குரோவர் கிளீவ்லாண்டினால் திறந்துவைப்பு.

1891 ஜப்பானிய வரலாற்றில் மிகப்பெரிய பூகம்பமான (8.0 ரிக்டர்) மினோ ஒவாரி பூகம்பம் ஏற்பட்டது. 7273 பேர் பலி.

1918: ஆஸ்திரியா-ஹங்கேரியிடமிருந்து செக்கஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்றது.

1954: நவீன நெதர்லாந்து இராஜ்ஜியம் சமஷ்டி முடியாட்சி இராஜ்ஜியமாக ஸ்தாபிக்கப்பட்டது.

1962: கியூபாவிலிருந்து தனது அணுவாயுதங்களை அகற்ற சோவியத் யூனியன் சம்மதித்தது.

2007: ஆர்ஜென்டீனாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கேர்ச்னர் தெரிவானார்.

2009: பாகிஸ்தானில் பெஷாவரில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலில் 117 பேர் பலி.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Fri Nov 01, 2013 11:56 am

ஒக்டோபர் 29
 
    
1422: பிரான்ஸில் 7 ஆம் சார்ள்ஸ், மன்னராக முடிசூடினார்.
 
1859: மொராக்கோவுக்கு எதிராக ஸ்பெய்ன் யுத்தப் பிரகடனம்.
1863: 18 நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை அமைப்பதற்கு இணங்கின.
 
1922: இத்தாலிய மன்னர் 3 ஆம் விக்டர் இமானுவல், பெனிட்டோ முஸோலினியை பிரதமராக நியமித்தார்.
1923: ஒட்டோமான் இராஜ்ஜியம் கலைக்கப்பட்டபின் துருக்கி குடியரசாகியது.
 
1941: லிதுவேனியாவில் ஜேர்மன் படைகளால் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
[You must be registered and logged in to see this image.]
1960: பின்னாளில், முஹம்மட் அலி என அறியப்பட்ட, கஸியஸ் கிளே தனது முதலாவது தொழிற்சார் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றார்.

1961: ஐக்கிய அரபுக் குடியரசிலிருந்து சிரியா வெளியேறியது.

1964: தான்கானீய்காவும் ஸான்ஸிபாரும் இணைந்து தான்ஸானியா குடியரசு உருவாக்கப்பட்டது.

1969: கணினிகளுக்கிடையிலான முதலாவது இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1998: தென்னாபிரிக்காவில் வெள்ளையின நிறவெறி ஆட்சிக்காலம் குறித்து  ஆராய நியமிக்கப்பட்ட 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்' அறிக்கை வெளியிடப்பட்டது.

1998: ஜோன் கிளென் என்பவர் 77 ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற மிக வயதான நபர் எனும் சாதனைக்குரியவரானார்.

1999: இந்தியாவின் ஒரிசாவில் பாரிய சூறாவளி தாக்கியது. 10 ஆயிரம் பேர் பலியானதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
 
2002: வியட்நாமின் ஹோசிமின் சிட்டி கடைத்தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 இற்கும் அதிகமானோர் உயரிழந்தனர்.
 
2004: செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு ஒஸாமா பின்லேடன் நேரடி பொறுப்பேற்பதாகக் கூறும் வீடியோவை அல் ஜெஸீரா  தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

2004: ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரோமில் சந்தித்து ஐரோப்பிய அரசியலமைப்புக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

2005: இந்தியாவின் டெல்லியில் நடந்த குண்டுத்தாக்குதலில் 60 பேர் பலி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Fri Nov 01, 2013 11:57 am

ஒக்டோபர் 30
 
    
701: கிரேக்கத்தில் 6ஆம் ஜோன் தனது கத்தோலிக்க பாப்பரசர் வாழ்வை ஆரம்பித்தார்.

1137: அபுலியாவின் ரானூஃப் இற்கும் சிசிலியாவின் 2ஆம் ரொஜெருக்குமிடையில் “றிக்னனோ“ யுத்தம்.

1270: 8ஆவதும் இறுதியுமான சிலுவைப்போர் தொடங்கப்பட்டது.

1340: றியோ சலாடோ யுத்தம்

1389: பிரான்ஸ் மன்னன் 6ஆவது சார்ளெஸ் - பாப்பரசர் 7ஆவது கிளமென்ஸை சந்தித்தார்.

1485: இங்கிலாந்தின் மன்னனாக 7ஆவது ஹென்றி முடிசூடினார்.

1502: வஸ்கொட காமா 2ஆவது தடவையாக இந்தியாவின் கேரளைாவிலுள்ள கோழிக்காட்டுக்கு வருகை தந்தார்.

1894: டானியல் கூப்பர் - மணிக்கூட்டுக்கு காப்புரிமை பெற்றார்.

1922: பெனிட்டோ முஸோலினி - இத்தாலியில் அரசொன்றை நிறுவினார்.

1957: ஸ்புட்னிக்-2 விண்கலத்தில் செல்லும் நாயின் பெயர் “லைக்கா“ என சோவியத் யூனியன் அறிவித்தது.

1979: எஸ்-203 என்னும் விண்வெளி வாகனத்தை நாசா அறிமுகம் செய்தது.
[You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Fri Nov 01, 2013 11:59 am

ஒக்டோபர் 31
 
    
1876: இந்தியாவில் வீசிய கடும் சூறாவளியினால் 2 இலட்சம் பேர் பலியாகினர்.
1941: அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ரெயூபன் ஜேம்ஸ் எனும் கப்பல் ஜேர்மன் படையினரால் மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியினால் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது அமெரிக்க கடற்படைக் கப்பல் இதுவாகும்.

1956: சுயஸ் கால்வாயை திறக்க நிர்ப்பந்திப்பதற்காக, எகிப்தின் மீது பிரித்தானிய பிரெஞ்சு படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தின.

1984: இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் 1000 இற்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

2000: சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமொன்று நிர்மாணக் கருவியொன்றுடன் மோதியதால் பயணிகள் சிப்பந்திகள் உட்பட 79 பேர் பலி.    
2000: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக மனிதர்கள் தங்குவதற்கு அனுப்பப்பட்டனர்.   

2003: மலேஷியாவில் 22 வருடங்கள் பிரதமராக பதவி வகித்த மஹதிர்   மொஹமட் இராஜினாமாச் செய்தார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Fri Nov 01, 2013 12:00 pm

நவம்பர் 01
 
   
1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப், மன்னராக முடிசூட்டப்பட்டார்.

1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.

1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.

1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.

1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

1894: ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.

1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.

1947: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.

1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.

1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1981: அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன்  முறைப்படி உருவாக்கப்பட்டது.

2000:  ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by ஸ்ரீராம் Fri Nov 01, 2013 12:02 pm

மொகைதீன் வாழ்த்துக்கள் ஒரு வருடம் சென்ற இந்த பதிவு இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Fri Nov 01, 2013 12:16 pm

எல்லாம் உங்கள் அனைவரின் ஆதரவுத◌ான்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 24 Empty Re: வரலாற்றில் இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum