தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிசயமான அருமையான கட்டுரைகள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 9:37 am

First topic message reminder :

சொந்த, பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Sannyasi-300x186

இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

“”பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.

புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.

இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.

புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.

ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.

இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது” என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 10:04 am

அண்ணாவின் நினைவுகளை பறைசாற்றும் சின்னங்கள்
--------------


இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக கருதப்பட்டவர் அறிஞர் அண்ணா. அது மட்டுமல்லாமல் இவர் அனைவராலும் பாராட்டுப்பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மற்றும் ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றவர்.

இவர் பெரியாரின் திராவிடக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழத்தை துவக்கி தமிழக முதல்வராக பல செயற்கறிய காரியங்களை செய்தார்.

திமுகவில் கட்சி பிளவு ஏற்பட்டு நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் 1972ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால் உருவாக்கப்பட்டது.

அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்” என பெயரிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது.

மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 5:33 pm

திருக்குறளின் சிறப்புகள்
-------------

திருக்குறள்திருவள்ளுவர்திருவள்ளுவர் ஆண்டு
திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்களை பார்ப்போம்.

“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

இவரது ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது இறுதி.

திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எ.கா: 2013 +31 = 2044 (கி.பி.2013-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்)

* திரு+குறள்= திருக்குறள்
* திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.
* திருக்குறள் இரண்டு அடிகளால் ஆன குறள் வெண்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.
* திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.
* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71) குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)
* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.


வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 5:36 pm

முட்டாளாவது இன்று மட்டுமா?
--------------

செளராட்ரிய வழக்கப்படி “நவ ரோஸ்’ (புது நாள்) என்பது மார்ச் 15 ஈரானியப் புத்தாண்டுப் பிறப்பு. அதன் பதின்மூன்றாம் நாள் குறும்பு விளையாட்டுத் தினம். கி.மு.536-ம் ஆண்டு தொடங்கிய சம்பிரதாயம். அதைத்தான் முட்டாள்கள் தினம் என்று உலகு எங்கும் திணித்துவிட்டார்கள்.

இந்தியாவில் ஆலம் ஆரா, ஒளரங்கசீப், அர்த்ஷீர் கோத்ரெஜ், தாதாபாய் நௌரோஜி, ஃபெரோஸ் கான், ஹோமி ஜஹாங்கிர் பாபா, ஜஹாங்கிர் ரத்தன் டாடா, சொராப்ஜி, குர்ஷித், நாரிமன், குஷானா, வாடியா மேத்தா, நானி பல்கிவாலா போன்ற பாரசீகப் பூர்வீகத்தினர் வழக்கம் இது.

பிரெஞ்சு மொழியில் “பாய்ஸன் டி ஏவ்(ப்)ரில்’. இத்தாலியில் “பிஸ்úஸ டி ஏப்ரிலே’. ஒன்றும் இல்லை, மீன்தினம் என்று பொருள்.

சூரியன் பங்குனி மீன ராசியில் இருந்து சித்திரை மேஷ ராசியில் நுழையும் நாள். பண்டை இந்தியர் வழக்கில் சந்திரன் மீனத்தில் முழுநிலாவாகத் தோன்றும் நாள்.

1582-ம் ஆண்டுவாக்கில் இயேசு பிறப்பை ஒட்டிய ஜனவரி முதல் தேதிக்கு மாற்றி அறிவித்தார் மத குரு எட்டாம் கிரிகொரி போப்பாண்டவர். ஒரிஜினல் ஆங்கிலேயர்களே இங்கிலாந்தில் கூட 1752-ம் ஆண்டுக்கு மேல்தான் இந்தப் புதிய ஆண்டுப் பிறப்பை ஏற்றுக்கொண்டனர். அதை ஏற்க மறுத்தவர்கள் ஏப்ரல் முதல் தேதியையே கொண்டாடினர்.

அப்புறம் என்ன, போங்கடா முட்டாள் பயல்களா என்ற அர்த்தத்தில் ஏப்ரல் முதல் நாளை அப்படியே அறிவித்து விட்டார்கள். சுரணை இல்லாமல் நாமும் கிறிஸ்தவ ஆண்டுப் பிறப்பை அப்படியே அங்கீகரித்து மகிழ்ந்தோம்.

நாம் முட்டாள் ஆவது ஏப்ரலில் மட்டுமா என்று கேட்காதீர்கள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நமக்கு நாமே முட்டாள் ஆகிறோம்.

நம்மை ஆள்வதற்கு வயதானவர்களையே தேர்ந்து எடுக்கிறோம். அவர்களில் பதினாறு பேரில் ஒருவரேனும் பத்தாம் வகுப்புகூட படிக்காதவர். சராசரி அலுவலக எடுபிடி வேலைக்குக்கூட தேறாதவர்.

அதிலும் பணக்கார உறுப்பினர்கள் பத்துப் பேரில் ஒருவருக்கு 10 கோடிக்கும் அதிகச் சொத்து இருக்கிறதாம். அதனால்தான் கரை வேட்டியுடன் கை ஆட்டிக்கொண்டு மக்கள் தொண்டாற்ற வருகிறார்களோ?

அரசுப் பணி நியமனத்துக்கே போலீஸ் வழக்கு, வில்லங்கம் இருக்கிறதா என்று தகுதி பார்த்துத்தான் சேர்க்கிறார்கள். ஆனால், அரசை ஆளுவதற்கு அது எல்லாம் கொசுறு. மூன்று பேரில் ஒருவரேனும் குற்றப் பின்னணி உடையவர்களாம். மூவரில் ஒருவர் அதர்மராம்.

அதிலும் அதர்மர்கள் விகிதாசாரத்தில் பிகார், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு முன்னணி. உ.பி. தான் ஊழல் பிரதேசமாம். 80-ல் 23 பேர் மீது குற்ற வழக்குகள், மகாராஷ்டிரம் (19), பிகார் (16) என்ற வரிசை தொடர்கிறது.

அதிலும், “”அடே, காலையில் நீ டீச்சர் பையில் இருந்து பத்துப் பைசா திருடினாயே” என்று கேட்டால், “”நீ மட்டும் யோக்கியமா?’ நேத்தைக்கு நீயும்தான் எட்டு பைசா திருடினாயே. அதுக்கு இது சரியாப்போச்சு” என்பதுதான் கட்டு அவிழ்த்து விடப்பட்ட இன்றைய ஊழல் அரசியல் விவேகிகளின் முடக்குவாதம்.

சின்னச் சின்ன குற்றம் எல்லாம் குற்றம். பெரிய குற்றமே இவர்கள் லட்சியம். இன்றைக்கு இது ஓர் அரசியல் ஃபாஷன். இஷ்டப்படி கொள்ளை அடி. சிக்கினால் “சந்திப்போம் சட்டப்படி’ என்று திருப்பி அடி. தண்டனை வராதபடி விசாரணை தவிடுபொடி.

தான் செய்தது தவறு என்றால் தன்னைத் தூக்கில் போடுங்கள் என்ற துணிச்சல் எதனால் வருதாம்?

(நாட்டை) ஆண்டவர்களுக்குத்தான் தெரியும், தூக்குத் தண்டனைக் கைதி ஆவதே சுகம்.

இயற்கை மரணம் அடையும்வரை ராஜ மரியாதைகளுடன் பிரியாணிச் சாப்பாடும் குளிர்சாதன உல்லாசச் சிறையும் அனுபவிக்கலாம்.

இத்தனைக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மாதச் சம்பளம், தொகுதி சீரமைப்புக்கு நிதி, அலுவலகச் செலவக்கு நிதி, காரில் பயணச் செலவுக்கு பணம் வழங்கப்படுகிறது.

மேலும் ரயில் பயணம் என்றால் முதல் வகுப்பு குளிர்வசதிப் பெட்டியில் எத்தனை தடவை வேண்டுமானாலும் செல்லலாம். விமானத்தில் மனைவி, துணைவி, இணைவி, உதவி என யாருடனும் ஆண்டுக்கு 40 முறை எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம்.

தலைநகரில் வாடகை இல்லா விடுதி வேறு. கட்டணம் இல்லா மின்சாரம் 50,000 யூனிட்டுகள். தொலைபேசியில் 1,70,000 இலவச அழைப்புகள். நாள்படி வேறு.

கணக்குப் போட்டுப் பார்த்தால் 5 ஆண்டுகளில் கணக்கில் வரும் ஆதாயம் மட்டுமே 2 கோடியை தாண்டும்

அப்படியானால் 60 ஆண்டுகள் கணக்கு ஆமணக்குத்தான். இதில் தேர்தல்தோறும் 5 முதல் 500 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு வாக்களித்த புத்திசாலி யார்?

சுதந்திர இந்தியாவில் ஜீப் ஊழல் பிள்ளையார் சுழி. சைக்கிள், நீர்மூழ்கி, பீரங்கி என்று மெல்ல மெல்லத் தலையெடுத்த நச்சுப் பாம்பு கஜானாவுக்குள் புகுந்தது.

பனை எண்ணெய், சமையல் எண்ணெய், ஐஸ் கிரீம், மாட்டுத்தீவனம், கூட்டுறவு வங்கி, சவப்பெட்டி, தியாகிகளுக்கான அடுக்ககம், முத்திரைத்தாள், சத்யம், நிலக்கரிச் சுரண்டல் என்று ஆண்டுக்கு ஒன்றாக விஷ வாயுவைக் கக்கியது. இன்றோ ஊழல் நவீனமயம் ஆகிவிட்டது. மாதம் ஓர் ஊழல் நம் மாண்புமிகுக்களின் குறிக்கோள்போல.

ஆட்சி மன்றக் கோயிலுக்குள் கைபேசியில் ஆபாச சினிமா பார்ப்பதைக்கூட மன்னிக்கலாம். லஞ்சப் பணம் புழங்கிய விவகாரம் அதைக் காட்டிலும் ஆபாசம் ஆயிற்றே.

தப்பு செய்வதும் தப்புவதும் அரசியலார்க்குக் கைவந்த கலை. நம்மை இளித்தவாயர்கள் ஆக்கிவிட்டு இன்றைக்கும் கோல்கேட் சிரிப்புடன் சுதந்திரமாக உலகம் சுற்றி வருகிறார்கள்.

வழக்கு, நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் விமர்சனம் செய்யக்கூடாது என்று வாய்ப்பூட்டு.

ஏதானாலும், ஆட்சியாளர் – அதிகாரி – நீதிபதி என்ற கூட்டமைப்பில் சிக்கிக் கொள்வது அதிகாரி மட்டும்தான். இங்கிலாந்து மகாராணிக் காலத்தில் இங்கே ஆட்சியும் நீதியும் அவரே வழங்குவார். அதுபோலத்தான் இன்றைக்கும் நடக்கிறதோ?

அமைச்சர் அலுவலகத்தில் கணிப்பொறி காணாமல் போகிறது. ராணுவ ரகசியக் கடிதங்கள் அம்பலம் ஆகிறது. விசாரணைக்குக் கிளம்பும் சாட்சிகள் தற்கொலையில் சாகிறார்கள். திருட்டைத் தடுப்போர் லாரி மோதி இறக்கிறார்கள்.

முகம் தெரியாத ஒரு வியாபாரிக்கு முன்னுரிமை தருவதில் பெறப்படும் ஆதாயம் – லஞ்சம். அந்த வியாபாரியே தனக்கு வேண்டியவர் என்றால் ஊழல். அதுவும் உறவினர் என்றால் அந்த ஊழலுக்கு ஆங்கிலத்தில் “நெப்போட்டிசம்’ என்று பெயர். லத்தீனில் “நெப்போஸ்’ என்றால் பேரன் அல்லது மருமகன் என்று பொருள்.

இன்னொரு பக்கம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கத் தொலைக்காட்சிகளில் உலகளாவிய சூதாட்டப் போட்டிகள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் விளம்பரதாரர் வங்கிக்கணக்கில் பல கோடிகள் கருக்கொள்ளும் என்று அறிய மாட்டீர்கள்.

கொளுத்தும் வெயிலில் கோமாளி நடிகர்களின் வறண்ட மனை விற்பனைகள் என்றுமே மாறாத விலை அச்சடித்துத் தொண்டை கட்டும் அளவுக்குப் புரட்சித் தங்க விற்பனைகள்.

படிக்க வேண்டிய பருவத்தில் குழந்தைகளை ஆர்ப்பாட்டங்களிலும் ஆட்ட பாட்டங்களிலும் ஈடுபடுத்துவதும், குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக பிச்சை எடுக்கும்படி தூண்டப்படுவதும் மனித உரிமை மீறல்கள்.

ஏதாயினும், “”ஊழலை வீட்டில் உள்ள பெற்றோர்கள் தான் உருவாக்குகிறார்கள். நாட்டில் உள்ள இளைஞர்கள் இந்தச் சூழலில் வளரும்போது பாதிப்பு இருக்கத்தான் செய்யும்” என்று குறைபடுகிறார் டாக்டர் அப்துல் கலாம்.

அதனால் இனி ஒரு விதி செய்வோம். வேட்பாளர்களின் முதல் இருபது வயது வாழ்க்கைக் குறிப்பைத்தான் தேர்தல் படிவத்தில் முக்கிய இணைப்பாகக் கேட்க வேண்டும்.

சிறுவயதில் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ கெட்ட சகவாசத்துடன் தரங்கெட்ட பணிகளில் ஈடுபட்ட ஆணோ, பெண்ணோ அவரவர் வாழ்க்கை விலாசங்களை ஆராய்ந்த பிறகே ஒருவரை வேட்பாளராக அனுமதிக்க வேண்டும்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 5:41 pm

ஏப்ரல் ஒன்று -முட்டாள் தினம் வந்தது எப்படி?
---

ஈரானில் இருந்து ஈராக்கிற்கு ஒருவர் வழி தவறி போய்விட்டார். ஈராக்கின் எல்லை காவல் படை அவரை கைது செய்தது. பின் கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு என்ன தெரியுமா?

நீ உளவாளி.

கைது செய்யப்பட்டவர் விளக்கம் சொல்ல முற்பட்டார்.

நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டியதில்லை. நீ குற்றவாளி உன் குற்றத்தை ஒத்து கொள். உனக்கு தூக்கு தண்டனை தான். நீ பெரிய குற்றத்தை செய்ய துணிந்ததால், உன்னை துண்டு துண்டாக வெட்டி தான் தண்டனை கொடுப்பார்கள்.

அதுவும் ஒரே நாளில் நடக்காது. வாரம் ஒரு பாகமாக வெட்டுவார்கள். இதுதான் அவருக்கு அளிக்க பட்ட தண்டனை.

அவருக்கு தண்டனை அளிக்கும் நாள் வந்தது. தண்டனையை நிறைவேற்றும் முன், அந்த அதிகாரி கேட்டார். இப்போது உன் ஒரு காலை மட்டும் வெட்ட போகிறோம்.

உன் கடைசி ஆசை என்ன என்பதை சொல்.

வெட்டப்படும் என் காலை என் சொந்த ஊரில் புதைக்க வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டும்.

சரி …. என்றார் அந்த அதிகாரி.

கால் வெட்டப்பட்டது. அவர் விருப்பப்படியே அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பட்டது. பின் அடுத்த வாரம். அவரின் ஒரு கை வெட்டப்பட்டது.

மீண்டும் அந்த அதிகாரி கேட்டார். உன் விருப்பம் என்ன?

முன் சொன்ன பதிலையே சொன்னார். அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. இப்படியே அவரின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாய் வெட்டப்பட்ட பிறகு கடைசியில் அவர் தலை வெட்ட பட வேண்டும்.

இப்போதும் அந்த அதிகாரி கேட்டார். உன் கடைசி ஆசை என்ன?

என் உடல் என் நாட்டில் புதைக்க பட வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை.

இப்பதானே உன் திட்டம் தெரியுது. நீ பார்ட் பார்ட்டா தப்பிச்சு போயிடாலாம்ன்னு நினைக்கிறியா உன் நாட்டிற்கு. அதுதான் நடக்காது என்றாராம் அந்த அதிகாரி.

இது எப்படி இருக்கு. இப்படி முட்டாள் தனமாக யோசிப்பவர்களுக்கு என்றே இருக்கும் நாள் தான், ஏப்ரல் 1 .

இந்த நாளில் நீங்களும் யாரையாவது முட்டாளாக்க முயற்சி செய்திருப்பிர்கள். உங்கள் வலையில் யாரவது சிக்கி இருக்கலாம். ஹையா … ஏப்பரல் பூல் என்று நீங்கள் சிரித்திருக்கலாம்.

சரி… அந்த நாளின் வரலாறு தெரியுமா? தெரிந்தால் சந்தோசம். தெரியலையா இப்போ தெரிஞ்ச்சுகோங்க.

முட்டாள் தினம் என்றில்லை. வருஷம் முழுவதும் இப்படி எதாவது ஒரு நாள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் பெரிய விழேஷம் என்னன்னா … இந்த நாளுக்கு யாரும் உரிமை கொண்டாடுவது இல்லை.

சரி… காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. அந்த வகையில் இந்த முட்டாள் தினம் வந்த காரணம் என்ன? இதோ வரலாறு.

நான் எப்படி சித்திரை ஒன்றை புத்தாண்டாக கொண்டாடுகிறமோ (சித்திரையா தை மாதமா ) அதை போல் ஏப்ரல் ஒன்றாம் தேதியை ரோமானியர்கள் புத்தாண்டாக கொண்டாடினார்கள்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 25 ம் தேதியே ஆரம்பம் ஆகிவிடும். அதன் நிறைவு நாள் ஏப்ரல் 1 .

காலம் காலமாக கடை பிடிக்க பட்ட இந்த நடை முறையை அப்போதைய போப்பாண்டவரான 13 வது கிரகரி 1562 ம் ஆண்டில் மாற்றி அமைத்தார்.

இந்த மாற்றத்தின் படி ஜனவரி ஒன்றாம் தேதிதான் புத்தாண்டு வருகிறது. ithai நாடு முழுவதும் அறிவிக்கவும் செய்தார்.

ஆனால் காலம் காலமாக கடை பிடித்த நடைமுறையை மாற்றி புது நடை முறைக்கு மாற பலருக்கு மனம் இடம் தரவில்லை. கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவனை தூக்கி மனையில் வை என்ற கதையாக இது என்ன கூத்து என்று, பலர் பழைய ஏப்ரல் ஒன்றையே புத்தாண்டாக கொண்டாடினார்கள் .

இப்படி மாற மறுத்தவர்களை, மாறியவர்கள் முட்டாள்கள் என்றார்கள். இது தான் முட்டாள் தினமாக வந்ததற்கு முதல் காரணம். இது இப்படியே ரெக்கை முளைத்து பல நாடுகளுக்கும் பரவி விட்டது.

april-fools-dayஓன்று வந்து விட்டால் அதன் பின்னால் ஆயிரம் கதைகள் பின்னாலையே வந்து விடுமே. அந்த வகையில் முட்டாள் தினத்திற்கு என்று பல புனை கதைகள் இருக்கிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

இந்த நடைமுறை வருவதற்கு முன்பே பிலிப்பை என்ற மன்னனை அவரது அரண்மனை விகடகவி பந்தயம் ஒன்றை வைத்து, அந்த பந்தயத்தில் மன்னனையே முட்டாளாகினாறாம். அந்த நாள் ஏப்ரல் ஓன்று.

முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவை சேர்ந்த மேரிலுயிசை திருமணம் செய்து கொண்டார். அப்போது அந்த பெண்ணின் தோழிகள் உன்னை அவர் உண்மையாக திருமணம் செய்து கொள்ளவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்துள்ளார் என்று என்றார்களாம்.

காரணம் திருமணம் நடந்த நாள் ஏப்ரல் ஓன்று. இப்படி சரித்திரத்தின் பக்கங்களில் பல கதைகள் உலா வருகிறது.

கட்டுரை: ஸ்ரீகிருஷ்ணன்
+

செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 5:43 pm

முதுமையில் தேவை கவனம்
-----------------

முதுமை காரணமாக உடல் கட்டமைப்பு மாறுகிறது. புரதச் சத்து குறைந்து, அதற்குப் பதிலாக கொழுப்புச் சத்து அதிகமாகிறது. தசைகள் பலவீனம் அடையத் தொடங்குகின்றன. உடலின் திசுக்களும் பலவீனமடையத் தொடங்குகின்றன.
ஜீரணத்துக்கு உரிய சுரப்புகள் செயல்படும் தன்மை குறையத் தொடங்குகின்றன. உணர்வு உறுப்புகளின் செயல் தன்மையும் குறைகிறது – அதாவது, பார்வை மங்குதல், காது போதிய அளவு கேட்காமை, சுவை மாறுதல், எரிச்சல் ஏற்படுதல், அஜீரணக் கோளாறுகள் ஏற்படத் தொடங்குகின்றன.

எனினும் உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொண்டு, கெட்ட பழக்கங்கள் இல்லாமல் மருத்துவப் பரிசோதனைகளை 6 மாதத்துக்கு ஒரு முறை செய்து கொள்ளும் நிலையில் முதுமையை எளிதில் வெல்லலாம்.

முதுமையில் அதிகம் சாப்பிட முடியாது. பசியின்மை என்று தாங்களாகவே முதியோர் இந் நிலையை நினைத்துக் கொள்வார்கள். பற்கள் இல்லாமை காரணமாக காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிட முடியாது என்பதால் பெரும்பாலானோருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்கும்.

ஒரு சிலருக்கு வயிற்றுப் போக்கு பிரச்னை தொடரும். ஊட்டச்சத்தை கிரகிக்கும் தன்மை உடலில் குறையும். முதுமை காரணமாக இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை இருக்க வாய்ப்பு உண்டு.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு காரணமாக, நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே இத்தகையோருக்கு சமச்சீரான ஊட்டச்சத்து உணவு அவசியம்.

மிருதுவான கஞ்சி, நன்கு வேக வைக்கப்பட்ட மிருதுவான சாதம் ஆகியவை நல்லது. மசாலா நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உணவில் உப்பு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த நெய், எண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிடுவது நல்லது.

முதுமையின் மிகப் பெரிய பிரச்னை எலும்பு வலுவிழத்தல். குறிப்பாக பெண்கள் முதுமையை எட்டியவுடன் எலும்பு வலுவிழத்தல் நோய் (ஆஸ்டியோஸ்போரோசிஸ்) நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதேபோன்று 65 வயதுக்குப் பிறகு ஆண்களுக்கு இதே நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இத்தகையோர் கால்ஷியம் சத்து நிறைந்த சமச்சீரான உணவு சாப்பிடுவது நல்லது. ஆடை நீக்கிய பால், பச்சைக் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

பற்கள் இல்லாவிட்டாலும் காய்கறிகளை நன்றாக வேக வைத்து, மிக்சியில் அரைத்து மசிய வைத்துகூடச் சாப்பிடலாம். காய்கறிகளை மசித்துச் சாப்பிட்டாலும் நார்ச்சத்து கிடைக்கும். மசிக்கும் நிலையில் வடிகட்டாமல் திரவத்துடன் சேர்த்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். முதுமையில் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரிக்காது. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தினமும் குடிநீர் போதுமான அளவு குடிப்பது அவசியம். முதுமையில் தாகம் எடுக்கும் உணர்வு பெருமளவு குறைந்து விடும்.
எனவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படாமலேயே, ஜீரண உறுப்புகளுக்கு நன்மை செய்யும் வகையில்
நாள் முழுவதுக்கும் குறைந்தபட்சம் 2 லிட்டர் குடிநீர் குடிக்க வேண்டும்.

சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் குடிநீர் குடிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அதோடு, பால்-மோர்-காய்கறி சூப்பிலும் குடிநீர் உள்ளது. எனவே கோடைக் காலத்தில் தாகம் எடுக்காமலேயே குடிநீர் குடிப்பதை முதியோர் பயிற்சியாகக் கொள்வது அவசியம்.

மூன்று வேளை சாப்பிடாமல், இடைவெளி விட்டு அதிக வேளைகள் சாப்பிட வேண்டும். உதாரணமாக, காலை எழுந்தவுடன் சர்க்கரை இல்லாமல் ஆடை நீக்கிய பால், காலை 8.30 மணிக்கு 2 இட்லியுடன் சாம்பார்-புதினா சட்னி, காலை 10 மணிக்கு மோர் (ஒரு சிறிய டம்ளர் அல்லது காய்கறி சூப் அல்லது சத்துமாவு கஞ்சி, பருப்பு-கீரை சேர்ந்த மதிய உணவு, மாலை சிற்றுண்டியாக பழம், இரவு 8 மணிக்கு இட்லி அல்லது இடியாப்பம் அல்லது சப்பாத்தி அல்லது எண்ணெய் குறைவாக தயாரிக்கப்பட்ட தோசை ஆகியவற்றை கூட்டு-பொரியலுடன் சாப்பிடலாம்.

இரவு படுக்கச் செல்லும் முன் பால் சாப்பிடலாம். இதுபோன்று சாப்பிட்டால் சமச்சீரான உணவுத் திட்டமாக அது அமையும். அவர்களுக்குத் தேவையான வேலைகளைச் செவ்வனே செய்வதற்கு குறைவான கலோரிச் சத்து கிடைக்கும்.
உடலில் ஏற்கெனவே உள்ள சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் தீவிரமடையாது. முதுமையை அடைந்து விட்டால் தம்மை கவனிக்க யாரும் இல்லை என விரக்தி உணர்வு வேண்டாம். கண் குறைபாடு, காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புகளைச் சரி செய்து கொள்வது அவசியம்.

ஏனெனில், உடல் உறுப்புகள் நன்றாக இருந்தால்தான் மன நிலை நன்றாக இருக்கும். மன நிலை நன்றாக இருந்தால்தான், ஊட்டச்சத்து நிறைந்த உணவு குறித்த அக்கறை இருக்கும். நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 5:45 pm

அலுவலகத்தில் பாலியல் வன்முறையை தடுக்கும் சட்டத்தின் முன்னோடி
-------------

அலுவலக பெண்களை பாதுகாக்கும் சட்டம்கொண்டாட்டம்மகளிர் தினம்
-------------
கடந்த பத்தாண்டுகளில் வேலைக்குப் போகிற பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முடிவெடுக்கிற அதிகாரம் படைத்தவர்களாக மாற தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன.
வேலைக்குப் போகிற பெண்கள், சக ஊழியர்களிடமிருந்தும், தங்களது மேல் அதிகாரிகளிடமிருந்தும் பாலியில் ரீதியான கொடுமைகளுக்கு ஆளான போதிலும் அவமானத்துக்கு அஞ்சி பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படுகிற பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து புகார் செய்வதில்லை.

ஆனால் விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்குப் பிறகு மாற்றம் வரத் தொடங்கியுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த குற்றம்புரிந்தவருக்கு தண்டனை கொடுக்கும் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு எத்தனையோ போராட்டங்கள் அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிகளே சட்டம்போல செயல்படும் என்ற நிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இப்படித்தான் ஆரம்பித்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் கிராம சேவிகாவாக பணியாற்றி வந்தார் பன்வாரி தேவி. குழந்தைத் திருமணங்களைத் தடை செய்திருந்த மாநில அரசு, அப்படி ஏதேனும் நடைபெறுகிறதா என்பதைக் கண்காணித்து தகவல் சொல்லுகிற பொறுப்பை அவருக்குக் கொடுத்திருந்தது. தனது கிராமத்தில் உயர் ஜாதிக்காரர்களிடையே நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் குறித்து அரசுக்குத் தெரிவித்து அதை நிறுத்தினார் பன்வாரி. பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தங்களுக்கு அவமானம் தேடித் தந்துவிட்டதாகக் கருதிய மேல்ஜாதி ஆணாதிக்கவாதிகள் பன்வாரிதேவியை கூட்டாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். கணவன் கண்ணெதிரிலேயே அவர் மானபங்கப்படுத்தப்பட்டார்.

காவல்நிலையம் சென்ற பன்வாரி தேவி, குற்றவாளிகள் தனக்கிழைத்த கொடுமையைச் சொல்லி நியாயம் கேட்டு புகார் கொடுத்தார். புகாரை வாங்க மறுத்தது காவல் துறை, ஆனால், புகாரை பதிவு செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக காவல் நிலைய வாசலிலேயே சத்யாகிரகம் செய்தார். விடிந்ததும் அந்த ஊர் மக்கள் வந்து புகாரைப் பதிவு செய்ய மறுத்த காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய, விஷயம் பெரிதாகியது. ஊடகங்களில் செய்தி வெளிவந்த பின்னரே, மிகத் தாமதமாக புகார் பதிவு செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார் பன்வாரி. அந்தோ பரிதாபம்- பரிசோதனை செய்த மருத்துவர், “பாலியல் பலத்காரம் நடந்ததற்கான ஆதாரமேதும் இல்லை’ என்று பொய்யாக சான்றிதழ் கொடுத்தார்.

மாதர் இயக்கங்கள் பன்வாரியுடன் இருந்து போராடியதன் விளைவாக ஐந்து நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை பரிசோதனை நடைபெற்றது. இம்முறை மருத்துவர் குழு பரிசோதித்தது. எனவே பன்வாரி, குழுவாக பலாத்காரம் செய்யப்பட்ட விஷயம் உறுதிப்படுத்தப்பட்டது. வழக்கு பதிவும் அதையொட்டிய விசாரணைகளும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதின் அவசியத்தை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் சாராம்சம், ஆதரவான சட்டக் கருத்துகள், சர்வதேச பிரகடனங்கள் ஆகியவற்றை பரிசீலித்த நீதிபதிகள், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க வழிகாட்டு நெறிகளை வகுத்தனர்.

பணியிடங்களில் பெண்களிடம் பேசப்படும் பச்சையான வசனங்கள், கொச்சையான பாடல்கள், மோசமான அருவறுக்கத்தக்க செய்கைகள், ஆபாச நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் பாலியல் வன்முறையாக வரையறை செய்யப்பட்டன.

அத்தகைய பாலியல் ரீதியான வன்முறையற்ற பணி சூழலை உருவாக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை என வலியுறுத்தப்பட்டது. பெண்கள் அதிகமாக பணிபுரியும் இடங்களில் கண்காணிப்பு கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட வேண்டும். அதன் உறுப்பினர்களில் பாதி பேர் பெண்களாக இருக்க வேண்டும். புகார் மீதான விசாரணையை இந்தக் கமிட்டி விசாரித்து அறிக்கையில் குற்றம் நடந்திருக்கக் கூடும் எனக் கருதினால் அதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க உடனடியாக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உறுதிபட உரைத்தது.

இதுபோன்ற சம்பவங்களும், போராட்டங்களுமே, பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியன் வன்கொடுமைகளை தடுக்கும் சட்டம் 2013 நிறைவேற்ற ஒரு தூண்டுதலாக இருந்துள்ளது.

கே. சாந்தகுமாரி,
செயலர்,
அகில இந்திய பெண் வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 5:47 pm

ஹீரோக்கள் ஹீரோக்களாக மதிக்கப்படும் நாள் எந்நாளோ?
--------------


ராவணன் ராவணன் என்கிறார்களே! அவன் யார்?

இப்போதெல்லாம் சினிமாக்களில் வில்லன்கள் விரும்பப் படுகிறார்கள். சமூகத்தின் அனைத்து வித தீச் செயல்கள் நிரம்பப் பெற்ற தீயசக்திகள் ஹீரோக்களாக மக்களால் ஏற்றுக் கொள்ள நிர்பந்தப் படுத்தப் படுகிறார்கள்.. என்ன ரசனையோ தெரியாது! ஊதாரிகள், ஊர் சுற்றிகள், மொடாக் குடியர்கள் எல்லாம், அழகான பெண்கள் விரும்பும் நபர்களின் பட்டியலில் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை உண்மை என்று நம்பி மார்க்கெட்டிங் வித்தையில் மயங்கிப் போன மான்விழியர் பலர்.

அண்மையில் வந்த சினிமாப் படங்கள் இதை எடுத்துச் சொல்லும். வருத்தப் படாத வாலிபர் சங்கம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஆதலால் காதல் செய்வீர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. இப்படி பட்டியல் தொடர்கிறது.

இதே போக்கைத்தான் சென்ற நூற்றாண்டில் ஓர் இயக்கம் விதைத்தது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று முழங்கியது அப்படித்தான். சமூகத்தால் தீச் செயல்களுக்கு உதாரணனாகக் காட்டப்பட்ட ராவணன் ஹீரோவான கதை அப்படித்தான்.

அதற்குக் காரணம், ராமன் என்ற ஆரியன், ராவணன் என்ற திராவிடனை அழித்த நயவஞ்சகக் கதையாம்.
திராவிடன் என்று குறிப்பிட்டுவிட்டால் மட்டும், மாற்றான் தோட்டத்து மல்லிகை மணம் நுகரலாமா?
சென்ற நூற்றாண்டிலேயே இது காரசார விவாதத்தைப் பெற்றுவிட்டது.

***
1930 வாக்கில் கவியரசர் ரவீந்திர நாத் தாகூர், இலங்கைத் தமிழரான ஆனந்த குமாரசாமியை அமெரிக்காவில் வைத்து சந்தித்தார். அப்போதுதான் தென்னாட்டில் ராவணனை ஹீரோவாக்கிய “பகுத்தறிவு’ இயக்கம் மும்முரமாக வளர்ந்திருந்தது.

ஒருநாள் பேச்சுக்கு இடையே ஆனந்த குமாரசாமி, “இந்த இயக்கத்தார் ராவணனைத் தமிழனாக, அதாவது திராவிடனாகக் கருதிப் போற்றி, ராமாயணத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறார்கள்” என்றார்.
“என்ன, ராவணனை வால்மீகி எந்த இடத்திலும் திராவிடன் என்று குறிப்பிடவில்லையே!” என்று வியப்பின் உச்சியில் ஆழ்ந்தார் கவியரசர் தாகூர்.

அதற்கு ஆனந்த குமாரசாமி, “இது அந்தப் “பகுத்தறிவாளர்’ கருத்தே தவிர தமிழர் கருத்தில்லை” என்றார் சிரித்தபடியே!

“வால்மீகி ராமாயணத்தின்படி, ராவணன், பிரம்மாவின் மகனான புலஸ்தியனின் பேரன்; சிவபெருமானைத் தன் சாம கானத்தால் மகிழ்வித்தவன்; எனவே வேதியன், பிரம்ம குலத்தவனாய் வேதம் பயின்றிருந்தும் பிறன் மனைவியை விரும்பித் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான், இழிந்த செயல் புரிந்தவனாய் அழிந்தான். ராமனோ வேதியனாக இல்லாவிட்டாலும், ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருந்து ராவணனை வென்றான். எனவே, தீமைக்கும் நன்மைக்கும் நடந்ததுதான் இந்தப் போராட்டம். இதுதான் உண்மை; பகுத்தறிவுக்கும் இயைந்தது” என்றார் கவியரசர் தாகூர்.

“ஆமாம், இதே கருத்தைத்தான் தமிழ் முனிவர் வள்ளுவரும், “வேதியன் வேதம் பயில மறந்தாலும் பரவாயில்லை, ஒழுக்கத்தைக் கைவிட்டால் இழிந்தவனாகிக் கெடுவான் என்று குறிப்பிட்டிருக்கிறார்” என்று கூறி அந்தக் கருத்துடைய திருக்குறளை எடுத்துச் சொன்னார் ஆனந்த குமாரசாமி.

“மிகவும் அருமையானது இந்தச் செய்யுள் கருத்து. பாரத நாடு முழுவதற்கும்…. ஏன் உலகம் முழுவதற்குமே மகான் வள்ளுவரின் இந்தக் கோட்பாடு பொருந்தும்” என்று பாராட்டினார் கவியரசர் தாகூர்.

***
ஆனந்த குமாரசாமியும், தாகூரும் சந்தித்துப் பேசிய இந்தச் சம்பவம் எனக்குத் தெரிய வந்ததும் ஒரு அதிசயம்தான். ப்ரவாஸி என்ற பத்திரிகையில் வந்த துணுக்குச் செய்தியை ஒரு முறை வங்க மொழிபெயர்ப்பாள நண்பர் ஒருவர் படித்துக் காட்டினார். சுவாரஸ்யமாக இருந்ததால், அப்போது அவரை அதனை மொழிபெயர்த்துத் தரச் சொல்லி மஞ்சரி இதழில் வெளியிட்டேன்.

இப்போது இது நினைவுக்கு வரக் காரணம், மேற்கண்ட திரைப் படங்களின் கதைப் போக்குதான்!
கடந்த சில வாரங்களாக சென்னையில் மாணவர்களின் அடிதடி, ரகளை, கலாட்டாப் போக்குகள் பெரும் வருத்தத்தைத் தருகின்றன. பஸ்களில் அவர்கள் போடும் ஆட்டம் ஏதோ இளமைத் துள்ளல் என்று விட்டுவிட்டு ஒதுங்கிப் போனாலும், கத்தியும், கம்புமாக வன்முறை வெறியாட்டத்தில் அவர்கள் இறங்குவதற்கு ஒரே காரணம், திரைப்படங்களில் காட்டும் சண்டைக் காட்சிகள்தான் என்பது என் எண்ணம்.
எப்போது ஹீரோக்கள் ஹீரோக்களாக மதிக்கப் படப் போகிறார்களோ? வளரும் சமுதாயத்தின் மீதான கருத்துருவாக்கம்தான், நாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கப் போகிறது.

+
செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by செந்தில் Thu Nov 12, 2015 7:10 pm

அனைத்தும் அருமை.
[quote="கவிப்புயல் இனியவன்"]ஹீரோக்கள் ஹீரோக்களாக மதிக்கப்படும் நாள் எந்நாளோ?

கைதட்டல் சமுதாய அக்கறையுள்ள கட்டுரை. கைதட்டல்
--------------




செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 17, 2015 3:52 pm

பிளாஸ்டிக்குக்கு மாற்று கண்டறிய வேண்டும்
------
நம் வசதிக்காக, ஒரு முறை பயன்படுத்தித் தூர எறியும் குடிநீர் பாட்டில்களை ஒழித்தால் வருங்கால சந்ததி ஓரளவு நிம்மதியாக வாழ முடியும்…

பத்து ரூபாய்க்கு விற்பனை துவங்கி, இன்று அக்வா பினா 25 ரூ. ஆகிவிட்டது. மற்றவற்றை ரூ. 20ம், 22ம் என இஷ்டத்துக்கு விற்கிறார்கள்… ஊர் பேர் தெரியாத உள்ளூர் தண்ணீர் வியாபாரிகளும் பாட்டில்களை கடைகளில் அடுக்குகிறார்கள்…

போதாக்குறைக்கு அம்மா வாட்டர் பாட்டில்கள்… இவைதான் இப்போது சக்கை போடு போடுகின்றன.
மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர்…முதல்வரின் படம் அச்சிடப்பட்ட விளம்பரத்துடன்…
முதல்வரின் செயல் வரவேற்கத்தக்கது. ஆனால் செயல்முறை கண்டிக்கத்தக்கது.
என்ன செய்யலாம்…?

என் கருத்தில் தோன்றியது…

* ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பேருந்து நிலையத்திலும், முக்கியமான அரசு அலுவலக வாயில்களிலும் அம்மா வாட்டர் – சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களை நிறுவி, அவற்றின் மூலம் லிட்டர் ரூ. 5 என்று குடிநீர் விநியோகம் செய்யலாம். அதற்கு பயனாளிகள் ஒவ்வொருவரும், நிரந்தரமாக தங்கள் கைகளில் வைத்திருக்கும் வகையில் பெட் ஜார் – பாட்டில்களை அல்லது நீர் வைக்கும் பாத்திரங்களைக் கொண்டு வர வேண்டும்.

ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு, தற்போது ஓரளவு மட்டுமே செயல்முறையில் இருக்கும் தண்ணீர் வழங்கும் மையங்கள் போல் கொண்டு வரலாம்..

திருப்பதிக்கு நடைபாதை வழியே நான் சென்றபோது, அங்கங்கே இதுபோன்ற மலிவு விலை குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் சிறப்பாக செயல்படுவதைக் கண்டுள்ளேன்…

அவற்றைப் போல் இங்கும் செயல்படுத்தலாம்…

உண்மையிலேயே விளம்பர மோகம் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய எண்ணினால், முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

* ரயில் நிலையங்களில் குடிநீர் என்று எழுதப் பட்டிருக்கும் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அல்லது பழுதாகி, பயன் தரத் தக்க நிலையில் இருப்பதில்லை.

இதற்கான காரணம் ஏன் என்று சில இடங்களில் ரயில் நிற்கும் போது நானும் இறங்கி அங்கே இருக்கும் சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் கூறும் ஒரே காரணம்…. – இந்தக் குடிநீர் குழாய்களால், தண்ணீர் பாட்டில் விற்பனை பாதிக்கப்படுகிறது என்பதால், இங்கே கடை வைத்துள்ளவர்கள், ஏஜென்ஸிகள் இவற்றை (சரி செய்த ஓரிரு நாட்களிலேயே) உடைத்து விடுகின்றனர் என்பதுதான்.
இதே நிலைமைதான் சுயநல வியாபாரிகள் இருக்கும் எல்லா இடங்களிலும்!

* ஒவ்வொரு முறை பெட்டிக் கடைக்கும் மளிகைக் கடைக்கும் போகும்போதும் எந்த வித அகௌரவத்தையும் பார்க்காமல், கிராமப்புற துணிக்கடைகளில் தரும் மஞ்சள் துணிப்பை, அல்லது கட்டைப் பையை எடுத்துச் செல்வது என் வழக்கம். வீட்டில் பிளாஸ்டிக் குப்பைகளைத் தவிர்ப்பது நல்லது.
ஆனால், ஒவ்வொரு அலுவலகத்திலும் வீடுகளிலும், குப்பைக்கென தனித்தனி சிறிய ரக குப்பைத் தொட்டிகள் இருந்தாலும், அவற்றில் சேரும் குப்பைகளை எடுத்து தூய்மைப் படுத்த சோம்பேறித்தனப்பட்டு, அதனுள்ளும் பிளாஸ்டிக் கவர்களை வைத்து, அவற்றில் சேரும் குப்பைகளை எடுத்துச் சென்று மேலும் மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் சேர வழிவகை செய்கின்றோம்… இதற்கும் மாற்று வர வேண்டும்.

* பிளாஸ்டிக் கவர்களில் வீணான உணவுப் பொருள்களை மூட்டையாகக் கட்டி அதன் வாயை முடிச்சு போட்டு நாம் தூர எறிவதால், அதனைத் திறக்க முயன்று தோல்வியுறும் பசு மாடுகள், நாய்கள் உள்ளிட்டவை, பிளாஸ்டிக்கையும் சேர்த்துத் தின்று, உயிரிழப்புக்கு வகை செய்து கொள்கின்றன. இதற்கு நாமும் மறைமுகக் காரணமாவோம்.
*** பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்க நம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம்…!
*** நம் பகுதியில், நம் மாநிலத்தில், நல் மழைப் பொழிவுக்கு வழி வகை செய்வோம்..!!
+

செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 17, 2015 3:54 pm

தமிழ் இலக்கியங்களில் யாழிசை
-----------
யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும். நரம்புக் கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ் முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.

இந்த யாழ் கருவியின் பெருமையை தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு எடுத்துரைக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கட்டுரை அமைந்துள்ளது.

இயற்கையோடு எழுந்த இசை தமிழிசை. ஆற்றொலி, அருவியொலி, வண்டொலி, தும்பியிசை, குயிலின் கூடி ஒலிக்கும் இசை தமிழிசையாம்.

யாழ் நூல் என்ற பழந்தமிழ் நூல் விபுலாநந்தரால் இயற்றப்பட்டதாம். அதன் சிறப்பியல்புகளை விபுலாநந்தர் விளக்கியுரைத்தபோது ஈர்க்கப்பட்ட பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், யாழை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சி செய்தது தனிச் சிறப்புடையதாம். வில்யாழ், பேரியாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், மகரயாழ், சகோடயாழ் என அதன் பகுப்புகள் அமையும்.

பண்டை நாளில் சிறப்புப் பெற்றிருந்த மிசரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீகக் கடற்கரை நாடான அழிந்து விட்ட சுமேரியாவிலும் “சால் தேயா’ எனச் சிதைந்த சோழ தேசத்திலும், சேரர் வென்று ஆட்சி புரிந்த கிரேக்கத் தீவு, அதனருகே இருந்த யவனபுரத்திலும், உரோமர் வருதற்கு முன் இத்தாலியிலும், பழைய ஸ்பெயின் தேசத்திலும், தமிழ் மக்கள் வாழ்ந்து நாகரிகம் பரப்பினர் என மேற்றிசை அறிஞர்கள் தம் ஆராய்ச்சியில் கண்டு வெளியிட்டுள்ளனர். இந்நாடுகளில் யாழிசைக் கருவி தெய்வமாகவே போற்றப்பட்டது என விபுலாநந்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார். சிந்து நதி தீரத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் “முகிஞ்ட தரை’ எனப் பொருள் தரும் மொகஞ்சதாரோவின் இறந்தோர் மேடான இடத்திலும் மிதுனராசி யாழ் என்ற பெயரால் அழைக்கப்பட்டு திணையாழுருவக் குறியீடு செய்யப்பட்டுள்ளதை விபுலாநந்தர் சுட்டிக் காட்டுவது காணத்தக்கது. அடிகளார் பத்து ஆண்டுகள் யாழ் நூலை ஆய்ந்து பல நுண்ணிய விளக்கங்கள் தருதல் காணலாம்.

கி.மு.3000-த்தில் சுமேரியர் பயன்படுத்திய கலைப்பொருள்களுள் யாழும் ஒன்றாம். அது ஆங்கிலத்தில் “ஆர்ப்’ எனப்படும். எகிப்தியர் பயன்படுத்திய யாழ், பிரமிடுகள் எழுந்த காலத்தில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. யாழ் பழந்தமிழகத்தில், சங்க காலத்திற்கு முன்னரே காணக் கிடைத்துள்ளது.

யாழ் உருப்பியலுள் வில்யாழ் பற்றிய விளக்கம் கடைச்சங்கப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய பெரும்பாணாற்றுப்படை பாடலடிகளில் காணலாம்.

“”தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
ஒன்றமர் உடுக்கை கூழார் இடையன்
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
அந் நுணவிர் புகை கமழகத்தை முயன்று
ஞெலி கோற் கொண்ட பெரவிறல் நெகிழா
செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின்
இன்தீம் பாலை முனை குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரபுரி நரம்பின்
வில்யாழ் இசைத்தம் விரலெறி குறிஞ்சி
புல்லார் வியன்புலம் போகி” என்பதாம். வில்யாழின் இசை வண்டின் இமிரிசையை ஒத்த காரணம் ஒலியைப் பெருக்கிக் காட்டக் கூடிய பத்தர் குமிழும் கொம்பே இதில் கோடாக-பத்தராக அமைந்துள்ளது. புதியதாகச் செய்யும் முறைக்குரிய அளவுகளையும் நூலில் தந்துள்ளமையைக் காணலாம்.

கல்லாடம் கூறும் நாரதப் பேரியாழ் 32 விரல் அளவு அகலம், நான்கு விரல் அளவு நீளம் முனைகளைக் கொண்ட இந்த யாழ் ஆயிரம் தந்திகளைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் 1008 விதமாக இசை வேதங்களை வாசிக்க இயலும் மும்முனை என்பது மந்திர, மத்யம் கேட்க அமைக்கப்பட்டிருந்தது. இக்கருவி இத்தாலி தேசத்தவர் பயன்படுத்தும் அரமண்டிலம் என்ற கருவியை ஒத்தது என ஆபிரகாம் பண்டிதர் கருத்துத் தெரிவிக்கின்றார்.

தொல்காப்பியம் தொடங்கி பல சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் யாழைப் பற்றிய இனிய செய்திகளை நமக்குத் தருகின்றன. தொல்காப்பியத்தில்,
…………இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்

எனவரும் நரம்பின் மறை என்பது இசைக்குறிப்பு மட்டுமன்று, நச்சினார்க்கினியர் கூறும் யாழ் நூலையும் நினைக்கச் செய்யும். குழலை விட யாழை விட இனியது மழலை என்பார் திருவள்ளுவர். இக்கருவிகளில் வரும் ழகரச் சிறப்புப் போன்றே மழலைச் சிறப்பு இனியதாம். மழலை மொழிச் சிறப்பு எவ்வாறோ அவ்வாறே யாழிசைச் சிறப்பு.

பதிற்றுப்பத்தில் பகைவர்க்குப் பணியாத தன்மையுடைய மன்னரை பேரியாழ் துணையுடன் பாணர் பண்பாடிப் போற்றுவதாக அமையும் பாடலொன்று,
வண்டுபடு கூந்தல் முடி புனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலைப் பண்ணிப்
பணியா மரபின் உழிஞை பாட
இனிது புறந்தந்தவர்க் கின்மகிழ் சுரத்தலின்
என அமையும். நெடுநல்வாடையில் ஆடல், பாடல் இரண்டிலும் வல்லமை வாய்ந்த மகளிர், யாழை மீட்டி, இனிமையுறப் பாடல் பாடும் செய்தி குறிப்பிடப்படுகிறது. யாழின் நரம்புகள் முறுக்கவிழ்ந்திருந்தால், தம் மார்பில் ஒற்றிச் சூடுபடுத்தி யாழை மீட்டிய நிலையினை,
ஆடல் மகளிர் பாடல் கொண் புணர்மார்
தண்மையில் திரிந்த தண்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப
(நெடுநல்.67-70)

என விளக்கும். யாழின் கோடாகிய கொம்பு பெரும்பாலும் கரிய நிறத்துடன் விளங்கியமையைப் பல சங்க இலக்கியங்கள் சான்று காட்டுகின்றன.yazh

யாழின் இனிமைக்கு விளக்கம் காட்டும் மதுரைக் காஞ்சிப் பாடலொன்று,
தாதுண் தும்பி போது முரன்றால்
கோதில் அந்தணர் வேதம் பாட
சீரினது கொண்டு நரம்பின் தியக்கி
யாழோர் மருதம் பண்ண
(மதுரை.655-658) எனக்கூறும்.

வேதம் பாடுநர் இசையுடன் மருதப் பண்ணும் கலந்து ஒலிப்பது யாழிசையின் சிறப்பாக உள்ளது. யாழில் பண்ணல், பரிவட்டணை ஆராய்தல், தைவரல், நண்ணிய செலவு, குறும்போக்கு ஆகிய குற்றங்கள் நீங்கிய யாழைக் கையில் தொழுது வாங்கும் இயல்பால் யாழின் தெய்வீகத் தன்மை புலனாகும். அத்தகைய யாழை பண்ணாராய்ச்சி வித்தகர் விருப்பப்படி மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியும் தக்கதே எனக் கருதத் தோன்றுகிறது.
+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 17, 2015 3:55 pm

அமைதியை நாடுங்கள் : ஹிட்லருக்கு கடிதம் எழுதிய ஐன்ஸ்டீன்
---------------
ஐன்ஸ்டீன் போரின் எதிரி. போரின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பது அவருடைய கருத்து. ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் போரையே உயிர்மூச்சாக நினைத்துக் கொண்டிருந்தபோது ஐன்ஸ்டீன் அதை எதிர்த்தார். “அமைதி வழிமுறைகளின் மூலம் மட்டுமே எந்தச் சீர்திருத்ததையும் செய்ய முடியும்’ என்று அவர் ஹிட்லருக்குக் கடிதம் எழுதினார்.

இதனால் ஒரு கட்டத்தில் அவர் ஜெர்மனியில் இருக்க முடியாமல் போனது. அமெரிக்கா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. அமெரிக்காவில் இருந்த தனிமனித சுதந்திரம் அவருக்குப் பிடித்திருந்தது.

ஐன்ஸ்டீனின் கடவுள் பற்றிய கருத்து அற்புதமானது. ஐன்ஸ்டீன் பிறந்த யூத இனத்தில் எந்த மதமும் கிடையாது. ஆனால் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது ஐன்ஸ்டீன் வீட்டுக்குத் தெரியாமல் கிறிஸ்தவ மத நம்பிக்கையுடையவராக இருந்திருக்கிறார். அந்த மதச் சடங்குகள் சிலவற்றைச் செய்திருக்கிறார். ஆனால் எதையும் காரண, காரியங்களுடன் சிந்தித்துப் பார்க்கும் பழக்கம் அவருக்கு ஏற்பட்ட பின் அவருக்கு மதத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. பழைய வடிவிலான கடவுள் நம்பிக்கை அகன்றுவிட்டது.

“தான் படைத்த மனிதர்களின் செயல்களை சரி, தவறு என்று தீர்ப்பு வழங்கும் தனிப்பட்ட உருவமாக’ அவரால் கடவுளைக் கற்பனை செய்ய முடியவில்லை.

“மாபெரும் இயற்கையை, அதனின் படைப்புத்திறனைக் கண்டு, உணர்ந்து யாரெல்லாம் பிரமிக்க முடியவில்லையோ அவர் உயிர் வாழ்ந்தாகக் கூற முடியாது. இயற்கையின் அழகும், உயிர்ப்பும், மகத்துவமும், கனிவும் நேரடியாக அல்ல

மறைமுகமாக ஒவ்வொரு மனிதனையும் அடைகிறது. இதுதான் நான் சொல்லும் கடவுள்’ என்பது அவருடைய கருத்து. இத்தகைய கடவுளை நம்புவதுதான் அவருடைய மதம்.

அவரைப் பொறுத்தவரை விஞ்ஞானம் என்றால் அது கடவுளுக்கு எதிரானது அல்ல. இயற்கையைப் புரிந்து கொள்ள விஞ்ஞானி முயல்கிறான். இயற்கையின் உயிர்த்தன்மையை, அதன் மகத்துவமான சக்தியைப் புரிந்து கொள்ள விஞ்ஞானி மேலும் மேலும் இயற்கையை நெருங்குகிறான். அதாவது கடவுளுக்கு அருகில் போகிறான்.

மிகப் பெரிய நூலகத்திற்குப் போய் நான்கைந்து புத்தகங்களைப் படித்துவிட்டு பெரிய அறிவாளி, பெரிய விஞ்ஞானி என்று நம்புவது தவறு. அதுபோல இயற்கை என்பது மாபெரும் நூலகம். அதில் மனிதன் தெரிந்து கொண்டது மிகச் சிலவே என்பது அவர் கருத்து.

ஐன்ஸ்டீனைப் பற்றிய இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த விஷயம்தான்.

எனக்கும் கூட கடவுள் இருக்கிறார். ஆனால் அது இந்த மாபெரும் பிரபஞ்சம்தான். இயற்கைதான். அதை இயக்குவிக்கும் மேலான சக்திதான்.

இந்தக் கருத்து இருந்தால் மதம் ஏது? மதவெறி ஏது? உலகமெங்கும் நடைபெறும் மதச் சண்டைகள்தான் ஏது? என்கிறார் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தைப் பற்றி கூறும் நடிகை ரோகிணி.
+

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 17, 2015 3:57 pm

“காதல் பயங்கரவாதிகள்’
---------
காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஓர் அழகான உணர்வு. காதல் என்பது இரு மனங்கள் ஒன்றை ஒன்று நேசிக்கும் விஷயமாகும். காதலால் பலர் ராஜ்யங்களை இழந்துள்ளனர். சிலர் புதிய ராஜ்யங்களை நிலைநாட்டியுள்ளனர். காதல் பல சாதனைகளுக்கும், தோல்விகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஆனால், எது எப்படி இருந்தாலும் காதல் உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட வயதில் வந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.

காதலைப் பற்றி இவ்வளவும் சொன்னது, “காதல் பயங்கரவாதிகளை’ப் பற்றி சொல்வதற்காகத்தான்.

அதாவது, காதலை காதலிப்பதை விட்டுவிட்டு, காதலை மற்றவர்களிடம் திணிப்பது அல்லது அதனை சுவரொட்டி அடித்து ஒட்டுவதற்கு இணையான காரியங்களில் ஈடுபடுபவர்களைத்தான் “காதல் பயங்கரவாதிகள்’ என்று அழைக்க வேண்டும்.

இப்போதைய காதலர்கள், காதலித்துவிட்ட ஒரு மகத்தான சாதனையைச் செய்ததற்காக ஆங்காங்கு கல்வெட்டுகளில் தங்களது பெயர்களைப் பொறித்து வருகின்றனர். இதனால் என்ன ஆகிவிட்டது என்று கேட்கலாம்.. ஆம்.. ஆகிவிட்டதுதான், நிறையவே ஆகிவிட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்ப்பது வழக்கம். அதுபோல அங்கு செல்லும் காதலர்கள், அவர்கள் அங்கு சென்று வந்ததற்கான அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, மிக முக்கியமான கல்வெட்டுகள் மீதும், சிற்பங்கள் மீதும், தங்களது பெயர்களைக் கூர்மையான கல் அல்லது ஆணி போன்ற ஏதேனும் ஒன்றைக் கொண்டு “பொறித்துவிட்டு’ வருகிறார்கள்.

உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் ஏற்கெனவே காலத்தின் கோலத்தால் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதனை நம்மால் எந்த வகையிலும் புனரமைக்க முடியாது. அதை அதே நிலையில் பராமரிப்பதே கடினமான காரியமாகும். தற்போது சித்தன்னவாசல் குகை ஓவியங்களை “யுனெஸ்கோ’ தனது கட்டுப்பாட்டில் எடுத்துப் பராமரித்து வருகிறது.

சித்தன்ன வாசல் பகுதிக்குச் செல்லும் வழியில், பல முக்கிய வரலாற்றுச் சாதனையாளர்களின் கல்லறைகள் அமைந்துள்ளன. அவற்றின் மீது நம் காதலர்கள் தங்களது கைவண்ணத்தைக் காட்டியுள்ளதால், தற்போது, பார்வையாளர்களின் அனுமதிக்கு மறுக்கப்பட்டு வேலி போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்ல, சித்தன்னவாசல் பகுதியில் உள்ள “சமணர் படுக்கை’ என்பது வரலாற்றுச் சின்னமாகப் பராமரிக்கப்பட்டுவரும் இடம். அதன் உன்னதம் தெரிந்தவர்கள் நேரில் போய் பார்த்தால் மிகவும் நொந்து போய் இருப்பார்கள். அதற்குக் காரணம், சமணர் படுக்கை முழுவதும் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதி, காதல் சின்னங்களை வரைந்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால், தற்போது கம்பி வேலி அமைத்து, தொலைவில் இருந்தே சமணர் படுக்கையைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இதனைப் பார்க்கும் இந்தியர்களை விட, வெளிநாட்டினர் என்ன நினைத்திருப்பார்கள்? இந்த அளவுக்குத்தான் ஒரு வரலாற்றுச் சின்னம் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று எண்ண மாட்டார்களா?

chithaஅதுமட்டும் அல்லாமல், “ஆந்த்ரோபாலஜி’ என்ற மானுடவியல் படிப்பை எடுத்து படித்து, அதில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள், இதுபோன்ற கல்வெட்டுகளை ஆராயும் போது, அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வடிவம் புரியாமல் மிகவும் சிரமப்பட நேரிடுகிறது. சில சிற்பங்களின் நுணுக்கங்களை அறிய முடியாமல் வருந்துகின்றனர்; சமணர் படுக்கை போன்ற இடங்களில் அதன் வழுவழுப்புத் தன்மையைப்பற்றி ஆராயும்போது பல சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்.

இதுபோல, பல வரலாற்றுப் பெருமைமிக்க இடங்களுக்கு வரும் காதலர்கள், அங்குள்ள தனிமை, வெளிச்சமின்மை, கேட்க ஆளில்லை என்ற சூழல் போன்றவற்றால் தவறான காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். செஞ்சிக் கோட்டை போன்ற இடங்களுக்குக் குடும்பத்தோடு சுற்றுலா செல்பவர்கள், பல இடங்களில் “காணக் கிடைக்காத’ இடங்களைப் பார்த்து ரசிப்பதோடு, “காணக்கூடாத காட்சிகளையும்’ கண்டு வர நேரிடுகிறது.

இதனால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு செஞ்சிக் கோட்டை போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள், இரு குழுவாகப் பிரிந்து முதல் குழுவினர் ஓரிடத்துக்குச் சென்று அங்கு காதல் ஜோடிகளின் சேஷ்டைகள் ஏதும் இல்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகு குழந்தைகள் அடங்கிய குழுவினரை வரவழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இணையத்தில், ஒரு சுற்றுலா தலத்தைப் பற்றிய கட்டுரையை பிரசுரித்ததும், அதில் வரும் கருத்துகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது, அங்கு காதலர்கள் செய்யும் தவறுகள் குறித்து புலம்பும் விதத்தில் இருக்கிறது.

பேருந்து, ரயில், கோயில் சுவர், பள்ளி, கல்லூரிகளின் சுற்றுச் சுவர், மரம் என எதையும் விட்டு வைக்காத “காதல் பயங்கரவாதிகள்’, வரலாற்றுச் சின்னங்களையும் தாக்கி அழித்து வருகின்றனர். ஒரு கல்வெட்டு என்பது, பல காலங்களுக்கும் அழியாமல் இருந்து வரலாற்றை அடுத்து வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வதற்காக அந்த காலத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு நல்ல தகவல் தொடர்பு சாதனம். அதை நன்கு பராமரிப்பது நம்முடைய கடமை.

கடைசியாக ஒரு வார்த்தை, “காதலர்களே உலகின் முதல் காதல் ஜோடியும் நீங்கள் இல்லை, கடைசி ஜோடியும் நீங்கள் இல்லை; உங்களுடைய பெயர்களைப் பதிவு செய்வதற்காகவே திருமணப் பதிவாளர் அலுவலகம் காத்துக்கொண்டிருக்கிறது, வரலாற்றுச் சின்னங்களை விட்டுவையுங்கள்’.
+

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 17, 2015 3:58 pm

அதிக லாபம் வைத்துவிற்கும் ஒட்டல் கடைக்காரர்கள்: அம்மா உணவகத்தில் ஆம்லேட் கிடைக்குமா?
---------------
தமிழகத்தில் ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலை அதிக அளவு விற்கப்படுவதால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விலையை குறைக்க கோரி பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்ட போதிலும் விலையை குறைக்க ஓட்டல் கடைக்காரர்கள் முன்வரவில்லை.

இந்தநிலையில் ஏழைகளின் வரப்பிரசாதமாக அம்மா உணவகம் சென்னையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த உணவகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாநகராட்சிகளுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆம்லேட், அவித்த முட்டைகள் அம்மா உணவத்தில் கிடைத்தால் வெளியூரில் இருந்து சென்னை வந்து வேலைபார்க்கும் மக்கள் உட்படஅனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைவர். முட்டை சத்தான ஆகாரம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் விரும்பவி வந்து சாப்பிடுவார்கள்.

, ஒரு சாதாரண ஓட்டல்களில் ஆம்லேட்டின் விலை 15 என்ற அளவில் இருக்கிறது. சாலையோர தள்ளுவண்டி கடைகளிலும் 10 ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுகிறது. வெங்காயம் ஒரு சமயம் மிக அதிக அளவு ஏறிய போது விலையை ஏற்றினர். உடன் அவித்த முட்டைடையம் அதே விலையில் விற்றனர். இதே போல் தான் பல்வேறு உணவு பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது. எங்களை போன்று வெளியூரில் இருந்து வேலை செய்யும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் அம்மா உணவகத்தில் சபபாத்தி அளிக்க உத்தரவிட்டுளள அம்மா அவர்களுக்கு நன்றி. இந்த உணவுகளுடன் மலிவு விலையில் ஆம்லேட் அல்லது அவிச்ச முட்டை வழங்கினால் அனைத்து தரப்பினரும் பெரும் மகிழ்ச்சி அடைவர்.

+
வேல்முருகன் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 25, 2015 8:13 pm

நம்மால் நாம் சந்திக்கும் பிரச்னை
---------------

காடுகளை அழித்தல், நதிகளை மாசடையச் செய்தல் என மனிதன் செய்த பல தவறுகளால், சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்ப மாறுதல் ஏற்பட்டு, மனித குலம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துக் கொண்டு உள்ளது. அதில் முக்கியமானதும், மனிதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதும் என்றால் அது தண்ணீர் பிரச்னையாகும்.

மனித வாழ்க்கைக்கு நீர் ஆதாரம் என்பது மிகவும் அவசியமானதாகும். எண்ணெயைப் போல அதற்கு எந்த மாற்றும் கிடையாது. மனிதனுக்கு மிகவும் தேவைப்படும் தண்ணீரின் ஆதாரம் தற்போது மிகவும் சுருங்கி வருகிறது. தண்ணீர் ஆதாரம் குறைந்து கொண்டே இருக்கும் அதே நேரத்தில் மக்கள் தொகை பெருக்கம் பிரச்னையை இன்னும் சிக்கலாக்குகிறது. உலக பொருளாதாரமே உயர்ந்தாலும், மனிதனின் தாகம் தணிய தண்ணீரைத்தான் நாட வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து பணக்காரரோ, ஏழையோ, தென் பகுதியில் வசிப்பவரோ, வட பகுதியில் வசிப்பவரோ யாரும் தப்பிக்க இயலாது. பல நாடுகளில் உள்ள தண்ணீர் ஆதாரங்கள் பத்தில் ஒரு பங்காக சுருங்கி விட்டது. குறிப்பாக ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு கட்டடங்கள் வந்துவிட்டன. ஆறுகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஆற்று மணலை களவாட, ஆறுகளை வற்றவிட்ட நம் மக்கள், நாளை நமக்கே தண்ணீர் கிடைக்காமல் போகப் போகிறது என்பதை இன்னமும் உணரவில்லை.

தண்ணீர் பற்றாக்குறை என்பது வெறும் குடிநீர் அல்லது பயன்பாட்டுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவது மட்டும் அல்லாமல், மறைமுகமாக பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் என்பது பலரும் அறியாத உண்மை. அதாவது, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சுகாதாரமற்ற தண்ணீரை ஏழை நாடுகளின் மக்கள் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும் போது, அங்கு மலேரியா, காசநோய் போன்ற நோய்கள் அதிகமாகப் பரவுவதும், உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, உணவுப் பஞ்சம் ஏற்படுவதும் தண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் பிரச்னைகளே.

சரி இதற்கெல்லாம் தீர்வு காண நம்மால் என்ன முடியும் என்று நினைக்காமல், ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்துவைத்தால், நாம் நிச்சயம் இந்த பிரச்னையில் இருந்து ஒரு சில ஆண்டுகளாவது தப்பித்துக் கொள்ளலாம்.
தொழிற்சாலைகளை நடத்துவோர், அதில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்படியே நதியில் கொட்டாமல், அதனை சுத்திகரித்து வெளியேற்றுவதும், மரங்களை வெட்டாமல், இருக்கும் இடத்தில் மரங்களை வளர்ப்பதும் மனிதனின் கடமையாகிறது.

வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் தண்ணீரின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவதும், தண்ணீர் மாசுபடுவதை தடுப்பதும், நீர் ஆதாரங்களை மேலும் சுருக்காமல் பெருக்குவதும் மனிதன் மனிதனுக்காக, அவனது வருங்கால சந்ததியினருக்காக செய்யும் கடமையாக இருக்கும்.

இன்றே அதற்கான பணிகளை துவக்குவோம்…


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 25, 2015 8:15 pm

சிரிப்பை மறந்தால்… அனைத்தையும் மறக்க வேண்டி வரும்
----------------

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி… பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள் மிருக ஜாதி..’ என நல்ல சிரிப்பின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் பழைய தமிழ்ச் சினிமாவின் பாடல் எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கும். “சிரிக்கத் தெரிந்த மிருகம் மனிதன்’ என்பார்கள். தனியாகச் சிரித்தால் பல அர்த்தம் உண்டு.. ஆனால், குழுவாக இணைந்து கொண்டாடி சிரித்தால் மன அழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும் என்கின்றனர் யோகா ஆசிரியர்கள்.

சிரிப்பதால் மனவலி, உடல் வலி, நோயினால் ஏற்படும் வலிகளின் தாக்கம் குறைவதோடு, மூளையில் “செரட்டின்’ சுரப்பியின் உற்பத்தி பெருகி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நெருக்கடி, ஆபத்துக் காலங்களில் சிரித்து சமாளித்தால் மூளையில் “கார்டிசான் ஸ்டீராய்டு’ சுரந்து மனதை இயல்பாக வைத்துக் கொள்ள உதவும் என மருத்துவ நூல்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாம் ஒவ்வொருவரும் தற்போது இயந்திரத்தனமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கிராமங்களைவிட நகரத்தில் வாழும் மக்கள் நாள் முழுவதும் பரபரப்பாகவே இயங்கும் நிலை தவிர்க்க முடியாததாகிவிட்டது.

வேலைப் பளு, குடும்பச் சூழல், பொருளாதாரப் பிரச்னை எனப் பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் பதற்றம், பயம், சினம், கவலை என மகிழ்ச்சியை இழந்து மன அழுத்தத்துடன் காலத்தை கழித்து வருகிறோம்.

உலகம் முழுவதும் இதே நிலைதான்! ஆனால், வெளிநாடுகளில் மனதிற்குள் இருக்கும் கவலைகளை மறக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பல்வேறு பயிற்சிகளை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். சில நாடுகளில் தனியாக ஆற்றுப்படுத்துதல் மையங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மன அழுத்தத்தைப் போக்க ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்பட்டாலும் நமது நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறைகளில் ஒன்றுதான் சிரிப்பு தியானம்.

கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் நடைமுறையில் உள்ள இந்தச் சிரிப்புப் பயிற்சியால் 40 சதம் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிரிப்புத் தியானப் பயிற்சி அளித்து வரும் யோகாசன ஆசிரியர் பெ. விஜயகுமார், வித்தியாசமான இந்தப் பயிற்சி குறித்தும், பயிற்சிக்குப் பிறகு மாணவர்களிடம் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் கூறினார்.

அவர்… “சிரிப்பு தியானத்தில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும் ஒழுக்க நெறியுடன் தன் வாழ்க்கையை அமைத்து தனக்கோ, பிறருக்கோ தீங்கு விளைவிக்காத வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

சூரியோதயத்தின் போதே கண்விழித்து, உடலை வளைத்து நெளித்து ஆயத்தம் செய்து 15 நிமிஷங்கள் சிரிக்கவேண்டும். இதனால், ஒவ்வொருவரும் அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும். சிரிப்பில் அன்புச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, அதிகாரச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, அருள் பொழியும் சிரிப்பு, ஆத்ம சிரிப்பு, ஆரவாரச் சிரிப்பு, இகழ்ச்சி சிரிப்பு, வெற்றிச் சிரிப்பு, சாதனைச் சிரிப்பு எனப் பல வகை உண்டு. சிரிப்பு ஒரு மனிதனின் உடல் உள் சூழலைப் பொருத்து மாறுபட்டு, உடல் நிலை நலனும் மாறுபடுகிறது. ஒரு சில வகையான சிரிப்பு உடல் நலத்துக்குச் சீர்கேட்டையும் ஏற்படுத்தும். ஆனால், இத்தகைய உணர்வு நிலைகளைச் சாராமல் எந்தவிதக் காரணமும் இன்றி சிரிப்பதுதான் சிரிப்பு தியானத்தில் சிறப்பாகும். இந்தச் சிரிப்புப் பயிற்சியால் நம்முள் உள்ள எல்லைகளும், வேறுபாடுகளும் கலைந்து சோகமான எண்ணங்கள் மறந்துவிடும்.

இதனால், மனவளம் சிறப்பாற்றல் அடைவதால் வாழ்க்கையும் சிறந்து விளங்கும். சிரிப்புத் தியானத்தை காலை அல்லது மாலை நேரத்தில் வெறும் வயிற்றில் தனியாகவோ, குழுவாக இணைந்தோ பயிற்சி செய்யலாம். பயிற்சி முடிந்ததும் நண்பர்களிடம் அன்பையும், நட்புணர்வையும் முகமலர்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதால், தங்கள் மனதில் உள்ள மன அழுத்தம், துக்கம் ஆகியவற்றை மறந்து வளமான வாழ்வை வாழமுடியும்.

தொடக்கத்தில் இந்தப் பயிற்சியில் ஈடுபட மாணவ, மாணவிகள் கூச்சப்பட்டனர். சிரிப்புத் தியானத்தின் மூலம் கிடைக்கும் பலனை அறிந்த அவர்கள் தற்போது நல்ல முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர். கல்லூரிகளில் ஆசிரியர்களின் பாடத்தைக் கவனிப்பதால் மாணவர்களுக்கு ஒருவகை இறுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை உண்டு.

ஒருவர் சிரிப்பதையே மறக்கத் தொடங்கினால் புரதம் குறைந்து மறதியை அதிகரிக்கும் “அல்ஸைமர்’ நோயும், அறிவுத் திறனைக் குறைக்கும் “டிமென்ஷியா’ நோயும், நினைவுகளை மனதில் பதியச் செய்யும் திசுக்களைப் பாதிக்கும் “ஹிப்போகம்பஸ்’ நோயும் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதையெல்லாம் போக்க செலவில்லாத ஒரே மருந்து சிரிப்புத் தியானம்தான். தற்போது கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பயிற்சியை தங்களின் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்” என்றார்.



வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 25, 2015 8:16 pm

ஆப்ரிக்க கழனிகளை காக்க கட்டெறும்புகள்?
-----------------------
ஆப்ரிக்காகட்டெறும்புகள்கழனிகள்யானைகள்
எலியைக் கண்டு அஞ்சுமாம் யானை என்பது கர்ணபரம்பரை கட்டுக்கதை. எலியைவிட உருவத்தில் மிகச்சிறிய எறும்பை கண்டுதான் அது பயப்படுகிறது என்கிறது சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று.

‘அட, அது உண்மையா’ என்றால் உண்மைதான் என்கிறது டெய்லி மெயில் என்ற பத்திரிகையில் வெளியான செய்தி.
புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்.டோட் பால்மர் என்பவர் தலைமையில் இயங்கும் விஞ்ஞானிகள் குழு கென்யாவில் ஓர் ஆய்வு நடத்தியது. ஒருவகை மரத்தின் கிளைகளை யானை மேய்ந்துவிடாது கட்டெறும்புகள் தடுக்கின்றன என்று இந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. வனவிலங்குகளில் உடலால் பெரியது யானை. அதனுடன் பலத்தால், பருத்த உடலால் ஒப்பிடவே முடியாதது கட்டெறும்பு. அப்படியிருக்க எறும்புக்கு யானை பயப்படும் ரகசியம் என்ன?. அதுதான் குழுஒற்றுமை. அது எப்படி?

யானை மரக்கிளையை ஒடிக்க முயன்றால் அந்த மரத்திலிருக்கும் கட்டெறும்புகள் வரிசையாக யானையின் துதிக்கைக்குள் புகுந்து தங்கள் வேலையைக் காட்டிவிடுகின்றன. துதிக்கைக்குள் நரகவேதனையைச் சந்திக்கும் யானைகள் அதன்பிறகு அந்த மரத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிடுகின்றன. அப்புறம் என்ன? உருவில் சிறிது வலுவில் பெரிது என கதை மாறிவிடுகிறது.

சிறிய உருவம் கொண்டவை எப்படி உலகை ஆள்கின்றன என்பதற்கு இது மற்றொரு உதாரணம். பிராணிகளின் வாழ்வியலை பற்றி ஆய்வு நடத்தும் இந்த விஞ்ஞானிகள் குழு இந்த அரிய உண்மையை கண்டறிந்துள்ளது. குழு ஒற்றுமை ஒன்றுதான் இந்த கட்டெறும்புகளுக்கு பலம். யானை உருவத்தில் பெரியதாக இருந்தாலும் தனிமையில்தான் இந்த எறும்புக்கூட்டத்தின் சவாலை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. துதிக்கைக்குள் படையெடுக்கும் கட்டெறும்புக்கூட்டத்தின் முன் தனியொரு யானையால் என்ன செய்யமுடியும். ஒன்றும் செய்ய முடியாதுதானே!.

டாக்டர்.பால்மர், டாக்டர்.ஜேக்கப் ஹோகன் இந்த விஷயத்தை கென்யா சமவெளி பகுதியில் கண்டறிந்தனர். சூடுபட்ட பூனை பாலைக்குடிக்காது என்பது எப்படி உண்மையோ, புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது எப்படி உண்மையை அதுபோல கென்யாவில் அகோரப்பசி வந்தாலும் யானைகள் கட்டெறும்புகள் உறைவிடமாகக் கொண்ட மரத்தை அண்டவே அண்டாது என்பது நிதர்சனமான உண்மை.

சில நேரம் எறும்புகடித்து யானைகள் இறந்துவிடுவதும் உண்டு என்கிறார் பால்மர். ஆப்பிரிகாவில் உள்ள காட்டு மரங்கள், கழனியில் விளையும் நெற்பயிர் போன்றவற்றை யானைகள் கபளீகரம் செய்துவிடாமல் காக்க அவற்றில் கட்டெறும்பை விடலாம் என இந்த விஞ்ஞானிகள் குழு யோசனை தெரிவித்துள்ளது. இதை ஏற்றால் ஆப்பிரிக்க காட்டையும், கழனியையும் கட்டிக்காக்குமாம் கென்யா கட்டெறும்பு.

வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 25, 2015 8:18 pm

ஐன்ஸ்டீனின் காதல் வாழ்க்கை – நடிகை ரோகிணி
---------------------

ஐன்ஸ்டீன்காதல் வாழ்க்கைநடிகை ரோகிணி
நடிகை ரோகிணி தான் படித்த ஐன்ஸ்டீனின் புத்தகம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்… (இரண்டாவது பாகம் இது)

ஐன்ஸ்டீனின் காதல் அனுபவமாகட்டும், வேலைக்குப் போவதைப் பற்றிய அவருடைய கருத்தாகட்டும் இரண்டுமே அவருடைய வித்தியாசமான தன்மையையே காட்டுகிறது. அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததெல்லாம் சார்புநிலைத் தத்துவமே. “ஆத்மரீதியாகச் சிந்திப்பது இசை போன்றது; ஒருபோதும் அதை விற்க முடியாது’ என்பதே அவர் கருத்து.
அவர் ஜெர்மனியின் குடியுரிமையைத் துறந்து ஸ்விட்சர்லாந்து குடிமகன் ஆனார். அங்கு அவருக்கு உதவித் தொகை கிடைத்தது.

ஐன்ஸ்டீன் மெலீவா மேரி என்கிற பெண்ணிடம் காதலில் விழுந்தார். அவர் அவரைவிட மூன்று வயது பெரியவள். ரொம்ப அழகும் இல்லை. இருந்தும் அவளைத் தீவிரமாக நேசித்தார். காரணம் அவள் கணிதத்தில் மேதை. இவருடைய ஆராய்ச்சி, இயற்பியல் பற்றியெல்லாம் பேசக் கூடிய ஆற்றல் உள்ளவள். மனம்விட்டுப் பேச அவருக்கு ஆள் கிடைத்தது.

அப்போது விடுமுறை மாதம். ஜெர்மனுக்கு ஐன்ஸ்டீன் திரும்ப வேண்டியிருந்தது. கல்யாணத்திற்கு முன்பாகவே மெலீவா மேரி கருவுற்றார். அது அந்தக் காலத்தில் நமது நாட்டைப் போலவே அங்கேயும் மிகப் பெரிய தவறு.

பெரிய பெரிய விஞ்ஞானிகள் அவர்களுடைய ஆய்வுகளை வெளியிடுவது அப்போது வழக்கம். ஐன்ஸ்டீன் இளைஞர். அந்த ஆய்வுகளில் காணப்படும் பிழைகளை உடனே கண்டுபிடிப்பது அவருக்கு எளிதாக இருந்தது. அதைவிட எளிதாக இருந்தது, சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு அதை உடனே கடிதம் மூலம் தெரிவிப்பது. ஐன்ஸ்டீனின் கருத்தை மறுக்க முடியாமல் திணறிய விஞ்ஞானிகள் அவரை மிகவும் வெறுத்தனர். அவருக்கு வேலைக்காகச் சிபாரிசு செய்ய மறுத்தனர். அவருக்கு வேலை கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர். மனதில் பட்டதை எவ்வித ஒளிவுமறைவுமில்லாமல் கூறும் பண்பு ஐன்ஸ்டீனுக்கு இருந்தது.

இன்னொன்றும் ஐன்ஸ்டீனுக்குத் தெரியாது. காரியம் ஆக வேண்டுமென்றால் பிறரைத் தேவையில்லாமல் புகழத் தெரியாது. இதனால் அவருக்கு வேலை கிடைக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

காப்புரிமை அலுவலகத்தில் வேலை கிடைத்த பின்பே அவர் திருமணம் செய்து கொண்டார்.

அதற்குப் பின் ஐன்ஸ்டீனுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

சுவிட்சர்லாந்தை விட்டு ஜெர்மனிக்கு வந்தார்கள். அவருடைய மனைவிக்கு அதில் வருத்தம். ஜெர்மனி வந்தபின்னால் அவர் வீட்டையும் கணவரையும் பார்த்துக் கொள்ளும் பெண்ணானார். அவருடைய அறிவு, திறமை எல்லாம் ஐன்ஸ்டீனுக்கு உதவவே பயன்பட்டன. அவருடைய கணித அறிவு கணிதத்தில் கொஞ்சம் வீக்கான ஐன்ஸ்டீனுக்கு உதவியது. அவர் இல்லாவிட்டால் ஐன்ஸ்டீன் சார்புநிலைத் தத்துவத்தையோ, க்வாண்டம் தியரியையோ கண்டுபிடித்திருக்க முடியாது என்று கூறுவர். நோபல் பரிசு கிடைத்திருக்காது என்றும் கூறுவர்.

இருந்தாலும் ஒருகட்டத்தில் ஐன்ஸ்டீன் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதற்குப் பின்பும் தொடர்ந்து செயல்பட்டு பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார். எனவே இதில் பெரிய உண்மை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 26, 2015 3:35 pm

பயிரை மேயும் வேலிகள்
------------
மாதா, பிதா, குரு, தெய்வம்… என்ற முன்னோர்கள் சொல்லி வைத்த வரிசையில் ஆசிரியர்கள் மூன்றாவதாக இடம்பிடித்துள்ளனர். ஆனால், அத்தகைய ஆசிரியர்களில், சில ஆசிரியர்களின் செயல்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்து விடுகிறதோ என்ற எண்ணத்தை பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.

நம் முன்னோர்கள் சொல்லி விட்டுச் சென்ற இந்த வரிசையில் உள்ள முக்கியத்துவத்தை மற்றவர்கள் புரிந்துள்ளனரோ என்னவோ… ஆனால் இதன் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது இன்றைய அவசியத் தேவை. இதில் அம்மாவும்(மாதா), அப்பாவும்(பிதா) ரத்தம் சார்ந்த உறவுகள். தெய்வம் என்பது கண்களால் பார்த்து உணரப்படாத சக்தி. அத்தனையும் தாண்டி ரத்த சம்பந்தமில்லாத ஒருவரை அதாவது ஆசிரியரை இந்தப் பட்டியலில் முன்னோர்கள் இணைத்திருப்பதிலிருந்தே ஆசிரியரின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

இப்படி சமூகம், ஆசிரியர்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்து அழகு பார்த்து வரும் வேளையில் சில ஆசிரியர்களின் செயல்பாடுகள், ஆசிரியர் சமூகத்தையே இளக்காரமாகப் பார்க்க வைக்கும் நிலையை ஏற்படுத்தி வருகிறது. பாலியல் ரீதியான தொந்தரவுகளை மாணவிகளுக்குக் கொடுத்து வரும் சில அற்ப எண்ண ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்துக்கே பெரும் அவமானம் ஏற்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கடையம் அருகேயுள்ள திருமலையப்பபுரத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 15 வயதான மாணவி ஒருவரை அப்பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் ஆகஸ்ட் 22-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் முன்பே தலைமையாசிரியருக்குத் தெரிந்திருந்த போதும், அதைக் கண்டுகொள்ளாமல் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மேலும், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது என்ற செய்தி ஆக. 23-ம் தேதியிட்ட நாளிதழ்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூங்கும் நேரம், காலை, இரவு சாப்பிடும் நேரம் தவிர்த்து (அதாவது குறைந்தஅளவு நேரம் தவிர்த்து) பெரும் அளவு நேரங்களில் மாணவர்களும், மாணவிகளும் பள்ளிகளிலோ அல்லது ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வரும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலோதான் தங்களது நேரங்களைச் செலவிடுகின்றனர். தங்கள் மகள் அல்லது மகன் நன்கு படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் பெற்றோர்கள் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர். ஆசிரியர்கள் மீதுள்ள உயரிய மரியாதையின் காரணமாகத்தான் இருபாலரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளில்கூட தங்கள் மகளைப் பெற்றோர்கள் பயமின்றி அனுப்பி வைக்கின்றனர். அதனையும் தாண்டிச் சிறப்பு மாலை நேர வகுப்புகளுக்கும், இரவு நேரப் படிப்புக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

மாணவர்கள் தவறு செய்தால் அதைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும், அதனையும் தாண்டி அந்த மாணவனை அல்லது மாணவியை நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் ஆசிரியருக்கு உண்டு. இந்த நிலையில் இத்தகைய ஆசிரியர்களின் செயல்பாடுகள் ஆசிரியர் சமூகத்துக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றன என்றால் அது மிகையில்லை. பாலியல் தொல்லைக்குள்ளான மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ள செய்தியைப் படித்த, ஒவ்வொரு மாணவியினுடைய பெற்றோரின் மனநிலையும் எப்படி இருந்திருக்கும் என்பது பெண் குழந்தைகளைப் பெற்றுள்ள பெற்றோர்களுக்குத்தான் புரியும்.

இதில் வேதனை என்னவென்றால், சம்பந்தப்பட்ட மாணவிக்கு, அந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவரம் அப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு முன்னரே தெரிந்திருந்தும்கூட அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதுதான். கடமை தவறும் ஆசிரியரைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த தலைமையாசிரியருக்கு உண்டு என்பதை அவர் மறந்தது எப்படி எனப் புரியவில்லை. இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சிலர்தான் இந்த கீழ்த்தர செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றாலும், அது மாணவச் சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதானே உண்மை.

மாணவர்களுக்கு நீதிபோதனையையும், வாழ்க்கைக் கல்வியையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற பாதகச் செயலைச் செய்தால் அதன் தாக்கம் எதிர்கால இளைஞர்களையும் தவறான பாதைக்குக் கொண்டு செல்லுமே என்று நினைக்கும்பொழுது மனம் குமுறுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால். ஆசிரியர் நியமனத்தில் பள்ளிகள், தங்கள் நலனைக் கவனத்தில் கொள்வதுடன் மாணவ, மாணவிகளின் நலனையும் கவனத்தில் கொண்டு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதுதான்.

ஏற்கெனவே ஊடகங்களும், திரைப்படங்களும் ஆசிரியர்களை கேலிப்பொருளாகச் சித்திரித்து வரும் நிலையில் தங்களின் மேன்மையை சமூகத்துக்கு உணர்த்துவதற்காக அரும்பாடுபட்டு வரும் நல்லாசிரியர்கள் மத்தியில் நிச்சயமாக இந்த வகையான ஆசிரியர்கள் கருப்பாடுகள்தான். அதைவிட சரியாகச் சொன்னால் இவர்கள் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போலத்தான்.

வி. குமாரமுருகன்


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 26, 2015 3:37 pm

எதற்கும் தலையாட்டுபவரா நீங்கள்?
-------------
எதற்கும் கீழ்ப்படியாமல் நடப்பவர்களை விட, எல்லாவற்றையுமே ஏற்றுக் கொள்ளும் நபர்களிடம் தான் பிரச்னை அதிகம். அதெப்படி, எதற்கும் கீழ்ப்படியாமல் இருப்பவர்களுக்குத்தானே பிரச்னைகள் அதிகம் என்று கேட்டால் அதற்கு பதில், இல்லை என்பதுதான்.

பொதுவாக ஒருவர் யார் சொல்வதையும் கேட்காமல், தான்தோன்றித் தனமாக நடப்பதாக வைத்துக் கொள்வோம். அதனால் அவர் செய்யும் எந்த செயலுக்கும் அவர் மட்டுமே காரண கர்த்தாவாகிறார். அவர் செய்யும் காரியத்தால் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு. எனவே, அவர் தான் செய்யும் காரியம் மீது மிகுந்த அக்கறை காட்டுவார். அதில் சறுக்கல்கள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்றும் சிந்தித்து வைத்திருப்பார்.

ஆனால், யார் எது கூறினாலும் அதை தனது மனதுக்குப் பிடிக்காவிட்டாலும், தனது மூளை அது தவறு என்று கூறினாலும் ஒருவர் கூறிவிட்டார் என்பதாலேயே அதனை செய்யும் நபருக்குத்தான் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதற்குக் காரணமும் இருக்கிறது.

ஒருவர் தனக்குப் பிடிக்காத காரியத்தை மற்றவர்களின் தூண்டுதல் காரணமாக செய்யும் போது அதனை ஆர்வத்துடன் செய்ய இயலாது. மேலும், அதன் சாதக, பாதகம் குறித்து ஆராய்ந்திருக்க மாட்டார். அதே சமயம் அதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் உடனடியாக, அதை செய்யச் சொன்னவரின் பேரில் பொறுப்பை போட்டுவிடலாம் என்ற அலட்சியமும் இருக்கும்.

இந்த சூழ்நிலையில்தான், ஒருவருக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், தனக்குப் பிடிக்காத காரியத்தை செய்யும் போது, அவரது மனம் அவரை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும். அவரது மனம் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்.

எனவே, ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக அதனை மறுத்துவிடுங்கள். உங்களை செய்யச் சொல்லும் விஷயத்தில் சாதக பாதகங்களை அலசி ஆராயந்து, அதில் சாதகம் இல்லை என்று உங்களுக்குத் தெரிந்தால், அதனை செய்ய முடியாது என்று உறுதியாகக் கூறி விடுங்கள்.
உங்கள் நண்பர்கள் உங்களை சினிமாவுக்கு அழைக்கிறார்கள். உங்களுக்குப் போக விருப்பமில்லை. ஆனால் நண்பர்களுக்காக செல்வீர்கள். இது ஒரு சாதாரண காரியமாக இருக்கலாம். ஆனால், உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நீங்கள் செய்வதால், காலம், பணம் விரயம் தான் ஏற்படுமேத் தவிர, அது உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்காது.

இது எல்லா விஷயத்துக்குமே பொருந்தும். ஒரு விஷயத்தை நீங்கள் வேண்டாம் என்று நினைத்தால், அதனை தெளிவாக உறுதியாக வேண்டாம் என்று கூற வேண்டியது மிகவும் அவசியமாகும்.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 26, 2015 3:38 pm

அக்கா பெண்ணும், தாய்மாமனும் வேண்டவே வேண்டாம்
----------------

அக்கா பெண்ணையும், தாய் மாமனையும் உறவினராக இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை… அண்ணா பெண்ணையோ அல்லது தாய் மாமனையோ திருமணம் செய்து கொள்வது தான் வேண்டவே வேண்டாம் என்கிறோம்.
உறவுகளுக்குள் திருமணம் முடித்தால், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவ உலகமே ஒன்று சேர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

உறவுகளுக்குள் திருமணம் முடிந்தால் ஏற்படும் தலசீமியா எனப்படும் ரத்த அழிவு சோகை நோய் பற்றி தெரிந்தால், யாரும் அதுபோல உறவுகளுக்குள் திருமணம் முடிக்க நினைக்கவே மாட்டோம்.

அது என்ன ரத்த அழிவு சோகை?

சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் தான் ஆக்ஸிஜனை சுமந்து கொண்டு உடல் முழுக்க எடுத்துச் செல்கிறது. அந்த ஹீமோகுளோபினுக்குள் ஆல்ஃபா குளோபின், பீட்டா குளோபின் என இரண்டு உட்பொருட்கள் உள்ளன.

இந்த ஹீமோகுளோபின் அமைப்பில் ஒட்டுமொத்தமாக கோளாறு ஏறப்பட்டு, அதன் விளைவாக ரத்த சிவப்பு அணுக்கள் அழிக்கப்படுவதே ரத்த அழிவு சோகை. இதனால், ரத்தத்தின் மூலமாக உடலுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் பணி தடைபட்டு, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்த குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு, அம்மா, அப்பாவிடம் இருந்து குறைபாடுள்ள மரபணு சென்றதே பாதிப்புக்குக் காரணமாகிறது. இந்த நோயுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு வயிறு வீக்கம், கல்லீரலிலும், எலும்பு மஞ்ஜையிலும் வீக்கம், தலை வீக்கம், இதயம், சிறுநீரகத்தோடு செயல்பாடு குறைவு என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

இந்த நோய் ஏற்பட்டால், மாதம் தோறும் அந்த குழந்தைக்கு ரத்தத்தை ஏற்ற வேண்டியது ஏற்படும். இது ஒன்று மட்டுமே தற்காலிகத் தீர்வாகும். அப்படி ரத்தம் ஏற்றவதாலும் சில குழந்தைகளுக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனை போக்க மாத்திரைகளையும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டியது வரும்.

உறவுக்குள் திருமணம் முடிந்த தம்பதிக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு இந்த பிரச்னை இருந்தால், அடுத்து பிறக்கும் குழந்தைக்கும் இதே பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, இரண்டாவது குழந்தை உருவானதுமே, அந்த குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அந்த குழந்தைக்கும் இந்த பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், கருவைக் கலைப்பதுதான் ஒரே வழி.

நெருங்கிய உறவுகளுக்குள் மணம் முடிப்பதால், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கவே முடியாது. அதனால், உறவுகளுக்குள் திருமணம் செய்வதைத்தான் தவிர்க்க வேண்டும் என்கிறது மருத்துவ உலகம்.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 26, 2015 3:40 pm

தொலைக்காட்சிகளில் இருந்து விடுதலையாவது எப்போது?
--------------

அப்பப்பா மூச்சு முட்டுகிறது… தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்காக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சானல்களின் பெயர்களை ஒரு முறை சொல்லிப்பார்க்கும் போதுதான் நமக்கு இந்தப் பிரச்னை. சன்,கே டிவி, ஆதித்யா, ஜெயா, ராஜ், கலைஞர், ஜீ, ஸ்டார் விஜய், பொதிகை, வசந்த், பாலிமர், மெகா, தமிழன், கேப்டன், மக்கள் தொலைக்காட்சி என இன்று சுமார் 35-க்கும் அதிகமான சானல்கள் தமிழில் ஒளிபரப்பு செய்கின்றன.

இவற்றின் எண்ணிக்கை விரைவில் லிம்கா அல்லது கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு உயரும் என நம்பலாம்.

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் இத்தனை சானல்கள் தமிழில் ஒளிபரப்பாகின்றன என்றால், அந்தப் பெருமையைச் சொல்லி சிலாகிக்காமல் இருக்க முடியாது.

முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ஒலியும், ஒளியும் பார்க்கவும், வாரத்தில் ஒரு முறை ஞாயிறன்று போடும் ஒரு திரைப்படத்தைப் பார்க்கவும், அதுவும் அடுத்த வீட்டுக்குச் சென்று பார்ப்பதற்கு சங்கடப்பட்டு தவிர்த்து விடுவதும் நம் பழக்கமாக இருந்தது. பிறகு தனியார் தொலைக்காட்சி சானல்கள் உருவாக்கப்பட்டு கேபிள் இணைப்பு கொடுத்த வீடுகளில் எப்போதும் தமிழ் சினிமாக்களின் ராஜ்ஜியம் தலை தூக்கியதும், தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. தமிழ் தொலைக்காட்சி சானல்கள் அதிகரித்த பிறகு தொலைக்காட்சியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமானது.

முந்தைய காலத்தில் மதிப்புமிக்க ஒரு கருவியாகப் பார்க்கப்பட்ட இந்தத் தொலைக்காட்சி, பிறகு பொழுதுபோக்கு அம்சமாக மாறி, இன்று கேளிக்கைப் பொருள்களில் ஒன்றாக மாறிப்போனது. இது எப்படி நடந்தது?
அரசியல் கட்சியோடு தொடர்புடையவர்களால் தொடங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி சானல்கள் முதலில் பொதுவான அம்சங்களோடு, திரைப்படங்களை ஒளிபரப்பி வந்தன.

தொடக்கத்தில் தங்களுக்குத் தேவையான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கத் தொடங்கிய மக்கள், பிறகு ஓய்வுநேரங்களை முழுக்க முழுக்க தொலைக்காட்சியின் முன் கழிக்கத் தொடங்கினர். இதுதான் சானல்களைத் தொடங்கியவர்களின் எதிர்பார்ப்பும்கூட.

பிறகு தொடங்கியதுதான் கருத்துத் திணிப்பு. இதில் அவர்கள் பெற்ற வெற்றியே, இன்று வரை தொடங்கப்படும் புதிய சானல்களின் அடித்தளம். இதன் விளைவாக வேறு பல சானல்கள் தமிழில் உருவாகவும், மொழிமாற்று சானல்கள் வரவும் அது வழிகோலியது.

இதன் தொடர்கதைதான் பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. குறிப்பாக குழந்தைகளில் தொடங்கி, இளைஞர்களில் வளர்ந்து, முதியோரில் முடியும் வரை இன்று அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு வெளி உலகமே தெரியாத நிலை. ஒற்றுமை, ஒருமைப்பாடு, கலாசாரம் என்ற பொதுபுத்திக்கான விஷயங்களே தெரியாதவர்களாக அவர்கள் வளர்ந்து வருகின்றனர்.

பொதிகை தொலைக்காட்சியைத் தவிர, குழந்தைகளுக்கான மற்ற சானல்கள் உள்ளிட்ட எவையும் மோசமான, விபரீதமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்ப்பதில்லை.

இந்தியாவில் பாலியல் கல்வி இன்னமும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், அதுகுறித்த அடிப்படை அறிவுகூட குழந்தைகளுக்கும், வளர்இளம்பருவத்தினரிடையேயும் இல்லாத நிலையில், இந்தியாவில் பாலியல் உறவுகொள்ளும் திரைப்படங்கள் வெளிநாட்டு தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தியாவில் இந்த ஒளிபரப்புக்கான அவசியம் என்ன? மக்கள் விரும்பிக் கேட்டுத்தான் அரசு அனுமதித்துள்ளதா?

பொதுவாக அனைத்து வயதினரையும் அவர்களது வேலைகளை குறித்தநேரத்தில் செய்யவிடாமல், பொன்னான நேரத்தை கிரகித்துக்கொள்ளும் இந்த ஒளிபரப்புகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும் (இதிலும் விதிவிலக்கு உண்டு). ஆனால், அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி, பிபிசி போன்ற சானல்கள் கட்டண ஒளிபரப்புகளாகத் தொடர்கின்றன.

இதுபோன்ற சானல்களை மைய அரசு குறைந்த கட்டணத்தில் பெற்று மக்களின் நன்மையைக் கருதி இலவசமாக ஒளிபரப்பினால் மாதக் கட்டணமாவது குறையும்.

குறிப்பாக, தமிழகத்தில் இன்று கல்வி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தொடங்கப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், அவர்களின் பாடங்களோடு தொடர்புடைய காட்சிகளோடும், இளைஞர்களுக்கு சர்வதேச அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்தும், சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்க்கைக் கல்விக்கான ஒரு முழுநேரச் சானலை தொடங்க எவரும் முன்வரவில்லை.

செல்வந்தர்களோ, அறக்கட்டளைகளோ, தொண்டு நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களோ, ஏன் இலவசங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகளோ இதுகுறித்து சிந்திக்காதது ஏன் என்ற காரணம் தெரியவில்லை.

இந்தியாவின் அதீத வளர்ச்சியைப் பொறாமைக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு மத்தியில், பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை விழுங்கக் காத்திருக்கும் நிலையில், இந்திய இளைஞர்களுக்கு கிடைத்துவரும் வேலைவாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் வளர்ந்த நாடுகளுக்கு மத்தியில் இன்னும் பழங்கதைகள் பேசி, தொலைக்காட்சியில் தோன்றும் பொய்யான தோற்றங்களில் மயங்கி, அதன் கேளிக்கை நிகழ்ச்சிகளே கதியாகக் கிடந்தால், இந்தியர்களின் வாழ்வில், குறிப்பாக தமிழர்களின் வாழ்வில், “இன்னொரு இருண்ட காலம்’ என்ற வரலாற்றை வருங்காலம் படிக்கும்.
இரா. மகாதேவன்


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 26, 2015 3:41 pm

நன்றி சொல்லும் நாள்
-------------
ஓர் ஆண்டு என்பது 365 நாள்களைக் கொண்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 365.25 நாள்கள் என்பதுதான் வானவியல் கணக்கு. வேதகால பாரத வானவியல் சாஸ்திரம் 32 பகுதிகளை ரகஸ்ய வித்தைகளாகக் கொண்டது.

தை மாதம் தொடங்கி ஆனி மாதம் முடிய உள்ள ஆறுமாத காலமும், ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறுமாத காலமும் சமகால அளவு இல்லை. உத்தராயணம், தக்ஷிணாயணம் ஆறு ஆறு மாதங்கள் என்றாலும் கால வித்தியாசம் உள்ளது.

அதாவது சூரியன் நகர்வதாகத் தோன்றுகிற பயண காலம் வடதுருவமுனைக் கோட்டிலிருந்து தென் துருவமுனைக் கோட்டிற்கு வருகிற காலம் 186.50 நாள்கள். தென் துருவ முனைக் கோட்டிலிருந்து வட துருவ முனைக் கோட்டிற்கு வருகிற காலம் 178.75 நாள்கள். மொத்தம் 365.25 நாள்கள் (ஓராண்டு).

தை தொடங்கி உத்தராயணம் ஆரம்பமாகிறது. தை மாதத்திற்கு தனி விசேஷத்தன்மை உண்டு. பூமியில் வாழும் மானுடருக்கான ஓராண்டு என்பது வானுலக தேவர்களுக்கு ஒரு நாள் பொழுது என்பது மனு ஸ்மிருதியின் வாசகம்.

தக்ஷிணாயணத்தில் ஆடி தொடங்கி மார்கழியின் காலம் தேவர்களின் முன் விடியல். உத்தராயணத்தில் தொடங்குகிற தைமாதம் தேவர்களின் விடியற்காலம். தேவர்களின் விடியலை அதாவது தைமாதத்தை விசுவாமித்திர மகரிஷி போற்றியுள்ளார்.

தேவர்களின் அந்த விடியல்தான் மனிதகுல வாழ்வுக்கு உணவு தருகிற உழவர்களின் தைத்திருநாள். உலகம் முழுவதும் உழவுத் தொழிலை போற்றியுள்ளது.

ரோமானியக் கவிஞர் வெர்ஜில் எழுதியுள்ள 12 பகுதிகள் உடைய ஏஉசஉஐஈ (ஹெனைட்) காவியம் உழவின் பெருமையைப் பேசும். லத்தீன் மொழியிலுள்ள எஉஞதஎமஇந (கார்கஸ்) காவியம் உழவுக்காக இயற்றப்பட்டது.

கவிச் சக்கரவர்த்தி கம்பரின் ஏர் எழுபது பிரசித்தம். திருவள்ளுவரும், இளங்கோ அடிகளும் உழவர்களைப் போற்றியுள்ளதை தமிழகம் அறிந்ததே. கம்பன், இளங்கோ, வள்ளுவரைப் போற்றிய மகாகவி பாரதி சுதந்திரப் பாட்டை, பள்ளர்களின் களியாட்டம் என்றே பாடி உழவர்களை உயர்த்தி உள்ளார்.

தை மாதத்தை கொண்டாடுவது, ஒளி தந்த கதிரவனுக்கும் உணவு தந்த உழவர்களுக்கும் நன்றி கூறுவதற்காகவே.கதிரவனை சூரிய நாராயணனாக கருதுவது ஏனென்றால், சூரியனின் பால் வட்டத்தின் மத்தியில் சூரிய நாராயணர் இருப்பதாக பாரத ஸ்மிருதிகள் கூறுகின்றன.

வானில் சூரியனைச் சுற்றி பல கோள்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்டு முழுவதும், பன்னிரு மாதங்களும் கோள்கள் சுழல்கின்றன. அவ்வாறு கோள்கள் சுழல்கிற பாதைகளும், அவை சந்திப்பதும் ராசிகள் என்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு வருவதை சங்கராந்தி என்று கூறுவது வழக்கம்.

மகர ராசி என்று சொல்லப்படுகிற பாதைக்கு கதிரவன் நெருங்குவதை மகர சங்கராந்தி என்று புராணங்களில் கூறியுள்ளார்கள். அதையே தைப்பொங்கல் திருநாள் என்பது மரபு. உணவு தந்த கதிரவனுக்கும் உழவனுக்கும் பொங்கலைத் தந்து மகிழும் நாளே மகர சங்கராந்தி – தைத் திருநாள்.

வான் மழைக்கும், வளம் மிகுந்த பூமிக்கும், ஒளி தரும் சூரியனுக்கும், இயற்கையுடன் பாடுபட்ட விவசாயிக்கும் மனிதகுலம் கொண்டாடுகிற நன்றித் திருநாள், தெய்வத் திருநாள், புராணத் திருநாள், வானவியலைப் போற்றும் பெருநாள் என்பதை உலகுக்குத் தெரிவிக்கிற பாரத ஸம்ஸ்கிருதியின் (கலாசாரத்தின்) சின்னமே தைத் திங்கள் பொங்கல் ஆகும்.

நமது முன்னோர்கள் விஞ்ஞான ரீதியான – வானவியல் ரீதியான நுட்பங்களைக் கண்டறிந்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.

ஆனால், அனேகமாக எல்லாவற்றையும் தெய்வீகம் } வேதம் } இதிகாசம் } புராணம் என்ற அடிப்படையில் கூறியிருக்கிறார்கள் என்கிற பேருண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். எதையும் மேலோட்டமாகக் கண்டு, பாரத நாட்டு தெய்வீகத்தை, வேத இதிகாச புராணத்தை அறிவியல் குறைத்து பேசுகிற அரசியல் ஒன்றுக்குமே நிலைக்காது.

மஞ்சள் குலைகளும், இஞ்சிக் குலைகளும், கரும்புகளும், பசுக்களும் மாட்சியுடன் பவனிவர, இயற்கையைத் தொழுது போற்றி உணவளித்த சாதாரண மானுடர்க்கு நன்றி பாராட்டி பால் பொங்க, அரிசி பொங்க, மனம் பொங்கிப் பொங்கித் ததும்பும் நாளே தைப் பொங்கல்.

பாரத நாட்டு மகரிஷிகளும், வானவியல் விற்பன்னர்களும் கண்ட நுட்பங்களின் பாண்மைகள் நிறைந்த மேன்மைகளே பாரத நாட்டு விசேஷப் பண்டிகைகளும் திருநாட்களும் என்கிற சத்யங்களைப் புரிந்து கொண்டு வேதங்கள் சொன்னபடி மனிதரை மேன்மைப்படுத்திக் கவிபாடிய பாரதியின் வாசகமான “வானவியல் தேர்ச்சி கொள்’ என்ற புதிய ஆத்தி சூடியை உணர்ந்து நடப்போம்.

- பாரதி காவலர் கே. ராமமூர்த்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:24 pm

செல்போன் அழைப்பை வீணாக்காமல் தவிர்க்க..
------------
பொதுவாக தண்ணீரை செலவு செய்வது போல பலரும் செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம். இப்போதெல்லாம் தண்ணீரும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்து விட்டதால், தண்ணீரை விட அதிகமாக செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம்.

செல்போன் அழைப்புகளை வீணாக்குகிறோம் என்றால் என்னவென்று புரியவில்லை. அதாவது, ஒரு தொலைபேசியிலோ அல்லது செல்போனிலோ ஒருவரை அழைத்துவிட்டு, எதையும் சொல்லாமல் வீணாக்குவதாகும்.

அதாவது, அவர் இல்லையா.. அப்புறம் பேசுகிறேன்.. பேச வந்ததை மறந்து விட்டேனே… மாற்றி உங்களுக்கு போன் செய்து விட்டேனா என்பது போன்ற வாக்கியங்களோடு எத்தனையோ செல்போன் அழைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இவற்றை எல்லாம் தவிர்க்க..

பேசுவதற்கென்று சில பண்பான முறைகள் இருக்கின்றன. வழக்கமாகப் பேசுகிறவர்களாக இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது நல்லது. புதியவர்களாக இருந்தால் அழைத்தவர் தன்னுடைய பெயர், ஊர், தொழில் ஆகியவற்றைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்ட பிறகு, தான் தொடர்பு கொள்ள விரும்புகிறவர் பெயர், ஊர், தொழில் போன்றவற்றைச் சொல்லி விசாரிப்பதே பண்பாடு.

மிகவும் அந்தரங்கமான விஷயமாக இல்லாமல் அலுவலக வேலை தொடர்பானது என்றால், இன்ன விஷயத்துக்காகத் தொடர்பு கொண்டேன் என்று கோடிட்டு காட்டிவிட்டால் செல்போன் அழைப்பை ஏற்கும் குடும்பத்தார் அதைத் தங்களுடைய குடும்பத் தலைவருக்குச் சொல்லி உரிய நேரத்தில் கவனிக்கப்பட உதவிகரமாக இருக்கும். “அவர் இல்லையா, சரி அப்புறம் பேசிக்கொள்கிறேன்’ என்றால் அழைப்பு வீணாகிவிடும்.

செல்போனை இனி கையில் எடுக்கும்போதே என்ன பேச வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொள்வது நல்லது.

அலுவலகத்தாருடன் பேசுவதாக இருந்தாலும் கடைகளில் அல்லது சேவை அமைப்புகளிடம் சேவையைப் பெற விரும்பினாலும் முதலில் நமக்குத் தேவைப்படும் விடைகளுக்கு ஏற்ப வரிசையாகக் கேள்விகளைக் குறித்துக் கொண்டு பேசுவதும் நல்ல பலனைத் தரும். இதை மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று நினைக்கக்கூடாது.

செல்போனைத் தொடர்ந்து நெடுநேரம் கன்னத்தோடு வைத்துக்கொண்டு பேசினால் அந்தப் பகுதியில் புற்றுநோய் வரும் என்கிறார்கள். அத்துடன் அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தால் கண்களும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர்.

செல்போனை எந்த நேரமும் வைத்திருப்பதும், செல்போனில் எப்போதும் வீண் அரட்டை அடிப்பதும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. அதில் இருந்து 24 மணி நேரமும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக செல்போனில் பேசும் போது, அந்த கதிர்வீச்சு அதிகப்படியாக உடலை பாதிக்கிறது.

செல்போனைக் கூடியவரை குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தாமலே இருப்பது என்ற முடிவை இப்போது எடுப்போம், அதைச் செயல்படுத்துவோம். சுருக்கமாகச் சொன்னால் “வார்த்தைச் சிக்கனம் செல்போனின் இலக்கணம்’.
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:26 pm

செல்போனில் பேசுவதும் வன்முறையே
-----------------------
இருபது வருடங்களுக்கு முன்பு செல்போன் என்ற ஒரு கருவி உலகையே ஆட்டிப்படைக்கப் போகிறது என்று யாராவது விளையாட்டுக்காகக் கூறியிருந்தால்கூட அதை யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். இன்று மக்களை இது அடிமைப்படுத்திவிட்டது. உலகின் எந்த மூலையில் யார் இருந்தாலும் அவர்களோடு நேரடியாக மணிக்கணக்காக பேசும் வசதி இருப்பதால் இது மிகவும் இன்றியமையாத சாதனமாகிவிட்டது.

செல்போன் (கைப்பேசி) பயனுள்ள சாதனம் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. கல்வி, தொழில், வியாபாரம், அரசு அலுவலகங்களுடன் தொடர்பு, சேவைகள் ஆகியவற்றைப் பெறவும் உறவினர்கள், நண்பர்களுடனான தொடர்புக்கும் இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

ஆனால் இதைப் பயன்படுத்துவதில்தான் மக்களிடையே சுய கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. செல்போனில் தொடர்ந்து நீண்ட நேரம் பேசுவது கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளாக்கும் என்ற மருத்துவ எச்சரிக்கையைப் பலர் மனதிலேயே கொள்வதில்லை. அதே சமயம் அவசியத் தேவைகளுக்கு மட்டும் சுருக்கமாகப் பேச வேண்டும் என்ற இங்கிதம் தெரியாமல் மணிக்கணக்காகப் பேசி தங்களுடைய நேரத்தையும் வீணடித்து எதிராளியின் நேரத்தையும் வீணடிக்கும் வேலையைச் செய்கின்றனர்.

வீட்டில் நோயாளிகளைக் கவனிக்க வேண்டியவர்கள், சமையல் வேலையைத் தொடர வேண்டியவர்கள், அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கட்டளைப்படி அவருக்கு உதவி செய்ய வேண்டியவர்கள், சாலைகளில் வாகனங்களில் செல்வோர், வெளியூர் பயணங்களுக்குத் தேவைப்படும் பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருப்போர்,
குறிப்பிட்ட வேலை நேரத்துக்குள் அலுவலகங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் சென்று தங்களுக்குத் தேவைப்படுவதை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியவர்கள் என்று பலர் எதிர் முனையில் இருக்கலாம்.

தாட்சண்யம் கருதியோ, வம்பு வளருமே என்று அஞ்சியோ அவர்கள் தங்களுடைய அடுத்த வேலையைச் சொல்லாமலும் இருக்கலாம். நம்மைப் போலவே அவரும் வெட்டியாகத்தான் இருக்கிறார் என்று நினைத்து பேச்சை வளர்த்துவது வீணான செயல் மட்டுமல்ல மறைமுகமான வன்முறையுமாகும்.

பள்ளி, கல்லூரிகளில் ஜூனியராக இருப்போர், அலுவலகங்களில் நமக்குக் கீழே வேலை பார்ப்போர், கட்சி அல்லது அமைப்புகளில் நம்முடைய தயவை நாடுவோர், புதிதாகத் திருமணமாகி வந்த மணப்பெண் என்று இளைத்தவர்கள் பலரை ஆதிக்கம் செலுத்தும் வகையில் பலர் இப்படிப் பேசுவது உண்டு.

இன்னும் சில வசதியான வீட்டுப் பெண்மணிகள் தங்களைவிட வசதிக் குறைவான உறவுப் பெண்களை செல்போனில் அழைத்து சொந்த பந்தங்களைப் பற்றிய “லேட்டஸ்ட்’ தகவல்களைச் சொல்லச் சொல்லி துருவித்துருவி கேட்கும் அநாகரிகங்களும் உண்டு.

அக்கம் பக்கத்தில் குடியிருப்போர், அலுவலகத்தில் வேலை செய்வோர், உறவினர்கள் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வம்பு பேசும் வழக்கத்துக்கும் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. யாரோ சொன்ன ஆதாரமற்ற வதந்திகளை மீண்டும் மீண்டும் பலரிடம் சொல்லி அதை உண்மைபோல சித்திரிப்பதற்கும் செல்போன் பயன்படுகிறது.
கட்சிகளின் தலைவர்கள், முன்னணி நடிகர்கள் போன்றவர்களின் உடல் நிலை குறித்து அடிக்கடி திடுக்கிடும் எஸ்.எம்.எஸ். தகவல்களும் செல்போன் மூலம் பரவுகிறது.

அழைத்துப் பேசுவது நாம்தான் என்பதால் கட்டணச் சுமை நமக்குத்தானே எதிரில் இருப்பவர் சும்மாதானே பேசுகிறார் என்றும் பலர் நினைப்பது உண்டு. வம்பு பேசுவதற்கான கட்டணத்தை அவர் செலுத்தினாலும் எதிர்முனையில் இருப்பவர் தன்னுடைய விலைமதிப்பற்ற நேரத்தை அல்லவா இழக்கிறார்?

சில சந்தர்ப்பங்களில் இயற்கையின் அழைப்புக்குச் செல்லக்கூட முடியாத நிலையில் எதிர் முனையில் இருப்பவரை இழுத்துவைத்துப் பேசும் சித்திரவதைகளும் உண்டு.

வீட்டுவேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வெடுப்போர், உடல் நலமில்லாததால் மாத்திரை சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க நினைப்போர் எதிர் முனையில் இருக்கக்கூடும். இதைக்கூட அனுமானிக்க முடியாமல் மணிக்கணக்கில் பேசுவதை என்னவென்று சொல்வது?

எனவே, முக்கியமான விஷயங்களை சுறுக்கமாக போனில் பேசுங்கள். அவசியமில்லாமல், போர் அடிக்கிறது.. யாரிடமாவது பேசலாம் என்று தோன்றினால், நாம் அழைத்த நபர், சாவகாசமாக இருக்கிறாரா, பேசத் தயாராக இருக்கிறாரா நேரம் இருக்கிறதா என்பதை கேட்டறிந்து கொண்டு பேச்சைத் தொடருங்கள். அப்போதும் வீணாகப் பேசி நேரத்தை வீணடிக்காமல் சுருக்கமாகப் பேசி முடித்துக் கொள்ளுங்கள். இது உங்களது ஆரோக்கியத்துக்கும், பொன்னான நேரத்துக்கும் நல்லது.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:28 pm

தவிர்க்கவே கூடாத விஷயம் இது…
----------
உணவு சாப்பிடுவதற்கு தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையை வகுத்துள்ளோம். இதற்கிடையில், மாலை நேரத்தில் சிறிய அளவிலான உணவுவகைகளை (நொறுக்குத் தீனி) சாப்பிடுகிறோம். மற்ற மூன்று நேரங்களில்… குறிப்பாக, உடலுக்கு புத்துணர்வைத் தரும் காலை உணவை சரியான அளவோடும், ஊட்டச்சத்து நிறைந்ததுமாய் சாப்பிடுகிறோமா என்பதுதான் கேள்வி.

காலையில், பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை, பொங்கல் என்பது எழுதப்படாத “மெனு’வாகிவிட்டது. இதில் என்ன ஊட்டச்சத்து உள்ளது? இதுபோன்ற உணவு வகைகள் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். ஆனால், அன்றைய தினம் உடலுக்குத் தேவையான புத்துணர்வு என்பது கிடைக்காது. இதற்கு மாற்றாக கேழ்வரகு இட்லி, சம்பா தோசை, கோதுமை ரவா உப்புமா, போன்ற தானியங்களை கொண்டு, பல்வேறு வகையான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

அரிசியில்தான் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அரிசியும் தானிய வகைதான், ஆனால், வாரத்துக்கு ஓரிரு நாள் தவிர, மற்ற நாள்களில் அரிசி தவிர்த்த தானியங்களை கொண்டு சமைத்த உணவைச் சாப்பிடலாமே. முடிந்தால், பழங்களில் ஏதாவது ஒன்றை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வகை உணவுகளைச் சாப்பிடுவதால் சரியான உடலமைப்பும், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி, இ போன்ற ஊட்டசத்துடன், அன்றைய தினத்துக்குத் தேவையான புத்துணர்வும் கிடைக்கும்.

இது ஒருபுறம் இருந்தாலும், காலை உணவையே தவிர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பலர் உண்டு. எப்படி தெரியுமா, வீட்டுவேலைப் பளு, சுவாமிக்கு பூஜை செய்யாமல் சாப்பிடுவதில்லை, காலை நேர பரபரப்பு போன்ற காரணங்களால் பெண்களில் பலரும், அலுவலகம், வியாபார விஷயமாக அவசரமாகச் செல்லும்போது ஆண்களும், அவசர அவசரமாக எழுந்து பள்ளிக்குப் புறப்படும் குழந்தைகளில் பலரும், நோய் காரணமாக முதியோர்களில் சிலரும் காலை உணவைத் தவிர்க்கின்றனர்.

இதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைப்பதற்காக சிலரும் காலை உணவு சாப்பிடுவதையே தவிர்க்கின்றனர். இதனால், வயிற்றில் சுரக்கும் “ஹைட்ரோ குளோரிக்’ அமிலம் வயிறு, குடல் பகுதிகளில் உள்ள திசுக்களை பாதிக்கத் தொடங்கி, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்தான் வருமே தவிர, உடல் எடை குறையாது.

வயிற்றில் உள்ள இரைப்பைக்குத் தேவையான உணவை குறிப்பிட்ட நேரங்களில் கொடுக்க வேண்டும். இல்லையெனில், இரைப்பை சுருங்கத் தொடங்கிவிடும்.

ஒருநேரம் பட்டினி கிடந்து, மற்றொரு நேரம் சேர்த்து சாப்பிடலாம் என நினைப்பதும் தவறு. இந்த தவறை வெளியூர்களில் தங்கி படிக்கும், பணிபுரியும் ஆண்களில் பலர் செய்கின்றனர். கால தாமதமாக தூங்கி எழுந்து நேரடியாக மதிய உணவுக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

மருத்துவர்கள், மருந்து சாப்பிடும்போது மூன்று, நான்கு வேளை என குறிப்பிடுவதுபோன்று, நாமும் உணவு சாப்பிடுவதில் கடைபிடித்தால் அஜீரணக் கோளாறு நோய்களிலிருந்து தப்பலாம்.

இடையிடையே நொறுக்குத்தீனி என்ற பெயரில் கிடைப்பதெல்லாம் சாப்பிடுவதும், சுகாதாரமற்ற எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களைச் சாப்பிடுவதால் உணவுக் குழாயில் எரிச்சல் ஏற்படுவதுடன், நோய் தாக்குதலுக்கான ஆரம்ப நிலையை உருவாக்குகிறது.

அண்மையில், “இந்தியர்களின் காலை உணவு பழக்கம்’ என்ற தலைப்பில் கெலாக்ஸ் நிறுவனம் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையில் 3,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் காலை உணவைத் தவிர்ப்பதாகவும், நாடு முழுவதும் 72 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவாக உள்ள காலை உணவைச் சாப்பிடுவதாகவும் தெரியவந்தது. மேலும், பெண்களிடம் ஊட்டச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடுவதோடு, காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் அதிகம் காணப்படுவதாகத் தெரிவித்தனர்.

ஊட்டச்சத்து குறைவான காலை உணவை சாப்பிடுவதில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு சாப்பிடுவதில் தில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும், சென்னை மூன்றாவது இடத்திலும் (38 சதவீதம் பேர்) உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவைச் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை பெரும்பாலானோர் அலட்சியப்படுத்துவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

உடலுக்கு எப்படி ஓய்வு தேவையோ? அதேபோல் நமது இரைப்பைக்கும் ஓய்வு தேவை. அதற்காக பட்டினி கிடக்க வேண்டியதில்லை. இரவு நேரத்தில் குறைவாக சாப்பிட்டு, இரைப்பைக்கு ஓய்வு கொடுப்போம்.

நம்முடைய உடல் ஆரோக்கியம் நம் குடும்பத்துக்கு முக்கியம் என்பதை உணர்ந்து, காலை உணவைத் தவிர்க்காமல் அளவோடும், ஊட்டச் சத்தோடும் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது.

இதில் நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள்…

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 5 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum