தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat May 24, 2014 9:22 am

334 கன்னனி நல்ல கடையாய மாக்களின்;
சொன்னனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்
றுற்றவர்க்குத் தாமுதவ லான்.

(பொ-ள்.) கல் நனி நல்ல கடையாயமாக்களின் - மக்களிற் கடைப்பட்டவரானபேதையரைவிடக் கற்பாறைகள் மிக நல்லனவாம்;(ஏனெனில்) தாம் சொல் நனி உணராவாயினும்உற்றவர்க்கு இன்னினியே நிற்றல் இருத்தல்கிடத்தல் இயங்குதல் என்று உதவலான் - அவை இக்கடைப்பட்டவர்களைப்போற் சான்றோர்உறுதிமொழிகளை முற்றும் உணரமாட்டாவாயினும்தம்மை அடைந்தவர்க்கு உடனே நின்று கொள்ளல்இருந்து கொள்ளல் சாய்ந்து கொள்ளல் நடந்துகொள்ளல் என்று பலவற்றிற்கும் இடம் உதவுதலான்என்க.

(க-து.) சொல்வதுணராமையும்தாமேயுஞ் செய்யாமையும் பேதையோர் இயல்பாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun May 25, 2014 9:11 am

335 பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து.

(பொ-ள்.) பெறுவதொன்று இன்றியும்பெற்றானே போலக் கறுவுகொண்டு - தனது சினத்துக்குஏதுவாகப் பெறுங் காரணம் ஒன்று இல்லாதிருந்தும்அக் காரணம் பெற்றவனேபோலக் கோபித்தலைமேற்கொண்டு, ஏலாதார் மாட்டும் கறுவினால்கோத்து இன்னா கூறி உரையாக்கால் - தனது சினம்சென்று தாக்குதலில்லாத உயர்ந்தோரிடத்தும்கோபத்தால் இன்னாச் சொற்களைத்தொடுத்துரைத்துப் பேசாவிட்டால், பேதைக்கு நல்லசுனைத்து நாத்தின்னும் - பேதைகளுக்கு மிக்க தினவுநாவை அரித்துவிடுவது போலிருக்கும்.

(க-து.) பேதை மாக்கள்காரணமில்லாமலே பிறரைப் பகைத்தும் பழித்தும்நாத் தினவாற் சும்மா பேசியபடியேயிருப்பர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon May 26, 2014 11:41 am

336 தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

(பொ-ள்.) நல் தளிர்ப் புன்னைமலரும் கடல் சேர்ப்ப - அழகிய தளிர்களையுடையபுன்னைமரங்கள் மலர்களைப் பூக்கின்றகடற்கரையாய்!, தங்கண் மரபு இல்லார் பின் சென்றுதாம் அவரை எங்கண் வணக்குதும் என்பவர்புன்கேண்மை - தம்மிடத்தில் மதிப்பில்லாதவர்வழிச்சென்று ‘அவரை எம்மிடம் அடங்கும்படிசெய்வோம்' என்று சொல்லுவோர் கருதும் அச்சிறியோர் தொடர்பு. கல் கிள்ளிக் கை இழந்தற்று- கருங்கல்லைக் கிள்ள முயன்று ஒருவன் கைவிரலைஇழந்ததனோடு ஒக்கும்.

(க-து.) திருந்தா இயல்புடையதுபேதைமையாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Mon May 26, 2014 1:53 pm

தொடர் பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed May 28, 2014 9:58 am

337 ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.

(பொ-ள்.) ஆகாது எனினும் அகத்து நெய் உண்டாகில் போகாது எறும்பு புறம் சுற்றும் - தமக்கு உண்ண வாய்க்காதெனினும் குடத்தினுள் நெய் இருக்குமாகில் எறும்புகள் போகாமல் அக் குடத்தைச் சூழச் சுற்றிக் கொண்டிருக்கும்; யாதும் கொடாரெனினும் உடையாரைப் பற்றி விடார் உலகத்தவர் - அதுபோல, ஒன்றும் உதவமாட்டா ரென்றாலும் பொருளுடையோரைச் சூழ்ந்து கொண்டு பேதைமாக்கள் விடமாட்டார்கள்.

(க-து.) பேதைமை யென்பது, அறியாமையும் வீண்முயற்சியுமுடையது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Wed May 28, 2014 1:44 pm

நாலடியார் பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu May 29, 2014 11:03 am

338 நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார், - எல்லாம்
இனியார்தோள் சேரார், இசைபட வாழார்,
முனியார்கொல் தாம்வாழும் நாள்.

(பொ-ள்.) நல்அவை நாடோறும் எய்தார், அறம் செய்யார், இல்லாதார்க்கு யாதொன்றும் ஈகலார், எல்லாம் இனியார் தோள்சேரார் இசைபட வாழார் - உயர்ந்தோர் அவைக்களத்தை நாடொறுஞ் சென்றடைந்து கேள்விப் பயன் பெறாமலும், நற்செயல்கள் செய்யாமலும், இல்லாத வறியோர்க்கு யாதொன்றும் உதவாமலும், எல்லா வகையாலும் இனியரா யிருக்கும் தம் மனைவியர் தோளை மருவாமலும், கல்வி முதலியவற்றால் உலகிற் புகழுண்டாக வாழாமலுமிருக்கும் பேதைமாந்தர், முனியார்கொல் தாம் வாழும் நாள் - உயிர்வாழும் தம் வெற்று வாழ்நாட்களை வெறாரோ!

(க-து.) பேதையர் வாழ்நாள் வறிதே கழித்தொழியும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri May 30, 2014 12:11 pm

339 விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை, - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.

(பொ-ள்.) விழைந்து ஒருவர் தம்மைவியப்ப ஒருவர் விழைந்திலேமென்றிருக்கும் ஆய்நலமில்லாதார் மாட்டுக்கேண்மை - ஒருவர் தம்மைவிரும்பி மதித்து அளவளாவ ஒருவர். அவரைவிரும்பிலேம் என்று புறக்கணித்திருக்கும்இத்தகைய நுண்ணுணர்வில்லாப்பேதையரிடத்துண்டாகுந் தொடர்பு, தழங்கு குரல்பாய் திரைசூழ் வையம் பயப்பபினும் இன்னாது -ஒலிக்குங் குரலோடு பாய்ந்திழியும் அலைகளையுடையகடல் சூழ்ந்த உலகத்தைப் பயப்பதாயினும் இனியதொன்றன்று.

(க-து.) பொருள் செய்ய வேண்டுவதைப்புறக்கணித்துக் கிடப்பது பேதைமையின் இயல்பு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat May 31, 2014 10:02 am

340 கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.

(பொ-ள்.) கற்றனவும் கண் அகன்றசாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் - தான் கற்ற கல்விகளும், காட்சிபரந்த தன் சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும்அயலவர் பாராட்டப் பெருமையடையும்; தான்உரைப்பின் - அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால்,மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன்என்று எள்ளப்படும் - தனக்கு முகமன் மொழிந்துவிளையாடுவோர் மிகப் பெருகி அதனால்,மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்றுஉலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன்அடைவான்.

(க-து.) பேதைமை, பிறர்கருத்தறியாது அவர் முகமனுக்கு மகிழும் பித்துத்தன்மையுடையது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jun 02, 2014 11:13 am

35. கீழ்மை
[கீழ்மக்களின் தன்மை யுணர்த்திற்று.]
341 கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.

(பொ-ள்.) கப்பி கடவதா காலை தன்வாய்ப்பெயினும் குப்பை கிளைப்பு ஓவாக்கோழிபோல் - கடமையாக நாடோறும்நொய்யரிசியைத் தன் வாயிற் பெய்தாலும் குப்பைகிளைத்தலைவிடாத கோழியைப்போல், மிக்கனம்பொதிந்த நூல் விரித்துக் காட்டினும் கீழ் தன்மனம் புரிந்தவாறே மிகும் - மிக்க பெருமை நிறைந்தமெய்ந் நூலுண்மைகளைப் பொருள் விளக்கிஅறிவுறுத்தாலும் கீழ்மகன் தன் மனம் விரும்பியவழியே முனைந்தொழுகுவான்.

(க-து.) கீழ்மை யென்பது பிறர்கூறும் அறிவுரையை ஏலாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Mon Jun 02, 2014 12:03 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jun 03, 2014 10:54 am

342 காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் எனஉரைப்பின் - கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து.

(பொ-ள்.) காழ் ஆய கொண்டு கசடுஅற்றார் தம் சாரல் தாழாது போவாம் எனஉரைப்பின் - உறுதியாகிய மெய்ந்நூலுணர்வு கொண்டுவினை நீங்கிய மேலோர் பக்கல் நாம் காலம்தாழாது சென்று பயனுறுவோம் என்று அறிந்தோர்எடுத்துக்காட்டினால், கீழ்தான் உறங்குவம் என்றுஎழுந்துபோம் அஃதன்றி மறங்கும் மற்றொன்றுஉரைத்து - கீழ்மகன் தூங்குவோம் வம்மின் என்றுஎழுந்து போவான், அஃதன்றி வேறு வம்பு பேசிமாறுபடுவான்.

(க-து.) இருந்தால் வாளா கிடத்தலும்யாதேனுஞ் செய்தால் பழுது செய்தலுங் கீழோர்இயல்பாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jun 04, 2014 9:24 am

343 பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.

(பொ-ள்.) பெரு நடை தாம் பெறினும்பெற்றிபிழையாது ஒரு நடையராகுவர் சான்றோர் -உலகிற் பெருமித நிலையைத் தாம் பெற்றாலும் தம்பெருந்தன்மையாகிய இயல்பு வழுவாது என்றும் ஒருதன்மையாராய் விளங்குவர் மேலோர்; பெருநடைபெற்றக்கடைத்தும் பிறங்கு அருவி நல் நாடவற்றாம் ஒரு நடை கீழ்-பெருமித நிலையைப்பெற்றவிடத்தும், விளங்குகின்ற அருவிகளையுடையசிறந்த மலைநாடனே, கீழ் மகனும் என்றுந் தனதுகீழ்மையியல்பு தோன்ற ஒரு நடையாய்ஒழுகவல்லவனாவன்.

(க-து.) செல்வநிலையிலும் கீழோர்கீழோராகவேயிருப்பர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jun 05, 2014 9:43 am

344 தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் ;- பனையனைத்
தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட.
நன்றில நன்றறியார் மாட்டு.

(பொ-ள்.) தினையனைத்தேயாயினும்செய்த நன்று உண்டால் பனையனைத்தா உள்ளுவர்சான்றோர் - தினையளவினதேயாயினும் செய்த உதவிமுன் இருக்குமானால் அதனைப் பனையளவினதாகக்கருதிக் கனிந்திருப்பர் மேலோர்; பனையனைத்துஎன்றும் செயினும் இலங்கு அருவி நல் நாட நன்றுஇலநன்று அறியார்மாட்டு - நாளும் பனையளவுஉதவிசெயினும், விளங்குகின்ற அருவிகளையுடையஉயர்ந்த மலைநாடனே, நன்மையறியாக்கீழோரிடத்தில் அவை சிறிதளவும் நன்றிபாராட்டுத லில்லாதனவாகும்.

(க-து.) கீழ்மை, நன்றி மறக்கும்இயல்புடையது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jun 06, 2014 10:02 am

345 பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறு படும்.

(பொ-ள்.) பொன் கலத்து ஊட்டிப்புறந்தரினும் நாய் பிறர் எச்சிற்கு இமையாதுபார்த்திருக்கும் - பொன்னாற் செய்தஉண்கலத்தினால் உண்பித்துப் பாதுகாத்தாலும்நாயானது பிறர் எறியும் எச்சிற் சோற்றுக்குக்கண்ணிமையாமல் விழித்துக்கொண்டு காத்துக்கிடக்கும், அச்சீர்-அத்தன்மையாக,பெருமையுடையதாக் கொளினும் கீழ் செய்யும்கருமங்கள் வேறுபடும் - பெருமைக்குரியவனாகப்பெருமைப்படுத்தினாலும் கீழ்மகன் செய்யுஞ்செயல்கள் அந்நிலைமைக்கு வேறாகும்.

(க-து.) கீழ்மையியல்பு,திருத்தினாலுந் திருந்தாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jun 08, 2014 9:56 am

346 சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.

(பொ-ள்.) சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர் எக்காலும் சொல்லார்மிகுதிச் சொல் - ஆட்சிச் செல்வம் பெற்றாலும்மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்தசொற்களைச் சொல்லமாட்டார்கள்; முந்திரிமேற்காணிமிகுவதேல் கீழ் தன்னை எக்காலும் இந்திரனாஎண்ணிவிடும் - ஆனால் முந்திரியளவுக்குமேற்காணியளவாகச் செல்வம் மிகுவதானால் கீழ்மகன்தன்னை என்றுந் தேவர் கோனாக எண்ணி இறுமாந்துஉரையாடுவன்.

(க-து.) சிறிது நிலையுண்டானால்கீழ்மக்கள் மிகவுஞ் செருக்குவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jun 15, 2014 10:48 am

347 மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

(பொ-ள்.) மை தீர்பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்செய்ததெனினும் செருப்புத் தன் காற்கேயாம் -குற்றந் தீர்ந்த கிளிச்சிறை என்னும் பசியபொற்றகட்டின்மேல் மாட்சிமை வாய்ந்தமணிக்கற்களைப் பதித்துச் செய்யப்பட்டதாயினும்செருப்பு ஒருவனது காலுக்கே அணிந்துகொள்ள உதவும்;எய்திய செல்வத்தராயினும் கீழ்களைச்செய்தொழிலாற் காணப்படும் - அதுபோலச்சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும்கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னாரென்று கண்டுகொள்ளுதல் கூடும்.

(க-து.) கீழோர் இயல்பு,நிலைமைகளால் வேறுபடுதலில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jun 16, 2014 4:17 pm

348 கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

(பொ-ள்.) விறல் மலை நல் நாட -ஆற்றல் வாய்ந்த மலைகளையுடைய சிறந்த நாடனே!,கீழ் - கீழ்மகன், கடுக்கெனச் சொல் வற்று -கடுமையாகப் பேசுதல் வல்லான்: கண்ணோட்டம் இன்று- கண்ணோட்ட மில்லான்; இடுக்கண் பிறர்மாட்டுஉவக்கும் - பிறரிடத்து நேரும் இன்னலுக்குமகிழ்வான்; அடுத்தடுத்து வேகம் உடைத்து - அடிக்கடிசீற்றமுடையான் ; ஏகும் - கண்ட விடங்கட்குச்செல்வான் ; எள்ளும்-பிறரை இகழ்வான்.

(க-து.) பிறர்க்குத் தொல்லைகள்விளைப்பது கீழ்மக்களின் இயல்பு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Jun 17, 2014 11:34 am

349 பழைய ரிவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினிய ராகுவர் சான்றோர்; - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப;
எள்ளுவர் கீழா யவர்.

(பொ-ள்.) கள் உயிர்க்கும்நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப - தேன்சொரியும்நெய்தல் மலர்களையுடைய ஒலிக்கின்ற கடலின்குளிர்ந்த கரையை யுடையவனே!, பின் நிற்பின் பல்நாள் பழைய ரிவரென்று உழை இனிய ராகுவர்சான்றோர் - தமக்குப் பின்னால் வந்து ஒருவர்பணிவுடையராய் நின்றால் இவர் பலநாள்பழகியவரென்று விரும்பி அவரிடம் சான்றோர்அன்புடையவராவர்; கீழாயவர் விழையாது எள்ளுவர் -ஆனாற் கீழ்மக்கள் அவரைத் தமக்குஅடங்கினவரெனக் கொண்டு அன்புடன் விரும்பாமல்அதிகாரத்தால் மதியாது ஒதுக்குவர்.

(க-து.) தம்மை விரும்புவோரைத்தாம் மதியாதொதுக்குவது கீழ்மக்களின் இயல்பு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Jun 18, 2014 9:12 am

350 கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றுந் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.

(பொ-ள்.) கொய் புல்கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும் வையம்பூண்கல்லா சிறு குண்டை - கொய்தற்குரிய பசும்புல்லைஅறுத்துக்கொடுத்து நாடோறும் உண்பித்து வந்தாலும்சிற்றெருதுகள் வண்டிகள் பூண்டிழுக்க உதவா; ஐய கேள் -ஐய கேட்பாயாக; எய்திய செல்வத்தராயினும்கீழ்களைச் செய்தொழிலாற் காணப்படும் -சிறக்கப் பொருந்திய செல்வமுடையரானாலும் கீழ்மக்களை அவர் செய்கின்ற தொழில்களால்இன்னரென்று கண்டுகொள்ளுதல் கூடும்.

(க-து.) எவ்வளவு நலமுறச் செய்யினும்கீழ்மக்கள் பிறர்க்குப் பயன்படார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Jun 19, 2014 11:19 am

பொருட்பால்
36. கயமை
[மெலிந்த உணர்வினாரது இயல்புணர்த்திற்று.]

351 ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்
காத்தோம்பித் தம்மை அடங்குப; - மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.

(பொ-ள்.) ஆர்த்த அறிவினர் ஆண்டுஇளையராயினும் காத்து ஓம்பித் தம்மை அடக்குப -உறுதிமக்க மெய்யறிவினையுடையார் ஆண்டில்இளையராயினும் தம்மைத் தீய நெறியினின்றுந்தடுத்து நன்னெறியில் நிறுத்திஅடக்கிக்கொள்வர்; மூத்தொறும் தீத்தொழிலேகன்றித் திரிதந்து எருவைபோல் போத்து அறார்புல்லறிவினார் - ஆனால் மெலிந்தஅறிவினையுடையார் கழுபோல முதிர முதிரத் தீயசெய்கைகளே தடிப்பேறி அலைந்து மாசு நீங்கார்.

(க-து.) ஆண்டு முதிர்ந்து உலகப்பழக்கம் ஏறுதலால் கயவர் பெறும் பயன் யாதுமில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Jun 20, 2014 11:39 am

352 செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.

(பொ-ள்.) செழும் பெரும்பொய்கையுள் வாழினும் என்றும் வழும்புஅறுக்ககில்லாவாம் தேரை-நீர் நிறைந்த பெரியகுளத்தின்கண் உயிர் வாழ்ந்தாலும் தவளை தன்மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கைநீக்கிக்கொள்ளும் ஆற்றலில்லாதனவாகும்; வழும்புஇல் சீர் நூல் கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்றுஇல்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது - அது போல,பிழையற்ற சிறப்பினையுடைய மெய்ந்நூல்களைப்பயின்றாலும் நுட்பஞ் சிறிது மில்லாதவர் தம்மைஅதனால் மேம்படுத்திக்கொள்ளும் மாட்சி இல்லை.

(க-து.) அறிவு உரமில்லாதவர், தக்கவாய்ப்புக்களிருந்தாலும் தம்மைமேம்படுத்திக்கொள்ள அறியார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Jun 21, 2014 11:30 am

353 கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்
குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்
கெற்றா லியன்றதோ நா.

(பொ-ள்.) கண மலைநல் நாட -கூட்டமான மலைகளையுடைய உயர்ந்த நாடனே!. கண் இன்றுஒருவர் குணனேயும் கூறற்கு அரிது - புறத்தில் ஒருவரதுநல்லியல்பினையும் பேசுதற்குஅருமையாயிருக்குமென்ப; குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோநா - ஆனால் அவரது நல்லியல்பு கெடும்படி, செய்யாதகுற்றங்களை அவரெதிரிலிருந்து செய்ததாகக் கூறும்மெலிந்த அறிவினார்க்கு நாக்கு எதனால்உருவானதோ, அறிகிலேம்.

(க-து.) கயவர், அஞ்சாது,பொய்யுரைக்கும் இயல்பினர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Jun 22, 2014 11:33 am

354 கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப் பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.

(பொ-ள்.) கோடு ஏந்து அகல்அல்குற் பெண்டிர்தம் பெண் நீர்மை சேடியர்போலச்செயல் தேற்றார்-பக்கம் உயர்ந்து அகன்றஅல்குலையுடைய நல்லிலக்கணம் அமைந்த நற்பெண்டிர்,வேலைக்காரிகளைப்போல் தமது பெண்மையில்பைப்புறத்தில் ஒப்பனை செய்து காட்டுதல் அறியார்;மற்றையவர் கூடிப் புதுப் பெருக்கம்போலத் தம்பெண் நீர்மை காட்டி மதித்து இறப்பர் - ஆனால்ஏனைத் தீய பெண்டிரோ தம்முட் கூடிப் புதுவெள்ளம்போலப் புனைதல் செய்து தமது பெண்மையியல்பைப்புறத்திற் புலப்படுத்தித் தாமே மதித்துவரம்புகடந்து நடப்பர். (அதுபோற் கயவர்இடம்பத்தால் அவம்படுவரென்பது.)

(க-து.) கயமைஉள்ளீடில்லாததாகலின் இடம்பத்தையே விரும்பும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Jun 23, 2014 10:09 am

355 தளிர்மேலே நிற்பினுந் தட்டமாற் செல்லா
உளிநீரார் மாதோ கயவர்; - அளிநீராக்
கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

(பொ-ள்.) தளிர்மேலே நிற்பினும்தட்டாமற் செல்லா உளிநீரார் கயவர் -இளந்தளிரின்மேல் நின்றாலும் பிறர்தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின்இயல்பினையுடையவர் கயவர்; அளிநீரார்க்குஎன்னானும் செய்யார் இன்னாங்கு செய்வார்ப்பெறின் எனைத்தானும் செய்ப - ஏனென்றால்,பிறர்க்கு இரங்கும் இயல்புடைய சான்றோர்க்குச்சிறிதும் பயன்படாமல், தமக்குக்கொடுமைசெய்வாரைப் பெற்றால் அவர் எவ்வளவும் பயன்பட்டுவேலை செய்வர்.

(க-து.) கயவர், வருத்தியே வேலைவாங்குதற்குரியர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 22 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum