by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
No user |
வரலாற்றில் இன்று
Page 13 of 24 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 24
வரலாற்றில் இன்று
நவம்பர் 01
1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.
1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.
1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.
1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.
1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.
194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.
1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.
1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.
1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.
1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.
2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1702: இங்கிலாந்தின் முதலாவது தேசிய நாளிதழான த டெய்லி கரண்டின் முதல் பதிப்பு வெளியாகியது.
1917: முதலாம் உலகப் போரில் பாக்தாத் பிராந்தியம் ஆங்கிலோ இந்திய படைகளிடம் வீழ்ந்தது.
1985: மிகைல் கொர்பசேவ், சோவியத் யூனியன் தலைவரானார்.
[You must be registered and logged in to see this image.]1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1990: சிலியில், பட்றிசியொ அய்ல்வின் 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானார்.
2004: ஸ்பெய்னின் மட்ரிட் நகர ரயில்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 191 பேர் பலியாகினர்.
2006: சிலியின் முதல் பெண் ஜனாதிபதியாக மிச்சேல் பாச்செலட் பதவியேற்றார்.
2009: ஜேர்மனியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் பலி.
2011: ஜப்பானின் புகுஷிமா பிராந்தியத்திற்கு அருகில் ஏற்பட்ட 9.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை தொடர்ந்து தாக்கிய சுனாமியினால் சுமார் 20,000 பேர் பலியாகினர். இதன்போது அணுக்கதிர்வீச்சு கசிவும் ஏற்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]1881: ஸ்கொட்லாந்து கால்பந்தாட்ட வீரர் அன்ட்ரூ வட்ஸன் சர்வதேச கால்பந்தாட்ட அணியொன்றுக்கு தலைமை தாங்கிய முதலாவது கறுப்பின வீரரானார்.
1913: கான்பரா நகரம் அவுஸ்திரேலியாவின் எதிர்கால தலைநகராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. (1927 ஆம் ஆண்டுவரை மெல்போர்ன் தற்காலிக தலைநகராக இருந்தது.)
1918: 215 ஆண்டுகளாக சென் பீற்றர்ஸ்பர்க் ரஷ்யாவின் தலைநகராக இருந்தபின் மொஸ்கோ புதிய தலைநகராக்கப்பட்டது.
1928: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அணைக்கட்டொன்று உடைந்ததால் 600 பேர் பலி.
1930: இந்தியாவில் மகாத்மா காந்தி 200 மைல் தூரம் கொண்ட உப்பு பாதயாத்திரையை ஆரம்பித்தார்.
1938: ஜேர்மனிய படைகள் ஆஸ்திரியாவைக் கைப்பற்றின.
1966: இந்தோனேஷியாவில் சுஹார்டோ ஜனாதிபதியானார்.
1968: மொரிஷியஸ் சுதந்திரம் பெற்றது.
1993: இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற தொடர்குண்டுவெடிப்புகளால் சுமார் 300 பேர் பலி.
2004: தென்கொரிய ஜனாதிபதி ரூ மூ ஹையுனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1781: வில்லியம் ஹேர்செல் என்பவர் யுரானஸ் கிரகத்தை கண்டுபிடித்தார்.
1955: நேபாள மன்னர் திரிபுவன் இறந்தார்.[You must be registered and logged in to see this image.]
1809: சுவீடனில் நான்காம் கஸ்டோவ் மன்னர் புரட்சியொன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.
1881: ரஷ்யாவில் இரண்டாம் அலெக்ஸாண்டர் மன்னர் வெடிகுண்டு வீசப்பட்டு இறந்தார்.
1940: ரஷ்ய – சீன யுத்தம் முடிவுற்றது.
1957: கியூப ஜனாதிபதி படிஸ்டாவை கொல்வதற்கு மாணவ புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் தோல்வியுற்றது.
1988: உலகின் மிக நீளமான கடலடி சுரங்கப்பாதை ஜப்பானின் அமோரி தீவுக்கும் ஹக்கோடேட் தீவுக்கும் இடையில் திறக்கப்பட்டது.1992: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 500 பேர் பலி.
1997: நிமிர்ந்த நிலையில் நடந்த மனிதனின் மூன்றரை லட்சம் வருடங்கள் பழைமை வாய்ந்த காலடித்தடம் இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]313: சீன சக்கரவர்த்தி ஜின் ஹியூய்டி ஸியோங்ஸு மாநில ஆட்சியாளரால் கொல்லப்பட்டார்.
1951: கொரிய யுத்தத்தின்போது ஐ.நா. படைகள் இரண்டாவது தடவையாக சியோல் நகரை கைப்பற்றின.
1979: சீன விமான விபத்தில் சுமார் 200 பேர் பலி.
1980: போலந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 87 பேர் பலி.
1984: பிரிட்டனில் சின் பெய்ன் இயக்கத் தலைவர் ஜெரி அடம்ஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தார்.
2008: திபெத்தில் தலைநகர் லசா மற்றும் ஏனைய இடங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
கி.மு.44: ரோம ஆட்சியாளர் ஜுலியஸ் சீசர், புரூட்டஸினால் குத்திக்கொல்லப்பட்டார்.
1943: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது முதல் அமெரிக்கப் பயணத்தின்பின் ஸ்பெய்னுக்குத் திரும்பினார்.
1776: தென் கரோலினா, சுதந்திரப் பிரகடனம் செய்த முதல் அமெரிக்க காலனியாகியது.[You must be registered and logged in to see this image.]
1887: உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்போர்னில் நடைபெற்றது.
1917:ரஷ்யாவில் சார் மன்னன் இரண்டாம் நிக்கலஸ் ஆட்சிப்பொறுப்பை துறந்தவுடன் அவரின் சகோதரர் மன்னரானர்.
1922: பிரிட்டனிடமிருந்து எகிப்து சுதந்திரம் பெற்றது.
1985: உலகின் முதலாவது இணையத் தள பெயர் ([You must be registered and logged in to see this link.]) பதிவுசெய்யப்பட்டது.
1985: சோவியத் யூனியனின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக மிகைல் கொர்பசேவ் தெரிவானார்.
2004: பாடசாலைகளில் மதச்சின்னங்களை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி ஜக் சிராக் கையெழுத்திட்டார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1906: சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 3886 பேர் பலியாகினர்.
[You must be registered and logged in to see this image.]1913: ஜப்பானில் பல்கலைக்கழகத்திற்கு முதல் தடவையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
1945: ஜப்பானிய பிரதமர் கன்டாரோ சுசுகியை படுகொலைசெய்வதற்கு முயற்சிக்கப்பட்டது.
1945: சீனாவின் கடைசி மன்னனான மன்சுகுவோ, சோவியத் படையினரால் கைது செய்யப்பட்டார்.
1946: இந்தியாவின் கொல்கத்தா நகரில் பாரிய கலவரம் ஏற்பட்டது. இதனால் 72 மணித்தியாலங்களில் சுமார் 4000 பேர் பலியாகினர்.
1960: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1960: அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் கிட்டின்ஜர் 102,800 அடி உயரத்திலிருந்து பரசூட்டில் குதித்து சாதனை படைத்தார்.
1962: இந்தியாவில் பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
2003: உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீன் சவூதி அரேபியாவில் காலமானார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
624: பத்ர் சமரில், முஹம்மது நபிகள் நாயகம் தலைமையிலான மதீனா முஸ்லிம்கள், மக்காவின் குராயிஸ்களை தோற்கடித்தனர்.
1805: இத்தாலிய குடியரசு, நெப்போலியனை மன்னனாகக் கொண்டு இத்தாலிய ராச்சியமாகியது.
1845: இறப்பர் பாண்ட்டிற்கு காப்புரிமை வழங்கப்பட்டது.
1891: ஜிப்ரால்டர் வளைகுடாவில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் 562 பேர் பலி.
[You must be registered and logged in to see this image.]1957: பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோமன் மக்சேசே உட்பட 25 பேர் பலி.
1959: திபெத்திலிருந்து 14 ஆவது தலாய் லாமா டென்ஸின் கியாட்ஸோ இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
1969: இத்தாலியின் முதல் பெண் பிரதமராக கோல்ட்டா மேயர் பதவியேற்றார்.
1969: வியட்நாம் யுத்தத்தில் 'மை லாய் படுகொலைகள்' தொடர்பான தகவல்களை மறைத்தமைக்காக அமெரிக்க இராணுவத்தின் 14 உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
1988: கம்போடிய விமான விபத்தில் 143 பேர் பலி.
1992: ஆர்ஜென்டீனாவில் இஸ்ரேலிய தூதரகம் மீது கார் குண்டுத் தாக்குதல் 242 பேர் பலி.
1996: உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சம்பியனாகியது
2000: உகண்டாவில் மத அமைப்பொன்றின் தூண்டுதலில் சுமார் 800 பேர் இறந்தனர். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சபொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
2003: பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் ரொபின் குக், ஈராக் மீதான படையெடுப்பை அடுத்து ராஜினாமா செய்தார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1913: கிறீஸ் நாட்டில் 50 வருடங்களாக ஆட்சியிலிருந்த மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை செய்யப்பட்டார்.
1921: போலந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இரண்டாவது சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட[You must be registered and logged in to see this image.]து,
1922: இந்தியாவில் மகாத்மா காந்திக்கு சிவில் ஒத்துழையாமை நடவடிக்கை காரணமாக 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1937: லண்டன் பாடசாலை குண்டுவெடிப்பொன்றில் சுமார் 300 பேர் பலி.
1945: இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் மீது 1250 அமெரிக்க விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தின.
1953: துருக்கிய பூகம்பத்தில் 250 பேர் பலி.
1971: பெரு மண்சரிவில் 200 பேர் பலி.
1989: எகிப்தில் 4400 வருட பழைமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டது.
1996: பிலிப்பைன்ஸ் இரவு விடுதி தீ விபத்தில் 162 பேர் பலி.
2003: பிரித்தானிய சைகை மொழி, பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1279 | யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது. |
1861 | நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது. | |
1915 | புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை. | |
1918 | நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது. | |
1932 | சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. | |
1944 | இரண்டாம் உலகப் போர்: நாசி படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றினர். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் யூஎஸ்எஸ் பிராங்கிளின் என்ற அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் கொல்லப்பட்டனர். | |
1972 | இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. | |
1982 | போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர். | |
1988 | இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார். | |
2002 | ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்தது. | |
2004 | தாய்வான் பிரதமர் சென் ஷூயி-பியான் சூட்டுக் காயப்படுத்தப்பட்டார். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 0044 | கிமு 44 - ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. |
1602 | டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. | |
1616 | சேர் வால்ட்டர் ரலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் லண்டனில் விடுவிக்கப்பட்டார். | |
1739 | நாதிர் ஷா டில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான். | |
1760 | பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது. | |
1815 | எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி "நூறு நாட்கள்" ஆட்சியை ஆரம்பித்தான். | |
1961 | மேற்கு ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது. | |
1916 | அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார். | |
1934 | ஜப்பானில் ஹாக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்து சுமார் 2,165 பேர் கொல்லப்பட்டனர். | |
1942 | போலந்தில் ஸ்ஜியேர்ஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். | |
1942 | மேற்கு உக்ரேனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினார் கொல்லப்பட்டனர். | |
1948 | சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது. | |
1953 | இலங்கையைச் சேர்ந்த நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக்கடந்தார். | |
1956 | பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது. | |
1974 | லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. | |
1988 | எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர். | |
1995 | டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர். | |
2003 | ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது. |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1413 | ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். |
1556 | கண்டர்பரி பேராயர் தொமஸ் கிரான்மர் ஒக்ஸ்போர்ட் நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார். | |
1788 | லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர். | |
1800 | ரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, வெனிஸ் நகரில் ஏழாம் பயஸ் பாப்பரசராகப் பதவியேற்றார். | |
1801 | பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது. | |
1844 | பஹாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். | |
1857 | டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். | |
1905 | ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது புகழ் பெற்ற சிறப்புச் சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார். | |
1913 | ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் கொல்லப்பட்டு 20,000 வீடுகள் அழிந்தன. | |
1917 | டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது. | |
1933 | டேச்சு வதை முகாம், நாசிகளின் முதலாவது வதை முகாம், ஜெர்மனியில் அமைக்கப்பட்டது. | |
1935 | பேர்சியா நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தனர். | |
1948 | முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார். | |
1960 | நிறவெறி: தென்னாபிரிக்காவில் ஷார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர். | |
1970 | முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜோசப் அலியோட்டோ விடுத்தார். | |
1980 | ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மொஸ்கோவில் 1980 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார். | |
1984 | மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டினர். | |
1990 | 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது. | |
1994 | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கிய Schindler's List ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்றது. | |
1998 | புனித வெள்ளி உடன்பாடு வடக்கு அயர்லாந்தில் எட்டப்பட்டது. |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1622 | வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர். |
1829 | கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியன வரையறுத்தன. | |
1873 | புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது. | |
1895 | முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள். | |
1939 | இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது. | |
1943 | இரண்டாம் உலகப் போர்: பெலாரசின் காட்டின் நகர மக்கள் அனைவரும் நாசி ஆதிக்கவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். | |
1945 | அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது. | |
1960 | ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள். | |
1965 | இலங்கையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது. | |
1993 | இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது. | |
1995 | சோவியத் விண்வெளிவீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார். | |
1997 | ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது. | |
2004 | ஹமாஸ் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான அஹமது யாசின் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். | |
2006 | பாஸ்க் ஆயுதக்குழு ஈடிஏ காலவரையறையற்ற போர் நிறுத்தத்தை அறிவித்தது. |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1752 | கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது. |
1801 | ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னன் வாள் ஒன்றினால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். | |
1816 | அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர். | |
1848 | நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர். | |
1857 | எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார். | |
1868 | கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. | |
1903 | ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர். | |
1919 | இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். | |
1931 | இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். | |
1933 | ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது. | |
1940 | முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது. | |
1942 | இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர். | |
1956 | பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது. | |
1965 | ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது. | |
1966 | தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது. | |
1982 | குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது. | |
1994 | சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர். | |
1996 | தாய்வானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | |
1998 | டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. | |
2001 | ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது. |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1878 | பிரித்தானியக் கப்பல் HMS யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர். |
1882 | காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார். | |
1923 | கிறீஸ் குடியரசாகியது. | |
1944 | ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர். | |
1944 | இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்மனிய சிறைய்யில் இருந்ட்து 76 போர்க் கைதிகள் தப்பித்தனர். | |
1947 | மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார். | |
1965 | டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. | |
1965 | நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது. | |
1972 | ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது. | |
1998 | இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர். | |
1999 | கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொஸ்லாவியாவில் வான் தாக்குதலை நடத்தின. | |
1999 | பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1584 | வேர்ஜீனியா மாநிலத்தை பயன்படுத்த அல்லது சுரண்ட சேர் வால்ட்டர் ரேலி காப்புரிமம் பெற்றார். |
1634 | மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தனர். | |
1655 | டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார். | |
1807 | அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது. | |
1821 | (ஜூலியன் நாள்காட்டி) ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் ஆரம்பமானது. | |
1857 | பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார். | |
1911 | நியூயோர்க் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்காள் கொல்லப்பட்டனர். | |
1918 | பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது. | |
1941 | இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யூகொஸ்லாவியா இணைந்தது. | |
1947 | இலினோயில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் 111 பேர் கொல்லப்பட்டனர். | |
1949 | எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர். | |
1953 | ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். | |
1954 | முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000). | |
1957 | மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, மற்றும் லக்சம்பேர்க் ஆகியன இணைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது. | |
1965 | மனித உரிமைவாதி மார்ட்டின் லூதர் கிங் தனது 4-நாள் 50-மைல் எதிப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார். | |
1971 | வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர். | |
1975 | சவுதி மன்னர் ஃபைசால் தனது மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார். | |
1990 | நியூயோர்க் நகரில் சட்டமுரணான சமூக விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 87 பேர் கொல்லப்பட்டனர். | |
1992 | சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1199 | இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் பிரான்சை முற்றுகையிடும்போது படுகாயமடைந்தான். 11 நாட்களின் பின்னர் இவன் இறந்தான். |
1431 | பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது. | |
1552 | குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார். | |
1812 | வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் நிலநடுக்கத்தில் அழிந்தது. | |
1871 | இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர். | |
1872 | கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. | |
1917 | முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது. | |
1934 | ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது. | |
1942 | இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் முதற்தடவையாக பெண்கள் சிறைக்கைதிகளாயினர். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: ஜப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. | |
1953 | ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார். | |
1958 | ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர். | |
1971 | கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேச விடுதலைப் போர் ஆரம்பமானது. | |
1979 | இஸ்ரேல்-எகிப்து அமைதி ஒப்பந்தம் வாஷிங்டனில் கைச்சாத்தானது. | |
1997 | சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன. | |
1998 | அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். | |
2000 | விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார். | |
2005 | தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம். | |
2006 | முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. | |
2006 | மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது. | |
2007 | கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின. |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1513 | நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன் வட அமெரிகாவைக் (புளோரிடா) கண்ணுற்றார். |
1625 | முதலாம் சார்ல்ஸ் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லந்து மன்னராக முடி சூடினார். அத்துடன் பிரான்ஸ் மன்னனாகவும் தன்னை அறிவித்தார். | |
1854 | கிரிமியாப் போர்: ஐக்கிய இராச்சியம் ரஷ்யா மீது போரை அறிவித்தது. | |
1890 | கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் கொல்லப்பட்டனர். | |
1918 | மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன. | |
1941 | இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் அச்சு அணிஆதரவு அரசாங்கம் யூகொஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது. | |
1958 | நிக்கிட்டா குருஷேவ் சோவியத் பிரதமர் ஆனார். | |
1964 | அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது. | |
1968 | விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார். | |
1969 | நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது. | |
1970 | கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது. | |
1977 | இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர். | |
1980 | நோர்வேயின் எண்ணெய்த் தாங்கி ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் கொல்லப்பட்டனர். | |
1993 | ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார். | |
1994 | அலபாமாவில் சூறாவளி தாக்கியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 0193 | ரோம் பேரரசன் பேர்ட்டினாக்ஸ் படுகொலை செய்யப்பட்டான். |
0845 | ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் வைக்கிங் தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது. | |
1802 | ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார். | |
1809 | மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்ஸ் ஸ்பெயினை வென்றது. | |
1879 | ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர். | |
1930 | கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன. | |
1939 | ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான். | |
1979 | ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. | |
1988 | ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. | |
1994 | தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். | |
2005 | இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300 பேர் கொல்லப்பட்டனர். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1632 | கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. |
1792 | 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் இறந்தான். | |
1807 | 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார். | |
1831 | துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது. | |
1849 | பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது. | |
1857 | பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது. | |
1867 | கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார். | |
1879 | ஆங்கிலோ-சூலு போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர். | |
1886 | ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது. | |
1971 | மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான். | |
1973 | வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர். | |
1974 | நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது. | |
2004 | பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன. | |
2004 | அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது. | |
2005 | யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது. | |
2007 | கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது. | |
2008 | பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது. |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 0240 | கி.மு :ஹேலியின் வால்வெள்ளி பற்றிய முதலாவது பதிவு. |
1492 | ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. | |
1814 | நெப்போலியனுக்கு எதிரான போரில் கூட்டுப் படைகள் பாரிஸ் நகரை அடைந்தனர். | |
1822 | ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது. | |
1831 | யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன. | |
1842 | அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது. | |
1851 | ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. | |
1858 | அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது. | |
1867 | அலாஸ்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²), ரஷ்யாவின் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் II இடமிருந்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளர் வில்லியம் செவார்ட் கொள்வனவு செய்தார். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஆஸ்திரியாவினுள் நுழைந்து வியன்னா நகரைக் கைப்பற்றினர். | |
1949 | ஐஸ்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரெய்க்ஜாவிக் நகரில் கலவரம் இடம்பெற்றது. | |
1965 | வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கத் தூதராலயத்திற்கு முன்னால் தானுந்துக் குண்டொன்று வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர். | |
1981 | அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1492 | ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார். |
1866 | சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது. | |
1885 | இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது. | |
1889 | ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. | |
1909 | பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது. | |
1917 | ஐக்கிய அமெரிக்கா டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது. | |
1918 | ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. | |
1931 | நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். | |
1942 | இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் கிறிஸ்துமஸ் தீவை பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது. | |
1951 | யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது. | |
1959 | திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார். | |
1966 | சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும். | |
1970 | 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது. | |
1979 | கடைசி பிரித்தானியப் படையினர் மோல்ட்டாவை விட்டு விலகினர். மோல்ட்டா விடுதலையை அறிவித்தது. | |
1990 | இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது. | |
2004 | கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது. | |
2007 | முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது. |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
325: சீனாவில் 4 வயதான ஜின் செங்டி தனது மன்னராக நியமிக்கப்பட்டார்.
1867: சிங்கப்பூர் பிரிட்டனின் காலனியாகியது.
1873: பிரித்தானிய கப்பலொன்று மூழ்கியதால் 547 பேர் பலி.
1918: பிரித்தனரிய விமானப்படை உருவாக்ப்பட்டது.
1924: ஜேர்மனியில் அடோல்வ் ஹிட்லர் கிளர்சியில் பங்கேற்றமைக்காக 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1946: ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் 159 பேர் பலி.
1949: அயர்லாந்து குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1957: சுவிட்ஸர்லாந்தில் 'நூடில்ஸ் பயிர்ச்செய்கை' நடைபெறுவதகா பிபிசியில் ஒளிபரப்பான ஏப்ரல் முட்டாள் தின விவரணமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1979: ஈரானை இஸ்லாமிய குடியரசாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் 98 சதவீதமானோர் ஆதரவளித்து வாக்களித்தனர்.
1992: பொஸ்னிய யுத்தம் ஆரம்பமானது.
2001: யுத்த குற்றச்சாட்டுக்குள்ளான யூகோஸ்லாவிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் சரணடைந்தார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1801: நெப்போலியனின் படைகளிடம் வீழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் டென்மார்க் கடற்படைக் கப்பல்களை பிரிட்டன் தாக்கி அழித்தது.
1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக போர் பிரகடனம் செய்யுமாறு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன் கோரினார்.
1982: பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள பாக்லாந்து தீவுகள் மீது ஆர்ஜென்டீனா படையெடுத்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் 655 ஆர்ஜென்டீன படையினரும் 255 பிரித்தானிய படையினரும் பலியாகினர்.
2005: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் இறையடி எய்தினார்.
2011: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1917: அஞ்ஞான வாசம் புரிந்த விளாடிமிர் லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பினார். ரஷ்ய புரட்சியின் ஆரம்பத்தில் இது முக்கிய நிகழ்வாகும்.
1948: 16 நாடுகளுக்கு 5 பில்லியன் டொலர் உதவியளிக்கும் மார்ஷல் திட்டத்தில் அமெரக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் கையெழுத்திட்டார்.
1973: முதலாவது செல்லிட தொலைபெசி அழைப்பை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது. மோட்டரோலா நிறுவன ஆராய்ச்சியாளர் பெல் கூப்பர் இந்த அழைப்பை மேற்கொண்டார்.
1974: அமெரிக்கா, கனடாவில் ஏற்பட்ட சூறாவளியினால் 315 பேர் பலி 5,500 பேர் காயம்.
1982: பாக்லாந்து தீவுகளை ஆர்ஜென்டீனாவிடமிருந்து மீட்க பிரிட்டன் கடற்படையை அனுப்பியது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 13 of 24 • 1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 24
» வரலாற்றில் இன்று Today in History
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிரோஷிமா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #2
» பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3