தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 27, 2013 6:50 pm

First topic message reminder :

தகவலில்  உள்ள உறவுகள் புதுக்கவிதை மட்டுமின்றி...

ஹைக்கூ
சென்ரியூ
லிமரைக்கூ
ஹைபுன்


என்ற வடிவங்களையும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு தொடங்கப்படுகிறது.

முதலில் மேற்கண்ட வடிவங்களின் அமைப்பு வடிவம் இலக்கணம் பதியப்படுகிறது. பின்னர் எப்படி எழுதலாம் எப்படி எழுதக்கூடாது என்று தொடராக என்னுடைய கவிதைகள் இடம்பெறும். புதியதாக எழுத வருபவர்கள் இந்தப் பகுதியிலேயே பதியலாம். பதிபவர்களின் கவிதைகளில் திருத்தம் தேவைப்படின் நான் செய்கிறேன். நான் செய்யும் திருத்தம் நீங்கள் எழுதியதை இன்னும் செறிவாக்கவே - சிறப்பாக்கவே முனையும். கெடுக்காது. திருத்தம் செய்யலாம் என்று நீங்கள் கேட்டால் செய்வேன். இல்லை என்றால் என் கருத்தை மட்டும் சொல்வேன்.

எல்லாரும் எல்லா வகையான கவிதையும் எழுத வேண்டும் என்பதே இந்தப் பதிவில் என் நோக்கம். நடத்துனர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்துரைக்கவும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 23, 2014 6:38 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 16

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி

கிராமத்துப் பாட்டி என்று எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது? சரி… ஏன் அந்தப் பாட்டி கை எடுத்து கும்பிடுகிறார்? எங்கு நின்று கும்பிடுகிறார்? யாரைப் பார்த்துக் கும்பிடுகிறார்? விலாசம் எதாவது தவறியிருக்குமோ? கையெடுத்துக் கும்பிட்டு பிச்சைகிச்சை எடுத்துக்கொண்டு இருக்குமோ? பெற்ற பிள்ளைகளிடமே எதற்காகவாவது கெஞ்சிக்கொண்டு இருக்குமோ? என்று எவ்வளவோ பொருள் இருக்கலாம் அந்தப் பாட்டியின் கை எடுத்து கும்பிடுதலுக்கு. எல்லாரும் ஏதோ ஒரு இடத்தில் இந்த நிகழ்ச்சியைக் கண்டிருக்கலாம். பாட்டி எதற்காகவோ இரந்து நின்றால் அது சென்ரியூ. எந்த உதவியும் கேட்காமலிருந்தால் அது ஹைக்கூ. சரி மூன்றாவது அடிக்கு வருவோம்.

கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி
மங்கிய சூரிய ஒளி

அப்பாடா… மங்கிய சூரிய ஒளி தானா? ஓகோ… அந்தப் பாட்டி சூரியனை வணங்கி இருக்கிறார். மங்கிய சூரிய ஒளி என்ற மூன்றாவது அடிக்கு வருவோம். ஏன் மங்கலாகத் தெரிகிறது. பாட்டி வயதாகிவிட்டதன் காரணமா? கண் குறைபாட்டின் காரணமா? அல்லது சூரியனே மங்கலாகத் தெரிந்தானா?

சரி… ஹைக்கூவை இன்னும் சுருக்கலாம் இப்படி:

இரண்டாவது அடியில் கிராமத்துப் பாட்டி என்று இருப்பதை பாட்டி என்று சுருக்கிக்கொள்கிறேன். காரணம் கிராமம் என்ற சொல் இடம் பெற்றதால் அது நகரத்துப் பாட்டிகளை தவிர்த்துவிடுகிறது. முதல் அடியில் இருக்கும் கும்பிடும் என்பதை இரண்டாவது அடிக்கு மாற்றிக் கொள்கிறேன்.

கையெடுத்து
கும்பிடும் பாட்டி
மங்கிய சூரிய ஒளி
© -கவியருவி ம.ரமேஷ்
(என் பாட்டி இறக்கும் வரையில் சூரியனை வணங்கியதைக் காலைப் பொழுதில் கண்டிருக்கிறேன். அதை நினைத்து எழுதிய கவிதை இது. நீங்களும் உங்கள் பாட்டியை நினைத்து ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதி பகிருங்களேன்.)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jul 21, 2014 7:39 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 17

குளத்தில் முகம் அளம்பி
மொட்டுக்களைப் பார்த்தேன்
மலரத் துவங்கியது
- கவியருவி ம.ரமேஷ்

நேரடியாக 3 வது அடிக்குச் செல்கிறேன்: மலரத் துவங்கியது எது? மனசா? தாமரையா? என்ற கேள்வி எழலாம். மனசு சரியில்லை என்று கோயிலுக்குச் சென்றிருந்திருக்கலாம். அந்த மனசு மலர்ந்திருக்கலாம். அவருக்குப் புதிய சிந்தனைகூட மலர்ந்திருக்கலாம். ஏன் தாமரையே கூட மலர்ந்திருந்திருக்கலாம். அவர் சென்றது காலை நேரமாக இருந்திருக்கலாம் அப்போது சூரியன் வர தாமரை மலரத் துவங்கி இருக்கலாம். 2,3 ஆம் அடிகளைச் சேர்த்துப் பார்த்தால் (மொட்டு) – காதலியின் நினைவோ – காம நினைவுவோ கூட மலரத் துவங்க வாய்ப்பிருந்திருக்கும்… எனக்கு இப்படியான சிந்தனைகள்… உங்களுக்குள் என்னென்னவோ… முடிந்தால் சொல்லுங்கள் – ஒரு ஹைக்கூ எழுதுங்கள். மகிழ்வேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 30, 2014 6:54 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 18

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
- கவியருவி ம.ரமேஷ்

வயல்வெளியின் பசுமை கண்களை கவ்விக்கொள்ளும்… அத்துணை அழகு… மழையின்றி வயல்வெளிகள் வறண்டு போயிருப்பதை காண்கிறோம். மனம் வருந்துகிறோம். ஹைக்கூவில் வயல்வெளி பசுமையாக இருக்கிறது (முதலிரண்டு அடிகளில்). ஒரு சமயம் மழைக் காலமாக இருக்கலாம் போல. பசுடையாக என்ன தெரிகிறது என்றுதான் நமக்குத் தெரியவில்லை – எந்தப் பயிர் வகை என்பதும் புரியவில்லை… நெல், கம்பு, சோளம், கரும்பு, வாழை என்று எதாவது இருக்கும்போல… எது இருந்தால் என்ன? பசுமையாக இருக்கிறது என்றால் அந்த நிலப்பரப்பின் விவசாயியும் வருமானம் பார்ப்பான் அவன் மனசும் பசுமையாக இருக்கும் என்று நம்புவோம்.

ஆனால், 3 அடியில் உயர்ந்து நிற்கும் காடு என்று இருக்கிறதே!. அப்போது வயல்வெளி (இரண்டு மூன்றாம் அடிகள்)? மேற்கண்ட பயிர் வகைகள் எதுவும் இல்லையா? காடுதான் பசுமையாக இருக்கிறதா? வயல்வெளி தரிசாக இருக்குமோ? அல்லது வயல்வெளி வீட்டு மனைகளாக்கப்பட்டு இருக்குமோ? காடுகளை அழித்து வீட்டு மனைகள் போடுவதை கண்டிருக்கிறோமே… தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தபடி ஒரு ஹைக்கூ எழுதுங்கள்.

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
- கவியருவி ம.ரமேஷ்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 04, 2014 2:34 pm

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 19

சுடுமணல்; மரமேதும் இல்லை
குயிலின் மெல்லிசை!
புல்லாங்குழல் விற்பவன்.


முதல் இரண்டு அடிகளில் சுடுமணல், மரம் இல்லை, குயிலின் மெல்லிசையை படிக்கிறோம். சுடுமணல் என்பதால் ஆறு நினைவுக்கு வருகிறது. மரம் ஏதும் இல்லை என்பதால் நிழல் இல்லை அதனால் மணல் சூடாக இருக்கும் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறோம். மரம் இல்லை என்றால் குயிலின் மெல்லிசை எங்கிருந்து வந்திருக்கும்? அப்போது குயில் எங்கு அமர்ந்து பாடியிருக்கும் என்று மனம் சிந்திக்கும்போது மூன்றாவது அடியைப் படிக்கிறோம். ‘புல்லாங்குழல் விற்பவன்’ என்றிருக்கிறது. அப்படியென்றால் அவன் கடற்கரையில் புல்லாங்குழலில் குயிலின் இசையை எழுப்பி பாடுகிறான். புல்லாங்குழலின் இசையும் குயிலின் இசையும் ஒன்றாகிவிடுமா என்ன? ஆகாதுதானே? இப்படிச் சிந்தித்து ஒரு ஹைக்கூ எழுதுங்கள் பார்ப்போம். (முதல் அடியில் ‘சுடுமணல்’ வலிந்துதான் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடியின் பொருள் சிறக்க. சுடுமணலில் – நண்பகல் வேலையிலும் அவன் கடற்கரையில் உழைப்பதை எடுத்துக்காட்ட.)


சுடுமணல்; மரமேதும் இல்லை
குயிலின் மெல்லிசை!
புல்லாங்குழல் விற்பவன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 08, 2014 7:03 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 20

‘நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.

யார்? மண் எடுத்து, எதற்காக? எப்போது? ஏன்? யாரை? தூற்றினார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு கோபம், சாபத்தைக் கொடுத்துள்ளது. மண் எடுத்து தூற்றினாள் – வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் நடந்துவிடுமா என்ன? மூன்றாவது அடியில் அந்த சாபம் நடந்துவிட்டு இருப்பது வருத்தம்தான். மூன்றாம் அடியில் படிக்கையில்தான் தெரிகிறது – தாய்தான் மகளுக்குச் சாபம் கொடுத்துள்ளாள். தான் விரும்பியவனோடு வாழ (சொல்லியோ, சொல்லாமலோ) சென்றுவிட்டதைக் காட்டுகிறது. அவள் நன்றாக வாழ்ந்து இருந்திருந்தால் பரவாயில்லை. குழந்தையோடு வீடு திரும்புகிறாள். பாவம். அவன், அவளை கை விட்டுவிட்டானா? அவனோடு வாழ இவளுக்குப் பிடிக்கவில்லையா? எதுவொன்றும் தெரியவில்லை. அப்படி தெரியாமல் இருப்பதுதான் இந்த ஹைக்கூ (இது ஹைக்கூ இல்லை, இது சென்ரியூ)வின் சிறப்பு. எனக்கு என்னவோ… ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எல்லோருக்குள்ளும் இருக்கும் மன நிலையில் அவள் பெற்றோர்களைப் பார்க்கவோ அல்லது பெற்றோர்கள் சமாதானம் அடைந்துவிட்டதால் அவள் வீடு வந்திருப்பாளோ என்றுதான் தோன்றுகிறது. சரி… அவன் ஏன் அவளுடன் வரவில்லை? உங்களுக்கு என்னென்னவோ தோன்றலாம்…

‘நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.
- கவியருவி ம.ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by செந்தில் Mon Sep 08, 2014 9:48 am

நன்றி கவிஞரே!
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 24, 2014 6:54 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 21
ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!
முதல் இரண்டு அடிகளைப் படிக்கும்போது ஐயப்ப பக்தர்கள், தினம் உறங்கி எழுகிறார்கள் என்பதில் என்ன செய்தி இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும், இருக்கத்தான் செய்கிறது. தப்பு என்று நாம் நினைக்கும் செயல்களை செய்யாதவர்களாக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு இருக்கும்போது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அந்தப் பக்தர்கள் எவ்வாறு, எப்படி, எந்த மனநினைவில், மகிழ்ச்சியில், துன்பத்தில் எழுகிறார்கள் என்று முதலிரண்டு அடிகள் விரியும். மூன்றாவது அடியைப் படிக்கிறோம். பிள்ளையார் கோயில் என்று இருக்கிறது. என்ன வியப்பு பாருங்கள். ஐயப்ப பக்தர்கள் தினம் தினம் உறங்கி எழுவது பிள்ளையார் கோயில்! கடவுளின் உருவங்கள் வெவ்வேறு என்றாலும் கடவுள் ஒருவர்தானே!

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!
- கவியருவி ம.ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 24, 2014 6:56 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 22

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை

முதலிரண்டு அடிகளில் எதையோ, எங்கோ, தனிமையில் திருட்டுத்தனமாக ரசிக்கிறான். அதனால் அவன் நடுங்கிக் கொண்டு இருக்கிறான் என்று பொருள் விரிகிறது. மூன்றாம் அடியில் பனித்துளியை ரசிக்கிறான் என்றிருப்பதால் நாம் அவனை ரசிக்க வேண்டியதாகிவிடுகிறது. நடுங்கும் குளிரில் அவனுக்கு அப்படி ஏன் பனித்துளிகளை வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதோ? அதற்காக வருந்துவதா? நாம் ரசிக்க மறந்ததை அவன் ரசிப்பதற்காக நாம் ஹைக்கூவை ரசிப்பதா?

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை
- கவியருவி ம.ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 15, 2014 11:33 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 23

பொங்கல் திருநாள் - மாக்கோலம்
பசியாறும் எறும்புகள்
மிதித்துவிளையாடும் சிறுவர்கள்

இன்று அரிசி மாவில் கோலம் போடுவது என்பது அரிதே. இருப்பினும் சிலர் போடுகின்றார்கள். பொங்கல் திருநாள் விசேஷம் என்பதால் அரிசி மாவில் கோலம் போட்டு இருக்கின்றார்கள். அதை எறும்புகள் தின்று பசியாறிக்கொண்டிருக்கின்றன… சில எறும்புகள் சேமிக்க எடுத்து கொண்டும் சென்றிருக்கும்… செல்லும்… மூன்றாம் அடியில் மிதித்து விளையாடும் சிறுவர்கள் என்று இருக்கின்றது. மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் எறும்புகளை கவனிக்கமாட்டாடர்கள் என்பதை நாம் அறிந்ததே. அப்போது சில எறும்புகள் இறக்கும். என்னுடைய (தாய் மனதின்) கவலையெல்லாம் என்னவென்றால்… அந்த எறும்புகள் சிறுவர்களைக் கடித்துவிடுமோ என்பதுதான்.

பொங்கல் திருநாள் - மாக்கோலம்
பசியாறும் எறும்புகள்
மிதித்துவிளையாடும் சிறுவர்கள் – ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 24, 2014 9:16 am

தகவலுக்கு நன்றி
அறிந்தேன் பல விடயம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:38 am

thamiliniyan அவர்களுக்கு இந்தப் பதிவு பயன்படும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Nov 27, 2016 9:19 pm

தேடுதலின் போது திரும்ப வர முடிந்தது...

அனைவருக்கும் வணக்கம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க... - Page 5 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum