தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிசயமான அருமையான கட்டுரைகள்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 9:37 am

First topic message reminder :

சொந்த, பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Sannyasi-300x186

இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

“”பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.

புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.

இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.

புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.

ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.

இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது” என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:12 pm

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
--------------
கல்வி கண் திறந்த காமராஜர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தார். அதற்கு அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே ஆனிவேராக அமைந்திருந்தது.

அதாவது,

காமராஜர் விருதுநகர் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தபோது நடந்த சம்பவம் இது.

அந்தப் பள்ளி அவருடைய வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் மதிய உணவுக்கு சிறுவன் காமராஜ் வீட்டுக்கு வந்து விடுவார். வீட்டில் அம்மா அவருக்கு உணவளிப்பார். அந்தச் சமயத்தில் அவரது பாட்டியும் அவர்களோடு வசித்து வந்தார். பாட்டிக்குக் காமராஜர் மீது கொள்ளைப் பிரியம்.

ஒருநாள் பாட்டியிடம் காமராஜர், “இனிமேல் மதிய உணவைக் கட்டிக் கொடுத்துவிடுங்கள். பள்ளியில் வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என்று கேட்டார்.

பாட்டியோ, வீடு அருகில் இருப்பதால் அப்படித் தர முடியாது, வீட்டுக்கு வந்துதான் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறினார். ஆனாலும் காமராஜர் அழுது அடம்பிடிக்கவே, கோபமுற்ற பாட்டி அவரை அடித்துவிட்டார்.

அடிவாங்கினாலும் காமராஜர் சாப்பாடு கட்டித் தரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். செல்லப் பேரனின் பிடிவாதத்தைக் கண்டு மனமிரங்கிய பாட்டி, தினமும் மதிய உணவைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்.

நாட்கள் சென்றன. பாட்டி, ஒருநாள் பள்ளிக்குச் சென்று மதியவேளையில் பேரன் எப்படிச் சாப்பிடுகிறான் என்பதை மறைவாக நின்று கவனித்தார்.

அங்கே, கிழிந்த அழுக்குச் சட்டையுடன் இருந்த ஓர் ஏழைச் சிறுவனோடு தனது உணவைப் பகிர்ந்து உண்டுகொண்டிருக்கும் காமராஜரைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார். இவ்வளவு நல்ல மனம் கொண்டவனை அடித்துவிட்டோமே என்று பாட்டிக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது.

காமராஜரின் உணவைப் பகிர்ந்து கொண்ட அந்தச் சிறுவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தினமும் தண்ணீர் குடித்துப் பசி தீர்த்துக் கொள்பவன். அவனைக் கண்ட காமராஜரின் மனம் பதை
பதைக்கவே அவனுக்காக வீட்டிலிருந்து அழுது அடம்பிடித்துச் சாப்பாடு கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார். இதனால் அவரது மனம் நிறைவு பெற்றது.

இதுதான் அவர் பின்னாளில் தமிழக முதல்வரானபோது மதிய உணவுத் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்த வித்தாக இருந்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:19 pm

படிப்பது இதற்காகத்தான்
-------------

படிப்பு என்பது அறிவு வளர்ச்சியின் அளவாக இருந்த நிலை மாறி, வெறும் சான்றிதழ் என்ற அளவில் நிற்கின்றன காலம் இது.

என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டால், எம்பிஏ, எம்சிஏ என்பார்கள். ஆனால், பொது அறிவோ, சாதாரண விஷயங்கள் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இந்த நிலையில் அவர்கள் படித்த பட்டம் வெறும் சான்றிதழாக மட்டுமே இருக்கும்.
ஆனால், படித்து ஒரு டிகிரி முடிப்பதற்குள், அவர்கள் தங்களை மிகப் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களை மதிக்காமல் ஏளனப்படுத்துவதும் உண்டு.

படித்த படிப்பு அறிவை வளர்க்கத்தான் பயன்படவில்லை. ஆனால், கைநிறைய சம்பாத்தியத்தை பெற்றுத் தருகிறது. அதை சேமிக்கவும், நல்ல வழியில் செலவிடமும் நிச்சயம் அறிவு வேண்டும்.

எனவே, படிக்கும் போதே தங்களது பொது அறிவையும், நல்ல சிந்தனைகளையும், பண்பையும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதற்கு ஒரு உண்மைச் சம்பவம் எடுத்துக் காட்டாக உள்ளது.

அதாவது,

நண்பர் ஒருவர் ஆபிரஹாம் லிங்கனிடம்,”"படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு லிங்கன்,”"நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படிப் பண்போடு வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவே படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

எனவே, இளைஞர், இளைஞிகளும், படிப்போடு பண்பையும் படித்து, செல்வம் வரும் போது பண்போடு நடக்கவும் வேண்டும்.

படிப்பது இதற்காகத்தான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:21 pm

கடிதம் எழுதுவோம்.. எழுத ஊக்குவிப்போம்..

----

கடிதம்.. மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனமாக இருந்து தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போனவற்றுள் முதன்மையானது.

அன்புள்ள.. என்று துவங்கி, இப்படிக்கு என்று முடிக்கும் ஏராளமான கடிதங்களை அன்றைய நாட்களில் பலரும் எழுதியிருப்பார்கள். இதைப் படிக்கும் சிலரும் கூட கடிதங்கள் வாயிலாக எத்தனையோ தகவல்களை பரிமாறிக் கொண்டிருப்போம்.

விடுமுறை நாட்களில் நண்பர்களுக்கும், முக்கியச் செய்திகளை கடிதங்கள் வாயிலாக உறவினர்களுக்கும் தெரிவித்திருப்போம். அவர்களது பதில் கடிதங்களுக்காக காத்திருப்போம். தபால்காரர் நம் வீட்டு வாசலில் வந்து பெயர் சொல்லி பெல் அடிக்கும் போது ஓடிச் சென்று தபாலை வாங்கிப் படிக்கும் சுகமே அலாதி.

இதுபோல, முக்கியப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம்.
ஆனால், தற்போது மின்னஞ்சல், செல்போன், குறுந்தகவல்கள் என வேகமான தகவல் பரிமாற்றத்தின் விளைவாக கடிதங்கள் பலவந்தமாக விடைபெற்றுக் கொண்டன.

இந்த கடிதங்கள் மாணாக்கருக்கு எத்தனை விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. கடிதம் எழுதும் முறை, ஒரு ஆசான் போல் பல்வேறு விஷயங்களை பிள்ளைகளுக்கு தானாகவே ஏற்படுத்தின. கடிதத்தைத் துவக்கும் முறை, முதலில் நலம் விசாரிப்பு, பிறகு நலம் தெரிவிப்பு, தகவல், மகிழ்ச்சியான விஷயத்தை முதலில் கூறுவது, பிறகு மெல்ல துன்பச் செய்தியை சொல்வது, பிறகு இயல்பாகப் பேசி கடிதத்தை முடித்து விடை பெறுவது, பதில் அனுப்ப வலியுறுத்துவது, ஊருக்கு அழைப்பது, உற்றார் உறவினர்களின் நலம் விசாரிப்பது என ஒரு கடிதத்தில் எத்தனை முறைகளை வைத்திருந்தோம்.

ஆனால், அனைத்தையும் இழந்து விட்டு மொட்டைப் பனமாரமாய் அல்லவா இருக்கிறது இப்போதைய தகவல் தொடர்புகள்.

எப்படி இருக்கிறாய் என்பதை கூட மின்னஞ்சல்களிலும், குறுந்தகவல்களிலும் h r u என்று சுருக்கிவிட்டோம். இது நம் மனதும் சுருங்கிவிட்டதாகவே எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்த கடிதம் எனும் தகவல் தொடர்பை நம் பிள்ளைகள் பின்பற்ற வழி ஏற்படுத்துங்கள். நெருங்கிய உறவுகளுக்கு கடிதங்கள் எழுதி அதனை அஞ்சல் செய்யுங்கள். சிறிய வயதுள்ள பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு கடிதம் எழுதி அவர்களையும் பதில் கடிதம் எழுதச் சொல்லுங்கள்.

அஞ்சலில் எல்லாம் அனுப்ப முடியாது என்று சொல்பவர்கள், சிறார்களை, அவர்களது தாத்தா பாட்டிகளுக்கு கடிதம் எழுதி நேரில் கொடுக்க செய்யலாம். இதன் மூலம் அவர்களது மனதில் இருக்கும் பல்வேறு விஷயங்கள் வெளியே வருவதை நீங்களே பார்த்து ஆனந்தப்படுவீர்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:27 pm

பச்சிளம் தாய்மார்களுக்கு உதவ வருகிறது கூகுள் கிளாஸ்
-------------
முதலில் கூகுள் கிளாஸ் என்றால் என்னவென்று பார்க்கலாம். நவீன தொழில்நுட்பத்தின் புதிய வரவு இந்த கூகுள் கிளாஸ். இது மனிதர்கள் பயன்படுத்தும் கண் கண்ணாடியைப் போன்று இருக்கும்.

ஆனால், இது வெறும் கண்ணாடி அல்ல. ஒரு நவீன ஸ்மார்ட்போனில் இருக்கும் அத்துனை அம்சங்களும் இந்த கண்ணாடியில் ஒளிந்திருக்கும். அந்த கண்ணாடியைப் போட்டுக் கொண்டிருக்கும் நபர் பார்க்கும், கேட்கும், படிக்கும் அனைத்து விஷயங்களையும் இந்த கண்ணாடி பதிவு செய்து கொள்ளும்.

பதிவு செய்து கொள்வதோடு மட்டும் அல்லாமல், அதனுடன் இணைக்கப்படும் மற்றொரு கருவிக்கும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அனுப்பும் வசதியும் உள்ளது.

இந்த கூகுள் கண்ணாடி 25 இஞ்ச் கம்ப்பூட்டர் ஸ்கிரீனை ஒத்திருக்கும். இதில் 16 ஜி.பி. சேமிப்பு திறனும், 5 மெகா பிக்சல் கேமராவும், வீடியோ பதிவு வசதியும், வைஃபை, 24 மணி நேரம் தாங்கக் கூடிய பேட்டரி, புளூடூத் தொடர்பு என முக்கிய அம்சங்கள் கொண்ட இந்த கண்ணாடியின் எடை எவ்வளவு தெரியுமாங்க? கேட்டா அதிர்ச்சியில ஆப் ஆயிடுவீங்க.. வெறும் 42 கிராம்தாங்க.

கூகுள் கண்ணாடி பற்றி சொல்லியாகிவிட்டது. அடுத்து இந்த கண்ணாடியை வைத்து ஒரு உணர்வுப்பூர்வமான பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

வாஷிங்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில், படுக்கையில் இருக்கும் தாய் ஒருவர், தனக்குப் பிறந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 101 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் பச்சிளம் குழந்தையை இந்த கூகுள் கிளாஸ் மூலமாக பார்க்கப் போகிறார். இது முதலில் பரிசோதனை முறையில் நடைபெற உள்ளது.

அதாவது, பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் ஸ்டீபனி ஷைனி தான் அந்த தாய். அவர் வைத்துள்ள வேண்டுகோளை ஏற்று இந்த பரிசோதனை நடக்க உள்ளது.

அதன்படி, ஐசியுவில் பணியாற்றும் செவிலியர் அல்லது வேறு ஒருநபர் கூகுள் கிளாஸ் அணிந்து கொண்டு ஐசியுவுக்குள் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் ஷைனியின் குழந்தையை அவர் பார்ப்பார்.

அவர் கூகுள் கிளாஸ் மூலமாக பார்க்கும் காட்சிகள், அந்த குழந்தையின் தாயாரான ஷைனியின் கையில் இருக்கும் டேப்லட் போனில் தெரியும். இதன் மூலம் ஐசியுவில் இருக்கும் தனது குழந்தையின் உடல் இயக்கத்தை ஷைனி அவ்வப்போது பார்த்து மகிழ்வார். இது குழந்தை தன்னுடனேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

இந்த பரிசோதனை முறை வெற்றிபெற்றால், அது எத்தனையோ தாய்மார்களின் மன அழுத்தத்தைப் போக்கும் என்பது நிச்சயம்.

பல குழந்தைகள் பிறந்ததுமே உடல் நலக் குறைபாடு காரணமாக தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு ஐசியுவில் வைக்கப்படுகிறது. உடல் நலனைப் பொருத்து இது சில நாட்கள் முதல் சில மாதங்களாகக் கூட ஆகலாம். அது வரை, குழந்தையைப் பிரிந்து இருக்கும் தாய்மார்கள் பல்வேறு வகையில் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

அதுபோன்றவர்களுக்கு இந்த கூகுள் கிளாஸ் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:28 pm

தடைகளும், எதிரிகளுமே உண்மையான நண்பர்கள்

----------

வாழ்க்கையில் உண்மையான நண்பர்கள் யார் தெரியுமா? நமது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் இடையூறுகளும், தடைகளும், நமது எதிரிகளும்தான்.

இப்படி சொல்வதைக் கேட்டு உங்களுக்குக் கோபம் கூட வரலாம். ஆனால். இதுதான் உண்மை.
அது எப்படி என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள் விளங்கும்..

பொதுவாகவே, நாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நம்முடனே இருக்கும் நண்பன் கூட நினைக்க மாட்டான். ஏன் என்றால், நாம் உயர்வது அவனுக்குப் பிடிக்காது. ஏதேனும் நீங்கள் முயற்சிக்கும் போது அது குறித்து கிண்டல் செய்வார்கள். உங்களை ஏளனமாகப் பேசுவார்கள். அதனைக் கேட்டு நீங்கள் மனம் தளரக் கூடாது.

அதே சமயம், ஒரு எதிரி நீ ஒரு ஆளா, இதைக் கூட உன்னால் செய்ய முடியாது, உனக்கு ஒன்றும் தெரியாது என்று பல வசனங்கள் பேசி உங்களை எரிச்சல் அடைய வைக்கும் போது, ஏன் இது என்னால் முடியாது என்று நீங்கள் எழுந்து நின்று சாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். அந்த வைராக்கியத்தோடு நீங்கள் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றியை அளிக்கும்.

ஒருவர் இது உங்களால் முடியாது என சொல்லும் போதுதான், அதை செய்ய வேண்டும் என்ற ஒரு உந்துதல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படும். எனவே, கூட இருக்கும் நண்பன் கொடுக்கும் உற்சாகத்தை விடவும், எதிரி சொல்லும் கடினமான சொற்கள் பலரது வாழ்க்கையிலும் ஒளி விளக்காக அமைந்திருப்பது உண்மை.

ஒரு பயிற்சி வகுப்புக்கு செல்கிறீர்கள்.. அந்த வகுப்புக்குச் சென்ற சில நாட்களில், உங்களது உறவினர், நீ எல்லாம் அங்க போய் அவ்ளோ எக்ஸாம் எழுதி படிக்க மாட்ட.. பாரேன்னு சொன்னால், ஆமாம், நம்மால் அப்படி முடியாது என்று நினைக்காமல், அவர் சொன்னதற்காகவே, அந்த பயிற்சியை முடித்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்.
அதே போல, நாம் நடந்து கொண்டிருக்கும் போது, நமது பாதையில் ஒன்று சிறிய சாக்கடை குறுக்கிட்டால் திரும்பி வந்துவிடுவோமா அல்லது அந்த சாக்கடையை தாண்டி குதித்து செல்வோமா.. பெரும்பாலானோர் தாண்டி குதித்துத் தான் செல்வோம். அவ்வாறு ஒரு சாக்கடை வரும் போதுதானே நமக்கு தாண்டி குதிக்கத் தெரியும் என்பதை நாம் உணர்வோம். இதுவும் ஒரு உதாரணம்தான்.

நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் (வாழ்க்கையில்) எந்த தடையும் ஏற்படவில்லை, சுமூகமாக செல்கிறது என்றால், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்பதை உணருங்கள் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார்.
இந்த வார்த்தைகளை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

எனவே, வாழ்க்கையில் நிகழும் துன்பங்கள், துயரங்களை நேசியுங்கள். அது ஒவ்வொன்றில் இருந்தும் நீங்கள் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டிருப்பீர்கள்.

வேதனைகள் சோதனைகளைத் தயக்கம் இன்றி தைரியமாக சந்திக்கத் தயாராகுங்கள். சோதனைகளையும், வேதனைகளையும், எதிர்கொள்பவர்கள்தான் சாதனையாளர்களாகின்றார்கள்.

சும்மா ஓரமாகப் படுத்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல…
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:30 pm

வாழ்க்கையில் சாதிக்க….
--------

ஒரு மிகப்பெரிய அலுவலகத்துக்குள்ளோ அல்லது நிறுவனத்துக்குள்ளோ நுழைந்து பார்த்தோமானால், அங்கு பணிபுரியும் ஊழியர்களில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் கோலோச்சுகின்றனர். ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் அனைவரும் பெண்கள், மேலாளர் உள்பட என்றால் பாருங்களேன்!

÷இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியே வரவும், பணிபுரியவும், தனியாகத் தங்கவும் தயங்கிய பெண்களின் நிலை, இன்றைக்கு அப்படியா இருக்கிறது? எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் அத்துறை பற்றிய நுட்பமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு வெற்றிச் சிகரத்தை அடையும் பெண்கள் காலமாக உள்ளது இன்றைய சூழ்நிலை. கால நேரம் பார்க்காமல் தைரியமாக எந்த நேரத்திலும் வெளியில் செல்வதும், மேல்படிப்புக்கென்று தனித்து வாழ்வதும் இன்றைக்குச் சர்வசாதாரணமாகிவிட்ட ஒன்று.

ஆணுக்கு சரிநிகர் சமமாக இரண்டு சக்கர வாகனம், ஆட்டோ, ரயில், பேருந்து, வானஊர்தி என்று ஒன்றையும் விட்டுவைக்காமல் இயக்கும் திறனிலும், தொழில்நுட்பத் திறத்திலும் ஆண்களை விஞ்சி நிற்கின்றனர் இன்றைய பெண்கள்.

மகாகவி பாரதி கண்ட சமுதாயம் உருவாகிவிட்டதோ என்று வியக்கும் விதமாக ஒருபுறம் பெண்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், யாருக்கும் அடிமைப்பட்டு வாழவிரும்பாத மனோபாவமும், சகிப்புத்தன்மை இன்மையும், தன்னிச்சையாகச் செயல்படும் தான்தோன்றிப் போக்கும், கவர்ச்சி ஆடை மோகமும் பெண்களிடம் அபரிமிதமாக வளர்ந்து வருவது, ஆபத்தின் அறிகுறிதான் என்பது கைப்புண்ணுக்குக் கண்ணாடியா என்பதுபோல் தெள்ளத்தெளிவாகிறது. இதுதான் பெண்களின் வளர்ச்சியா? புறவளர்ச்சி மட்டுமே ஒரு பெண்ணுக்குப் பெருமை சேர்த்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ÷அகவாழ்க்கையான குடும்ப வாழ்விலும் பெண்கள் கோலோச்சினால்தான் இல்லறம் செம்மைப்படும். அவ்வாறு செம்மைப்பட்டாலதான் விவேகானந்தர் கண்ட கனவு நனவாகி நல்ல சிறந்த வீரத் திருமகன்களை நாட்டுக்குத் தரமுடியும். ஆனால், இன்றைக்குப் பெண்களின் அகவாழ்வின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது!

அனைத்துத் துறைகளிலும் கோலோச்சினாலும் பெண்கள் ஏனோ சிலர் குடும்ப வாழ்க்கையில் கோலோச்ச முடியாமல் கோட்டைவிட்டு, வேதனைப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இன்றைக்கு மிக அதிகமாக பலரால் விமர்சிக்கப்படுவதும், விவாதத்துக்கு உள்ளாவதும் கணவன் – மனைவி உறவுதான். நீதிமன்றங்கள் நிரம்பி வழிவதும் விவாகரத்து வழக்குகளால்தான்.

“மலரினும் மெல்லியது காமம்’ என்றார் வள்ளுவர். மலரைவிட மென்மையான கணவன்-மனைவி உறவையும் அதன் அதிமேன்மையையும் புரிந்துகொள்ள இன்றைய பெண்களுக்கு சகிப்புத்தன்மையும் இல்லை, பொறுமையும் இல்லை. ஆறஅமர உட்கார்ந்து பேச நேரமும் இல்லை என்பதுதான் உண்மை. இதுதான் பல பெண்களை நீதிமன்றம்வரை கொண்டு செல்கிறது. திருமணமாகி இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளாகவே சின்னச் சின்னக் கருத்து வேறுபாடு காரணமாக, நீதிமன்றங்களை மிதித்துவிடுகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய வேதனை. நமது கலாசாரம், பண்பாடெல்லாம் எங்கே என்று தேடிப்பிடிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் வேதனை தரும் விஷயம்.

இன்றைக்கு நீதி மன்றப் படியை தைரியமாக மிதிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது பெண்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிவேகமாக முன்னேறி வருகிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அவ்வாறு நீதிமன்றத்தின் உதவியோடு தனிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகள் ஏராளம் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டால் இதுபோன்று தொட்டதுக்கெல்லாம் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள்.

ஆணாதிக்கம் என்பது இன்றைய நாள்வரை குறைந்தபாடில்லை என்பது உண்மைதான். அதைச் சமாளிக்கவும், சகஜமாக எடுத்துக்கொள்ளவும் பெண்களுக்கு மிகவும் தேவை, மிக அதிகமான சகிப்புத்தன்மை, பொறுமை, சட்டென முடிவெடுக்காத தீர்க்கமான அறிவு, ஆராய்ந்து பார்க்கும் மனப்பக்குவம், குடும்ப வாழ்வில் எதுநடந்தாலும் இறுதிவரை போராடி சமாளிப்போம் என்ற மனவுறுதி, தன்னம்பிக்கை. இத்தனையும் இன்றைய பெண்களிடம் இருந்துவிட்டால் எந்தக் காலத்திலும், பெண்கள் அகவாழ்விலும் புறவாழ்விலும் வெற்றி அடைவது நிச்சயம்! நிச்சயம்! நிச்சயம்!

- ராதா வனமாலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:33 pm

அதிகாலையில் கண் விழிக்க

-------------

வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.

இன்று போல லேட்டாக எழுந்து அவசர அவசரமாக வேலைகளை செய்து அலுவலகத்துக்கும் தாமதமாக சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று தான் ஒவ்வொரு நாள் இரவிலும் பலரும் எடுக்கும் தீர்மானமாகும்.

ஆனால், விடியும் போது அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் எப்போதும் போல அடித்த அலாரத்தை அணைத்துவிட்டு போர்வைக்குள் புகுந்து கொள்ளும் பலருக்கும் எழும் கேள்வி… சே அதிகாலையில் கண் விழிக்க என்னதான் செய்ய வேண்டும் என்பதுதான்.

அப்படி மண்டை பிய்த்துக் கொள்பவர்களுக்கு, நமக்குத் தெரிந்த சில விஷயங்களைச் சொல்லலாமே என்றுதான்..

மூளைக்குச் சொல்லுங்கள்

men_brainநாம் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் என்று நாம் எடுத்த திடமான தீர்மானத்தை நமது மூளையிடம் சொல்ல வேண்டும். ஏன் என்றால், நமது மூளையை விட உலகில் வேறொரு அலாரமே இல்லை என்பதுதான். நமது மூளையிடம் இதனைக் கூறிவிட்டால் அது உரிய நேரத்தில் ஹார்மோன்களை சுரந்து அலாரம் அடிக்கும் முன்பே நம்மை அடித்து எழுப்பி விடும் என்பதுதான்.

அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திரிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தோடு படுப்பவர்களுக்கு அந்த நேரத்துக்கு முன்பாகவே ஹார்மோன்கள் சுரந்து உடலுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து எழுப்புகிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே போல, எந்த நிர்பந்தமும் இல்லாமல் படுக்கைக்குப் போகும் நபர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பதே இல்லையாம்.

சூரிய ஒளியும் எழுப்பும்

உங்கள் படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டால் விடிந்ததுமே நீங்கள் எழுந்திரிக்க முடியும். அதாவது, காலையில் விடிந்ததும் சூரியன் உதயமாகும் போது அதன் ஒளி அல்லது விடியும் போது அந்த வெளிச்சம் உங்கள் அறைக்குள் வந்தால், உங்களது உறக்கம் கலைந்து உங்களால் எளிதாக எழும்ப முடியும். அதற்கும் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன் தான் காரணம்.

அப்போ அப்போ மாத்திக்காதீங்க..

தினமும் ஒரே நாளில் எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்காக 10 மணி அலுவலகத்துக்கு 8 மணிக்குத்தான் எழுந்திருப்பேன் என்று தினமும் ஒரே நேரத்தில் எழுந்தால் அது வேலைக்கு ஆகாது. எனவே, தினமும் காலை 6 மணிக்கு எழுந்திரிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டால் உங்களுக்கு எந்த அலாரமும் தேவைப்படாது. உங்கள் உடல் இயக்கமே 6 மணிக்கு உங்களை எழுப்பிவிடும். அதே சமயம் வார இறுதி நாளில் கும்பகர்ணனோடு போட்டி போடுவதால் இந்த உடல் இயக்கம் பாதிக்கப்படும். மீண்டும் நீங்கள் உங்கள் அலாரத்தை தூசி தட்டி பேட்டரி போட வேண்டி இருக்கும்.

அலாரத்தின் ஒலியும் அவசியம்

love-heart-clock1எந்த ப்ராக்டீசும் எனக்கு ஒத்தே வராதுங்க.. அலாரம்தான் ஒரே வழி என்று சொல்வகர்களுக்கு ஒரு டிப்ஸ். பொதுவாகவே அலாரத்தின் ஒலி மிகவும் முக்கியம். உறங்கிக் கொண்டிருப்பவர்களை மெதுவாக தட்டி எழுப்பும் வகையில்தான் இந்த அலாரத்தின் ஒலி இருக்க வேண்டுமே தவிர, பட்டாசு வெடிப்பதை போல இருக்கக் கூடாது.

மேலும், அலாரத்தின் ஒலியைக் கேட்டு மெதுவாக எழுந்து அதனை அணைக்கும் போது உறக்கம் கலைவதுதான் நல்ல வழியாம். நம்ம செல்போன்ல வைத்திருக்கும் அய்யோ அம்மான்னு கத்துற ரிங்க் டோன்லாம் வச்சா தூக்கம் சரியா கலையாதாம். இப்போ தெரியுதா.. நாம ஏன் பாத்ரூம்ல பல் தேய்க்கும் போதும் தூங்கி வழியிறோம்னு…

எழுந்து ஓட வேண்டாம்

தூங்கி எழுந்ததுமே அலறி அடித்துக் கொண்டு வேலைகளை செய்ய ஓடக் கூடாது. உடல் உறக்கத்தில் இருக்கும் போது நமது ரத்த ஓட்டத்தின் வேகம் மாறுபடும். எனவே எழுந்து சில நிமிடங்கள் உட்கார்ந்து நிதானம் அடைந்தபிறகு எழுந்து செல்லலாம். அப்படி உட்கார்ந்தால் சாமியாடியே மீண்டும் கட்டிலுக்கு போய் விடுவேன். அப்புறம் என்னை எழுப்ப யாராலும் முடியாதுன்னு சொல்லுறவங்க இத செஞ்சிப் பார்க்க வேண்டாம்.

காற்றோட்டமாக உறங்கினால்..

இரவில் காற்றோட்டமான இடத்தில் உறங்கினால் காலையில் விரைவாக எழுந்திரிக்க முடியும். இல்லை என்றால், இரவு முழுவதும் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டால் காலையில் கண்விழிக்க இயலாமல் அவதிப்படுவோம்.

எனவே, காலையில் வழக்கமாக எழுந்திரிக்கும் நேரத்தை விட முன்கூட்டியே எழுந்து, அன்றாடப் பணிகளை அழகாக செய்துவிட்டு பள்ளி, கல்லூரி, வேலைக்கு விரைவாக செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் மேற்கண்ட ஏதேனும் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:35 pm

வண்ணங்கள் கனவுகளில் இருக்கலாம்; உணவுகளில் வேண்டாம்
-----
வீட்டில் அடிக்கடி செய்யும் இனிப்பு பண்டம் என்றால் அது கேசரியாகவோ, பாயசமாகவோ தான் இருக்கும். கேசரியில் சேர்க்கப்படும், முந்திரிப் பருப்பு, திராட்சை போன்ற பொருட்களில் சுவையும், சத்தும் அதிகம். ஆனால் கேசரி என்றால் அது உடனே நினைவுக்கு வரும் நிறம் மஞ்சள் கலந்த ஆரஞ்சு தான்.

ஏன் கேசரியைக் கலராகத்தான் சாப்பிட வேண்டுமா? கேசரியில் வண்ணப் பொடி சேர்க்காமல் செய்யக் கூடாதா என்று வண்ணப் பொடிகள் பற்றி அறிந்த பலரும் தற்போது எழுப்புகின்றனர்.

ஏன் என்றால், கேசரியில் சேர்க்கப்படும் கேசரி பவுடரில் கார்ஸினோஜன் என்ற பொருள் இருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்பதுதான் அதிர்ச்சி கலந்த உண்மை.

கேசரியை மட்டும் முதலில் நாம் கூறக் காரணமே, அந்த பவுடருக்குப் பெயரே கேசரிப் பவுடர் என்று வந்ததால்தான்.

அது மட்டும் இல்லாமல், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் கலரிலும் கார்ஸினோஜன் தான் இருக்கிறது. ஆனால் பொதுமக்களுக்கு இன்னமும் இந்த கலர் பொடிகளைப் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் உள்ளனர்.

கலர் கலராக உள்ள பொருட்களைச் சாப்பிடுவதிலும், அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதிலும் மகிழ்ச்சி அடையும் மக்கள், அதனால் தமக்கும், தமது பிள்ளைகளுக்கு ஏற்படும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.

கேசரி, பஞ்சு மிட்டாய் மட்டும் அல்லாமல், பல வண்ணங்களில் வரும் அப்பளம், சிப்ஸ்கள், சில கடைகளில் விற்பனையாகும் பஜ்ஜி, போண்டாவிலும் கூட இந்த வண்ணப் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது.

பாதாம் அல்வா, பாதாம் கட்லி, லட்டு, ஜாங்கிரி, பலவிதமான கேக்குகள் எல்லாமே விஷ வண்ணங்கள். கடைகளில் ரசாயனம் சேர்க்கப்படுவது தவறு என்றாலும் விற்பனைக்காகத் தின்பண்டங்களில் வண்ணம் சேர்க்கப்படுகிறது.

வியாபாரத்துக்காக அவர்கள் செய்யலாம். நாம் வீடுகளிலும் இதே தவறை செய்யக் கூடாது.

அசைவ உணவாகிய சிக்கன் 65யில் பலரும் இந்த கேசரிப் பவுடரை சேர்க்கிறார்கள். எனவே, வெளியில் விற்கும் இதுபோன்ற அசைவப் பண்டங்களை தவிர்க்கலாம். இதனைக் கூட தவிர்த்து விட முடியும். ஆனால், அசைவ உணவுப் பிரியர்களின் முக்கிய உணவான பிரியாணியிலும் இந்த கேசரிப் பவுடர் முக்கிய இடம் வகிக்கிறதே.. இதுபோன்ற உணவகங்களுக்கு கேசரிப் படவுரின் விபரீதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு சிட்டிகைத்தானே பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்காமல், ஒரு சிட்டிகை என்று வாழ்நாள் முழுவதும் எத்தனை கிராம் வண்ணப் பொடிகளை உணவில் எடுத்துக் கொள்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

சுத்தமான குங்குமப்பூத் தூள் தான் அசலான கேசரிப் பவுடர். குங்குமப்பூ மருந்து. புற்றுநோய்க்கு எதிரி. அதை விடுத்து சிந்தட்டிக் கேசரிப் பவுடர் எனும் விஷம் புற்றுநோயின் நண்பன். “குக்கீஸ்’ “குக்கீஸ்’ என்று விளம்பரமாகும் அனைத்து உணவுகளிலும் இதுபோன்ற பல ரசாயன விஷங்கள் உண்டு.

இனி நமது வீடுகளில் கேசரிப் படவுரை வாங்கவே மாட்டோம், வாங்கி வைத்திருப்பதையும் தூக்கி எறிவோம் என்று முடிவெடுங்கள்.

அதோடு விட்டுவிடாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கும் இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் நமது கடமையாகும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:37 pm

சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு..

----

எந்த உலக நாட்டு இளைஞர்களுக்கும் இந்திய இளைஞர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் துரதிருஷ்டம் நம்மவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னார்வம் குறைவு.

யாரைப் பிடித்தாவது, யார் காலில் விழுந்தாவது வேலை வாங்கி விட வேண்டும். அது அரசுத் துறையாகவும் இருக்காலம். அல்லது தனியார் துறையாகவும் இருக்கலாம். ஆனால் வேலை பார்த்து மாதச் சம்பளம் பெறுவது ஒன்றே இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோரின் லட்சியமாக உள்ளது.

சுயமாக தொழில் தொடங்கி நாமும் முன்னேறி மற்றவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுப்போம் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் மிகக் குறைவு. சுய தொழில் தொடங்க, இளைஞர்களை ஊக்குவிக்க அரசும் தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

சுய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கும், ஏற்கெனவே சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும், இலவச ஆலோசனைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) அளித்து வருகிறது.

மத்திய அரசின் விதிகளின்படி 8-ம் வகுப்பு தேறியவர்கள் முதல், இந்த பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் பெற முடியும்.

இந்தப் பணியில் மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.எம்.இ. முக்கிய பங்காற்றி வருகிறது. சுய தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கிண்டியில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதுதவிர கோவை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட சில நகரங்களில் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

என்னென்ன பயிற்சிகள்?
டர்னர், மில்லர், பிட்டர், சிஎன்சி ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல், தயாரித்தல், உணவுப் பண்டங்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், நவ ரத்தினக் கற்கள் பட்டை தீட்டுதல், நகைகள் தயாரித்தல், இயந்திரவியல், பொறியியல், மின்சாரம், மின்னணுத் துறை, தோல், பீங்கான் மற்றும் கண்ணாடி, ரசாயணம் உள்ளிட்ட துறைகளில் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.

பொருத்தமான சுய தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழிலை பதிவு செய்வது எப்படி, உரிமம் எங்கு பெறவேண்டும், கடன் பெற என்னென்ன வழிகள் உள்ளன, தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது, தொழில் கூடங்களை நவீனமயமாக்குவது எப்படி என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் இலவசமாக இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பெட்டிக்கடை ஆரம்பிக்க விரும்புபவர்களிலிருந்து உற்பத்தித் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் வரை இந்த நிறுவனத்தை அனுகலாம்.

நூலகம்:
எம்.எஸ்.எம்.இ. மையங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில், பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குவதற்கு உதவியாக 800-க்கும் மேற்பட்ட மாதிரி திட்ட அறிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை, தொழில் தொடங்க முனைவோர் பார்த்து பயன்பெறலாம். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு ஒரு முறை தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, மாவட்ட வாரியாக தயாரித்து வைக்கப்படுகிறது.

வங்கிகளுடன் கூட்டு
சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறும் வகையில், எம்.எஸ்.எம்.இ. நிறுவனம், இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது. வங்கிகள், கடன் கோரும் நபரின் தொழில் திட்டத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப கடன்களை வழங்குகின்றன.

புதிய திட்டங்கள்
சுய தொழில் தொடங்க முன்வருவோருக்கு, மூலதனத்தில் மானியம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் பிரதமரின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி ரூ. 25 லட்சம் வரையிலான திட்ட மதிப்புடைய உற்பத்தித் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு மூலதனத்தில் 15 முதல் 35 சதவீதம் வரை அந்தந்த தொழிலுக்கு ஏற்றபடி மானியம் வழங்கப்படும். இதுபோல் ரூ. 10 லட்சம் வரை திட்ட மதிப்புடைய சேவை நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கும் மூலதனத் தொகையில் 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.

எனவே, வேலை கிடைக்கவில்லை என்று ஏங்காமல், சுயதொழில் துவங்கி மற்றவர்களுக்கு வேலை தரும் ஆதாரமாக மாறுங்கள் இளைஞர்களே…
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 1:39 pm

மருத்துவத்தின் ஆசிரியர்கள் விலங்குகளா?
------------
நோய் ஏற்படும்போது, பெரும்பாலான மிருகங்களும் பறவைகளும் தங்களுக்குத் தாங்களே சிகிச்சை செய்து அந்த நோயைக் குணப்படுத்தும் அறிவு பெற்றிருக்கின்றன. காட்டில் உள்ள மருத்துவக் குணமுள்ள தாவரங்களைப் பற்றி முதலில் மனிதன், நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் நடவடிக்கையைப் பார்த்துதான் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.

தங்களுக்குத் தாங்களே சிகிச்சையளித்துக் கொள்ளும் பறவைகளையும் மிருகங்களையும் உற்றுக் கவனித்து புதிய புதிய மூலிகைத் தாவரங்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன.

ஒரு குரங்கு இருந்தது. ஒரு நாள் திடீரென்று அதற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. பிறகு அது விளையாடவில்லை. சிரிக்கவும்கூட இல்லை. சோர்ந்துபோய் அது ஒரு மூலையில் அமர்ந்து தூங்கி விழுந்துகொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோதுதான் விஷயம் என்னவென்று புரிந்தது. அது, ஈரமான சேற்றுக் கட்டியைக் கன்னத்தோடு வைத்து சேர்த்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது. எதற்காக அது அப்படிச் செய்கிறது தெரியுமா? தனக்கு ஏற்பட்ட பல் வலியைப் போக்குவதற்காகத்தான்.

நமக்கு உடல் நிலை சீர் கெட்டால் நாம் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்ப்போம். அவர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை உண்போம். ஆனால் நோய் வந்த மிருகங்கள் என்ன செய்யும்? அவை தனக்குத் தானே சிகிச்சையளித்துக்கொள்ளும். இதுபோன்ற திறமை பெரும்பாலான மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

அந்தக் குரங்கு தனக்குக் குளிர்ச்சி கிடைப்பதற்காக ஈர மண் கட்டியைக் கன்னத்தோடு சேர்த்துவைத்துப் பிடித்திருப்பது என்பது, தனக்குச் செய்துகொள்ளும் சிகிச்சையின் ஒரு பகுதிதான். மலேஷியாவில் உள்ள ஒரு மனிதக் குரங்குதான் இப்படிச் செய்தது. சில நாட்களுக்குப் பிறகு, பல் வலிக்குக் காரணமான அந்தக் கெட்டுப்போன பல்லை, அது தானே பிடுங்கி எடுத்துவிட்டது. அதோடு நில்லாமல் தான் பிடுங்கி எடுத்த தன் பல்லை எடுத்துக்கொண்டு வந்து மிகவும் பெருமையுடன் மிருகக் காட்சி சாலையின் பாதுகாவலரிடம் காட்டவும் செய்தது.

ஒரு காட்டு விலங்கிற்கு காய்ச்சல் வந்தால் அது முதலில் என்ன செய்யும்? மிகத் தனிமையான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும். காய்ச்சல் வந்தால், முதலில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று அதற்குத் தெரியும். அதற்காக அது காற்றும் வெளிச்சமும், தாராளமாகத் தண்ணீரும் கிடைக்கின்ற ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும். அங்கே மிகக் கொஞ்சமாக உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நன்றாக ஓய்வெடுக்கும். அப்போது சிறுகச் சிறுக அதன் காய்ச்சல் குணமடைந்துவிடும்.
சில நேரங்களில் நாயும் பூனையும் புற்களுக்கிடையில் மோப்பம் பிடித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில சமயம் அவை சில வகையான புற்களைப் பறித்துத் தின்பதும் உண்டு. தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வயிற்று வலியையோ, மற்ற உடல் நலப் பிரச்சினைகளையோ குணப்படுத்துவதற்காகத்தான் அவை இவ்வாறு செய்கின்றன. பூனையும் நாயும் மாடும் மட்டுமல்ல, முற்றிலும் அசைவ உணவையே விரும்பி உண்ணும் மிருகங்கள்கூட, தங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது இதுபோன்று மூலிகைப் புற்களைத் தேடித் தின்பதுண்டு. எந்த நோய்க்கு எந்தப் புற்களைத் தின்ன வேண்டும், அல்லது எந்த மூலிகை இலைகளைத் தின்ன வேண்டும் என்று அவற்றிற்கு நன்றாகத் தெரியும்.

நெடுநாட்கள் குளிர்கால உறக்கத்தில் இருக்கின்ற கரடியும் மற்ற மிருகங்களும், தாங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த உடனே முதலில், வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்காக சில வகைக் காய்களையும் கனிகளையும் சாப்பிடும்.
பல நாட்களாக வயிற்றில் தங்கியிருந்த அழுக்கெல்லாம் அகற்றப்பட்டு வயிறு சுத்தமாகும் அல்லவா?
அடிபட்டு ரத்தக் காயம் ஏற்பட்டால் “கிப்பன்’ எனும் மனிதக் குரங்குகள், மருத்துவக் குணமுள்ள ஒரு வகைச் செடிகளைத் தேடிப்பிடிக்கும். பிறகு அந்தச் செடிகளின் இலைகளை வாயிலிட்டு நன்றாக மெல்லும்.

மென்ற இலைச் சக்கையை அப்படியே பந்துபோல சுருட்டி அடிபட்ட இடத்தில் அழுத்தி வைக்கும். சில தினங்களுக்குள் காயம் ஆறிவிடும்.”கொரில்லா’க் குரங்குகளும், பிரத்தியேக வாசனை உள்ள சில பச்சிலைகளைத் தங்களின் காயங்களில் அழுத்தமாகப் பதித்து வைக்கும்.

lion_monkeyநம் கைகால்களில் ஏதாவது முறிவு ஏற்பட்டால் நாம் சில காலம் மாவுக் கட்டுப்போட்டுக்கொண்டிருப்போம் அல்லவா? மிருகங்களுக்கிடையிலும் இதுபோன்ற ஒரு சிகிச்சை முறை உண்டு. ஒரு முறை “மூர்ஹென்’ எனும் இனத்தைச் சேர்ந்த காட்டுக் கோழி இதுபோன்று செய்தது. நாம் செய்வதுபோன்று அது மாவுக் கட்டுப் போட்டுக்கொள்ளவில்லை. அது, முறிவு ஏற்பட்ட காலில் கொஞ்சம் சேற்றைப் பூசி பற்று போட்டுக் கொண்டது, அவ்வளவு தான். “வுட் கோக்’ எனும் பறவையும் இது போன்று செய்யும். தன் காலில் அடிபட்டால் இந்தப் பறவை, சேற்றையும் ஒரு வகைப் புற்களையும், ஒருவகை வேர்களையும் சேர்த்து பற்று போட்டுக் கொள்ளும்.

தங்களுக்குள் மருத்துவ உதவி செய்து கொள்வதில் எறும்புகள் மிகவும் திறமையானவை. எறும்புக் குடியிருப்பில் உள்ள எந்த எறும்பிற்காவது கால் ஒடிந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே மற்ற எறும்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட எறும்பின் காலைத் துண்டித்துவிடும். பிறகு அந்த எறும்பை ஒரு பிரத்தியேக அறையில் வைத்து காயம் ஆறும் வரை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்.

தங்கள் காயங்களில் சிலந்தி வலைகளை வைத்து சிகிச்சை செய்து கொள்கின்ற சில மிருகங்களும் இருக்கின்றன. ரத்தக் குழாய்களைச் சுருக்கி, ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கான குணம் சிலந்தி வலைகளுக்கு உண்டு என்பது தான் அதற்குக் காரணம். சில பிராணிகள், சில வகையான ஈக்களின் லார்வாக்களை நூற்றுக் கணக்கில் அள்ளிப் பூசி தங்கள் காயங்களை ஆற்றிக் கொள்ளும். இந்த லார்வாக்கள், காயத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

சில பறவைகள் எறும்புப் புற்றிற்கு மேலே இறக்கை விரித்துப் படுத்துக் கிடக்கும். எறும்புகளில் உள்ள “போர்மிக் ஆஸிட்’ என்பதைப் பயன்படுத்தி தங்கள் இறக்கைகளை வலுப்படுத்திக் கொள்வதற்காகத் தான் இது போன்று செய்கின்றன என்று சில விஞ் ஞானிகள் கருதுகிறார்கள். காக்கைகள், வீடுகளில் உள்ள புகைக் குழாய்களின் அருகே அமர்ந்து “புகைக் குளியல்” நடத்தும். யானைகளுக்கு “புழுதிக் குளியல்’ நடத்துவது தான் பிடிக்கும். உட லைத் தாக்குகின்ற சிறு பூச்சிகளைத் துரத்துவது தான் இது போன்ற குளியல்களுக்குக் காரணம்.

சில வகை மான்கள் சுண்ணாம் புச்சத்து உள்ள தண்ணீர் குடிப்பதற்காக பல கிலோ மீட்டர் பயணம் செய்யும். அவற்றின் கொம்புகள் சீக்கிரம் வளர சுண்ணாம்புச் சத்து மிகவும் ஏற்றது. பெண் கோவேறு கழுதைகள் கர்ப்ப காலத்தில் குறிப்பாக ஒரு வகை உணவை மட்டுமே உண்ணும். ஆரோக்கியமான குட்டிகள் பிறப்பதற்காகத்தான் அது இது போன்று செய்கிறது.
கொரில்லாக் குரங்குகள் வழக்கமாக மாலை நேரங்களில் தங்கள் பற்களைச் சுத்தப் படுத்திக் கொள்ளும். “சிம்பன்ஸி’ குரங்குகள் தங்கள் பற்களை சுத்தப்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தங்கள் குட்டிகளின் பற்களையும் சுத்தம் செய்யும். சில சமயம் கொரில்லாக் குரங்குகள், தங்கள் இனத்தில் எந்தக் குரங்கிற்காவது பல் வலி வந்தால், அந்தக் குரங்கை தரையில் மல்லாந்து படுக்க வைக்கும். பிறகு சிறு கம்புகளைக் கொண்டு அதன் கெட்டுப் போன பல்லைப் பிடுங்கி எடுக்கும். ஏறத்தாழ இது ஒரு அறுவை சிகிச்சை தான்.

crocodile_birdசில முதலைகள் தங்கள் பற்களின் இடையில் சிக்கிக் கொண்ட உணவுத் துணுக்குகளை அகற்றுவதற்காக சிறிய பறவைகளைச் சார்ந்திருக்கும். தங்கள் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துணுக்குகளை பறவைகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது, எவ்வளவு தான் பசியாக இருந்தாலும் இந்த முதலைகள் அந்தப் பறவைகளை உண்பதில்லை.

வளர்ப்பு யானைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் அப்போது யானைப் பாகன்கள் அவற்றைக் காட் டிற்குக் கொண்டு செல்வார் கள். காட்டிற்குச் சென்றவுடன் அந்த யானைகள் மூலிகைச் செடிகளைத் தேடிப் பிடித்துத் தின்னும்.

காட்டில் உள்ள சில மூலிகைச் செடிகள் மிருகங்களின் பெயரில் அறியப்படுகின்றன. வடக்கு அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர்கள், கரடிகள் நோய் வாய்ப்படும் போது வழக்கமாகத் தின்கிற ஒரு செடிக்கு “கரடி மருந்து’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் கள் என்பது குறிப்பிடத்தக்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by ஸ்ரீராம் Tue Oct 27, 2015 3:59 pm

சிறப்பான அனைத்து கட்டுரைகளும் அருமை அண்ணா.
அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 VScWx5Q2RUGpUEZ1TVEB+special-post

#spoct15-1
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by செந்தில் Wed Oct 28, 2015 8:49 pm

அனைத்துக் கட்டுரைகளும் அருமை அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 28, 2015 10:06 pm

அனைத்துக் கட்டுரைகளும் அருமை அண்ணா

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 3:58 pm

முதுமைவயதுவிழுதுவேர்கள்
---------------
மனிதன் பிறந்து வளர்ந்து எத்தனையோ விஷயங்களை பார்த்து, அனுபவித்து விட்டு, முதுமையை எட்டும் போது, அவனுக்கு தேவையானது அன்போடு கவனித்துக் கொள்ளும் உறவுகள்தான்.

முதுமையில் அவர்கள் எதற்கும் பயனற்றுப் போவதாக நினைக்கும் பிள்ளைகள், தங்களது பெற்றோரை ஒதுக்குகிறார்கள். தங்களது சுதந்திரமான வாழ்க்கைக்காக பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் சேர்க்கிறார்கள்.

சில வீடுகளில் பெற்றோரை வீட்டின் காவலர்களாக வைத்துக் கொள்வதும், வேலைக்காரர்களாக பாவிப்பதும் உண்டு. அவர்களை உதாசீனப்படுத்துவதால் அவர்கள் படும் பாட்டை சொல்லி முடியாது.

நமக்கு பல்வேறு வகைகளில் சுமைதாங்கிகளாக இருந்த நமது பெற்றோர், அவர்களது சுமையை இறக்கி வைக்க வேண்டிய நேரம் வரும் போது அவர்களை புறந்தள்ளுவது மிகவும் பாவச் செயலாகும்.

ஒரு பெற்றோர், தாங்கள் பெற்ற 5 பிள்ளைகளுக்கு உணவளித்து படிக்க வைத்து வாழ்வில் உன்னத நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் முதுமையில் அந்த 5 பிள்ளைகளும் சேர்ந்து ஒரு பெற்றோரை பராமரிக்க முடியாமல் போகிறது.
முதியவர்களின் மகத்துவத்தை உணர்த்த இங்கே ஒரு குட்டிக் கதை உங்களுக்காக…

ஒரு நாட்டில் மன்னன் ஒருவன், முதுமையை அடையும் நாட்டு மக்களை காட்டில் கொண்டு சென்று விட்டுவிடுவதை சட்டமாக வைத்திருந்தான்.

அவனது அரண்மனையில் ஒரு வயதான தந்தையும், அவரது மகனும் வேலை செய்தனர். தந்தைக்கு 80 வயதானதால் அவரை காட்டில் கொண்டு விட்டுவிடும்படி மகனுக்கு மன்னர் அறிவுறுத்தினார்.

காட்டுக்கு தந்தையை கூட்டிச் சென்ற மகன், தந்தையை பிரிய மனமில்லாமல், மன்னருக்குத் தெரியாமல் தந்தையை கூட்டி வந்து தனது வீட்டில் வைத்துக் கொண்டான்.

ஒரு நாள் அரண்மனையில் ஒரு போட்டி நடந்தது.

அதாவது, ஒவ்வொருவரிடமும் இரண்டு மரத் துண்டுகள் கொடுக்கப்பட்டு, அதில் எது அடிமரம், எது நுனி மரம் என்று கண்டறியவேண்டும் என்பதாகும்.

அந்த இளைஞன் தனது தந்தையிடம் கேட்டான். தண்ணீரில் போடும் மரத் துண்டு கீழே போனால் அது அடி மரம், மேலே மிதந்தால் நுனி மரம் என்று தந்தை கூறியதை வைத்து மகன் போட்டியில் வெற்றி பெற்றான்.

அடுத்த போட்டி ஒன்றில் சாம்பலில் கயிறு திரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. தந்தையின் சொல்படி, தாம்புக் கயிறு மீது மண்ணெண்ணெய் ஊற்றி அதனை எரித்து சாம்பலை அசைக்காமல் கொண்டு சென்று காண்பித்து பரிசு பெற்றான்.

இதனைப் பார்த்த மன்னருக்கு ஆச்சரியம், அந்த இளைஞனை அழைத்துக் கேட்டார். அப்போது பதிலளித்த மகன், சொன்னால் நீங்கள் கோபம் அடையக் கூடாது என்று உறுதி பெற்றுக் கொண்டு, தனது வீட்டில் தந்தையை வைத்திருப்பதைப் பற்றி கூறினான்.

எனது வயதான தந்தையின் அனுபவமும், அறிவும்தான் இந்த வெற்றிகளை எனக்குப் பெற்றுத் தந்தது. எனவே, நாட்டுக்கும் இதுபோன்ற முதியவர்களின் தேவை அவசியம் என்பதை இளைஞன் மன்னருக்கு உணர்த்தினான். மன்னரும் தான் எடுத்த முடிவை மாற்றிக் கொண்டான்.

இதுபோல, ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

ஆலமரத்தின் வேர்கள் தளரும் போது அதன் விழுதுகள் மரத்தை தாங்கிப் பிடிக்கின்றன. மரத்துக்கு இருக்கும் பண்பு கூட மனிதனுக்கு இல்லாமல் போனதே… இனி எந்த மனிதரையும் மரம் போல் நிற்காதே என்றும், மரத்துப் போன ஜென்மம் என்றோ கூறுவதற்கு முன்பு சிந்தியுங்கள்… மரம் போல நாம் வாழ்கிறோமா என்று…

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 5:01 pm

8 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 5:03 pm

8 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 10:04 pm

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று
------------------------
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்....
*
காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.
*
செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....
*
என்ன ஆயிற்று எனக்கு?
*
நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
*
ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
*
நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
*
காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது
*
என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.
*
அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.
*
அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......
*
என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 10:05 pm

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று
------------------------
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்....
*
காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.
*
செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....
*
என்ன ஆயிற்று எனக்கு?
*
நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
*
ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
*
நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
*
காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது
*
என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.
*
அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.
*
அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......
*
என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 10:12 pm

வாழ்க்கையை மிகவும் சீரியஸாக நினைத்துச் செயல் பட்ட இளைஞன் ஒருவன், தொடர்ந்து தோல்வியையே சந்தித்து மிகவும் நொந்து போன நிலையில் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவைச் சென்று சந்தித்தான்.
“பெருந்தகையே.... வாழ்க்கையில் தொடர்ந்து நான் தோல்வியையே சந்தித்து வருகிறேன். எவ்வளவு தன்னம்பிக்கையுடன் முயன்றும் வெற்றியை என்னால் காணமுடியவில்லை. மிகவும் மனமொடிந்த நிலையில் தங்களைச் சந்திக்க வந்துள்ளேன். தாங்கள் உலகப் புகழ் பெற்றிருக்கிறீர்கள். இந்தப் புகழுக்கும் வெற்றிக்கும் தாங்கள் எப்படி எவ்வளவு உழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.“ என்றான்.
“தெரிந்து என்ன செய்யப் போகிறாய்,“ என்று கேட்டார் பெர்னார்ட் ஷா.
“அதையே என் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வெற்றி பெறலாம் என நினைக்கிறேன்.“ என்றான் இளைஞன்.
“நல்ல முயற்சி. செய்துப்பார்.... நீ ஏன் தொடர்ந்து தோல்வியடைகிறாய்?“
“தெரியவில்லை.“
“தெரிந்து கொள்ளவாவது முயற்றி செய்தாயா?“
“ஆமாம். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. அடுத்தடுத்து முயற்சிப்பேன். தொடர்ந்து தோல்வியே வரும். அதனால் மனமொடிந்து போய்விடுகிறேன். அடுத்து வேறு விஷயங்களை நினைக்கிறேன். செயல்படுகிறேன். அவற்றிலும் தோல்வி தான் வந்தது.“ என்றான் கவலையாக.
“இளைஞனே.... நானும் உன்னைப் போல இளைஞனாக இருந்தபோது பத்துக் காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது காரியங்களில் தோல்வியைத் தான் தழுவினேன். ஆனால் அதற்காக அந்தத் தோல்வியை நான் அப்படியே விட்டு விடவில்லை. அந்த ஒன்பது காரியங்களிலும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அப்போது தான் ஒரு உண்மை பளிச்சிட்டது. தொண்ணூறு முறை முயன்றால் அந்த ஒன்பது முறை வெற்றி கிடைக்கும் என்ற உண்மை தான் அது.
அதாவது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன். வெற்றி மேல் வெற்றி கிடைத்தது.“ என்று விளக்கமளித்தார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
வெற்றியின் ரகசியத்தை அறிந்த இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 10:19 pm

முதல்தரம் இருக்க இரண்டாம் தரம் ஏன்?

---------------
உங்களுக்கு ஹென்றி ஃபோர்டுவைத் தெரியுமா...? அவர் தான் உலகப் புகழ் பெற்ற ஃபோர்டு காரைத் தயாரித்தவர்.
இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஒரு சமயம் இவர் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு பல இடங்களுக்குச் சென்று வர அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன் படுத்தினார்.
அந்த காலத்தில் ஃபோர்டு கார்களைப் போல ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் புகழ் பெற்றிருந்தன.
ஆனாலும் ஃபோர்டு கார்களைவிட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இரண்டாம் இடத்தில் தான் இருந்தன.
முதல் தரமான போர்டு கார்களைத் தயாரிக்கும் ஹென்றி ஃபோர்டு, இரண்டாம் இடத்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்கிறாரே என்று நினைத்துப் பெரிதும் வியந்தனர் பிரிட்டிஷ் மக்கள்.

ஒரு நாள் இரவு இங்கிலாந்து மன்னர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ஹென்றி ஃபோர்டு கலந்து கொண்டார்.
அப்போது மன்னர் அவரைப் பார்த்து, “மிஸ்டர் ஃபோர்டு... நீங்கள் உங்கள் தயாரிப்பான ஃபோர்டு காரைப் பயன்படுத்தாமல், ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்துகிறீர்களே. அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?“ என்று கேட்டார்.
அதற்கு ஹென்றி ஃபோர்டு, “நிச்சயமாக அரசே. எனது சொந்த உபயோகத்திற்காக ஒரு ஃபோர்டு கார் வேண்டும் என்று எனது மேனேஜரிடம் சொல்லி இருந்தேன். ஆனால் ஒவ்வொரு காரும் தயாராகி வெளியே வருவதற்கு முன்னாலேயே விற்பனையாகி விடுகிறது.
எனது மேனேஜர் மிகவும் நேர்மையானவர். அவர் முதலில் வாடிக்கையாளர்களுக்குத் தான் கார்களை விற்பனை செய்வார். அவர்களைத் திருப்திப்படுத்துவது தான் அவரது முதல் நோக்கம். அந்த சமயத்தில் நானே வந்து கேட்டால் கூட காரைத் தரமாட்டார். அதனால் என் சொந்த உபயோகத்திற்கு இன்னும் ஃபோர்டு கார் கிடைக்கவில்லை. அதனால் தான் நான் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்துகிறேன்“ என்றார்.


ஃபோர்டு கார் கம்பெனி மானேஜரின் கடமை உணர்ச்சியையும் அவருக்கு செவிமடுத்து ஒரு சாதாரண மனிதர் போலவே நடந்து கொள்ளும் உரிமையாளர் ஹென்றி ஃபோர்டையும் நினைத்துப் பெரிதும் வியந்தார் இங்கிலாந்து மன்னர்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 29, 2015 10:20 pm

அனைத்தும் உங்கள் கைவண்ணம்!!
----------------
பாப்லோ பிக்காசோ (Pablo Picasso/ 1881 – 1973) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற ஓவியர்.

ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
உலகப் போரில் ஹிட்லர் செய்த படுகொலைகளையும் அட்டூழியங்களையும் வெறியாட்டங்களையும் அப்படியே தத்ரூபமாக வரைந்து ஓர் ஓவியக் கண்காட்சியில் வைத்தார் பாப்லோ பிக்காசோ.
அந்த ஓவியங்கள் மக்களால் பெரிய அளவில் பேசப்பட்டன.
ஹிட்லருக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. உடனே ஓவியக் கண்காட்சிக்குச் சென்று பார்த்தார். அவரது கண்கள் சிவந்தன. குட்டி மீசை துடிக்க பற்களை நற...நறவென்று கடித்தார். பிக்காசோவை அழைத்து வரச்செய்தார்.
“யோவ் ஓவியரே... என்ன தைரியம் உனக்கு. இதெல்லாம் நீ செய்தது தானே?“ என்று ஓவியங்களைக் காட்டி கர்ஜனைக் குரலில் கேட்டார் ஹிட்லர்.
அதற்கு பிக்காசோ, “இல்லை பிரபு! இவையெல்லாம் நீங்கள் செய்தவைதாம். அனைத்தும் உங்கள் கைவண்ணம் தான்!“ என்றார்.
இதைக் கேட்டதும் ஹிட்லர் எதுவும் பதில் பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by ஸ்ரீராம் Fri Oct 30, 2015 4:23 pm

அனைத்து கட்டுரைகளும் சூப்பர் அண்ணா.

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 VScWx5Q2RUGpUEZ1TVEB+special-post

#spoct15-1
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 2:56 am

பட்டாசு தொழிலாளர்களுக்கும் தீபாவளி இனிக்குமா?
--------------

சிவகாசிதொழிலாளர்கள்பட்டாசு

தீபாவளி திருநாளுக்கு சில நாள்களே உள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கான நீண்ட நேரம் எரியும் வகையிலான சாட்டை, கம்பி மத்தாப்புகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், மழை பெய்தால் தான் மானாவாரி விவசாயம் என்கிற நிலை. அதனால், இப்பகுதியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்கள் முதன்மைத் தொழிலாக இருந்து வருகிறது. அதிலும், இந்தியாவின் பட்டாசு தொழில் நகரம் மற்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும் நகரமாக சிவகாசி விளங்கி வருகிறது. இத்தொழிலில் மறைமுகமாக 2 லட்சம் பேரும், நேரிடையாக 3 லட்சம் பேரும் குடும்பம், குடும்பமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியைச் சுற்றியுள்ள சாத்தூர், விருதுநகர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் மட்டும் சிறியதும், பெரியதுமாக 865 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தீபாவளி திருநாளுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் ஆலைகளில் பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, ஆலைகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் விரும்பும் வகையில் வானில் சென்று பல்வேறு வண்ணங்களில் வெடித்துச் சிதறும் பட்டாசு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், இளைஞர்கள் விரும்பும் வகையில் சட்டி, பூந்தொட்டி, ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான சர வெடிகள், புதிய வகைகளான ஸ்பீடு 30 சாட், பல வண்ணங்களில் 5 நிமிடங்கள் வரையில் வானில் வெடித்துச் சிதறும் மெட்ரோ டிராவலர், பாரடைஸ் 100, 160 மற்றும் 500 சாட் என பேன்சி ரக பட்டாசுகளும், சிறியவர்கள் விரும்பும் வகையிலான தீப்பெட்டி மத்தாப்பு, நீண்ட நேரம் எரியும் வகையில் கம்பி மற்றும் பென்சில் மத்தாப்புகள் தயாரித்து வெளி மாநிலங்ளுக்கும், உள்ளூர் பகுதிகளில் உள்ள அனுமதி பெற்ற பட்டாசுகள் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு, இப்பகுதியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளுடன் கலந்து விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால், ஆலைகளை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் அதைச் சார்ந்துள்ள தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதனால், இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவி்க்கின்றனர்.

இது குறித்து மேட்டமலையைச் சேர்ந்த தனியார் பட்டாசு ஆலை பெண் தொழிலாளி பிரின்ஸி(34) கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யவும் தெரியாது. இந்த வேலையை குடும்பத்தோடு செய்து, அதில் கிடைக்கும் வருவாய் மூலமே எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறோம். இங்கு தயார் செய்யப்படும் பட்டாசுகள் வெடிப்பதற்கு தரமானாது ஆகும். தற்போது, சிவகாசி பகுதியில் சீன பட்டாசுகளையும் கலந்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பட்டாசு தொழிலாளர்களான எங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்படும் நிலையிருக்கிறது. அதனால், அரசு உரிய நடவடிக்கை எடுத்து சீனப் பட்டாசுகளை விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 2:58 am

குண்டா இருந்தாலும் யோகா செய்யலாம்…
---------------------
யோகா

”யோகாசனம் செய்வதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்… குனிந்து நிமிர எல்லாம் என்னால் முடியாது… எங்கேயாவது பிடித்துக் கொண்டால் என்ன செய்வது?… இவ்வளவு குண்டாக இருந்து கொண்டு யோகாசனமாவது… செய்கிறதாவது… வேறு ஏதாவது பேசுங்களேன்” இப்படியெல்லாம் சொல்பவரா நீங்கள்? உங்கள் கருத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

“”வயதானவர்களால் யோகாசனம் செய்ய முடியும். குண்டானவர்களால் செய்ய முடியும். ஏன் கருவுற்ற பெண்களும் கூட யோகாசனம் செய்யலாம்” என்கிறார் டாக்டர் கே.கே.கனிமொழி. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரியும் அவரிடம் பேசினோம்:

“”யோகாசனம் என்றால் ஏதோ தனியாக முயற்சியெடுத்து செய்யக் கூடியது என்று நினைக்கிறார்கள். உண்மையில் நமது அன்றாடச் செயல்கள் பல, யோகாசனங்களாகவே இருக்கின்றன. நமது குழந்தைகளைப் பாருங்கள். வஜ்ராசன நிலையில் முழங்காலை மடக்கி உட்கார்வார்கள். ஹாலாசனம், மண்டூகாசனம் போலச் செய்து தலை கீழாகக் குட்டிக்கரணம் அடிப்பார்கள். இஸ்லாமியர்கள் தொழும்போது உட்காரும் நிலைதான் சசாங்காசனம்.

பலருக்கு என்ன பயம் என்றால், யோகாசனம் செய்தால் உடம்பு எங்கேயாவது பிடித்துக் கொள்ளுமோ? என்பதுதான்.
புத்தகங்களைப் படித்துவிட்டு யோகாசனம் செய்யக் கூடாது. அப்படிச் செய்து அவர்கள் பயந்தது மாதிரி பிடித்துக் கொண்டால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பார்கள். ஒரு யோகாசன ஆசிரியரிடம் யோகாசனம் கற்றுக் கொண்டால், அவர் உடல் பிடித்துக் கொண்டாலும் அதற்கு மாற்றான வேறோர் ஆசனத்தை உடனே சொல்லித் தருவார்.
யோகாசனம் என்பது வெறும் உடற் பயிற்சி மட்டுமல்ல. அது மனதையும் கட்டுப்படுத்தக் கூடியது. யோகாசனம் செய்வதால் உடல் தசைகள் வலுப்பெறுகின்றன. உடலில் உள்ள மூட்டுகளின் இறுக்கம் தளர்ந்து நெகிழ்கின்றன. நாளமில்லாச் சுரப்பிகள் ஹார்மோன்களைக் கூடுதலாகவோ, குறைவாகவோ சுரக்காமல், சரியான அளவு சுரக்கும். குறிப்பாக தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகள் சரியாக வேலை செய்யும்.

சாதாரணமாக ஒவ்வொருவரும் நிமிடத்துக்கு 16 – 18 தடவை மூச்சுவிடுவோம். யோகாசனம் செய்தால் அது 12 -14 தடவைகளாகக் குறைந்துவிடும். அதாவது, அதிக நேரம் காற்றை உள்ளிழுத்து, வெளிவிடுவோம். இதனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.

மனதை ஒருநிலைப்படுத்த யோகாசனம் உதவும். மூச்சு மனதையும், உடலையும் இணைக்கும். மனம் சமநிலையில் இருக்கும். கோபப்படும்போது அட்ரீனல் சுரப்பி அதிகமாகச் சுரக்கும். இதனால் உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும். வியர்க்கும். பதட்டமாக இருக்கும். யோகாசனம் செய்தால் அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு ஒழுங்குபடும்.

இவ்வளவு பயன் தரக்கூடிய யோகாசனத்தைக் கண்டு பலர் பயப்படுகிறார்கள். எடுத்தவுடனே உடலை நன்றாக வளைக்கக் கூடிய யோகாசனங்களைச் செய்யக் கூடாது. செய்யவும் முடியாது. தசைகளையும், மூட்டுகளையும் நெகிழச் செய்யக் கூடிய எளிய யோகாசனப் பயிற்சிகளில் ஆரம்பித்து, படிப்படியாக வேறு கடினமான யோகாசனங்களைச் செய்ய வேண்டும்.
சிலர் யோகாசனம் செய்வதற்கெல்லாம் நேரமில்லை என்பார்கள். யோகாசனமோ, வேறு எந்த உடற்பயிற்சியையோ செய்வதற்குச் சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் சொல்கிற சாக்குப் போக்கு இது. நேரமில்லை என்று சொல்பவர்கள், ஒரு மூன்று நிமிடங்கள் ஒதுக்கி தோப்புக்கரணம் போட்டாலே போதும்! யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.

நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.

தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.

தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் - சக்தி உருவாகும்.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

மூன்றுநிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில் செய்ய முடியாது என்பதே உண்மை.

எங்களுடைய கல்லூரியில் காலை 8 மணி முதல் 9 மணி வரை இங்கு பயிலும் மாணவர்கள் பல்வேறு யோகாசனப் பயிற்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் அவர்களே தோப்புக்கரணம் போடும்போது வியர்த்துப் போகிறார்கள் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்.

காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை மருத்துவமனைக்கு ஏதேனும் நோய் காரணமாக வருகிறவர்களுக்கு யோகாசனம் சொல்லித் தருகிறோம். சர்க்கரை நோய், இதய நோய்கள், ஹார்மோன் பிரச்னைகள், தூக்கமின்மை எனப் பலவிதமான நோய்களுடன் வருகிறவர்களுக்கு, அவரவர் உடல் நிலை, வயது, நோய் ஆகியவற்றுக்கேற்ப பொருத்தமான யோகாசனங்களைச் சொல்லித் தருகிறோம்.

இது தவிர, காலை 11.30 முதல் 1.00 வரை இயற்கை மருத்துவ விழிப்புணர்வு வகுப்புகளையும் எடுக்கிறோம்” என்கிறார் டாக்டர் கே.கே.கனிமொழி.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 02, 2015 2:59 am

உறவுகள் உடைய இதெல்லாமும் காரணம்
-----------------
உறவுகள்விவாகரத்து

கணவன் – மனைவி உறவு மட்டும் இல்லை, நட்பு, காதல் என பல்வேறு உறவுகள் உடைய நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில வற்றை இங்கே பார்க்கலாம்.

நமது பழக்க வழக்கங்கள் சில நேரங்களில் உறவுகள் உடைய வழி செய்து விடுகின்றன.

ஒன்று…
அதாவது, எந்த வேலையும் செய்யாமல் இருத்தல், சோம்பேறித்தனம், எப்போதும் கணினி முன் அமர்ந்திருப்பது, பெண்களுடன் அல்லது ஆண்களுடன் பேச்சு போன்ற சில விஷயங்கள் ஆரம்பத்தில் பெரிதாக தெரிய வில்லை என்றாலும் கூட, நாளடைவில் இது பாதிப்பை ஏற்படுத்தி நமது துணை அல்லது இணை அல்லது ஏதேனும் ஒரு நெருங்கிய உறவு நம்மை விட்டு விலகக் காரணமாகிவிடுகின்றன.

இரண்டு…
இதில் சமூக வலை தளங்களும், செல்போனும் இப்போது முக்கிய இடத்தை பிடித்து விடுகின்றன. எங்கோ இருக்கும் ஒரு நபரிடம் பேச அல்லது நமது விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கும் நாம், நம் அருகே நமக்காக உட்கார்ந்திருக்கும் நபரைப் பற்றி கவலைப்படாமல், அவருடன் நேரத்தை செலவிடாமல் இருந்து விடுகிறோம். அதுதான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

மூன்று
உடல் தோற்றம்… இதில் உடல் தோற்றம் என்று குறிப்பிட்டிருப்பது எந்த ஒரு உடல் தோற்றத்தையும் குறிப்பாக சொல்ல முடியாது. அதாவது, குண்டாக இருப்பதால் பிரிந்தோம், மிக ஒல்லியாக இருப்பதால் விட்டுப் பிரிந்து விட்டார் என ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம். சிலர் எப்போதும் அலங்காரம் செய்து கொண்டே இருப்பார்கள் என்று கூட அவரது துணை அவரை பிரிந்திருக்கலாம். எனவே, நமது உடலை அழகாகப் பராமரிக்க வேண்டியதும், அளவாக வைத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.

you and meநான்காவது..
முன்கோபம், பொறாமை, சந்தேகம், இயலாமை போன்ற குணங்கள் பிரிவுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. சந்தேகமோ, பொறாமையோ உறவுகளுக்குள் வந்து விட்டால், அங்கு சந்தோஷமோ மகிழ்ச்சியோ நிலைத்திருக்க முடியாது. எனவே, இவை அண்ட விடாமல் பார்த்துக் கொண்டால் உறவுகள் நீடிக்கும்.

5வது என்னவென்றால்…
அடிக்கடி சண்டை, கருத்து வேறுபாடுகள், பேச்சை மதிக்காமல் இருப்பது, ஏதேனும் ஒரு கசப்பான அனுபவத்தை அடிக்கடி கிளறி மனதில் காயத்தை ஏற்படுத்துவது, மன அழுத்தம், நெருக்கடி, தகவல் தெரிவிப்பதில் சிக்கல், மற்றவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தவறாக நடத்தல் போன்ற சில காரணங்களும் உறவுகளை கெடுத்துவிடும்.

எனவே, புதிய உறவுகளை வளர்ப்பதை விட, இருக்கும் உறவுகளை பேணுவதே மிகச் சிறந்த வழி என்பதை உணருங்கள்.


+

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 2 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum