தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரலாற்றில் இன்று

Page 19 of 24 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24  Next

View previous topic View next topic Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Nov 01, 2012 11:54 am

First topic message reminder :

நவம்பர் 01


1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.

1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.



1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.


1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.


1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.


194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.


1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.


1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.


2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.

[You must be registered and logged in to see this link.]

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down


வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 06, 2013 12:59 pm

ஜூலை 03 
 
1778: அமெரிக்க சுதந்திர போரின்போது, பிரித்தானிய படைகளால் வொயோமிங் நகரில் 360 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
[You must be registered and logged in to see this image.]1970: பிரித்தானிய விமானமொன்று ஸ்பெய்னில் விபத்துக்குள்ளானதால் 113 பேர்பலி.
1979: ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு ஆதரவான அரசாங்கத்தை எதிர்க்கும் போராளிகளுக்கு உதவியளிப்பதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கையெழுத்திட்டார்.
1988: ஈரான் - ஈராக் யுத்தத்தின்போது ஈரானிய பயணிகள் விமானமொன்று அமெரிக்க கடற்படை கப்பலொன்லிருந்து ஏவப்பட்ட ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 290 பேர் பலியாகினர். யுத்த விமானம் எனக் கருதி அவ்விமானத்தை வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்தது.
2001:  ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 145 பேர் பலியாகினர்.
2006: மெக்ஸிகோவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 43 பேர் பலியாகினர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 06, 2013 1:02 pm

ஜூலை 4

1776 - இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்க ஐக்கிய நாடு விடுதலையை அறிவித்தது.
1807 - நவீன இத்தாலியின் தந்தையென அழைக்கப்படும் ஜுசெப்பே கரிபால்டி பிறந்தார்.
 
1810: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.
1837 உலகின் நீண்ட தூர ரயில்சேவை பிரிட்டனின் பேர்மிங்ஹாம் , லிவர்பூல்நகரங்களுக்கிடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1902ல் - இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரும்,
1934ல் - கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்த மேரி கியூரியும் இறந்தனர்.
1903: ட்ரோதி லெவிட் என்பவர் மோட்டார் பந்தயப் போட்டியில் பங்குபற்றிய முதல் பெண்ணானார்.[You must be registered and logged in to see this image.]
1918: ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலஸ் சார் மன்னரும் அவரின் குடும்பத்தினரும் போல்ஸ்விக் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.
1941: உக்ரேனில் கைது செய்யப்பட்ட போலந்து விஞ்ஞானிகளும் எழுத்தாளர்களும் ஜேர்மனியின் நாஸி படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1946:  381 வருடங்கள் பல நாடுகளின் காலனி நாடாக இருந்த பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடமிருந்து முழுiயான சுதந்திரம் பெற்றது.
1947: இந்தியா, பாகிஸ்தான் எனும் இரு சுதந்திர நாடுகளை உருவாக்குவதற்கான பிரேரணை இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
1966: அமெரிக்காவில் தகவல் சுதந்திர சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் கையெழுத்திட்டார்.
1976: கடத்தப்பட்டு உகண்டாவின் எண்டபே விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எயார் பிரான்ஸ் விமானத்தையும் 248  பயணிகளையும்12 ஊழியர்களையும்மீட்கும்  அதிரடி நடவடிக்கையை இஸ்ரேலிய கமோண்டோக்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். 260 பணயக்கைதிகளில் நால்வரும் கொமாண்டோக்களில்ஒருவம் பலியாகினர். கடத்தல்காரர்கள் 7 பேரும் உகண்டா படையினர் படையினர் 45 பேரும் பலி.
1997: செவ்வாய் கிரகத்தில் நாஸாவின் பாத் பைண்டர் விண்கலம் தரையிறங்கியது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 06, 2013 1:03 pm

ஜூலை 05


1811: ஸ்பெய்னிடமிருந்து  வெனிசூலா சுதந்திரம் பெற்றது.
1954: நாளாந்த செய்தி ஒளிபரப்பை பிபிசி ஆரம்பித்தது.[You must be registered and logged in to see this image.]
1970: கனேடிய விமானமொன்று டொரன்டோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 109 பேர் பலி.
1975: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியனாகிய முதல் கறுப்பின வீரரானார் அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ்.
1977: பாகிஸ்தானில் பிரதமர் ஸுல்பிகார் அலி பூட்டோ இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
1987: தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் இடம்பெற்றது. நெல்லியடி இராணுவ முகாம் மீது 'கப்டன் மில்லர்' தமிழீழ வீடுதலைப் புலிகளின் முதல் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தினார்.
1996: டோலி செம்மறி ஆடு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் முலையூட்டியாகியது.
2004: இந்தோனேஷியாவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.
2009: சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், 15 ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன்பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 06, 2013 1:06 pm

ஜூலை 06

1535 - தாமஸ் மூர் தேசத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தூக்கிலிடப்பட்டார்.
1785: அமெரிக்காவின் நாணயமாக டொலர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டது.
1885: விசர்நாய் கடிக்கு எதிரான தடுப்பு மருந்தை லூயிஸ் பாச்சர் வெற்றிகரமாக சோதித்தார்.[You must be registered and logged in to see this image.]
1892: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான முதல் இந்தியர் எனும் பெருமையை தாதாபாய் நாரோஜி பெற்றார்.
1939 - ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

1944: அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலத்தில் இடம்பெற்ற தீவிபத்தினால் 168 பேர் பலியாகினர்.
1947: சோவியத் யூனியனில ஏகே 47 ரக துப்பாக்கி; தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1956 - சிங்களம் இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியானது.

1957: அல்தியா கிப்ஸன், விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன் பட்டம் வென்ற முதல் கறுப்பின வீராங்கனையானார்.
1964: பிரிட்டனிடமிருந்து மாலாவி சுதந்திரம் பெற்றது.
1967: பயாப்ரா பிராந்தியத்திற்குள் நைஜீரியா படையெடுத்தது. பயாப்ரா யுத்தம் ஆரம்பம்.
1975: பிரான்ஸிடமிருந்து கெமரோஸ் சுதந்திரம் பெற்றது.
1988: வட கடலில் பைப்பர் அல்பா எனும் எண்ணெய் அகழ்வு நிலையமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால்  167 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 11:25 am

ஜூலை 07

1456 - ஜோன் ஆஃப் ஆர்க் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது.

1543: லக்ஷம்பர்க் மீது பிரான்ஸ் படையெடுத்தது.[You must be registered and logged in to see this image.]
1865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பாக நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
1896- இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1937: சீனாவின் பெய்ஜிங் நகரம் மீது ஜப்பானிய துருப்புகள் படையெடுத்தன.
1965: கனடாவில் ஆங்கிலத்தக்கு சமமாக பிரெஞ்சு மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டது.
1978: பிரிட்டனிடமிருந்து சொலமன் தீவுகள் சுதந்திரம் பெற்றது.
1985: விம்பிடள்டன் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் வீரர் பொரிஸ் பெக்கர் 17 ஆவது வயதில் சம்பியனாகி புதிய சாதனை படைத்தார்.
2005: லண்டனில் பஸ், மற்றும் ரயில்களில் வெடித்த குண்டுகளால் 52 பேர் பலி. சுமார் 700 பேர் காயம்.
2007 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தாஜ் மகால் ஒன்றென அறிவிக்கப்பட்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 11:40 am

ஜுலை 8

1099 - முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.
1497 - வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம். இந்தியாவிற்குக் கடல் வழி காண 170 பேருடன் மூன்று கப்பல்களில் புறப்பட்டார்ர் Vasco Da Gama.
1815 - பதினெட்டாம் லூயி பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னனான். இரு வாரங்களே பதவியில் இருந்த நான்கு வயது இரண்டாம் நெப்போலியன் பதவி இழந்தான்.
1859 - சுவீடன்-நோர்வே மன்னனாக சுவீடனின் பதினைந்தாம் சார்ல்ஸ் முடி சூடினான்.
1889 - வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலாவது இதழ் வெளியானது.
1978 - Reinhold Mesner என்பவரும் Peter Hepler என்பவரும் முதன் முதலாக பிராணவாயு உதவியில்லாமல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைச் சென்றடைந்தனர்.
1982 - ஈராக் அதிபர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
1985 - திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1990 - ஜெர்மனி ஆர்ஜென்டீனாவை வென்று 1990 கால்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
2006 - ம. பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 11:41 am

ஜூலை 09


1810: பிரெஞ்சு மன்னன் நெப்போலியனினால்  பிரான்ஸுடன்  ஒல்லாந்து இணைக்கப்பட்டது.
1918: அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 101 பேர் பலி.
[You must be registered and logged in to see this image.]1947: பிரித்தானிய இளவரசி எலிஸபெத் (தற்போதைய 2 ஆம் எலிஸபெத் ராணியார்) இளவரசர் பிலிப் மௌன்ட்பேட்டன் திருமண நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது.
1948: பாகிஸ்தான் முதல் தபால் முத்திரைகளை வெளியிட்டது.
1982: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில்இடம்பெற்ற விமான விபத்தில் 145 பேர் பலி.
1991: ஒலிம்பிக் அமைப்பில் 30 வருடங்களின்பின் தென்னாபிரிக்கா மீண்டும் இணைக்கப்பட்டது.
1995: யாழ். நவாலி தேவாலயத்தின் மீதான குண்டு வீச்சினால் 125 பொதுமக்கள் பலி.
2002 - ஆப்ரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது.
2006: 200 பேருடன் பயணம் செய்த விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 122 பேர் பலி.

2011: தென் சூடான் சுதந்திரம் பெற்றது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 11:43 am

ஜூலை 10.


1212: லண்டனில் ஏற்பட்ட தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.

1947: பாகிஸ்தானின் முதலாவது ஆளுநர் நாயகமாக முஹமட் அலி ஜின்னா நியமிக்கப்பட்டார்.

1962: உலகின் முதலாவது தகவல்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.

1973: பஹாமஸ் முழுமையான சுதந்திரம்பெற்றது.

1973: பங்களாதேஷ பாகிஸ்தான் நாடாளுமன்றம் அங்கீகரித்து.

1991: நிறவெறி ஆட்சி முடிவுற்றதையடுத்து. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) சேர்கக்ப்பட்டது.

2000: நைஜீரியாவில் பெற்றோலிய குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 250 கிராமவாசிகள் பலி.

2006: பாகிஸ்தானின் முல்தான் நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 45 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 11:44 am

ஜூலை 11


 
1919: நெதர்லாந்தில் எட்டு மணித்தியால வேலைநாளும், ஞாயிறு விடுமுறையும் சட்டமாக்கப்பட்டது.
1921: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி வில்லியம் ஹோவார்ட் டவ்ட,; அந்நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்றார். இவ்விரு பதவிகளையும் வகித்த ஒரே நபர் அவராவார்.[You must be registered and logged in to see this image.]
1950: சர்வதேச நாணய நிதியத்தில் பாகிஸ்தான் இணைந்தது.
1972: முதலாவது உலக சதுரங்க சம்பியன்ஷிப்போட்டி நடைபெற்றது.
1973: பாரிஸில் நடந்த விமான விபத்தில் 134 பேர் பலி.
1978: ஸ்பெய்னின் டரகோனா நகரில் எரிவாயு ஏற்றிச்சென்ற லொறியொன்று வவிபத்துக்குள்ளாகி வெடித்ததால் 216 சுற்றுலா பயணிகள் பலி.
1987: அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையமான ஸ்கைலாப், பூமிக்குத் திரும்பும் போது உடைந்து சிதறி இந்து சமுத்திரத்தில் விழுந்தது.
1991: சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 261 பேர் பலி.
1995: கியூப விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 44 பேர்பலி.
1995: ஸ்ரேபிரேனிக்கா படுகொலைகள்: ஜூலை 11 முதல் 22 ஆம் திகதிவரை  பொஸ்னியாவில் 8000 பொஸ்னிய முஸ்லிம்கள் சேர்பிய படையினரால் கொல்லப்பட்டனர்.
2006: மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்புகளால் 209 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by மகா பிரபு Wed Jul 17, 2013 11:46 am

தொடர் தகவல் அருமை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 11:53 am

ஜூலை 12


[You must be registered and logged in to see this image.]1453: இங்கிலாந்து மன்னர் 8 ஆம் ஹென்ரி, தனது ஆறாவது மனைவி கத்தரினை திருமணம் செய்தார்.
1580 – ஆஸ்ட்ராக் விவிலியம் (Ostrog Bible) என்ற ஸ்லாவிய மொழியிலான விவிலியம் முதன்முறையாக அச்சிடப்பட்டது.


1918: ஜப்பானிய யுத்தகப்பலான 'கவாச்சி' மூழ்கியதால்  621 பேர் பலி.
1943: உலக வரலாற்றில் இராணுவத் தாங்கிகளுக்கிடையிலான மிகப்பெரிய யுத்தம் சோவியத் மற்றும் ஜேர்மன் படைகளுக்கிடையில் ரஷ்யாவின் புரோகொரோவா நகரத்தில் இடம்பெற்றது. இச்சமரில் சுமார் 500 தாங்கிகள் சேதமடைந்தன.

1961: இந்தியாவின் புனே நகரில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.
1975 - சாவோ டொமே (São Tomé) மற்றும் பிரின்சிப்பே (Príncipe) போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 - கிரிபாட்டி (Kiribati) பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.



2011: நெப்டியூன் கிரகம் 23.09.1846 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அது, முதல் தடவையாக சூரியனை வலம்வந்து முடித்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 11:55 am

ஜுலை 13

கி.பி.1844 - இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.

1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.

[You must be registered and logged in to see this image.]
1878: ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்திலிருந்து சேர்பியா மொன்டெனெக்ரோ, ருமேனியா முழுமையாக சுதந்திரம் பெற்றன.
1908 - இலண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்கு பெற்றனர்.

1919: பிரித்தானிய வாயுக்கப்பலொன்று பிரிட்டனிலிருந்து அத்திலாந்திக் சமுத்திரத்தை கடந்து சென்று மீண்டும் பிரிட்டனில் தரையிறங்கியது. முதல்தடவையாக இத்தகைய இருவழிப் பயணம் நடைபெற்றது.
1923: 'ஹொலிவூட்' சமிக்ஞை உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
1973: அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழலில் உரையாடல் பதிவுகள் அடங்கிய ஒலிநாடா இருப்பது குறித்து செனட் விசாரணைக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
1985: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் உப ஜனாதிபதி ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ்  ஒருநாள் பதில் ஜனாதிபதியாக  கடமையாற்றினார்.
1990: ஆப்கானிஸ்தானில் 'லெனின் சிகரத்தில்'  ஏறிக்கொண்டிருந்த மலையேறிகள் 43 பேர், பூகம்பமொன்றையடுத்து,ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியாகினர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 12:01 pm

ஜுலை 14


1223 - எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.
1865 - எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர்.
1889 - பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.
1933 - ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.
1948 - இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.
1958 - ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.
1965 - மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
1966 - குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
1967 - நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
1969: அமெரிக்கா அரசு  500, 1000, 5000,  மற்றும் 10,000   டொலர்  நாணயத்தாள்களை வாபஸ் பெற்றது.

1989 - பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.
1995 - MP3 பெயரிடப்பட்டது.
1995 - இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா வந்தடைந்தன.
2002 - பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.
2007 - ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.
[தொகு] பிறப்புகள்
1929 - வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியல் அறிஞர்.
1943 - ரோகண விஜயவீர, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், புரட்சியாளர் (இ. 1989)
[தொகு] இறப்புகள்
1827 - அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)
1998 - டிக் மக்டொனால்ட், மக்டொனால்ட் நிறுவன தாபகர் (பி. 1909)
2008 - சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 12:03 pm

ஜுலை 15

நிகழ்வுகள்

1240 - அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தலைமையிலான ரஷ்யப் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.

1381 - இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.

1741 - அலெக்சி சிரிக்கொவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.

1815 - நெப்போலியன் பொனபார்ட் பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் கப்டனிடம் சரணடைந்தான்.

1840 - ஆஸ்திரியா, பிரித்தானியா, புருசியா, மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1857 - சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.

1860 - இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.

1870 - புரூசியாவும் இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசும் தமக்கிடையே போரை ஆரம்பித்தன.

1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1888 - ஜப்பானின் பண்டாய் மலை வெடித்ததில் 500 பேர் கொல்லப்பட்டனர்.

1916 - வாஷிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

1927 - வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1954 - இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.

1955 - அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

1974 - சைப்பிரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் அதிபர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை அதிபராக்கினர்.

1983 - பாரிசில் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.

1991 - ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

2002 -- வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த "அகமது ஷேக்" என்பவனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

2003 - மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
2009: ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தினால் 153 பேர் பலியாகினர்.

[தொகு] பிறப்புகள்

1606 - ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669)

1876 - மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)

1903 - கே. காமராஜ், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (இ. 1975)

இறப்புகள்

1904 - அன்ரன் செக்கோவ், ரசிய எழுத்தாளர் (பி. 1860)

1991 - நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)

2002 - எம். எச். எம். ஷம்ஸ், இலங்கையின் ஊடகவியலாளர் (பி. 1940)

2003 - என். கே. பத்மநாதன், ஈழத்தின் பிரபல நாதசுவரக் கலைஞர் (பி. 1931)
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 12:05 pm

ஜுலை 16
 
நிகழ்வுகள்


 
1661 - ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.
 
1769 - சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.
 
1930 - எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல்
செலாசி வெளியிட்டார்.
 
1942 - பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000-20,000 யூதர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்ய காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
 
1945 - மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.
1945: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனி தோல்வியுற்ற ஜேர்மனியின் எதிர்காலம் குறித்து அமெரிக்க, பிரித்தானிய, ரஷ்ய தலைவர்கள் [You must be registered and logged in to see this image.]ஜேர்மனியின் பொஸ்டாம் நகரில் சந்தித்து கலந்துரையாடினர்.
 
1948 - இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
 
1950 - உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவாய் பிரேசிலை 2-
1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
 
1955 - டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.
 
1965 - பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
 
1969 - அப்பல்லோ 11 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இதுவே சந்திரனில் இறங்கவிருக்கும் முதலாவது மனிதரை ஏற்றிச் சென்ற விண்கலம் ஆகும்.
 
1979 - ஈராக் அதிபர் ஹசன் அல்-பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.
1981: மலேஷியாவில் மஹதிர் முஹம்மட் பிரதரானார்.
 
1989 - புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
1990 - பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.
 
1994 - ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
 
1995 - காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
 
1994 - "ஷூமேக்கர்-லெவி 9" என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.
 
1999 - ஜோன் எஃப். கென்னடி, இளையவர், அவரது மனைவி விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
 
2004 - தமிழ்நாடு கும்பகோணத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 93 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
 
2004 - மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.
 
2006 - தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.
 
பிறப்புகள்
 
1896 - ட்றிகுவே லீ, ஐக்கிய நாடுகள் அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. 1968])
 
1942 - முவம்மார் அல் கடாபி, லிபியாவின் தலைவர்
 
1968 - தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்.
 
1984 - கத்ரீனா காயிஃப், இந்திய நடிகை
 
இறப்புகள்
 
1989 - உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்
 
2009 - டி. கே. பட்டம்மாள்


Last edited by mohaideen on Wed Jul 17, 2013 12:09 pm; edited 1 time in total
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Jul 17, 2013 12:07 pm

ஜுலை 17


நிகழ்வுகள்

1203 - நான்காம் சிலுவைப் படைகள் கொன்ஸ்டண்டீனபோல் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசண்டைன் பேரரசர் மூன்றாம் அலெக்சியஸ் ஆஞ்செலஸ் தலைநகரை விட்டுத் தப்பியோடினான்.

1755 - கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்குலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.

1762 - ரஷ்யாவின் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவனது மனைவி இரண்டாம் கத்தரீன் அரசியானாள்.

1771 - இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணித்த கனடாவின் சிப்பேவியன் பழங்குடிகளின் தலைவன் இனூயிட் மக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.

1791 - பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1815 - பிரான்சில் நெப்போலியன் பொனபார்ட் பிரித்தானியர்களிடம் சரணடைந்தான்.

1816 - பிரெஞ்சு பயணிகள் கப்பல் செனெகல்லுக்கு அருகில் மூழ்கியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.

1841 - முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.

1856 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1911 - யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.

1918 - போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாசும் அவனது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.

1918 - டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய "கர்பாத்தியா" என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

1936 - ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1944 - இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் கொல்லப்பட்டனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது.

1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உலகப்போர் தொடர்பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜெர்மனியின் பொட்ஸ்டாம் நகரில் ஆரம்பித்தனர்.

1955 - கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.

1967 - நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் "சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது.

1968 - ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அதிபர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது ஹசன் அல்-பாக்கர் அதிபரானார்.

1973 - ஆப்கானிஸ்தான் அரசர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.

1975 - அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

1976 - கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.

1976 - கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.

1979 - நிக்கராகுவா அதிபர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.

1981 - மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

1994 - பிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1996 - நியூ யோர்க்கில் லோங் தீவில் பாரிஸ் சென்றுகொண்டிருந்த போயிங் 747 TWA விமானம் வெடித்துச் சிதறியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.

1998 - பப்புவா நியூ கினியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 3,183 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1998 - பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.

2006 - இந்தோனீசியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2006 - இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1941 - பாரதிராஜா, இந்தியத் திரைப்பட இயக்குனர்

1954 - ஏங்கலா மெர்கல், ஜெர்மனி நாட்டு அரசியல்வாதி

1971 - சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)

1977 - மாதங்கி அருள்பிரகாசம், ராப் இசைப் பாடகி

இறப்புகள்

1918 - ரசியாவின் மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் (பி. 1868) குடும்பம்
அலெக்சான்ட்ரா ஃபியோதரொவ்னா, அரசி (பி. 1872)
ஒல்கா, இளவரசி (பி. 1895)
தத்தியானா, இளவரசி (பி. 1897)
மரீயா, இளவரசி (பி. 1899)
அனஸ்தாசியா, இளவரசன் (பி. 1901)
அலெக்சி, இளவரசன் (பி. 1904)

1972 - எமிலியானுஸ் பிள்ளை, யாழ்ப்பாணத்தின் முதலாவது தமிழ் ஆயர், (பி. 1901)

சிறப்பு நாள்

தென் கொரியா - அரசியலமைப்பு நாள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Jul 18, 2013 11:42 am

ஜுலை 18

1925;: அடோல்வ் ஹிட்லர் மேயின் காம்ப் (எனது போராட்டம்) எனும் தனது நூலை வெளியிட்டார். 1955: முதலாவது டிஸ்னிலான்ட் களியாட்ட பூங்கா கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. 1976: நாடியா கொமன்ஸி, கோடைக்கால ஒலிம்பிக்; ஜிம்னாஸ்டிக் போட்டியில் 10 புள்ளிகளைப் பெற்ற முதல் வீராங்கனையானார்.1994: ஆர்ஜென்டீனாவிலுள்ள யூத சங்கமொன்றின் கட்டிடத்தில் நடந்த கொண்டுவெடிப்பில் 85 பேர் பலியாகினர்.

1996: முல்லைத்தீவு இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

2001: இந்தோனேஷியாவின் சாம்பிட் பகுதியில் பாரிய இனவன்முறைகள் மூண்டன.

2003: தென்கொரியாவின் டேகு ரயில்வே தீ விபத்தில் 200 இற்கும் அதிகமானோர் பலி.

2004: ஈரானில் கந்தகம், பெற்றோல், உரம் ஆகியனவற்றை ஏற்றிச்சென்ற ரயில் தீப்பற்றி வெடித்ததால் 295 பேர் பலி.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 27, 2013 10:08 pm

ஜூலை 19.


 1870: பிரஷ்யாவுக்கு எதிராக பிரான்ஸ் போர் பிரகடனம் செய்தது.

1985: இத்தாலியில் அணைக்கட்டொன்று உடைந்ததால் 268 பேர் பலி.

1989: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 296 பயணிகளில் 112 பேர் பலி.

1992: இத்தாலியில் மாபியாவுக்களுக்கு எதிரான நீதிபதியொருவர் கார்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

1997: வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக போராடிய ஐ.ஆர்.ஏ கெரில்லாக்கள், யுத்த நிறுத்தம் செய்தனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 27, 2013 10:09 pm

ஜூலை 20.


1944: ஜேர்மனிய சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் படுகொலை முயற்சியொன்றிலிருந்து தப்பினார்.

1949: இஸ்ரேலும் சிரியாவும் 19 மாத யுத்த்தின் பின்னர் போர்நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

1951: ஜோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா ஜெருஸலேமில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பலஸ்தீனியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

1960: இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வெற்றிபெற்று பிரதமராக தெரிவானார். உலகின் முதலாவது பெண் பிரதமர் இவராவார்.

1974: சைப்பிரஸ் மீது துருக்கி படையெடுத்தது.

1976: அமெரிக்காவின் வைக்கிங் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

1980: ஜெருஸலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கக்கூடாது எனும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை 14-0 வாக்குகளால் அங்கீகரித்தது.

1989: பர்மாவில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 27, 2013 10:11 pm

ஜூலை 21

365: எகிப்தின் அலெக்ஸான்ட்ரியாவை தாக்கிய சுனாமியினால் சுமார் 50,000 பேர் பலி.

1969: அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங், சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதரானார். அவரைத் தொடர்ந்து எட்வின் அல்ட்ரினும் சந்திரனில் இறங்கினார்.

1977: நான்கு நான் லிபிய – எகிப்து யுத்தம் ஆரம்பம்

1983: உலகின் மிக குளிர்ந்த காலநிலை -89.2 பாகை செல்சியஸ் அந்தார்ட்டிகாவில் பதிவு செய்யப்பட்டது.

1994: பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவராக டொனி பிளேயர் தெரிவானார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 27, 2013 10:11 pm

ஜூலை 22

1933: வெஸ்லி போஸ்ட் என்பவர் முதன்முதலில் உலகத்தை தனியா விமானத்தில் சுற்றிவந்து சாதனை படைத்தார்.

1976: 2 ஆம் உலக யுத்தக்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக பிலிப்பைன்ஸுக்கு நாடுகடத்தப்பட வேண்டிய கடைசி நபரை ஜப்பான் நாடுகடத்தியது.

1992: கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் புள்ளியான பாப்லோ எஸ்கோபர் ஆடம்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்றார்.

2002: ஹமாஸ் தளபதி சலாஹ் சஹேட்டை இஸ்ரேல் கொன்றது.

2011 நோர்வேயில் அன்டெர்ஸ் பேரிங் பிரைவீக் என்பவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டுத்தாக்குதலால் 77 பேர் பலியாகினர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 27, 2013 10:12 pm

ஜூலை 23

1881: சர்வதேச ஜிம்னாஸ்டிக் சம்மேளனம் ஸ்தாபிக்கப்பட்டது.

1914: ஆஸ்திரிய இளவரசர் பேர்டினாட்டை படுகொலை செய்தவர் யார் என்பதை விசாரிக்க அனுமதிப்பதற்கு சேர்பியாவுக்கு ஆஸ்திரிய -ஹங்கேரிய ராஜ்ஜியம் காலக்கெடு விதித்தது.

1983: யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இலங்கை இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாரிய இன வன்செயல்கள் ஆரம்பித்தன.

1984: மிஸ் அமெரிக்கா அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட வனேஸா வில்லியம்ஸ் நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ்கொடுத்ததால் அழகுராணி பட்டத்தை துறந்தார்.





1986: லண்டனில் இளவரசர் அன்ட்ரூ - சாரா பேர்குஸன் திருமணம் நடைபெற்றது.

2005: எகிப்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 88 பேர் பலியாகினர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 27, 2013 10:13 pm

ஜூலை 24

1915: சிகாகோ நதியில் கப்பலொன்று கவிழ்ந்ததால் 844 பேர் பலியாகினர்.

1969: சந்திரனில் தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங் தலைமையிலான விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்.

1982: ஜப்பானில் மண்சரிவினால் பாலமொன்று உடைந்ததால் 299 பேர் பலி.

2001: பண்டாரநாயக்க விமான நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி பல வான்கலங்களை அழித்தனர்.

2005: டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டப் போட்டியில் லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங் தொடர்ச்சியாக 7 ஆவது தடவையாக வென்றார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 27, 2013 10:14 pm

ஜூலை 25


1978: உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் பிரவுண் பிறந்தது.

1983: வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.

1984: ரஷ்யாவின் ஸ்வெட்லான ஸ்விட்ஸ்கயா விண்வெளியில் நடந்த முதலாவது பெண்ணானார்.

1993: லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் பாரிய தாக்குதலை ஆரம்பித்தத.

1996: புரூண்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

2000: எயார் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கொன்கோர்ட் விமானம் விபத்துக்குள்ளானதால் 109 பேர் பலி.

2007: இந்தியாவில் பிரதீபா பட்டீல் முதலாவது பெண் ஜனாதிபதியானார
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Jul 27, 2013 10:14 pm

ஜூலை 26

1847: லைபீரியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1944: பிரிட்டன் மீது ஜேர்மனி முதல் தடவையாக வீ-2 ரொக்கட் தாக்குதல் நடத்தியது.

1945: பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியுற்றது.

1952: எகிப்திய மன்னர் பாருக், தனது மகன் புவாட்டிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

1953: பிடெல் காஸ்ட்ரோ, சுயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக்கியது.

1965: பிரிட்டனிடமிருந்து மாலைதீவு சுதந்திரம் பெற்றது.

1977: கனடாவின் கியூபெக் மாநில சட்டசபை, பிரெஞ்சு மொழியை உத்தியோகபூர்வ மொழியாக்கியது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 19 Empty Re: வரலாற்றில் இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 24 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum