தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரலாற்றில் இன்று

Page 22 of 24 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24  Next

View previous topic View next topic Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Nov 01, 2012 11:54 am

First topic message reminder :

நவம்பர் 01


1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.

1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.



1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.


1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.


1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.


194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.


1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.


1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.


2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.

[You must be registered and logged in to see this link.]

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down


வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Sep 10, 2013 6:12 pm

செப்டெம்பர் 02


[You must be registered and logged in to see this image.]1666: லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 10,000 கட்டிடங்கள் அழிந்தன.
1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேசநாடுகளிடம் ஜப்பான் நிபந்தனையற்ற வகையில் சரணடைந்தது.
1946: இந்தியாவில் இந்திய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
1992: நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 116 பேர்பலி.
1998: சுவிஸ் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 229 பேர் பலி.
1998: ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ருவாண்டா மேயர் ஒருவரான ஜீன் போல் அகாயெசுவை குற்றவாளியாகக் கண்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Sep 10, 2013 6:15 pm

செப்டெம்பர் 03

 
[You must be registered and logged in to see this image.]1783: அமெரிக்க சுதந்திரப் புரட்சி யுத்தமானது பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாரிஸ் உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
1939: ஜேர்மனி மீது. பிரான்ஸ், பிரிட்டன், நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகியன சுதந்திரப் பிரகடனம் செய்தன.
1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்ததையடுத்து. சீனாவில் 3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
1971 கட்டார் சுதந்திர நாடாகியது.
1987: புரூண்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1997: வியட்நாமில் இடம்பெற்ற விமான விபத்தில் 64 பேர் பலி.
2004: ரஷ்யாவில் பாடசாலையொன்றை முற்றுகையிட்டு சுமார் 1100 மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த செச்னிய தீவிரவாதிகளிடமிருந்து மாணவர்களை மீட்கும் நடவடிக்கையின்போது சுமார் 335  மாணவர்கள் கொல்லப்பட்டனர். .
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Sep 10, 2013 6:16 pm

செப்டெம்பர் 04


[You must be registered and logged in to see this image.]476: கடைசி ரோமப் பேரரசன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் முடிதுறந்தான்.

1666: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.

1781: லொஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.

1870: பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பதவியில் இருந்து அகற்றப்பட்டான். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.

1884: குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்காஇயை பிரித்தானியா கைவிட்டது.

1886: 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி பழங்குடிகளின் தலைவன் ஜெரனிமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தான்.

1888: தான் கண்டுபிடித்த படம்பிடி கருவிக்கு ஜார்ஜ் ஈஸ்ட்மன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்றுக் கொண்டார்.

1939: இரண்டாம் உலகப் போர்: நேபாளம் ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

1939: இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பியப் போரில் ஜப்பான் நடுநிலையை அறிவித்தது.

1951: கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.

1956: வன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.

1963: சுவிஸ் எயார் விமானம் சுவிட்சர்லாந்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் கொல்லப்பட்டனர்.

1970: சல்வடோர் அலெண்டே சிலி நாட்டின் அதிபரானார்.

1971: அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் கொல்லப்பட்டனர்.

1972: ஐக்கிய அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ் ஜெர்மனியின் மியூனிக் நகரில் இடம்பெற்ற 1972 ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் ஏழாவது தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.

1978: அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1996: கொலம்பிய புரட்சி இராணுவப் படையினர் கொலம்பியாவின் இரணுவ முகாமொன்றைத் தாக்கினர். மூன்று வாரங்கள் நீடித்த இக்கரந்தடிப் போரில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

2006: இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கி.மு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

2007: சூறாவளி  ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Sep 10, 2013 6:18 pm

செப்டெம்பர் 05


[You must be registered and logged in to see this image.]1887: இங்கிலாந்தின் எக்ஸ்டர் நகரில் இடம்பெற்ற தீவிபததில் 186 பேர் பலி.
1960: அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி (அப்போது கஸியஸ் கிளே) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
1972: ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை 'கறுப்பு செப்டெம்பர்' எனும் பலஸ்தீன தீவிரவாதிகள் குழுவினர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
1975:  அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட்டை படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.
1980: உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை போக்குவரத்து சுரங்கம் (16 கிலோமீற்றர்) சுவிட்ஸர்லாந்தில் திறந்துவைக்கப்பட்டது.
1986: மும்பையிலிருந்து நியூயோர்க் சென்ற அமெரிக்க விமானமொன்றை தீவிரவாதிகள் கடத்தியதையடுத்து  கராச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 22 பேர் பலி.
1997: அன்னை திரேஸா தனது 87ஆவது வயதில் காலமானார்.
2005: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் விமானமொன்று குடியிருப்பு பகுதியில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 104 பேரும் தரையிலிருந்த 39 பேரும் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Sep 10, 2013 6:20 pm

செப்டெம்பர் 06


1930: ஆர்ஜென்டின ஜனாதிபதி ஹிபோலிட்டோ வைரிகோயென் இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
1939: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக தென்னாபிரிக்கா போர்ப் பிரகடனம் செய்தது.
1952:கனடாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1970: ஐரோப்பாவிலிருந்து நியூயோர்க்கிற்கு சென்றுகொண்டிருந்த இரு விமானங்கள் ஒரே நேரத்தில் பலஸ்தீன தீவிரவாதிகளால் ஜோர்தானுக்கு கடத்தப்பட்டன.[You must be registered and logged in to see this image.]
1972: ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது 'கறுப்பு செப்டெம்பர்' எனும் பலஸ்தீன தீவிரவாத குழுவினால் கடத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் 9 பேர் மீட்பு முயற்சியின்போது கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டனர். முதல்நாள் நடந்த கடத்தலின்போது இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
1983: சோவியத் யூனியன் வான்பரப்பில் ஊடுருவிய கொரிய பயணிகள் விமானமொன்றை சுட்வடுவீழ்த்தியதை சோவியத் யூனியன் ஒப்புக்கொண்டது. அது பயணிகள் விமானம் என சோவியத் யுத்த விமானத்தின் விமானி அறிந்திருக்கவில்லை என சோவியத் யூனியன் கூறியது.
1982: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 31 பேர் பலி.
1991: ரஷ்யாவின் லெனின்கிராட் நகரத்தின் பெயர் மீண்டும் சென் பீற்றர்ஸ்பேர்க் என மாற்றப்பட்டது.
1997: இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Sep 10, 2013 6:22 pm

செப்டெம்பர் 07


 

[You must be registered and logged in to see this image.]1652: தாய்வானில் டச்சு ஆட்சிக்கு எதிராக 15,000 விவசாயிகளும் ஆயுதக் குழுவினரும் கிளர்ச்சி நடத்தினர்.

1776: உலகின் முதலாவது நீர்மூழ்கித் தாக்குதல் அமெரிக்காவில் இடம்பெற்றது.

1895: றக்பி லீக் உதைபந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.

1921: முதலாது அமெரிக்க அழகுராணி போட்டி நடைபெற்றது.

1940: லண்டன் நகரம் மீது ஜேர்மனிய விமானங்கள் குண்டுவீச ஆரம்பித்தன. தொடர்ச்சியாக 76 இரவுகள் குண்டுகள் வீசப்பட்டதால் சுமார் 43,000 பேர் பலியாகினர்.

1953: சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக நிகட்டா குருசேவ் பதவியேற்றார்.

1965: இந்தியாவுடனான எல்லையில் தனது துருப்புக்களின் எண்ணிக்கை விஸ்தரிக்கப்படும் என சீனா அறிவித்தது.

1999: ஏதென்ஸ் நகரில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 143 பேர் பலி, 50,000 பேர் வீடுகளை இழந்தனர்.

2005: எகிப்தில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Sep 10, 2013 6:27 pm

செப்டெம்பர் 08

70 டைட்டஸ் தலைமையிலான ரோமப் பேரரசின் படையினர் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.

1514 லித்துவேனியா, மற்றும் போலந்துப் படைகள் ஓர்ஷா என்னுமிடத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்தன.

1655 சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.

1727 இங்கிலாந்து, கேம்பிறிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.

1796 பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1831 4ம் வில்லியம் பிரித்தானியாவின் மன்னனாக முடிசூடினான்.

1888 லண்டனில் கிழிப்பர் ஜேக்கினால் கொல்லப்பட்ட இரண்டாவது நபரான அன்னி சப்மனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

1900 டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.

1923 கலிபோர்னியாவில் 7 அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின.

1926 நாடுகளின் கூட்டமைப்பில் செருமனி சேர்ந்தது.

1930 ஸ்கொட்ச் நாடா முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது.

1934 நியூ ஜேர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.

1941 இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் நகரை ஜேர்மனி முற்றுகையிட்டது.

1943 இரண்டாம் உலகப் போர்: இத்தாலி போரில் சரணடைந்ததை அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.

1944 இரண்டாம் உலகப் போர்: வி2 ராக்கெட் மூலம் முதல் தடவையாக லண்டன் நகரம் செருமனியினால் தாக்கப்பட்டது.

1945 சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.

1951 பசிபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.

1959 ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்கொக் நகரில் நிறுவப்பட்டது.

1974 வாட்டர்கேட் ஊழல் விவகாரம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் பதவிக்காலத்தில் செய்த அனைத்து குற்றங்களுக்கும் மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க ஜனாதிதபி ஜெரால்ட் போர்ட் அறிவித்தர்ர.

1991 யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.

1994 அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 132 பேர் பலி.

1998 வட அயர்லாந்தில் போராட்டம் நடத்திய ரியல் ஐ.ஆர்.ஏ. இயக்கம் போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.

2006 ஆப்கானிஸ்தான், காபூலில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

2006 இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Sep 10, 2013 6:29 pm

செப்டெம்பர் 09

1493 ஒட்டோமான் பேரரசின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரொவேசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

1513 ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஸ்கொட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

1543 மேரி ஸ்டுவேர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது ஸ்கொட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.

1791 அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், டி.சி. எனப் பெயரிடப்பட்டது.

1799 பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.

1839 அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.

1839 ஜோன் ஹேர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்.

1850 கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

1922 கிரேக்க-துருக்கி போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

1924 ஹவாய், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

1939 இரண்டாம் உலகப் போர்: போலந்தின் குரோவ் நகர் மீது நாசி ஜெர்மனியர் குண்டுகளை வீசித் தாக்கினர்.

1942 இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய விமானம் ஒரிகனில் குண்டு வீசியது.

1944 பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத் சார்பு அரசு பதவியேற்றது.

1945 இரண்டாவது சீன-ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.

1948 கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வடகொரியா) ஸ்தாபிக்கப்பட்டதை கிம் இல் பிரகடனப்படுத்தினார்.

1954 அல்ஜீரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் கொல்லப்பட்டனர்.

1965 சூறாவளி பெட்சி நியூ ஓர்லியன்சில் இரண்டாவது தடவை தரைதட்டியதில் ஏற்படுத்தியதில் 76 பேர் கொல்லப்பட்டனர். $1.42 பில்லியன் சேதமடைந்தது.

1969 கனடாவில் ஆங்கிலத்திற்கு சமமாக பிரெஞ்சும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ மொழிகள் சட்டம் அமுலுக்கு வந்தது.

1970 பிரித்தானிய விமானம் பாலஸ்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1990 சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1991 சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.

1993 பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.

2001 ஆப்கானிஸ்தானில் தேசிய முன்னணித் தலைவர் அகமது ஷா மசூட் கொலை செய்யப்பட்டார்.

2004 இந்தோனீசியா, ஜகார்த்தாவில் அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Tue Sep 10, 2013 6:31 pm

செப்டெம்பர் 10



1759 பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.

1823 சிமோன் பொலிவார் பெருவின் சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.

1840 ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.

1846 எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1858 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1898 ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.

1931 பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.

1939 இரண்டாம் உலகப் போர்: கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.

1939 பிரித்தானிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ். ஒக்ஸ்லே, பிரித்தானியாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பலினால் தவறுதலாக மூழ்கடிக்கப்பட்டது.

1943 இரண்டாம் உலகப் போர் ஜெர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.

1951 ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

1967 கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.

1972 ஜேர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கூடைப்பந்தாட்டத் தொடரின் சர்ச்சைக்குரிய இறுதிப்போட்டியில் சோவியத் யூனியனிடம் அமெரிக்கர் தோல்வியுற்றது. அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியொன்றில் தோல்வியுற்றமைஅதுவே முதல் தடவையாகும்.

1974 கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 பிரித்தானிய விமானம் ஒன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.

2000 மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.

2002 சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.

2003 சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார். மறுநாள் அவர் மரணமடைந்தார்.

2006 ஈழப்போர் முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.

2007 பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி நவாஸ் ஷெரீப் 1999 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டு, 8 வருடகாலம் வெளிநாட்டில் வசித்த பின் மீண்டும் தாயகம் திரும்பினார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by முரளிராஜா Tue Sep 10, 2013 7:26 pm

நீண்ட இடைவெளிக்கு பின் விடுபட்டதை சரி செய்துட்டிங்க போல புன்முறுவல் 

நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Wed Sep 11, 2013 7:23 pm

செப்டெம்பர் 11


1609: அமெரிக்காவில் பழங்குடியினர் வசித்துக்கொண்டிருந்த மன்ஹன்ட்ன்தீவு ஹென்ரி ஹட்சன் எனும் ஐரோப்பியரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

1919: ஹொன்டுராஸ் மீது அமெரிக்கா படையெடுத்தது.

1965: பாகிஸ்தானுடனான போரில், லாகூருக்கு அருகிலுள்ள புர்கி நகரை இந்தியப் படைகள் கைப்பற்றின.[You must be registered and logged in to see this image.]

1973: சிலியில் ஜனாதிபதி சல்வடோர் அலென்டே, ஜெனரல் பினோசெட் தலைமையிலான இராணுவப் புரட்சி மூலம் பதவி கவிழ்கப்பட்டார்.

1982: லெபனானில் பலஸ்தீன அகதிகளின் பாதுகாப்புக்காக தங்கியிருந்த சர்வதேச துருப்புகள் தலைநகர் பெய்ருத்திலிருந்து வெளியேறின.

1998: கோலாலம்பூரில் பொதுநலவாய விளையாட்டு விழா ஆரம்பமாகியது.

2001: அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்றது. 4 பயணிகள் விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு இரு விமானங்கள் நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதப்பட்டன. ஒரு விமானம் வாஷிங்டனினல் பெண்டகன் மீது மோதியது. மற்றொரு விமானம் பென்சில்வேனியா மாநிலத்தில் வீழ்ந்து சிதறியது. இத்தாக்குதல்களில் சுமார் 3000 பேர் பலியாகினர்.

2004: கிறீஸில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 16 பேர் பலியாகினர்.
2007: குண்டுகள் அனைத்துக்கும் தந்தை குண்டு என வர்ணிக்கப்படும் உலகின் மிகப்பெரிய (அணுசக்தியற்ற) குண்டை ரஷ்யா பரீட்சித்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by செந்தில் Wed Sep 11, 2013 7:47 pm

பகிர்வுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by சரண் Thu Sep 12, 2013 7:52 am

பகிர்வுக்கு நன்றி
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Sep 12, 2013 5:18 pm

செப்டெம்பர் 12

1791: அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனை கௌரவிக்கும் முகமாக அமெரிக்க தலைநகருக்கு வாஷிங்டன் டி.சி. என பெயரிடப்பட்டது.
 
1945: சீனாவிடம் ஜப்பான் சரணடைந்தது.
 
1948: கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வடகொரியா) ஸ்தாபிக்கப்பட்டதை கிம் இல் பிரகடனப்படுத்தினார்.
 
1969: கனடாவில் ஆங்கிலத்திற்கு சமமாக பிரெஞ்சும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ மொழிகள் சட்டம் அமுலுக்கு வந்தது.
 
1976: 33 வருடங்கள் சீனாவை ஆட்சி செய்த சீன அதிபர் மாவோ சேதுங் தனது 82 ஆவது வயதில்
 
1990: மட்டக்களப்பு சத்துருகொண்டானில் 184 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
1991: தஜிகிஸ்தான் சுதந்திரம் பெற்றது.
 
1993: இஸ்ரேலை பலஸ்தீன விடுதலை இயக்கம் அங்கீகரித்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 15, 2013 12:18 pm

செப்டெம்பர் 13

[You must be registered and logged in to see this image.]1922: லிபியாவின் அல் அஸீஸியா நகரில் வெப்பநிலை 58.7 பாகை செல்சியஸுக்கு உயர்ந்தது. இதுவொரு உலக சாதனையாகும்.

1971: சீனாவில் மாவோவுக்கு எதிராக புரட்சி நடத்தி தோல்வியுற்ற 2 ஆம் நிலை தலைவர் லின் பியாவோ விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்றார்.இவ்விமானம் மொங்கோலியாவில் விபத்துக்குள்ளாகி விமானத்திலிருந்த அனைவரும் பலியாகினர்.

1989: தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஆயர் டெஸ்மன்ட் டுட்டு தலைமையில் நடைபெற்றது.

1993: பலஸ்தீனத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வைத்து கையெழுத்திட்டபின் இஸ்ரேலிய பிரதமர் யிட்ஸாக் ராபினும் பலஸ்தீன விடுதலை  இயக்கத் தலைவர் யஸீர் அரபாத்தும் கைகுலுக்கினர்.

2001: அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதலின் பின் நிறுத்தப்பட்டிருந்த சிவில் விமான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகியது.

2008: இந்தியாவின் டில்லியில் தொடர் குண்டுவெடிப்புகளால் 30 பேர் பலியாகினர், 130 பேர் காயமடைந்தனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 15, 2013 12:20 pm

செப்டெம்பர் 14


 

[You must be registered and logged in to see this image.]1812: நெப்போலியனின் படையெடுப்பின்போது ரஷ்ய துருப்புகள் வெளியேறியவுடன் மொஸ்கோ நகரில் பாரிய தீ பரவ ஆரம்பித்தது.

1829: ரஷ்ய – துருக்கி யுத்தம் முடிவுற்றது.

1901: செப்டெம்பர் 6 ஆம் திகதி துப்பாக்கி தாரியொருவரால் சுடப்பட்டு காயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லே உயிரிழந்தார்.

1917: ரஷ்யா குடியரசாகியது.

1959: சோவியத் யூனியனின் லூனா -2 விண்காலம் சந்திரனின் தரையில் மோதியது. சந்திரனை அடைந்த மனிதனால் தயாரிக்கப்பட்ட முதலாவது பொருள் இதுவாகும்.

1960: ஒபெக் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1960: கொங்கோவில் சி.ஐ.ஏ. உதவியுடன் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1979: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி நூர் மொஹமட் தராக்கி படுகொலை செய்யப்பட்டார்.

1982: லெபனானின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்த பாசிர் ஜெமயாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

1984: ஜோ கிட்டிங்கர்  என்பவர் அத்திலாந்திக் சமுத்திரத்தை வெப்ப வாயு பலூனில் கடந்த முதலாவது நபரானார்.

2008: ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 88 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 15, 2013 12:21 pm

செப்டெம்பர் 15


 
1789: அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. (இது ஆரம்பத்தில் வெளிவிவகார திணைக்களம் என்ற பெயரில் அறியப்பட்டது)
1812: நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சு இராணுவம்  மொஸ்கோவின் கிரெம்ளின் நகருக்குள் புகுந்தது.
1821: கௌதமாலா, எல் சல்வடோர், ஹொண்டுராஸ், நிகரகுவா, கொஸ்டா ரிக்கா ஆகியன ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக கூட்டாக சுதந்திர பிரகடனம் செய்தன.
[You must be registered and logged in to see this image.]1935: நியூரம்பர்க் சட்டங்களினால் ஜேர்மனியில் யூதர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
1940: ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி சுவஸ்திகாவை தனது புதிய தேசிய கொடியாக அங்கீகரித்தது.
1945: அமெரிக்காவில் சூறாவளியினால் 366 பேர் பலி.
1947: ஜப்பானில் சூறாவளியினால் 1077 பேர் பலி.
1959: அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முதலாவது சோவியத் தலைவரானார் நிகிட்டா குருசேவ்.
1968: சோவியத்தின் ஸோண்ட் 5 எனும் விண்கலம் சந்திரனை சுற்றி வந்து பூமிக்குத் திரும்பிய முதலாவது விண்கலமானது.
1974: வியட்நாம் விமானமொன்று கடத்தப்பட்டு பின்னர் விபத்துக்குள்ளானதால் 75 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 22, 2013 5:54 pm

செப்டெம்பர் 16



1947: ஜப்பானில் வீசிய சூறாவளியினால் 1930 பேர் பலி.

1959: முதலாவது போட்டோ பிரதி இயந்திரம் நியூயோர்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

[You must be registered and logged in to see this image.]1963: மலேஷிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1970: ஜோர்தானில் இராணுவ ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

1975: பப்புவா நியூகினியா அவுஸ்திரேலியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது.

1978: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 26,000 பேர் பலி.

1991: பதவியிலிருந்து விலக்கப்பட்ட பனாமா சர்வாதிகார மனுவல் நொரீகாவுக்கு எதிராக அமெரிக்காவில் விசாரணை ஆரமப்மாகியது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 22, 2013 5:55 pm

செப்டெம்பர் 17
 
1928: அமெரிக்காவில் வீசிய சூறாவளி காரணமாக சுமார் 2,500 பேர் பலியாகினர்.
1944: 2 ஆம் உலக யுத்தத்தில் நேச நாடுகளின்  துருப்புகள் நெதர்லாந்தில் பரசூட் மூலம் தரையிறங்கின.
1948: இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தின் இறையாண்மையை; இந்திய யூனியனிடம் ஹைதராபாத் நிஸாம  கையளித்தார்.
[You must be registered and logged in to see this image.]1949: கனேடிய நீராவிக் கப்பலொன்று தீப்பற்றியதால் 118 பேர் பலி.
1957: மலேஷியா சுதந்திரம் பெற்றது.
1978: கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் இஸ்ரேலும் எகிப்தும்  கையெழுத்திட்டன.
1980: நிகரகுவாவின் முன்னாள் ஜனாபதிதி அனஸ்டாஷியோ டிபாயெல், பரகுவேயில்  படுகொலை செய்யப்பட்டார்.
1982: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அகதிகள் முகாமொன்றில் கிறிஸ்தவ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1,000 இற்கும் அதிகமானோர் பலியாகினர்.
1983: மிஸ் அமெரிக்கா அழகுராணி போட்டியில் வெற்றி பெற்ற முதல் கறுப்பின பெண் எணும் பெருமையை வனேஸா வில்லியம்ஸ் பெற்றார்.
1993: போலந்திலிருந்து கடைசி ரஷ்ய துருப்புகள் வெளியேறின.
2006: அமெரிக்காவின் அலெஸ்கா பிராந்தியத்திலுள்ள போர்பீக்ட் எரிமலை சுமார் 10,000 வருடங்களின் பின் முதல் தடவையாக வெடித்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 22, 2013 5:57 pm

செப்டெம்பர் 18


 
1502: கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவது நாடுகாண் பயணத்தின்போது கொஸ்டாரிக்காவில் தரையிறங்கினார்.
1906: ஹொங்கொங்கில் ஏற்பட்ட சுனாமி மற்றும் சூறாவளியினால் சுமார் 10000 பேர் பலி.[You must be registered and logged in to see this image.]
1932: அரேபிய தீபகற்பத்தில் பல இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து சவூதி அரேபியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
1943:  பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலொன்றினால் ஜப்பானிய கப்பலொன்று தாக்கப்பட்டதால் 5620 பேர்பலி.
1961: ஐ.நா. செயலாளர் நாயகம் டக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட், கொங்கோவில் சமாதான பேச்சுவார்த்தையொன்றில் பங்குபற்றச் சென்றபோது ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) இடம்பெற்ற விமான விபத்தில் பலியானார்.
1974: ஹொண்டுராஸில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 5000 பேர்பலி.
1977: வெயேஜர் -1 விண்கலம் சந்திரனையும் பூமியையும் முதல் தடவையாக ஒன்றாக படம் பிடித்தது.
1987: அணுவாயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கையெழுத்திட்டன.
1991: அமெரிக்க ஊடகத்துறை கோடீஸ்வரர் டெட் டர்னர், ஐ.நாவுக்கு 100 கோடி அமெரிக்க டொலர் நன்கொடை வழங்கினார்.
2007: மியன்மாரில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் இணைந்துகொண்டனர். இது 'காவிப் புரட்சி' என அழைக்கப்பட்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 22, 2013 5:59 pm

செப்டெம்பர் 19


[You must be registered and logged in to see this image.]1881: ஜுலை 2 ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் உயிரிழந்தார்.
1893: நியூஸிலாந்தின் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1944: சோவியத் யூனியன், பின்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1946: கான்ஸ் திரைப்படவிழா முதல் தடவையாக நடத்தப்பட்டது.
1952: ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளின் ஐரோப்பாவுக்கு சென்றபின் மீண்டும் அமெரிக்காவுக்கு வருவதை அமெரிக்க அரசாங்கம் தடுத்தது.
1976: துருக்கி விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 155  பேர் பலி.
1983: சென் கிட்ஸ் அன்ட் நேவிஸ் சுதந்திரம் பெற்றது.
1985: மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலி.
1989: நைகர் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் 171 பேர் பலி.
1997: அல்ஜீரிய நகரமொன்றில்  53 பொதுமக்கள் படுகnhலை செய்யப்பட்டனர்.
2006: தாய்லாந்தில் இராணுவத்தினர் புரட்சி நடத்தினர்.
2010: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள பிரித்தானிய பெற்றோலிய எண்ணெய் அகழ்வு நிலையத்தில் பல வாரங்களாக தொடர்ந்த எண்ணெய்க் கசிவு அடைக்கப்பட்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 22, 2013 6:00 pm

செப்டெம்பர் 20

[You must be registered and logged in to see this image.]1857: கிழக்கிந்திய கம்பனிக்கு ஆதரவான படையினர் டில்லியை கைப்பற்றியதையடுத்து 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் முடிவுற்றது.
1942: உக்ரேனில் இரு நாட்களில் சுமார் 3000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1967: குயீன் எலிஸபெத் -2 கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1984: லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அமெரிக்கத் தூதரகம் மீது கார்க் குண்டுத் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 22 பேர் பலி.
1990: ஜோர்ஜியாவிலிருந்து பிரிவதாக தெற்கு ஒசேஷிய சுதந்திரப் பிரகடனம் செய்தது.
2001: பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் பிரகடனப்படுத்தினார்.
2008: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மெரியட் ஹோட்டலில் நடந்த வெடிப்பொருட்கள் நிறைந்த லொறியொன்று மோதப்பட்டதால்  54 பேர் பலியாகினர். 266 பேர் காயமடைந்தனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 22, 2013 6:02 pm

செப்டெம்பர் 21

 
 
1934: ஜப்பானில் சுறாவளியினால் 3036 பேர் பலி.
[You must be registered and logged in to see this image.]1938: நியூயோர்க்கில் சூறாவளியினால் 500-700 பேர் பலி.
1942: உக்ரைனின் டுனைவ்டிசி நகரில் 2588 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1964: பிரிட்டனிடமிருந்து மால்ட்டா சுதந்திரம் பெற்றது.
1981: பிரிட்டனிடமிருந்து பேலிஸ் சுதந்திரம் பெற்றது.
1991: சோவியத் யூனியனிடமிருந்து ஆர்மேனியா சுதந்திரம் பெற்றது.
1999: தாய்வானில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 2,400 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sun Sep 22, 2013 6:03 pm

செப்டெம்பர் 22


[You must be registered and logged in to see this image.]1761: பிரிட்டனின் மன்னராக மூன்றாம் ஜோர்ஜ் முடிசூட்டப்பட்டார்.

1857: ரஷ்யாவின் யுத்தகப்பலொன்று பின்லாந்து வளைகுடாவில் மூழ்கியதால் 826 பேர் பலி.

1908: பல்கேரியா சுதந்திரப் பிரகடனம்செய்தது.

1941: உக்ரைனில் ஹிட்லரின் படையினரால் சுமார் 6000 யூதர்கள் படுகொலை.

1965: 1965 ஆம் ஆண்டின் இந்திய பாகிஸ்தான் யுத்தம் முடிவடைந்தது.

1980: ஈரான் மீது ஈராக் படையெடுத்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by ஸ்ரீராம் Mon Sep 23, 2013 8:14 am

மிக அருமையான தொடர்.

ஓராண்டை விரைவில் பூர்த்தியாக இருக்கிறது
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 22 Empty Re: வரலாற்றில் இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 24 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum