தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிசயமான அருமையான கட்டுரைகள்

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 27, 2015 9:37 am

First topic message reminder :

சொந்த, பந்தங்களை மறந்து துறவிகளாக வாழும் சந்நியாசிகளுக்கு சொந்த வீடு என்று எதுவும் இல்லாததைப் போல மன்னார் வளைகுடா கடலில் மிக அதிகமாக வாழும் இந்த அரியவகை உயிரினமும் சொந்தவீடு இல்லாமல் சங்குகளின் கூடுகளுக்குள் தங்கி உயிர் வாழ்கின்றன இவ்வகை நண்டுகளை சந்நியாசி நண்டுகள் என்று அழைக்கிறார்கள்.

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Sannyasi-300x186

இவை எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் விதம் மற்றும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

“”பாகுராய்டே என்ற விலங்கியல் பெயருடைய இச்சிற்றினங்களில் மொத்தம் 1100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிக்காமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை தன் வளர்ச்சிக்கேற்றவாறு, இறந்து வெறும் கூடுகளாக மட்டுமே இருக்கக் கூடிய சங்குகளின் ஓடுகளுக்குள் தன் உடலை நுழைத்துக்கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டியவாறு இருக்கும். எதிரிகள் வருவது தெரிந்தால் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும். தன் உருவத்துக்கேற்றவாறு சங்குகளின் ஓடுகள் அமையாதபோது எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றன.

புத்திசாலியாக இருக்கும் சில சந்நியாசி நண்டுகளோ சின்னஞ்சிறு கடல் தாமரைகளை சங்கு ஓடுகளின் மேற்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளும். எதிரிகள் இந்த நண்டுகளைப் பிடிக்க வரும்போது கடல் தாமரைகள் ஆடுவதைப் பார்த்து பயந்தோடிவிடும். சந்நியாசி நண்டுகள் சாப்பிட்டுவிட்ட போட்ட புழுக்கள், பூச்சிகளின் மிச்சத்தை கடல் தாமரைகள் சாப்பிட்டுக் கொள்கின்றன. நண்டின் மேற்புற ஓடுகளில் ஓட்டிக் கொண்டு அதற்கு பாதுகாப்பாகவும் கடல் தாமரைகள் இருக்கின்றன. இப்படியாக இரண்டும் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டு கடலுக்குள் உயிர் வாழ்கின்றன.

இந்நண்டுகளின் உடலானது நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தையும் அதன் அடியில் கொக்கி போன்ற உடலமைப்பையும் உடையது. இந்தக் கொக்கியே சங்கின் கூடுகளை நன்றாக பற்றிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. நீண்டதும், வளைந்ததுமான வயிறானது சங்கின் ஓடான கூடுகளுக்குள் இருக்கும் வளைவுகளுக்குள் உருண்டு, திரண்டு இருக்கும்.பொதுவாக சந்நியாசிகள் தங்கள் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதைப் போலவே இந்த நண்டும் அவை வாழும் வீட்டை(சங்கின் கூடுகளை) மாற்றிக் கொண்டே இருப்பதால் இதற்கு துறவி நண்டு என்றும் சந்நியாசி நண்டுகள் என்றும் அழைக்கிறார்கள்.

புண்ணிய ஸ்தலங்களில் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடற்கரையோரங்களில் இவ்வகை நண்டுகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். கடலுக்கு அடியில் கூட்டம், கூட்டமாக ஒன்று சேர்ந்தும் வாழும் இவை தங்களுக்குள் ஒரு குழுவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இக்குழுவில் பல்வேறு வயதிலும் உருவத்திலுமான நண்டுகளும் இடம் பெற்றிருப்பதால் இவை தங்களுக்குள் ஒரு வரிசையை ஏற்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றும் அதனது உடல் உருவத்திற்கேற்றவாறு சங்கின் கூடுகளை மாற்றிக் கொள்கின்றன. அதாவது சிறிய நண்டு ஓரளவு வளர்ந்த பிறகு தன் வளர்ச்சிக்கு தக்கவாறு பெரிய சங்கின் கூட்டிற்குள் போய் நுழைந்து கொள்ளும்.

ஒற்றுமை இல்லாத கூட்டமாக இருந்தால் சில நேரங்களின் வெற்று சங்குகளின் கூடுகளுக்காக சண்டை நடந்து அதில் வெற்றி பெறும் நண்டு அந்த சங்கின் கூட்டை தன் சொந்த வீடாக ஆக்கிக் கொள்ளும். கரிபியின் துறவி நண்டு, இக்குடேரியன் துறவி நண்டு, ஆஸ்திரேலியன் துறவி நண்டு போன்றவற்றை மேலைநாடுகளில் வீடுகளில் வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.

இவ்வகை நண்டுகள் 32 ஆண்டுகள் வரையும் உயிர்வாழ்வதாகவும் தெரிய வந்துள்ளது. நீண்ட கொம்புகளும் நீண்டு வளர்ந்த வயிறும் உடைய இந்த உயிரினத்தின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்சுகள் இருந்தாலும் நிரந்தர வீடில்லாமல் சங்கின் கூடுகளை சார்ந்து வாழும் வித்தியாசமான உயிரினமாக இது இருக்கிறது” என்றார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:30 pm

உங்கள் கையில் இருப்பது கள்ள நோட்டா?
-----------
பெரும்பாலும் நாம் நோட்டுகளை கிழிந்திருக்கிறதா என்று மட்டுமே பார்த்து வாங்குவோம். ஆனால் இப்போதெல்லாம் நாம் வாங்கும் நோட்டு உண்மையான நோட்டா என்று பார்த்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு கள்ள நோட்டின் புழக்கம் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வெறும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான் கள்ள நோட்டுகளாக வந்தன. தற்போது 10 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளில் கூட கள்ள நோட்டுகள் வருகின்றன.

எனவே, பொதுவாக நமது ரூபாய் நோட்டுகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதை வைத்துத்தான், கள்ள நோட்டுகளை கண்டறிய முடியும்.

• நோட்டின் முன்பக்கத்தில் ரூபாய் நோட்டின் மைய உச்சியில் “ரிசர்வ் வங்கி’ என இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். அதற்குக்கீழ் “கியாரண்டி பை தி சென்ட்ரல் கவர்மென்ட்’ என்ற வாக்கியம் இரு மொழிகளிலும் இருக்கும்.

• ரூபாய் நோட்டின் மேல் வலது மூலையிலும் கீழ் இடது மூலையிலும் ரூபாய் நோட்டின் எண் குறிக்கப்பட்டிருக்கும்.
• நடுப்பகுதியில் எவ்வளவு ரூபாய் என்பது எண்ணாலும் எழுத்தாலும் இருக்கும். அதற்கு கீழே ரிசர்வ் வங்கி கவர்னர் (ஆங்கிலம், இந்தியில்) கையெழுத்திருக்கும்.

• இடது கீழ் மூலையில் அசோக சக்கரம். வலது கீழ் மூலையில் ரிசர்வ் வங்கிச் சின்னம். வலப்புறம் தேசத் தந்தை காந்தியடிகளின் உருவம், எதிர்ப்புற வெள்ளைப் பகுதியிலும் நிழலாகத் தெரியும்.

• வெளிச்சத்தில் பார்த்தால் சங்கேதக் குறியீடுகள் அடங்கிய கோடு போன்ற நூலிழை தெரியும்.

• பின்பக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி என (இந்தியில்) குறிப்பிட்டு கீழ்ப்பகுதியில் வலது- இடது மூலைகளில் ரூபாய் மதிப்பு எழுத்தால் (இந்தியில்) எழுதப்பட்டிருக்கும்.

• இடது புறத்தில் 15 இந்திய மொழிகளில் ரூபாய் மதிப்பு எழுத்தால் குறிப்பிடப்பட்டிருக்கும். வலதுபுறம் வெள்ளைநிற வெற்றிடப் பகுதி.

• ரூபாயின் கனம் சீரான விகிதத்திலேயே இருக்கும். தாளின் கனத்தில் லேசான சந்தேகம் வந்தாலே புகார் செய்யப்படவேண்டும்.

• புதிதாக வரும் ரூபாய் நோட்டுகளில் ரூபாய்க்கான புதிய சிம்பல் இடம்பெற்றிருக்கும். நோட்டு புதிதாக இருந்து, அதில் அந்த சிம்பல் இல்லை என்றாலும், ரூபாய் நோட்டின் நடுவில் கீழே, நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு இல்லாமல் இருந்தாலும் அதனை நல்ல நோட்டா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:32 pm

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்
--------------
தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்த நல்ல விஷயங்களில் ஒன்றையாவது நமது இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறதா? செல்பேசியில் சிக்கி சீரழிந்த நமது இளைஞர்கள், தற்போது, செல்பேசியில் இணைய சேவையைப் பெற்று மேலும் வேகமாக அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையமும், தொலைத்தொடர்பும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது.
படிப்புக்காகவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் எத்தனை இளைஞர்கள் கம்ப்யூட்டரையோ, மொபைலையோ பயன்படுத்துகிறார்கள்.. மிகச் சிலரே. அதற்கு பதிலாக பேஸ்புக் எனப்படும் இணையத்தில் அல்லவா தங்களது வாழ்நாளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பொறியியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலை செய்யும் இளைஞர்களிடம் சமுதாயத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. தற்போது சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த விஷயம் பூஜ்யமாகத்தான் இருந்தது.

இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டால் சாதாரணம் தான். ஆனால், நமது இளைய சமுதாயத்தின் பொது அறிவுக்கு இவர்கள் ஒரு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அது சமுதாயத்தின் அசாதாரண விஷயம் என்பது தெரிய வரும்.

சமுதாயத்தில் தற்போதிருக்கும் ஒரு அவல நிலை குறித்துக் கூட இளைஞர்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு உடனடி காரணத்தையும் பலர் வைத்திருக்கிறார்கள். அதாவது, அதிகப்படியான கல்விச் சுமையை காரணம் கூறுகிறார்கள். கல்விக் சுமை காரணமாக செய்தித் தாள் படிக்க முடியாமல் போகும் அதே இளைய சமுதாயம், மொபைலில் பேசவோ, பேஸ்புக் அப்டேட் செய்யவோ தவறுவதில்லை.

நூறில் 25 சதவீதத்தினர் செய்தித்தாள் படித்தால், நூற்றுக்கு நூற்று ஐம்பது பேர் பேஸ்புக் தொடர்பில் இருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் பார்ப்பது? நமக்குத் தேவையானது, நமது நண்பர்களைப் பற்றி கிண்டல் செய்வதும், நமது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து அதற்கு பல நூறு லைக் பெறுவதுமே.

இதெல்லாம் இளைய சமுதாயத்தின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இது ஒரு போதையாக மாறிவிடக் கூடாது. இதனால் எதிர்காலமே சூன்யமாகிவிடக் கூடாது என்பதுதான் தற்போதைய கவலை.
இணையத்தின் மூலம் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு செய்தியையாவது படிப்பதையும், ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதையும், படிப்பு மற்றும் பணி நிமித்தமான விஷயங்களை படித்து உங்களை அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து உங்களை அறிவுஜீவியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வழி பின்பற்றி உங்கள் நண்பர்களும் வருவார்கள்.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்லூரி படிப்பு மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தை அடைய போதுமானதாகாது என்பதை நினைவில் கொண்டு இனியாவது இணையத்தை முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவோம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:40 pm

வயிறு நிரம்புகிறது, உடம்போ பட்டினி கிடக்குது
--------------

ஆரோக்கியமான உணவுஉணவுசத்தான உணவுசாப்பாடு
மனித இனத்தின் முதல் எதிரி நாக்குதான். பலரும் நாக்கு ருசிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டா மனசும் வயிறும் நிரம்பிவிடும். ஆனா உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைக்கிறதா என்று பலரும் யோசிப்பதே இல்லை.

நம் முன்னோர்கள் ரொம்பப் புத்திசாலிகள். எல்லாச் சத்துகளும் உரிய அளவில் கிடைக்கும் வகையில்தான் உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தனர். ஆனால் காலப் போக்கில் மேற்கத்திய நாகரீகத் தாக்கம், பொருளாதார, சமூக நிலையில் ஏற்படுள்ள அதிவேக மாற்றங்களால் நமது உணவுப் பழக்க வழக்கத்திலும் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மண் பானையில் சாதம் வடித்தால் நல்லதுதான். அதற்காக தற்போது மண் பானையைத் தேடி அலைய முடியாது. மண் பானைச் சமையல் நடைமுறைக்கும் ஒத்துவராது.

ஆனால் நாம் என்ன சாப்பிடுகிறோம். அதில் என்னென்ன சத்து இருக்கிறது. உடலின் அன்றாட இயக்கத்துக்குத் தேவையான சத்து நம் உணவில் இடம் பெற்றுள்ளதா என்பதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஏதோ “வெந்ததைத் தின்னு விதி வந்தால் சாவோம்’ என்ற நிலையில்தான் காலத்தைத் தள்ளிக்கொண்டு இருக்கிறோம். ”

கையில வருது; வாயிலே போகுது; வயிறு ரொம்புது ஆனா உடம்பு மட்டும் பட்டினி கிடக்கு’. நம்மில் பெரும்பாலானோரது நிலை இதுதான். பிடித்ததை விரும்பி வயிறு முட்டச் சாப்பிடுகிறோம். உடலுக்குத் தேவையான சத்து அதில் உள்ளதா. அதனால் உடல் நலத்துக்கு நன்மையா? கெடுதலா எனக் கவலைப்படுவதில்லை. இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் உரிய விகிதத்தில் கிடைப்பதில்லை.

ரோடு மோசமாக இருக்கும்போது காரை எவ்வளவு சிறப்பாக சர்வீஸ் செய்தாலும் பயன் இல்லை. அதுபோல் நோய் வந்து எவ்வளவு சிறப்பாகச் சிகிச்சை அளித்தாலும் சமச்சீரான உணவு சாப்பிட்டு உடல் நலத்தைப் பேணிக் காக்காவிட்டால் உரிய பலன் இல்லை. நோய் திரும்பவும் தாக்கும்.

உடலின் தேவையின் அடிப்படையில் ஊட்டச் சத்துகள் இரு வகையாகப் பிக்கப்பட்டுள்ளது. அவை பெரிய ஊட்டச்சத்துகள் (Macro Nutrients). சிறிய ஊட்டச்சத்துகள் (Micro Nutrients). கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரதம், கொழுப்பு ஆகியவை பெரிய ஊட்டச்சத்துகளாகும். பெரிய ஊட்டச் சத்துகள் உடலுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. உடல் இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் எரிசக்தியாக இவை செயல்படுகின்றன. வைட்டமின் மற்றும் தாதுப்பொருள்கள் சிறிய ஊட்டச்சத்துகள் ஆகும். இவை உடலுக்குச் சிறிதளவே தேவை என்றாலும் உடல் இயக்கத்துக்கு மிக மிக அவசியமானது.

சத்துகள் அல்லாத பிற பொருள்கள்: நமது உணவில் ஊட்டச்சத்துகள் அல்லாத பிற பொருள்களை வாசனை, ருசி, செரிமானத்துக்காகச் சேர்க்கிறோம். பூண்டு, சீரகம், வெந்தயம் போன்ற பொருள்கள் ஊட்டச்சத்துகள் ஆகாது. ஆனால் இப் பொருள்களில் வாசனை மட்டுமின்றி சில மருத்துவக் குணங்களும் உள்ளன.

உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்: புரதச் சத்து அடங்கிய உணவுகள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. (உதாரணம்) பருப்பு, பயறு வகைகள் பால், இறைச்சி, மீன், பறவை இறைச்சி, போன்றவற்றில் புரதச் சத்து அதிகமாக உள்ளது.

உடலுக்குச் சக்தி அளிக்கும் உணவுகள்: கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவுகள் உடலுக்கு சக்தி அளித்து செயலாற்றச் செய்கின்றன. அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகள், சர்க்கரை, கிழங்கு வகைகள் ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது.

உடலைப் பராமரித்து பாதுகாக்கும் உணவுகள்: வைட்டமின்கள், தாதுப் பொருள் அடங்கிய உணவுகள் உடலைப் பாதுகாத்து பராமரிக்கின்றன. காய், கனிகள் மற்றும் பால் போன்றவற்றில் வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் உள்ளன.
இந்த உணவு வகைகள் உரிய விகிதத்தில் கலந்திருப்பதே சமச்சீரான உணவு. சத்துகள் சமவிகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது அன்றாட சாப்பாடு அமைய வேண்டும்.

எனவே, சாப்பிடும் உணவை சத்தான உணவாக இருக்கும்படி அமைத்துக் கொள்வோம்.. ஆரோக்கியத்தை காப்போம்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:42 pm

தாயின் மனநிலையை கருவிலேயே அறியும் குழந்தை
-------------------

பொதுவாக நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை நம்முடன் நெருங்கிப் பழகியவர்கள்தான் எளிதில் கண்டறிய முடியும். சில சமயங்களில் அவர்களால் கூட நமது கோபத்தையோ, அழுகையையோ புரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது.

ஆனால் ஒரு தாய் எந்த மனநிலையில் இருக்கிறாள் என்பதை, அவளது கருவில் உள்ள குழந்தை நன்கு அறிந்திருக்கும். இது பழங்காலத்தில் இருந்தே கூறப்பட்டு வருகிறது. அதனால்தான், கர்ப்பிணிகள் அழக் கூடாது. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக பூ முடிப்பு, வளைகாப்பு போன்ற சடங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

குழந்தையை கருவில் சுமந்திருக்கும் போது தாயின் மனநிலை எவ்வாறு இருந்ததோ அதனை பிறந்த குழந்தை பிரதிபலிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஏதோ ஒரு வகையில் தனது தாயின் மனநிலையை அறிந்து கொள்ளும் திறன் பெற்ற குழந்தைக்கு, தனது தாய் ஏதேனும் மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தால் அந்த நேரத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சியிலும் சற்று மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அழுது கொண்டே இருப்பது, ஒரு விஷயத்தை நினைத்து பயப்படுவது, மகிழ்ச்சியாக இருப்பது, தைரியமாக பிரச்சனையை எதிர்கொள்வது போன்று எந்த விதமான உணர்வை தாய் அதிகமாகக் கொண்டிருந்தாலோ, அந்த உணர்வின் பாதிப்பு குழந்தை பிறந்த பிறகு ஓராண்டு வளர்ச்சியில் தெரியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கருவுற்ற காலத்தில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களுடன் கழித்த பெண்ணிற்குப் பிறகும் குழந்தைக்கும், மிகவும் மன அழுத்தத்துடன் கர்ப்ப காலத்தை சந்தித்த பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் அதிக வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால்தான் கர்ப்பக் காலத்தில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள். மேலும், தாயின் மன நிலையை குழந்தை எவ்வாறு தெரிந்து கொள்கிறது என்று ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:43 pm

ராஜாஜியின் அதிரடி
-------------
தண்டி யாத்திரையைக் காந்தியடிகள் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் “வேதாராண்யம்’ நோக்கி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்தத் தொண்டர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை யாரும் வரவேற்கவோ, உபசரிக்கவோ கூடாது என ஆங்கில அரசு தடை விதித்திருந்தது. அப்படியும் ஒரு காந்தியவாதி ஓர் இரவு தன் வீட்டில் அனைவருக்கும் உணவு அளித்தார்.

பசியோடிருந்த தொண்டர்கள் ஆவலுடன் உணவு உண்டனர். அப்போது ஒரு தொண்டர், “”இந்தப் பாயசத்தில் இன்னும் கொஞ்சம் இனிப்பு சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார்.

அவரருகே இருந்த ராஜாஜி சட்டென அவரைப் பார்த்து, “”இப்படி நாக்கு ருசி உடையவர்களெல்லாம் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தேவையில்லை” எனக் கூறி அவரை வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:44 pm

பேச்சைக் குறைத்து ஆயுளைக் கூட்டுவோம்
-----------------
பேசுவதைக் குறைத்துக் கொண்டால் எவ்வாறு கதிர்வீச்சில் இருந்து தப்பிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஆம். செல்போனில் பேசுவதைக் குறைத்துக் கொண்டால் கதிர்வீச்சில் இருந்து நிச்சயம் தப்பித்துக் கொள்ளலாம்.

அதாவது, செல்போன் பேசும் போது அதில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்குகின்றன. இதனால் மூளை மற்றும் தலைப் பகுதிகளில் ஏராளமான பிரச்னைகளும், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுபோன்ற அபாயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் செல்பேசியில் மணிக்கணக்கில் பேசுவதைத் தவிர்க்கலாம்.

ஆனால், நீங்கள் செல்போன் பயன்படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் கையில் வைத்திருக்கும் செல்பேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும்.

நம்மூர்களில் அதிகரித்து வரும் செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் தான் சின்னஞ்சிறு குருவி வகைகள் காணாமல் போய்விட்டன என்பதை மனிதன் மிக தாமதமாகவே அறிந்து கொண்டுள்ளான். ஆனாலும், அதற்காக எந்த முயற்சியையும் அவன் எடுக்கப்போவதில்லை.

எப்படியாகினும், செல்போன் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழி முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
செல்பேசியில் பேசுவதை முடிந்த அளவுக்கு தவிருங்கள். அலுவலகம் மற்றும் வீடுகளில் லேண்ட்லைனைப் பயன்படுத்தலாம். மேலும், ஹெட் போன் போன்றவற்றையும் பயன்படுத்துவதால் பாதிப்பு குறையும்.

நண்பர்களுடன் வீண் அரட்டை அடிக்க வேண்டும் என்றால், அதற்கு குறுஞ்செய்தி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்க வேண்டாம்.

செல்பேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம். அவ்விடங்களில் கதிர் வீச்சு பாதிப்பு அதிகம் ஏற்படும்.

தூங்கும் பொழுது போனை அருகிலேயோ, தலைக்கு அருகிலோ வைத்து கொண்டு தூங்கும் பழக்கத்தை உடனடியாக விட்டுவிடுங்கள். செல்பேசி என்றில்லை, எந்த எலக்ட்ரானிக் பொருளையும் தலைக்கு அருகில் வைக்காதீர்கள்.
ஒருவரை நாம் செல்பேசியில் அழைக்கும் போது அவர் பேச எடுத்தவுடன் காதில் வையுங்கள். ரிங் போகும் போது கையில் வைத்து அதனை பார்த்துக் கொண்டிருப்பது நல்லது. ரிங் போகும் போதுதான் அதிக கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுகிறது.
கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

செல்பேசியில் பேசும் பொழுது கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். அதிகம் மூடியபடி பேசினால், கதிர்வீச்சு அதிகமாகத் தேவைப்படும் நிலை ஏற்படலாம்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 01, 2015 8:46 pm

குழந்தைகளையும் தாக்கும் மனச்சோர்வு
---------------
மனச்சோர்வு என்பது பெரியவர்களை மட்டும் அல்ல, சிறார்களையும், இளம் வயதினரையும் கூட தாக்குகிறது. ஆனால், மனச்சோர்வுக்கான அறிகுறிகள் தெரிந்தும், பெற்றோரும், ஆசிரியர்களும், அவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள், அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படாது என்று தவறாக கருதி விடுகின்றனர்.

ஆனால், உண்மை அவ்வாறு இருப்பதில்லை. பல்வேறு காரணிகளால் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் கூட மனச்சோர்வு ஏற்படுகிறது.

மனச்சோர்வுற்ற சிறாருக்கும், பதின்மவயதினருக்கும் பரிவு நிச்சயமாகத் தேவை. ஆனால் அது மட்டுமே போதாது. மேலும், வீட்டில் உள்ள பிரச்னைகள் சில நேரங்களில் மனச்சோர்வுக்கு காரணமாக இருக்கலாம். பெரும்பாலான இளைஞர்களுக்கு வெளிவட்டார பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் காரணமாகவும் மனச்சோர்வு ஏற்படுகிறது. எனவே, நமது வீட்டில் இருந்து கிளம்பும் குழந்தைகள் சந்திக்கும் நபர்கள், அவர்களது அனுபவங்களை நாம் காது கொடுத்து கேட்க வேண்டும்.

சிறுவருக்கோ, இளைஞருக்கோ மனச்சோர்வு இருப்பது தெரிய வந்தால், அதற்கான காரணங்களை கண்டுபிடித்து அதனை மாற்ற முயற்சிகள் எடுத்தால் மனச்சோர்வில் இருந்து விடுபட நாம் உதவுவதற்கு வழி ஏற்படும். மனச்சோர்வு என்றதும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.

அன்பாகப் பேசி, அவர்களது குறையை எடுத்துக் கூறாமல், அவர்களது நிறைகளை எடுத்துச் சொல்லி, அவர்களிடம் இருக்கும் நற்பண்புகளையும், அதனால் அவர்களை மிகவும் பிடிக்கும் என்பது போன்ற வார்த்தைகளையும் இதமாகப் பேச வேண்டும்.

மனச்சோர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களுக்கு நாம் பெரிய பிரச்னையாகிவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by செந்தில் Tue Dec 01, 2015 8:58 pm

கைதட்டல் சிறப்பான கட்டுரைகள் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 02, 2015 7:00 pm

சிறப்பான கட்டுரைகள்

மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by முரளிராஜா Sat Dec 05, 2015 3:37 pm

நன்றி இனியவன் அவர்களே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 08, 2015 3:11 pm

நன்றி இனியவன் அவர்களே

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 08, 2015 5:30 pm

3 பிஸினெஸ் தந்திரங்ள்
கொஞ்சம் பெருசுதான் படியுங்கள்
ஒரு 5 நிமிடம்!!
******★*****************************************-**

1⃣ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது.வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?" அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.
அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு " தம்பி
இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார். மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.
முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைது சென்று விட்டனர். அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார்.
பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"

2⃣.பிசினஸ் தந்திரம்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.
அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

3⃣பிஸினெஸ் ரகசியம்

சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித். அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!
கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார். ஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார். சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!
நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மகா சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by செந்தில் Tue Dec 08, 2015 8:24 pm

கைதட்டல் அருமையான கட்டுரைகள் .நன்றி அண்ணா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 09, 2015 10:29 am

அருமையான கட்டுரைகள் .நன்றி அண்ணா

நன்றி நன்றி
கருத்துக்கும் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by முரளிராஜா Mon Dec 14, 2015 10:21 am

பகிர்வுக்கு நன்றி இனியவன் அவர்களே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 14, 2015 10:27 pm

பகிர்வுக்கு நன்றி இனியவன் அவர்களே

மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 17, 2015 1:00 pm

மரம் வளர்ப்போம் வாருங்கள்
----------------
மரம் ஒரு வரம்:

பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.

காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.

இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.

காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை, எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை தடுக்க 700 கோடி மரங்கள்: ஐ.நா. திட்டம் :

புவி வெப்பமடைவதால் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக உலகம் முழுவதும் 300 கோடி மரங்களை ஐ.நா நடவு செய்துள்ளது. இந்நடவடிக்கையில் மொத்தம் 700 கோடி மரங்களை நடவு செய்ய முடிவு செய்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கரியமில வாயுவை உறிஞ்சும் தன்மை மரங்களுக்கும் காடுகளுக்கும் மட்டுமே உண்டு. மாறாக காடுகள் அழிக்கப்படுவதனால் மனிதனால் உருவாக்கப்படும் கரியமில வாயு மொத்த கரியமில வாயு உற்பத்தியில் 20% பங்களிப்பு செய்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சுற்றுச்சூழல் திட்டம், உலக வேளாண் காடுகள் மையம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் கடந்த 2006இல் மரங்கள் நடவு செய்யும் நடவடிக்கை துவக்கப்பட்டது.

இந்த மரங்கள் நடும் திட்டத்தில் தற்போது எத்தியோப்பியா 72.5 கோடி மரங்களை நடவு செய்து முதலிடத்திலும், துருக்கி 70 கோடி மரங்களை நடவு செய்து 2வது இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

இப்பட்டியலில் மெக்சிகோ (47,24,04,266 மரங்கள்) 3வது இடத்திலும், கென்யா (13,98,93,668 மரங்கள்) 4வது இடத்திலும், 13,74,76,771 மரங்களை நட்டு கியூபா 5வது இடத்திலும் உள்ளன.

உலக நாடுகளின் சுற்றுச்சூழல் மையங்கள் மரம் நடும் நடவடிக்கைகளில் தங்களது கவனத்தை திருப்ப வேண்டும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வ தேச வன ஆண்டு 2011


2011 சர்வ தேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.


உலக வனங்கள்

இந்தியாவைப் பொறுத்தவரையில் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதில் பெருமளவு வன பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிளாக மாறி வனபாதுகாவலர்களான வனவாசிகளுக்கும், அரசுகளுக்கும் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் படிக்கிறோம். எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரமான வனத்தை பற்றி அக்கரை கொள்ளுகிறோமா? என்றால் சற்று கவலையளிப்பதாகத்தான் உள்ளது.


தமிழகத்தின் குறைந்த, அதிக வனமுள்ள மாவட்டங்கள்
தமிழகத்தைப் பொறுத்த வரையில் டெல்டா மாவட்டங்களில் வன அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் போது பெருமளவு நஷ்டத்தை மாநிலம் அடைய வேண்டியுள்ளது.

இந்த ஆண்டில் நமது குழந்தைகளின் வாழ்க்கையில் உண்மையான அக்கரை கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களின் நல்வாழ்விற்காக பொன்னையும் பொருளையும் சேர்ப்பதை சற்று குறைத்து வாழ்வாதாரமான சுத்தமான காற்று, மழை இவற்றுக்கு வனங்கள் தேவை என்பதை உணர்ந்து அதனை பாதுகாக்க நம்மாலான உதவிகளை செய்தாலே போதும் வனங்கள் விரிவடைந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் இதில் சிறப்பாக பங்களிக்க வேண்டும்.

மரம் வளர்ப்பின் சிந்தனைகள்:

மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல… ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒருமித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினைஅரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்இருக்கின்றன. ஆனால்…. இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்பெறுகிறதா? இல்லை… ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சாரஅமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்றசெயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை… ?

அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000 வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல…. அமைச்சர் நட்டிய மரக்கன்றுஎனும் செய்தி மட்டும்… அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படிதான் இன்று அரசின் செயல் திட்டங்கள்… நாம் இங்கே அரசினை சாடுவது நம் நோக்கம அல்ல… நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்… மர வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்… நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்… நாம் தான் அரசு என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு… நாமும் மானிடன் தான் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்… எங்கள் தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள் நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம்.இருப்பவர்கள் இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை… எனும் நிலை கோண்டு வருவோம்… வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு வருவோம்.

நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு ஒப்பந்த அடிப்படையில் நாம் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறோம்… உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும், உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள் இங்கே நம் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்… இது நாம் வாழும் இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்…


ஒரு நிமிடம் கண்ணை மூடி நம் ஊரின் மழை கால இயற்கை நினைத்து பாருங்கள்
ஊரின் ஆறு ஓடை நீர் நிரம்பி அழகான அந்த காலம் இன்று இல்லை என்ன காரணம் ?
சரியான நேர மழை இல்லாதது ஒரு காரணம் இதற்க்கு முக்கிய காரணம் மரம் இல்லாமல் நம் ஊர் போட்டால் காடாக மாறி வருவது ஒரு காரணம்!
நாம் படித்து இன்று அமெரிக்கா லண்டன் துபாய் சிங்கப்பூர் என்று நம் வாழ்க்கை நிலை மாறி விட்டது, ஏன் நம் நம் ஊரை பற்றி நினைக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால் தான் நம் ஊருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய முடியாமல் இருக்கிறோம்.

அதிகம் வேண்டம் நம் ஊரில் நம் படித்த பள்ளிகள்உள்ளன அதை சுற்றி மற்றும் பள்ளிகூட உள்பகுதிகளில் மரம் நட்டு நம்மால் முடிந்தசெய்யலாம். அரசியல்வாதி போல் ஒரு நாள் மரம் நட்டு மறு நாள் ஆட்டுக்கு இரையாகமல் அந்த மரம் ஒரு நல்ல பருவம் வரும் வரை அதை பாதுகாக்க , ஒரு வேலை நீர் ஊற்றினால் நிச்சயமாக ஒரு வருடத்தில் மரம் பெரியதாக வளரும்.
நிச்சயமக இது ஒரு ஆள் செய்ய இயலாது. நம் பள்ளி நண்பர்கள் ஊர் நண்பர்கள் சேர்ந்து செய்ய இயலும்.
நல்ல வசதி உள்ள உள்ளூர் நண்பர்கள் சேர்ந்து ஆண்டின் ஏதும் ஒரு நாள் பிளான் செய்தால் நிச்சயமாக செய்யலாம் . இது மட்டும் நிச்சயமாக வெற்றி அடைந்தால் மீண்டும் கண்ணை மூடி நாம் நம் ஊரின் அழகை மீண்டும் நேரில் பார்க்கலாம்.
நாம் அன்னதானம் செய்வது போல் ஏன் இதை செய்ய இயலாது.

நம் ஊரை, நம் இயற்க்கை நாம் காப்பற்ற நம்மால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக இது அமையும்.
உங்கள் ஊரின் படித்த நண்பர்கள் நீங்கள் இன்டர்நெட் மூலம் தொலை பேசி ,சிறு குழுக்கள் மூலம் வசூல் செய்து ஒரு நாள் குறிப்பிட்டு அந்த நாளில் மரம் நடலாம் . மிக முக்கியமான ஒரு விஷயம் மரம் நடுவது மட்டும் குறிக்கோள் அல்ல,
அந்த செடி மரம் ஆகும் வரை நாம் காப்பற்ற வேண்டும். மனம் இருந்தால் நிச்சயம் செய்யலாம்.

மரம் வளர்ப்போம்
வாருங்கள்…

மரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்…!

“மரம் நடுதல்”

மரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தியும் வருவோம்.

தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.
முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள் பின்னர் அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும்.

இதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும், அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).

சரி நமது அரசாங்கங்கள் தான் அப்படி செய்ய பழகி விட்டது, இதில் கவலை பட என்ன இருக்கிறது! என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை தவிர்க்கவேண்டும்.

வருடாவருடம் பலர் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள். அதே போல் செடி நட்டாலும் பாதுகாப்பு இன்றி செடி பட்டுபோய் விடுகிறது. அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து!! பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விடுகிறது,. இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை தவிர்த்து,வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டுகிறோம் .

மரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.

ஆனால் இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும்? செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி! . ஆசை இருந்தால் மட்டும் போதுமா! அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா! இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.
இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.

இயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ! மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 8:01 pm

இன்றைய உண்மைகள்...!!!

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 8:15 pm

இன்றைய உலகில் மாணவர்களின் உளவியல் நிலை பற்றி ஓர் பார்வை
---------------------------------
இன்றைய எமது சமுதாயத்தில் அரங்கேறிவரும் சமுகவிரோதச் செயல்கள் பற்றி அலசி ஆராய்வோம் எனில், எம் அனைவருக்கும் சங்கடம் தரும் நிலையே தோற்றம் பெற்றிருக்கின்றது. இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என வெற்றிக் களிப்புடன் கோஷமிட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சி தரக் கூடிய நிலையையே இன்றைய இளம் சமுதாயம் எதிர்நோக்கி உள்ளது. ஆழிவின் விளிம்பில் நின்ற வண்ணம் செய்வதறியாது நிலைதடுமாறி நிற்கின்றார்கள் எம் நாளைய தலைவர்கள். இந்த அவல நிலை தோற்றம் பெற அடிப்படைக்காரணி எதுவென ஆராய முனைகையில் என் மனதில் நிழலாடிய அனுமாணமே மாணவர் சமதாயத்தின் உளவியல் சார் தாக்கங்கள்.ஆம் இன்று நாம் வாழும் பூமி குற்றம் தனின் உறைவிடமாக உருப்பெற்றுள்ள இந்த அவல நிலையிலே அக்குற்றங்களுக்கு தூண்டிகளாகவும் பொறுப்பாளிகளாகவும் எம் மாணவர் சமுதாயம் மாறியுள்ள நிலை எம்மை அச்சத்திலும் மீளாத் துயரிலும் ஆழத்தியுள்ளது. இந்நிலை பலரால் விமர்சனத்திற்கு உள்வாங்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதன்று என மறுக்கப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டாலும் இதுவொரு நிதர்சனமான உண்மை.

இக்கசப்பான உண்மை தன் பின்னணி வலுப்பெற ஏதுவாய் அமைந்த களமே மாணவ சமுதாயம் எதிர்நோக்கியிருக்கும் உளவியல் சார் பாதிப்புக்கள். இன்றைய இலத்திரனியல் உலகமானது தொழில்நுட்பம்தனின், இராஜாங்கமாக விளங்குகின்றது. இன்றைய உலகின் ஒவ்வொரு மாணவனும் எளிதில் இவ் இலத்திரனியல் உலகினுள் உள்வாங்கப்பட அவனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் வசதிகள் யாவும் அவர்கள் பெற்றோர்களாலேயே உருவாக்கிக் கொடுக்கப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான வசதிகள் செய்து தரப்படுவது தமக்கான சமுக அந்தஸ்தை நிலைநாட்டும் ஓர் விடயமாகவும் உணரப்படுவது யாம் அறிந்ததே. அதன் விளைவு இன்று ஆரம்பக்கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் கைகளில் கூட தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருக்கும் வகை வகையான செல்லிடத் தொலைபேசிகள் தவழ்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. பெற்றோர் தம் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்த இணையம் என்னும் புரட்சி உலகம் உசாத்துணை நூல்களாக விளங்கும் என அனுமானித்தே இவ்வாறான இலத்திரனியல் வசதிகள் அனைத்தையும் தம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இணையம் என்ற பாரிய உலகின் வாசல்கள் மாணவருக்குத் திறக்கப்படுகின்றன.

சூழ்நிலைகளை சரியாக கைக் கொள்ளும் ஓர் முதிர்ச்சியடைந்த மனப்பக்குவம் மாணவரிடையே தோற்றம் பெறாத பருவத்திலேயே அவர்கள் இப்பரந்த உலகிற்குள் உள்வாங்கப்படுவதால் பெரும்பாலான மாணவர்கள் இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஆக்கத்திற்கான பாதையை விட்டு அழிவிற்கான பாதையை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர், விளைவு தாம் ஆட்சி செய்ய வேண்டிய விஞ்ஞான உலகம் தம்மை ஆட்சி செய்யும் அவல நிலைக்கு வித்திட்டு அதற்கு அடிமையாகும் நிலைக்கு ஆழாகின்றனர். தவறான நிலையில் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தும் மாணவருக்கு புதிய புதிய பிரச்சனைகள் தோற்றம் பெறகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவோ,பாதுகாத்துக் கொள்ளவோ தேவையான முதிர்ச்சி நிலையானது போதுமற்றதாக மாறிவிடும் பட்சத்திலும் பெறியவர்களிடம் இதைப்பற்றி ஆலோசிக்க தலைமுறைப் பாகுபாடு, அவர்களின் பிரச்சனைகளை பெரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவர அவர்களை மட்டுப்படுத்தும் வேளையிலும் அவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.தனிமையெனும் இருள் அவர்களை சூழ்ந்து கொள்கின்றது.

தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும், அவற்றின் பாதிப்புக்களையும் பற்றி அவர்கள் இடைவேளை இல்லாது மீண்டும் மீண்டும் சிந்தித்துக் கொண்டிருப்பதன் விளைவு அவர்கள் முயற்சிக்கும் காரியங்கள் அனைத்திலும் கவனச்சிதறல்களால் தோல்விகளை வழமையாக்கிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் மனதில் விரக்தி தோற்றம் பெறும். விளைவு அவர்கள் சமுக விரோத செயல்கள், வன்முறைகள் வழிச்சென்று தத்தம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முனைவர் அல்லது அதீத விரக்தியால் தம்மை அழித்துக் கொள்ள முயல்வார்கள். இவ்விரண்டில் எவ்வழி தெரிவு செய்யப்பட்டாலும் இழப்பு சமுதாயத்திற்கே. நாளை எம் நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு பிரஜையை – தலைவனை நாம் இழந்து விடுகின்றோம்.

இன்றைய எம் சமுதாயத்தில் பொருளாதாரரீதியில் பல நெருக்கடிகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக அநேகர் தம் வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் உழைப்பு மற்றம் பணம் போன்றவற்றை முதன்மைப்படுத்தி போட்டி உலகில் தம் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முனைகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும் தம் குடும்பத்திற்காகவும் ஒதுக்கும் நேரத்தை மிகச் சொற்பமாக மட்டுப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் அவ்வாறு சிறிது நேரம் கூட ஒதுக்க முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் விளைவு பெற்றோர் தம் பிள்ளைகளுடன் தங்கள் நேரத்தை செலவிட்டு அவர்கள் தேவைகள், பிரச்சனைகள் என்பவற்றிற்கு செவிமடுத்து அவர்களின் நல்ல நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டிய தம் கடமைமையில் இருந்து தவறுகிறார்கள். ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு என்பன அவர்களுக்கு எட்டாக் கனியாகிவிடுகின்றன.

இன்றைய கல்விச் சமுகமானது சிறந்த பெறபேறுகளையும் உயர்ந்தபட்ச மதிப்பெண்களையும் மாத்திரமே ஏக குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்ற பரிதாபகரமான சூழ்நிலையை காணமுடிகின்றது. கல்வியினை ஒரு நிலையான செல்வமாக கருதும் நிலை மாறி தமது சமுக அந்தஸ்தினை மதிப்பிடும் ஓர் காரணியாகவே இன்றைய காலகட்டத்தில் கல்விச் சமுகத்தாலும் பெற்றோராலும் உணரப்படுவது,மிகவும் விசனம் தரக்கூடிய ஒரு விடயமாகும். இதன் காரணமாக மாணவர்கள் தம் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களை இலக்காக்கிக் கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர். மேலும் பலரது அபிப்பிராயப்படி கல்வியானது மாணவர்கள் மேல் திணிக்கப்படுகின்றது. இதனால் கல்வி கசப்பான அனுபவமாகவே மாணவர்களால் நோக்கப்படுகின்றது.

பாடசாலை விட்டு வீடு வந்தவுடன் தனியார் வகுப்புக்களும் தம் கைவரிசையை வெளிக் கொணரத் தவறுவதில்லை. தனியார் வகுப்புக்களில் ஆண்,பெண் என இருபாலரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் கிட்டுகின்றது. இந்த சூழ்நிலைக்கேற்ப தம்மை சரிவர இசைவாக்கம் செய்யத் தவறும் மாணவருக்கு பிரச்சனைகள் தோற்றம் பெறுகின்றன. தொடர்ச்சியான தனியார் வகுப்புக்கள் காரணமாக பெற்றோருடன் உறவாட போதிய நேரம் இல்லாமையாலும், பாடசாலையில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான சட்ட திட்டங்களுக்குப் பயந்தும் தம் பிரச்சனைகளை பெரியோருக்கு தெரிவிப்பதில் மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். வீட்டில் பெற்றோருடனான ஓர் குழந்தையின் உறவும; பாடசாலையில் ஆசிரியர் ஒருவருடனான ஓர் மாணவனின் உறவும் தளர்வடைந்த நிலையில் காணப்படுவதை இன்று பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இது விமர்சனத்திற்குரிய ஒரு விடயமாகும்.ஒரு மாணவனின் தனிப்பட்ட முன்னேற்றத்திலும், ஒரு சமுகத்தின் முன்னேற்றத்திலும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும் கல்வியானது அத்தியவசியமானதொன்று என்பதை மறுக்க முடியாது. ஆனால் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேயளவு ஓர் மாணவனின் உளநலமும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றே.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் அதே போல் ஒரு மாணவனின் உள நலம் விருத்தியடைந்திருந்தால் தான் அவனால் நாளை நாட்டிற்குத் தேவைப்படும் ஒரு நல்ல தலைவனாக உருவாக முடியும். ஓவ்வொரு மாணவனும் தனித்துவம் வாய்ந்தவன். ஆதலால் ஒவ்வொரு மாணவனின் திறமையறிந்து அதற்கேற்ப அவனை தயார் செய்ய வேண்டும். சமுக அந்தஸ்து மற்றும் பல்வேறு சமுகப்பிரிவினைகளை மையமாகக் கொண்டு மாணவர்கள் கையாளப்படும் விதம் இன்றும் இலைமறைகாயாக ஆங்காங்கே அரங்கேறி வருகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலே மாணவர்கள் மனதில் தாழ்வு மனப்பாங்கு மற்றும் விரக்தி வித்திடப்படுகின்றது. அவர்களின் ஆளுமைவிருத்தி மழுங்கடிக்கப்படுகின்றது. இது விரும்பத்தக்க விடயமன்று, சீர் செய்யப்பட வேண்டிய விடயம். இவ்வாறான மாற்றத்தை உருவாக்க கல்விச் சமுகம், பெற்றோர்; பெரியோர் அனைவரும் ஒருமனதினராய் செயற்பட வேண்டும்.



' சரியாகும் சமுதாயம் தனியொருவன் கையில்

தனிமனிதன் தான் தன்னை சரிசெய்யும் நிலை வேண்டும்'

ஆதலால் சமுதாயத்தின் அங்கங்களான நாம் அனைவரும் எங்கள் தவறுகளை இனங்கண்டு அவற்றை சீர் செய்வதோடு சமுதாயத்தின் வளர்ச்சியிலும், நாளைய தலைவர்களான இன்றைய மாணவ சமுகத்தின் உருவாக்கத்திலும் அக்கறை கொண்டவர்களாய் எம் கடமைகளை சரிவர ஆற்றி விஞ்ஞானத்தை ஆக்கத்திற்கு வித்திட்டு வடுக்களும் - வலிகளும் நிறைந்த எம் கடந்த கால கசப்பான நினைவுகளை அத்திவாரமாகக் கொண்டு புதியதொரு வரலாறு படைப்போம், புதியதொரு உலகினை உருவாக்குவோம்.

நிக்கலின் ஸ்ரனிஷா அன்ரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 8:17 pm

சிந்திப்பது இதயமா? மூளையா?
------------
குர்ஆன், இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள்' என்று ஓர் இடத்திலும் (இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?' (47:24) என்று ஓர் இடத்திலும் கூறுகின்றது. இந்த வசனங்களை மாற்று மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். எனவே, இதற்குச் சரியான விளக்கத்தைக் கூறவும்.

- எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி.

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.

சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா?என்று கேட்கிறோம்.

ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம். சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிருந்து அறியலாம். இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.

'இதயத்தில் உனக்கு இடம் இல்லை' என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலிசெய்கிறது. மூளை யில் உனக்கு இடமில்லை என்றுதான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம். சிந்தனை யைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.

ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால், மூளை தான் சிந்திக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!

எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந் தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.
அரபு மொழியில் கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.

அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.

மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.

5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத் தப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி - உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.
பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 8:52 pm

நேரத்திட்டமிடலில்” வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!

வேகமான இன்றைய உலகில், நாமும் வேகமாவும், விவேகமாவும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதலினால், நம்மில் பலர் இன்று வாழ்வியல் முறைகளில் பலவகையான மாற்றங்களை அவ்வப்போது செய்துகொண்டு, வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.

வாழ்வியல் முறை மாற்றங்களில் மிக முக்கியமானதும், எளிதில் கைவரப்பெறாததுமாய் ஒன்று இருக்குமென்றால், அது நேரத்திட்டமிடலே என்பது நம்மில் பலர் அறிந்திருக்கும் ஒன்று. நேரத்திட்டமிடல் குறித்த புரிதல்களையும், சில/பல நுணுக்கங்களையும் புத்தகங்கள், துறை வல்லுனர்கள், நண்பர்கள் மூலமாக எனப் பலவாறாக சேகரித்து வைத்திருப்போர் பட்டியலில் நம்மில் பலர் கண்டிப்பாக இருப்போம்!

நேரத்திட்டமிடல் குறித்த திட்டங்கள், ஆயத்தங்கள், முயற்ச்சிகள் என எல்லாம் இருந்தும் சில/பல சமயங்களில் அதில் வெற்றியடைவது என்பது நம்மில் பலருக்கு “கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் கதையாய் போய்விடுகிறது!”. இதற்க்கு காரணம், நேரத்தை நாம் எப்படி அணுகுகிறோம் அல்லது நேரத்துடன் நம்மை நாம் எப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்!

நேரத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதென்பது கிட்டத்தட்ட முதலீடு செய்வதைப்போல. அதாவது, நேரத்துடனான நம் உறவு/தொடர்பு ஒரு கொடுக்கல்-வாங்கல் போலத்தானாம்?! தொடக்கத்தில் நாம் முதலீடு செய்யும் ஒரு குறிப்பிட்ட கால அளவானது இறுதியாக நமக்கு நல்ல லாபத்தைக் தரும் என்கிறார்கள் உளவியலாளர்கள்!

என்னங்க ஒன்னும் புரியலீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. அதுக்காக அப்படியே விட்றவா முடியும். வாங்க நேரத்திட்டமிடலா நாமளா அப்படீன்னு ஒரு கை பார்த்துடுவோம்……

நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!

நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்க்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..

1. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking): சமீபகாலங்கள்ல, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!

2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities): ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!

3. உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise): உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!

4. ‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness): நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!

5. காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early): ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும்முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது! உடற்பயிற்ச்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!

6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest): ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!

7. எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations): உங்கள் அறையக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!

8. மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times): ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!

9. தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்துவிடுங்கள் (Unplug): அசினும், நயன்தாராவும் அடுத்த எந்த படத்துல நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கலைன்னா, ஒன்னும் குடி முழுகிப்பொயிடாது. அதனால, இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுச்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்ச்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!

10. செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking): ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.

நாம் எப்போதும் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்தக் கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே…..

நன்றி ;தமிழ் நாட்டு தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 8:53 pm

ஒளியின் வேகம் சம்பந்தமாக...
--------
ஒளித்துகள்களின் வேகம் ஒரு நொடிக்கு 186000 மைல்கள் என்பது அளவிடப் பட்ட ஒன்று. ஆனால் ஒளித்துகள்களின் வேகத்தை மிஞ்சிய வேகத்தை வேறு எந்த விதமான சக்தியாலும் பிரபஞ்சத்தில் அடைய முடியாது என்று ஐன்ஸ்டைன் அறுதியிட்டு நிறுவி விட்டார். ஆனால் அதில் அடங்கியுள்ள சூட்சுமம் நிறைய பேருக்கு புரியும்படி யாரும் விளக்கவில்லை.

ஒளித்துகள் மட்டுமல்ல வேறு வகையான துகள்களும் ஒளியின் வேகத்தில் பயணிக்கலாம். எந்தத் துகளின் நிறையானது பூச்சியமோ அது செல்லும் வேகம் 186000 மைல்கள். ரேடியேசன் கூட அந்த வேகத்தில்தான் பயணிக்கும். பூச்சியத்துக்கும் குறைவான நிறை உடைய பொருள் பிரபஞ்சத்தில் உண்டா என எனக்குத் தெரியாது! நிறையே இல்லாத் துகளின் வேகம் 186000 மைல்கள் என்றால் அந்த வேகத்தை மிஞ்ச யாரால் முடியும்? எனவே தான் Universal Speed Limit = 186000 miles/sec.

சமீபத்தில் தான் கொரிய விஞ்ஞானிகள் Gravity இன் வேகம் கூட 186000 miles/sec என நிரூபித்துள்ளனர்!

அதன்படி பார்த்தால்...திடீரென்று வானத்தில் நமது சூரியன் காணாமல் போனால்...அது நம்மால் உணரப்பட 8 நிமிடங்கள் ஆகும்! அந்த 8 நிமிடங்களுக்கு பூமியானது இல்லாத சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும்!

நன்றி ;தமிழ் நாட்டு தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 9:03 pm

சுவாசிக்க முடியாதவருக்கு உயிர்காக்கும் ஒட்சிசன் ஊசி
-------------------
ஒட்சிசன், நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒரு வளிமம், சுவாசிப்பதன்மூலம் இதைப் பெற்றுக்கொள்கின்றோம். சுவாசத்தொகுதியில் ஏதேனும் பழுது ஏற்படும் நிலையில் சுவாசம் பாதிப்படைகின்றது. ஒட்சிசன் இல்லாத நிலையில் மூளை, இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புக்கள் செயலிழக்கத் தொடங்கும், இதனால் இதய நிறுத்தம், மூளைச் சேதம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.


இத்தகைய சந்தர்ப்பங்களில் பெரிய மருத்துவமனைகளில் இதய-நுரையீரல் இயந்திரங்களின் உதவி கொண்டு குருதியில் ஒட்சிசன் சேர்க்கப்படுகின்றது, ஆனால் இது அனைவருக்கும் சாத்தியம் இல்லை; மருத்துவமனைக்கு அப்பால் தொலைவில் உள்ள ஒரு நபருக்கு உடனடியான ஒட்சிசன் சிகிச்சை கிடைப்பது சிக்கல். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு தற்காலிகமான தீர்வு கிடைத்தால் எவ்வளவு நன்று எனும் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவியல் அறிஞர்களால் ஒட்சிசன் ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொசுடன் சிறார் மருத்துவமனை ஆய்வாளர்களால் நுண்ணிய ஒட்சிசன் நிரப்பப்பட்ட நுண்துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஒரு நபரின் நாளம் மூலம் குருதிக்குள் செலுத்தப்படக்கூடியவை, இதனால் அவரது குருதி விரைவில் ஒட்சிசனால் நிரம்பிக்கொள்ளும். ஒவ்வொரு முதலுதவி வல்லுனர்கள், மருத்துவர்களிடம் இத்தகைய ஒட்சிசன் நுண்துகள் ஊசி இருப்பதன்மூலம் உயிர்காப்பது இலகுவில் அமையும் என நம்பலாம்.

மருத்துவர் சோன் கேயிர் (Dr. John Kheir) மற்றும் அவரது சகாக்கள் பொசுடன் சிறார் மருத்துவமனை இதயவியல் துறைப்பிரிவில் இவ்வாராய்ச்சி நிகழ்வை நடாத்தினர்.

சுவாசக்குழாய் முற்றிலும் தடுக்கப்பட்டு சுவாசிக்காமல் உள்ள எலிக்கு கொழுப்பு உறையினால் சூழப்பட்டுள்ள ஒட்சிசன் நுண்துகள் நாளத்தினூடு குருதிக்குள் செலுத்தப்பட்டது. ஒட்சிசன் நுண்துகள் உதவியுடன் 15 நிமிடங்களுக்கு சுவாசிக்காமல் எலி இருப்பதை அவதானித்தனர். ஆய்வுகூடத்தில் ஒட்சிசன் இல்லாத நீலநிறமுடைய குருதி இத்துகள்கள் சேர்க்கப்பட்ட பின்னர் சிவப்பு நிறம் பெற்றதை கண்களால் கண்டோம் என சோன் கேயிர் தெரிவித்தார்.

ஒட்சிசன் நுண்துகள்களால் 15 – 30 நிமிடங்களுக்கே உதவமுடிகின்றது. இவை காபனீரொக்சைட்டைப் பரிமாறவில்லை, எனவே 30 நிமிடங்களுக்கும் மேற்பட்ட நேரத்தில் இவை செலுத்தப்படுவது குருதியில் காபனீரொக்சைட்டை மிகையாக்கும், ஆனால் இதனால் ஒரு நபர் இறப்பதில்லை. குறைவான ஒட்சிசனை ஈடு செய்து உயிரிழப்பைத் தடுப்பதே இச்சிகிச்சையின் நோக்கம். எடுத்துக்காட்டாக, நீரில் மூழ்கி சுவாசம் பாதிப்படைந்த ஒருவருக்கு மருத்துவமனை கொண்டு செல்லும் வரை ஒட்சிசன் வழங்குவது அவரது உயிரை மேலும் 30 நிமிடங்களுக்கு நீட்டிப்பதாக அமைகின்றது.

நன்றி ;தமிழ் கல்வி தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 9:06 pm

துடிக்கும் இதய உயிரணுக்கள் உருவாக்கம்
-------------
மருத்துவ ஆய்வாளர்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இதயத்தை மீளவும் ஆரோக்கிய நிலைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாட்டில் ஒரு படி வெற்றியைக் கண்டுள்ளனர்.

இன்றைய உலகில் மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். இதயம் சுருங்கி விரியக் காரணமாக இருக்கும் இதயத்தசை சிறப்பான இதய உயிரணுக்களால் (இதயக்கலங்கள்) ஆனது. மாரடைப்பு என்று பொதுவாகக் கூறப்படும் இதயத்தசை இறப்பின் போது
இதயத்தசையில் உள்ள இதயக்கலங்கள் தமது துடிக்கும் செயற்பாட்டை இழந்து நாளடைவில் அவை இருந்த இடம் வடுக்களை உண்டாக்கும் வெறும் நார் இழையங்களாக மாற்றப்படுகின்றது. எனவே குறிப்பிட்ட பகுதியின் துடிக்கும் செயற்பாடு இன்மையால் பாதிக்கப்பட்ட நபரின் இதயம் படிப்படியாக செயலிழக்கத் தொடங்கி இறுதியில் இதயச் செயலிழப்பு ஏற்படுகின்றது.

இதுவரையில் நிரந்தரமானது என்று நம்பிய இந்த நிகழ்வு தடுக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் (Gladstone Institutes ) தெரிவிக்கின்றனர். உருவாகிய வடு உயிரணுக்கள் மீண்டும் துடிக்கும் இதயக்கலங்களாக மாற்றப்படும் பட்சத்தில் இதயம் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கும்.

சென்ற வருடம், இதே ஆய்வாளர்களால் வடுக்கள் உருவாகும் நாரரும்பற் கலங்கள் (fibroblasts) துடிக்கும் இதயத்தசைக் கலங்களாக உயிருள்ள எலியொன்றில் மாற்றப்பட்டிருந்தன. இன்று, அதே போன்ற செயற்பாடு மனித உயிரணுக்களுக்கு ஆய்வுகூடத்தில் பெட்ரி தட்டில் (petri dish) நிகழ்த்தப்பட்டு நாரரும்பற் கலங்கள் துடிக்கும் இதயத்தசைக் கலங்களாக மாற்றப்பட்டன.

இவ்வாய்வைத் தலைமை நின்று நடத்திய கிளாட்ஸ்டோன் இதயக்குழலிய மற்றும் குருத்தணு ஆய்வு மையத்தின் மேலாளர் பேராசிரியர் தீபக் சிறிவாஸ்தவா, “ஒரு நாள் இந்தச் செயன்முறை மூலம் புதிய தசைக் கலங்கள் இதயத்தில் உருவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சென்றவருடம் (2012) நிகழ்த்திய ஆய்வில், சிறிவாஸ்தவாவும் அவருடைய சகபாடிகளும் இந்த மாற்றத்தை நிகழ்த்த ஜிஎம்டி (GMT) எனப்படும் மூன்று மரபணுக்கள் போதுமானவை என்று அறிவித்திருந்தனர். இந்த GMT உயிருள்ள எலியின் இதயத்தசையில் ஊசி மூலம் செலுத்தப்பட்டு பெறுபேறு கிடைத்தது. ஆனால் மனித நாரிழையக் கலங்களை இதே முறை மூலம் மாற்றத்துக்கு உட்படுத்துவதற்கு GMT மட்டும் போதாது என்று தெரிவித்தனர்.

ஆய்வில் பலவகை மரபணுக்கள் நாரரும்பற் கலங்களுள் செலுத்தப்பட்டு எந்த மரபணுக்கள் நாரரும்பற் கலங்களை மாற்றவல்லன என்பது அவதானிக்கப்பட்டது. இறுதியில் GMT எனப்படும் மூன்று மரபணுக்களுடன் மேலும் இரு மரபணுக்கள் ESRRG மற்றும் MESP1 மாற்றத்தை ஏற்படுத்தப் போதுமானவை என்று அறிந்து கொண்டனர். மேலும் இரண்டு மரபணுக்கள் MYOCD மற்றும் ZFPM2 இந்த நிகழ்வை மிகவும் முழுமைப்படுத்தவல்லன என்றும் தெரிந்து கொண்டனர்.

நன்றி ;தமிழ் கல்வி தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 9:09 pm

குடற்புற்றுநோய்க்குக் காரணமாகலாம்
-----------------
வாய்க்குழியுள் வசிக்கும் ஏராளமான பக்டீரியா வகைகளுள் பொதுவாகக் காணப்படும் ஒருவகைப் பக்டீரியா, குடற்புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணியாக விளங்கலாம் என்று ஆராய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இரு வெவ்வேறு ஆய்வுகளில் இது சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளன.

பற்சுற்றி அழற்சி, முரசு நோய்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பியுசோபாக்டீரியம் நியுக்ளியட்டம் (Fusobacterium nucleatum) எனும் உயிரியற் பெயருடைய இந்தப் பக்டீரியா, குடற்புற்றுநோய் உள்ளவர்களின் குடலில் கூடுதலாகக் காணப்படுவதாக உயிரியல் அறிஞர்களால் கண்டறியப்பட்டது. ஒரு ஆரோக்கியமானவரின் குடலில் காணப்படும் பலவகையான பக்டீரியா இனங்களின் வரிசையில் பியுசோபாக்டீரியா அடங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இற்றைவரையான தகவல்களில் இருந்து பியுசோபாக்டீரியா இழையங்களை குடற்புற்றுநோய்க்கலங்களாக உருவாக்கின்றதா அல்லது புற்றுநோயின் விளைவாக பியுசோபாக்டீரியா தோன்றுகின்றதா என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை.

குடலில் ஏற்படும் அசாதாரணமான உயிரணுக்களின் பெருக்கத்தை குடற்புற்றுநோய் என்கின்றோம். ஆண்டுதோறும் உலகளாவியரீதியில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதனால் பாதிப்படைகின்றனர்.

இந்நிலையில், கார்வார்ட் மற்றும் டானா- ஃபார்பர் புற்றுநோய்க் கல்விமையத்து (Harvard and the Dana-Farber Cancer Institute) நிபுணர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், அடினோமா (adinoma) எனப்படும் குடற்சுரப்பிகளில் ஏற்படும் கேடிலிக் கட்டிகளில் (Benign tumour) பியுசோபாக்டீரியா மிகையாகக் காணப்படுகின்றது என்பது அவதானிக்கப்பட்டது. கெடுதியற்ற அடினோமா காலப்போக்கில் கெடுதி தரும் கேடுளிப் புற்றுநோய்க்கட்டிகளாக (Malignant tumour) மாற்றமடையும் என்பது அறியத்தக்கது.

இசுட்ரெப்டோகொக்கசு எனும் பக்டீரியாவும் குடற்புற்றுநோய் ஏற்படுத்தவல்லது என்று ஏற்கனவே கருதப்பட்ட நிலையில், ஆய்வாளர்கள் பியுசோபாக்டீரியா மற்றும் இசுட்ரெப்டோகொக்கசு போன்ற பாக்டீரியாக்களை எலிகளுக்குச் செலுத்திய ஆய்வுகூடப் பரிசோதனையின் போது ஒப்பீட்டளவில் பியுசோபாக்டீரியா செலுத்தப்பட்ட எலியின் குடற்கலங்களில் அபரிமிதமான புற்றுநோய் உயிரணு வளர்ச்சி ஏற்படுவதை அவதானித்தனர்.

வெஸ்டர்ன் ரிசேர்வ் பல்கலைக்கழகத்தில் (Western Reserve University) நடாத்தப்பட்ட வேறொரு ஆய்வில் பியுசோபாக்டீரியாவின் மேற்பரப்பில் காணப்படும் மூலக்கூறு ஒன்று புற்றுநோய்க்கலங்களுக்குள் பக்டீரியா உட்புகுவதற்கு உதவுகின்றது என்று அறிந்தனர். FadA எனப்படும் இந்த மூலக்கூறு பின்னர் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதுமூலம் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது. இந்த மூலக்கூறு மேலும் அழற்சியைத் தூண்டுவதன் மூலம் புற்றுநோய்க் கட்டி உருவாகுவதை ஊக்குவிக்கின்றது.

FadAயைத் தடுக்கவல்ல செயற்கை வேதியற்பொருள் இந்த நிகழ்வை நிறுத்துவதால் வருங்காலத்தில் சிகிச்சைக்கு இந்தச் செயன்முறை உதவும் என்று நம்பப்படுகின்றது.

“FadAயை உடலில் கண்டுபிடிப்பதன் மூலம் குடற்புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டு அறுதியிட்டுக்கொள்ளமுடியும் (diagnosis) என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகின்றது. மேலும் இதற்கான சிகிச்சையையும் புதிய மருந்துகளைக் கொண்டு மெருகூட்டமுடியும்” என்று வெஸ்டர்ன் ரிசேர்வ் பல்மருத்துவப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த இப்பிங் ஹான் (Yiping Han) கூறினார்.

ஆரோக்கியமான மனிதர்களுடன் குடற்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒப்பிடுகையில் FadA மிகையாக உள்ளதையும் ஆய்வில் அறிந்துகொண்டனர்.

நம் அனைவரதும் வாயுள் இந்த புற்றுநோய் உண்டாக்கும் பக்டீரியா சிறிதளவேனும் இருக்கின்றது என்பது கசப்பான ஆனால் உண்மையான விடயம். பியுசோபாக்டீரியாதான் புற்றுநோயை உருவாக்கிவிடுகின்றதா என்பது இவ்வாய்வின் மூலம் தெளிவாக இல்லாவிடினும் புற்றுநோயின் வளர்ச்சியை விரைவாக்குகின்றது என்பதை அறியக்கூடியதாக உள்ளது. எந்தச்சந்தர்ப்பத்திலும் வாய்ச் சுகாதாரம் பேணப்படல் மிக மிக முக்கியமானது. இதுவரைக்கும் பல்நோய்கள் மற்றும் வேறு சில நோய்கள் வாயின் நலம் பேணப்படல் குறைவால் ஏற்படுகின்றது என்று தெரிந்திருந்தது, அவ்வரிசையில் இன்று புற்றுநோயும் சேர்ந்துகொண்டது.

ஒவ்வொரு நாளும் இருதடவைகளாவது பல்துலக்குகின்றீர்களா?



உசாத்துணைகள்
ஆய்வு வெளியிடப்பட்ட நாள்: August 14, 2013

சஞ்சிகை: Cell Host & Microbe
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அதிசயமான அருமையான கட்டுரைகள்  - Page 6 Empty Re: அதிசயமான அருமையான கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum