தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ஜேக் Mon Jul 29, 2013 9:54 pm

First topic message reminder :

கவிதை எழுதுவது எப்படி?

கவிதைகள் எத்தனை வகை உண்டு?

கவிதை எழுத தகுதி வேண்டுமா?

ஹைக்கூ - என்பதின் விளக்கம் என்ன?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down


கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 8:05 pm

நல்லது தோழர்! நல்ல முறையில் திரும்பி வாருங்கள். உங்கள் பதிவுக்காக நான் ஆவலோடு காத்திருப்பேன்! நன்றி! ------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:46 pm

கஸல் - கஜல் (இரண்டும் ஒன்றே)

கடவுளுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு மிகவும் விசித்திரமானது. தன் காதல் வெற்றி அடையும்பொழுது தனது ஆற்றாலாலும் முயற்சியாலும் மட்டுமே அது கைகூடியது என்று நினைக்கும் மனிதன் அது தோல்வியடையும்போது விதியையும் கடவுளையும் ஏசுவது வழக்கம். காதல் ஒருவரை பண்படுத்தவும் காதலர்களுக்குக் காதல் பற்றியச் சரியான புரிதல் இன்மையால் பிரச்சினைக்குரியதாக மாற்றவும் செய்கின்றது. இன்று காதல் திருமணங்கள் அதிகரித்து வருவதும், சாதி மறுப்புத் திருணத்திற்குக் காதல் அடிப்படைக் காணமாக அமைவதையும் காணமுடிகின்றது. புதுக்கவிதையில் எடுத்துக்காட்டப்படும் காதல் பற்றிய சிந்தனைகளைவிட கஸல் கவிதைகளில் எடுத்துக்காட்டப்படும் காதலின் சிந்தனைகள் ஆன்மிகத் தன்மையைச் சார்ந்தவைபோல் புனிதமாக அமைந்துள்ளன. எனவே, இனி ஆன்மிகத்தைப் போன்று காதலையும் புனிதமாகப் பார்க்கும் தன்மையை தமிழ்க் கஸல்கள் உருவாக்கும் முயற்சியை அறிய முடிகின்றது....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:48 pm

கஸல் கவிதையின் விரிவான விளக்கம்

கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடை - கஜல் வடிவமாகும். கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் புகழ் பெற்ற வடிவமான கஸீதாவிலிருந்து பிறகு வார்த்தெடுக்கப்பட்டது தான் கஜல் ஆகும். ‘கஸீதா’ என்றால் ‘ஒரு குறிக்கோளை நோக்குதல்’ என்று பொருள் படும். இச்சொல் ‘கஸத’ என்னும் மூலத்திலிருந்து பிறந்ததாகும். இது ஒரு நீளமான கவிதையைக் குறிக்க அரபிகளால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக அரபியில் கஸீதா எழுதியவர் பாஸீ சண்டையில் கலந்து கொண்ட, தக்லீப் குழுவைச் சார்ந்த முஹல் ஹில் என்று கூறப்படுகிறது. பின்னர், கஸீதா எழுதும் முறை துருக்கியிலும், ஃபார்சியிலும் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஒரு கவிஞரின் குலத்தைப் புகழவும், அவருடைய எதிரிகளை இகழவுமான கவிதைகளுக்கு இப்பெயர் இருந்து வந்தது. பின்னர், அன்பளிப்பை மனத்திற் கொண்டு ஒரு கவிஞர் ஒரு செல்வரையோ, அவரின் குலத்தையோ புகழும் நீண்ட பாக்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது” என்பார் எம்.ஆர்.எம். அப்புதுற்றகீம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:48 pm

கஸீதா
கஸீதாவின் கண்ணிகள் சில வேளை நூற்றுக்கும் மேற்பட்டு அமைவதுண்டு. கஸீதாவின் தன்மைகள் குறித்து எம்.ஆர். எம். கூறுகையில், “ஒரு சம்பூரணமான கஸீதாவில் மூன்று தன்மைகள் அமைந்திருக்க வேண்டும். முதலில் கவிஞர் தம் அன்பிற்குரியாளின் இல்லத்திற்குச் செல்வதையும், அது வெறிச்சோடிக் கிடப்பதையும் விவரிக்க வேண்டும். இரண்டாவதாக, தாம் ஒருவரிடம் பரிசு நாடிச் செல்லும் போது வழியிலுள்ள பாலையின் வருணனைகளையும், அங்குத் தாம் அனுபவிக்கும் துன்பங்களையும் விவரிப்பதோடு, காட்டு விலங்குகளோடு தம்முடைய ஒட்டகத்தை ஒப்பிட்டு வருணிக்கவும் வேண்டும். மூன்றாவதாக, தாம் எவரை மனதில் நினைத்தோமோ அவரைப் புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பாவியற்ற வேண்டும். இதுவே கஸீதாவின் முக்கிய பகுதியாகும்” என்கிறார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:49 pm

அமைப்பு
கஸீதாவின் அமைப்பு குறித்து மேலும், எம். ஆர். எம். கூறுகையில், கஸீதா முழுவதும் ஒரே சந்தத்தில் அமையப் பெற்றிருப்பதாலும் பாலை பற்றிய வருணனை திரும்பத்திரும்ப ஒரே மாதிரியாக ஆனால், வெவ்வேறு சொற்களில் வருவதாலும் படிப்பவர்களை மட்டுமல்லாது இதனை எழுதும் கவிஞர்களையும் அலுப்படையச் செய்கிறது. எனவேதான் துல்ரும்மா என்ற கவிஞர் தம்முடைய பிரசித்தி பெற்ற கஸீதாவின் முதலடியை மட்டும் எழுதி, பின்னர் கருத்து வராததன் காரணமாக அத்துடன் அதனை வைத்தார் என்றும், நெடுங்காலம் சென்ற பின் அவர் இஸஃபஹான் சென்றிருந்த போது திடீரெனப் புதிய கருத்துத் தோன்றவே அக்கஸீதாவை எழுதி முடித்தார் என்றும் கூறப்படுகிறது.
சில கவிஞர்கள் கஸீதா என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் கஸீதாவின் இலக்கணங்கள் அமையப் பெறவில்லை. மெய்ஞ்ஞானம் பற்றிய கஸீதாக்களும் அரபியில் இருக்கின்றன. ஒரு சூஃபி உறங்கும் போது, ‘மெய்ஞ்ஞானம் பற்றிக் கூறப்பட்டவைகளில் மோசூலிய கஸீதாவை விட மேலானது ஒன்றில்லை’ என்று கனவில் அசரீரியாக முழுங்குவதைச் செவியுற்றார் என்று கூறப்படுகிறது. இதனை எழுதியவர் மோசூலின் காஜியான அல்முர்த்தஜா என்பவராவார். அதில் ஒரு காதலன் தன் காதலியின் மீது கொண்டிருக்கும் மெய்ஞ்ஞானக் காதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.
கஸீதாவின் தொடக்கத்தில் இருக்கும் பகுதிக்கு ‘தஸ்பீப்’ என்று பெயர். இந்த தஸ்பீப் பகுதியில் தான் கஜலுக்கான உணர்வுகள், தன்மைகள், நயங்கள் காணப்படும். நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிகளாகக் கஸீதா பாடப்பெற்றன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:51 pm

கஜல் - சொற்பொருள் விளக்கம்
கஜல் என்ற அரபிச் சொல்லின் நேரடிப் பொருள் ‘மான்கண்’ என்பதாகும். ‘Gazelle’ என்ற சொல்லுக்கு வட ஆப்பிரிக்காவில் காணப்படும் சிறிய, மென்மைத் தன்மை வாய்ந்த மான் வகை என்பது பொருள். இவ்வகை மான்கள் ஆசியா, ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இவை, தம்முடைய அழகான உடலசைவுகளுக்காகவும், மென்மை வழியும் கண்களுக்காகவும் சிறப்போடு குறிப்பிடப்படுகின்றன61 என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது. கஜல் என்ற சொல்லுக்கு “வனப்பும், மென்னோக்குமுடைய சிறுமான் வகை; அரபிய நாட்டு மான்” என்று சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி எடுத்துக்காட்டுகிறது.

அகராதிப் பொருள்
அமெரிக்கானா பேரகராதியிலிருந்து, “கஜல் என்பது இஸ்லாமிய இலக்கிய வடிவம், பாடப்படும் கவிதைகளில் ஒரு வகையானவை, பொதுவாக அழகுணர்வோடும், சுருக்கமாகவும், சிறப்பாகக் காதல் குறித்துப் பாடப்படும் வடிவமாகும்” என்று அறிய முடிகிறது. பிரிட்டானிகா பேரகராதி, கஜல் என்பது காதலின் பரிமாணங்களைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் பாடல் வடிவமாகும் என்கிறது.

வழக்குப் பொருள்
எம்.ஆர்.எம். விளக்கியுரைக்கின்ற போது, “அரபிச் சொல்லான இதன் பொருள் பெண்களுடன் பேசுதல், காதல் மொழி பேசுதல் என்பதாகும். பிரிவாற்றாமை பற்றியும் காதலினால் எற்படும் விரக வேதனையைப் பற்றியும் எடுத்துரைக்கும் ஒரு வகைப் பாவினத்திற்கு இப்பெயர் கூறப்படுகின்றது” என்பார்.
இரா. முருகன் கூறுகையில், “பெண்ணிடம் பேசுவது என்ற பொருள் கொண்ட அந்தச் சொல் பெண்ணைப் பற்றி, காதல் பற்றி, பிரிவுத்துயர் பற்றி, அதை மறக்க மதுவில் மூழ்கும் சராசரி மனிதனை, சக்கரவர்த்தியைப் பற்றிய படைப்பாக நீட்சியடைகிறது” என்று அபுல்கலாம் ஆசாத்தின் கருத்தை எடுத்துரைக்கிறார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:53 pm

கஜல் இலக்கணம்
“உருது இலக்கியத்தில் கீத், நக்ம், ருபையாத், ஆஸாதி ஷாய்ரி, இப்படிப்பல வடிவங்கள் உள்ளன. இவற்றின் அமைப்புகள் பின்வருமாறு:
கீத் - பாடல்
நக்ம் - விருத்தம் (நக்மா-விருத்தம் போன்ற அழகி)
ருபை - நான்கு அடிகள் (ருபை ஒருமை, ருபையாத் பன்மை)
அஸாதி ஷாய்ரி - புதுக்கவிதை, நவீன கவிதை
மேலும், சூஃபியிசத்திலிருந்து உருவான கவ்வாலி என்னும் குழுப்பாட்டு கஸீதா எனும் புகழ்மாலை எனப்பல யாப்பு வகைகள் உருதுவில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தன்மையையும் சூழலையும் கொண்டவை. அஸாதிஷாய்ரி நீங்கலாக மற்ற அனைத்துக்கும் இலக்கணம் உண்டு” என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுகையில், “கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை” என்கிறார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:55 pm

ஷேர், மத்லா மற்றும் மக்தா

இரண்டடிகளைக் கொண்ட கண்ணிகள் ஷேர் எனப்படும். ஷேர்களின் தொகுப்பு கஜல் ஆகும். எப்படி வேண்டுமானாலும் அமைந்திருக்கும் ஷேர்களின் தொகுப்பு கஜலாகிவிடாது. கஜலுக்கென்று தனி இலக்கணம் இருக்கிறது.
“கஜலில் மிகவும் முக்கியமானவை, முதல் இரண்டு அடிகள். இவை தான் கஜலின் தன்மையையும். சூழலையும் ரசிகனுக்குச் சொல்லி ரசிகனின் மன நிலையை கஜலை அனுபவிப்பதற்கான சூழலுக்கு அழைத்துச் செல்கிறது. இந்த முதல் இரண்டு அடிகள், ஒரு ஷேர். உருதுவில் இதை மத்லா என்பார்கள். எத்தனை சீர்களை (சொற்களை) வேண்டுமானாலும் அது கொண்டிருக்கலாம்.
‘அப்னீ துன்மே ஏஹ்தாஹீன்
மே பீ தேரே ஜைய்ஸா ஹீன்’ (குலாம் அலி)
‘எனது தொனியில் ஒலிக்கின்றேன்
நானும் உனைப் போலிருக்கின்றேன்’
என்று மூன்று சீர்களைக் (சொற்களைக்) கொண்டும் இருக்கலாம்.
‘உன்ஸே நஸ்ரேன் க்யாமிலி ரோஷன் ஃபிஸாபேன் ஹோஜயே
ஆஜ் ஜானா ப்யார்கி ஜாதுகரி க்யா சீஸ் ஹை!’
‘அவளின் பார்வை படரும்போது ஒளியின் ஊர்வலங்களோ
காதல் தந்த வர்ணஜாலம் கண்ணில் வந்ததல்லவோ!’
என்று ஐந்து சீர்களைக் (சொற்களை) கொண்டும் இருக்கலாம்” என்பது தெளிவாகிறது. எனவே, முதல் அடியில் எத்தனை சீர்கள் (சொற்கள்) வருகின்றனவோ, அதே எண்ணிக்கை யிலும், தன்மையிலும் இரண்டாவது அடியின் சீர்கள் (சொற்கள்) அமைந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. கஜலின் எல்லா அடிகளும் ஒரே சந்தத்தில் அமைய வேண்டும். எனவே முதலிரண்டு அடிகள் மத்லா (உதிப்பு) எனப்படும். இறுதியிரண்டு அடிகள் மக்தா (முடிவு) எனப்படும். மக்தாவில் கவிஞர்கள் தங்கள் பெயரையும் அமைத்து எழுதுவதுண்டு.
“ஒவ்வொரு ஷேரின் இறுதி வார்த்தையும் ஒன்று போலவே ஒலிக்க வேண்டும். அதாவது கஜல் என்பது இயைபுத்தொடை,
‘குதா பீ ஹை
கபி பீ ஹை
நஹீன் கீ ஹை’
இப்படியானதாக அமைந்திட வேண்டும். முதல் கண்ணியில் சொல்லப்பட்ட வரிகளின் தொடராக அடுத்த கண்ணி இருக்க அனுமதி இல்லை. நமது யாப்பிலக்கண அடிப்படையில் கஜலின் இலக்கணத்தைப் பார்த்தால், தமிழில் குறள் ‘வெண்செந்துறை’ எனும் யாப்பினை ஒத்திருப்பதாக அறியலாம்”75 என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
“கண்ணிகள் 3,5,7,9,11... என்று ஒற்றைப் படையில் அமைய வேண்டும். முதலிரண்டு அடிகளின் இறுதிச் சீர்கள் (சொற்கள்) இயைபுத் தொடை பெற்று வரும். (Rhyme) அடுத்த ஒன்று விட்டு ஒன்று இயைபுத் தொடை பெற வேண்டும்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் எடுத்துரைத்துள்ளார்.

பெஹர்
“சீர்களின் அளவு பெஹர் ஆகும். இது அறுசீர், எழுசீர். எண்சீர் என அனைத்தையும் குறிக்கும் பொதுவான ஒரு சொல் ஆகும். நாம் சீர்களின் (சொற்கள்) எண்ணிக்கையைக் குறிப்பிடுவது போல் பெஹரில் ரமல், ரஜல், ஹஜஸ், முத்கரீப், கஃபீப் என்று அடிகளில் இருக்கும் வார்த்தைகளின் சந்தத்திற்கேற்பப் பெயர்கள் அமையும்” என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
அகா ஷாஹித் அலி கூறுகையில், உருதுவில் பத்தொன்பது பெஹர்கள் உள்ளன. அவைகள் நீளமான பெஹர், நடுத்தரமான பெஹர், சிறிய பெஹர் என்று மூன்று வகைப்படுத்தப்படும் என்கிறார்.

காஃபியா
அடிகளின் கடைசிச் சீர் (சொல்) காஃபியா ஆகும். இது இயைபுத் தொடையை ஒத்தது. (அடிகளின் கடைசிச் சீர்கள் (சொற்கள்) ஒன்றுபோல் ஒலிப்பது இயைபுத் தொடை), கஜலில் கண்ணிகளின் கடைசிச் சீர்கள் (சொற்கள்) ஒன்றுபோல ஒலிக்கும்.

ரதீஃப்
காஃபியாவுக்கு முன் நின்று, காஃபியாவின் அழுத்தத்தை அதிகப்படுத்தும் சொல் ஆகும். காஃபியா என்னும் இயைபைத் தொடந்து ஒலிக்கக் கூடிய இன்னொரு வார்த்தையும் ஓசை நயத்தில் அடுத்த அடிகளுடன் ஒன்றியிருக்க வேண்டும் என்ற கூடுதல் இலக்கணம் உண்டு. அதன் பெயர் ரதீஃப் ஆகும். உதாரணமாக,
‘ஹஸ்தி அப்னி ஹபாப்ஸீ ஹை’
‘உன் இயல்பு நீர்க்குமிழ்களோ’
‘யே நுமாயிஷ் ஷராப்ஸீ ஹை’
‘மதுக்கோப்பை மூடிய சிமிழ்களோ’
என்பதில் ஹபாப், ஷராப் இரண்டு காஃபியா. ஹை, ஹை இரண்டும் ரதீஃப். தமிழாக்கத்தில் குமிழ், சிமிழ் இரண்டும் காஃபியா, களோ, களோ இரண்டு ரதீஃப் ஆகும்” என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.

கண்ணிகள் (ஷேர்)
கஜலின் இரண்டு அடிகளுக்குள் இரண்டாவது அடியில் ஒரு திருப்பத்தைத் தந்து ‘வாஹ் வாஹ்’ போட வைக்கும் தன்மையுள்ளவை இந்தக் கண்ணிகளாகும். கவிக்கோ அப்துல் ரகுமான் கண்ணிகளின் வீச்சுக்குத் தருகின்ற உதாரணம் கீழ் பின்வருமாறு:
‘மர்ளேகே பாத்பி மேரே ஆங்க்கேன் குலி ரஹேன்’
‘இறந்த பின்னும் என் இமைகள் திறந்தே இருக்கும்’
இந்த அடியை நான்கைந்து முறை திரும்பத் திரும்பப் பாடுவார்கள். இதனால் அடுத்த அடியில் என்னதான் சொல்லப் போகிறார் எனும் ஆர்வம் ரசிகனிடம் எழுந்து விடும். மெதுவாக,
‘ஆதத்ஸே படுகயித்தி இனிகா இந்த்ஸார்கா’
‘வழக்கமாகிப் போனது அவள் வருகையைத் தேடி!’
இப்படி ஒரு விடையைச் சொன்னதும், அரங்கத்தில் ‘வாஹ் வாஹ்’க்கள் அலை மோதும். இது தான் கஜல் கண்ணிகளின் பலம். கவிஞர் கமர் ஜலாலாபாதியின் இந்த வரிகளை மக்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், பாடகர் பாடும்போது கூடவே அவர்களும் ‘வாஹ் வாஹ்’ சொல்லி ரசனையூட்டுவார்கள். மேலும்,
‘துபா பஹார்கி மாங்கீத்தோ இத்னே பஹீல் கிலேன்’
‘வரங்கேட்டேன் வசந்தத்தில் இத்தனை பூக்கள் பூத்தன’
பிறகு என்ன நடந்தது என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டு, புன்னகை இழையோட,
‘கயீன் ஜகா ராமிலினா ஆஷியானே கோ!’
‘காதலிக்கவும் இடமில்லாமல் எங்கும் பூக்கள் பூக்கள்!’
என்ற கண்ணிகளை எடுத்துக் காட்டுகளாகத் தருகின்றார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:56 pm

கஜலின் உள்ளடக்கம் - கருப்பொருள் - பாடுபொருள்

கவிக்கோ கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள் பற்றி கூறுகையில், சில வல்லெழுத்து ஒலிகளையும், மெய் இரட்டிப்பதையும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் காதலின் துயரத்தால் ஏங்கித் துடிக்கும் காதலன், காதலியை விளித்துக் கூறுகின்ற முறையிலேயே அமையும். காதலியின் சௌந்தர்யம், தவிக்க வைக்கும் பண்பு, காயம்பட்ட இதயத்தின் வேதனை என்ற தொனியில் கருத்துக்கள் அமையும். காதலியை விளிப்பது என்ற தொடர்பு தவிறக் கண்ணிகளிடையே கருத்துத் தொடர்பு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது கஜல் ஆகாது. (காதல் உலகில் ஒன்றிற்கொன்று தொடர்பற்ற உணர்ச்சி வசப்பட்ட உலவாக் கட்டுரைகளே பேசப்படும் என்ற ஆழ்ந்த உண்மையைக் குறிப்பால் உணர்த்தும் நுணுக்கமான வரையறை இது) பதினேழு மரபான சந்த விகற்பங்களும், இருபத்தாறு, அதற்கும் மேற்பட்ட புதிய சந்த விகற்பங்களும் கஜலுக்கு உண்டு. விட்டில்-விளக்கு, பூ-புல்; சபை (மஹயில்); இலட்சிய அடைவிடம் (மன்சில்), கடல்-நீர்த்துளி; மதுக்கடை-மது பரிமாறுகிறவன்; வசந்தம்-இலையுதிர் காலம்; முள்; கூடு; நீர்ச்சுழல், புயல், கரை, தோணி போன்ற ஏராளமான படிமங்களும் குறியீடுகளும் இதில் கையாளப்படும்” என்று தெளிவாக விரித்துரைக்கிறார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:58 pm

அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், தமிழில் கஜல் அறிமுகமாவதற்கு கஜலின் புறவடிவம் அவசியமற்றது என்று விளக்கமளித்து ‘புதுக்கவிதை’யின் புறவடிவத்தில் கஜல் கண்ணிகளை மொழியாக்கம் செய்தார். அதோடு தாமே கஜல் கண்ணிகளைப் புணைந்து புதுக்கவிதை வடிவத்தில் ‘நட்சத்திரப் பாடகன்’ என்ற தலைப்பில் ‘பாக்யா’ இதழில் ஜனவரி 1998 முதல் நூறு வாரங்கள் தொடர் கவிதைகளை எழுதி வந்தார். அவைகளைத் தொகுத்து ‘மின்மினிகளால் ஒரு கடிதம்’ என்ற தலைப்பில் தமிழில் முதல் கஜல் தொகுப்பை 2002ல் வெளியிட்டுத் தமிழ்க் கவிதை உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதனையடுத்து ‘ரகசியப்பூ’ என்ற கஜல் தொகுப்பை 2005ல் வெளியிட்டார். இதில் உள்ள கண்ணிகளில் காதல், இறைஞானத்தை நோக்கிப் பயணிக்கிறது. மேலும், மனித உணர்வுகளின் பரிமாணம் பலவகையில் விரிவடைகிறது. இவ்வாறு புதுக்கவிதை வடிவத்தில் கஜல் துளிர்விட்டுப் படிப்படியாக வளர்ந்து பூப்படைந்ததை ஏ.எஸ்.சஜ்ஜாத் புகாரி எடுத்துரைக்கிறார். (சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள் (முன்னுரை - ஏ.எஸ்.சஜ்ஜாத் புகாரி), ப.5.)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 7:00 pm

தமிழ்க் கஸல் கவிதையின் வடிவம் - பேராசிரியர் ஸ்டான்லி ஜோன்ஸ் கருணாகரன் அவர்களின் கஸல் குறித்த ஆய்வுக் குறிப்புகள் - நன்றி

தமிழ்க் கஸல் கவிதைகளின் புறவடிவம் புதுக்கவிதை வடிவிலும், கஸலின் மரபு வடிவிலும் காணப்படுகின்றது. அப்துல் ரகுமான், வைரபாரதி மற்றும் ம. ரமேஷ் மூவரும் புதுக்கவிதையின் புற அமைப்பில் தமது கஸல் கவிதைகளைப் படைத்துள்ளனர். ஈரோடு தமிழன்பனும், சென்னிமலை தண்டபாணியும் கஸலின் மரபு வடிவத்தில் கஸல்களைப் படைத்தளித்துள்ளனர்.

கஸலின் மரபு வடிவத்தில் படைத்தளித்துள்ள கஸல் கண்ணிகள் சந்த அமைப்பை சார்ந்த கவிதைகளாகவும் கண்ணகளின் இறுதியில் இயைபு தொடையை கொண்டும் காணப்படுகின்றது. ஆனால், ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணியின் கஸல்களில், கஸலின் மரபான புறவடிவ இலக்கணம் முழுமையும் கொண்டு வர முடியவில்லை என்பதை தமிழ்க் கஜல் கவிஞர்,
“கஜல் பிறைகள் என்னும் இத்தொகுப்பில் புறக்கட்டமைப்பைக் கைவிட்டுவிடாமல் பெருமளவுக்கு உள்வாங்கி இடம்பெறச் செய்திருக்கிறேன். தமிழ் மொழிக்கேற்ப, என் விருப்பத்திற்கேற்ப தமிழ்க் கஜல் தேவைக்கு ஏற்ப சிற்சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். கூடவே, பாடத் தக்கவையாகவும் இக்கஜல்களை ஆக்க முயன்றுள்ளேன்” (ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.5) என்ற தமிழன்பனின் கூற்றாலும் அறியலாம். மேலும்,
“உருது கவிதைகளில் ‘காஃபியா’ எனும் இயைபுச் சொல்லின் இலக்கணம் துல்லியமானதும் கனக்கச்சிதமானதுமாக உள்ளது. தமிழில் இயைபுத் தொடைக்கு அத்தகைய இறுக்கம் வழக்கில் இல்லை எனலாம். ஆகையால் உருது கஜல்களில் வரும் ‘காஃபியா’வின் அமைப்பிற்குப் பழக்கப்பட்டவர்கள் தமிழ் கஜலில் வரும் இயைபு தொடையின் அமைப்பால் நெருடலுக்கு ஆளாகலாம்” (சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்த்த கஜல்கள், ப.11) என்கின்றார் உனக்காக உதிர்த்த கஜல்கள் என்னும் சென்னிமலை தண்டபாணியின் நூலுக்கு அணிந்துரை வழங்கிய ஏ.எஸ்.சஜ்ஜாத் புகாரி.
எனவேதான், கஸலின் புற வடிவத்தைத் தமிழுக்குக் கொண்டி வருவதில் சிக்கல் எழுகின்றது என்பதை உணர்ந்துதான் அப்துல் ரகுமான் கஸலின் புறவடிவத்தைப் புதுக்கவிதையின் அமைப்பில் தந்துள்ளார்.

ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணியின் கஸல்களில், கஸலின் மரபான புறவடிவத்தில் வெளிப்படும் காதலின் இன்பம், துன்பம், வலி, வேதனை, கண்ணீரின் துயரம், காதலின் நினைவுகள், இணைவு, பிரிவு, மரணம், இறைச் சிந்தனைகள், தத்துவக் கருத்துகளைவிட புதுக்கவிதையின் புற அமைப்பில் அமைந்த தமிழ் கஸல் கவிதைகள் நேரடியாக அவர்களின் கருத்துக்களை அதே அழுத்தத்தில் வெளிப்படுத்துவதில் முன்நிற்கின்றன.

அப்துல் ரகுமான், வைரபாரதி, ம. ரமேஷின் கஸல் கவிதைகளின் புற அமைப்பில் பெரும்பான்மையும் ஒரு கஸலுக்கு மூன்று கண்ணிகளை அமைத்து தந்துள்ளார்கள். அப்துல் ரகுமான் ஒரு இரண்டு கண்ணிகளும், மற்றொரு கஸலில் நான்கு கண்ணிகளைப் படைத்துள்ளார். வைரபாரதியின் கஸல் தொகுப்பில் ஒரு கஸில் இரண்டு கண்ணிகளைப் படைத்துள்ளார். கஸலின் புற அமைப்பில் கண்ணிகள் ஒற்றைப்படையில் அமைய வேண்டும் என்பது இலக்கணமாகின்றது. அந்த இலக்கணத்தை மேற்கண்ட இரு கவிஞர்களும் ஓரிரு கஸலில் மீறியுள்ளனர். ம.ரமேஷின் கஸல் கவிதைகள் அனைத்தும் ஒரு கஸலுக்கு மூன்று கண்ணிகள் கொண்ட அமைப்பை கொண்டு காணப்படுகின்றது.
மேற்கண்ட மூவரின், ஒவ்வொரு கஸல் கண்ணியும் இரண்டு வரிகள் முதல் ஏழு வரிகள் வரை கொண்டு அமைந்துள்ளது.

ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணியின் கஸல் கண்ணிகளில் கஸல்களின் கண்ணிகள் குறைந்த அளவாக மூன்று கண்ணிகளையும் அதிக அளவாக எட்டு கண்ணிகளையும் கொண்டுள்ளது. இவ்விருவரின் பெரும்பான்மையான கஜல்கள் இரட்டைப்படையில் அமைந்துள்ளன. ஒற்றைப்படையில் அமைய வேண்டும் என்ற கஜல் இலக்கணத்தை புறக்கணித்துள்ளனர். அவ்வாறு புறக்கணித்திருப்பதால் கஜலின் இயல்பும் பொருற் குறைபாடுமின்றியும் காணப்படுவது சிறப்புக்குரியதாகக் காணப்படுகின்றது. எனவே, தமிழ்க் கஸலுக்கு அடி எண்ணிக்கை அவசியமற்றது என்பதையும் அறிய முடிகின்றது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ரௌத்திரன் Wed May 06, 2015 4:55 pm

இத்தனைதூரம் மெனக்கெட்டு நேரம் ஒதுக்கிக் கற்றுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி தோழர் ரமேஷ் அவர்களே!

தோழர் தமிழினியன் அவர்களுக்கும் இப்போது கஸல் பற்றி அதிகத் தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். தோழர் ரமேஷ் அவர்கள் அளவுக்கு துல்லியமாகவும் புள்ளிவிவரங்களோடும் இத்தனைத் தெளிவாய் கஸல் பற்றிய விளக்கங்கள் என்னால் தந்திருக்க முடியாது என்பதனாலேயே நான் தனியாக விளக்கம் அளிக்கவில்லை. மேலும் கவிதை இலக்கணங்களை நான் ஏடுகளால் புரிந்துகொண்டவனல்ல. உணர்வுகளால் புரிந்துகொண்டவன். இலக்கிய அறிவோ இலக்கண அறிவோ எனக்கு அறவே கிடையாது என்பதை நான் எப்போதும் மறைக்க நினைத்ததில்லை.

எட்டு வயதில் என்னை மயக்கிய கலைமகள் எனக்கு எட்டாப் பொருளாய் எட்டியே நின்றாள். பத்தாம் வகுப்பில் தமிழில் பள்ளியின் முதல் மாணவனாய் வந்தும் எனக்கு விதிக்கப்பட்டது என்னவோ இஞ்ஜினியரிங் படிக்கத்தான். 20 வயதில் காதலில் தோற்று வாழ்வை வெறுத்து குடிபோதையில் மூழ்கி கெட்டுச் சீரழிந்து 22 வயதில் தற்கொலைக்கு முயன்ற போது லட்சியம் வந்தது. கலைமகள் நான் சாக முடிவெடுத்த நேரத்தில் என்னை நெருங்கினாள். சாவைத் தள்ளி வைத்துப் பேனா பிடித்தேன். அதுவரை நான் இலக்கிய இலக்கணங்களைக் கற்றதில்லை. பிறகோ லட்சியத்தால் நான் வேலைவிட்டுத் தெருவுக்கு வந்ததால் புத்தகங்களை வாங்கவோ கணினி வாங்கவோ என்னிடம் பணம் இருக்கவில்லை. இப்போது எனக்கு 28 வயது. என் 27 வயதுவரை நான் எதையும் படிக்க வாய்ப்பிலாத சூழலில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். பிறகு இந்த எழுத்து எப்படி வந்தது? அது இறைவன் எனக்கு அளித்த வரமாக இருக்கலாம் அல்லது சாபமாக இருக்கலாம். எனது அனுபவங்களும் என்னை உறங்கவிடாத உணர்ச்சிகளுமே எனது கவிதைகள். வாழ்க்கையி்ல்  நான் கண்ட தோல்விகளும் அவமானங்களும் மற்றவர்களின் துரோகங்களும் நிராகரிப்புகளும் நான் செய்த குற்றங்களுமே எனது எழுத்துகள்.

நான் படித்ததெல்லாம் பாரதியும் கண்ணதாசனும் தான். அவர்களே எனது எழுத்தின் நாயகர்கள். அவர்களும் அதிகம் படிக்காதவர்களே. 8 வயதில் கவிதை பாடியபோது 10 வயதில் பாரதி என்று பட்டம் சூட்டப் பெற்றபோது அந்தச் சின்னப்பையன் எத்தனை இலக்கியங்களை படித்துக் கிழித்திருப்பான்? கவிதை ஏட்டுப்படிப்பால் பெறமுடியாத வரம் என்பதே சத்தியம்.

"பாரதிக்கு சங்க இலக்கியங்கள் தெரியாது. இலக்கண அறிவு என்று எடுத்துக்கொண்டால் அதில் பாரதி பூஜ்ஜியம்" இது பாரதியின் நெருங்கிய நண்பர் எழுதியது (புதுச்சேரியில் பாரதி வாழ்ந்தபோது பழகியவர்).

எனது இலக்கண அறிவும் பூஜ்ஜியமே!
நன்றி! ----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ஸ்ரீராம் Wed May 06, 2015 5:02 pm

பாரதிக்கு சங்க இலக்கியங்கள் தெரியாது. இலக்கண அறிவு என்று எடுத்துக்கொண்டால் அதில் பாரதி பூஜ்ஜியம்" இது பாரதியின் நெருங்கிய நண்பர் எழுதியது (புதுச்சேரியில் பாரதி வாழ்ந்தபோது பழகியவர்).

அட அப்படியா? நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 07, 2015 7:36 am

தோழர் தமிழினியன் அவர்களுக்கும் இப்போது கஸல் பற்றி அதிகத் தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். தோழர் ரமேஷ் அவர்கள் அளவுக்கு துல்லியமாகவும் புள்ளிவிவரங்களோடும் இத்தனைத் தெளிவாய் கஸல் பற்றிய விளக்கங்கள் என்னால் தந்திருக்க முடியாது என்பதனாலேயே நான் தனியாக விளக்கம் அளிக்கவில்லை. மேலும் கவிதை இலக்கணங்களை நான் ஏடுகளால் புரிந்துகொண்டவனல்ல. உணர்வுகளால் புரிந்துகொண்டவன். இலக்கிய அறிவோ இலக்கண அறிவோ எனக்கு அறவே கிடையாது என்பதை நான் எப்போதும் மறைக்க நினைத்ததில்லை.

உண்மைதான் கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை... அதன் உணர்ச்சிதான் முக்கியம்...

நான் டாக்டர் பட்டத்திற்காக ஆய்வு செய்தபோதுதான் அனைத்து கவிதை வகைமையையும் அறிய முடிந்தது...

தங்களின் சுய விமர்சனத்தை இன்றுதான் அறிகிறேன்.

காதல் தோல்வி என்பது பெரிய விபத்தல்ல... எல்லாரும் அதை கடந்துதான் போக வேண்டும்... அது ஒரு பாடம் அவ்வளவே... யாருக்கும் உண்மையான காதல் கிடைத்துவிடுவதில்லை... யாதார்ததம் என்ற வாழ்வு ஒன்று இருக்கிறதே... வாழ்ந்துதான் ஆக வேண்டும்...

மனம் தெளிவு பெறுவோம்... வலிகளை கவிதைகளாய் படையுங்கள்... நாம் காலத்தால் வாழ்வோம்...

வளம் பெறுவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ரௌத்திரன் Thu May 07, 2015 12:10 pm

உண்மைதான் தோழர் ரமேஷ் அவர்களே! காதலால் கவிதைக்குத்தான் லாபமே ஒழிய வாழ்க்கைக்கு அல்ல. காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ளும் கண்மூடித்தனங்களை எல்லாம் கடந்து வந்துவிட்டேன். அதற்குப் பிறகு மீண்டும் காதல் வந்தது. அதுவும் தோல்விதான். நீங்களும் நானும் முதல்முறை கைப்பேசியில் உரையாடிய போது நான் காதலித்துக் கொண்டுதான் இருந்தேன். சென்னையில் பசியும் பட்டினியுமாய்ப் பிச்சைக்கார கோலத்தில் உலாவிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்தக் காதலும் தோற்றுத்தான் போனது.

தமிழா நானா எது முக்கியம் என்று முடிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தமிழை நம்ப நான் தயாராக இல்லை என் வாழ்க்கை இருண்டு போகும் என்று அவள் இன்னொருவரை மணந்துகொண்டு போய்விட்டாள். வலிகள் இல்லாமல் இல்லை என்றாலும் எனக்கு லட்சியம் உண்டு. எதை இழந்தாலும் என் உயிரை இழக்கும்வரை நான் லட்சியத்திற்காக, எனக்குள் இருக்கும் தமிழுக்காக வாழ்ந்தாக வேண்டும்.

அந்தப் பிரிவின் போது எழுதிய பல கவிதைகளில் ஒன்றுதான் "செத்துவிட மாட்டேன் போ" மற்றும் "நான் மரிப்பதில்லை"
-------- ----- --------
------ ------
நாடிநரம் பத்தனையும்
ஓடிவிளை யாடுதமிழ்
கூடிவரச் செய்யுமடி நாட்டை -இவன்
புகழ்பாடி நிரப்புமடி ஏட்டை!

சூழ்நிலைதான் என்செய்யும்?
சூழ்வினைதான் என்செய்யும்?
ஊழ்வினையும் ஒதுங்குமடி கண்டு -அந்த
வலிமையிவன் தமிழுக்கே உண்டு!

விழுதுவிடத் தமிழ்விருட்ஷம்
எழுதிவிட வந்தவன்காண்
புழுதிபட மறைந்திடாத கவிஞன் -இவன்
புதிய பாரதிகளின் தலைவன்!

இவன்கொண்ட கர்வமிது
இவன்கொண்ட கர்வமன்று
தமிழ்கொண்ட ஆண்மையெனக் கூறு -இது
தமிழன்னை எனக்களித்த சீரு!
------ ------ -----
------- -------
சுற்றுமண்ட சராசரமாய்
சுழன்றுவிழ மானுடமே
பெற்றுவந்தேன் புலமையெனும் சாட்டை -நான்
சாவதில்லை முத்தமிழின் கோட்டை!

ஆணவத்தில் எழுதியதல்ல. இது அழுதுகொண்டு எழுதியது. நன்றி!
---------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 07, 2015 1:56 pm

என்ன ஒரு வருத்தம் என்றால்... தமிழைக் கொண்டு இன்று ஒரு எளியவன் (உங்களைப் போன்ற எண்ணற்றோர்) முன்னேறிவிட முடியாது என்பது உண்மைதானே... தங்களுக்குப் பொறியியல் படிப்பே வாழ்க்கைக்கு உத்தரவாதமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இடைப்பட்ட நேரங்களில் திரைப்பட வாய்ப்பை தேடுவதே சால சிறந்தது...

என் நண்பன் ஒருவனும் திரைப்படத் துறையில் அப்படித்தான் முன்னேறாமலேயே இருக்கிறான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by ரௌத்திரன் Thu May 07, 2015 7:10 pm

நீங்கள் சொல்வது உண்மைதான் தோழரே! ஆனால் இனி நான் திரும்ப முடியாது. ஒரே வழிதான். அது வென்றே ஆகவேண்டும் என்பதுதான். இலக்கியம்-சினிமா இரண்டிலும் நான் வென்று நின்று நிலைத்தே ஆக வேண்டும் வேறு வழியில்லை. "இவருக்கு பாட்டெழுதும் திறமை இல்லை. அந்த லட்சணங்கள் இவர் எழுத்தில் இல்லை" என்று எம்.எஸ்.வியால் நிராகரிக்கப்பட்ட வாலி அதே சினிமாவில் 15000 பாடல்களை எழுதினார். ஆனாலும் அவர்கள் கதை வேறுதான். காரணம் என் தலைமுறையில் தமிழ்சினிமா பாடல்களின் "தரம்" என் போன்ற கவிஞர்களால் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துதான் காணப்படுகிறது.

கலைஞர் கருணாநிதி வாழ்வில் நடந்த நிகழ்வுதான் இப்போது நான் இருக்கும் நிலை. அவரும் அவர் நண்பரும் ஆற்றிலே நீந்திக்கொண்டிருக்கிறார்கள். பாதி ஆற்றை நீந்தி முடித்த நேரம் அவர் நண்பருக்கு வலிப்பு வரத் தொடங்கியதாம். "கருணாநிதி இனிமேல் என்னால் நீந்த முடியாது. கரைக்குப் போய்விடலாம்" என்றாராம். கலைஞர் சொன்னாராம், "தென்னன்...நாம் பாதி ஆற்றிலே இருக்கிறோம். திரும்பிப் போனாலும் அதே தூரம் மீண்டும் நீந்தியாக வேண்டும். அதே நீச்சலை எதிர்திசையில் போட்டால் அக்கரையைச் சேர்ந்துவிடலாம்"! கலைஞரின் எண்ணமே எனது எண்ணமும்.

இனிமேல் திரும்பினால் எனக்கு மட்டுமல்ல என் தமிழுக்கு அசிங்கம். என்னைப் பெற்றவர்களுக்கு அசிங்கம். உன் தமிழ் செல்லாக் காசென்று சொல்லிச் சென்றவர்களுக்கும் எள்ளி நகையாடுபவர்களுக்கும்.."என் தமிழ் வருஷத்திற்கு வருஷம் செல்லாக்காசாய்ப் போகும் நிக்கல் நாணயமல்ல.. எந்தக் காலத்திலும் செல்லும் தங்கக் காசென்று" காட்டியாக வேண்டும்!

இன்று எனது வாழ்க்கை வானில் அமாவாசை என்பதை நான் உணராமல் இல்லை. ஆனால், அமாவாசை என்பது தேய்பிறைகளின் முடிவு. இன்று அமாவாசை என்றால் நாளை முதல் வளர்பிறை என்று அர்த்தம்! நன்றி!
-----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 08, 2015 2:14 pm

வெற்றி பெற வாழ்த்துகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்... - Page 5 Empty Re: கவிதை எழுதுவது எப்படி? விவரமாக சொல்லுங்க பிளீஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum