by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
No user |
வரலாற்றில் இன்று
Page 21 of 24 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24
வரலாற்றில் இன்று
நவம்பர் 01
1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.
1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.
1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.
1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.
1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.
194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.
1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.
1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.
1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.
1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.
2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.
1893: வாகனங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்த முதல் நாடாகியது பிரான்ஸ்.
1900 -ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.
1908 – முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.
1912 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் நிக்கராகுவாவை முற்றுகையிட்டனர்.
1916: ஆஸ்திரிய -ஹங்கேரி மீது ருமேனியா போர்ப்பிரகடனம் செய்தது.
1921 – தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.
1937 – ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1945 – பசிபிக் போர் முடிவுற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.
[You must be registered and logged in to see this image.]1947 – பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1969 – வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
1973: பாகிஸ்தான் அரசியலமைப்பு அமுலுக்கு வந்தது.
1974: சைபிரஸ் மீது துருக்கி படையெடுத்தது.
1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
2006 – இஸ்ரேல் – லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
2006 – முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
நிகழ்வுகள்
1040 - ஸ்கொட்லாந்தின் மன்னன் முதலாம் டங்கன் மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான்.
1057 - ஸ்கொட்லாந்தின் மன்னன் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில் கொல்லப்பட்டான்.
1915 - பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
1920 - வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சரணடைந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: கொரியா விடுதலை பெற்றது.
1947 - முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார்.
1947 - இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடாகியது. ஜவகர்லால் நேரு முதலாவது தலைமை அமைச்சர் ஆனார்.
1948 - தென் கொரியா உருவாக்கப்பட்டது.
1950 - அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர்.
1960 - கொங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1973 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.
1975 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.
1977 - இலங்கையில் தமிழருக்கெதிரான இனப்படுகொலை நடவடிக்கையான ஆவணிப் படுகொலை ஆரம்பித்தது. 400ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 10,000 பேர் வரை காயமடைந்தனர்.
1984 - துருக்கியில் குர்து மக்கள், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, இராணுவத்திற்கெதிராக கெரில்லா போரை ஆரம்பித்தன்னர்.
2005 - இந்தோனேசிய அரசாங்கத்துக்கும் ஆச்சே விடுதலை இயக்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹெல்சிங்கியில் கைச்சாத்தானது.
2007 - பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1769 - நெப்போலியன் பொனபார்ட், பிரெஞ்சு மன்னன் (இ. 1821)
1872 - ஸ்ரீ அரவிந்தர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஆன்மிகவாதி (இ.1950)
1958 - அர்ஜூன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1961 - சுஹாசினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1975 - ஷேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேச அதிபர் (பி. 1920)
சிறப்பு நாள்
இந்தியா - விடுதலை நாள் (1947)
தென் கொரியா - விடுதலை நாள் (1948)
கொங்கோ - விடுதலை நாள் (1960)
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் பிரெஞ்சுப் படைகளை வென்றான்.
1780 – தென் கரோலினாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகாளை வென்றனர்.
1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1865 – 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.
1868 – பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது.
1945 – சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான்.
1964 – தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவியகற்றப்பட்டார்.
1987 – அமெரிக்காவின் மிச்சிகனில் MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
2005 – வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
2006 – இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1969: அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் சூறாவளியினால் 248 பேர் பலி.
1979: சோவியத் யூனியனின் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதால் 156 பேர் பலி.
1988: பாகிஸ்தான் விமானமொன்று விபத்துக்குள்ளானதால், அதில் பயணம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி முஹமட் ஸியா உல் ஹக், அமெரிக்கத் தூதுவர் ஆர்னோல்ட் ரபேல் ஆகியோர் பலியாகினர்.
1988: வெள்ளை மாளிகை பணிப்பெண்ணான மோனிகா லெவின்ஸ்கியுடன் தகாத தொடர்பு வைத்திருந்ததை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அந்நாட்டு மக்களிடம் ஒப்புக்கொண்டார்.
1999: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 17,000 பேர் பலியாகினர்.
2005: பங்களாதேஷில் 300 இடங்களில் சுமார் 500 குண்டுகள் வெடித்தன.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]1917: கிறீஸ் நாடடி;ன் தெஸலோனிகி நகரில் ஏற்பட்ட தீயின் காரணமாக சுமார் 70,000 வீடுகள் அழந்தன.
1920:அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது.
1971: வியட்நாமிலிருந்து அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் தமது படைகளை வாபஸ் பெற்றன.
2005: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மின்சார தடங்கல் காரணமாக சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
2008: பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரவ், எதிர்கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ராஜினாமா செய்தார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]1944: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மன் படைகளிடமிருந்து பாரிஸ் நகரம் விடுவிக்கப்பட்டது.
1945: வியட்நாமில் ஹோ சி மின் தலைமையிலான வியட் மின்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
1980: சவூதி அரேபிய விமானமொன்று ரியாத் நகரில் அவசரமாக தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானதால் 301 பேர் பலி.
1981: லிபியாவின் இரு போர் விமானங்களை சிட்ரா குடாவுக்கு மேலாக அமெரிக்க விமானங்கள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின.
1991: சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவின் அரசாங்கத்திற்கு எதிராக சதிப்புரட்சி இடம்பெற்றது. கொர்பசேவ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
2002: செச்னிய படையினரின் ஏவுகணைத் தாக்குதலில் ரஷ்ய ஹெலிகொப்டர் சிக்கியதால் 118 படையினர் பலி.
2003: ஈராக்கில் ஐ.நா. தலைமையகம் மீது நடந்த கார் குண்டுத் தாக்குதலில் ஈராக்கிற்கான ஐ.நா. தூதுவர் சேர்ஜியோ வியேரா டி மெலோ உட்பட 22 பேர் பலியாகினர்.
2009: ஈராக்கில் நடந்த தொடர்குண்டுவெடிப்புகளில் 101 பேர் பலி 565 பேர் காயம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]636: காலித் இபின் அல் வலித் தலைமையிலான அரேபிய படைகள் சிரியா, பலஸ்தீன் பிராந்தியங்களi பைஸான்டைன் பேரரசிடமிருந்து கைப்பற்றின.
1858: சார்ள்ஸ் டார்வின் இயற்கைத் தேர்வுமூலமான கூர்ப்புக்கொள்கையை வெளியிட்டார்.
1866:அமெரிக்க சிவில் யுத்தம் முடிவுற்றதாக அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் அறிவித்தார்.
1940: சோவியத் செஞ்சேனையின் ஸ்தாபகத் தலைவரான லியோன் ட்ரொஸ்கி, மெக்ஸிகோவில் ஸ்டாலினின் முகவர் ஒருவரினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
1988: 8 வருடகால ஈரான் - ஈராக் யுத்தத்திற்குப் பின் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
1991: சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு எதிரான சதிப்புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சோவியத் நாடாளுமன்றத்திற்கு வெளியே சுமார் ஒரு லட்சம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நாடாளுமன்ற கட்டித்தை தாக்கினர்.
ஆப்கானிஸ்தான், சூடானில் அல் கயீடான நிலைகள் என சந்தேகிக்கப்பட்ட இடங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
2002: ஸ்பெய்னில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 146 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1770: அவுஸ்;திரேலியாவின் கிழக்கு பிராந்தியம் பிரிட்டனுக்கு சொந்தமானது என பிரகடனப்படுத்திய ஜேம்ஸ் குக், அப்பகுதிக்கு நியூ சௌத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.
[You must be registered and logged in to see this image.]1879: அயர்லாந்தில் கன்னி மரியாள் காட்சி கொடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
1959: அமெரிக்காவின் 50 ஆவது மாநிலமாக ஹவாய் இணைக்கப்பட்டது.
1968: செக்கஸ்லோவாக்கியாவின் மீது சோவியத் யூனியன் படையெடுத்தது.
1982: லெபனானிற்கு சரவ்தேச கண்காணிப்பு படை அனுப்பட்டது.
1983: பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனிங்னோ அகிய்னோ வெளிநாட்டிலிருந்து திரும்பி சில நிமிடங்களில் கொல்லப்பட்டார்.
1986: கெமரூனில் எரிமலை ஏரியொன்றிலிருந்து காபனீரொட்சைட்டு வாயு வெளியேறியதால் சுமார் 1800 பேர் பலி.1991: சோவியத் யூனியனில் ஜனாதிபதி கொர்பசேவுக்கு எதிரான புரட்சி பிசுபிசுத்தது.
2001: யூகோஸ்லாவியாவுக்கு சமாதான படையை அனுப்ப நேட்டோ தீர்மானித்தது.
2001: தஜிகிஸ்தானில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]
1639: சென்னை நகரம் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது.
1849: வெனிஸ் நகரம் மீது ஆஸ்திரியா ஆளற்ற பலூன்மூலம் முற்றுகையிட்டது. உலகின் முதல் ஆகாய மார்க்கமான முற்றுகை இது.
1964: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
1875: சகாலின் மற்றும் குரில் தீவுகளின் பரிமாற்றம் தொடர்பாக ஜப்பான் - ரஷ்யாவுக்கிடையில் சென் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1902: தியோடர் ரூஸ்வெல்ட், மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.
1910: கொரியா ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.
1914: முதல் உலகப்போரில் பிரித்தானிய, ஜேர்மனிய படைகள் முதல் தடவையாக பெல்ஜியத்தில் மோதின.
1985: பிரிட்டனின் மன்செஸ்டர் விமான நிலையத்தில் விமானமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் 55 பேர் பலியாகினர்.
1989: நெப்ரியூன் கிரகத்தின் முதல் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
23 ஆகஸ்ட் |
1541 - பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார். 1555 - நெதர்லாந்தில் கால்வினிஸ்துகளுக்கு முழுமையான உரைமைகள் வழங்கப்பட்டன. 1784 - மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை. 1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1839 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைக் கைப்பற்றியது. 1914 - முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜெர்மனியுடன் போரை அறிவித்தது. 1938 - ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியில் பதின்மூன்றரை மணிநேரம் ஆடி 364 ஓட்டங்கள் எடுத்து உலகச் சாதனை புரிந்தார் லென் ஹட்டன் எனும் கிரிக்கெட் வீரர் 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டனர். பின்லாந்து, உக்ரைன், போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது. 1948 - ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன. 1952 - அரபு லீக் அமைக்கப்பட்டது. 1966 - லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது. 1973 - இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது. 1975 - லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது. 1977 - கம்யூனிஸ்ட் சீனாவில் ஒரு கொள்கை மாற்றம் ஏற்பட்டது. கம்யூனிசக் கொள்கை முதலாளித்துவக் கொள்கைக்குப் புறம்பானது என்றாலும் பொருளாதார வளர்ச்சியே இனி தனது முக்கிய நோக்கம் என்ற அடிப்படையில் புதிய அரசியல் சட்டத்தை வெளியிட்டது சீனா. அதன் விளைவாகத்தான் சீனப் பொருளியல் கிடுகிடுவென வளரத் தொடங்கியது. 1990 - ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது. 1990 - மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன 2006 - நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]1349: ஜேர்மனியின் மேய்ன்ஸ் நகரில் ஒருவித கொள்ளை நோய்க்கு காரணம் எனக்கூறி சுமார் 6000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1608: இந்தியாவுக்கு இங்கிலாந்தின் முதலாவது உத்தியோகபூர்வ பிரதிநிதி அனுப்பப்பட்டார்.
1814: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி. மீது படையெடுத்த இங்கிலாந்து துருப்புகள் வெள்ளை மாளிகைக்கு தீ வைத்தன.
1931: பிரான்ஸ், சோவியத் யூனியனுக்கிடையில் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1949: நேட்டோ அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமுலுக்குவந்தது.
1954: அமெரிக்காவில் கம்யூனிஸட் கட்டுப்பாட்டுச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது.
1954: பிரேஸிலில் இராணுவப் புரட்சியினால் பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி கெடுலியோ, பதவி நீக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் வார்காஸ் தற்கொலை செய்துகொண்டார்.
1991: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் விலகினார்.
1995: வின்டோஸ் 95 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.
2004: ரஷ்ய விமானமொன்று செச்சினய தற்கொலை பேராளியினால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதால் 89 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]1609: கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி செயற்படுத்திக் காட்டினார்.
1768: ஜேம்ஸ் குக் தனது முதல் நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார்.
1830: பெல்ஜிய புரட்சி ஆரம்பம்
1825: பிரேஸிலிடமிருந்து பிரிவதாக உருகுவே சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1920: வார்ஸோ யுத்தத்தில் சோவியத் யூனியன் படைகளை போலந்து படைகள் ஆச்சரியகரமாக தோற்கடித்தன.
1933: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 9,000 பேர் பலி.
1944: பாரிஸ் நகரத்தை ஜேர்மனியிடமிருந்து நேசநாடுகளின் படைகள் மீளக் கைப்பற்றின.
1991: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக பெலாரஸ் சுதந்திர பிரகடனம் செய்தது.
2003: இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதல்களில் 52 பேர் பலி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]1920: அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்தது.
1957: கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோவியத் யூனியன் வெற்றிகரமாக பரிசோதித்ததாக சோவியத் யூனியனின் டாஸ் செய்திச்சேவை அறிவித்தது.
1978: முதலாம் அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டார்.
2003: அமெரிக்காவின் கொலம்பிய விண்வெளி ஓடம் விபத்துக்குள்ளானமை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது.
2008: ஜோர்ஜியா நாட்டிலிருந்து பிரிந்த குடியரசுகளான அப்காஸியா மற்றும் தெற்கு ஒசேஷியாவின் சுதந்திரப் பிரகடனங்களை ரஷ்யா பெலாரட் அங்கீகரித்தது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]1813: ட்ரெஸ்டன் யுத்தத்தில் பாரிய ஆஸ்திரிய, ரஷ்ய படைகளை பிரெஞ்சு மன்னன் நெப்போலியனின் படைகள் தோற்கடித்தன.
1859: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் முதலாவது வெற்றிகரமான வர்த்தக எண்ணெய் கிணறு அமைக்கப்படுவதற்கு இது வழிவகுத்தது.
1986: பிரிட்டன் - ஸான்ஸிபார் நாடுகளுக்கிடையிலான யுததம் 45 நிமிடங்களில் முடிவுற்றது.
1916: ஆஸ்திரியா- ஹங்கேரிக்கு எதிராக ருமேனியா போர்ப் பிரகடனம் செய்தது.
1921: அரேபிய கிளர்ச்சியத் தலைவரின் மகனை ஈராக்கின் மன்னர் முதலாம் பைஸாலாக பிரிட்டன் நியமித்தது.
1971: சாட் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சதிப்புரட்சி முயற்சி தோல்வியுற்றது.
1979: இந்தியாவுக்கான பிரிட்டனின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர் நாயகமுமாக பணியாற்றிய மௌன்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் ஐ.ஆர்.ஏ. போராளிகளின் குண்டுத் தாக்குதலில் பலியானார்.
1991: சோவியத் யூனியனிடமிருந்து பிரிவதாக மோல்டோவா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
2003: செவ்வாய் கிரகம் பூமிக்கு 55,758,005 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்டது. 60,000 வருடகாலத்தில் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக காணப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1916: முதலாம் உலக யுத்தத்தில் ருமேனியாவுக்கு எதிராக ஜேர்மனி போர்ப் பிரகடனம்
[You must be registered and logged in to see this image.]1916: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக இத்தாலி போர்ப் பிரகடனம்
1957: அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட்டர் தர்மொன்ட் தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் 18 நிமிடங்கள் பேசி சாதனைப் படைத்தார்.
1963: அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக பேராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர், 'எனக்கு ஒரு கனவு உண்டு' எனும் புகழ்பெற்ற உரையை வாஷிங்டனில் நிகழ்த்தினார்.
1988: மேற்கு ஜேர்மனியில் இடம் பெற்ற விமான சாகசத்தின்போது 3 விமானங்கள் மோதிக்கொண்டதால் 75 பேர் பலி.
1990: குவைத்தை தனது புதிய மாகாணமாக ஈராக் பிரகடனம் செய்தது.
1991: சோவியத் யூனியனிலிருந்து உக்ரைன் பிரிந்தது.
1991: சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மிகைல் கொர்பசேவ் விலகினார்.
1996: பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ்- இளவரசி டயானா விவகாரத்து செய்தனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1825: பிரேஸிலின் சுதந்திரத்தை போர்த்துக்கல் அங்கீகரித்தது.
1835: அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.[You must be registered and logged in to see this image.]
1907: கனடாவில் பாலமொன்று உடைந்ததால் 75 தொழிலாளர்கள் பலி.
1910: ஜப்பான் - கொரியா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, கொரியாவில் ஜப்பானிய ஆட்சி அமுலுக்கு வந்தது.
1944: ஜேர்மனியின் நாஸி படைகளுக்கு எதிராக 60,000 ஸ்லோவாக்கிய துருப்பினர் கிளர்ச்சி செய்தனர்.
1949: சோவியத் யூனியன் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது.
1950: கொரிய யுத்தத்தில் பங்கேற்க பிரித்தானிய படைகள் கொரியாவுக்குச் சென்றன.
1996: நோர்வேயில் இடம்பெற்ற விமான விபத்தில் 141 பேர் பலி.
1997: அல்ஜீரிய கிராமமொன்றில் 98 கிராமவாசிகள் ஆயுதபாணி குழுவொன்றினால் கொல்லப்பட்டனர்.
2005: அமெரிக்காவில் கத்ரினா சூறாவளியினால் 1836 பேர் பலியாகினர்.
2007: அமெரிக்காவில் அணுவாயுதங்கள் தாங்கிய 7 ஏவுகணைகள் மினோட் விமானப்படைத் தளத்திலிருந்து பார்க்ஸ்டேல் விமானப்படைத்தளத்திற்கு முறையானஅனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
அனைத்துலக காணாமற்போனோர் நாள்
1574 - குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவாகிறார்.
1791 - இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆஸ்திரேலியாவில் மூழ்கியதில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1813 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியா-புருசியா-ரஷ்யக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்காப்பட்டனர்.
1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1897 - மடகஸ்காரில் அம்பிக்கி நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.
1918 - விளாடிமிர் லெனின் ஃபான்யா கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் மீதான தாக்குதல் ஆரம்பமாயிற்று.
1945 - பிரித்தானியரிடம் இருந்து ஹொங்கொங்கை ஜப்பான் விடுவித்தது.
1984 - டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1990 - தத்தர்ஸ்தான் ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1992 - மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
1999 - கிழக்குத் தீமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1920: முதல் வானொலி செய்தி அறிக்கை அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலில் ஒலிபரப்பாகியது.
1957: மலாயா கூட்டமைப்பு (மலேஷியா) பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
1962: ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோ சுதந்திரம் பெற்றது.
1986: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 67 பேர் பலி.
1986: சோவியத் யூனியனில் பயணிகள் கப்பலொன்று மூழ்கியதால் 423 பேர் பலி.
1991: கஸகஸ்தான் சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1987: தாய்லாந்தில் இடம்பெற்ற விமான வித்தில் 83 பேர் பலி.
1997: பிரித்தானிய இளவரசரி டயானாவும் அவரின் காதலர் டோடி அல் பயாட், அவர்களின் கார் சாரதி ஹென்றி போல் ஆகியோர் பாரிஸ் நகரில் இடம்பெற்ற கார் விபத்தில் பலியாகினர்.
1999: ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 65 பேர் பலி.
2005: ஈராக்கின் பாக்தாத் நகரில் பாலமொன்றில் ஏற்பட் சனநெரிசலால் 1199 பேர்பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1715: ஐரோப்பாவில் மிக நீண்டகாலம் (72 வருடங்கள்) ஆட்சி செய்த பிரான்ஸின் 14 ஆம் லூயி மன்னர் காலமானார்.
1894: அமெரிக்காவில் இடம்மபெற்ற காட்டுத்தீயினால் 400 இற்கம் அதிகமானோர் பலி.[You must be registered and logged in to see this image.]
1923: ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் ஒரு லட்சம் பேர் பலியாகினர்.
1939: போலந்து மீது ஜேர்மனி படையெடுத்தது. இதன்மூலம் ஐரோப்பாவில் 2 ஆம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.
1969: லிபியாவில் மன்னர் இத்ரிஸ் வெளிநாடு சென்றிருந்தபோது கேணல் கடாபி தலைமையிலான இராணுவ படையொன்று புரட்சி நடத்தி, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் லிபியாவை குடியரசாக பிரகடனப்படுத்தியது.
1971: ஜோர்டான் மன்னர் ஹூஸைனை படுகொலை செய்ய பலஸ்தீன கெரில்லாக்களால் முயற்சிக்கப்பட்டது.
1983: தெரிய விமானமொன்றை சோவியத் யூனியன் சுட்டுவீழ்த்தியது. இதனால் விமானத்திலிருந்த 269 பேரும் பலியாகினர்.
1985: டைட்டானிக் கப்பல் சிதைவுகளை அமெரிக்க- பிரெஞ்சு ஆய்வுக்குழுவொன்று கண்டறிந்தது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 21 of 24 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24
» வரலாற்றில் இன்று Today in History
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிரோஷிமா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #2
» பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3