தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரலாற்றில் இன்று

Page 3 of 24 Previous  1, 2, 3, 4 ... 13 ... 24  Next

View previous topic View next topic Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Nov 01, 2012 11:54 am

First topic message reminder :

நவம்பர் 01


1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.

1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.



1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.


1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.


1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.


194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.


1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.


1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.


2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.

[You must be registered and logged in to see this link.]

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down


வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by பூ.சசிகுமார் Mon Nov 19, 2012 5:48 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Nov 20, 2012 10:39 am

நவம்பர் 19
[You must be registered and logged in to see this image.] 1941: இரண்டாம் உலக யுத்தத்தில் அவுஸ்திரேலிய கப்பலொன்றும் ஜேர்மனிய கப்பலொன்றும் ஒன்றையொன்று மூழ்கடித்ததால் 645 அவுஸ்திரேலியர்களும் 77 ஜேர்மனியர்களும் பலி.

1943: மேற்கு உக்ரேனில் நாஸி தடுப்பு முகாமிலிருந்து யூதர்கள் தப்பியோடும் முயற்சி தோல்வியுற்றபின் 6000 இற்கு மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1946: ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஐ.நாவில் இணைந்தன.

1969: சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச்சென்ற இரண்டாவது விண்கலம் (அப்பலோ 12 பயணம்) சந்திரனில் தரையிறங்கியது.

1969: பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் பேலே தனது 1000 ஆவது கோலை அடித்தார்.

1977: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ததன் மூலம் அங்கு சென்று முதலாவது அரபு தலைவரானார்.

1977: போர்த்துக்கல் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 500 பேர் பலி.

1984: மெக்ஸிகோவில் எரிபொருள் களஞ்சியமொன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் சுமார் 500 பேர் பலி.

1985: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் முதல் தடவையாக சந்தித்தனர்.

1988: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனிடம் மோனிகா லூவின்ஸ்கி விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் குற்றவியல் விசாரணை ஆரம்பம்.

2005: மஹிந்த ராஜபக்ஷ முதல் தடவையாக இலங்கையின் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Nov 20, 2012 10:39 am

நவம்பர் 20
1789: உரிமைகள் சட்டத்தை அங்கீகரித்ததன் மூலம் நியூ ஜேர்ஸி, அமெரிக்காவின் முதலாவது மாநிலமாகியது.

1917: உக்ரைன் குடியரசாகியது.

1945: நாஸி போர்க் குற்றவாளிகள் 24 பேருக்கு எதிராக நியூரம்பேர்கில் விசாரணை ஆரம்பமாகியது.

1947: பிரிட்டனில் இளவரசி எலிஸபெத்துக்கும் (தற்போதைய ராணியார்) லெப்டினன்ட் பிலிப் மௌன்ட் பேட்டனுக்கும் திருமணம் நடைபெற்றது.
[You must be registered and logged in to see this image.]

1969: அமெரிக்காவின் கிளீவர் பிளெய்ன் டீலர் பத்தரிகை வியட்நாமின் மை லாய் கிராம படுகொலைகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டது.

1979: சவூதி அரேபியாவின் மக்கா நகரில் 6000 ஹஜ் யாத்திரிகள் தீவிரவாத குழுவொன்றினால் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். சவூதி அரேபிய அரசாங்கம் பிரான்ஸிடமிருந்து விசேட படைகளைப் பெற்று இதை முறியடித்தது.

1985: மைக்ரோசொப்ட் வேர்சன் 1.0 வெளியாகியது.

1995: இளவரசி டயானா தனது குதிரையோட்டப் பயிற்றுநர் ஜேம்ஸ் வெயிட்டுடன் முறையற்ற தொடர்பிருப்பதை பி.பி.சி. பேட்டியொன்றில் ஒப்புக்கொண்டார்.

1998: கென்யா, தான்ஸானியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கில் ஒசாமா பின் லாடன் 'ஒரு பாவமும் செய்யாத மனிதர்' என தலிபான் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தான் நீதிமன்றமொன்று பிரகடனம் செய்தது.

1998: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதலாவது மாதிரி விண்ணுக்கு ஏவப்பட்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 10:42 am

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Nov 21, 2012 10:32 am

நவம்பர் 21

1272: இங்கிலாந்தில் மூன்றாம் ஹென்றி இறந்ததையடுத்து அவரின் மகன் எட்வர்ட்ஸ் மன்னரானார்.

1783: பாரிஸ் நகரில் ஜீன் பிரான்கோயிஸ் பிலாட்ரே டி ரோஸியரும் பிரான்ஸிஸ்கோ மார்கியூஸும் முதலாவது வெப்ப வாயு பலூன் பயணத்தை மேற்கொண்டனர்.

1877: தோமஸ் அல்வா எடிஸன் போர்னோகிராவ் ஒலிப்பதிவுக் கருவியை கண்டுபிடித்தமை குறித்து அறிவித்தார்.

1922: அமெரிக்காவில் ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ரெபேக்கா லடிமேர் பெல்டன் எனும் பெண் அந்நாட்டின் முதலாவது செனட்டராக பதவிப்பிரமாணம் செய்தார்.

1942: அமெரிக்கப் பெருநிலப்பரப்பையும் கனடாவுக் ஊடாக அலாஸ்கா மாநிலத்தையும் இணைக்கும் 2000 கிலோமீற்றருக்கும் அதிக நீளமான அலாஸ்கா நெடுஞ்சாலை நிர்hமாணித்து முடிக்கப்பட்டது.

1962: சீன - இந்திய யுத்தத்தில் சீனா ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தம் செய்தது.

1971: பங்களாதேஷ் சுதந்திரப் போரில் முதல் சமர்களில் ஒனறான காரிபூர் சமரில் பாகிஸ்தான் படையினரை முக்திபாஹினி கெரில்லாக்களின் உதவியுடன் இந்திய படையினர் தோற்கடித்தனர்.

1979: பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகம் தீக்கிரையாக்கப்பட்டது. 5 பேர் பலி.

1980: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநிலத்தில் கேளிக்கை விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 87 பேர் பலி.

1995: பொஸ்னியா - ஹேர்சகோவினா மோதல்களுக்கு சமாதான தீர்வுகாண சேர்பிய, குரோஷிய, பொஸ்னிய தலைவர்கள் அமெரிக்காவில் வைத்து இணங்கினர்.

1996: நேட்டோவில் இணையுமாறு பல்கேரியா,எஸ்டோனியா, லத்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா ஆகியவற்றுக்கு நேட்டோ அழைப்பு விடுத்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by பூ.சசிகுமார் Wed Nov 21, 2012 12:01 pm

அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by செந்தில் Wed Nov 21, 2012 12:13 pm

சூப்பர் தகவலுக்கு நன்றி உயிர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by மகா பிரபு Wed Nov 21, 2012 3:00 pm

செந்தில் wrote: சூப்பர் தகவலுக்கு நன்றி உயிர்
உயிர் இல்லை அண்ணா. மொகைதீன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by பூ.சசிகுமார் Wed Nov 21, 2012 9:18 pm

அண்ணா நானும் சொல்லி சொல்லி நொந்து போயிடன் என்னால முடியல

கண்ணீர் வடி

அவருக்கு எப்போதும் இந்த உயிரின் நினைப்பு தான் அண்ணா

நன்றி செந்தில் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by மகா பிரபு Thu Nov 22, 2012 7:32 am

என் உயிர் நீயே wrote:அண்ணா நானும் சொல்லி சொல்லி நொந்து போயிடன் என்னால முடியல

கண்ணீர் வடி

அவருக்கு எப்போதும் இந்த உயிரின் நினைப்பு தான் அண்ணா

நன்றி செந்தில் அண்ணா
லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Fri Nov 23, 2012 3:46 am

நவம்பர் 22

1963: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி டல்லாஸ் நகரில் காரொன்றில் பயணம் செய்யும்போது துப்பாக்கிதாரியொருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1986: 20 வயதான மைக் டைசன், ட்ரேவர் பேர்பிக்கை தோற்கடித்து உலகின் மிக இளம் அதிபார குத்துச்சண்டை சம்பியன் எனும் பெருமைக்குரியவரானார்.

1990: பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து மார்கரெட் விலகினார்.

2002: நைஜீரியாவில் உலக அழகுராணிப்போட்டியில் பங்குபற்றுபவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

2003: உலகக்கிண்ணத் றக்பி தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி சம்பியனாகியது.

2005: ஜேர்மனியின் முதலாவது பெண் சான்ஸ்லராக ஏஞ்சலா மார்கெல் பதவியேற்றார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Fri Nov 23, 2012 3:50 am

நவம்பர் 23
800 - பாப்பரசர் மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.

1248 - காஸ்டிலின் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவில் நகரைக் கைப்பற்றினர்.

1499 - இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.

1889 - Juke Box எனப்படும் இசைத்தட்டு இயந்திரத்தைப் முதன் முதலில் கண்டுபிடித்து நிறுவிக் காட்டியவர் லூயிஸ் கிளாஸ். சான்பிரான்சிஸ்கோவில் நிகழ்ந்தது
1890 - நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

1936 - முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.

1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.

1971 - மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1990 - ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.

1998 - கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.

2005 - லைபீரியாவின் தலைவராக எலென் ஜோன்சன்-சேர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.

2007 - அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by நண்பன் Fri Nov 23, 2012 1:10 pm

வரலாறு தொடரட்டும் சூப்பர்
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by மகா பிரபு Fri Nov 23, 2012 5:12 pm

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by பூ.சசிகுமார் Fri Nov 23, 2012 5:27 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Nov 24, 2012 1:14 pm

நவம்பர் 24

படிவளர்ச்சி நாள்
1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1642 - டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிந்த ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
1859 - சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
1914 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
1926 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.
1940 - இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டன.
1965 - ஜோசப் மொபுட்டு கொங்கோவின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர் 1971 இல் கொங்கோவின் பெயரை சாயீர் என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின் 1997 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1969 - சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1971 - வாஷிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் பாரசூட்டுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
1977 - கிரீசில் கண்டுபிடிக்கப்பட்ட சமாதி மாசிடோனிய மன்னர் இரண்டாம் பிலிப்பினுடையது. அவர் கி.மு.336 ல் கொலை செய்யப்பட்டார்.
1992 - யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
2002 - ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
2006 - சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by மகா பிரபு Sat Nov 24, 2012 1:33 pm

தகவலுக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by பூ.சசிகுமார் Sat Nov 24, 2012 5:08 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Nov 25, 2012 3:52 pm

நவம்பர் 25

நவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்

1343: டேர்ஹேனியன் கடலில் ஏற்பட்ட சுனாமியினால் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரம், அமல்பி [You must be registered and logged in to see this image.]குடியரசு உட்பட பல இடங்கள் அழிந்தன.

1667: தற்போதைய அஸர்பைஜானிலள்ள ஷேமாகா பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 80 ஆயிரம் பேர் பலியாகினர்.

1703: தெற்கு பிரிட்டனில் பாரிய சூறாவளியினால் 9000 பேர் பலி.

1839: இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கோதாவரியில் சூறாவளி தாக்கியதால் சுமார் 3 லட்சம் பேர்பலி.

1963: சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி கென்னடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

1973: கிறீஸ் நாட்டில் ஜோர்ஸ் பபாடோபொலஸ் தலைமையிலனா அரசாங்கம் படையினரின் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Mon Nov 26, 2012 10:20 am

நவம்பர் 26
1944: ஜேர்மனியின் வி-2 ரொக்கட் மூலம் பிரிட்டனில் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டதில் 168 பேர் பலி.


1944: பெல்ஜியத்தின் மீது ஜேர்மனி வி-2 ரொக்கட் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது.


1949: டாக்டர் பி.ஆர். அம்பேத்காரினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பை இந்திய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

[You must be registered and logged in to see this image.]
1950: கொரிய யுத்ததத்தில் தென்கொரியா மற்றும் ஐ.நா. படைகளுக்கு எதிராக சீனா பாரிய தாக்குதல்களை ஆரம்பித்தது.


1954: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார்.


1965:அஸ்டெரிஸ்-1 செய்மதியை சஹாரா பாலைவனத்தில் வைத்து ஏவியதன் மூலம் செய்திமதியை ஏவிய மூன்றாவது நாடாகியது பிரான்ஸ்.


1983: லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 6800 தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன.


1990: விண்கலங்களை ஏற்றிச்செல்லும் டெல்டா –ii ரொக்கட் தனது முதல் பறப்பை ஆரம்பித்தது.


2008: மும்பையில் தொடர் தாக்குதல்களில் 175 பேர் பலி, 300 இற்கும் அதிகமானோர் காயம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by மகா பிரபு Mon Nov 26, 2012 12:35 pm

தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Nov 27, 2012 10:59 am

நவம்பர் 27
[You must be registered and logged in to see this image.]1895: தனது சொத்துக்களில் 94 சதவீதம் நோபல் பரிசை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தனது கடைசி உயிலில் அல்பிரட் நோபல் கையெழுத்திட்டார்.

1944: பிரித்தானிய விமானப்படை ஆயுதக் களஞ்சியமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 70 பேர் பலி.

1964: அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்துமாறும் ஆயுதக்களைவை ஆரம்பிக்குமாறும் அமெரிக்கா, சோவியத் யூனியனிடம் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கோரினார்.

1975: கின்னஸ் சாதனை நூல் ஸ்தாபகரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான ரோஸ் மெக்வேர்டர் லண்டனில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1983: ஸ்பெய்னின் மட்ரிட் நகருக்கு அருகில் விமானம் வீழ்ந்ததால் 181 பேர் பலி.

1999: நியூஸிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக ஹெலன் கிளார்க் தெரிவானார்.

2005: உலகின் முதலாவது பகுதியளவு முகமாற்றுச் சிகிச்சை பிரான்ஸில் நடைபெற்றது.

2006: ஐக்கிய கனடாவுக்குள் கியூபெக் ஒரு தேசமாக இருக்குமென்ற பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் முன்மொழிவை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by ஸ்ரீராம் Tue Nov 27, 2012 11:42 am

அருமை தொகுப்புகள்... நன்றி தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Nov 28, 2012 1:34 pm

நவம்பர் 28




  • 1520 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
  • 1729 - மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.
  • 1821 - பனாமா இசுபெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
  • 1843 - அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
  • 1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
  • 1905 - ஐரிசு தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
  • 1912 - அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1918 - புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.
  • 1922 - வானில் வண்ணப் புகையைப் கொண்டு எழுத்துக்களை உருவாக்கும் கலை முதன் முறையாகச் செய்து காட்டப்பட்டது. Cyril Turner கண்டுபிடித்த அந்த முறை வர்த்தக ரீதியில் பயன்படத் தொடங்கியது.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: செர்மனியையும், சப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க சனாதிபதி பிராங்கிளின் உரூசுவெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்சுடன் சேர்ச்சில், இரசிய அதிபர் சோசப் தாலின் ஆகிய மூவரும் டெஃக்ஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
  • 1948 - உடனடியாக ஒளிப்படம் எடுத்துக் கொடுக்கும் Polaroid Camera முதன் முதலாக பா
  • சுட்டன் நகரில் விற்பனைக்கு வந்தது.
  • 1958 - சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
  • 1960 - மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
  • 1964 - நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
  • 1967 - சுயமரியாதைத் திருமணச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
  • 1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1989 - பனிப்போர்: செக்கொசிலவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிசுட் கட்சி அறிவித்தது.
  • 1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
  • 1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
  • 1991 - தெற்கு ஒசேத்தியா சியார்சியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
  • 2006 - நாசாவின் நியூ அரைசன்ஸகு தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Nov 29, 2012 4:36 pm

நவம்பர்
29



  • 1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
  • 1830 - போலந்தில் இரசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
  • 1855 - துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்சு நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
  • 1877 - தோமசு அல்வா எடிசன் ஒலிவரைவி (போனோகிராஃப்) என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
  • 1915 - கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.
  • 1922 -அவார்டு கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையைப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விட்டார்.
  • 1929 - அமெரிக்க கடற் படையைச் சேர்ந்த அட்மிரல் ரிச்சர்ட் பைர்ட், பெர்ன்ட் பால்கன் எனும் விமானியுடன் முதன் முதலாகத் தென் துருவத்தை விமானம் மூலம் கடந்து சாதனை படைத்தார்.
  • 1945 - யூகொசுலாவிய சமசுட்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
  • 1947 - பாலசுதீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
  • 1948 - இந்தியாவில் 'தீண்டாமை ஒழிப்புச் சட்டம்' நிறைவேற்றப்பட்டது.
  • 1950 - வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
  • 1961 - நாசாவின் மேர்க்குரி-அட்லசு 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).
  • 1982 - ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிசுதானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
  • 2006 - அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய சாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிசுதான் வெற்றிகரமாக நடத்தியது
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 3 Empty Re: வரலாற்றில் இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 24 Previous  1, 2, 3, 4 ... 13 ... 24  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum