தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இது உங்கள் இடம்..!

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

இது உங்கள் இடம்..! Empty இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:03 am

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:03 am

போட்டாளே ஒரு போடு!

நண்பர் ஒருவர், தன் மகள் கல்யாணத்துக்காக, வரன் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மாப்பிள்ளையின் பொருத்தம் சரியாக இருந்தது. பெண் பார்க்க வரும் நிலையில், அந்த பெண், "இந்த மாப்பிள்ளை வேண்டாம், இவர், பள்ளி ஆசிரியர். எனக்கு பள்ளிக்கூட வாத்தியார் தவிர, வேறு மாப்பிள்ளை யாரானாலும் பரவாயில்லை...' என்றும் கூறி விட்டாள்.
உடனே அவளது பெற்றோர், "இந்த காலத்தில், பள்ளிக்கூட வாத்தியார் ஒன்றும் மட்டமில்லம்மா... அவர்களுக்கும் நல்ல சம்பளம். வருடத்தில் மூன்று மாதம் விடுமுறை. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்று நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு...' என்று கூறவும், அந்த பெண், "ஆமாம்... இறைவனுக்கு சமமாக போற்றப்படும் பள்ளி ஆசிரியர்கள் தான், இன்று மாணவர்களை, சிறுநீரை குடிக்கச் சொல்வதும், பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதும், ஏழைக் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய உதவித்தொகையை அபகரிப்பதுமான செயல்களில் ஈடுபடுகின்றனர்...' என்றாளே பார்க்கலாம்.
"பண்டம் ஒரு இடம் பழி பத்தெடம்' என்பது போல், யாரோ சிலர் செய்யும் தவறுக்கு, அந்த துறையே மதிப்பிழந்து போய்
விடுகிறது! இனியாவது, "கறுப்பு ஆடு' ஆசிரியர்கள் திருந்துவரா?

— ஜி.நிலா, சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:03 am

சிறிய தட்டும் பெரிய தட்டும்!

டாக்டர் நண்பர் வீட்டில் சாப்பிடச் சென்றேன். சாப்பாட்டு மேஜையில், பெரியதும், சிறியதுமாக இரண்டு அழகிய பீங்கான் தட்டுகளை, என் முன்னே வைத்தனர். பொரியல், கூட்டு, சாலட் போன்றவற்றை, பெரிய தட்டிலும், சாதத்தைச் சிறிய தட்டிலும் பரிமாற ஆரம்பித்தனர்.
ஏதாவது தவறுதலாகப் பரிமாறுகின்றனரோ என்ற தயக்கத்துடன் கேட்டேன். அவர்: தவறு எதுவும் நேரவில்லை. வேண்டுமென்று தான் இப்படிப் பரிமாறுகிறோம். சாதத்தின் அளவு குறைவாகவும், காய்கறி, பழங்களின் அளவு அதிகமாகவும் சாப்பிட வேண்டும்...
குறைவாகச் சாப்பிட வேண்டியதை, சிறிய தட்டில் போட்டுக் கொண்டால், தட்டு நிறைய சாப்பிட்டது போல, திருப்தி உணர்வு ஏற்பட்டு விடும். நிறையச் சாப்பிட வேண்டிய அயிட்டங்களை, பெரிய தட்டில் போட்டு தாராளமாகச் சாப்பிட வேண்டும். அதனால், எப்போதுமே எங்கள் வீட்டில் இப்படித்தான் பரிமாறுவோம்... என்று, விளக்கமாகச் சொன்னார்.
விருந்தும் கொடுத்து, எப்படி ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்றும் கற்று கொடுத்த டாக்டர் குடும்பத்திற்கு, மனமார நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன்.
இனி, டாக்டர் சொன்னபடி தான் சாப்பிட வேண்டும் என்று, தீர்மானித்தும் விட்டேன். அப்போ.. நீங்க...

— மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:04 am

காப்பி பூனைகள்!

நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். "டிவி'க்கு, பிரபல தனியார் நிறுவனத்தின், டி.டி.எச்., கனெக்ஷன் கொடுத்திருந்தார். இந்தி சானல் ஓடியது. சானல் மாறும் போது கூட, தமிழ் சானல்களுக்கு மாறாமல், மற்ற இந்தி சானல்களுக்கு மாறினார். "தமிழ் சானல்களின் மீது உங்களுக்கு என்ன கோபம்?' என வினவினேன்.
அதற்கு அவர், நம்பர் ஒன் இந்தி சானலின் பெயரை கூறி, "அந்த சானலில் வரும் நிகழ்ச்சிகளை தான், தமிழ் சானல்களில் எல்லாம் காப்பியடிச்சு ப்ரோக்ராம் பண்றாங்க. காப்பிகளை பார்ப்பதற்கு பதிலா, ஒரிஜினலை பாத்திட்டு போலாமே...
"தவிர, இந்தி வெறுப்பை, ஓட்டுப் பொறுக்கிகள், ரெண்டு தலைமுறைக்கு விதைச்சிட்டாங்க. பிள்ளைகளாவது இந்தி சானல்களோட நட்பாகி, இந்தி கத்துக் கட்டுமே... பிள்ளைகள் தமிழகப் பிள்ளைகளாய் தனித்துகிடக்காமல், இந்திய பிள்ளைகளாக சகலவிதத்திலும் உயர்ந்து நிக்கட்டுமே...' என்றார்.
அவர் சொன்னது சரிதான். நானும் "காப்பி கேட்' சானல்களை கட் பண்ணிவிட்டு, இந்தி சானல்களுக்கு தாவி விட்டேன்!

— தங்க.திராவிட செல்வன், திருவாரூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:05 am

இது போல செய்து காட்டுங்களேன்!

சென்ற வாரம், என் மகள் பணிபுரியும் தொழிற்சாலையில், ஒரு சுற்றறிக்கை தயார் செய்து, அதில், "ஞாயிறு காலை நம் ஆலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு, எல்லாரும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்...' என, கையெழுத்து பெற்றுக் கொண்டனர். என்ன நிகழ்ச்சி என்றே தெரியாமல், எங்களைப் போலவே நிறைய பேர் அங்கே கூடியிருந்தனர்.
ஆலையின் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில், நூற்றுக்கணக்கானோரை சுற்றி அமரச்செய்து, நடுவில் தீ மூட்டினர். பின், சில அதிகாரிகளின் ஆலோசனைப் படி, தீயை எப்படி அணைப்பது, தீ பரவுவதை எப்படி தடுப்பது, தீயிலிருந்து எப்படி தப்பிப்பது போன்றவற்றை, செயல்முறை விளக்கமாக நடத்திக் காட்டினர்.
அதோடு, ஆலைகளில், அ<லுவலகங்களில், வீடுகளில், மின் கசிவால் தீ பரவினால் எப்படி அணைப்பது, பிளாஸ்டிக் ரசாயனப்பொருட்கள் எரிந்தால் எவ்வாறு அணைப்பது போன்ற பல்வேறு செய்முறைகளில், விளக்கமாக சோதனை காட்சிகள் நடத்திக் காட்டப்பட்டது. அதற்கான முதலுதவி நடவடிக்கைகளும் அரங்கேறின.

முடிவில், எல்லாருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது. எதிர்பாராத இந்நிகழ்ச்சியை காணவந்த ஊழியர்களின் குடும்பத்தினர், வியந்து பாராட்டியதோடு, தற்காப்பு நடவடிக்கையை கற்றுக்கொண்ட திருப்தியில் சென்றனர். இதற்காக, ஆயிரக்கணக்கில் பணமும் செலவழித்து, பயனுள்ள நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது, பயனுள்ளதாக இருந்தது.
பல ஆலை, அலுவலகங்களில் தீ அணைக்கும் கருவியை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாமல் இருப்பதே, பெரும் பொருட்சேதத்திற்கும், உயிரிழப்பிற்கும் காரணம் என்பதும், எங்களுக்கு புரிந்தது. இதுபோல, மற்ற நிறுவனங்களும், குறைந்தபட்சம் தங்களது ஊழியர்களுக்காவது பயிற்சி அளிக்க முன் வருமா?
— கே.நாகலிங்கம், தஞ்சை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:05 am

உ.பா., விபரீதம்!

நாகர்கோவிலில் இருந்து மதுரை செல்லும் இரவு நேர பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்து, கோவில்பட்டியை அடைந்தபோது, எனக்கு முன்சீட்டில் சிறு சலசலப்பு. ஜன்னல் ஓரம் சாய்ந்து தூங்கியபடி இருந்த தன் கணவனை, எழுப்ப முயன்று கொண்டிருந்தாள் ஒரு பெண்.
"கோவில்பட்டி வந்திருச்சு... எந்திரிங்க... எறங்கணுமுல்லா...' என, அவனைத் தட்டித்தடவி, உலுக்கி, குலுக்கி எழுப்ப முயன்றும், அவன் அசைந்தானே தவிர, விழித்தெழவில்லை.
கிட்டத்தட்ட மூன்று மணி நேர இரவுப் பயணம் என்பதால், அப்பெண் சொல்ல சொல்ல கேட்காமல், உ.பா., அருந்திவிட்டு, அவள் கணவன் பேருந்தில் ஏறியதாகவும், இறங்க வேண்டிய கோவில்பட்டி வந்தும், உ.பா., உபயத்தால், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவனை எழுப்ப முடிய வில்லை எனவும், அப்பெண்ணிடம் விசாரித்த போது தெரிந்தது.
சக பயணியரும், நடத்துனரும், அப் பெண்ணையும், அவள் கணவனையும் திட்ட, அவள் செய்வதறியாது அழ ஆரம்பித்தாள்.
நானும் என்னோடு வந்த நண்பர்களும், அந்த உ.பா., ஆசாமியை குண்டுக்கட்டாகத் தூக்கி, சாலை ஓரம் கிடத்தி விட்டு கிளம்பினோம். இரவுப் பயணம் என்றாலே, உ.பா., அருந்திவிட்டு பேருந்து அல்லது ரயிலில் ஏறும் பழக்கம், உ.பா., ஆர்வலர்களிடம் உள்ளது. ஆர்வக் கோளாறால் அதிகம் அருந்தி விட்டு, இப்படி நடந்து கொள்வது படுகேவலமானது. பயணத்தின் போது உ.பா., அருந்துவதை தவிர்க்கலாமே!

— எம்.பதூர் முகமது, நாகர்கோவில்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:06 am

மருத்துவரிடம் செல்லும் போது...

குழந்தை நல மருத்துவரிடம், லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்தபோது நடந்த சம்பவம்...
ஒரு நாள், வயதான பெண் ஒருவர், பிறந்து இருபதே நாட்கள் ஆன குழந்தைக்கு, உடல் நிலை சரியில்லாமல் அழைத்து வந்திருந்தார். துணைக்கு யாரும் வரவில்லை. இருப்பினும், டாக்டர் வரும் நேரத்திற்கு, இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து, காத்திருந்தார்.
ஒரு மணி நேரம் கடந்ததும், குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தை காய்ச்சலில் அழுகிறது என முதலில் நினைத்தோம். தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், அந்த பெண்மணியிடம் விசாரித்தோம்.
"டாக்டர் வந்த உடனே, முதல் ஆளாக குழந்தையை காட்டி விட்டு வந்துடலாம் என நினைத்து, புட்டிபாலும் இல்லாமல், தாயும் இல்லாமல் வந்தேன். வந்த இடத்தில், இப்படி ஆகி விட்டது...' என்றார் வருத்தமாக.
நல்ல வேளையாக, நான், அப்போது ஏழு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவளாக இருந்தேன். உடனே அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, அதன் பசியாற்றி னேன். குழந்தை, பாலை குடித்துவிட்டு, தூங்கிவிட்டது. பின், மருத்துவர் வரவும், சிகிச்சை பெற்று சென்றார்.
தாய்மார்களே... நீங்கள் எங்கு சென்றாலும், தாயும், சேயும் சேர்ந்தே செல்லுங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், புட்டிபால் எடுத்துச் செல்லுங்கள

— எம்.எஸ்.தமீனா ஷஹீது, கீழக்கரை.

நன்றி வாரமலர்
அனுபவ பதிவுகள் தொடரும் .......................
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by முரளிராஜா Tue May 28, 2013 10:06 am

பதிவுகள் தொடரட்டும் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 28, 2013 12:25 pm

பகிர்வுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Manik Tue May 28, 2013 1:25 pm

எல்லாம் நல்லாயிருக்கு

தொடரட்டும் அருமையான பதிவுகள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by விக்கி Tue May 28, 2013 4:09 pm

அனைத்தும் அருமை
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:33 pm

அந்தரங்கத்தை அம்பலப்படுத்தாதீர்...



சமீபத்தில், என் உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டு, இறுதிவரை மணமக்களுடன் இருந்து, அனைத்து வேலைகளையும் செ#து கொடுக்கும் பொறுப்பில் கவனமாய் இருந்தேன். திருமண ஆல்பத்திற்காக போட்டோகிராபர், அடிக்கடி மணமக்களை பலவிதமான போஸ்களை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தி, பல விதங்களில் போட்டோ எடுத்துக் கொண்டார்.
ஒரு கட்டத்தில், மணமக்கள் இருவரும் முத்தமிட்டுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு மணமக்கள் இருவரும் தயங்கினர். இருந்தாலும், "இதெல்லாம் சகஜம். இப்போதெல்லாம் ஆல்பத்தில் முத்தக்காட்சிகள் இடம் பெறுவது பேஷனாகி விட்டது...' என்று, போட்டோகிராபர் கட்டாயப்படுத்தவே, மணமக்களும் இசைந்தனர். இதைக் கண்ட எனக்கும், அங்கிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி.
என்னதான் நாகரிகம் என்றாலும், தாம்பத்யத்தின் அடிப்படை உணர்வான முத்தத்தை, பலர் முன்னிலையில் பரிமாறிக் கொள்வதும், அதை புகைப்படமாக எடுத்து, பதிவு செய்வதும், கலாசாரத்தை மீறிய செயல் அல்லவா? பின், யாராவது ஆல்பத்தை பார்க்க நேரிட்டால், மணமக்களை தவறாகவோ, உணர்ச்சிமயமாகவோ பார்க்க கூடும் அல்லவா? போட்டோகிராபர், வீடியோகிராபர் இப்படி போஸ் கொடுக்க வற்புறுத்தினாலும், நாம் மரபை மீறக்கூடாது.
அந்தரங்கம் புனிதமானது என்பதை, மணமக்கள் புரிந்து கொள்வது அவசியம்.

— ஆர்.மதன், மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:33 pm

பத்து இலக்க எண்களை துரத்தினவன்!



நான் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி. அலுவலக பணி தொடர்பாக சென்னை வந்திருந்தேன். சென்னையில் இறங்கும் போது தான், என் மொபைல் போன் காணாமல் போனதை உணர்ந்தேன். என் மனைவி எண்ணோ, சென்னை நண்பர்கள் அலுவலக துணை அதிகாரிகள் எண்ணோ, எனக்கு மனப்பாடமாக தெரியவில்லை. 400க்கும் மேற்பட்ட எண்கள், மொபைல் போன் புக்கில் உள்ளன. அன்று முழுவதும் முகத்தை தொலைத்து விட்டவன் போல பரிதவித்தேன்.
நண்பர்களின், துணை அதிகாரிகளின் மறைமுக கிண்டலுக்கு ஆளானேன். ஷெர்லாக்ஹோம்ஸ் போல் துப்பறிந்து, எட்டு மணி நேரத்திற்கு பின், மனைவி எண்ணை கண்டுபிடித்தேன். எட்டு மணி நேரம் தொடர்பு கொள்ளாததால், எனக்கு என்ன ஆயிற்றோ, ஏது ஆயிற்றோ என, என் குடும்பத்தினர் பதறியிருக்கின்றனர். ஊர் திரும்பியதும், இரண்டு வேலைகள் செய்தேன். போன்புக் எண்களை டைரியில் பிரதி எடுத்தேன். நெருக்கமான இருபது நபர்களின் எண்களை மனப்பாடம் செய்தேன். குறைந்த விலையில் இரண்டாவது மொபைல் போன் வாங்கி, முதல் மொபைல் போனில் பதிவு செய்த எண்களை பதிந்து, பீரோவில் பாதுகாப்பாய் வைத்தேன். என் அவஸ்தை உங்களுக்கு பாடமாய் இருக்கட்டும்.

— க.சபேசன், திருப்பூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:34 pm

வாயால் திறக்காதே!



நான், எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி மாணவன். எனக்கு நெருக்கமான நண்பர்கள் நால்வர் உண்டு. நாங்கள், வாரம் ஒருமுறை பீர் மட்டும் குடிப்போம். என் நண்பர்களில் ஒருவன், பாட்டில்களை எடுத்து, மூடிகளை பற்களால் திறப்பான். மூடி, "கிஸ்சக்' என்ற சப்தத்துடன் திறந்து கொள்ளும்.
"பாட்டிலை வாயால் திறக்காதே... உன் பல்லுக்கு ஆபத்து. அத்துடன் உன் எச்சில் பட்ட பீரை அருவருப்புடன் குடிக்க வேண்டியிருக்கிறது...' என்பேன். அவனை தவிர்க்கவே, ஓப்பனர் அல்லது நெயில் கட்டருடன் இணைந்த ஓப்பனரை, பார்ட்டிக்கு எடுத்து செல்வேன். "கோழை, பத்தாம் பசலி...' என, நண்பர்கள் என்னை கிண்டல் செ#வர்.
ஒரு தடவை, ஓப்பனர் தவிர்த்து, பீர் பாட்டிலை திறக்க முயன்றான் நண்பன். "கடக்' என்ற சப்தத்துடன், அவனது பக்கவாட்டு நான்கு மேல் வரிசை பற்கள், ரத்தத்துடன் தெறித்து விழுந்தன. "மாவீரன்' இப்போது<, "ஓட்டைப்பல் சிங்காரம்' ஆகிவிட்டான்.
ஆகவே, "குடிமகன்'களே... வாய் தவிர்ப்பீர்; ஓப்பனர் உபயோகிப்பீர்!

— எம்.எம்.ராஜராஜன், தஞ்சாவூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:35 pm

"நெருங்கி'னாலும் சொல்லாதீங்க!

கொஞ்சம் நன்றாகப் பேசினாலே போதும்... பெண்கள், தங்கள் மனக் கவலைகளை எல்லாம், கொட்டித் தீர்த்து விடுவர். அதனால், பாதிப்பு ஏற்படும் போது தான், இவரிடம் போய் எல்லாவற்றையும் உளறினோமே என்று மனம் குமுறுவர்.
இப்படித் தான், எங்கள் வீட்டு அருகில் புதிதாக குடியேறினர் அவர்கள். அந்தக் குடும்பத் தலைவிக்கும், அடுத்த வீட்டுப் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட, குடும்ப விஷயம் உட்பட, பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
சமீபத்தில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, பெண்களுக்கே உரிய ஜாடை பேச்சுகள், அவ்வப்போது அரங்கேறின. ஒரு நாள், "இவ லட்சணம் தெரியாதா... இவ புத்திக்கு தான், இவளோட பொண்ணுக்கு ஒரு லூசு, புருஷனா கிடைச்சிருக்கான்... இப்ப, இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க, வேற மாப்பிள பார்க்கிறா... ' என்று, சுற்றியுள்ள அனைவரும் கேட்கும்படி கூற, இடிந்து போயினர் தாயும், மகளும்.
அதுவரை, கல்லூரி மாணவி போல் தோற்றம் கொண்ட அவரது மகளை, திருமணம் ஆகாதவர் என்றே நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். உண்மை தெரிந்ததும், பலரும் பலவாறு தூற்ற, மனமுடைந்த அந்தப் பெண், "இதை ஏன் இவர்களிடம் கூறினாய்... எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை...' என்று, தன் அம்மாவிடம் சண்டையிட்டு, விடுதிக்கு சென்று விட்டாள்.
தான், சரியாக விசாரிக்காமல், திருமணம் செய்து வைத்ததால் தானே மகளின் வாழ்க்கை, வீணாகிவிட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த அவளது அம்மா, தற்போது, தன் செயலாலே, மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள் என்பதால், நொந்து, நூடுல்ஸ் ஆகிவிட்டார்.
நட்பு என்ற பெயரில், கண்டவரையும் நம்பி, வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியதால் தானே இந்த பிரச்னை... தேவையா இது?
பெண்களே... குடும்பப் பிரச்னைகளை, பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி, பின், விழி பிதுங்காதீர்கள்!

— ஆஞ்சலா ராஜம், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:35 pm

இவரன்றோ நல்லாசிரியர்!

என் வீட்டில், வெள்ளையடிப்பு நடந்தது. வெள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவரை பார்த்து, பள்ளியில் படிக்கும் என் பேத்தி, வீட்டிற்குள் ஓடினாள். என்னவென்று விசாரித்தேன்.
அதற்கு அவள், "இவர் எங்கள் வகுப்பாசிரியர். என்னை பார்த்தால், அவருக்கு சங்கடமாக இருக்கும்...' என்றாள். இது பற்றி அவரிடம் விசாரித்தேன். அதற்கு அவர், தான் ஒரு எம்.ஏ.,பட்டதாரி என்றும், என் பேத்தி படிக்கும் பள்ளியில் வேலை பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும், "அங்கு தரும் மாத சம்பளம், குடும்பம் நடத்தப் போதாது. அதனால், விடுமுறை நாட்களில், எனக்குத் தெரிந்த பெயின்டிங், வெள்ளை அடிப்பு போன்ற வேலைகளுக்குச் செல்கிறேன். தினமும், 400 ரூபாய் கிடைக்கிறது. இந்தத் தொழில் செய்வதற்காக, நான் வெட்கப்பட வில்லைங்க; செய்யும் தொழில்தானுங்களே தெய்வம்...' என்றார்.
என் பேத்தியை பார்த்தேன், அவள் முகத்தில் ஒரு பெருமிதம். என் உள்ளத்திலும், அவர் ஒரு நல்லாசிரியராக ஏறி அமர்ந்து கொண்டார்.

— களந்தை மைந்தன், நெல்லை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:35 pm

இவர்களுமா...?

கல்யாணத்திற்கு காத்திருக்கும், பெண் அல்லது பையனை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரின் பெரிய தலைவலி, இப்போது யார் தெரியுமா? ஜாதகம் பார்த்து சொல்லும் ஜோதிடர்கள்தான். அவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. ஒரே ஜோதிடரே, இன்று பொருத்தம் என்று எழுதி கொடுத்த ஜாதகத்தை, வேறொருவர் அவற்றை நாளை எடுத்துப் போனால், தொடவே கூடாது; பொருத்தமில்லை என்கின்றனர்.
இந்த ஜோதிடர்களால், பெண் வீட்டாரும், பையன் வீட்டாரும் படும் அவஸ்தைக்கு அளவில்லை. சம்பந்தி ஆகும் முன்னரே சண்டை வந்து விடுகிறது.
என் உறவினருக்கு நடந்த கூத்து என்ன தெரியுமா? பெண் வீட்டார், பொருத்தமாக உள்ள ஜாதகப் பையனை போனில் அணுக, அவர்கள் பொருத்தமே இல்லை என்று, அவருடைய ஜோதிடர் கூறியதாக கூற, வாய்ச்சண்டை வளர்ந்து, "உன் ஜோதிடர் வீட்டுக்கு நான் வருகிறேன்... என் ஜோதிடர் வீட்டுக்கு நீ வா... உண்மையை அறிந்து கொள்ளலாம்...' என்று பேச்சு வளர, கடைசியில் பார்த்தால், இருவரின் ஜோதிடரும் ஒருவரே...
அதே, பெண் - பையனின் ஜாதகத்தை பார்த்து, பெண்வீட்டாரிடம் பொருத்தம் என்று சொல்லி, பையன் வீட்டாரிடம் பொருத்தம் இல்லை... தொடவே கூடாது என்று, ஒரே ஜோதிடரே சொல்லி இருக்கிறார் என்றால், வெவ்வெறு ஜோதிடரிடம் காட்டினால், என்ன கதி என்று சொல்லாமலே தெரியும்!
ஜாதகப் பொருத்தம் பார்க்காமல், திருமணம் செய்ய பயமாக இருக்கிறது...
ஜோதிடர்களே... உங்கள் ஜோதிட சாஸ்திரத்தை, பணமாக்கும் தொழிலாக ஆக்கிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், பலர் வாழ்க்கை பிரச்னை, உங்கள் கையில் என்பதை மறக்காதீர்கள். நியாயமாகவும், நீதியுடனும் நடந்து கொள்ளுங்கள். நேர்மையாக இருந்து, உங்கள் தொழிலுக்கு துரோகம் இழைக்காமல், கூடிய மட்டும் இருக்க முயலுங்கள்.

— ஜே.சங்கீதா, சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:36 pm

மொபைலை இப்படியும் பயன்படுத்தலாம்!

சமீபத்தில் நானும், என் தோழியும், ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது. பயணம் ஆரம்பித்தது முதலே, தோழியின் மொபைலில், குறுஞ்செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. சிறிது நேரத்தில், பர்சில் வைத்திருந்த மற்றொரு, "சிம்'கார்டை மாற்றினாள். அதிலும், குறுஞ்செய்திகள் வந்தன.
கோபத்தோடு அவளைப் பார்க்க, அவள் தன் மொபைலை என்னிடம் நீட்டினாள். அத்தனை குறுஞ்செய்திகளும், பொது அறிவு வினா - விடைகள். அவளை வியப்போடு நோக்க, அவளே விளக்கினாள். தான் ஒரு வெப்சைட்டை ஆக்ட்டிவேட் செய்துள்ளதாகவும், அதில் இருந்தே, இந்த வினாக்கள் வருவதாகவும் கூறினாள்.
"வெப்சைட்டில் அதிகமான துறைகள் இருக்கும்' எனவும், "நாமே அதில் ஏதாவது பதினைந்து துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். துறைக்கு இரண்டு கேள்விகள் வீதம், ஒரு நாளைக்கு முப்பது பொது அறிவு வினாக்கள் வரும்...' எனவும் விளக்கினாள்.
மேலும், மாணவர்கள் மொபைலில் வரும் குறுஞ்செய்திகளை மறக்க மாட்டார்கள் என்பதால், இந்த முறையை அறிமுகம் செய்துள்ளதாகவும், இது, அவள் கல்லூரிக்கு பயணம் செய்யும் நேரம் என்பதால், இந்த குறிப்பிட்ட நேரத்தை அதில் கொடுத்துள்ளதாகவும், அவள் குறிப்பிட்ட அந்த ஒரு மணி நேரத்திலேயே, முப்பது குறுஞ்செய்திகளும் வந்துவிடும் எனவும் கூறினாள்.
மொபைலை இப்படியும் உபயோகிக்கலாம் மாணவர்களே...
வெப்சைட் முகவரி: www.upscportal.com

— லக்ஷ்சனா, திண்டுக்கல்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:36 pm

பள்ளி மாணவியரை நடிகைகளாக்காதீர்கள்!

தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், என் நண்பர் ஒருவரின் மகள் படித்து வருகிறாள். பள்ளியில் நடந்த, ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, என் நண்பருடன் நானும் சென்றிருந்தேன்.

விழாவிற்கு வழக்கம் போல், வி.ஐ.பி.,கள் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆண்டு அறிக்கை, வாழ்த்து, பேச்சு, பரிசளிப்பு என முடிந்த பின், அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பள்ளி மாணவ - மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேல்நிலைக்கல்வி மாணவியரின் ஆட்டத்தின் போது விசில் பறந்தது. கைத்தட்டல் பலமாக இருந்தது. சினிமாவில் எந்த மாதிரியான உடையை நடிகர் - நடிகையர் அணிந்திருப்பரோ அதே போல், உடையணிந்து ஆடினர். அதற்கும் ஒருபடி மேலே போய், மார்பகங்கள், பெரிதாகத் தெரிய, அதற்கு ஏற்றார் போல், மாணவியரை உள்ளாடை அணிய வைத்திருக்கின்றனர் என்பது தான் கொடுமை.

எங்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மேடையில் ஆடிய சில மாணவியரின் பெயரைக் குறிப்பிட்டு, "அவளுக்கு இவ்வளவு பெரிசா... என் கண்ணையே நம்ப முடியவில்லையே...' என சப்தமாக பேச, அதற்கு சக மாணவன், "இல்லை... இல்லை செயற்கையாக இருக்கும்' என விளக்கம் கொடுத்தான். அதை கேட்க வெறுப்பாக இருந்தது.
பள்ளி நிர்வாகத்தின@ர... விழாவின் போது நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில், மாணவியரை நடிகைகளாக்கிப் பார்க்காதீர்கள். பார்ப்பவர்கள் ரசிக்கலாம். பெற்றோர் மனம் வருந்துவர். நாசூக்காக அமையட்டும் கலைநிகழ்ச்சிகள்.

— ஆதங்கன், திண்டுக்கல்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:36 pm

புது வாழ்க்கைக்கு ஒரு பயிற்சி.!

என் கல்லூரி தோழிக்கு, மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருந்ததை கேள்விப்பட்டு, அவளை பார்க்க சென்றிருந்தேன். நான், அவள் வீட்டிற்கு சென்றிருந்த சமயம், தோழி படுபிசியாக இருந்தாள். கேஸ் சிலிண்டர் முதல் கேபிள் டிவி, மளிகை சாமான் வரை எல்லாவற்றையும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி... இன்னும் கல்யாணமே முடியல, அதுக்குள்ள இவ்வளவு பிசியாயிட்ட...' என்று கேட்டேன். அதற்கு அவளோ, "இல்லடி... எங்க அம்மாதான் இந்த மூணு மாசம், வீட்டில் வரவு - செலவு கணக்கு வழக்குகளை நீதான் பார்க்கணும். அப்பதான், நீ போகப்போற வீட்டுல எல்லா விஷயங்களும் புரியும். அதோட, எந்த செலவுகளில் சிக்கனமா இருக்கணும்ன்னு, பிராக்டிஸ் எடுத்துக்க சொன்னாங்க. அதுக்காக, என் அப்பா சம்பளத்தை கூட, என் கையில குடுத்திட்டார்..' என்றாள்.

எனக்கு இந்த பயிற்சி புதுமையாகவும், அவசியமானதாகவும் பட்டது. தோழிக்கு வாழ்த்து சொல்லிய கையோடு, அவளது பெற்றோரையும் வியந்து பாராட்டி விட்டு வந்தேன். அதை என் பெற்றோரிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் மிகவும் பெருமையோடு சொன்னேன். இல்லத்தரசியாக போகும் பெண்களுக்கு, ஒரு வகையில் சிறந்த முன்னேற்பாடு தானே!

— எஸ்.ஷன்மதி, மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 02, 2013 3:37 pm

பார்க்காதே... ஆனா பாரு!

நான் ஒரு ஏகபத்தினி விரதன். பிற பெண்களை ஏறிட்டும் பார்ப்பது கிடையாது. ஆனால், சில பெண்கள் புடவை அணிகிற அழகைப் பார்த்தால்...
புடவை அணிந்திருக்கும் இவர்கள், தோள்பட்டை ஜாக்கட்டுடன் புடவையை இணைத்து, பின் குத்தியிருப்பர்; முந்தானை ஏறும் இடத்தில், ஒரு பின்; வயிற்றுப்பகுதியை, ஒரு சுற்று புடவையால் சலோபன் பேப்பர் போல் சுற்றியிருப்பர்; அங்கும் இரண்டு, மூன்று இடங்களில் பின் குத்தியிருப்பர்.

மொத்தத்தில், இவர்களது இடுப்பை, வயிற்றை புடவை ஒதுங்கினால், பக்கவாட்டை பார்க்க, உலகத்து ஆண்கள் எல்லாம் அலைவது போலொரு பாதுகாப்பு ஏற்பாடு! தேவையா இது?
எங்களுக்கு வேற வேலையே இல்லையா அல்லது இது பாரா முகத்தினரை பார்க்க வைக்கும் எதிர்மறை உத்தியா? ஜாக்கட்டை சற்று இறக்கமாக, தளர்த்தி தைத்து, தெரியும் வயிற்றுப்பகுதி அகலத்தை, கணிசமாக கண்ணை உறுத்தாமல், குறைக்கலாமே?

— கி.மு.பரந்தாமன், வாணியம்பாடி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon Jun 10, 2013 11:53 pm

1. உறவினர் வீட்டிற்கு போகிறீர்களா?

நம் உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது இனிப்புகள், பழங்கள், நொறுக்குத்தீனிகள் வாங்கி செல்லும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஒரு புறம் இனிப்புகளும், மிட்டாய் வகைகளும், உடல் நலத்திற்கு சிறிதும் நன்மை தருவன இல்லை என்பது மட்டுமில்லாமல், குழந்தைகளையும், நீரிழிவு நோயினால் உணவு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிற்கும் வீட்டின் பெரியோர்களையும்,
இவற்றை உட்கொள்ள தூண்டும். கார வகைகளும் ஒன்றும் ஆரோக்கிய மானவை அல்ல.

தொழில் துறையின் வளர்ச்சியாலும், நகர மயமாக்குதலாலும், சுற்றுப்புற சூழலின் தட்ப வெட்ப நிலை பெரிதும் மாறி வருகிறது. நாம், நம் லாபத்திற்காக மரங்களை பெரிதும் அழித்து விட்டதே இவற்றிற்கு காரணம் என்று, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நம் உறவினர் வீடுகளுக்கு போகும்போது, சின்னஞ்சிறு பூச்செடிகளைப் பரிசாகத் தருவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். வீட்டின் ஜன்னல்கள், பால்கனி, மாடிகளிலேயே வளர்க்கக்கூடிய வகை செடிகள் இப்போது கிடைக்கின்றன. மண் தொட்டிகள் என்று இல்லை, பிளாஸ்டிக் தொட்டிகளும், தூக்குவதற்கு எளிமையாக இருக்கும். தொட்டிகளுடன் கூடிய பயன்தரும் செடிகளும் கிடைக்கின்றன.
வீட்டில் செடிகள் வளர்ப்பது, வீடுகளில் சுத்தமான புத்துணர்ச்சியூட்டும் காற்று சூழ ஏதுவாகிறது. நம் குழந்தைகளும் நம்மிடமிருந்து, ஒரு நல்ல பழக்க வழக்கத்தைக் கற்றுக் கொள்வர். நம் அரசுடன், நாமும்... நம் நகரத்தை பசுமையாக்கும் முயற்சியில் கை கொடுக்கலாமே!

— ஜெயந்தி சதீஷ், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon Jun 10, 2013 11:54 pm

ஆண்களே...சற்று நிதானியுங்கள்!

நானும், என் கணவரும் வேலைக்கு செல்வதால், வீட்டு வேலைகளை கவனிக்க ஒரு பணிப்பெண்ணை அமர்த்தியுள்ளோம்.
என் கணவர், எடுத்ததற்கெல்லாம் கத்தி களேபரம் செய்து, என்னோடு சண்டை பிடிப்பார்; சில சமயம், அடி, உதையும் உண்டு.
அதிலும், பணிப்பெண் முன் இப்படிப்பட்ட சச்சரவுகள் நிகழும் போது எனக்கு மிக அவமானமாக இருக்கும். எனவே, என், "ஈகோ பஞ்சர்' ஆகும் அளவுக்கு அவர் பேசினால் கூட, பணிப்பெண் இருப்பதைக் கருதி, பதில் பேசாமல் அமைதியாக இருப்பேன்.
"என்ன திமிர் இருந்தால், நான் இவ்வளவு சொல்லியும், கல்லுளிமங்கி மாதிரி இருப்பாய்?' என அதற்கும், "டோஸ்' விழும்.
அய்யா கணவன்மார்களே... மனைவிக்கு எதிரான உங்கள் வாய்சொல் வீர தீரங்களை, கை நீட்டல்களை தனியாக நான்கு சுவருக்குள் வைத்துக் கொள்ளுங்கள்; வேலைக்காரி முன் உங்கள் சாகசங்களை காட்டாதீர்கள்.
சாது மிரண்டால்... பாணியில் நாங்களும், "நறுக்'கென்று எதிர்த்து கேட்டால், உங்கள் நிலைமை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

—சுபாஷினி செல்வக்குமார், விருதுநகர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon Jun 10, 2013 11:54 pm

இளைஞர்கள் புரிந்து கொள்வரா?

பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அதிக கூட்டமுள்ள பஸ்சில், ஐந்து இளைஞர்கள் ஏறினர். அதில், இருவர் மட்டும் உள்ளே சென்று, அடுத்தடுத்தாற்போல உட்கார்ந்திருந்த இரண்டு கல்லூரி மாணவிகளிடம், தங்கள் சில்மிஷத்தை காட்ட துவங்கினர்.
அதில் ஒருவன், மாணவியின் மேல் சாய்வது போல், ஜன்னல் வெளியே கையசைத்து, எல்லாருக்கும், "ஹாய்' சொல்லிக் கொண்டிருந்தான். அந்த பெண்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வாசல்படியில் நின்றவன், அவனிடம், "டேய் மச்சான், உன் முதல் பொண்டாட்டி சூப்பர்...'ன்னு சொல்ல, எல்லாரும், "வாடி, வாடி நாட்டுக்கட்டை, வசமா வந்து மாட்டிக்கிட்ட...' என பாடி, தாளம் போட்டனர்.

உடனே இன்னொருவன், "டேய் மச்சான், உன் இரண்டாவது பொண்டாட்டியை மட்டும் காம்ப்ளான் கொடுத்து தேத்தணும்...' என கமென்ட் அடிக்க, பஸ்சில் இருந்த பலர் இதை கேட்டு, ஆத்திரமடைந்தாலும், வெளியே எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர். இளைஞர்களே... பிறருடைய உணர்வுகளை மதியுங்கள். பெண்ணினத்தை அவமதிக்காதீர்கள். அவர்கள் இல்லையேல் நாம் இல்லை.
நமக்கு தெரிந்த பெரியவர்கள், உறவினர்கள் அந்த பஸ்சிலே பயணிக்க நேரிட்டால், உங்கள் மேல் தரக்குறைவான அபிப்ராயம் தோன்றலாம். சிந்திப்பீர்களா?

— என்.கருணாகரன், கோவை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Mon Jun 10, 2013 11:54 pm

பெற்றோருக்கு வயதாகிவிட்டால், அதிலும் தள்ளாமை வந்து விட்டால், அவர்களுடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. புண்ணிய வசத்தால் சத்புத்திரனைப் பெற்றிருந்தால், அவர்களை அவன், அன்பும், ஆதரவும் காட்டி சந்தோஷமாக வைத்திருப்பான். இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளை தான் சத்புத்ரன் என்கின்றனர். இன்னும் சில புத்திர ரத்தினங்களும் இருக் கின்றனர்.

பெற்றோர் படாதபாடு பட்டு, படிக்க வைத்து ஆளாக்கி, உத்தியோகம் கிடைக்க செய்து, ஒரு கல்யாணத்தையும் முடித்து வைக்கின்றனர்.
பையன் கல்யாணமாகி, மாலையும் கழுத்துமாய் வந்து நமஸ்காரம் செய்யும்போது, உள்ளம் பூரித்து, அகமகிழ்ந்து ஆசீர்வதிக் கின்றனர். அதன் பிறகு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. மனைவியின் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விடுகிறான் பையன். மனைவி சொல்லே மந்திரமாகி, பெற்றோர் இரண்டாம் பட்சமாக போய் விடுகின்றனர். மனைவி நல்ல குணம் உள்ளவளாக இருந்தால், மாமியார், மாமனாருக்கு மரியாதை கிடைக்கும். எதைச் செய்வதானாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்வாள். எது நல்லது, எது வேண்டாதது என்று கேட்டு செய்வாள்.

கொஞ்சம் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணானால் மாமியாரை, மாமனாரை அவ்வளவாக மதிக்க மனமிராது. "அவர்களை என்ன கேட்பது, எனக்குத் தெரி யாதா?' என்பர். இவள் சொல்கிறபடி ஆடுகிறவனாக கணவன் இருந்து விட்டால், வயதான பெற்றோர் பாடு பரிதாபகரமாகி விடுகிறது. பெற்ற பிள்ளை கூட, மனைவியின் பக்கம் சேர்ந்து, இவர்களை ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்து, இரவு, பகலாக ஆலோசித்து, இவர்களை ஏதாவது, "முதியோர் இல்லத்தில்' சேர்த்து நாம் நிம்மதியாக இருக்கலாம், நினைத்த சினிமாவுக்கு போகலாம், இஷ்டம் போல் வரலாம், சந்தோஷமாக இருக்கலாம்...' என்று தீர்மானம் போடுவான்.

"முதியோர் இல்லம்' எங்கே இருக்கிறது என்று சிரத்தையாக விசாரித்து பெற்றோருக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி, அவர்களை அங்கே கொண்டு போய் சேர்த்து, பணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவான். பெற்றோரும் மனம் நொந்து போய் அந்த இல்லத்தில் தங்கி, திரும்பிப் போகும் பிள்ளையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்துவர்.

ஆனால், பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்து, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதை விட சிறந்த தர்மம் வேறு எதுவுமில்லை. ஆலயங்களுக்குப் போக வேண்டாம், தீர்த்த யாத்திரை செய்ய வேண்டாம், ஷேத்ராடனம் செய்ய வேண்டாம், இவைகளில் கிடைக்கும் புண்ணியத்தை விட, மிக அதிகமான புண்ணியம் பெற்றோரின் வயோதிக காலத்தில் மனம் குளிரும்படி நடந்து கொண்டாலே கிடைத்து விடும்.

பிள்ளையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்க என்னவெல்லாம் செய் திருப்பர் என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவன் பிறந்தவுடன் அனாதை இல்லத்திலா கொண்டு போய் சேர்த்தனர். கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து, இரவு, பகல் பாராமல் ஊட்டி வளர்த்தனர். அப்படிப்பட்ட தாய், தந்தையருக்கு கடைசி காலத்தில், "முதியோர் இல்லம்' தானா கதி! தாய், தந்தையருக்கு வயோதிக காலத்தில் பணிவிடை செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம்.

nandri : வாரமலர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum