தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இது உங்கள் இடம்..!

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:03 am

First topic message reminder :

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:52 pm

புது மாப்பிள்ளைகளே....!

பக்கத்து வீட்டு பையனுக்கு, கிராமிய சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து, சில தினங்களாகியும், புது மணப்பெண், "மூட் - அவுட்'டாகவே இருந்திருக்கிறாள்.

மாப்பிள்ளையிடமும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. தகவலறிந்து, ஊரிலிருந்து வந்த பெண் வீட்டார், "யாரோ பில்லி சூன்யம் செய்து விட்டனர்...' என புலம்பினர்.
இதற்கிடையே, புதுமண தம்பதியரை, மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து போய் காண்பித்திருக்கின்றனர்.
அங்கு, இருவருக்கும் தனித்தனியே கவுன்சிலிங் நடத்திய பிறகே, புதுமணப் பெண், கணவனோடு தேனிலவு செல்ல சம்மதித்திருக்கிறாள்.
இதற்கு காரணம், மாப்பிள்ளையின் தவறான அணுகுமுறைதான்...

மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர், "முதல் இரவில் வீரமாக செயல்படும் புருஷனையே, பெண்கள் அதிகம் விரும்புவர். மனதை அலைபாய விட மாட்டார்கள்...' என்றெல்லாம் கூறி, குழப்பியிருக்கின்றனர். மாப்பிள்ளை பையனும், தன் இளம் மனைவியை அசத்தி விட வேண்டுமென்ற வெறியில், முதலிரவில் சற்று முரட்டுத்தனமாகவே நடந்திருக்கிறார்.

அதிர்ச்சியுற்ற அந்த கிராமத்துப் பெண், இப்படித்தான் ஒவ்வொரு நாள் இரவுப் பொழுதும் இருக்குமோ என அஞ்சி, "அந்த' விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் விலகியே சென்றிருக்கிறாள். புது மாப்பிள்ளைகளே... பூவை போன்று மென்மையான பெண்
களிடம் இரவில் மென்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

— பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:52 pm

இப்படியும் ஒரு எதிர்பார்ப்பா?

என் நெருங்கிய நண்பருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நண்பர், சமீபத்தில் தன் மகனுக்கு, சென்னையில் விமரிசையாக திருமணம் செய்து வைத்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால், திருமண வைபவத்திற்கு நான் செல்லவில்லை.
ஒரு விடுமுறை நாளில், சென்னைக்கு சென்று, நண்பரின் குடும்பத்தினரையும், புது மணமக்களையும் சந்தித்து, வாழ்த்துகள் கூறி, பரிசு வழங்கினேன்.

நண்பர், தன் மகளுக்கும் கூடிய விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும், நல்ல குடும்ப சூழ்நிலையில், படித்த மாப்பிள்ளை ஜாதகம் வந்தால், தன்னிடம் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டார். அப்போது சமையலறையிலிருந்து வெளியே வந்த நண்பரின் மகள், தனக்கு வரப்போகும் கணவரும், அவருடைய குடும்ப சூழ்நிலையும், எப்படியிருக்க வேண்டும் என்று, என்னிடம் பட்டியலிட்டு கூறிய போது, அதிர்ந்து போனேன்.

அவளது எதிர்பார்ப்பு என்னவென்றால்...

* மாப்பிள்ளை, வியாபாரமோ, சொந்த தொழிலோ செய்யக் கூடாது.
* இன்ஜினியரிங் படித்து, ஐ.டி., கம்பெனியில் வேலை செய்ய வேண்டும்.
* வெளிநாட்டிற்கு செல்லவோ அல்லது அங்கேயே தங்கியிருக்கவோ வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
* மாமனார் மாமியாருடன் இல்லாமல், தனிக்குடித்தனமாக இருக்க வேண்டும்.
* மிக முக்கியமாக, மாப்பிள்ளைக்கு சகோதரிகள் இருக்கவே கூடாது.

இவற்றைக் கேட்ட நான், நண்பரின் முகத்தை பார்த்தேன். தன் கட்டுப்பாட்டிற்கு மீறிய விஷயம் இது என்று வருத்தத்துடன் கூறினார்.

நண்பரின் மகள் எதிர்பார்ப்பது போல், அவளது அண்ணி, தன் பெற்றோரிடம் இப்படி கண்டிஷன் போட்டிருந்தால், எப்படி திருமணம் நடந்திருக்கும். ஒவ்வொரு பெண்ணும், தனக்கு நாத்தனார் இல்லாத வீட்டில் தான் திருமணமாக வேண்டும் என்று மேற்கூறிய கண்டிஷன்கள் போட்டால், பெண்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று, என்னால் யோசிக்க முடியவில்லை.

பெண்கள் பொறுமைசாலிகள் எனும் கருத்தை, இந்த காலத்து படித்த பெண்களில் சிலர் பொய்யாக்கிக் கொண்டு இருக்கின்றனரே!

— எஸ்.கே.நாகேந்திரன், மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:52 pm

வளர்க்கலாமா வன்முறையை?

ஒரு ஞாயிற்றுக்கிழமை, என் அம்மாவுடன் பக்கத்து ஊர் சந்தைக்கு (வாடிப்பட்டி) சென்றிருந்தேன். தேசிய நெடுஞ்சாலை சந்திப்பின் அருகே முக்கிய பிரமுகரின் குழந்தைகளுக்கு காதணி விழாவை முன்னிட்டு, பிரமாண்டமான கட்-அவுட் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், ஒருபுறம் அபிமான நடிகர் ஒருவரின் படமும், மற்றொரு ஓரத்தில் ஜாதி தலைவர் ஒருவரின் படமும், நடுவில் குடும்பத்தினர் படங்களும் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால்...

நடுவில் காதணி விழாவிற்கான இரண்டு மற்றும் மூன்று வயது இரு குழந்தைகளின் கையில், அரிவாள் மற்றும் வாள் பிடித்தவாறு அச்சிடப்பட்டு, அதன் அருகே வீரம் சம்பந்தப்பட்ட வசனமும் இடம் பெற்றிருந்தது. இதைக் கண்டு முதலில் அதிர்ந்து போன என் அம்மா, என்னிடம் காட்டி, "இந்த வயசிலேயே இந்த குழந்தைகளுக்கு ஆயுதத்தை பிடிக்கச் செய்து, வன்முறையை வளர்க்கின்றனரே...' என்று வருத்தப்பட்டார்.

சினிமா, வீடியோ கேம், இன்டர்நெட் போன்றவற்றில் வன்முறை தலை விரித்தாடுவது போதாதென்று, வீரம் என்ற பெயரில், ஆயுத கலாசாரத்தை குழந்தை களுக்கு புகுத்தலாமா? அன்பு வழியில், அறவழியில் செல்வது, இக்காலத்தில் அநாகரிகம் போல் ஆகிவிட்டதே என, மனதிற்குள் நொந்து போனேன்.

— பி.போத்திராஜா, எஸ்.பெருமாள்பட்டி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:53 pm

உலோகங்களால் உபத்திரவம்!

நண்பர் வீட்டுக்குச் சென்றபோது, என்னை வரவேற்ற பின், ஒரு பாத்திரம் நிறைய சில்லரைக் காசுகளைப் போட்டு, அதில் ஒரு பாட்டிலில் இருந்த நீரை ஊற்றி, கைகளால் அந்தக்காசுகளை அலசி, பின் சிறிய துணியால், ஒவ்வொன்றாக நன்கு துடைத்து, மற்றொரு பையில் போட்டு கொண்டிருந்தார்.

நான் அன்றைய தினசரிகளைப் படித்தவாறு, அவரது செய்கையையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது வேலை முடிந்த பின், என் பக்கம் திரும்பி, நான் விளக்கம் கேட்பதற்கு முன், அவராகவே துவங்கினார்.

"வேறொன்றுமில்லை நமக்கு வரும் சில்லரைக் காசுகள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றன. உதாரணமாக மீன், இறைச்சிக்கடைகள், எண்ணெய் மற்றும் பலகாரம் விற்கும் கடைகள் போன்றவைகளும் அடக்கம். இந்தக் காசுகளில், அந்தந்த வியாபாரத்திற்கான பொருட்களின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

அது மட்டுமல்லாமல் தற்போது பெரும் சில்லரைத் தட்டுபாடும் நிலவுவதால், பல இடங்களில் பிச்சைக்காரர்களிடமிருந்து, 95 ரூபாய் வாங்கி கொண்டு, 100 கொடுக்கும் கமிஷன் வியாபாரமும் நடக்கிறது. அவர்களில் பெரும் வியாதிக்காரர்களும் உண்டு.

பணத்தைக் கொடுத்து பொருள் வாங்கிய பின், மீதி சில்லரை வாங்குவோர், இது பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. பையில் போட்டு சென்று விடுகின்றனர்.

உலோகங்கள் மூலம் தோல் வியாதிகள் பரவுவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஒரு மருத்துவக் குறிப்பு மூலம் அறிந்தேன். அதுவும் இப்படி உலோகங்கள் மூலம் தீவிரமடையும் வாய்ப்புள்ளது என்றும் படித்தேன். அதற்குப் பின், இப்படிப்பட்ட பாதுகாப்பான வழியை நாடுகிறேன்...' என்றார்.

"அது சரி... இதென்ன, பாட்டிலில் ஏதோ பினாயில் வாசனை வருகிறதே...' என்றேன்.
"பினாயில்தான், அத்துடன் இரண்டு ஸ்பூன் பிளீச்சிங் பவுடர், நான்கு சொட்டு டெட்டால், இரண்டு லிட்டர் தண்ணீர் எல்லாம் கலந்துள்ளேன்...' என்று, "டிவி' சமையல் குறிப்பு போல் விளக்கினார்.

நண்பரின் செயல், சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும், பார்ப்பவர்கள் பின்பற்ற நினைக்கும் வகையில், அவரது நுட்பமான எச்சரிக்கை உணர்வு என்னை வியக்க வைத்தது.

— எஸ்.ஸ்ரீதர், புதுபெருங்களத்தூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:53 pm

இதற்கும் சட்டம் வேண்டும்!

சமீபத்தில், என் ஆபீஸ் நண்பர் ஒருவரை, சாலை ஓரமாய் போய் கொண்டிருக்கும் போதே, கார் ஒன்று இடித்து கீழே தள்ளிவிட்டது. காரை ஓட்டி வந்தது எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர். தடிமனான கண்ணாடியணிந்த அவர், கீழே விழுந்த என் நண்பரின் காலில் விழாத குறை. "நான் வயதானவன், கண் சரியாக தெரியவில்லை...' என்று கெஞ்சி இருக்கிறார். நண்பர், கை மற்றும் கால்களில் அடிபட்ட நிலையிலும், போனால் போகிறது என்று விட்டுவிட்டார்.

ஒன்று மட்டும் புரியவில்லை. பதினெட்டு வயதுக்கு கீழ் வண்டி ஓட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அது போல, அறுபத்தைந்து வயதுக்கு மேல் வண்டி ஓட்ட கூடாது என்று ஏன் சட்டம் போடக்கூடாது? பஞ்சடைத்த பார்வையுடனும், டமார காதுகளுடனும் நிறைய வயதான வம்பர்கள், கார்களையும், பைக்குகளையும் ஜம்பமாக ஓட்டி, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி கொண்டிருக் கின்றனர்.

— எம்.ஆர்.ஆனந்த், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:54 pm

வேண்டாமே, "இன்டர் நெட்' இணைப்பு!

சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். தோழியின், 10ம் வகுப்பு படிக்கும் மகன், கம்ப்யூட்டரில் ஒன்றி இருந்தான். கம்ப்யூட்டரில் என்ன படிக்கிறான் என்று கேட்ட போது, படிப்பை தவிர்த்து, அனைத்தும் சொன்னான். பேஸ் புக்கில், இரண்டாயிரம் நண்பர்கள் இருப்பதாக மகனின் புராணத்தை பேசியபடி இருந்தாள் தோழி. இந்த வயதில் படிப்பைத் தவிர, இதெல்லாம் தேவையா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, கிளம்பி வந்துவிட்டேன்.
சில மாதங்களுக்கு பின் எதேச்சையாக, என் தோழியை வழியில் சந்தித்த போது கவலையுடன் காணப்பட்டாள், என்ன என்று விசாரித்ததில், கண்ணீர் விட்டு அழுதாள். என் தோழி அதிகம் படிக்கவில்லை; கம்ப்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு நாள், அவள் கணவர், அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வீடு திரும்ப, மகன் ஆபாச படங்களை பார்ப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டார். அதட்டி கேட்க, எதிர்த்து பேசும் அளவு துணிந்து விட்டான். இன்டர்நெட் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், பித்து பிடித்தவன் போல் இருப்பதாக சொல்லி அழுதாள். எவ்வளவோ கவுன்சிலிங் கொடுத்தும் இன்னும் சரியானபாடில்லை என்று கூறி, அவள் அழுததைப் பார்க்க வேதனையாக இருந்தது.
பெற்றோர்களே... படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு பேஸ் புக் தேவையா என்று @யாசியுங்கள். குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கிறோம் என்ற பெயரில், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை வீணாக்காதீர். படிப்பு சம்பந்தமாக ஏதாவது பார்க்க வேண்டுமென்றால், நீங்களும் கூடவே இருங்கள்.

— டி.இந்திரா, மீனாம்பாள்புரம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:54 pm

சுற்றுலா செல்லும் போது கவனம்!

நாங்கள் சமீபத்தில், பெங்களூரு மற்றும் மைசூரை சுற்றி பார்க்க குடும்பத்துடன் ரயிலில் சென்றிருந்தோம். முன்னதாக, நண்பர் மூலம் பெங்களூரில் நல்லதோர் ஓட்டலில், அறை முன்பதிவு செய்திருந்தோம். அந்த ஓட்டல், ரயில் நிலையம் அருகில் உள்ளது. ஆட்டோ ஓட்டுனரிடம், அந்த ஓட்டல் பெயரை சொல்லி அங்கு விடச் சொன்னோம். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனர், "சார் அந்த ஓட்டலில் தற்போது தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்; வேண்டுமானால் போன் செய்து கேட்டு கொள்ளுங்கள். அங்குமிங்கும் அலைய வேண்டாமே...' என்றார். "அட, நல்ல யோசனை ஆயிற்றே, என்று, நாங்களும் போன் செய்தோம். யாரும் போன் எடுக்கவில்லை. ஆட்டோ ஓட்டுனர் நல்லது செய்தார். வேறு ஓட்டல் பார்க்க வேண்டியது தான் என்ற முடிவு செய்தோம்.
நல்ல வேளையாக, எங்கள் மகள், அப்பா உங்கள் நண்பரிடம் ஒரு போன் போட்டு விசாரியுங்கள் என்றாள். நண்பரிடம் போன் போட்ட போது, அவர் அப்படி ஏதும் இல்லையே; மற்றொரு நண்பரும் அங்குதான் இருக்கிறார் அப்படியிருந்தால், அவர் என்னிடம் நிச்சயம் சொல்லி யிருப்பார்...' என்றதுடன், அவரோட மொபைல் போனில், "செக்' செய்து, "அங்கு சென்று பாருங்கள்... அப்படியும் அறை இல்லாவிடில் சொல்லுங்கள். வேறு ஓட்டலில் ஏற்பாடு செய்து தருகிறேன்...' என்றார்.
அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், அதே ஓட்டலுக்கு விடச் சொன்னபோது, அவர் வேறு சவாரி பார்க்கிறேன் என்று சென்று விட்டார். மற்றோர் ஆட்டோ பிடித்து சென்றபோது, ஓட்டலில் வேலை நிறுத்தம் எதுவும் இல்லை. ஆனால், போன் லைன் முழுவதும் பழுதாகியிருப்பது தெரிந்தது. இப்படியெல்லாம் ஏமாற்ற, ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று நானும் ரூமில் யோசித்த போது, தூர சவாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மூலம் ரூம் போட்டால், அவருக்கு கிடைக் கும் கமிஷனும் தான் காரணம் என்பது, எனக்கு சற்று தாம தமாகவே புரிந்தது. வாசகர்களே கவனம்!

— த.அசோக், மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:55 pm

சுற்றுலா செல்லும் போது கவனம்!

நாங்கள் சமீபத்தில், பெங்களூரு மற்றும் மைசூரை சுற்றி பார்க்க குடும்பத்துடன் ரயிலில் சென்றிருந்தோம். முன்னதாக, நண்பர் மூலம் பெங்களூரில் நல்லதோர் ஓட்டலில், அறை முன்பதிவு செய்திருந்தோம். அந்த ஓட்டல், ரயில் நிலையம் அருகில் உள்ளது. ஆட்டோ ஓட்டுனரிடம், அந்த ஓட்டல் பெயரை சொல்லி அங்கு விடச் சொன்னோம். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனர், "சார் அந்த ஓட்டலில் தற்போது தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்; வேண்டுமானால் போன் செய்து கேட்டு கொள்ளுங்கள். அங்குமிங்கும் அலைய வேண்டாமே...' என்றார். "அட, நல்ல யோசனை ஆயிற்றே, என்று, நாங்களும் போன் செய்தோம். யாரும் போன் எடுக்கவில்லை. ஆட்டோ ஓட்டுனர் நல்லது செய்தார். வேறு ஓட்டல் பார்க்க வேண்டியது தான் என்ற முடிவு செய்தோம்.
நல்ல வேளையாக, எங்கள் மகள், அப்பா உங்கள் நண்பரிடம் ஒரு போன் போட்டு விசாரியுங்கள் என்றாள். நண்பரிடம் போன் போட்ட போது, அவர் அப்படி ஏதும் இல்லையே; மற்றொரு நண்பரும் அங்குதான் இருக்கிறார் அப்படியிருந்தால், அவர் என்னிடம் நிச்சயம் சொல்லி யிருப்பார்...' என்றதுடன், அவரோட மொபைல் போனில், "செக்' செய்து, "அங்கு சென்று பாருங்கள்... அப்படியும் அறை இல்லாவிடில் சொல்லுங்கள். வேறு ஓட்டலில் ஏற்பாடு செய்து தருகிறேன்...' என்றார்.
அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், அதே ஓட்டலுக்கு விடச் சொன்னபோது, அவர் வேறு சவாரி பார்க்கிறேன் என்று சென்று விட்டார். மற்றோர் ஆட்டோ பிடித்து சென்றபோது, ஓட்டலில் வேலை நிறுத்தம் எதுவும் இல்லை. ஆனால், போன் லைன் முழுவதும் பழுதாகியிருப்பது தெரிந்தது. இப்படியெல்லாம் ஏமாற்ற, ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று நானும் ரூமில் யோசித்த போது, தூர சவாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மூலம் ரூம் போட்டால், அவருக்கு கிடைக் கும் கமிஷனும் தான் காரணம் என்பது, எனக்கு சற்று தாம தமாகவே புரிந்தது. வாசகர்களே கவனம்!

— த.அசோக், மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:55 pm

கல்வி கற்க வயது தடையில்லை!

வெகு நாட்களுக்குப் பின், என் தோழியை சந்தித்தேன். தற்போது, எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருப்பதாக சொன்னாள். "பிள்ளைகள், காலேஜில் படிக்கிற இந்த வயதில், உனக்கு படிப்பு தேவையா...' என்றேன்.
அதற்கு அவள், "நானும் நாள் முழுவதும், "டிவி' பார்த்து பொழுதை கழித்தவள் தான். என் மகன் பத்தாவது வகுப்பு துவங்கியவுடன் கேபிள் இணைப்பை துண்டிக்க வேண்டிய கட்டாயம். எப்படி பொழுதை கழிப்பது என்று யோசித்தபோது, என் மகன், "ஏனம்மா... நீயும் ஏதாவது ஒரு கோர்ஸ் சேர்ந்துவிடு. இருவரும் சேர்ந்து படிக்கலாம்...' என்றான். எனக்கும் அது சரியாகப்பட்டது.
"தொலைதூர கல்வியில், எம்.ஏ., சேர்ந்தேன். அதற்காக நூலகம் செல்ல வேண்டி வந்தபோது, பல நல்ல நூல்களின் அறிமுகம் கிடைக்க, பல விஷயங்களை கற்க முடிந்தது. "பஸ்சில், போய் வர சிரமமானபோது, இருசக்கர வாகனம் ஓட்டவும் கற்றுக்கொண்டேன். படிப்பில், என் மகனுக்கு தேவையான உதவிகளைச் செய்ததால், அவன் பள்ளியில் முதல் மாணவனாக வந்து, இப்போது கல்லூரியிலும் சேர்ந்து விட்டான். நானும் மேலே படிக்கிறேன்...' என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பிள்ளைகள் பெரியவர்களானவுடன், வயதாகிவிட்டது போல் உணர்ந்து கொண்டிருக்காமல், எந்த வயதானாலும் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டிருந்தால்... மனமும், உடலும் எந்த வயதிலும் இளமையாக இருக்குமல்லவா!
இந்த வயதில் வகுப்புக்குப் போவதா என்று தயங்காமல், உங்களுக்கு பிடித்த பாட்டு, கைவேலை என்று, ஏதேனும் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கையை முழுமையாக வாழுவோம்!

— ஐஸ்வர்யா, கோமதிபுரம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:56 pm

நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்!

கடந்த வாரம் நானும், என் தோழியும் அலுவலக தோழி ஒருவரின் விசேஷத்திற்காக சென்னையிலிருந்து, மதுரைக்கு அரசு விரைவுப்பேருந்தில் பயணித்தோம். பேருந்து செங்கல்பட்டை தாண்டியதும், பஸ்சிலிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன.
எங்கள் முன் அமர்ந்திருந்த ஜோடி ஒன்று, பேருந்து என்றும் பாராமல் சில்மிஷங்களை அரங்கேற்றம் செய்தனர்.

எங்களுக்கோ, அவர்களின் செயல் அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது. தோழியோ, "இவர்களின் அநாகரிக செயலை, எப்படியாவது தடுக்க வேண்டுமே...' என்றாள்.

டீ மற்றும் டிபன் சாப்பிடுவதற்காக, ஒரு ஊரில் பஸ்சை நிறுத்தினர். அவர்களும் இறங்கினர். தோழி, பேப்பர் ஒன்றை எடுத்தாள், அதில், "உங்கள் அந்தரங்க விஷயங்களை அரங்கேற்ற, இது ஒன்றும் உங்கள் வீட்டு படுக்கை அறை அல்ல... பஸ். எனவே, நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்...' என எழுதி, அவர்கள் பார்வை பதியும் இடத்தில் பேப்பரை வைத்து விட்டாள். இருக்கைக்கு திரும்பிய அவர்கள், கடிதத்தை படித்தனர். இருவரின் முகமும் மாறியதோடு, அவமானத்தால் கூனிக் குறுகினர்.

அதன் பின், எந்த வித சில்மிஷமின்றி பயணத்தை தொடர்ந்தனர்.
தோழியின் சமயோசித ஐடியாவுக்கு சபாஷ் சொன்னேன். பொது இடங்களில், அத்து மீறி செயல்படுபவர்கள், இனியாவது திருந்துவரா!

— ஆர்.சாந்தி பகவதி, சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:56 pm

மாப்பிள்ளையே பிரச்னை என்றால்...

திருமண விழா ஒன்றில், நண்பர் ஒருவரை சந்தித்தேன். தன் மூன்றாவது மகளுக்கு வரன் தேடுவதாக கூறினார். தன் குடும்பம் மிகப் பெரியது என்றும், உறவு முறை நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், சண்டை சச்சரவுக்கும் பஞ்சமே இல்லை.

ஆதலால், மூன்றாவது மகளுக்கு சின்ன குடும்பம், ஒரே பையன் மட்டும் இருந்தால் உத்தமம் என கூற, நானும் வரன் தேடினேன். என்னுடைய தகவல் மூலம், ஒரு பையன் உள்ள வரன் அமைந்து, திருமணமும் நடந்தது.

இப்போது நண்பர் மிகவும் துயரத்தில் இருக்கிறார். காரணம், ஒரே மகன் என்பதால், அதிக பாசம் வைத்து மகனை வளர்த்துள்ளனர். பெற்றோரால் மகனையும், மகனால் பெற்றோரையும் பிரிய முடியவில்லை.

இதனால், புதுமணத் தம்பதிகள் விருந்துக்கு சென்றால் கூட, பெற்றோருடன் செல்ல வேண்டிய நிலை. மகன், தன் மனைவியோடு ரொம்ப நேரம் தனிமையில் பேச வாய்ப்பு இல்லை. எப்போதும் மகனோடு, தாய், தந்தை இருப்பதால், நண்பர் மகளால், தன் கணவருடன் இன்பமாக இருக்க வாய்ப்பு கிடைப்பதில்லை.

மாப்பிள்ளையோ, ஒரு தனிமை விரும்பி. விடுமுறை நாளில் தனி அறையில் படுத்து தூங்கி விடுகிறார். ஆதலால், நண்பரின் மகள் திருமண வாழ்க்கை, சந்தோஷமாக இல்லை என்பதை, சமீபத்தில் தெரிந்து, நானும் வருந்தினேன். திருமண வாழ்க்கையில் மாமியார், நாத்தனார் பிரச்னை என்றால், தீர்த்து வைக்கலாம். இங்கு மாப்பிள்ளையே பிரச்னை என்பதால், என்ன செய்வது, எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை.

சின்ன குடும்பம் தேவை, நாத்தனார் இருக்க கூடாது, மாமியார் இல்லாத வீடு போன்ற கட்டுப்பாடு போட்டு, வரன் தேடும் பெற்றோருக்கு, இந்த கடிதம், ஒரு படிப்பினையாக இருக்கட்டும். பிரச்னை இல்லாத இடம் என நம்பி, நாமே பிரச்னையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. பிரச்னையை தீர்க்கக் கூடிய குடும்பமாக தேர்ந்தெடுங்கள்.

— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:56 pm

நோயாளி ஆக்காதீர்!

சில தனியார் ஆரம்ப பள்ளிகளில், குழந்தைகளை பள்ளி நேரங்களில் நீர் அருந்த அனுமதிப்பதில்லை. ஏனெனில், குழந்தைகள் வகுப்பறையை அசுத்தப்படுத்தும் என்றும், நீர் அருந்தும் நேரம் வீணாகும் என்பதற்காகவும், தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. இது சரியா? தேவையான நீர் அருந்தாமல் இருந்தால், குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். சிறு குழந்தையிலிருந்தே தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். தங்களுக்கு சவுகரியம் என்பதற்காக, குழந்தைகளின் உடல் நலனோடு விளையாடலாமா? யோசித்து செயல்படுங்கள் பள்ளி நிறுவனங்களே!

— க.புஷ்பலதா, திண்டுக்கல்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:57 pm

கட்டாயப்படுத்தாதீர் பெற்றோரே...

எங்கள் ஊரில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டாள் அந்த மணப்பெண். பெண்ணுக்கு விருப்பமில்லாத, உறவுக்கார மாப்பிள்ளையை நிச்சயித்ததாகவும், அந்த பெண் மறுத்தும், அந்த வரனை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள்.

பெற்றோரே...வாழ்க்கை நடத்தப் போவது உங்கள் மகளோ, மகனோ தான். அவர்களின் விருப்பமில்லாமல், கட்டாயப்படுத்தி, "பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்...' என்ற போலியான உடன்படிக்கையில், இளம் உயிர்களை கருக செய்து விடாதீர்.

இனிமேலாவது பெற்றோர், தம் பிள்ளைகளின் விருப்பப்படி திருமணம் செய்ய முன் வருவரா?

— பார்வதி கனகராஜ், திருப்பூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:57 pm

எதற்கும் ஓர் அளவு உண்டு!

என் கணவர் ஒரு வெகுளி. சகஜமாக எல்லாருக்கும் உதவி செய்வார். எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு தம்பதி. என் கணவரிடம் அடிக்கடி சிரித்து, சிரித்து பேசுவாள், அந்த வீட்டுப் பெண்மணி; ஆனால், என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
என் கணவரை எச்சரித்தேன்; அவரோ, "நான் தான் ஒரு நல்ல பெண்ணைப் பற்றி தவறாக நினைக்கிறேன்...' என்று கூறினார்.

ஆனால், போகப் போக நிலைமை வேறு விதமாக மாறியது. சிறு சிறு வேலைகளை கூட என் கணவரிடம் கொடுக்க ஆரம்பித்தாள். உதாரணமாக, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, "எனக்காக கொஞ்சம் வங்கியில் பணம் எடுத்து தர முடியுமா... ப்ளீஸ்' என்று ஒரு வேண்டுகோள். அவள் கணவர் ஊருக்கு போயிருக்கிறாராம்.

ஏன், கணவர் ஊருக்குப் போயிருந்தால், தானே வங்கிக்கு சென்று வர முடியாதா? யோசித்துப் பார்த்தேன்...எனக்கு வேறு வழி தெரியவில்லை. கணவரிடம், "இந்த வீடு ராசியில்லை, அது, இது...' என்று சாக்கு போக்கு சொல்லி வீட்டையும், ஏரியாவையும் மாற்றி விட்டேன். பெண்களே...நானும் ஒரு பெண் என்ற முறையில் சொல்கிறேன். அளவுக்கு மீறி பிற ஆடவர்களின் உதவியை நாடி, வீட்டிலுள்ளவர்களுக்கு, "டென்ஷன்' ஏற்படுத்தாதீர்.

— மதுமதி கண்ணன், காரைக்குடி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Jun 23, 2013 5:58 pm

கோவில் சுத்தமாக இருக்க...

கோவில்கள் இன்னும் கொஞ்சம் தூய்மையாக இருக்கக் கூடாதா என்ற ஆதங்கம், நம் எல்லார் மனதிலும் உண்டு. சில கோவில்கள், விதிவிலக்காக தூய்மையாக இருக்கின்றன என்பதை நிதர்சனமாகப் பார்த்த என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

சென்ற வாரம் திண்டுக்கல் அருகில், 8 கி.மீ., தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு என்ற சிற்றூருக்குச் சென்றிருந்தோம். அங்கே, 800 ஆண்டு பழமை மிக்க அழகான சிற்பங்களுடன், ஸ்ரீ சவுந்தர ராஜப்பெருமாள், சவுந்தரவல்லித் தாயாரின் கோவில் இருக்கிறது.

கோவிலையும், சிற்பங்களை யும் ரசித்தபின், பெருமாளுக்கு அர்ச்சனை செய்தோம். தீபம் காண்பித்து அர்ச்சகர் தட்டில் குங்குமத்துடன் வந்து, எல்லாரை யும், குங்குமம் எடுத்துக் கொள்ளச் சொன்னார். எங்களுக்கு வேண்டி யதை எடுத்துக் கொண்டோம்.

பின்னர், அர்ச்சகரிடம் கேட்டேன். "இது என்ன புதுமையாக இருக்கிறது. எல்லாக் கோவில் களிலும் அர்ச்சகர்கள் தானே பிரசாதம் தருகின்றனர். இங்கு ஏன் அவரவர்களை எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

அதற்கு அர்ச்சகர், "எல்லா கோவில்களையும் பாருங்கள். நாங்கள் எடுத்துக் கொடுக்கும் விபூதியையும், குங்குமத்தையும் கொஞ்சம் உபயோகித்து விட்டு, மீதியை என்ன செய்வது என்று தெரியாமல், அருகே இருக்கிற தூண்களில் தூவி விட்டு போய் விடுகின்றனர். இங்கே, அவரவர் களுக்கு வேண்டியதை அவர்களே எடுத்துக் கொள்வதால்

அனைத்து தூண்களும் சுத்தமாக இருக் கிறது...' என்றார். மற்ற அர்ச்சகர்களும், தாங்கள் பணிபுரியும் கோவில்களில் இதை செயல்படுத்த முன் வர வேண்டும்.

— ஒய்.தண்டபாணி, சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Wed Jun 26, 2013 5:15 pm

அரசு அதிகாரி என்றாலே லஞ்சம் வாங்குவதுதானோ!

என் நண்பர் ஒருவர், அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். தன் பதவி காலத்தில், அலுவலகத்திற்கு தணிக்கைக்கு வரும் மேலதிகாரிகளை, "குளிப்பாட்ட' வேண்டிய கடமையும் (?), நிர்பந்தமும், உடன் பணியாற்றுவோரின் தொல்லைகளுக்கு பயந்தும், லஞ்சம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி, வேறு வழி இல்லாமல் குறைந்த அளவில் லஞ்சமும் வாங்கியிருக்கிறார். இப்போது, அவருடைய ஓய்வூதியம் மற்றும் நிலுவை தொகையைப் பெற, தினமும் அலுவலகத்திற்கும், வீட்டுக்குமாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.

அங்கு புதிதாக பதவியேற்றுள்ள அதிகாரி, இவரிடம், "என்ன சார், உங்க சர்வீஸ் காலத்தில், மக்களை இப்படி கெடுத்து வெச்சுருக்கீங்க... வருபவனெல்லாம், அஞ்சு, பத்துக்கு மேல் லஞ்சம் தரமாட்டேன்கிறான்...' என்று சலித்துக் கொண்டிருக்கிறார்.
"பத்து வருஷமாகவே, இந்த ஊரில் இப்படித்தான் பழக்கம்... ' என்று கூறி சமாளித்திருக்கிறார் நண்பர். "என்ன சார், அன்றைக்கும், இன்றைக்கும் விலைவாசி அப்படியே வா இருக்கு? நூற்றுக்கணக்கில் வாங்கிய இந்த கை, இப்போது பத்தும், இருபதும் வாங்குவதற்கு கேவலமாக இருக்கிறது.

வீட்டில் என் பெண்டாட்டியிடம், இந்த வெட்கக்கேட்டை சொன்னால், நம்ப மாட்டேங்கிறாள்...' என்று வருத்தமாக கூறியிருக்கிறார் அந்தப் புதிய அதிகாரி.
அரசு அதிகாரிகளே... சம்பளம், போனஸ், வருடத்திற்கு ஆறு மாதம் விடுமுறை, பயணப் படி, எல்.டி.சி., மருத்துவ செலவு என்று எத்தனை சலுகைகள் உங்களுக்கு கிடைக்கின்றன.

இன்னும் ஏன் ஆலாய் பறக்கிறீர்கள்? உங்களை விட திறமைசாலிகள், குறைந்த சம்பளத்துடனும், சலுகையுடனும் தனியார் துறையில் பணியாற்றுவோர் லட்சோப லட்சம் பேர் உண்டு. லஞ்சம் வாங்குவதே தவறு!

அதில் இப்படி குறைக் கூறி, நல்லவர்களையும் கெடுத்து, உங்கள் வேலைக்கு நீங்களே உலை வைத்து கொள்ளாதீர்கள்!

— என்.பன்னீர் செல்வம், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Wed Jun 26, 2013 5:16 pm

வித்தியாசமான பிறந்தநாள் விழா!

எங்கள் பேத்தியின் பிறந்தநாள் விழாவை, வித்தியாசமாக கொண்டாட விரும்பினோம். வழக்கமாக, அனாதை ஆசிரமங்களுக்கு உணவு அளிப்போம். இம்முறை, அவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணி, சென்னை அருகே உள்ள ஒரு முதியோர் இல்லத்தை அணுகினோம். அவர்களும் அனுப்ப சம்மதித்தனர்.

இல்லத்தில் இருப்போர், 51 பேர் அதில்: 40 பேர் வருவர் என்று கூறினர். தனியார் பேருந்தை ஏற்பாடு செய்து, பேத்தியின் பிறந்த நாளன்று, அவர்கள் இல்லத்தை அடைந்து, பிறந்த நாள் கேக் வெட்டி, எல்லாருக்கும் வழங்கி, சுற்றுலா கிளம்பினோம்.

சுற்றுலா வராமல், இல்லத்தில் இருந்தோருக்கு, வெளியில் இருந்து அவர்கள் விரும்பியதை சாப்பிட, ஏற்பாடு செய்து விட்டு வந்தோம். மொத்தத்தில், அவர்கள் இல்ல கிச்சனுக்கு, அன்று முழுவதும் விடுமுறை.

காலை உணவு, விரும்பியதை விரும்பியவாறு சாப்பிட வைத்து, சென்னையில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு அழைத்து சென்றோம். பிறகு முட்டுக்காடு போட்டிங். விருப்பபட்டவர்கள், 16 பேர் மட்டும் போட்டிங் சென்றனர். பின், மகாபலிபுரத்தில் மதிய சாப்பாடு; சைவம், அசைவம் என, விரும்பியதை சாப்பிட வைத்தோம். பின், 6:00 மணிக்கு கடற்கரை, 7:00 மணிக்கு திருவிடந்தை நித்ய பெருமாள் கோவில் தரிசனம்.

இரவு டின்னரை முடித்து, இல்லம் வந்து, நினைவு பரிசாக அனைவருக்கும் கோ.ஆப்டெக்ஸ் பெட்ஷீட்டை வழங்கினோம். அவர்கள் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. அதை விட, நாங்கள் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது.

செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும், வசதி படைத்தோர், ஆதரவு அற்ற முதியோர்களை, அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அசத்தலாமே! —

எம்.மாரியப்பன், சிட்லபாக்கம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Wed Jun 26, 2013 5:18 pm

வளர்ப்பதெல்லாம் வளர்ச்சிக்கே!

எங்களது குடும்ப நண்பரான தாத்தா ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். நலம் விசாரிப்பு, உபசரிப்பு முடிந்ததும், அவரது வீட்டைச் சுற்றிக்காட்ட என்னை அழைத்தார். வீட்டுக்கு வெளியே இருந்த சிறிய இடத்தைக் கூட வெற்றிடமாக விடாமல், நிறைய செடிகள், கொடிகள், மரங்கள் என நட்டு, வளர்த்திருந்தார். ஆங்காங்கே, நாய், பூனை, கோழி, ஆடுகளுக்கென்று சிறுகுடில்களும் அமைத்திருந்தார்.

எல்லாவற்றையும் பார்த்து, பிரமிப்போடு விசாரித்து, "உங்கள் வீட்டில் இடம் இருப்பதால், இதையெல்லாம் வளர்க்க முடிகிறது. எங்கள் வீட்டில் இடம் இல்லையே...' என்றேன்

ஏக்கத்தோடு. அதற்கு அவர், இருக்கும் இடத்தில் மீன்தொட்டி, தேனீக்கள் கூடு, பூந்தொட்டி, மூலிகைச்செடி போன்றவற்றை வளர்க்க, ஆலோசனை கூறியதோடு, சில விதைகளும், தொட்டிகளும் எனக்கு தந்து உற்சாகப்படுத்தினார். நானும், தொட்டிகளில் செடிகளை வளர்க்கத் துவங்கி விட்டேன்.
குறைந்த செலவில் வீட்டிலேயே பொழுதுபோக்க, பலன்களை பெற, வருமானம் பெற, அதோடு, பல உயிர்களை வளர்க்கிறோம், பராமரிக்கிறோம் என்ற ஆத்ம திருப்தியை பெறும் வழியை, அந்த தாத்தா எனக்கு காட்டியுள்ளார்.

நானும், என் நண்பர்களுக்கு இதைச் சொல்ல, பலரது வீடுகளில், மீன், புறா, தேனீக்கள், மூலிகை, காய்கறிகள் என, வளர்க்கத் துவங்கி விட்டனர். அவ்வப்போது ஒவ்வொருவர் வீட்டிற்கும், "விசிட்' செய்து, எங்கள் வளர்ப்பு முறையை பரிமாறிக் கொள்கிறோம்.

இதுபோல செய்வதால், வீண் அரட்டை, வெட்டியாக சுற்றித் திரிவது, கெட்ட சகவாசங்கள் எங்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுவிட்டன. என்பது உண்மை. "நாம் பிற உயிர்களை நேசித்து வளர்க்கும் போது, மனோரீதியாக நாமும் வளர்கிறாம்...' என்று தாத்தா கூறியது, எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தான். நீங்களும் முயற்சிக்கலாமே!

— எ.சீனிவாசன், மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Wed Jun 26, 2013 5:18 pm

விவாகரத்து பெற்றவள் என்றால்...

விவாகரத்து பெற்ற இளம் பெண்ணான நான், மறுமணம் செய்து கொள்ள எண்ணி, பத்திரிகையில் விளம்பரம் செய்தேன். அதற்கு பதில் அனுப்பிய ஆண்கள் பலரும் என்னை, "சின்ன வீடா'க வைத்துக் கொள்ளவும், முதல் மனைவி இருக்கும் போதே, இரண்டாவது தாரமாக வைத்துக் கொள்ளவுமே விரும்பி எழுதியிருந்தனர்.

விவாகரத்து பெற்ற பெண் என்றால், அவ்வளவு இளக்காரமா என, நான் கொதித்துப் போனேன். என் போல, விவாகரத்து பெற்று சட்டப்படி மனைவியைப் பிரிந்த ஆணுடனோ, மனைவியை இழந்த ஒருவருடனோ வாழ்க்கையைத் தொடரவே, நான் விரும்புகிறேன்.
மேட்ரிமோனியல் விளம்பரங்களுக்கு பதில் தரும் ஆண்களே... விளம்பரம் தரும் பெண்களின் மன உணர்வுகளையும், நியாயமான எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு பதிலளியுங்கள்.

வாழ்க்கையை எதிர்பார்க்கும் அவர்களை, வார்த்தைகளால் புண்படுத்தாதீர்கள்.

— டி.கவிதா, மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Fri Jul 05, 2013 9:33 pm

எண்களை தமிழில் சொல்ல தெரியுமா?

பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப் பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், "1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0' என்றாள். "இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?' எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
அதாவது, "க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள்.
இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது. தமிழின் சுவையை, அவ்வாக்கியத்தின் மூலம் அறியவும் செய்தேன். "தமிழுக்கு அமுதென்று பேர்...' என சும்மாவா சொன்னார்கள்?

— மா.தனலட்சுமி மாரிமுத்து, விருதுநகர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Fri Jul 05, 2013 9:34 pm

உறவினரால் நேர்ந்த அவமானம்!

தனியார் நிறுவனம் ஒன்றில், வேலை பார்க்கும் திருமணமான பெண் நான். எனக்கும், என் கணவருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்னையால், அவரை விட்டு பிரிந்து, அம்மா வீட்டில் இருக்கிறேன். ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து, பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தேன்.

நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு, இரண்டு இருக்கை தள்ளி, ஆண்கள் அமரும் பகுதியில், என் நெருங்கிய உறவினர் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே, "என்னம்மா, உனக்கும், உன் கணவருக்கும் சண்டையாமே... அம்மா வீட்டில் இருக்கிறாயாமே...' என்று சப்தம் போட்டு கேட்டார்.
பஸ்சில் இருந்த அனைவரும் என்னை திரும்பி பார்த்தனர். எனக்கு மிகவும் அவமானமாக போய் விட்டது.

யார் வீட்டில் தான் பூசல் இல்லை. அதற்காக, எல்லார் முன்னிலையிலும் இப்படி வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமா? உறவினர்களே... உங்களால் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை; தொந்தரவு தராமல் இருக்கலாமே!

— சி.சுபத்ரா, சிவகங்கை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Fri Jul 05, 2013 9:34 pm

புகைப்படம் கொடுக்காதீர் இளம் பெண்களே...

நான், கல்லூரி மாணவி. இரண்டு வருடத்திற்கு முன், பிளஸ் 2 முடித்து பிரியும் போது, தோழி ஒருத்தி, "என் நினைவாக போட்டோ ஒன்று வேண்டும்...' என்று கேட்டதால், நானும் என் புகைப்படம் ஒன்றை அவளிடம் கொடுத்தேன். அன்று நான் கொடுத்த புகைப்படம், என் தோழியின் அண்ணன் கையில் கிடைத்திருக்கிறது. என்னுடைய பெயர், விலாசம் அனைத்தையும் எப்படியோ அறிந்து கொண்டு, என்னிடம் பேச ஆரம்பித்தார். என் தோழியின் அண்ணன் என்ற முறையில், நானும் அவருடன் சகஜமாக பேசினேன்.
திடீரென்று, ஒரு நாள் அவர் என்னிடம், "ஐ லவ் யூ' என்று சொல்லி விட்டார். அதிர்ச்சியடைந்த நான், அன்றிலிருந்து அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

ஒரு முறை கல்லூரியிலிருந்து வீட்டிற்கு திரும்பும் போது, என்னை வழி மறித்து, தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தினார். நான் மறுக்கவே, தன் சட்டை பையிலிருந்து என்னுடைய புகைப்படத்தை எடுத்துகாட்டி, "என்னுடன் பேசாவிட்டால், இந்த புகைப்படத்தை நீ தான் எனக்கு கொடுத்தாய் என்று, உன் பெற்றோரிடம் கூறி விடுவேன்.

அதுமட்டுமல்ல, வலைதளத்தில் போட்டு, நாறடித்து விடுவேன்...' என்று பயமுறுத்தினார். வேறு வழியின்றி, விருப்பமில்லாமல் அவருடன் பேசத் தொடங்கினேன், நான் பேசின மகிழ்ச்சியில், அவரும் என் வீட்டு விலாசத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து மடல் அனுப்பி விட்டார்.

இது என் பெற்றோர் கண்ணில் பட்டு, நடக்கக் கூடாத விவகாரமெல்லாம் நடந்து, நான் கல்லூரிக்கு செல்வது தடை செய்யப்பட்டது. படிப்பில் ஆர்வம் உள்ள நான், படிப்பையும் பாதியில் நிறுத்தி, பெற்றோரின் அன்பையும் இழந்து, அனாதையாக நிற்கிறேன்.

சகோதரிகளே... உங்கள் நினைவாக உங்கள் தோழியிடம் புகைப்படம் கொடுக்கும் போது, சற்று சிந்தித்து செயல்படுங்கள். இல்லையேல், எனக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்!

— க.வினோதினி, சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by mohaideen Sat Jul 06, 2013 10:29 am

அனைத்தும் சிந்திக்க வைக்கும் விஷயங்கள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sat Jul 20, 2013 11:29 pm

செல்போனா, செக்ஸ் போனா!

நான், ஒரு தனியார் தொழிற்பயிற்சி பள்ளியின் ஆசிரியர். ஒரு நாள், நான் பாடம் நடத்தும் போது, மாணவன் ஒருவன் தன்னை மறைக்கும் விதமாக, புத்தக பையை தன் முன் பிரித்து வைத்துக்கொண்டு, பாடத்தை கவனிப்பது போல் பாவ்லா செய்து கொண்டிருந்தான். அவன் கவனம் முழுவதும் பிரித்து வைத்த பையினுள்ளேயே இருந்தது.

எதிர்பாராத தருணத்தில் அவனை மடக்கினேன். பையிலுள்ள மொபைல் போனில், நீலப்படம் ஓடிக் கொண்டிருந்தது. சத்தம் காட்டாமல் மொபைலை எடுத்துக் கொண்டு, அவனை ஓய்வறைக்கு அழைத்து சென்று கண்டித்து, "நாளை வரும் போது, உன் தந்தையை அழைத்து வா...' என்று உத்தரவிட்டேன்

எதையுமே காதில் வாங்கி கொள்ளாத அவன், "மொபைல் வேணும்னா எடுத்துக்குங்க, மெமரிகார்டு கொடுங்க... இனிமே நான் படிக்க வரமாட்டேன், மீறி இந்த விஷயத்தை எங்க அப்பாகிட்ட கொண்டு போக நினைத்தால், கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொள்வேன்.

பின், என் சாவுக்கு நீங்கள் தான் பதில் சொல்ல நேரிடும்...' என்று, கொஞ்சமும் பயமில்லாமல் என்னையே மிரட்ட ஆரம்பித்தான்.

அவன் பேசிய தோரணை, என் வயிற்றில் அமில மழையை வரவழைத்தது. கையெடுத்து கும்பிட்டு, மொபைல் போனையும் கொடுத்து, அவனை கவுரவமாக அனுப்பி வைத்தேன்.

பெற்றோர்களே... இளைய சமுதாயம் சென்று கொண்டிருக்கும் பாதையை பார்த்தீர்களா? எதையும் பிஞ்சிலேயே கிள்ள வேண்டும். பழுத்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது!
ஆசிரியப் பணியின் அவலத்தை எங்கே போய் சொல்வது!

— ஆ.மாரியப்பன், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sat Jul 20, 2013 11:29 pm

இதுக்கு கொடுக்கலாம் மானியம்!

நான் சமீபத்தில், சி.எப்.எல்., பல்பு வாங்க, கடைக்குச் சென்றேன். 5 வாட்ஸ் பல்பு விலை கேட்டேன், ரூபாய் 110 என்று சொன்னார் கடைக்காரர். தூக்கி வாரிப் போட்டது. மேலும், 15 வாட்ஸ் பல்ப்பின் விலை ரூபாய் 175; 20 வாட்ஸ், ரூபய் 225; 30 வாட்ஸ், ரூபாய் 370; 40 வாட்ஸ், ரூபாய் 450 என்று, கடைக்காரர் கூறியதும் தலைசுற்றி விட்டது.
மின்சாரத்தை மிச்சப்படுத்த சி.எப்.எல்., விளக்கை பயன்படுத்த அரசு சொல்கிறது.

ஆனால், அதன் விலை, ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அரசு, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க மானியம் கொடுக்கிறது. இது ஏழை மக்களை சென்றடைய பல காலம் ஆகும். ஆகவே, சி.எப்.எல்., தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி, மலிவு விலையில், மக்களுக்கு கிடைக்குமாறு அரசு செய்தால், மக்கள் குண்டு பல்பை விட்டு, சி.எப்.எல்., பல்புக்கு மாறுவர்.

ஆந்திராவில், அரசே வீட்டுக்கு வீடு குண்டு பல்பை கழட்டி விட்டு, சி.எப்.எல்., பல்பை, இலவசமாக போட்டுச் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை. அதனால், எது எதற்கோ மானியம் வழங்கும் அரசு, மின்சார சிக்கனத்திற்காக சி.எப்.எல்., பல்புக்கு, மானி யம் அளிப்பது காலத்தின் கட்டாயம்.

— வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 4 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum