தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இது உங்கள் இடம்..!

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:03 am

First topic message reminder :

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by செந்தில் Mon Sep 16, 2013 2:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி முடியலை 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by mohaideen Mon Sep 16, 2013 6:22 pm

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by sawmya Mon Sep 16, 2013 8:02 pm

தேவையா இது?சூப்பர் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 16, 2013 10:25 pm

"பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
பாதுகாப்பாய் இருப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Oct 06, 2013 4:26 pm

பெரிய மனிதர் போர்வையில்...

நான், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, மாணவர்களுக்கு, "டியூஷன்' எடுப்பதுடன், ஆங்கில நர்சரி பள்ளி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே, பி.ஏ., மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன்.

என் பள்ளியின் நிர்வாகி, என் பிறந்த நாள் அன்று, பரிசாக, ஒரு கவிதை எழுதிக் கொடுத்தார். அதில், என் அழகை வர்ணித்தும், அந்த அழகு தனக்கு கிடைக்குமெனில், காலில் விழுவதற்கும் தயார் என்றும் எழுதி இருந்தார்.

இது, எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இத்தனைக்கும், அவருக்கு, வயது 56. அவர் மகன், கல்லூரியில் படிக்கிறான். என் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள, நான் ஏதும் பேசாமல்

இருந்ததை, தவறாக புரிந்து கொண்டு, அவ்வப்போது பரிசு பொருட்கள் கொடுப்பதுடன், "பண கஷ்டம் இருந்தால், என்னிடம் சொல்; நான் தருகிறேன். ஆனால், யாரிடமும் சொல்லக் கூடாது...' என்றெல்லாம், பேச ஆரம்பித்து விட்டார்.

இன்னும் போனால், தொடர்ந்து பல பிரச்னைகள் வரக்கூடும் என்று நினைத்து, வேலையை விட்டு விட்டேன். இப்போது, டியூஷன் மட்டுமே எடுத்து வருகிறேன்.

இந்த காலத்தில், இளைஞர்களை கூட நம்பி விடலாம். ஆனால், வயதானவர் என்ற போர்வையில் இருக்கும் இப்படிப்பட்டவர்களை, நம்பவே கூடாது.

— வ.மனோகரி, கம்பம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Oct 06, 2013 4:26 pm

காலமும் கெடலை; கலியும் முத்தலை!

கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.

மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...
"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.

நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.
"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும்,

என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.
"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.

"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க.

அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?

— வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Oct 06, 2013 4:27 pm

பிறரைக் கெடுக்க வேண்டாமே... ப்ளீஸ்!

சக பணியாளர்களிடம், "ஜாலி'யாகப் பேசி, வேலை வாங்கும் தனியார் நிறுவன அதிகாரி நான். அதனால், எல்லாரிடமும் நல்ல பெயர். அண்மையில், ஒரு மாலை நேரத்தில், என் பியூனை அழைத்து, "உ.பா., போட்டுட்டு வரலாம்... வா' எனக் கூறினேன்.

அவன் மறுக்க, நான் தொடர்ந்து நிர்பந்தித்தேன், உடனே, அவன் தன் மணிபர்சை, ஒரு கணம் திறந்து பார்த்து விட்டு, "சாரி சார்... நான் வரலே...' என்று, உறுதியாக மறுத்து விட்டான்.

பணம் இல்லாததால், அவன் தயங்குவதாக எண்ணி, "டேய்... உனக்கெல்லாம் பர்ஸ் எதுக்குடா... நான் தானே பணம் குடுக்கப் போறேன். ஏன் வரமாட்டேங்குறே...' என, அவனை கேலி செய்தேன்.

"பர்சுல வச்சுக்கிற அளவுக்கு, எங்கிட்ட பணம் இல்ல தான்... ஆனா, அதை விட விலை உயர்ந்த, என் பொண்டாட்டி, மகள், மகன் சேர்ந்து இருக்கிற, போட்டோவை வச்சிருக்கேன். நான் சபலப்படும் போதெல்லாம், இவங்க போட்டோவை தான் பார்ப்பேன்.

குடும்பத்துக்காக, நான் கெட்டுப் போக கூடாதுங்கிற மன உறுதி, உடனே கிடைச்சிடும்...' என்று அவன் சொல்ல, "ரொம்ப சாரிப்பா...' என்று கூறி, என் தவறுக்கு வருந்தினேன்.

— ஆர்.மணிகண்டன், புதுச்சேரி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Oct 06, 2013 4:28 pm

போதையில்லா நட்பால் பயன் இல்லையா?

என் நண்பர் ஒருவர், சில வருடங்களுக்கு முன் வரை, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவரது மகள் வயதுக்கு வந்து விட்டதால், தன் குடிப்பழக்கத்தால், மகளின் மனம் பாதிக்கப்படும் என்றும், பின், அவளது திருமணத்திற்கு, மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்தும், குடிப் பழக்கத்தை நிறுத்தி விட்டார்.

குடிப்பழக்கம் இருந்தபோது, அவரைச் சுற்றி, எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். "ஓசி'யில் குடிப்பதற்கும், அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவதற்கும், அவரை மொய்த்த கூட்டம், இப்போது, அவரை நாடுவதே இல்லை.

என் நண்பர், அவர்களிடம் காரணம் கேட்டதற்கு, "உன் நட்பால், எங்களுக்கு என்ன பிரயோஜனம்... ஒரு, "கட்டிங்' அடிக்க முடியுமா... அட்லீஸ்ட், ஒரு, "லெக் பீஸ்' சாப்பிட முடியுமா... நீ என்னமோ புத்தர் மாதிரி, திடீர்ன்னு ஞானோதயம் ஏற்பட்டு, குடிக்கவே மாட்டேன்னு, சத்தியம் செஞ்சிட்டே...

எந்த பயனும் இல்லாத, பிரெண்ட்ஷிப் தேவை இல்லை. உன்னோட இருக்கற நேரத்தில், வேறு யாராவது, ஒரு சரக்கடிக்கற பிரெண்டு கூட இருந்தால், கொஞ்சம், "ஓசி'யில் குடிக்கலாம்...' என்று, முகத்தில் அடிப்பது போல் சொல்லியிருக்கின்றனர்.

அதன்பின் தான், என் நண்பர் உணர்ந்திருக்கிறார். கொஞ்சம், "ஓசி சரக்கு' வாங்க, நம்மை எப்படியெல்லாம் பொய்யாக புகழ்ந்திருக்கின்றனர் என்பதை! போதையின் பாதையிலிருந்து, திருந்துவது தவறா? நட்புக்கு, களங்கம் விளைவிக்கும், குடிகாரர்களின் நட்புத் தேவையில்லை என்று, அவர்களை ஒதுக்கிவிட்டு, இப்போது மகிழ்ச்சி யோடும், நிம்மதியோடும் இருக்கிறார்.

— ஏ.எஸ்.யோகானந்தம், அவ்வையார்பாளையம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by ஸ்ரீராம் Sun Oct 06, 2013 4:48 pm

மேற்க்கண்ட பதிவு நான்கும் அருமை முத்து.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 06, 2013 5:01 pm

இந்த காலத்தில், இளைஞர்களை கூட நம்பி விடலாம். ஆனால், வயதானவர் என்ற போர்வையில் இருக்கும் இப்படிப்பட்டவர்களை, நம்பவே கூடாது.
இப்படித்தான் பலரும் சொல்கிறார்கள்... பெரியவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று மருத்துவ உலகம் என்ன சொல்கிறது என்றும் தெரியவில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 6 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum