Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஹைக்கூ எழுதலாம் வாங்க...
Page 4 of 5 • Share
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஹைக்கூ எழுதலாம் வாங்க...
First topic message reminder :
தகவலில் உள்ள உறவுகள் புதுக்கவிதை மட்டுமின்றி...
ஹைக்கூ
சென்ரியூ
லிமரைக்கூ
ஹைபுன்
என்ற வடிவங்களையும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு தொடங்கப்படுகிறது.
முதலில் மேற்கண்ட வடிவங்களின் அமைப்பு வடிவம் இலக்கணம் பதியப்படுகிறது. பின்னர் எப்படி எழுதலாம் எப்படி எழுதக்கூடாது என்று தொடராக என்னுடைய கவிதைகள் இடம்பெறும். புதியதாக எழுத வருபவர்கள் இந்தப் பகுதியிலேயே பதியலாம். பதிபவர்களின் கவிதைகளில் திருத்தம் தேவைப்படின் நான் செய்கிறேன். நான் செய்யும் திருத்தம் நீங்கள் எழுதியதை இன்னும் செறிவாக்கவே - சிறப்பாக்கவே முனையும். கெடுக்காது. திருத்தம் செய்யலாம் என்று நீங்கள் கேட்டால் செய்வேன். இல்லை என்றால் என் கருத்தை மட்டும் சொல்வேன்.
எல்லாரும் எல்லா வகையான கவிதையும் எழுத வேண்டும் என்பதே இந்தப் பதிவில் என் நோக்கம். நடத்துனர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்துரைக்கவும்.

Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
தமிழ்நிலா wrote:நன்றி அண்ணா எல்லாம் உங்களால் தான்.
தங்களின் உயர்வில் எனக்கும் மகிழ்ச்சி.... அமர்க்களத்திற்கும் அமர்க்களம்.

Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
தூசிகளுடன்
சாலையோரத்துப் புல்
தூய்மையுடன் பனித்துளி
ஹைக்கூ பெரும்பான்மையும் உட்பொருளைக் கொண்டிருக்கும். இந்த ஹைக்கூவின் மறை பொருள்
தூசி - தூய்மையற்ற
சாலையோரத்துப் புல் – விபச்சாரி
தூய்மையுடன் பனித்துளி – அந்த விபச்சாரியும் தன் கணவனிடத்தில் பத்தினியான இருப்பது
உங்களுக்கு வேறு பொருள் தோன்றினாலும் தோன்றலாம்… ஆமாம் ஹைக்கூ சொல்வதை விட சொல்லாமல் விடுவது நிறைய.

ஹைக்கூ ஓரளவு எழுதுவேன் ...
இப்போது எமது நாட்டில் +2 காண (GCE A /L ) பரீட்சை ஆயத்தமாகிறோம் ..அதில் Economics பிரதான பாடம் கற்பிப்பதால் ..
அந்த வினாத்தாள்கள் பயிற்சிக்கு நிறைய தயாரிக்க வேண்டியுள்ளதால் அதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது ..ஓகஸ்ட் முடிந்ததும் உங்களுடன் இணைந்து ஹைக்கூ எழுத ஆசைப்படுகிறேன் ..நன்றி

ஓகஸ்ட் முடிந்ததும் உங்களுடன் இணைந்து ஹைக்கூ எழுத ஆசைப்படுகிறேன் ..நன்றி
மகிழ்ச்சி நண்பரே... நேரம் கிடைக்கும்போது தொடருங்கள்... மகிழ்ச்சி...
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்
பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.
மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை
என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…

தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கண்ட நிகழ்வை பார்த்திருக்கலாம். நான் பார்த்திருக்கிறேன். இப்போது நான் கிராமத்தில் இல்லை. கிராமத்து நினைவுகள் இருக்கிறது… கிராமத்திற்கும் அவ்வவப்போது சென்று வருகிறேன். நண்பர்களோடு குளக்கரையில் அமர்ந்து பேசுவது இன்றும் தொடர்கிறது.
அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாள் தண்ணீர் பாம்பு கரையில் இருப்பதைக் கண்டு நண்பன் கல்லை எடுத்து பாம்பை அடிக்க முனைந்தான். நண்பர்கள் தடுத்தி நிறுத்தி – பாம்பு எங்கே போகிறது என்று பார்க்கலாம் என கூறினோம். பாம்பு கரையிலேயே இருந்தது. அப்போது தவளை ஒன்று கரையை நோக்கி வந்தது ஒரு துணி துவைக்கும் கல்லின் அருகில் எட்டிப்பார்த்தது.
இதைக்கண்ட தண்ணீர் பாம்பு இரைக்காக அதனை கவ்வ நினைத்திருக்கலாம். நண்பனோ எதேச்சையாகக் கையில் வைத்திருந்த கல்லை குளத்தில் எறிந்தான். அப்போது பாம்பும் குதித்தது. தவளையும் நீரில் மூழ்கிப்போனது. பாம்பிடமிருந்து தப்பித்தது தவளை. அந்த நிகழ்வை இன்று ஹைக்கூவாக மாற்றியிருக்கிறேன்.
உணவுச் சங்கிலியின் விதிப்படி பாம்பு தவளையை உணவாக உட்கொள்வது தவிர்க்கமுடியாதது. அதைத் தடுக்க என் நண்பன் கல் எரிந்திருந்தான் என்றால் பாம்புக்கான உணவை நாங்கள் தந்திருக்க முடியாது. தடுத்திருந்தால் மனித நேயம் ஆகியிருக்குமே தவளையை காப்பாற்றியிருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால் அது சென்ரியூ கவிதையாகிவிடும். நண்பன் கல் எறிந்தது எதேச்சையானது அதை கவிதைக்குள் கொண்டு வந்துதான் கீழே உள்ளவாறு ஹைக்கூவை எழுதினேன்.
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
எறிந்த கல்
எறிந்த கல் – ஹைக்கூவுக்குள் சரியாகப் பொருந்தவில்லை. பின்னர் திருத்திய வடிவம்தான் இது.
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
மேலே உள்ளதை இன்னும் திருத்த வேண்டும் – சுருக்க வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.
நண்பன் கல் எரிந்தால் அது சென்ரியூ என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த கவிதையை சென்ரியூவாக்க விரும்பவில்லை. ஹைக்கூவாக எழுத முனைய துணிந்தேன். இப்படி:
அதே நிகழ்வு – அதே பாம்பு – அதே தவளை – நண்பனை மாற்றிவிட்டேன். குளத்தின் கரையில் பல செடிகள், மரங்கள் இருக்கும். அதிலிருந்து ஏதேனும் ஒன்று கல்லுக்குப் பதிலாக விழுவதாக மாற்றிவிட்டேன். இலை, காய், பழம் இந்த வரிசையில் அலரிப் பூ என்று எழுதினேன்.
தவளையைக் கவ்வ
குளக்கரையில் தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
இரண்டாவது, மூன்றாவது அடியில் குளம் என்ற சொல் இடம்பெறுகிறது. எனவே இதைச் சுருக்க வேண்டும்.
தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் அலரிப்பூ
என்று சுருக்கிவிட்டேன். அலரிப்பூவை தேர்ந்தெடுத்ததில் சிக்கல் இருப்பதாக நினைத்தேன். அதில் என்ன சிக்கல் என்கிறீர்களா? இருக்கிறது. அலரிப்பூ இறைவனுக்குச் சூட பயன்படுத்துவார்கள். சரி அந்தப் பூ உதிர்வது இறைவனே பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்றிவிட்டான் என்று உயர்வாக நீங்கள் எண்ணலாம். ஆனால், அது எனக்குப் பிடிக்கவில்லை. இறைவன் தானே உலக உயிர்களைப் படைத்து எது எது எதை எதை உண்ணலாம் என்றும் குறித்திருப்பான். அதனால் மாற்ற நினைத்தேன்.
மேலும், அலரிப்பூ என்பது எப்போதாவது ஒரு முறைதான் விழும். அதனாலும், அதை மாற்ற நினைத்தேன். ஆலம்பழம் என்று மாற்றலாம் என்று எண்ணினேன். ஆமாம் ஆலம்பழம் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. எப்படிப் பொருந்துகிறது என்று நீங்களே பாருங்களேன்.
அலரிப்பூ குளத்தில் விழுந்தால் ஒரு முறைதான் பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்ற முடியும். அடிக்கடிக் காப்பது யார்? ஆலம் மரத்தில் பழம் பழுத்தால் அதை உண்ண பல பறவைகள் வரும். அதனால் பழம் அடிக்கடி கீழே விழும். அதனால் அடிக்கடி தவளை பாம்பிடமிருந்து தப்பிக்க வழி இருக்கிறது. இப்போது ஹைக்கூ, ஹைக்கூவாக இருக்கிறது. இப்படி:
தவளையைக் கவ்வ
தயாராய் பாம்பு
குளத்தில் விழும் ஆலம்பழம்
எல்லாம் சரி… ஒரு ஹைக்கூ எழுதும்போது இத எல்லாத்தையுமா பாத்து எழுதுவாங்க – சிந்திப்பாங்க. சரி… பாவம் அந்தத் தவளைக்கு உணவு கொடுப்பது யார்? சிந்தியுங்கள் நீங்களும் ஹைக்கூ எழுதலாம். எழுதுங்கள்… என் ஆசையும் நீங்கள் எழுத வேண்டும் என்பதுதான்… (அடுத்த வாரம் இதே எங்க ஊர் குளத்தொடும் தவளையோடும் – ஆனால் பாம்பு தவளையை உண்ணும்படி ஒரு ஹைக்கூவோடு – ஹைக்கூ எழுதலாம் வாங்க தொடரில் சந்திக்கிறேன். – அடுத்த வாரத்துக்கு இப்பவே எழுதி வைச்சுட்டேன்!)

அசையும் இலைகள்
பாம்பு வாயில் தவளை
தாமரையிலிருந்து பறக்கும் வண்டு
அசையும் இலைகள் – எதன் காரணமாகவோ இலை அசைந்துள்ளது. ஆனாலும், அது என்ன இலை என்று முதல் வரியில் தெரியவில்லை.
பாம்பு வாயில் தவளை – சிக்கிவிட்டதா? ம். சிக்கிவிட்டது சென்ற வாரம் தப்பித்த தவளை. இலை அசையும் போதே ஏதோ வருகிறது – ஆபத்து வருகிறது என்று தண்ணீரில் குதித்து தப்பித்திருக்க வேண்டும். ஆனால் தப்பிக்கவில்லை – தவளைக்கு உணவு உண்ட மயக்கமாகக்கூட இருக்கலாம். எது எப்படியோ சிக்கிவிட்டது.
சரி… ஹைக்கூவில் மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாகவும் அதிர்ச்சியாகவும் முதல் இரண்டு அடியிலிருந்து விலகியும் இருக்க வேண்டும் என்கிறார்களே! – சரி மூன்றாவது அடிக்குத்தான் போய் பார்ப்போம்.
தாமரையிலிருந்து பறக்கும் வண்டு – இப்போது தெரிந்துவிடுகிறது – என்ன தெரிகிறது? முதல் அடியில் அசைந்த இலைகள் – தாமரை இலைகள் என்பதும் தாமரை இலையின் மீதுதான் அந்தத் தவளை இருந்திருக்கிறது என்பதும் தாமரையிலிருந்து என்பதால் தெரிகிறது.
அப்போது மூன்றாவது அடியில் இருக்கும் “பறக்கும் வண்டு”. ஆமாம். தாமரையில் தேன் எடுத்துக்கொண்டிருந்த வண்டு பாம்பு தவளையை விழுங்கியதால் – தாமரை அசைந்ததால் – பயந்தோ – பயப்படாமலோ பாதியிலேயே பறந்துவிட்டது!
ஏன் பாதியில்தான் பறந்திருக்குமா என்ன? தேன் முழுவதையும் அருந்தி விட்டு பறந்து செல்லலாம் என்றுகூட எண்ணி பறந்திருக்கலாம். அப்போது பாம்பு தவளையை விழுங்கியது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். – நீங்கள் வேறு நினைக்கலாம். அவ்வாறு நினைத்ததை நீங்கள் ஹைக்கூவாக எழுதலாம்.
(சரி – சென்ற வாரம் தப்பித்த தவளை இந்த வாரம் சிக்கிக்கொண்டது. இந்த வாரம் பறந்த வண்டு? அடுத்த வாரம் சிக்கிக் கொள்ளுமா என்று எதிர் பார்க்கிறோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது – ஆளை விடுங்கப்பா! இந்த விளையாட்டுக்கு நான் வரல!!)

ஹைக்கூ எழுதலாம் வாங்க - 13
பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்
இது எல்லாம் ஒரு ஹைக்கூவா? ஆமாம். இது ஹைக்கூ இல்லைதான். எப்படி ஹைக்கூ இல்லை என்று பார்ப்போம்.
இயற்கையைப் பாடுவது ஹைக்கூ. மானுடத்தைப் பாடுவது சென்ரியூ (இதுதான் ஹைக்கூ, சென்ரியூவின் சுருங்கிய சுருக்கம்).
இதில் மானுடத்தை – மனித மனத்தை – மனித நேயமின்மையை – பகைமையை – சுற்றுச் சூழல் சிதைவை – அண்ணன் தம்பி உறவு முறிவை – கிராமத்தில் இயல்பாக நடக்கும் நிகழ்வை மேற்கண்ட கவிதை பாடுவதால் அது சென்ரியூ.
மரத்தைக் வெட்டாமல் காத்திருந்தால் அது ஹைக்கூ.
வெட்டியதால் அது சென்ரியூ
பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்
மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால் ஹைக்கூவாக மாறிவிடும். சரி… எங்கே நீங்கள் ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதுங்களேன். (வரும் வாரம் வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் – என் கவிதையில் மரம் வளர்கிறது – மீண்டும் வெட்டவும் படுகிறது – ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது.)

எல்லோரையும் எழுதத்தூண்டும் விளக்கம். அருமை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
உண்டான கிளை
துண்டானது
பங்காளி நிலத்தில் நிழல்...
இதனை ஹைக்கூ என கொள்ளலாமா ரமேஷ் அண்ணா
துண்டானது
பங்காளி நிலத்தில் நிழல்...
இதனை ஹைக்கூ என கொள்ளலாமா ரமேஷ் அண்ணா
Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க...
ஹைக்கூ எழுதலாம் வாங்க – 14
ஹைக்கூ எழுதலாம் வாங்க – 13 ல்
பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்
என்று எழுதி அது சென்ரியூ என்று சொல்லியிருந்தேன். மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால் ஹைக்கூவாக மாறிவிடும் என்று சொல்லியிருந்தேன். வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். கீழ்க்கண்ட ஹைக்கூவில் மரங்கள் வெட்டப்படுகிறது. திரும்பவும் வளர்கிறது – மீண்டும் மீண்டும் வெட்டவும்படுகிறது – ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது இப்படி:
துளிர்க்கும் மரம்
மீண்டும் வெட்டப்படுகிறது
சேடையில் மக்கும் தளைகள்
மேற்கண்ட ஹைக்கூவில் இரண்டாம் அடியில் “மீண்டும் மீண்டும் வெட்டப்படுகிறது” என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரே ஒரு மீண்டும் மட்டும் வந்தால் இரண்டாவது அடி அதிக நீளமாக இல்லாமல் இருக்கும் என்று கைவிடப்பட்டது. அவ்வாறு கைவிடப்பட்டதால் ஹைக்கூவின் பொருள் சிதைந்துபோகவும் இல்லை. (சேடை என்பது – உழவு செய்த நிலம். நிலத்தில் – பல வகையான செடி அல்லது மரங்களில் சிறுசிறு கிளைகளை வெட்டி அதை மீண்டும் சிறு சிறு துண்டுகளாக்கி நிலத்தில் போடுவார்கள். அது மக்கி இயற்கை உரமாகப் பயன்படும். வேலூர் மாவட்டத்தில் சேடை என்பார்கள். மாவட்டத்திற்கு மாவட்டம் இந்த சொல் மாறுபடும் என்று நினைக்கிறேன். உங்கள் மாவட்டத்தில் சேடை எவ்வாறு கூறப்படுகிறது என்று கூறுங்களேன்.)

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 15
மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்
மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
மரக்கிளையில் ஏதோ ஒரு பறவை கூடுகட்டி குஞ்சு பொறித்துள்ளது. குஞ்சுகள் மரக்கிளையிலிருந்து விழுவதாய் அச்சப்படுகின்றனவே ஏன்? பலத்தக் காற்றா? யாராவது மரத்தை வெட்டுகிறார்களா? பயப்படும்படி குஞ்சுகளை விட்டுவிட்டு தாய்ப் பறவை எங்கே சென்றது? ஏன் இன்னும் கூடு திரும்பவில்லை? என்று நீள்கிறது முதல் இரண்டு அடிகள். மூன்றாவது அடியில் “தாவி விளையாடும் குரங்குகள்” என்று படிக்கும்போது மனது நிம்மதியாகிறது. அப்படியானால் குஞ்சுகள் விழ வில்லை. குரங்குகள்தான் அவை பயப்படும்படி விளையாடுகின்றன. குரங்குகளுக்கு விளையாட்டு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. குஞ்சுகளுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. தாய்ப் பறவைக்கு குரங்குகளின் விளையாட்டு வாடிக்கையாகிவிட்டிருக்கும். குஞ்சுகள்தான் பழக்கிக்கொள்ள வேண்டும்.
மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்
© -கவியருவி ம.ரமேஷ்

ஹா ஹா

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5

» ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்
» சென்ரியூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்
» லிமரைக்கூ எழுதலாம்- நீங்களும் கவிஞர்தான்
» ஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்
» உங்க மனைவிக்கு வளையல் வாங்க போறிங்களா ? இங்க வாங்க !! நல்லா பார்த்து செலக்ட் பண்ணுங்க!!!!!

Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|