தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இது உங்கள் இடம்..!

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Tue May 28, 2013 3:03 am

First topic message reminder :

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sat Jul 20, 2013 11:30 pm

இவர்கள் தேவையா?

"வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துப்பார்' என, ஒரு பழமொழி உண்டு. அதுவும், இன்று மண்டபம், சாப்பாடு மற்ற செலவுகள் என, லட்சக்கணக்கில் பணம் செலவாவதால், பெற்றோர் விழிபிதுங்கிப் போகின்றனர். இந்த நிலையில், சில பண முதலைகளோ... தங்களுடைய டாம்பீகத்தை காட்ட, கல்யாண விழாவில் கலந்து கொள்ள, சினிமா நட்சத்திரங்களை அழைக்கின்றனர்.

இதற்கு, பல லட்ச ரூபாய் செலவு செய்கின்றனர்.
பிரபல இந்தி நடிகர் ஒருவர், கல்யாணங்களில் கலந்து கொள்ள, ஐந்து கோடி ரூபாய் கேட்கிறார். இவர்கள், ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி நடத்துவர் அல்லது முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, அளவளாவுவர்.

இப்படி, இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் பணத்தை, ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சேவை
நிறுவனங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்தால், அந்த உள்ளங்களாவது மகிழ்ந்து, ஆசீர்வாதம் செய்யும். நாம் செய்த, பெரிய செலவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.

சமீபகாலமாக, தமிழ் சினிமா நட்சத்திரங்களையும் அழைக்கத் துவங்கியுள்ளனர். அதிர்ஷ்டம் என்ற ஏணியின் மூலம், புகழின் உச்சியை தொட்ட இவர்களை அழைத்து, காசை வீணாக்குவதை விட, நல்ல செயல்களுக்கு உதவி செய்து, மனத்திருப்தி அடையலாமே!

— பட்டு, பெங்களூரு.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sat Jul 20, 2013 11:30 pm

காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!

அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், "இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். "அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ஜோடி ஜோடியா வர்றாங்க.

ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, இங்கேயே இரண்டு மணி நேரம், டேரா போட்டு அரட்டை அடிக்கிறாங்க. அரட்டை அடிச்சாலும் பரவாயில்லை. ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கை போடறதும், முத்தம் கொடுக்கறதும், ஊட்டி விடறதும்... பார்க்க சகிக்கலே.

"ஆம்பளை பசங்க அடங்கி போனாலும், இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும், தாராளமா இடம் கொடுக்கறாங்க. இவங்களை பார்த்து, மற்ற பெண்களும், குடும்பத்தோடு வருவோரும் கடைக்கு உள்ளே வர தயங்கறாங்க.

இவ்வளவு, வெட்ட வெளிச்சத்திலும், இந்த இளசுகள் யாரையும் மதிக்காம, கொஞ்சம் கூட பயப்படாம, ரொம்ப மோசமா நடந்துக்கறாங்க. அதனால தான், "காதலர்களுக்கு அனுமதி இல்லை'ன்னு போர்டு வச்சுட்டேன். ஆளுங்களை பார்த்த உடனே, கண்டுபிடிச்சு, திருப்பி அனுப்பி விடுவேன்.

அவுங்களால வர்ற வியாபாரமும், பணமும் எனக்கு முக்கியமில்லை. ஒழுக்கம் தான் முக்கியம்...' என்றாரே பார்க்கலாம்.

பள்ளி, கல்லூரி காதல் ஜோடிகளே... என்னதான் வயதுக் கோளாறு இருந்தாலும், பொது இடங்களில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கலாமா? உங்கள் வாழ்வில் அதற்கு என்று ஒரு நேரம், காலம் உண்டு. அப்போது காட்டுங்க உங்க வித்தைகளை. அதுவரை, எல்லாவற்றையும் கொஞ்சம் அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ளுங்களேன்.

— கே.ஆர்.ராமகிருஷ்ணன், கோவை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sat Jul 20, 2013 11:31 pm

கல்வி சுற்றுலாவா? இதையும் கொஞ்சம் பரிசீலிக்கலாமே!

சில தனியார் பள்ளிகளில், கல்வி சுற்றுலா என்ற பேரில் லண்டன், பாரிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், துபாய் என்று அயல் நாட்டு இடங்களைக் குறிப்பிட்டு, மாணவர்களிடையே ஆசையை வளர்த்து, பெற்றோரிடமிருந்து பெருந்தொகையை வசூலிக்கின்றனர்.

இதில், வசதி படைத்த பெரும் பணக்கார பெற்றோரின் பிள்ளைகள் மட்டுமே, பங்கேற்க முடிகிறது. மற்ற மாணவர்களால் இதில் பங்கு பெற முடிவதில்லை. கல்வி சுற்றுலா செல்வதற்கு, இந்தியாவில் எவ்வளவோ முக்கியமான இடங்கள் இருக்கின்றன.

இந்திய பண்பாடு, கலாசாரம் மற்றும் நம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களின் சிறப்பு, இவைகளை பற்றிய அறிவை, பெறும் விதத்தில் மாணவர்களின் கல்வி சுற்றுலா அமைய வேண்டும்.

அப்போதுதான்... நாளைய தலை முறைகளான, இன்றைய மாணவ சமுதாயத்தால், இந்தியா வல்லரசாக மாற, பல நல்ல திட்டங்களை உருவாக்க முடியும். கல்வி சுற்றுலா, எல்லா தரப்பு மாணவர்களும், பங்கு கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.

சமீபத்தில், "டிவி' சேனல் ஒன்றில், சில மாணவர்களிடையே, "ராஜஸ்தான் எங்கு உள்ளது? அந்த மாநிலத்தை பற்றி நாலு விஷயங்கள் சொல்லுங்கள்...' என்று, நிகழ்ச்சி நடத்துகிறவர் கேட்ட போது, யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்பது, மிகவும் வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரியதாக இருந்தது. கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகள் யோசிக்குமா?

— கோ.சிவகுமார், முகப்பேர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sat Jul 20, 2013 11:32 pm

அக்கம் பக்கத்தாரை நம்புங்க!

என் தோழி ஒருத்தி, குடும்பத்துடன் நான்கு நாட்கள் சுற்றுலா கிளம்பினாள். அதை தெருவிலுள்ள அனைவரிடமும் கூறி, அண்டை வீட்டுக்காரியிடம், வீட்டுச் சாவியை கொடுத்து, தினமும் மாலை வீட்டுக்குள் விளக்கு போட்டு, பின் அணைக்குமாறு சொல்லி விட்டு கிளம்பினாள்.

"தெரு பூராவும் தம்பட்டம் அடித்து, பக்கத்து வீட்டுல சாவியையும் கொடுத்துட்டு போறியே, எல்லாரும் பொறாமைபடுவாங்களே... கமுக்கமா போக வேண்டியது தானே, சாவியை வேற கொடுத்துட்டு போற... எதையாவது எடுத்துட்டு போனா என்ன செய்வ...' என, கேட்டேன்.

"பைத்தியக்காரி... எல்லாருக்கும் தெரிஞ்சதுனால, முன் பின் தெரியாதவங்க யாரும் வீட்டுப்பக்கம் நடமாடுனா, எல்லாருமே என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க, பக்கத்து வீட்டுல சாவி இருக்கறதால, நமக்கு தான் நல்லது. நம்மளை நம்பி சாவி கொடுத்துருக்காங்களேன்னு... அவங்க வீட்டை விட, நம்ம வீட்டை கவனமாக பார்த்துக்குவாங்க. வீடு தேடி யார் வந்தாலும், மரியாதையா பதில் சொல்லி அனுப்புவாங்க.

ஆள் இல்லாத வீட்டுக்கு அண்டை விட்டுக்காரங்களையும், தெருக்காரங்களையும் விட, வேறு யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒரு தடவை, இப்படி செய்து பார், புரியும்...' என்றாள்.

யோசித்துப் பார்த்தபோது, இதுவும் சரியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

— ஜி.ராஜரத்னா, தர்மாபுரம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:34 pm

தோழியிடம் பேசும் போது...

"கோ-எட்' கல்லூரியில், பயிலும் மாணவன் நான். எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தியின் நட்பு, எனக்கு கிடைத்தது. இருவரும் பொதுவான விஷயங்கள் பேசுவதோடு, ஓட்டலில் காபி, டிபன் சாப்பிடுவது வரை பழகினோம். ஒரு நாள் போனில் பேசும் போது, "எங்கள் வீட்டுக்கு வந்து, ஒரு நாள் தங்கி விட்டுப் போயேன்!' என, விளையாட்டாக கேட்டேன். "ச்சீ... ஆசையைப் பாரு... குரங்கு, பிசாசு...' என, என்னை செல்லமாகத் திட்டினாள்.

உடனே, அவள் என்னோடு நெருக்கமாக பழகுவதாக கருதிய நான், போனிலேயே, ஒரு முத்தம் தருமாறு கேட்டேன். சட்டென போனை, "கட்' செய்து விட்ட அவள், அதன் பின், என்னோடு பேசாமல், என் நட்பையும் துண்டித்து விட்டாள்.

இப்போது நட்பை இழந்த வேதனையில் நான் துடிக்கிறேன். இளைஞர்களே... உங்கள் தோழியரின் நெருக்கத்தை, சரியாக கணிக்காமல், அவசரப்பட்டு இது போல உரிமையோடு பேசி விடாதீர்கள். இது, நட்பையே பாதித்து விடும். பேச்சிலும், செய்கையிலும் சற்று கண்ணியம் இருக்கட்டும். அது, நட்பை பலப்படுத்தும்.

— ஆர். மோகன்ராம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:34 pm

தனியார் பள்ளி நிர்வாகிகளே...

என் நண்பர் சமீபத்தில், ஒரு பள்ளிக்கு டிரைவர் பணிக்காக, இன்டர்வியூவிற்கு சென்றிருந்தார். இன்டர்வியூவில், முன் அனுபவம், குடும்பநிலை, எதிர்பார்க்கும் சம்பளம் எல்லாவற்றையும் கேட்டறிந்த பள்ளித் தாளாளர், கடைசியாக, ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று, சில பரிசோதனைகளை செய்து, ரிப்போர்ட் கொண்டு வரும்படி கூறியிருக்கிறார்.

அதற்கு நண்பர், "சார், எதற்கு இந்த பரிசோதனைகள்' என்று கேட்டதற்கு, தாளாளர் கூறியது, "உங்கள் உடலில் ஆல்கஹால் அளவு எப்படி உள்ளது, நீங்கள் தினமும் குடிப்பவரா என்பதையெல்லாம், நாங்கள் அறிந்து கொள்வதோடு, உங்களுக்கு தொற்றுநோய் எதுவும் உள்ளதா என்பதும், எங்களுக்கு தெரிய வேண்டும்.

ஏனெனில், சிறு குழந்தைகள் உங்களோடு வண்டியில் வரும்போது, அவர்கள் பாதிக்கப்படக்கூடாது அல்லவா...' என்று தெளிபடுத்தியிருக்கிறார்.

புகைபிடித்தல், மது அருந்துதல், செல்போன் பேசுதல் போன்ற விஷயங்களில் கெடுபிடியாக இருக்கும் பல பள்ளிகள், இது போன்று ஆரோக்கியமான டிரைவர்களை பணி நியமனம் செய்வது, குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும்.

— வேல்மணி ராஜன், மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:35 pm

பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் கேவலமா?

என் மகளை, பெண் பார்த்துவிட்டு போனவர்களிடமிருந்து, ஒரு மாதமாகியும், ஒரு தகவலும் வராமல் இருக்கவே, விசாரிப்பதற்காக வரன் வீட்டுக்குச் சென்றோம். மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்; உதடுகள் உலர்ந்து, நா வறண்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தான், பேசவே வருமென்ற நிலைமை. அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தோம்.

உள்ளே இருந்தபடியே, எங்களைப் பார்த்துவிட்ட பையனின் அப்பா, கதவை திறக்காமலேயே, "பையனுக்கு வேறு இடத்துல முடிஞ்சிருச்சி; போங்க போங்க...' என்று அடிக்காத குறையாக விரட்டினார். அவமானத்தில் கூசிப் போனோம்.

பிறகு விசாரித்ததில், அவரது மகன் ஏதோ காதல் விவகாரத்தில் சிக்கி, காதலித்த பெண்ணோடு ஓடிப்போன விஷயம் தெரிய வந்தது. அவரது மகன், யாரோ ஒரு பெண்ணோடு ஓடிப் போனதற்கு, நாங்களா பொறுப்பு?

ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து உபசரிக்கும், சாதாரண மனித பண்பு கூட இல்லாத, இது போன்ற பிறவிகளை என்னவென்பது! அடித்துத் துரத்தாத குறையாக எங்களை விரட்டி விட்டவர், ஒரு ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் என்பதுதான் நெருடலான விஷயம். பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் அவ்வளவு கேவலமா?

— பி.இளங்கோவன், கீழ்க்கட்டளை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:35 pm

நடைப்பயிற்சி அணி!

சமீபத்தில், என் அத்தை வீட்டில் இரவில் தங்க வேண்டியிருந்தது. காலை விடிந்ததும், 50 வயதுள்ள என் அத்தை, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். நான், என்னவென்று விசாரித்த போது, "வாக்கிங்' செல்வதாக சொன்னார். நான் அதை கண்டுகொள்ளாமல், "சரி போய்ட்டு வாங்க...' என்று கூறி, உள்ளே சென்று விட்டேன்.

வாக்கிங் செல்வதாக கூறிக் கிளம்பிய அத்தை, வாசலிலேயே, 10 நிமிடம் நிற்க, "என்ன அத்தே... இன்னும் இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க?' என்றேன். அதற்கு அத்தை என்னிடம், "எங்க டீம் வருவாங்க, அவங்களோடு சேர்ந்துதான் போவேன்...' என்றார். "அது என்ன... டீம்?' என்று கேட்டேன்.

அவர் கூறியது: தன்னந்தனியாக, "வாக்கிங்' போறப்போ, சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும் நடப்பாங்க. ஒரு சிலர், "வாக்கிங்' பற்றிய, முறை தெரியாம இருப்பாங்க. ஆனால், குழுவா சேர்ந்து, "வாக்கிங்' போனா ஒரே சீரா நடப்போம்; சிரமம் தெரியாது. அதோட நகை திருடர்கள், நாய் தொல்லை, எதுவும் கிடையாது. திரும்பி வரும் போது, பால் பாக்கெட், பேப்பர் வாங்கிட்டு வருவோம். அதோட பலரோடு பழகும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்...' என்றார்.

தனியாக மைதானத்திற்கோ, மாடியிலோ, "வாக்கிங்' செல்வதை விட, இதுபோன்று தெருவாசிகளோடு, ஓர் அணியாக, "வாக்கிங்' செல்வது புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். உங்கள் பகுதியிலும் இதுபோல சிலர் இணைந்து செயல்படலாமே!

— எஸ்.கோதை, மதுரை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:36 pm

குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை!

சமீபத்தில், என் உறவினர் ஒருவர், ஏழாம் வகுப்பு படிக்கும் தன் மகன் மற்றும் மனைவியோடு, என் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்கள், தங்கள் மகன் பள்ளியில், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பரிசுகள் வாங்குவதை, பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய மகன் டாய்லெட் போக வேண்டுமென்று, தன் அம்மாவிடம், "சிக்னல்' காட்டினான். அந்த சிக்னலுக்கான அர்த்தம், அந்த பெண்மணி, மகனைப் பின் தொடர்ந்து சென்றதும் தான் எனக்கு புரிந்தது. ஆச்சரியத்துடன், உறவினரை பார்த்தேன்.

"ஒரே பிள்ளை... செல்லமா வளர்த்துட்டோம். அம்மா ஊட்டி விட்டால்தான் சாப்பிடுவான்; இரவில், அம்மா பக்கத்தில் தான் தூங்குவான்; டாய்லெட் போகும்போது கூட, அம்மா அவன் பக்கத்தில் நிற்க வேண்டும். அவள்தான், அவனுக்கு இன்றுவரை கழுவி விடுகிறாள்...' என்று பெருமையாக சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக மாறியது.

இம்மாதிரி...கட்டுப்பெட்டியாக வளரும் குழந்தைகள், பிற்காலத்தில் மண வாழ்க்கையில், அம்மாதிரி முழு ஆதரவு கிடைக்காத பட்சத்தில், மனநிலை பாதிக்கப்படும் அபாயம் காத்திருக்கிறது என்பதை, பெற்றோர் உணர வேண்டும்.

பெற்றோர்களே...படிப்பு மட்டும், ஒருவனை முழு மனிதனாக ஆக்கிவிட முடியாது. ஒரே குழந்தையாக இருந்தாலும், பருவத்துக்கு ஏற்றபடி, அவர்களை சுதந்திரமாக வளர விடுங்கள். இல்லையென்றால், வீட்டிற்கும், நாட்டிற்கும் தீமைதான் விளையும்!

— எஸ்.ராமன், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:36 pm

கணவரை பங்கு போடும் தோழி!

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.

அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.

முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.

தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?

— யாழ் நிலா, கழனிவாசல்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:37 pm

நண்பர்களுக்கு தண்டச் சோறு போடுகிறீர்களா?

நல்ல வேலையிலிருக்கும் நான், என் நண்பன் ஒருவனுக்கு சாப்பாடு போட்டு, என் அறையில் கூடவே வைத்து பராமரித்து வந்தேன். அவனும் என்னை தெய்வமாக மதித்து, மற்றவர்களிடம் பெருமையாக புகழ்ந்து வந்தான்.

எனக்கு திருமணமாகியது. என் மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி போனேன். என் நண்பனுக்கு செலவு செய்ய தடை போட்டு விட்டாள் மனைவி. ஓசி சோறில், உடல் வளர்த்து சோம்பேறி ஆகிவிட்ட நண்பன், வேலைக்கு போகாமலும், வேலைக்குச் சென்றால் ஒரு மாதம் கூட நிலைத்து நிற்காமல் சும்மாகவே சுற்றித் திரிகிறான்.

ஓசி சோறு கிடைக்காததால் நான், நட்புக்கு துரோகம் செய்து விட்டதாக, இப்போது சேற்றை வாரி இறைத்து வருகிறான். அவன் பெற்றோரோ... தங்கள் மகனை நான் வேலைக்கு போக விடாமல் தடுத்து, எனக்கு எடுபிடியாக வைத்துக் கொண்டு, அவன் எதிர்காலத்தை பாழாக்கி விட்டதாக பழி சொல்கின்றனர்.

நண்பர்களுக்கு செலவு செய்து மகிழும் நட்பு திலகங்களே... நண்பர்களுக்கு நீங்கள் போடும் சோறு, உங்களுக்கு கெட்ட பெயரை கொண்டு வருவதோடு, உங்கள் நண்பனின் எதிர்காலத்தையும் பாதிக்கும், என்பதை உணருங்கள்!

—கோ. பிரசன்னா, கோவை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:38 pm

டிரைவருக்கு நன்றி!

சமீபத்தில் தோழி ஒருவருடன், சென்னையிலிருந்து, மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்தேன். பல விஷயங்களை பேசியபடி வந்த அவள், டிரைவர் வந்து அமர்ந்தவுடன், பஸ் புறப்படத் தயாராகும் நேரத்தில், தன் பேச்சை திடீரென திசை மாற்றினாள். டிரைவர் வேலையை, மிக புனிதமானது என்றும், இரவு தூக்கத்தை தொலைத்து அவர்கள் பணி செய்வதை மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டாள். இவையனைத்தையும், மிக சத்தமாக டிரைவர் கேட்கும் வகையில் கூறினாள். புரியாமல் விழித்த என்னிடம், காரணத்தை பிறகு சொல்வதாக, கண் ஜாடை காட்டினாள்.
பஸ் மதுரை சென்றடைந்ததும், அவளும், அவளது குழந்தைகளும் டிரைவருக்கு நன்றி தெரிவித்தனர். டிரைவரும், புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் எனக்கு விளக்கினாள்...

தற்போது விபத்துகள் நடப்பது சகஜமான ஒன்றாகி விட்டது. அதனால் தான் டிரைவருக்கு, அவரின் பணியின் புனிதத்தையும், அவர்களுக்கு எத்தகைய பொறுப்பு இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே, தான், அப்படி பேசியதாகவும், நாம் அவர்களுக்கு நன்றி சொல்வது அவர்களை ஊக்கப்படுத்தும் என்றும் கூறினாள்.
நல்ல விஷயந்தானே... நானும், என் குழந்தைகளும் இதை பின்பற்றத் துவங்கி விட்டோம்!

நன்றி வாரமலர் — சுபா தியாகராஜன், திருவொற்றியூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:38 pm

நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். சமீபத்தில், உடல் நல குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, அவர் அளித்த மருந்து சீட்டுடன், அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றேன்.

மருந்து சீட்டை பெற்ற கடை ஊழியர், குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்து, ஒவ்வொரு மருந்து அட்டையின் பின்புறமும், ஸ்டிக்கர் ஒன்றை ஓட்டினார். அதை கவனித்த எனக்கு ஆச்சரியம். அந்த ஸ்டிக்கரில், காலை, மதியம், இரவு என, தமிழில் எழுதி இருந்தது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "மருத்துவர்களின் கையெழுத்து புரியாத சிலர், காலையில் எடுக்க வேண்டிய மருந்தை இரவிலும், மதியம் எடுக்க வேண்டிய மருந்தை காலையிலும் உட்கொள்கின்றனர். வெறும் வாய் வார்த்தையால் நாங்கள் சொன்னால், அதை அவர்கள் மறந்து விடுவர். இதைத் தவிர்க்கவே, இந்த ஸ்டிக்கரை ஒட்டுகிறோம். என்னென்ன மாத்திரை எந்தந்த வேளைக்கு சாப்பிட வேண்டும் என, இதில் குறிப்பிட்டு விட்டால், குழப்பம் இருக்காது...' என்றார்.

தெருவிற்கு தெரு மருந்து கடைகள் முளைத்து விட்ட இக்காலத்தில், வெறும் வியாபார நோக்கோடு மட்டும் அல்லாமல், கடமை உணர்வோடு, மற்ற மருந்து கடைக்காரர்களும் இதை பின்பற்றலாமே!

நன்றி - வார மலர் — எஸ்.மைதிலி, மேற்கு மாம்பலம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:38 pm

ஒன்றாக கல்லூரியில் படித்து, பட்டம் வாங்கி வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் நாங்கள். மாநகரில் மூலைக்கு மூலை வசித்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தித்து, உரையாடி, ஆறுதல் தேடுவது வழக்கம். எங்கள் குழு நண்பனொருவனை இரண்டு வாரங்களாக காணவில்லை. என்னமோ ஏதோவென்று பதறி, அவனைக் காண, அவன் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் அவன் இல்லை. இரண்டு தெரு தள்ளி, ஒரு வீட்டில் அவன் இருப்பதாக கூறினர். அங்கு சென்றோம்.

குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்டிருக்க, நண்பனும் இன்னும் சிலரும், கையில் உருட்டுக் கட்டைகளோடு காவல் காத்துக் கொண்டிருந்தனர்.
"என்னடா விஷயம்?' என வினவினோம்...
"அது ஒண்ணுமில்லடா... இந்த வீட்டுல இருக்கிறவங்க, ஒரு வாரம் வெளியூர் போயிருக்காங்க. அவுங்க திரும்பி வர்ற வரைக்கும், வீட்டோட பாதுகாப்பை, எங்க பொறுப்புல ஏத்துக்கிட்டிருக்கோம். சும்மா,வெட்டியா ஊரை சுத்தி, வம்பு பேசிகிட்டுத் திரியுற நேரத்துல, இது மாதிரி ஏதாவது உருப்படியா செஞ்சா, "அட்லீஸ்ட்' நாம அப்ளிகேஷன் போடுற செலவுக்காவது ஆகுமே... அதுக்குத் தான்...' என்றான்.

ஆச்சரியமடைந்து, "இதுக்கு எவ்ளோடா சார்ஜ் பண்ணுவீங்க?' என்றோம்
"அது ஆளோட வசதியை பொறுத்தது. இது மிடில் கிளாஸ் பேமிலி. அதனால், இரண்டாயிரம் ரூபா சார்ஜ். இதே, ஹை கிளாஸ் வீடாக இருந்தால், ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை வாங்குவோம். மேலும், பாதுகாக்க வேண்டிய நாளுக்கு ஏத்த மாதிரி, சார்ஜ் பண்ணுவோம். உள்ளுர் பிள்ளைகளாதலால், நம்பிக்கையாக ஒப்படைக்கின்றனர்...' என்று சொன்னான்.
"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'ன்னு சும்மாவா சொன்னாங்க... எங்கள் ஏரியாவில், நாங்களும் ஒரு காவல்படை துவங்க முடிவு செய்து விட்டோம்.

நன்றி - வாரமலர் — எம்.சந்திரசேகர், திண்டுக்கல்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by சரண் Sun Aug 11, 2013 9:20 pm

அனைத்தும் அருமை.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by முரளிராஜா Mon Aug 12, 2013 7:57 am

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Aug 25, 2013 8:31 pm

வீண் சந்தேகம் வேண்டாமே!

நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...

"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.

"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.

"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.

"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!

— எஸ்.மாலினி, கோவை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Sep 15, 2013 9:07 pm

ஆண்கள் ஜொள்ளர்கள்தான்! இருப்பினும்...

ஆசிரியையாக பணிபுரியும் இளம் பெண் நான். தினமும், பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவது வழக்கம். நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில், அலுவலகம் செல்லும் பெண்களும் பஸ் ஏறுவதுண்டு. இத்தகைய பஸ் பயணத்தில் அறிமுகமான தோழி ஒருத்தி, கூட்ட நெரிசலில் பயணிக்கும் போது, ஆண் இருக்கை பக்கம், ஏதாவது சீட் காலியாக இருந்தால், சட்டென்று அங்கு உட்கார்ந்து விடுவாள்.

அறிமுகம் இல்லாத ஒரு ஆண் அருகில் அமர்ந்து, பயணம் செய்கிறாளே என, அவளைப் பற்றி என்னுள் ஒரு குறுகுறுப்பு. ஒரு நாள், அவளிடம் இதைக் கேட்டு விட்டேன். படு காஷûவலாக சிரித்த அவள், "ஆண்கள் பொதுவாகவே ஜொள்ளர்கள் தான். ஆனாலும், அவர்களது சபலப்புத்தி எப்போதும் வெளிப்படுவதில்லை. கூட்ட நெரிசலில் வாய்ப்புக் கிடைக்கும் போது, உரசிப் பார்ப்பவன் கூட, தன் அருகில், ஒரு பெண் வந்து அமர்ந்தால், டீசன்ட்டாக நடந்து கொள்வான்...' என்றாள்.

அது நிஜம்தானா என அறிய, கடந்த வாரம் ஒருநாள், ஆண் ஒருவரின் அருகில் சீட் காலியாக, அதில் போய் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! அந்த ஆள் பார்ப்பதற்கு பொறுக்கி போல் இருந்தாலும், சற்று நகர்ந்து, ஒரு சின்ன இடைவெளி விட்டு, ஒதுங்கி அமர்ந்து கொண்டான்.

கூட்ட நெரிசலில், உரசல், இடித்தல், எதுவுமின்றி, சவுகர்யமாய் பயணித்து, என் சேலையின் மடிப்பு கலையாமல் பள்ளி சென்றேன்.

பெண்களே... ஆண்களில் பெரும்பாலோர் ஜொள்ளர்கள் தான். ஆனாலும், கள்ளம் கபடமின்றி அவர்களை அணுகும்போது, அவர்களும் கவுரவ மாகவே நடந்து கொள்கின்றனர்.

— ஐ.ஹரிணி, சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Sep 15, 2013 9:07 pm

தோழியின் பாதுகாப்பு கவசம்!

அரசுடைமை வங்கி ஒன்றில், வேலை பார்க்கும் நான், சமீபத்தில், தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும், பால்ய சிநேகிதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன்.
"ஆபீசில், சபலிஸ்டுகளை எப்படி சமாளிக்கிறாய்?' என்று, சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"அந்த விஷயத்துல நான் சமர்த்து. ஆபீசுல பத்து வருஷமா, பழந்தின்னு கொட்டை போட்டவங்களெல்லாம், என்னைப் பார்த்து, புருவம் உயர்த்தி, ஆச்சரியப்படற அளவுக்கு நான் பாப்புலர்...

"எப்படின்னு கேக்கறியா? காலைல ஆபீசுக்கு போனவுடனே, "இன்னிக்கு பஸ்சுல, ஒரு காலிப்பய என்கிட்ட, சில்மிஷம் பண்ணினான். செருப்பை கழட்டி, "பளார் பளார்'ன்னு அறைஞ்சேன். அலறி, அடிச்சிட்டு தப்பிச்சோம், பிழைச்சோம்ன்னு இறங்கி ஓடிப் போயிட்டான்'ன்னு எல்லாருக்கும் கேட்கும்படி, டுபாக்கூர் விடுவேன்.

"இந்த மாதிரி, அவ்வப்போது யாருக்கும் சந்தேகம் வராதபடி, "கப்ஸா' அடிச்சி விடுவேன். இதை உண்மையின்னு நம்பி, "எம்மா...அவளா நெருப்புல்லா'ன்னு சொல்லுவாங்க அந்த மாதிரியான சபல ஆசாமிகள் உட்பட, யாரும் என்கிட்ட வாலாட்ட மாட்டாங்க...' என்றாள் பெருமையாக!

வேலைக்கு செல்லும் சகோதரிகளே... நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, இந்த மாதிரி பொய் சொன்னாலும் பரவாயில்லை... நெருப்புங்கற இமேஜை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதுவே, பாதுகாப்பு கவசமாய் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும்.

— சி.கலாராணி, புதுச்சேரி.--
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Sep 15, 2013 9:07 pm

அசடு வழிந்த மாப்பிள்ளை!

என் தோழிக்கு திருமணம் நடந்தது. முதலிரவில், அவள் பட்ட அவஸ்தைகளை, ஒரு நாள் சந்திக்கும் போது, என்னிடம் சொல்லி வருத்தப்பட்டாள்...

மனதில் படபடப்புடன், முதலிரவு அறைக்குள் சென்ற தோழி, அங்கு, கணவர் குறட்டை விட்டு தூங்குவதைப் பார்த்து, என்ன செய்வது என தெரியாமல் முழித்திருக்கிறாள். என்ன நினைப்பாரோ என்று, எழுப்பவும் பயம்.

தானாக எழுந்திருப்பார் என்று தயங்கி தயங்கி இரவு முழுவதும் அவள் காத்திருக்க, விடிந்த பின் எழுந்து, "சாரி, உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீ வர லேட்டாகவே, கல்யாண அசதியில தூங்கிட்டேன் போலிருக்கு...' என்று அசடு வழிந்துள்ளார்.

மாப்பிள்ளையை, முதலிரவு அறைக்குள் முன் அனுப்பி, அதற்கு பின், நல்ல நேரம் பார்த்து, பெண்ணை தாமதமாக அனுப்பியதால் வந்த வினை இது. நல்ல நேரத்தை அவர்களிடம் சுட்டிக்காட்டினால், புரிந்து கொள்ள மாட்டார்களா?

அதோடு, என்ன தான் கல்யாண அசதி என்றாலும், ஒரு புது மாப்பிள்ளை இப்படியா தூங்குவது... பாவம் என் தோழி.

— தி. விமலா ராணி, பொள்ளாச்சி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Sep 15, 2013 9:08 pm

பொது இடத்தில் வேண்டாமே!

நானும், என் கணவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன், நவநாகரிகமான காதல் ஜோடி ஒன்று, பைக்கில் சென்று கொண்டிருந்தது. பில்லியனில் அமர்ந்திருந்த இளம் பெண், காதலனின் தாடையை பிடித்துக் கிள்ளுவதும், கழுத்தில் முத்தமிட்டு, இரு கைகளால் காதலனின் இடுப்பை இறுக்கமாக அணைத்தும், "கிச்சு கிச்சு' மூட்டியபடி சென்றாள்.

காதலனோ, சுற்றுப்புறத்தை எல்லாம் மறந்து, காதலியின், "கிளுகிளுப்பு'களை அனுபவித்தவாறு, பைக் ஓட்டிச் சென்றான்.

"இவர்கள் இப்படி விளையாட்டாக செய்வது, விபரீதத்தில் முடியப் போகிறதே...' என்று, என் கணவர் சொல்லிக் கொண்டிருந்த போதே, அந்த விபரிதம் நடந்து விட்டது.

எங்களுக்கு பின்னால் இருந்து, பைக்கில் வந்த வில்லன் ஒருவன், இளம் ஜோடியின் பைக் அருகில் சென்று, இளம் பெண்ணின் மார்பை அழுத்தி விட்டு, வேகமாக சென்று விட்டான். இதைப்பார்த்த நாங்கள், அதிர்ந்து விட்டோம். அதிர்ச்சியில், உறைந்து போயிருந்தாள் அந்த இளம் பெண். பைக்கை, ஓரமாக நிறுத்தி விட்டான் இளைஞன். அதன் பின், என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

இளம் ஜோடிகளே... உங்கள், பருவ விளையாட்டுகளை, நான்கு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பொது இடத்தில் அரங்கேற்றினால், இப்படிப்பட்ட விபரீதங் கள் நடக்க வாய்ப்புள்ளது. உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

— கமலா மூர்த்தி, சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Muthumohamed Sun Sep 15, 2013 9:08 pm

தவறான, "அட்வைஸ்' தராதீர்!

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர், அவரின் பக்கத்து வீட்டு பெண்மணியின் பேச்சை, வேதவாக்கு போல் கேட்பார். தன் கணவர் ஏதாவது சொன்னால் கூட, அதை அவ்வளவாக ஏற்பது கிடையாது. சமீபத்தில்,

அப்பெண்மணியின் வீட்டில் பிரச்னை ஏற்பட, வழக்கம் போல் பக்கத்து வீட்டு பெண்ணிடம் பிரச்னையை கூற, "எத்தனை நாட்கள் தான், கணவர் உன்னிடம் பேசாமல் இருப்பார்... ஒருநாள், கண் முன்னாடியே

கிணற்றுக்குள் குதி. அப்பவாவது, உன் மேல் அவருக்கிருப்பது பாசமா அல்லது வேஷமா என்பது புரியும்!' எனக் கூற, அப்பெண்மணியும் அப்படியே செய்து விட்டார்.

கிணற்றில் குதித்த வேகத்தில், தலையில் நன்றாக அடிபட்டு விட்டது. நல்ல வேளை... அப்பெண்மணி யின் கணவர் உயிரை காப்பாற்றி விட்டார். அடுத்தவர்களுக்கு, "அட்வைஸ்' கூறும், அட்வைஸ் அம்புஜங்களே...

மற்றவர் குடும்பத்தில், பிரச்னை வராத மாதிரி, அறிவுரை கூற முடிந்தால் கூறுங்கள்; அதை விடுத்து, இப்படி அபத்தமான (ஆபத்தான) அறிவுரை கூறி, வேதனைக்குள்ளாக்காதீர்!

— எல். சந்திரகலா, போரூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 7:13 am

பகிர்வுக்கு நன்றி முத்து முஹமது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by சரண் Mon Sep 16, 2013 7:49 am

இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம்.
முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி முத்து முஹமது
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by sawmya Mon Sep 16, 2013 11:51 am

பகிர்வுக்கு நன்றி!சோகம் முடியலை 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

இது உங்கள் இடம்..! - Page 5 Empty Re: இது உங்கள் இடம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum