தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிசயமான அருமையான கட்டுரைகள்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 9:37 am

First topic message reminder :

சொந்த, பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Sannyasi-300x186

இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

“”பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.

புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.

இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.

புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.

ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.

இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது” என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:15 pm

கல்யாண மண்டபத்தின் பக்கத்தில் வீடு : சாதக பாதகங்கள்!
--------------------

நகைச்சுவை கட்டுரை


* ”ஓ இன்னிக்கி முஹூர்த்த நாள் போல்ருக்கே” என்று பஞ்சாங்கம் டாட் காம் பார்க்காமலேயே தெரிஞ்சுக்கலாம்.
* ஒரு டைல்ஸையோ செங்கலையோ அல்லது வீட்டில் வீணாய்க் கிடக்கும் ஒரு tablet/I pad ஐயோ கிஃப்டு ராப் பண்ணிண்டு லேஸா ஐலனர் மட்டும் போட்டுண்டு சுமாரான சில்க் காட்டன் புடவையை உடுத்திண்டு கார்த்தால சிரிச்ச முகத்துடன் போனா, சுடச்சுட டிஃபன் காஃபி எல்லாம் மொக்கிட்டு வந்துடலாம். யார் கல்யாணமா இருந்தா நமக்கென்ன? ரிஸப்ஷன் கூட்டத்தில் ஒருத்தரும் கவனிக்க மாட்டா என்ற தைரியம் இருந்தால் ராத்திரி டின்னர் பண்ற வேலை மிச்சம். குலாப் ஜாமூனுடன் பதர்பேணியும் கிடைச்ச த்ருப்தி இருக்கும்.

*அர்த்த ராத்திரி 11.20க்கு அபஸ்வரமாக காற்றில் சம்பந்தமேயில்லாமல் “நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே …….சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே” என்று பாட்டு கேட்கலாம்! இப்படி கேட்கறதால நீங்க சூப்பர் சிங்கர் ஜட்ஜாக ப்ரமோட் பண்ணப்படும் அளவுக்கு சங்கீதத்தில் தேர்ச்சி அடைய வாய்ப்புக்கள் நிறைய இருக்கு

* காசி யாத்திரைக்கும் மாப்பிள்ளை மண்டபத்தின் வெளியே வரும்போது இப்போ கரண்ட் ட்ரெண்ட் என்ன? என்ன மாதிரி புடவை ஃபேஷனில் இருக்கு? பிளவுஸ் எப்படி? சில்க் காட்டனா கல்யாணி காட்டனா காஞ்சிவரமா போச்சம்பள்ளியா? நகை நட்டு எப்படி? பழைய புடவையையே பாலீஷ் போட்டுருக்காளா இல்லே ரோல் ப்ரஸ் பண்ணியிருக்காளா போன்ற துல்லியமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு நம்மை நாமே தட்டிக்கொடுத்துக் கொள்ளலாம்.

* சாயந்திரம் ஆனா பேண்டு வாத்திய கோஷ்டிக்காரா ரொம்ப உயிரை வாங்குவா. பேம் பேம்ன்னு அஞ்சு மீட்டர் அகலமான பிரஷ்ஷால் கோடு போடுவது மாதிரியான ஒலி அலைகளை எழுப்பி, ட்ரம்பெட்டின் (இ)ஓசையில் சத்தியமா எந்தப்பாட்டுன்னு கண்டே பிடிக்க முடியாது.
*அதுல பாருங்கோ மொபைல் பேண்டுன்னா தப்பிச்சேள். அக்கம் பக்கம் பதினெட்டுப் பட்டியும் டார்ச்சர் பண்ணறதுக்கு கிளம்பிப் போயிடுவா. ஸ்டாட்டிக் பேண்டுன்னா நம்ம தலைமாட்டுல வாசிச்சே கொடுமைப் படுத்தி பிராணனை வாங்கிடுவா.

*பெரிய இடத்துக் கல்யாணம்ன்னா ஒன் லாக் வாலா வெடியும் விடுவா.. ஒன் க்ரோர்வாலா வெடியும் விடுவா.. ஒரு பயல் கேள்வி கேட்க முடியாது! ”என்ன தொல்லையிது?” ன்னு தலையில அடிச்சுக்கத்தான் முடியும்.
* சில சமயம் பப்ளிக் ந்யூஸென்ஸ் ஓவராக இருந்தால் விஜய்யோ அஜித்தோ சூர்யாவோ நமிதாவோ அஞ்சலியோ ரிஸப்ஷனில் வந்து ரெண்டு நிமிடம் உட்காருவார்கள் என்பதை அறிக! அப்போது பாடிக்கொண்டிருக்கும் லைட் மீஜிக் சிங்கரின் முகம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி போகும் என்பதையும் அறிக.(பின்னே? பூராப்பயலும் ஈரோ ஈரோயினியைத்தானே கவனிப்பாங்க?)

* சில மிகவும் ஹை ப்ரொஃபைல் கல்யாணங்களில் பேண்டு வாத்தியம் , நாதஸ்வரக் கச்சேரி, குத்துடான்ஸு மீஜிக் ட்ரூப்பு மூணு கோஷ்டியையும் கூட்டி வைச்சுண்டு வாசிக்கக் சொல்லுவாளா, வாசிக்கறவாளும் கன்பீஸ் ஆகி, கேக்கறவாளும் கன்பீஸ் ஆகி மண்டையை பிய்ச்சுண்டு ஆணியே புடுங்க வாண்டாம்ன்னு கல்யாணத்துலேந்து துண்டைக்காணோம் துணியைக்காணொம்ன்னு ஓட்டம் பிடிப்பா.

கட்டுரை: அனன்யா மகாதேவன்


செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:16 pm

காதல் என்றால் என்ன?: 6 வயதுச் சிறுமியின் விளக்கம்
---------------------


இணையதளத்தில் 6 வயதுக் குழந்தையின் கையெழுத்துடன் கூடிய கடிதமாக பிரபலமாகி வருகிறது செய்தி.

காதல் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு எத்தனையோ பேர் தங்களின் பதில்களை ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள். சிலர் தத்துவ ரீதியாக விளக்கங்களையும் அளிக்கிறார்கள். ஆனால், 6 வயதுக் குழந்தை கூறும் தத்துவம் என்ற வகையில், குழந்தைத்தனம் மாறாத கையெழுத்துடன் ஒரு விளக்கம் இணையதளத்தில் உலா வருகிறது.

அந்தக் கடிதத்தை வெளியிட்டு, உங்கள் குழந்தைகளின் சுட்டித்தன எழுத்தை எங்களுக்கு போஸ்ட் செய்யுங்கள் என்ற ரீதியில் விளம்பரங்களும் தலைதூக்கியுள்ளன.
ஒரு இணையதளத்தில் வெளியான தகவல் இது…

இன்றைய நாளின் சுட்டித்தனமான ஆசிரியர், மனித உறவுகள் குறித்து விளக்குகிறார்:
தலைப்பு: “காதல் என்றால் என்ன?”
ஆசிரியர்: எம்மா.கே
வயது: 6
சிறிய பகிர்வு: தேனொழுகப் பேசுவதில்லை ஆனால் கவரும் வகையில்!
நிறுத்தல்குறி குறித்து: உங்களுடைய (your), என்பதற்கும் நீங்கள் (you’ re) என்பதற்குமான வித்தியாசத்தை நிறுத்தல் குறி மூலம் இணையத்தில் வழங்கி புகழடைந்திருப்பது
அடுத்த நடவடிக்கை: இளைய காதல் தத்துவாதிகளின் குழுவைக் கூட்டுவது!
சொல்லும் தத்துவம்: காதல் என்றால் என்ன?
நீங்கள் உங்களுடைய பற்களில் சிலவற்றை இழந்தாலும் கூட, நீங்கள் சிரிப்பதற்கு தயங்காமல் இருப்பது…காரணம், உங்களில் சிலவற்றை இழந்த அப்போதும் கூட உங்கள் நட்பு உங்களை நேசிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதனால் சிரிக்க பயப்படமாட்டீர்கள்”

- இப்படி, காகிதம் ஒன்றில் கையால் எழுதப்பட்டுள்ளது. அந்தக் காகிதத்தில் ‘காதல் என்றால் என்ன?’ என்று ஆங்கிலத்தில் கேள்வியும், அதன் கீழே எம்மா.கே, வயது 6 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தத்துவ முத்தின் கீழே கடைசியில், இதயக் குறியீடு வரையப் பட்டுள்ளது. கடந்த இரு வருடங்களாக இணையத்தில் பலராலும் விரும்பி படிக்கப்பட்டு வருகிறது இந்தப் பக்கம்..



செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:18 pm

உலகின் முதல் உழவன்
--------------------

உழவர் திருநாள் கொண்டாடும் நாம், உலகின் முதல் உழவனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா?

நம் புராண இதிகாசங்களில் பூமிக்கு ப்ருத்வி என்னும் பெயர் கூறப்படும். இந்தப் பெயர் வந்ததற்கும் முதல் உழவனுக்கும் தொடர்பு உண்டு.

ஸ்ரீமத் பாகவதத்தில் வேனன் என்ற அரசனைப் பற்றி பேசப்படுகிறது. வேனன் மிகக் கொடூரமானவனாக இருந்தான். அவனது கொடுங்கோன்மை தாளாத மக்கள், ஒன்று திரண்டு அவனைக் கொன்றனர். அந்நேரம் இறைவன் அசரீரி வாக்காகக் கூறியதை வைத்து, வேனனின் தொடையைக் கடைந்தனர். அப்போது விஷ்ணுவின் அம்சமாக ப்ருது தோன்றினார். மக்கள் மகிழ்ச்சியுடன் ப்ருதுவை அரியணையில் அமர்த்தினர். வறண்ட பூமி, நீர்ப் பற்றாக்குறை, பஞ்சம் ஆகியவற்றால் மக்கள் மிகவும் அவதிப்பட் ட மக்கள், தங்கள் குறைகளைத் தீர்க்குமாறு ப்ருதுவிடம் வேண்டினர்.

புராண, வேத, இதிகாசங்களில் சொல்லப்பட்டது என்னவென்றால், அப்போது, நிலம் உழப்படாமலேயே பலவித உணவுப் பயிர்களை உற்பத்தி செய்தது. ஆனால், அதுவும் வேனனின் ஆட்சியில் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களின் பசியைப் போக்க, ப்ருது மன்னர், பூமியை வேண்டினார். “வில்லின் நுனியால் என்னை உழுது சமன் படுத்து; பாறைகளை உடைத்து, நீர்ப் பாய்ச்சலுக்குத் தடையாக இருக்கும் குன்றுகளை வில்லின் உதவியால் நிமிர்த்து; ஸரஸ்வதி நதியின் நீர் பெருகிப் பாயும்” என்று பூமித்தாய் அறிவுரை நல்கினார். ப்ருது நிலத்தை உழுதான். பயிர்கள் செழித்து வளர்ந்தன. முதலில் விளைந்த பயிர்களை இந்திரனுக்கு அர்ப்பணம் செய்து வேதமந்திரங்களால் தேவதைகளை அழைத்து அவர்களுக்கு உண்டான ஹவிஸ்ஸை அளித்தான். உடனே, மழை பொழிய ஆரம்பித்தது. எனவே, உழவுத் தொழிலின் தந்தை, முதல் உழவன் “ப்ருது’வே என நம் நாட்டின் பாரம்பரிய நூலில் இருந்து அறிகிறோம். இதனாலேயே பூமிக்கு ப்ருத்வி என்ற பெயர் வழங்கப்பட்டது.

ப்ருதுவின் தோற்றம் ஏற்படும்வரை, உழவுத் தொழிலை அறியாத அக்கால மக்கள், காடுகளை எரித்து சாம்பலை மணற் பரப்பில் தூவி விடுவார்கள். பருவம் வந்ததும் வேண்டிய விதைகளைத் தெளிப்பார்கள். பின் சாகுபடி செய்து பழம், கிழங்குகளை உண்டு வந்ததாக வேதங்கள் கூறுகின்றன. ஆனால் அதிக நீர்த் தேக்கத்தாலும், நீர்ப் பற்றாக்குறையாலும் பயிர்கள் நன்கு விளையவில்லை. பெரும் பாறைகளும், கரடுமுரடான நிலமும், குன்றுகளும் மக்களுக்கு உணவு கிடைப்பதைத் தடை செய்து கொண்டிருந்தன. ப்ருதுதான் தன் முயற்சியினாலும், பகவானின் அருளாலும் வில்லையே கலப்பையாகக் கொண்டு உழுது நிலத்தை சமன் செய்து பயிர் செழித்து வளர வழிகள் கண்டு பிடித்தான்.



செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:20 pm

எளிமையான வாழ்க்கைக்கு குழந்தைகளைத் தயார்படுத்துங்கள்
-----------------

வளர்ந்து வரும் நுகர்வோர் கலாசாரத்திலிருந்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்ற எளிமையான வாழ்க்கைக்கு குழந்தைகளைத் தயார்படுத்தும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டும் என பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

இவர் குழந்தைகளை வளர்க்கும் விதம் குறித்து பெற்றோருக்கு ஒரு நல்ல அறிவுரையைக் கூறியுள்ளார்.
அதனை தேடி எடுத்து தற்போது உங்களுக்காக பதிவு செய்துள்ளோம்…

அவர் கூறியவற்றில், உலகம் முழுவதும் நுகர்வோர் கலாசாரம் அதிகரித்து வருகிறது. தேவைக்கு அதிகமாக வாங்கும் எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு சைக்கிள்கள் வைத்திருந்தால் அவர் பணக்காரர். ஒரு கிராமத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார். நான்கு வேட்டி, சட்டைகள் வைத்திருந்தால் அவர் வசதியானவர் என அர்த்தம். விவசாயத்தைத் தவிர வேறு வேலைவாய்ப்புகள் அப்போது இல்லை. ஆனால், இன்றைய நிலை என்ன? ஓட்டுநர் வேலைக்கு மட்டும் 2 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். இதற்குக் காரணம் தொழில் புரட்சிதான்.

கடன் அட்டை வேண்டாம்: முன்பு மூன்று அல்லது நான்குவகை சோப்புகள் இருந்த காலம் போய் இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட சோப்பு வகைகள் வந்துவிட்டன. நட்சத்திர விடுதிகளில் மட்டுமே கிடைத்து வந்த வட இந்திய உணவு வகைகள் இப்போது வீதிதோறும் கிடைக்கின்றன.

தேவையை அதிகப்படுத்துவதும், அதனைக் குழந்தைகள் மூலம் புகுத்துவதும் விளம்பர உத்தியாக பன்னாட்டு நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன. பணம் இல்லாவிட்டாலும் வாங்கலாம் என்பதற்கு கடன் அட்டைகள் வந்துவிட்டன. பணம் வைத்திருக்கும் ஒருவன் ஆயிரம் ரூபாய்க்கு பொருள்களை வாங்குகிறான் என்றால் அவனே கடன் அட்டை வைத்திருந்தால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு பொருள்களை வாங்கிக் குவிக்கும் நுகர்வு கலாசாரம் அதிகரித்து வருகிறது.
கையில் காசில்லாத நாம் எதற்கு கடன்வாங்கி பொருள்களை வாங்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியில் உச்சத்தில் உள்ள சீனா, ஜப்பான் நாடுகளில் கடன் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பணம் என்பது அச்சடிக்கப்பட்ட சுதந்திரம் என்றார் மேல்நாட்டு அறிஞர். ஆனால் அது உண்மையல்ல. பணம் வைத்திருப்பவர்கள் சுதந்திரத்தை இழந்து வருகிறார்கள் என்பதே உண்மை. பணக்காரர்கள் வங்கிக் கணக்குப் புத்தகங்களில் மட்டுமே பணத்தைப் பார்க்கிறார்கள்.

எளிமையான வாழ்க்கைக்கு தயார்படுத்துங்கள்:
நுகர்வுக் கலாசாரம் வேகமாக வளர்வதற்கு காரணமே பேராசைதான். பொருள்களை வாங்கிக் குவிப்பது என்பதே ஒருவிதமான போதைதான். எனவே, குழந்தைகளை எதற்கும் ஆசைப்படாமல் வளர்க்க வேண்டும். எளிமையான வாழ்க்கை முறைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆட்படாமல் பாதுகாக்க வேண்டும்.

சிறுதானியங்களை உட்கொள்ள பழக்கப்படுத்த வேண்டும். பயனுள்ள வாழ்க்கை முறைகளை கற்றுத் தரவேண்டும். அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பங்கம் விளைவிக்காத பழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை பெற்றோர்கள் ஒரு கடமையாகச் செய்ய வேண்டும். பிறகு அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது.

இதுவே நுகர்வோர் கலாசாரத்திலிருந்து நம் சந்ததிகளைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும் என்கிறார் இறையன்பு.

இதனை பின்பற்றி நாமும் குழந்தைகளை எளிமையாக, அதே சமயம் மன வலிமையோடு, நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வைப்போம். வாழ்ந்து காட்டுவோம்.



வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:21 pm

ரத்த சோகைக்கு விடை கொடுப்போம்.. உற்சாகமாக வாழ்வோம்
--------------

சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதில் உடல் ரீதியான பிரச்னையும் சேர்ந்து கொள்கிறது. குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களில் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதே இல்லை. இதனால் விரைவில் உடல் நலம் குன்றி நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் ரத்த சோகைக்கு தான் முதலிடம். ரத்தசோகைக்கு முக்கிய காரணம் சத்துக்குறைவுதான். குறிப்பாக இரும்புச் சத்து குறைவால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்தசோகை ஏற்படுகிறது. இளம் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரையும் இந்நோய் தாக்குகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை சுமார் 68 சதவீதம் பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை 58.3 சதவீதத்தின் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களைவிட இது குறைவாயினும், பெரும்பாலான மாநிலங்களில் 50 சதவீதத்தைவிட அதிக அளவு பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கதாகும்.
உடலில் உள்ள சிகப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதைத் தான், ஹீமோகுளோ குறைந்திருப்பதாகக் கூறுகிறார்கள். சிகப்பு அணுக்கள்தான் நுரையீரலிருந்து ஆக்ஸிஜனை அனைத்து திசுக்களுக்கும் எடுத்துச் செல்கிறது. திசுக்களில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை மீண்டும் நுரையீரலுக்கு கொண்டு செல்கிறது.

பாதிப்பு என்ன?: ரத்த சோகையினால் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் செல்லுவது குறைகிறது. இதனால் உடலில் சோர்வு உள்ளிட்டவை ஏற்படும். கர்ப்பிணிகள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் குறைப் பிரசவம் அல்லது எடை குறைந்த குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

இதுவரை சுமார் 400 வகையான ரத்த சோகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 70 சதவீத ரத்த சோகைக்கு காரணம் இரும்புச் சத்துக் குறைவுதான். அதுதவிர வைட்டமின் “பி’ குறைவு காரணமாகவும் ரத்த சோகை ஏற்படும். இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, குடல் புழுக்கள், மலேரியா, சத்துக்குறைவு, இரும்புச் சத்தை கிரகிக்கும் தன்மை குறைவு ஆகிய காரணங்களால் ரத்த சோகை ஏற்படுகிறது.

அறிகுறி: அடிக்கடி சோர்வு, மூச்சுத் திணறல், குறைந்த ரத்த அழுத்தம், நகம் வெளுத்துவிடும், தோல் வெளிர் நிறம் அடைதல், எடை குறைதல், முறையற்ற மாதவிடாய் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாகும்.

எவற்றை உண்ண வேண்டும்? கீரைகள், முருங்கைக்காய், பீன்ஸ், இறைச்சி, கொய்யா, ஆரஞ்சு, தக்காளி, அவல், வெல்லம், பேரிச்சம் பழம், அருகம்புல் சாறு.

எவற்றைத் தவிர்க்க வேண்டும்? உடல் இரும்புச் சத்தை கிரகிப்பதைத் தடுக்கும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். (எ.கா) காபி,டீ, புகைப்பிடிப்பது.

எளிய உணவு முறைகளைக் கடைப்பிடித்தால் ரத்த சோகையினால் சோர்வடையாமல், உற்சாகமாக நம் அன்றாடம் பணிகளை அதே சுறுசுறுப்புடன் செய்ய முடியும். பெண்களே நீங்கள்தான் வீட்டின் மட்டுமல்ல நாட்டின் கண்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்!




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:24 pm

வேத கால பாரதப் பெண்கள்
------------

உலகின் மற்ற நாடுகளிளெல்லாம் பெண்களை போகப் பொருட்களாக, மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு உதவுபவர்களாக, அழகிய அடிமைகளாகக் கருதி வந்த காலகட்டத்தில் நம்நாட்டில் முன்னோர், பெண்களுக்கு ஓர் உயர்ந்த இடத்தை அளித்திருந்தனர். பிறநாட்டினர் நமது நாட்டின் மீது படையெடுத்து வந்து ஆளத் தொடங்கிய பிறகே, இந்த நிலை மாறியிருக்கக்கூடும்.

மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாகத் தேவைப்படும் செல்வம், சக்தி, கல்வி ஆகிய மூன்றையும் பெண் தெய்வங்களான லட்சுமி, பார்வதி, சரஸ்வதி ஆகியோர் அளிப்பதாகவே நமது முன்னோர் கருதினர்.
வேதங்களின் பல மந்திரங்களையும், சூக்தங்களையும் பெண்களே இயற்றியுள்ளனர்.
அ) “ரிக் வேத’த்தின் பதினேழு சாகைகளை இயற்றியவர்கள்:

“ரோமஸா”, “லோமுத்ரா”, “அபத்தா”, “கத்ரு”, “விஷ்வவரா”, “கோஷா”, “ஜுஹ§”, “ஷ்ரத்த-காமயனி”, “ஊர்வசி”, “ஷாரங்கா”, “யாமி”, “இந்திராணி”, “சாவித்திரி” மற்றும் “தேவயானி.”
ஆ) “சாமவேத’த்தின் நான்கு சாகைகளை இயற்றியவர்கள்:-
“நோதா” (அல்லது “பூர்வார்ச்சிகா”) “அக்ரிஷ்டபாஷா”, “ஷிகடனிவவரி” (அல்லது “உத்தரார்ச்சிகா”) மற்றும் “கண்பயனா.”

அந்த இருபத்தோரு பெண்களும், ஆண்களுக்கு இணையான அறிவாற்றலும், வேத வேதாங்கங்களில் பரிச்சயமும் கொண்டவர்களாக இல்லாமல், அவ்வாறு வேத சாகைகளை இயற்றியிருக்க முடியாது. இதிலிருந்து அவர்கள் மாணவர்களைப் போலவே, குருகுலத்தில் முறையாகப் பயின்றிருக்கிறார்களென்பது தெளிவாகிறது. “கல்வி பயின்ற பெண் ஒருத்தியை அவளுக்கிணையாகவோ, அதற்கும் மேலாகவோ, அறிவாற்றல் கொண்ட ஆணுக்கே மணமுடிக்க வேண்டுமென…” யாக்ஞவல்கியரின் “ப்ருகதாரண்யக உபநிஷத்” குறிப்பிடுகிறது. அத்துடன் அத்தகைய அறிவாற்றல் கொண்ட பெண்ணைக் குழந்தையாகப் பெற, கிருஹஸ்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நியதிகளையும், சடங்குகளையும் கூட அந்த “உபநிஷத்’ விவரிக்கிறது.
பிரம்மச்சாரிகளைப் போலவே, இளம்பெண்களும் “முப்புரிநூல்’ அணிந்தே வேதங்களையும் “சாவித்திரி – வசனங்களை’யும் கற்கத் தொடங்கியிருக்கின்றனர். “ஆண்களைப் போலவே பெண்களும், வேதங்களைக் கற்றார்கள்…” என்று “பாணினி’ குறிப்பிட்டுள்ளார்.

கிரஹஸ்தர்கள் தங்களது இல்லங்களில் யக்ஞங்களை மேற்கொண்ட போது, அவர்கள் உச்சரித்த “ஷ்ரௌத’ சூத்திரங்களையும் “க்ரிஃய சூத்திரங்களையும், மிகத் தெளிவான உச்சரிப்புடன் அவர்களது இல்லத்தரசிகளும் அருகில் நின்றவாறே கூறியிருக்கிறார்கள். மேலும் “பூர்வ மீமாம்சை” யிலும் ஆண்களுக்கு இணையாக ஹிந்துமத சடங்குகளை நடத்தும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
வேதகால சமுதாயம் அனேகமாக “ஒரே மனைவி – ஒரே கணவன்’ என்ற நியதியைத்தான் பெரும்பாலும் கடைப்பிடித்து வந்துள்ளது. அச்சமுதாயத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கு இணையான இடம் அளிக்கப்பட்டது.
தனிப்பட்ட சில பெண்கள் தாங்களாகவே முயன்று கல்வியறிவைத் தேடிக் கொண்டதற்கான ஆதாரங்களும் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
“பாத்யாஸ்வஸ்தி” என்ற பெண் வடதிசை நோக்கிச் சென்று கல்வி கற்றுப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
புகழ்பெற்ற தத்துவஞானியும், சாத்வியுமான “கர்கி வாசகனவி”, ஜனக மன்னர் ஏற்பாடு செய்த உலகின் முதல் தத்துவ மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். அம்மாநாட்டில் “கர்கி’ கலந்து கொண்டு “யாக்ஞவல்கியருடன்’ விவாதம் செய்தவர்.

பதஞ்சலி முனிவர் தமது “மஹாபாஷ்யம்’ என்ற நூலில் ஈட்டி எறிவதில் திறமை வாய்ந்த “சக்திகி”கள் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
கவுடில்யரின் “அர்த்தசாஸ்திரம்’ என்ற நூலில் “மவுரியப்’ படைகளில், வில்லம்புகளுடன் போரிடும் திறமை வாய்ந்த பெண்களும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

கிரேக்க நாட்டுத் தூதுவரான “மகஸ்தனிஸ்” என்பவர், “சந்திரகுப்த மவுரியரை”ப் பாதுகாக்க, பெண் மெய்க்காவலர்களும் இருந்ததாக, தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்படியாக, வெறும் ஏட்டுக்கல்வி கற்பவர்களாக மட்டுமில்லாமல், வேதகாலப் பெண்கள் வீராங்கணைகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இதிகாச நாயகிகளான சீதாவும் திரௌபதியும் கூட, கல்வி கற்றவர்களாகவும், சக்தி படைத்தவர்களாகவும், மனத்திண்மை கொண்டவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும் இதிகாச கால கட்டத்திலேயே பெண்களின் கவுரவம் சிதைக்கப்பட்ட வரலாறும் தொடங்கிவிட்டது. இராவணன் கொல்லப்பட்டவுடன், சீதை தீக்குளித்து தனது தூய்மையை நிலைநாட்ட வேண்டியிருந்தது.
அப்படியும் பின்னர், அவள் காட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாள் என்று, “உத்தர ராமாயணம்’ விவரிக்கிறது. ஐந்து கணவர்களுக்கு மனைவியாக இருந்த திரௌபதியை ஈடாக வைத்து பகடையாடப்பட்டதால், அவள் தனது ஆடையை துச்சாதனன் பிடித்திழுக்க, அவையோர் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டாள்.
இராமாயணமும் மகாபாரதமும் (வேதகாலத்திற்குப் பின்னர் நடந்ததால்), அக்காலங்களில் பல ஆண்கள் ஏராளமான பெண்களை மணந்ததை விவரிக்கின்றன. இதனால்தான் பெண்களின் கவுரவம் குறையத் தொடங்கியது. ஒழுக்கத்திற்கான அளவுகோல்கள் பெண்களைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையானவையாக மாறின.
ஏமாற்றப்பட்டதால்தான் அகலிகை இந்திரனிடம் தன்னை இழந்தாள் என்ற உண்மையை உணர்ந்தும் கூட, அவளது கணவரான கவுதம முனிவர் அவளைக் கல்லாகும்படி சபித்தார்.

இப்படியாக, மகாபாரத காலம் தொடங்கி சிறுமைப்படுத்தப்படுவது பொறுக்க முடியாத அளவிற்குப் போனதால்தான் பல ஹிந்துப் பெண்கள் பௌத்த மதத்திலோ, சமண சமயத்திலோ தங்களை இணைத்துக் கொண்டு “பிக்குணி’ களாகவும் மாறத் தலைப்பட்டனர். அதனால்தான் புத்தரின் முக்கிய சீடர்களில் பதிமூன்று பேர் பெண்களாக இருந்தனர். அதேபோல வேறு பதிமூன்று பெண்கள் மகாவீரரின் சிஷ்யைகளாக, துறவிகளாக மாறினர்.

அகலிகை, திரௌபதி, தாரை, குந்தி, மந்தோதரி ஆகியோர் “பஞ்ச பத்னிகள்’ என்று போற்றப்படுகிறார்கள். இவர்களில் மந்தோதரியைத் தவிர, மற்ற நால்வரும் ஒருவருக்கு மேலான ஆண்களுடன் (அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ) வாழவேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள். அகலிகைக்கு கவுதமர், இந்திரன், திரௌபதிக்கு பஞ்ச பாண்டவர்கள், தாரைக்கு வாலி – சுக்ரீவன், குந்திக்கு சூரியன் யமன் இந்திரன், வாயு, அஸ்வினி தேவர்கள் மற்றும் “பாண்டு’!
ஆயினும் வேதகாலப் பெண்களுக்கு, தங்கள் கணவர்களைத் தேடிக் கொள்ளக் கிடைத்த உரிமை, பின்னர் வந்த பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை!
அடுத்து வந்த காலகட்டங்களில், பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கும் சமுதாயத்திற்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாகவே இருந்தனர்; இருக்கின்றனர்; ஆனால், ஆண்கள் மட்டும் பல மனைவியரையும், பல “துணைவியரை’யும் மணந்து கொள்வதையும், வைத்துக் கொள்வதையும் இந்திய சமூகம் அனுமதித்தது, அனுமதிக்கிறது.

அந்த வகையில் படைப்பாற்றல் பல பெண்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்து வந்திருக்கிறது. ஹிந்து மதமும் ஆலயங்களும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றன.
தமிழ்நாட்டின் “பக்தி இலக்கிய’ காலகட்டத்தில் சைவர்களான அவ்வையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார், காரைக்காலம்மையார் போன்றோரும், வைணவரான ஆண்டாளும் தங்கள் படைப்பாற்றலால் பெரும் பக்தி இலக்கியங்களைப் படைத்து விட்டு மறைந்தனர்.

இராஜசிம்ம பல்லவனின் மனைவியாகிய “ரங்கபதாகை’ கங்கராதித்யசோழனின் மனைவியாகிய செம்பியன் மகாதேவி, ராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை, பாதாமி சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்த மன்னனின் மனைவியான லோகமகா தேவி – போன்றோர் ஏராளமான சைவ, வைணவக் கோயில்களைக் கட்டினர் என வரலாறு கூறுகிறது. ஹிந்து மதம் அவர்களுக்கு ஒரு வடிகாலாக இருந்திருக்கிறது.
அவர்களது கணவர்களும், சகோதரர்களும் ஏகப்பட்ட பட்டமகரிஷிகளுடன் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
வட இந்தியாவைப் பீடித்த இஸ்லாமியர்களின் ஆக்ரமிப்பு காரணமாக, முஸ்லீம் பெண்களைப் போலவே, ஹிந்துப் பெண்களும் “பர்தா’ அணியத் தொடங்கினர். இன்றும் அந்த மரபு அங்கெல்லாம் தொடருகிறது. வீட்டை விட்டு வெளியே காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் நாட்டியக் காரிகளாகவும், வேசைகளாகவுமே கருதப்பட்ட காலகட்டம் முகலாயர்களின் ஆட்சிக் காலம்.

அவர்களால் தோற்கடிக்கப்பட்ட ராஜபுதன மன்னர்களின் மனைவிகளெல்லாம், எங்கே மாட்டிக் கொண்டால் தாம் சீரழிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தின் காரணமாகவே கணவனின் சிதையில் குதித்து உடன்கட்டை (சதி) ஏறினர்.
மீரா போன்ற பக்தைக்கு, தான் விரும்பிய பகவான் கிருஷ்ணனைத் தொழக்கூட அனுமதி கிடைக்கவில்லை. மீராபாய், முக்திபாய், ஜனாபாய், வீணாபாய் போன்ற பெண்களெல்லாம் பக்திமார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, கீர்த்தனங்களை இயற்றிப்பாடி தங்கள் தனிமையை விரட்ட வேண்டியிருந்தது. சித்தூர் ராணி சின்னம்மா, ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்றவர்கள் விதவைகளான பிறகே அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. இப்படியாக நாம், இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், “முன்மாதிரி’ப் பெண்கள் என்று குறிப்பிட வேண்டுமானால், வேதகாலப் பெண்களைத்தான் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.



செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:25 pm

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாலம் அமைத்த சகோதரி சுப்புலக்ஷ்மி
--------------

பெண்கள் அடுப்படியிலும், வீட்டின் பின்புறத்திலும் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த காலத்தில், ஒரு சில பெண்களே இந்த தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வந்தனர். கல்வி கற்றனர், மற்ற பெண்களுக்கு உதவினர். இதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்துக்கு பாலம் அமைத்தனர்.

தங்களது வாழ்க்கையில் பல்வேறு சோகங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து பெண்களின் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர் சகோதரி சுப்புலக்ஷ்மியாவார்.

19ம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர் சுப்புலக்ஷ்மி. இவர் பல பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றியவர். ஒரு பெண் சுயமாக வாழ முடியும் என்றும், நம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால் இது அனைவருக்குமே சாத்தியப்படும் என்றும் வாழ்ந்து காட்டியவர் சுப்புலக்ஷ்மி.

இவரது 11வது வயதில் திருமணம் நடந்தது. திருமணமாகி 6வது மாதத்தில் விபத்து ஒன்றில் கணவர் இறந்துவிட, இவருக்கு கைம்பெண் என்ற பட்டம் சூட்டப்பட்டது. கைம்பெண் என்றால் என்னவென்றேத் தெரியாமல், அதற்கான அனைத்து சோதனைகளையும் சுப்புலக்ஷ்மி அனுபவித்தார்.

இதனை பொறுத்துக் கொள்ள இயலாத அவரது தந்தை, சுப்புலக்ஷ்மியின் வாழ்க்கைப் பாதையை மாற்ற தீர்மானித்து, அவளை பள்ளியில் சேர்த்து பயிற்றுவித்தார்.

பள்ளியில் பயிலும் சிறுமிகள் தங்களது பெயருக்கு முன் ஆங்கிலத்தில் மிஸ் என்று எழுதுவது போல விதவைகளை எவ்வாறு குறிப்பிடுவது என்ற வாதம் எழுந்தது. அப்போது, சுப்புலக்ஷ்மி இனி தன் பெயரை சிஸ்டர் சுப்புலக்ஷ்மி என்று குறிப்பிடலாம் என கூறினார். அதில் இருந்து அவர் சிஸ்டர் சுப்புலக்ஷ்மி என்றே அழைக்கப்பட்டார்.

பள்ளியில் சேர்ந்து நல்ல முறையில் படித்து முடித்து கல்லூரியில் பி.ஏ. முடித்தார் சுப்புலக்ஷ்மி. 1911ஆம் ஆண்டில் சென்னையில் பி.ஏ. பட்டம் பெற்ற முதல் பெண் சுப்புலக்ஷ்மி என்ற பெருமையை அடைந்தார். அதோடு நிற்காமல் எல்.டி. படிப்பில் சேர்ந்து வெற்றி அடைந்தார்.

படிப்பை முடித்ததும், பலர் சுப்புலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால், திருமண வாழ்க்கையில் இணைய விரும்பாத சுப்புலக்ஷ்மி, பெண்களின் முன்னேற்றத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

படிப்பை முடித்துவிட்டு, வீட்டிலேயே விதவைப் பெண்களுக்காக ஆசிரமம் ஒன்றை துவக்கினார். அதே சமயம் எழும்பூர் பிரஸிடென்ஸி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

பெண்களுக்காக ஐக்கிய மாதர் சங்கம், சாரதா இல்லம் ஆகியவற்றையும் துவக்கினார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கல்வி அளிக்க சாரதா வித்யாலயா என்ற கல்வி நிறுவனத்தைத் துவக்கி, மிகப்பெரிய அளவில் கொண்டு வந்தார். பின் இது ராமகிருஷ்ண மடத்தின் மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்டது.

இவருக்கான அங்கீகாரங்கள்
இவரது மகத்தான சேவைக்காக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 1920ஆம் ஆண்டு பொதுச் சேவைக்காக இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

பெண்கள் முன்னேற்றத்துக்காக மட்டுமல்லாமல், சிறிய வயதில் கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் என உதவித் தேவைப்படும் பெண்களுக்குத் தேடிச் சென்று உதவி செய்து, அவர்களது உயர்வுக்கு ஊன்றுகோலாய் இருந்த சுப்புலக்ஷ்மியின் வாழ்க்கை தற்போதைய பெண்களுக்கு வரலாறாகியுள்ளது.

சாதனை படைப்போம்… வரலாற்றில் இடம்பெறுவோம்…


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:27 pm

ரத்தம் முதல் எச்சில் வரை அனைத்துக்கும் தேவையான தண்ணீர்…
--------------------

உடல் நலம்தண்ணீர் குடிப்பதுநோய்பருகுதல்
மனித உடலை நோயற்ற ஆரோக்கியமான உடலாக பராமரிக்க தண்ணீர் என்பது மிகவும் அவசியமாகிறது. தேவையான அளவிற்கு தண்ணீரை அருந்தி வந்தால் பல நோய்களை விலக்கி வைக்கலாம்.

உடலில் 70 விழுக்காடு எடையை தண்ணீர்தான் தீர்மானிக்கிறது. அனைத்து உடல் பாகங்களும் தண்ணீரை அல்லது திரவத்தை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன.

ரத்தத்தில் இருந்து எச்சில் வரை அனைத்திற்குமே தண்ணீரின் தேவை அவசியமாக உள்ளது. உணவை செரிமானம் செய்யும் வயிற்றுப் பாகங்களுக்கும் போதுமான தண்ணீர் இருந்தால்தான் அவை சரியாக வேலை செய்யும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை நாம் சரியாக எடுத்துக் கொள்கிறோமா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போது தாகம் என்ற உணர்வு ஏற்படுகிறதோ அப்போது மட்டுமே தண்ணீர் பருகுவேன் என்று 25 சதவீதத்தினரும், சாப்பிடும் போது தண்ணீர் பருகுவதோடு சரி என்று 25 சதவீதத்தினரும் சொல்வார்கள். மீதம் 50 சதவீதத்தினர் மட்டுமே போதுமான அளவிற்கு தண்ணீரைப் பருகுபவர்களாக இருப்பார்கள்.

தற்போதைய ஆய்வு ஒன்று கூறியுள்ள தகவலை கேட்டால், மேற்கண்ட 25 + 25 சதவீதத்தினர் ஆச்சரியப்படுவார்கள். அதாவது உடல் தண்ணீர் தேவையை வெறும் தாகத்தினால் மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஒவ்வொரு உடல் பாகமும் ஒவ்வொரு வகையில் தனது தண்ணீர் பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறதாம். ஆனால் அதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால்தான் அது நோயாக மாறி நம்மை பாதிக்கிறது.

பொதுவாக ஏசியிலேயோ, அதிக குளிர்ச்சியான பகுதியிலோ பணியாற்றுபவர்களுக்கு தாக உணர்வே ஏற்படாது. இதனால் அவர்கள் தண்ணீர் பருகுவது குறைந்துபோகும். அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகுதான் அவர்கள் தண்ணீரை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரிய வரும்.

ஒவ்வொரு நாளும் நமது உடல் பல்வேறு பணிகளுக்காக 4 லிட்டர் தண்ணீரை இழக்கிறது. நாம் தினமும் இதை விட அதிகமாக தண்ணீர் பருகினால்தான் உடலின் தேவையை சரிகட்ட முடியும். அதிகமாக இல்லாவிட்டாலும், இதே அளவிற்காவது தண்ணீரை பருகினால், உடலில் நீர்த்தன்மை குறையாமல் பாதுகாக்கலாம்.

தண்ணீரை குடிப்பதால் அது நமது உடலுக்குச் சென்று, அதன் மூலமாக செல்கள் சக்தியை உருவாக்கும். இந்த சக்தி, உடலில் உள்ள மற்ற வேதியியல் பொருட்களுடன் இணைந்து உடலுக்குத் தேவையான சக்தியாக சேமித்து வைக்கும். தண்ணீர் உடலின் அனைத்து பாகங்களையும் எளிதாக பணியாற்றச் செய்யும் பொருளாகும். உடலின் உள்ளுறுப்புகளை நல்ல நிலையில் பாதுகாக்க தண்ணீர் உதவுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை பருகுவது என்ன அவ்வளவு கஷ்டமான பணியா? இல்லையே.. பிறகு ஏன் நோயை வரவேற்கிறீர்கள். தண்ணீரை பருகுங்கள்.. நோயை விலக்குங்கள்.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:29 pm

பலவீனங்களை மாற்றி பலமாக்குங்கள்
-----------------


பொதுவாக பெண்கள் பலமானவர்கள்தான். உடலை விட மனதால் பலமானவர்கள் என்றால் அது பெண்கள்தான். அப்படியான பெண்களை, இந்த சமுதாயம் பல்வேறு விஷயங்களால் பலவீனமாக்கி வைத்திருந்தது.
பொதுவாக பெண்கள் தலை குனிந்து நிலத்தைப் பார்த்து நடக்க வேண்டும் என்று அந்த காலத்தில் இருந்தே வளரும் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டது. இது சமுதாயம் பெண்கள் மீது ஏற்படுத்திய பலவீனமாகும்.

ஆனால், அந்த பார்வையால் பல விஷயங்களை நாம் வெளிப்படுத்திவிடலாம். ஒருவர் நம்மை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார் என்பதை நமது கோபமான பார்வையாலும், வெறுப்பான பார்வையாலும் தெரிவித்துவிடலாம். ஒருவர் அவர் நம்மை கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது அதற்கு எதிரான கோபப் பார்வையை வெளிப்படுத்தலாம். இதன் மூலம் மூன்றாம் நபருக்குத் தெரியாமலேயே நாம் நமது எதிர்ப்பை உரியவருக்கு தெரிவித்து விடுவோம். இதன் மூலம் ஒரு பெண் தனது பார்வை என்ற பலவீனத்தை பலமாக்கிக் கொள்ளலாம்.

ஒரு பெண் நிமிர்ந்து பார்க்கும் போதுதான், அவளைச் சுற்றுயுள்ள சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும்.

அதேப்போல, முந்தைய காலத்தில் பெண்களுக்கு சொத்துக்கள் என்று எதுவும் இல்லை. எனவே அவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்களுக்கு என சொத்தாக தங்க நகைகளை அணிவித்தனர். ஆனால் தற்போது அந்த பாதுகாப்பற்ற நிலை பெண்களுக்கு இல்லை.

எனவே எளிமையாக இருங்கள். பெண்கள் பலரும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயற்கை. ஆனால், அதற்காக தம்மை எப்போதும் ஒரு பார்வைக்குரிய பொருளாக மாற்றிக் கொள்ளாதீர்கள். இதனால் மற்றவர்களிடம் இருந்து நீங்கள் அந்நியப்பட நேரிடும். எனவே எப்போதும் இயல்பாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். பல நேரங்களில் அழகும், நகைகளும் தான் ஆபத்தாகி விடுகின்றன.

எதையும் மிகைப்படுத்தாதீர். அப்படி நடந்தது என்றால் அதனை இப்படி நடந்தது என்று கூறுவது பலரது இயல்பு. அவ்வாறு கூறும் போது சில விஷயங்களை மிகைப்படுத்திக் கூறுவார்கள். அது வேண்டாம். நடந்ததை நடந்தபடியே கூறாமல் மிகைப்படுத்திக் கூறுவதும் பொய்க்கு ஈடுதான். எனவே, பொய் கூறுவது எவ்வாறு பல சிக்கல்களுக்கு வழி ஏற்படுத்துமோ அதுபோல மிகைப்படுத்திக் கூறுவதும் பிரச்னைகளை ஏற்படுத்திவிடக் கூடும்.

தொலைத்தொடர்பு கருவியாக இருக்க வேண்டாம்.. ஒரு பெண்ணிடம் ஒரு விஷயத்தைக் கூறிவிட்டால் போதும் அது ஊருக்கேத் தெரிந்துவிடும் என்று சொல்வார்கள். அதுபோன்ற சூழ்நிலை தற்போது இல்லை என்றாலும், பெண்கள் பொதுவாக தேவையற்ற விஷயங்களைப் பேசவதைத் தவிர்ப்பது நலம். அது அவர்களுக்கும், அவர்களது சுற்றத்தாருக்கும் நல்ல பலனை அளிக்கும்.

சூழ்நிலைகளை சமயோஜிதமாக சமாளிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஓரிடத்துக்கு செல்லும் போது, அங்கிருந்து கிளம்ப தாமதமாகும் என்று தெரிந்தால், அதற்கு உரிய வழிகளை தயாராக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அங்கு போகாமல் தவிர்ப்பதை விட, உரிய நேரத்துக்கு சென்றுவிட்டு விரைவாக அங்கிருந்து கிளம்பி வந்து விடுவது நல்லது.

முன் யோசனையுடன் எதையும் செய்தால், பல மோசமான சந்தர்ப்பங்களை தவிர்க்க முடியும்.

மோசமான நண்பர்களை விலக்கி விடுங்கள். அவர்களுடன் நெருக்கமான பழக்கத்தை குறைத்துக் கொள்வது எப்போதுமே பெண்களுக்கு நல்லது. பலரும், தீய நட்பால்தான் தவறான வழிகளுக்குச் செல்வார்கள். எனவே, தீய வழியில் சென்று கொண்டிருக்கும் நண்பர்களுடன் ஏற்படும் பழக்கம், அவர்களை திருத்த பயன்படலாம். ஆனால் நாம் மாற எந்த வகையிலும் வழி ஏற்படுத்தி விடக் கூடாது.

எல்லோரிடமும் எல்லாவற்றையும் கூறாதீர்கள். பலருக்கும் இருக்கும் மிக முக்கிய பலவீனமே ரகசியத்தை பாதுகாக்க முடியாததுதான். பொதுவாக ரகசியம் என்பது, ஒரு விஷயம் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் தவறாகிவிடும் என்பதால் தான் அதனை ரகசியம் என்கிறோம்.

எனவே, ஒருவர் ஒரு விஷயத்தை ரகசியமாக வைக்க விரும்பினால், அதனை தான் ஒருவரிடமும் தெரியப்படுத்தக் கூடாது. இல்லை, எனக்கு நம்பிக்கையான தோழி ஒருவரிடம் மட்டும் இதனைக் கூறுவேன் என்று சொன்னால், அவள் அவளுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் இந்த விஷயத்தைக் கூறுவார். இதேப்போல ஒவ்வொருவரும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இதனை கூறும் போது நமது விஷயம் அனைவரும் அறிந்த ரகசியமாகப் போய்விடும். ரகசியத்தை நம்மாலேயே பாதுகாக்க முடியாத போது மற்றவர்கள் அதனை எப்படி ரகசியமாக வைப்பர் என்று யோசித்துப் பாருங்கள்.

எனவே, நாம் எளிதாக செய்யும் சில விஷயங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அறியாமல் இருக்கிறோம். இதனை மாற்றி நமது பலவீனங்களை பலமாக ஆக்கிக் கொண்டால், பலருக்கும் நீங்கள் வழிகாட்டியாகலாம்.



வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:30 pm

படித்தக் குற்றத்துக்காக சொத்தை இழந்த பார்வதி அம்மாள்
----------------------------------
1919ஆம் ஆண்டு மன்னார்குடி என்ற ஊரில் பிறந்தவர் பார்வதி அம்மாள். ஆரம்பக் கல்வி மட்டுமே படித்திருந்த இவருக்கு இளம் வயதில் திருமணம் நடந்து குழந்தையும் பெற்றார். அவருக்கு 18 வயது ஆகும் போதே கணவனை இழந்து கைம்பெண்ணாக நின்றார். அப்போது அவருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால், அவருக்கு வீட்டில் ஆதரவு இல்லை. இதனால் வீட்டினரின் எதிர்ப்பை மீறி வெளியே வந்து படித்தார். அவர் பெற்றோரின் சொல்லை மீறி கல்வி பயின்றக் குற்றத்துக்காக சொத்தில் பங்கு இல்லை என்று கூறினர் குடும்பத்தார். ஆனால், கல்வியே மிகப்பெரிய சொத்து என்று நினைத்த அவர், சென்னை வந்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்தார்.

காந்தியடிகளின் போதனையால் கவரப்பட்டவர்களில் ஒருவரான பார்வதி அம்மாள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்து வந்தார்.

சத்யாகிரகப் போராட்டங்களில் பங்கேற்று சிறைச் சென்றவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டும் குழுவில் இடம்பெற்றிருந்தார் பார்வதி அம்மாள்.

குழந்தைத் திருமணத்தையும், குழந்தைகள் கல்வி மறுக்கப்படுவதையும் எதிர்த்து போராடி அதில் வெற்றியும் கண்டார். பல்வேறு கிராமங்களில் பெண் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு பெற்றுக் கொடுக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். பெண்களுக்கு என தனியாக பள்ளிகளைத் துவக்கவும் உதவி புரிந்தார்.

தலைவர் வினோபாவின் இயக்கத்திலும் சேர்ந்து இவர் பல அரிய பணிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றார் பார்வதி அம்மாள்.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by செந்தில் Tue Nov 10, 2015 10:01 am

கைதட்டல் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொருவிதம்,அருமையான கட்டுரைகள் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 10:09 am

ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொருவிதம்,அருமையான கட்டுரைகள்

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 12:27 pm

திருமணத்துக்குப் பின் தந்தையின் பெயரையே தொடர விரும்பும் பெண்கள்
---------------

தந்தையின் பெயர்திருமணம்பெண்கள்
பொதுவாக பெண்கள் தங்களது பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயரை சேர்த்து குறிப்பிடுவார்கள். ஆனால், திருமணம் முடிந்த பிறகு தந்தை பெயருக்கு பதிலாக கணவரது பெயரை சேர்த்துக் கொள்வார்கள்.

ஆனால், தற்போது திருமணத்துக்குப் பிறகும் தந்தையின் பெயரையே தொடர பெரும்பாலான பெண்கள் விரும்புவதாகவும், அவ்வாறே பலரும் செய்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

சில பெண்கள், குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு, அவர்களது இனிஷியல் வேறாகவும், தாயின் இனிஷியல் வேறாகவும் இருப்பதால் ஏற்படும் குழப்பதைத் தவிர்க்க, தனது கணவரின் பெயரை சேர்த்துக் கொள்வதாகவும், சில கலாச்சார, சமூக அழுத்தங்கள் காரணமாகவே பலரும் தங்கள் தந்தையின் பெயரை மாற்றிக் கொள்ள ஒப்புக் கொள்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற சமூக அழுத்தங்களை எதிர்த்து வாழ விரும்புவோரும், பெண்ணியத்துக்கு குரல் கொடுப்பவர்களும், தந்தையின் பெயருடனே வாழ்கின்றனர்.

இது குறித்து ஆராய்ச்சி செய்தவர்கள், திருமணமானதும் 62 சதவீத பெண்கள் மட்டுமே தங்களது கணவரின் பெயரை இணைத்துக் கொள்வதாகவும், 74 சதவீத பெண்கள், திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகே இந்த முடிவை எடுப்பதாகவும், 88 சதவீதம் பெண்கள் தங்களது 60வது வயதில் மட்டுமே கணவரின் பெயரை சேர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 12:29 pm

ஏன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்?
------------

இதய நோய்களை தீர்மானிக்கும் செயல்பாடுகள்

பொதுவாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு உடல் எடையை முக்கியக் காரணமாகக் கூறுவார்கள். ஆனால், ஒருவரது உடல் இயக்கமே இதய நோய்களை தீர்மானிக்கும் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.

அதாவது, இதய நோய் மற்றும் இதய பாதிப்பு உள்ள சுமார் ஆயிரம் பெண்களிடம் நடத்திய ஆய்வில், அவர்களது உடல் எடைக்கும், இதய நோய்க்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களில், துரித செயல்பாடு உள்ளவர்களுக்கும், குறைவான, சோம்பேறித்தனமான செயல்பாடு உடையவர்களுக்கும் இடையே நோய் பாதிப்பில் அதிக வித்தியாசம் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதய நோய் பாதித்த பெண்களில் 70 சதவீதத்தினர், இயல்பாகவே சுறுசுறுப்பின்றி, குறைவாக வேலை செய்பவர்களாகவே இருந்தனர். மேலும், அதிக வேலை செய்யும் பெண்களுக்கும், சுறுசுறுப்பாக இயங்கும் பெண்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருந்ததாகவும், அப்படியே பாதிப்பு இருந்தாலும், அதன் வீரியம் குறைவுதான் என்றும் மருத்துவ ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இந்த ஆய்வின் மூலம், குறைவான உடல் இயக்கம், இதய நோய்க்கான முக்கிய அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ உலகம் அறிவித்துள்ளது. பெண்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதுதான் அவர்களது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் என்று கூறுவதற்கான காரணம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 12:31 pm

ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்
------------

ஏடிஎம்களில் பணம் எடுத்த பிறகு வரும் ரசீது தாள்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும் போது தரப்படும் பில்லினால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏடிஎம் ரசீது போன்ற கணினிகளால் ஜெனரேட் செய்யப்படும் தாள்களை தயாரிக்க பிஸ்பினால் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிஸ்பினால் ரசாயனம், மனித தோலினை ஊடுருவிச் சென்று உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இது குறித்து ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அம்மாநில அமைச்சர் பதில் அளிக்கையில், ‘ஏ.டி.எம். தாள்களால் புற்று நோய் ஏற்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதுபற்றி ஆய்வு நடத்த உயர் நிலைக் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

வங்கி அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், வங்கி ஏடிஎம் மட்டுமில்லாமல் சிறிய கடைகளில் கொடுக்கும் ரசீதில் கூட பிஸ்பினால் கலக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏடிஎம் ரசீதினால் புற்றுநோய் ஏற்பட்டதாக எந்த புகாரும் வரவில்லை என்பதே பதிலாக உள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏடிஎம்களில் இதுபோன்ற தெர்மல் காகிதங்கள் பயன்படுத்த ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இதுவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லையெனினும், மனிதர்களிடையே புற்றுநோய் தாக்கம் அதிகரித்திருப்பதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையேக் காட்டுகிறது..

பலரும் ஏடிஎம் பேப்பர்களை கிழித்தெறியாமல் பத்திரப்படுத்தி கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் சுவாமி பிரசாதத்தை அதில் மடித்து வைத்து அவ்வபோது பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த செய்தி நிச்சயம் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது உண்மை.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 12:32 pm

இதில் எல்லாம் நாம்தான் கடைசி
------------
தற்போது சுமார் 25-30 வயதிருக்கும் நபர்கள் பல விஷயங்களை கடைசியாக செய்த, பார்த்த தலைமுறையாக இருப்பார்கள். அது ஒரு சில விஷயங்களை நினைக்கும் போது வேதனையாகவும் இருக்கிறது.

அது என்ன கடைசி…

பெண்களாக இருந்தால், பள்ளியில் பாவாடை தாவணியை பள்ளிச் சீருடையாக அணிந்த தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.

தலைக்கு சீகக்காயும், முகத்துக்கு மஞ்சளும் தேய்ச்சி குளித்த இளம் பெண்களாக இருந்தவர்களும் நாம்தான் கடைசி.
பள்ளி விடுமுறையில் நண்பர்களுக்கு கடிதம் எழுதிய தலைமுறையும் நாம்தான்.

மயில் இறகை புத்தகத்தில் வைத்து அது வளர்ந்துவிட்டதற்கு மகிழ்ச்சியும், காணாமல் போயிருந்தால் துக்கமும் அடைந்ததும்;

தந்தி வந்து மரணச் செய்தியை அறிந்து கொண்டவர்களும், தந்திக்கே மூடு விழா நடந்து அதிர்ந்தவர்களும் நாம்தான்.
சைக்கிள் டயரிலும், நுங்கு மட்டையிலும் சைக்கிள் ஓட்டியவர்களில் கடைசி நபர் நாமாகவே இருக்கும்.

பள்ளி விடுமுறையில் ஊருக்குப் போய், மரத்தில் ஏறி கை மூட்டை உடைத்துக் கொண்டவர்கள் நாமாகவோ, நமது நண்பர்களாகவோ தான் இருப்பார்கள்.

கேலண்டர் அட்டையில் துணிக் கிளிப்பை வைத்து தேர்வெழுதியவர்களும், சிலேட்டில் வீட்டுப் பாடம் எழுதி அதனை அழியாமல் எடுத்துச் செல்ல அதிக பிரயத்தனம் செய்தவர்களும் நாமேதான்.

மண்ணில் விளையாட்டுச் சொப்புகள் செய்து அடுப்பில் சுட்டு விளையாடியவர்களும்;

காதலிக்கு பயந்து பயந்து கடிதம் எழுதி புத்தகத்தில் வைத்துக் கொடுத்து மாட்டிக் கொண்டவர்களும், மாட்டாதவர்களும் நாமாகவே இருக்கும்.

உள்ளூர் நபர்களுக்கே, தொலைபேசி பூத்களில் ஒருவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து நாம் பேசி அதற்கான காசை கொடுத்துவிட்டு வந்ததும் நாமாகத்தான் இருக்கும்.

போன் நம்பர் கேட்டால் பக்கத்து வீட்டு அல்லது அடுத்த தெருவில் இருக்கும் ஒருவரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்தவர்களும் நாம்தான்.

தெருவிலேயே ஒரே ஒரு வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியில் இடம் பிடித்து உட்கார்ந்து ஒலியும்-ஒளியும் பார்த்தவர்களும் நாம்தான் கடைசி.

இதுபோல பல விஷயங்களை இந்த தலைமுறையே இறுதியாகக் கண்டுள்ளது. அடுத்த தலைமுறை இதுபோல இழக்கும் பல விஷயங்களை பட்டியலிட்டால் அது முடியவே முடியாது என்றே தோன்றுகிறது.

இதுபோல நாம் இழந்த பல விஷயங்கள் உள்ளன. அவை உங்களுக்கும் தெரியுமா?




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 12:33 pm

சிவி – யில் கல்வித் தகுதியைக் குறிப்பிடும் போது…
------------

சிவி-யில் கல்வித் தகுதியைக் குறிப்பிடும் போது, கடைசியாக படித்த உயர்படிப்பு எதுவோ அதனைத்தான் முதலில் எழுத வேண்டும். அதன் பின்பு, அதற்கு முன்னர் படித்த படிப்பைக் குறிப்பிட வேண்டும். இவ்வாறு இறங்கு முகமாக கல்வித் தகுதியை சொல்லிக் கொண்டுபோய் பள்ளிப் படிப்பில் நிறுத்த வேண்டும். உதாரணமாக, எம்.ஏ., பி.ஏ., பிளஸ் டூ என வரிசைப்படுத்தலாம்.

நீங்கள் எத் துறையில் அதிக அனுபவமும், ஆராய்ச்சியும் செய்து கொண்டிருக்கிறீர்களோ அதனை முதலில் குறிப்பிடலாம். அப்படி நீங்கள் குறிப்பிடும் போது, அக் குறிப்பிட்ட பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறீர்கள்; அப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன என்பதையும் குறிப்பிடலாம்.
பிரத்யேக திறன்கள்:

கார் ஓட்டுவது, கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் பற்றி தெரிந்திருப்பது அல்லது இயக்குவது, மற்ற மொழிகளைச் சரளமாக பேசவும் எழுதவும் தெரிவது போன்ற பிரத்யேக திறன்களையும் நீங்கள் குறிப்பிடலாம்.
உங்களுடைய வேறு சில திறன்களையும் சிவி-யில் இடம்பெறச் செய்யுங்கள்:

1. நேர நிர்வாகம்
2. தொடர்புத் திறன்
3. தலைமைத் திறன்
4. அலசி ஆராயும் திறன்
5. பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும் திறன்
6. விவாதிக்கும் திறன்
7. குழுவோடு சேர்ந்து பணியாற்றும் திறன்
8. முன் யோசனையோடு செயல்படும் திறன்
9. புதிய திட்டங்களை, பட்ஜெட்டைப் போட்டுத் தரும் திறன்
10. எச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்கக்கூடிய திறன்

இப்படிப் பல்வேறு திறன்கள் உங்களுக்குள் இருக்கலாம். அத் திறன்களை அவசியம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு திறன்களைக் குறிப்பிடும் போது, அத் திறன்கள் உங்களிடம் இருக்கின்றன என்பதை உறுதி செய்யும் நிகழ்வுகளை சான்றாதாரப் பணிகளை, சம்பவங்களைக் குறிப்பிடுதல் நல்லது.

உயர்கல்வி பெற விண்ணப்பிக்கிற போது, கல்வி சம்பந்தமான தகுதிகளைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். அத் துறையில் உள்ள ஆர்வத்தைத்தான் சி.வி. தாங்கி நிற்க வேண்டும்.

உதாரணத்துக்கு, எம்.பில். பட்டம் படிக்க நினைக்கும் ஒருவர், தனக்கு கால் பந்தாட்டம் தெரியும், கிரிக்கெட் தெரியும், கபடி தெரியும் என்று விளையாட்டு சம்பந்தமான திறன்களை முன் நிறுத்தக்கூடாது. அங்கு படிப்பு சம்பந்தமான திறன்களைத்தான் பிரதானப்படுத்த வேண்டும். அதற்காக விளையாட்டைக் குறிப்பிடக்கூடாது என்பதல்ல; அது ஒரு தகுதியாக மட்டும் வெளிப்படுத்தலாம்.

மேற்கண்ட வழிமுறைகளிலேயே எந்த வேலைக்கு சிவி தயாரிக்கிறீர்களோ அந்த வேலைக்கான திறன்களைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். அதுதான் நல்லது.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 12:35 pm

வீடியோ கேம் : நல்லதா? கெட்டதா?
-----------

வீடியோ கேம் என்பது ஒரு காலத்தில் டிவிக்களிலும், வீடியோ கேம் விளையாட்டு சாதனங்களிலும் இருந்து வந்தது. இதனால், பெரிதாக யாருக்கும் பாதிப்பில்லை.

ஆனால், இப்போது வீடியோ கேம்கள் பலவும் செல்போன்களிலேயே வந்து விட்டதால் அதற்கு குழந்தைகளும் அடிமையாகிவிட்டனர்.

வீட்டில் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இது நல்லதா கெட்டதா என்பதை யாரும் யோசிப்பதில்லை. இது குறித்து அலசியதில் இரு வேறு கருத்துகள் கிடைத்துள்ளன.

ஒன்று, வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு புத்தி கூர்மையும், சிந்திக்கும் ஆற்றலும் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி மேற்கொண்ட ஆய்வில், குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதால் அவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விளையாட உதவுவதாலும் கற்றுக் கொடுப்பதாலும் குடும்ப உறவு மேம்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இப்படியிருக்க, வீடியோ கேம்களுக்கு எதிராக கூறப்படும் விஷயம் என்னவென்றால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி என்பது முதல் மூன்று ஆண்டுகள் தான் அபரிமிதமாக இருக்கும். இந்த காலத்தில் குழந்தைகள் பல நல்ல விஷயங்களைப் படித்து அறிவாளிகளாக பிரகாசிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தை இந்த வீடியோ கேம்கள் விளையாடுவதன் மூலம் அறிவு வளர்ச்சி என்பதை இழக்க நேரிடுகிறது.

மேலும், பலரிடம் பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்பு கிட்டாமல் முடங்கிப் போவார்கள். ஒவ்வொரு பருவத்தின் அழகையும் அவர்களது பெற்றோரால் ரசிக்க முடியாது. அதாவது, அவர்கள் ஆடுவது, பாடுவது, தத்தி தத்தி நடப்பது, ஓடுவது போன்ற பல செய்கைகள் வீடியோ கேமால் தடை படுகிறது.

எனவே, வீடியோ கேமில் இருந்து நமது பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உண்டு என்கிறது மற்றொரு சமூகம்.

எது எப்படி இருந்தாலும் வீடியோ கேமுக்குள் மூழ்கும் நமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்று மட்டுமே சொல்கிறது பெற்றோர்களின் உள்ளுணர்வு.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 12:37 pm

வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீரை பருகுவோம்!

--------------

தினந்தோறும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது மக்களிடம் பிரபலமாகி வருகிறது. அதிலும் இப்போது ஜப்பானிய மக்களிடம் மிகவும் அதிகமாக பிரபலமாகி வருகிறது.

தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று ஜப்பானிய மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதாவது தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்ற மிகப் பழைய கடுமையான வியாதிகள் மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் நூறு சதவீதம் வெற்றிகரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமைகள் மட்டுப்படுத்தப்பட்டு வலிமைகள் உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றினால் மிகவும் நன்மை தரும் என்றே நம்ப வேண்டும்.

இதனைதான் “நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 9:45 am

மோசமான நினைவுகளை மறக்கச் செய்யும் புதிய மருந்து
-------------

மோசமான நினைவுகள்
லண்டன்

மனதில் பதிந்து கிடக்கும் மோசமான நினைவுகளை மட்டும் ஒட்டு மொத்தமாக அழித்துவிடும் புதிய மருந்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் நடந்திருக்கிறது.

உணவு முறை பிறழ்ச்சி, முந்தைய கால மன அழுத்தம், போபியாக்கள் போன்ற நோய்களைக் கொண்டவர்களுக்கு இந்த மருந்தினை அளிப்பதன் மூலம் அவர்களது நோயை குணப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எலிகளுக்கு இந்த மருந்தினை கொடுத்து பரிசோதித்து, இந்த மருந்தின் தன்மையை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இது நம்ம ஊர்க்காரங்களுக்கு சரியா வராதுங்க.. ஏன்னா.. டீவி சீரியல்லயே… சோகமான காட்சிகளைப் பார்த்து பார்த்து அழுறவங்க.. அவங்க சொந்த வாழ்க்கையில நடந்த சோகமான விஷயங்களை மறக்க விரும்புவாங்களா என்ன…

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 9:46 am

காதல்: ஏன்? எதற்கு? எப்படி?
-----------

உலக மக்கள் மனதில் காதல் என்ற உணர்ச்சிக்கு தனியானதொரு இடமுண்டு. கிட்டத்தட்ட சுவாசம் போன்றே ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கும் உணர்ச்சி அது. அதனால்தான் நவீன காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்படும் திரைப்படங்களிலும், திரையிசை பாடல்களிலும் காதலுக்குப் பிரதான இடம் உள்ளது.

காதல் உணர்ச்சிக்கு இலக்கியங்கள் கூடத் தப்பவில்லை. “காதலாகி கசிந்து உள்ளுருகி” சிவனை போற்றுகிறது ஒரு பக்தி இலக்கியம். மகாகவியான பாரதியோ, “காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல்” என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறான். கம்பனும் ராமன் – சீதையின் காதலை அற்புதமாக வணங்குகிறான். திரையிசை பாடல்களைக் கேட்கவே தேவையில்லை. திரைப்படம் என்றாலே காதலுக்கு இடம் தந்தாக வேண்டிய கட்டாயம். “காதல் என்பது கற்பனையோ? காவியமோ?” என்று அலசியே இலக்கிய ரசனையைக் கழிக்கின்றன. காதல் கவிதைகளை எழுதாதவன் கவிஞனே இல்லை என்ற போக்கு நிலவுகிறது. காதலர்களுக்கான தினங்களும், நவீன கால காதல்களும் ‘காதலின்றி இவ்வுலகம் இல்லை’ என்று கூறுகின்றன.

ஆனால், காதல் என்றால் என்ன என்பதை அறிய வேண்டுமானால் சிறிது உபநிஷதங்களையும், கொஞ்சம் மனவியலையும் படித்து விடுவோம்.

யாக்ஞவல்கர் என்ற ரிஷி இருந்தார். மிகப்பெரிய அறிவுஜீவியாக பண்டைய காலத்தில் பேசப்பட்டவர். அவரது தர்க்கங்களும், கருத்துக்களும் இன்றளவும் ஆன்மீக உலகில் அலசப்படுபவை. ஜனகரின் உற்ற தோழராகத் திகழ்ந்தவர்.

உபநிஷதங்களின் சாரமாகக் கருதப்படும் பிரம்ம சூத்திரத்தில் அவரது கருத்துக்கள் உள்ளன. அதன் இரண்டாம் அத்தியாயத்தில் யாக்ஞவல்கரும், அவரது இரண்டாவது மனைவியான மைத்திரேயியும் வனப்ரஸ்த வாழ்க்கைக்குத் தயாராகிறார்கள். அப்போது மைத்திரேயி, உலகாதாய வாழ்க்கை, செல்வம் ஆகியவற்றைப் பற்றி சலிப்புடன் கூறி, தனக்கு மோக்ஷத்தை அருளுமாறு தனது கணவனிடம் கேட்கிறார். அதற்கு யாக்ஞவல்கர், கணவன் – மனைவி காதல், குடும்ப பாசம் ஆகியவற்றை பற்றி விளக்கியதுடன், அதே விதமான நேசத்தை இறைவனிடம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இதையே இறைவன் மீது பாடும் கவிஞர்கள் வெளிப்படுத்துகிறார்கள். பாரதியின் கண்ணன் பாடல்கள், ஆன்மீக அன்பர்களையும், நவீன காதலர்களையும் பரவசப்படுத்தக்கூடியது. தவிர, காதல் திருமணங்களான வள்ளி – முருகன் திருமணம், கிருஷ்ணர் – ராதை திருமணம் ஆகியவை இன்றளவும் திருக்கோயில்களில் உற்சவங்களாகக் கொண்டாடப்படுபவை. இதனால் இன்றைய காதலர்கள் ஊக்கம் பெறவே செய்கிறார்கள் என்றாலும், நோக்கம் இறுதியில் இறைவனை அடைய வேண்டும் என்பதே.

இந்த இடத்தில், நவீன கால மனோதத்துவம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். உலக வாழ்வில் எல்லா அன்புமே ஏதேனும் காரணத்தை முன்னிட்டே தோன்றுகிறது. பெரும்பாலும் உணர்வு ரீதியான எதிர்பார்ப்புகளே அதற்கு வித்திடுகின்றன. அதற்காக இருதரப்பினரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அன்பை வெளிக்காட்டி பரவசப்படுத்தவும் செய்கிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் முதல் காதலர்கள் வரை இது பொருந்தும்.

இதில் திருமண வயதில் இணைந்திருப்பவர்கள் காதலிக்கிறார்கள். பொதுவாக, உறவுநிலைகளில் அளவுக்கதிகமாக எதிர்பார்த்தால் அது முறிந்துவிடும். பழகுபவர் தன்மை பொறுத்து அது மாறுபடும். ஆனால் காதலர்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணையும் போது வெறும் உணர்ச்சிகளை மட்டும் வைத்து வாழ முடியாதே? பணம், சுற்றம், குடும்பம், ஆரோக்கியம் என்று பல்வேறு அம்சங்களும் அதில் அடங்கி விடுகின்றன. அதனால் திருமணத்துக்கு முன்பு வரை கலகலப்பாக இருந்த பேச்சு பிறகு காணாமல் போகிறது. வெறும் உணர்ச்சி அல்லது எதிர்பார்ப்பு அடிப்படையிலான காதல்கள் விரைவிலேயே முறிந்து விடுகின்றன. திருமணங்கள் விவாகரத்தை எதிர்பார்க்கின்றன.

உண்மையில் ஒரு முழுமையான மனிதன் உணர்வு ரீதியாகக் காதலிக்க மாட்டான். பல்வேறு அம்சங்களையும் யோசித்து செயல்படுவான். அப்படிப்பட்டவர்களின் காதல் மட்டுமே இறுதி வரை நீடிக்கின்றன. அவர்கள் உணர்ச்சிகளைத் தாண்டிய வாழ்க்கையை சிந்திக்கிறார்கள். இருவரது எண்ணங்களும், செயல்களும் கடைசி வரை ஒத்திருந்தால் மட்டுமே முழுமையான மனிதர்கள் காதலிக்கிறார்கள்.

காதலுக்கும், அன்புக்கும் நமது நாயன்மார்களும், ஆழ்வார்களும் எவ்வளவு முக்கியத்துவம் தந்தார்கள் என்பதை ஸ்ரீராமானுஜர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு விளக்குகிறது.

அவர் தனது சீடர்களுடன் ஒரு இடத்திற்குச் செல்கிறார்கள். அப்போது ஒரு இளம் துறவி ராமானுஜரை அணுகி, தனக்கு தீட்சை அளிக்குமாறு கேட்கிறார்.

“உங்களுக்கு பூர்வாசிரமத்தில் திருமணமாகியுள்ளதா?” என்று கேட்டார் ராமானுஜர். துறவியோ பதட்டமாக, “நான் பிரம்மச்சாரி” என்கிறார் துறவி.

“சிறு வயதில் யாராவது ஒரு பெண் மீது உங்களையே அறியாமல் காதல் பூத்துள்ளதா? நன்றாக யோசித்து சொல்லுங்கள்” என்று வலியுறுத்திக் கேட்டார். அதற்கும் மறுத்தார் துறவி.

“உங்களுக்கு தீட்சை தர முடியாது. அன்பு, பாசம் இல்லாதவர்களிடம் கடவுள் வருவதில்லை” என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார் ராமானுஜர்.

கட்டுரை: சந்திர. பிரவீண்குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 9:47 am

ஓய்வு என்பது சும்மா இருப்பதில்லை
-----

ஓய்வுகோடை விடுமுறை

ஓய்வு என்றால் என்ன? எந்த வேலையும் செய்யாமல் “சும்மா’ உட்கார்ந்திருப்பதுதான் ஓய்வு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தவறு மற்றும் சலிப்பு ஏற்படாமல் இருக்க, தாற்காலிகமாக வேறு பணியைச் செய்து நம் உடலையும், மனதையும் உற்சாகப்படுத்திக் கொள்வதாகும்.

காலம் பொன் போன்றது; மனிதன் தன் வாழ்க்கையில் பணம், பதவி, பொன், பொருள் என எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம். ஆனால், காலம் என்ற ஒன்றை மட்டும் மீண்டும் பெறவே முடியாது.

ஓய்வு என்ற பெயரால் காலத்தை வீணடிக்கும் சோம்பேறித்தனமே நம் முன்னேற்றங்களுக்கு எல்லாம் முட்டுக்கட்டையாக இருக்கிறது.

ஓய்வு பற்றிய இந்த சோம்பேறிக் கோட்பாடு, நமது குழந்தைகள் இதயத்திலும் வேரூன்றத் தொடங்கியுள்ளன. ஆண்டு முழுவதும் படித்துக் களைத்து, தேர்வுகளும் முடிந்துவிட்டதால், வரும் மே மாதம் முழுவதும் ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறி, காலை பொழுது விடிந்தது முதல், இரவு உறங்கச் செல்லும்வரை தொலைக்காட்சி பெட்டியே கதியெனக் கிடந்து தங்கள் உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கின்றனர். அல்லது கொளுத்தும் கோடை வெயில் முழுவதும் என் தலையில்தான் என கையில் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு மைதானத்துக்கு ஓடிவிடுகின்றனர்.

மாணவர்களின் இதுபோன்ற விடுமுறைக் காலங்களைப் பயனுள்ளதாக மாற்றுவது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது. ஒவ்வொரு விடுமுறையிலும் மாணவன் கற்றுக் கொள்ளும் ஏதேனும் ஒரு விஷயம், அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயனளிக்குமாறு அவர்களின் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வழியில் கழிக்க நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக, இப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் அப்பாவுக்கு, அம்மாவுக்கு, அண்ணனுக்கு என நான்கைந்து செல்போன்கள் உள்ளன. அவற்றில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய உதவும் செல்போன் சர்வீஸிங் பயிற்சிக்கு ஆண் பிள்ளைகளை அனுப்பலாம். இதன் மூலம் தங்கள் வீட்டு செல்போன் மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும்

அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் செல்போன்களைப் பழுது நீக்கி, பகுதிநேர தொழிலாகக் கூட செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையாகவே அவருக்கு அத் துறையில் ஆர்வம் எற்பட்டு, எதிர்காலத்தில் மிகச் சிறந்த பொறியாளராகவோ அல்லது விஞ்ஞானியாகவோ கூட வர வாய்ப்புள்ளது.

பெண் குழந்தைகளைத் தையல் பயிற்சிக்கு அனுப்புவதன் மூலம் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான ஆடைகளை அவர்களே தைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினருக்கும் தைத்துக் கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.

தன்னுயிரை மட்டுமின்றி, ஆபத்துக் காலங்களில் பிற உயிர்களையும் காக்க உதவும் நீச்சல் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள் பழுதுநீக்கும் பயிற்சி, தற்காப்பு கலைப் பயிற்சி மற்றும் மகளிருக்கான சமையல், கணிப்பொறி, தட்டச்சுப் பயிற்சி என கோடை காலப் பயிற்சிகள் ஏராளமாக உள்ளன. சிறு குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி, கணிதம், கையெழுத்துப் பயிற்சி என தினசரி 2 மணி நேரம் ஒதுக்கினாலே போதும், அவை அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நற்பயனை அளிக்கும். இவ்வாறு பல துறைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் எத் துறையில் ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள் எனக் கண்டறிந்து, அவர்களை அத் துறையிலேயே ஈடுபடுத்தி வாழ்வை வளமாக்க முடியும்.
ஆனால், நாமோ நம் நேரத்தையெல்லாம், டி.வி. மற்றும் கணிப்பொறி முன் பலி கொடுத்துவிட்டு, ஓய்வு என்ற பெயரில் சோம்பேறியாக வாழவே நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறோம்.

மது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் கூறியபடி, ஒரு மாணவன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் புத்தகப் படிப்பையும், 4 மணி நேரம் தொழில் படிப்பையும் பயில வேண்டும், அதுவே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

இல்லையில்லை! நாங்கள் கோடை விடுமுறைக்கு சுற்றுலாதான் செல்வோம் என்றாலும் தவறில்லை. ஆனால், அந்தச் சுற்றுலாவும் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

சுற்றுலா செல்லுமிடத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியோ, பழமையான கோவில்களைப் பற்றியோ குழந்தைகளுக்கு அக்கறையுடன் விவரியுங்கள். நமது நாட்டின் பாரம்பரியக் கலாசாரப் பெருமைகளை உணர்த்தும் இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள்.

மேற்கூறிய எதையும் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, முடிந்தால் உங்கள் உறவினர்களின் வீடுகளுக்காவது விடுமுறைக்குச் சென்று வாருங்கள். அப்போது தான் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி என உறவுகளின் மகத்துவத்தைக் குழந்தைகள் உணர்வார்கள். வீணாக தொலைக்காட்சி, கணினி முன் அமர்ந்து மனதையும், வெயிலில் அலைந்து உடலையும் கெடுத்துக் கொள்ளாமல் விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாகப் பயன்படுத்திய திருப்தி நமக்குக் கிடைக்கும்.
தினமணி…


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 9:58 am

தேவை தன்னம்பிக்கையும், ஆர்வமும்
-----------

ஆர்வம்தன்னம்பிக்கை

இந்திய இளைஞர்கள் எந்தவிதத்திலும் மற்ற நாட்டினருக்கு குறைந்தவர்கள் அல்ல. ஆனால் ஒரே ஒரு குறை நம்மவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னார்வம் குறைவு.

எப்பாடு பட்டாவது படித்து முடித்து வேலையில் சேர்ந்து விட வேண்டும். அது அரசுத் துறையாகவோ அல்லது தனியார் துறையாகவோ இருக்கலாம். ஆனால் நிரந்தர வேலை, மாதா மாதம் சம்பளம் பெறுவது ஒன்றே இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோரின் லட்சியமாக உள்ளது.

சுயமாக தொழில் தொடங்கி நாமும் முன்னேறி மற்றவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுப்போம் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் மிகக் குறைவு. சுய தொழில் தொடங்க, இளைஞர்களை ஊக்குவிக்க அரசும் தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

சுய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கும், ஏற்கெனவே சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும், இலவச ஆலோசனைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) அளித்து வருகிறது.

மத்திய அரசின் விதிகளின்படி 8-ம் வகுப்பு தேறியவர்கள் முதல், இந்த பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் பெற முடியும்.

இந்தப் பணியில் மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.எம்.இ. முக்கிய பங்காற்றி வருகிறது. சுய தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கிண்டியில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதுதவிர கோவை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களில் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

என்னென்ன பயிற்சிகள்? டர்னர், மில்லர், பிட்டர், சிஎன்சி ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல், தயாரித்தல், உணவுப் பண்டங்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், நவ ரத்தினக் கற்கள் பட்டை தீட்டுதல், நகைகள் தயாரித்தல், இயந்திரவியல், பொறியியல், மின்சாரம், மின்னணுத் துறை, தோல், பீங்கான் மற்றும் கண்ணாடி, ரசாயணம் உள்ளிட்ட துறைகளில் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.

பொருத்தமான சுய தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழிலை பதிவு செய்வது எப்படி, உரிமம் எங்கு பெற வேண்டும், கடன் பெற என்னென்ன வழிகள் உள்ளன, தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது, தொழில் கூடங்களை நவீனமயமாக்குவது எப்படி என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் இலவசமாக இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பெட்டிக்கடை ஆரம்பிக்க விரும்புபவர்களிலிருந்து உற்பத்தித் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் வரை இந்த நிறுவனத்தை அனுகலாம்.

நூலகம்: எம்.எஸ்.எம்.இ. மையங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில், பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குவதற்கு உதவியாக 800-க்கும் மேற்பட்ட மாதிரி திட்ட அறிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை, தொழில் தொடங்க முனைவோர் பார்த்து பயன்பெறலாம். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு ஒரு முறை தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, மாவட்ட வாரியாக தயாரித்து வைக்கப்படுகிறது.
வங்கிகளுடன் கூட்டு: சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறும் வகையில், எம்.எஸ்.எம்.இ. நிறுவனம், இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது. வங்கிகள், கடன் கோரும் நபரின் தொழில் திட்டத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப கடன்களை வழங்குகின்றன.

புதிய திட்டங்கள்: சுய தொழில் தொடங்க முன்வருவோருக்கு, மூலதனத்தில் மானியம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் பிரதமரின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி ரூ. 25 லட்சம் வரையிலான திட்ட மதிப்புடைய உற்பத்தித் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு மூலதனத்தில் 15 முதல் 35 சதவீதம் வரை அந்தந்த தொழிலுக்கு ஏற்றபடி மானியம் வழங்கப்படும். இதுபோல் ரூ. 10 லட்சம் வரை திட்ட மதிப்புடைய சேவை நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கும் மூலதனத் தொகையில் 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.



வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 10:00 am

சர்க்கரையின் பிடியிலிருந்து தப்பிக்க…
-----

இது கம்ப்யூட்டர் யுகம். எல்லோருக்கும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. விளைவு, பெரும்பாலானோருக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை. கொஞ்ச நேரம் மின் வெட்டு ஏற்பட்டாலே, “உஸ்’, “உஸ்’….அப்பாடா…எனக் குரல்கள் கேட்கத் தொடங்கி விடுகின்றன.

எல்லாம் சதான். ஆனால், விரும்பியபடி வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாமல் இஷ்டப்படி வாழ்ந்தால், நோயின் தன்மைக்கு ஏற்ப டாக்டன் கிளினிக்கிலோ அல்லது மருத்துவமனையிலோ அவ்வப்போது பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தினம் உடற்பயிற்சி இல்லாமை, உணவுக் கட்டுப்பாடு இல்லாத வசதியான வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகத்து வருகிறது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல், அதிக எடை பிரச்னை உள்ளதா?

உடனடியாக எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கி விடுங்கள். ஏனெனில் அதிக எடை, உடல் பருமன் பிரச்னையாக மாறினால், சர்க்கரை நோய்க்கு சிவப்புக் கம்பளம் விக்கும். “சர்க்கரை’ வந்து விட்டதா? மருத்துவ அறிவியல் முன்னேற்றம் காரணமாக, “ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்’ (ஓ.ஜி.டி.டி.) ரத்தப் பசோதனை மூலம் கணையத்தில் இன்சுலின் சுரப்பின் செயல்பாட்டை எளிதாகத் தீர்மானித்துவிட முடியும்.

(ஓ.ஜி.டி.டி. பசோதனை குறித்த விவரங்கள், ஓ.ஜி.டி.டி. ரத்த சர்க்கரை அளவு அட்டவணை உள்ளிட்டவை டாக்டர் வி.பாலாஜி, டாக்டர் மாது எஸ். பாலாஜி ஆகியோன் சர்க்கரை நோய் குறித்த கட்டுரையில் இம் மலல் இடம் பெற்றுள்ளன.)

இன்சுலின் சீராகச் சுரக்கும் நிலையில்தான், ரத்தத்தில் உள்ள சர்க்கரை ஆற்றலாக மாறும். இன்சுலின் சுரப்பில் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகக்க ஆரம்பிக்கும். சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாகத் தெந்த உடனேயே காபி-டீக்கு சர்க்கரை போட்டுக் கொள்வதை நிறுத்திவிட வேண்டும்.

அடுத்தபடியாக ஒவ்வொரு வேளையும் சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு, அதற்கு ஈடாக பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக மதிய உணவு சாப்பிடும்போது, தொட்டுக் கொள்ளும் உணவுப் பண்டங்களாகிய கூட்டு, காய் ஆகியவற்றை முன்பைவிட அதிக அளவு சாப்பிடலாம். உருளைக் கிழங்கு சிப்ஸ், ஃபிரைடு ரைஸ் உள்பட எண்ணெய்யில் பொத்த பண்டங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மாலையில் டீ, போண்டா, பஜ்ஜி, வடை என இஷ்டம்போல் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை இல்லாத டீ-காபி மற்றும் சுண்டல் அல்லது முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடத் தொடங்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வடை அல்லது போண்டா சாப்பிடலாம்.

வடை, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிடும்போது, தூய்மையான காகிதத்தைக் கொண்டு அதில் உள்ள எண்ணெய்யை உறிஞ்சுவிட வேண்டும்.

அசைவம் சாப்பிடுவோராக இருந்தால், குழம்பில் போட்ட கோழிக்கறி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம்; மசாலா நிறைந்த குழம்பை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. வாரத்துக்கு ஒரு நாள் மஞ்சள் கரு இல்லாமல் முட்டை சாப்பிடலாம்.

காலை எழுந்தவுடன் சர்க்கரை இல்லாத காபி அல்லது டீ, வழக்கமான காலைச் சிற்றுண்டியின் அளவைச் சிறிது குறைத்துக் கொண்டு சாம்பாரை சிறிது அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுதல், சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையில் மோர் அல்லது இளநீர் குடித்தல், மதிய உணவில் சாதத்தின் அளவைக் குறைத்துக் கொண்டு காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்,

மாலையில் டீ-உடன் சுண்டல் அல்லது முளை கட்டிய பயறு வகைகளைச் சாப்பிடுதல், இரவுச் சாப்பாட்டிலும் காய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல், படுக்கச் செல்லும் முன்பு சர்க்கரை சேர்க்காத பால் குடித்தல் என தினச உணவுப் பட்டியலை அமைத்துக் கொள்ளலாம். மேற்சொன்ன உணவு முறை மாற்றத்துடன், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெய வந்தவுடனாவது தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

உடற்பயிற்சி செய்து பழக்கமே இல்லாதவர்கள், முதலில் காலையில் 10 நிமிஷம் “வாக்கிங்’ செல்லத் தொடங்க வேண்டும்; தொடர்ந்து ஒரு வாரம் சென்றவுடன், படிப்படியாக 15 நிமிஷம், 20 நிமிஷம் என “வாக்கிங்’ நேரத்தை அதிகத்து அதிகபட்சம் தினமும் அரை மணி நேரம் “வாக்கிங்’ செல்வதை பழக்கமாகக் கொள்ள வேண்டும்.




வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 10:02 am

ஐஸ்க்ரீமுக்கும் இருக்குங்க ஹிஸ்டரி…
------------

கத்தரி வெயிலில் “ஐஸ்க்ரீம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே உடலும் மனமும் சில்லிடும். வீட்டைச் சுற்றும் தள்ளுவண்டி ஐஸ் ஆகட்டும், இரவு நேர குல்ஃபி ஆகட்டும் அல்லது அடுக்குமாடி கட்டடங்களில் குளிர்சாதன அறையில் குளிரூட்டப்படும் ஐஸ்க்ரீம் ஆகட்டும் அத்தனைக்குமே மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அது சரி இந்த ஐஸ் க்ரீம் எப்படித் தோன்றியது?

ஐஸ்க்ரீமுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. “ஃப்ரோஸன் கஸ்டர்டு’, “ஃப்ரோஸன் யோகட்’, “சோர்பெட்’, “ஜெலடோ’ என்று பலப்பெயர்கள் இதற்கு உண்டு.

கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே ஐஸ்க்ரீம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கி.பி 37-68-ல் வாழ்ந்த ரோமப் பேரரசன் நீரோ மலைகளில் இருந்து ஐஸ்கட்டிகளை வெட்டிக் கொண்டு வரச்செய்து அதன் மேல்புறத்தில் பழத்தால் அலங்காரம் செய்து சாப்பிட்டுள்ளான். கி.பி.5-ம் நூற்றாண்டில் க்ரீஸ் நாட்டு மக்கள் வெண்பனியில் தேன், பழங்கள் சேர்த்து சாப்பிடுவார்களாம்.

கி.பி. 618-197-ல் வாழ்ந்த சீன அரசன் டேங் ஐஸ்கட்டிகளையும் பாலையும் சேர்த்து ஐஸ்க்ரீமை உருவாக்கும் முறையை பின்பற்றினான். சில நூற்றாண்டுகள் கழித்து 1295-ல் மார்கோ போலோ சீனாவுக்கு விஜயம் செய்தார். அப்போது அங்குள்ள ஐஸ்க்ரீம் தயாரிக்கும் முறையை இத்தாலிக்குக் கொண்டு சென்றார். இதனால் ஐரோப்பா கண்டம் முழுவதும் ஐஸ்க்ரீம் புகழ் பரவியது. அதற்கு முன்பு வரை ஐஸ்க்ரீமின் சிறப்பு விளம்பரப்படுத்தப்படவில்லை.

இந்த ஐஸ்க்ரீம் ஐரோப்பியாவுக்கும் இடம் பெயர்ந்தது. அதன் பின்பு படிப்படியாக ஐஸ்க்ரீம் ரெசிபிகள் உருவாக ஆரம்பித்தன.

பாரசீக சாம்ராஜியத்தில் பனியின் மீது திராட்சை ரசத்தை ஊற்றி விருந்துகளில் பறிமாறுவார்கள். அதுவும் கோடைக்காலத்தில்தான் இதனை விரும்பி உண்பார்கள். பாரசீகர்கள் பனியை சேமிக்க தரைக்கடியில் உள்ள பிரத்யேக அறைகளை உருவாக்கினர். அல்லது மலையின் உச்சியில் மீந்திருக்கும் பனியை சேகரித்து விருந்துகளில் பறிமாறுவார்கள்.

1533-ம் ஆண்டு இத்தாலிய சீமாட்டி ஒருத்தி பிரஞ்சு சீமான் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாள். அப்போது சீரின் ஒரு பகுதியாக “ஜெலடியரி’ எனப்படும் ஐஸ்க்ரீம் தயாரிப்பவர்களை இத்தாலியிலிந்து பிரான்ஸூக்கு கொண்டு சென்றாள்.
100 ஆண்டுகளுக்குப் பின்பு நான்காம் ஹென்ரியின் மகள் இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்லûஸ மணந்து கொண்டபோது ஐஸ்க்ரீம், ஆங்கிலக் கால்வாயைக் கடந்தது. முதலாம் சார்லஸ் ஒரு ஐஸ்க்ரீம் கலைஞனின் ரெசிபியில் கவரப்பட்டு, அந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்று அந்தக் கலைஞனுக்கு ஆயுள் முழுவதுக்கும் பெருந்தொகையை ஊதியமாக வழங்கிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் அந்த ஐஸ்க்ரீமுக்கு தனித்துவமான புகழ் கிடைக்கும் என நினைத்தார்.

இந்தியாவில்…
இந்தியாவைப் பொருத்தவரை, 16-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர்கள் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானும் இடையில் 800 கி.மீ. நீளம் உள்ள ஹிந்து குஷ் என்ற மலைத்தொடரில் இருந்து குதிரை வீரர்கள் மூலமாக ஐஸ் கட்டிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர். பழச்சாறு மூலம் தயாரிக்கப்பட்ட ஓர் இனிப்பை ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து விருந்துகளில் பறிமாறுவார்கள்.

ஐஸ்க்ரீம் ரெசிபிகள்: ஐஸ்க்ரீமுக்கென்று தனியாக ரெசிபிக்கள் உருவாக ஆரம்பித்தது 18-ம் நூற்றாண்டில்தான். சமையல் முறைகள், குறிப்புகள் அடங்கிய ஆங்கிலத்தின் முதல் இதழான “மிசிஸ். மேரி ஏல்ஸ் ரெசிப்ட்ஸ்’-ல் 1718-ம் ஆண்டு முதல் ஐஸ்க்ரீம் ரெசிபி வெளியானது.

குளிர்சாதனப் பெட்டிக்கு முன்பு…
நவீன குளிரூட்டும் முறை கண்டுபிடிக்கும் முன்பு ஐஸ்க்ரீம் என்பது பெரும் செல்வந்தர்களுக்கே உரியதாக இருந்தது. பண்டிகைகளில், விருந்துகளில் மட்டுமே ஐஸ்க்ரீம் இடம்பிடிக்கும். அதனை உருவாக்குவதற்கும் கடினமாக உழைக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை உறைந்து போயிருக்கும் ஏரி, குளங்களிலிருந்து குளிர்காலத்தில் வெட்டி எடுத்து வருவார்கள். நிலத்தில் துளையிட்டு அதனை சேமித்து வைப்பார்கள். அதன் பின்பு நிலத்தில் மரத்தினாலான பெட்டிகளில் அல்லது செங்கலால் உருவாக்கப்பட்ட ஐஸ் வீடுகளில் வைக்கோல் பரப்பி அதன் மீது ஐஸ் கட்டிகளை வைப்பார்கள்.

மிகவும் புகழ் பெற்றத் தலைவர்கள், விவசாயிகள், தோட்ட முதலாளிகள், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்ஸன் உள்ளிட்டோர் குளிர்காலத்தில் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வந்து சேமித்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரெட்டிரிக் டியடோர் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வந்து, அதனை ஒழுங்கான வடிவங்களாக செதுக்கி, உலகம் முழுவதற்கும் கப்பலில் ஏற்றுமதி செய்து பெரும்பணம் படைத்தான்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக்கப் ஃப்யூசெல் என்பவர்தான் முதன் முதலில் ஐஸ்க்ரீம் விற்பனையை பெரிய அளவில் செய்யத் தொடங்கினார்.

“பாட் ஃப்ரீஸர்’ முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் உப்பு மற்றும் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதனுள் ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் ஐஸ்க்ரீம் தயாரித்தனர். இதற்கு “பாட்-ஃப்ரீஸர்’ முறை என்று பெயர். இதில் பெரிய பாத்திரத்திற்குள் இருக்கும் உப்பும், ஐஸ்கட்டியும் சிறிய பாத்திரத்தினுள் வைத்துள்ள ஐஸ்க்ரீம் செய்யத் தேவையான பொருள்களின் வெப்பத்தை குறைத்து அதனை உறைய வைக்கும்.

சில காலத்திற்குப் பிறகு ஒரு பாத்திரத்தினுள் ஐஸ்கட்டிகள் மற்றும் உப்பைப் போட்டு, ஓர் உருளைக்குள் அடைக்கப்பட்ட ஐஸ்க்ரீம்களை அதனுள் வைப்பார்கள். அதில் ஓர் கைப்பிடியும் இருக்கும். கைப்பிடியைச் சுற்றச் சுற்றச் உருளைக்குள் உள்ள ஐஸ்க்ரீம் கெட்டியாகிவிடும். இந்த இயந்திரத்தை யார் உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் 1843-ம் ஆண்டு நேன்சி ஜான்சன் என்பவர் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். “பாட் ஃப்ரீஸர்’ முறைக்குப் பின்பு இந்தப் புதிய முறை வழக்கில் இருந்தது. நேன்சி, ஐஸ்க்ரீம் இயந்திரத்திற்கு காப்புரிமை பெற்ற பிறகு பலர் அந்த இயந்திரத்தை மேம்படுத்தி காப்புரிமை பெற்றனர்.

ஐஸ்க்ரீம்களை தொழிற்சாலையில் பதப்படுத்தும் முறையை 1870-ம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். இயற்கையான ஐஸ் கட்டிகளை வெட்டியெடுத்து சேமிக்கும் முறை இதன் மூலம் கைவிடப்பட்டது. 1926-ம் ஆண்டு நவீன ஐஸ்க்ரீம்கள் தொழிற்சாலைகள் தோன்றி, செயற்கை ஐஸ்கட்டிகள் உருவாக்கப்பட்டன.

+

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 4 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum