Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி
Page 1 of 1 • Share
சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், “”உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்முடன், உலக வங்கியுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தேன்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடியும், உலக வங்கித் தலைவரும் பல்வேறு விவகாரங்களையும், ஒத்துழைப்பு அளிக்க வாய்ப்புள்ள துறைகள் பற்றியும் விவாதித்தனர்.
அப்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தச் செயல்திட்டத்துக்கு உலக வங்கி முழு ஆதரவளிக்கும் என்று கிம் உறுதியளித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், “”உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்முடன், உலக வங்கியுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தேன்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடியும், உலக வங்கித் தலைவரும் பல்வேறு விவகாரங்களையும், ஒத்துழைப்பு அளிக்க வாய்ப்புள்ள துறைகள் பற்றியும் விவாதித்தனர்.
அப்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான நிதியுதவியை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தச் செயல்திட்டத்துக்கு உலக வங்கி முழு ஆதரவளிக்கும் என்று கிம் உறுதியளித்தார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி
-
பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்.
——————————
சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்த இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
பொலிவுறு நகரங்கள், கங்கை நதி தூய்மையாக்கும், திறன் மேம்பாடு, தூய்மை இந்தியா, அனைவருக்கும் மின்சாரம் உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவளித்து வருவதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரூ.6,750 கோடி நிதியுதவி: அதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் மாற்று எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து ஜிம் யாங் கிம் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கி சார்பில் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், ஜிம் யாங் கிம்மும் கையெழுத்திட்டனர். இதில், மேற்கூரைகளில் சூரிய மின்தகடுகளைப் பொருத்துவதற்காக ரூ.4,218.75 கோடி நிதியுதவி அளிப்பது தொடர்பான ஒப்பந்தமும் அடங்கும்.
அரசு-தனியார் கூட்டாண்மையில் சூரிய மின்சக்தி பூங்காக்களை உருவாக்கும் திட்டத்துக்காக, ரூ.1,350 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று உலக வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் சூரிய மின்சக்தி தொடர்பான திட்டங்களுக்கான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக, இந்தியா தலைமையில் 121 நாடுகள் இடம்பெற்றுள்ள சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்புடனான (ஐ.எஸ்.ஏ) ஒப்பந்தத்தில் உலக வங்கி கையெழுத்திட்டது.
அதையடுத்து, செய்தியாளர்களிடம் ஜிம் யாங் கிம் கூறியதாவது: ஆறு முக்கியத் துறைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் கடினமான, முக்கியமான இலக்குகளை வைத்துள்ளனர். அதிக வளர்ச்சியை எட்டியுள்ளதைக் கண்டு ஆச்சரியமடைகிறேன்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதத்தை எட்டியுள்ளது, உண்மையில் பிரகாசமான அறிகுறியாகும். உலகப் பொருளாதாரத்தில் தற்போது ஒளிவீசும் இடங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இந்தியா பாடமாகத் திகழ்கிறது என்றார் ஜிம் யாங் கிம்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:
சர்வதேசப் பொருளாதாரச் சூழல் குறித்தும், வளர்ச்சித் திட்டங்களுக்கு உலக வங்கி நிதியுதவி அளிப்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு நிதியுதவி அளிப்பதில் உலக வங்கி முன்னணியில் உள்ளது என்றார் அருண் ஜேட்லி.
“நான் மோடியின் ரசிகன்!’
உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “”நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன். இதற்குக் காரணம், அனைத்து பெரிய தலைவர்களும் செய்ய வேண்டியவற்றை அவர் செய்கிறார் என்பதுதான்.
இலக்குகளை நிர்ணயிப்பது, அவற்றுக்கான காலக்கெடுவை ஏற்படுத்துவது, அதன் பின் அந்த இலக்குகளுக்கு அதிகாரிகளையும் பணியாளர்களையும் பொறுப்புடையவர்களாக்குவது ஆகியவையே அவரது வழிமுறையாக உள்ளது. இலக்குகளை எட்டுவதற்கு இதுவே சோதித்துப் பார்த்து, நிரூபிக்கப்பட்ட வழிமுறையாகும். மோடியின் பெருமுயற்சிகளுக்குப் பலன்கள் கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன” என்றார்.
ரகுராம் ராஜனுக்குப் பாராட்டு: இதனிடையே, அவர், என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:
பிரதமர் மோடியிடமும், அவரது குழுவினரிடமும் பேசியதில், ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பில் பெரிய அளவிலான மாற்றம் நிகழப் போவதில்லை என்று அறிந்தேன். சுதந்திர சிந்தனை படைத்தவராக ரிசர்வ் வங்கி ஆளுநர் நீடிப்பார் என்றும், நல்ல பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் திட்டங்களும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ரகுராம் ராஜன் மிகச் சிறந்த மத்திய வங்கி ஆளுநராகத் திகழ்ந்தார். ஒரு சிறந்த கல்வியாளராக அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன் என்றார் ஜிம் யாங் கிம்.
–
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» ஒரு கோடி கேட்ட சிவகார்த்திகேயனுக்கு ரூ 2 கோடி தரும் கோடம்பாக்கம்!
» கணவரை இழந்தோரின் மகளுக்கு தமிழக அரசு நிதியுதவி
» பெண் தொழிலாளர் மகப்பேறு நிதியுதவி பெறும் வழிமுறை
» சூரிய ஜெயந்தி
» ஒரு கோடி கேட்ட சிவகார்த்திகேயனுக்கு ரூ 2 கோடி தரும் கோடம்பாக்கம்!
» கணவரை இழந்தோரின் மகளுக்கு தமிழக அரசு நிதியுதவி
» பெண் தொழிலாளர் மகப்பேறு நிதியுதவி பெறும் வழிமுறை
» சூரிய ஜெயந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum