Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
Page 1 of 1 • Share
புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
உறவுகளே,
இது என் இரண்டாவது புதிர் கதை. முதலில் பதிவிட்ட புதிரில் யாரும் சரியான விடை சொல்லவில்லை. எனவே இந்த எளிய புதிர் கதையை உங்களுக்காக எழுதி இருக்கிறேன். இனி புதிருக்கு போவோம்...
பிப்ரவரி 22 2015
அதிக அரவம் இல்லாத அந்த சென்னை புற நகர் பகுதி வீதியில் வலது கடைசியில் இருக்கும் அந்த வீட்டின் அருகே இன்ஸ்பெக்டர் சரவணவேல் நெருங்கும் போதே அக்கம் பக்கம் உள்ள மக்களும், அந்த வழியே செல்வோரும் மொய்த்து கொண்டு இருந்த கூட்டம் போலீஸ் ஜீப்பை பார்த்தவுடன் வழிவிட்டு ஒதுங்கியது. ஜீப்பிலிருந்து இறங்கும் போதே பொது மக்களை கலைந்து செல்ல வழியுறுத்தினார்.
இன்ஸ்பெக்டர் வீட்டின் உள்ளே சென்று பிரேதத்தை சில நிமிடங்கள் ஏறிட்டு பார்த்தவர் வெளியில் வந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் போட்டோ கிராபர்களுக்கும் உத்தரவிட்டார். “போலீஸ் ஸ்டேஷன்க்கு யார் தகவல் சொன்னது? என வினாவினார்.”
ஒருவர் முன் வந்து நான்தான் சார் என்றார்.
சொல்லுங்க எப்ப பார்த்தீங்க?
ஒரு மணி நேரம் முந்திதான் சார். சுமாரா ஆறரை மணி இருக்கும் சார்.
ம்ம்ம் மேல சொல்லுங்க..
இந்த வீட்ல நாலு பசங்க தங்கி இருந்து பக்கத்தில் எங்கேயோ காலேஜ்ல படிக்கிறாங்க சார். தினமும் காலை மாலை இரண்டு வேலையும் பால் சப்ளை செய்வேன் . இன்னைக்கு பால் கொண்டு வந்து கூப்பிட்ட போது யாரும் ஏன்னு கேட்கலை சார், சரி ஞாயிறு கிழமை அசந்து தூங்குறாங்கனு நினைச்சி கதவை தட்டினேன். கதவு தானா தொறந்துகிட்டு உள்ளே எட்டி பார்த்தா அந்த தம்பி சுரேசு தூங்குவது போலதான் தெரிஞ்சிச்சு அடுத்த அடி வைக்கிறப்ப அவர் மூக்கில் ரத்தம். பயந்துட்டேன் சார். உடனே வெளியில் வந்து போலீஸ் ஸ்டேஷன்க்கு போன் பண்னினேன் சார்.
ம்ம்ம் வீட்ல இருந்த மற்ற மூனு பேர் எங்கே போனாங்க ஏதாவது தெரியுமா?
நேத்து காலைல பால் கொடுக்க வரும் போதும் இந்த சுரேஷ் தம்பிதான் இருந்தார். எப்போது அரை லிட்டர் பால் வாங்குவாங்க, நேத்திக்கு கால் லிட்டர் போதும் எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்கனு சொன்னார் சார்.
ம்ம்ம்... அந்த மூனு பேரும் எந்த ஊர்னு உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரியுமா?
நான் அதை பற்றி கேட்டது இல்ல சார். பாலை கொடுத்து விட்டு அடுத்த வீட்டுக்கு பால் சப்ளை கொடுக்க போகனும், அதனாலே எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்ல சார்.
ஓ சரி... நீங்க எங்க இருக்கீங்க?
இங்கதான் எழட்டு வீடு தள்ளி என் வீடு இருக்கு சார்.
ம்ம்ம் சரி நீங்க இப்ப போகலாம். கூப்பிட்டு அனுப்பும் போது வாங்க என்ற இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள்
ஒருவரை அழைத்து சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் தகவல் அனுப்புங்க. அப்புறம் இந்த வீட்ல இருந்த மற்ற மூவருக்கும் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்ங்க. அவர்களை என்னை ஸ்டேஷன்ல வந்து பார்க்க சொல்லுங்க.
கைரேகை நிபுணர்கள் தங்கள் பணியை செய்து கொண்டிருக்க, போட்டோகள் பளிச்சிட, பிரேத பரிசோதனனைக்கு உடலை எடுத்து செல்ல சில மணி நேரங்களில் அந்த இடம் நிசப்தம் கூடி இருந்தது.
பிப்ரவரி 23 2015
மறுநாள் காலை 11 மணி அளவில் இன்ஸ்பெக்டர் சரவணவேல் சுரேஷ் உடலை பிரேத பரிசோதனனைக்கு பின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க. அழு குரல் சத்தம் விண்ணை பிளந்தது.
அடுத்து போலீஸ் ஸ்டேஷன்..
இன்ஸ்பெக்டர் சரவணவேல் கைரேகை நிபுணர்களுடன் உரையாடி கொண்டிருந்தார்.
சார் சுரேஷ் மர்டர் ஸ்பாட்ல எடுத்த கைரேகை ரிப்போர்ட் முழுவதும் வந்துட்டு.
ம்ம்ம்.. சற்று முன்னேதான் பிரேத பரிசோதனனை ரிபோர்ட் வந்துச்சு. அதில் சுரேசை தலையணையில் முகத்தை அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ரிப்போர்ட்ல சொல்லி இருக்காங்க. அதனால சுரேஷ் மூச்சு திணறிதான் இறந்து இருக்கிறான். முகத்தை அழுத்தியதில் மூக்கு பகுதியில் சேதமாகி ரத்தம் வெளிவந்து உறைந்து போயிருக்கு. அதனால் இது திட்டமிட்ட கொலைதான் என்பது தெளிவா தெரியுது. இந்த கொலை அதிகாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள்ள நடந்து இருக்கு.
இப்ப சொல்லுங்க இதுக்கு சாதகமாக ஏதேனும் கை ரேகை ரிப்போர்ட்ல ஏதாவது விஷயம் இருக்கா?
சார் சுரேஷ் உடலுக்கு பக்கத்தில் கிடந்த சில தலையணைகளில் எந்த கைரேகையும் சரியா கிடைக்கவில்லை. கொலை செய்ய வந்தவன் தகுந்த முன் ஏற்பாட்டொடு வந்து இருக்கான் சார். அவன் கையில் கிலௌஸ் போன்ற ஏதேனும் அணிந்து இருக்க வாய்ப்பு இருக்கு மற்ற பொருள்கள் அனைத்திலும் அழுத்தமான கைரேகைகள் எதுவும் கிடைக்கலை சார். ஆனால் அந்த காதலர் தின வாழ்த்து அட்டையில் மட்டும் சுரேஷ் கைரேகையோடு வேறு ஒரு கை ரேகையும் பதிவாகி இருக்கு சார்.
இன்ஸ்பெக்டருக்கு லேசாக பொறி தட்டியது. உடனே தன் டேபிள் மேல் இருந்த மற்ற மூவரின் கைரேகைகள் அடங்கிய கவரை கொடுத்து இதில் யாருக்காவது அந்த கைரேகை மேட்ச் ஆகுதானு பாருங்க என்றார்.
கைரேகை நிபுணர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பூதக்கண்ணாடி மற்றும் சில பவுடர்களை கொண்டு அந்த கைரேகையொரு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களில் இல்லை சார் இது மேட்ச் ஆகல என்றனர்.
இதை கேட்டதும் இன்ஸ்பெக்டர் சற்று குழம்பிதான் போனார். இந்த கொலையோட மோடிவ் எண்ணெவென்றே விளங்கவில்லை. சுரேஷோடு தங்கி இருந்த அந்த மூவரையும் தீர விசாரித்தால் வெளிச்சம் கிடைக்கலாம்.
சார் இதுல குட்வில் கார்ட்ஸ்னு ஸ்டிக்கர் இருக்கு. இந்த கடை சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் மட்டும்தான் இருக்கு.
ஓ குட். அப்ப கண்டிப்பா கடையில் சிசிடிவி கேமேரா இருக்கும். நான் அந்த கடையில் சிசிடிவி புட்டெஜ் கிடைக்குதானு பார்க்க இப்பவே ஏற்பாடு செய்றேன் என்ற இன்ஸ்பெக்டர் மேலும் சில விஷயங்களை பேசிய பின் கைரேகை நிபுணர்களை அனுப்பி வைத்தார்.
இன்ஸ்பெக்டர் சரவணவேல் முன்னாள் அந்த மூவரும் உட்கார்து இருந்தனர். தன் நண்பனின் மரணம் அவர்களை அதிகம் பாதித்து இருந்தது. அதை அவர்களின் கண்களில் தெரிந்தது.
ஒரு முறை மூவரையும் ஏறிட்டு பார்த்த இன்ஸ்பெக்டர் சதீஷ், திலீப், சந்துரு. உங்களை பற்றி தனி தனியா அப்புறம் விசாரிக்கிறேன். இப்ப சுரேஷ் பற்றி சொல்லுங்க. சுரேஸ்க்கு வெளியில் யாராவது எதிரிங்க இருக்கங்களா?
திலீப், அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை சார். சுரேஷ் ரொம்ப நல்லவன். நல்லா படிப்பான். பிளஸ் டூல ஸ்கூல் ஃபர்ஸ்ட் அவன்தான். அவனுக்கு இந்த கதியானு நினைக்கிறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு சார். (திலீப் கண்ணை கசக்கினான்)
ம்ம்ம்... அழாதீங்க. சுரேஷ்சோட மற்ற ஆக்டிவிட்டீஸ் எப்படி?
சந்துரு, ரொம்ப அதிகமா யார்கிட்டையும் பேச மாட்டான் சார், அவன் உண்டு அவன் வேலை உண்டுனு இருப்பான். அப்புறம் தினமும் காலையில் அலாரம் வச்சு எழுவான் 5 மணிக்கு வாக்கிங் போவான்.
"வாட்..."
ஏன் சார்.... ?
தினமும் காலையில் 5 மணிக்கு வாக்கிங் போவானா?
ஆமாம் சார்
ஞாயிற்று கிழமை கூடவா?
ஆமாம் சார்.. என்ன கிழமையானாலும்.. வாக்கிங் போவதை நிறுத்த மாட்டான்.
அலாரம் வைச்சு எழுவானா?
ஆமாம் சார்..
இன்ஸ்பெக்டர் கண்ணில் லேசாக பொறி தட்டியது. மூவரையும் ஒரு பார்வை பார்த்தவர் சரி உங்களை மாலை சந்திக்கிறேன் என்றவாறே எழுந்தார்.
மீண்டும் சுரேஷ் கொலை நடந்த அதே வீடு...
இன்ஸ்பெக்டர் வீட்டின் உள்ளே சென்ற சில நிமிடங்களில் அலாரம் ஒன்றை வெள்ளை கலர் துணியில் எடுத்து வந்து கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து அவரிடம் என் தனியறையில் வையுங்கள். நான் கைரேகை நிபுணர்ககளை வரவழைத்து இதில் ஏதேனும் அந்த மூன்று பேரின் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் மேட்ச் ஆகுதானு மீண்டும் ஒரு முறை பார்க்க சொல்றேன். எல்லா வகையிலும் நாம் முயற்சி செய்வோம். அப்புறம் அந்த க்ரீட்டிங்க் கார்ட் கடையில் சிசிடிவி புட்டெஜ் ஆதாரம் வாங்க கான்ஸ்டபிள் பெரியசாமியை அனுப்பி இருக்கேன். அவர் வந்ததும் என்னை பார்க்க சொல்லுங்க.
யெஸ் சார்.
மாலை 3 மணி
மீண்டும் விசாரணை தொடங்கியது, ஆனால் இந்த முறை தனித்தனியாக மூன்று பேரிடமும் பேச நினைத்தவர் முதலில் திலிப்பை தன் அறைக்கு வரவழைத்தார் இன்ஸ்பெக்டர், அவனிடம் சில நிமிடங்கள் பேசும் பேசிக்கொண்டு இருக்கும் போதே கான்ஸ்டபிள் ஒருவர் வேகமாக வந்தார். சார் ஏசி லைன்ல இருக்கார். உங்க கூட ஒரு கேஸ் விஷயமா பேசனுமாம்... கொஞ்சம் வந்துட்டு போங்க என்றார்.
இன்ஸ்பெக்டர் சரவானவேல் உடனே விரைந்தார்.
அடுத்த சில நிமிடங்கள் கழித்து இன்ஸ்பெக்டர் கையில் ஒரு லேப்டாப்புடன் வந்தமர்ந்தவர் திலிப்பை ஏறிட்டு பார்த்தார்.
அடுத்து அவர் கேட்ட கேள்வி திலிப்பை தூக்கிவாரி போட செய்தது.
சொல்லுங்க திலீப், “சுரேசை ஏன் கொலை செஞ்சீங்க”
சார்.....!. என்ன சொல்றீங்க.
இந்த வீடியோ கிளிப்பை கொஞ்சம் பாருங்க என லேப்டாப்பை திலீப் பக்கம் திருப்பினார்.
அதை பார்த்த சில வினாடிகள் திலீப் கண்ணை மூடிக்கொண்டான். சப்தமில்லாமல் ஆழ தொடங்கினான்.
சொல்றேன் சார்... ஆனால் அந்த அந்த பெண்ணை இந்த கேஸ்ல மாட்டிவிட்டுடாதீங்க.
பிப்ரவரி 14 2015 மாலை 4 மணிக்கு...
திலீப் சொன்ன கதையை அப்புறம் சொல்றேன்.
இந்த கதையை முடிந்தவரை சுருக்கி இருக்கேன். அப்புறம் உங்களை திசை திருப்ப கதையில் தேவை இல்லாத சில விஷயங்களை சேர்த்து இருக்கேன். ஆனாலும் மிக மிக எளிதான புதிர்தான்.
சரியான விடை சொல்பர்களுக்கு "துப்பறியும் புலி" பட்டம் சூடப்படும்.
யாரும் சரியான விடை சொல்லாத பட்சத்தில் சில நாட்களில் மீதி கதையுடன் இன்ஸ்பெக்டர் எப்படி கண்டுபிடித்தார் என்பதையும் சொல்கிறேன். ....
- உங்கள் ஸ்ரீராம்.

*************

திலீப்தான் குற்றவாளி என இன்ஸ்பெக்டர் எப்படி கண்டுபிடித்தார்.?
இந்த கதையை முடிந்தவரை சுருக்கி இருக்கேன். அப்புறம் உங்களை திசை திருப்ப கதையில் தேவை இல்லாத சில விஷயங்களை சேர்த்து இருக்கேன். ஆனாலும் மிக மிக எளிதான புதிர்தான்.
சரியான விடை சொல்பர்களுக்கு "துப்பறியும் புலி" பட்டம் சூடப்படும்.
யாரும் சரியான விடை சொல்லாத பட்சத்தில் சில நாட்களில் மீதி கதையுடன் இன்ஸ்பெக்டர் எப்படி கண்டுபிடித்தார் என்பதையும் சொல்கிறேன். ....
- உங்கள் ஸ்ரீராம்.
Last edited by ஸ்ரீராம் on Tue Mar 03, 2015 12:46 pm; edited 1 time in total (Reason for editing : படம் இணைக்கப்பட்டது.)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
இந்த புதிர் கதையை சிலருக்கு டாக் செய்கிறேன்.
@முரளிராஜா, @முழுமுதலோன், @ரானுஜா @kanmani singh, @mohaideen, @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
@முரளிராஜா, @முழுமுதலோன், @ரானுஜா @kanmani singh, @mohaideen, @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
முரளிராஜா wrote:
இதான் கதை சுருக்கமா ?
ஆறு பக்கத்துக்கு எழுதின கதையை மூன்று பக்கமாக குறைத்து இருக்கேன். இதுக்கு மேலே குறைத்தால் கதையே தெரியாது.
அது உங்கள் துப்பறியும் மூளை என்ன சொல்கிறது முரளி?
இது ரொம்ப ஈசியான புதிர்தான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
கிரீட்டிங் கார்ட் வாங்கப் போனது திலிபும் சுரேஷ் விரும்புகிற பொண்ணும்.
அதனால் இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் வந்திருக்கலாம் ஸ்ரீராம்...
ஆனால் திலீப் கதை என்னனு நீங்க சொன்னா தான் தெரியும்...

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
ஏசி கிட்ட பேசப் போன டைம்ல திலீப் எதோ செய்திருக்கான்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
மீண்டும் விசாரணை தொடங்கியது, ஆனால் இந்த முறை தனித்தனியாக மூன்று பேரிடமும் பேச நினைத்தவர் முதலில் திலிப்பை தன் அறைக்கு வரவழைத்தார் இன்ஸ்பெக்டர், அவனிடம் சில நிமிடங்கள் பேசும் பேசிக்கொண்டு இருக்கும் போதே கான்ஸ்டபிள் ஒருவர் வேகமாக வந்தார். சார் ஏசி லைன்ல இருக்கார். உங்க கூட ஒரு கேஸ் விஷயமா பேசனுமாம்... கொஞ்சம் வந்துட்டு போங்க என்றார்.
இன்ஸ்பெக்டர் சரவானவேல் உடனே விரைந்தார்.
இன்ஸ்பெக்டர் சென்ற பின்னர் அவரது அறையில் இருந்த அலாரத்தில் படிந்த தன கைரேகையை அழிக்க முயற்சி செய்து இருப்பான் இந்த காட்சி கமிஷனர் ரூமில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் பதிவாகி இருக்கலாம் அல்லது கண்ட்ரோல் ரூமில் உள்ள காமிராவில் பதி ஆகி இருக்கலாம் இதை வைத்து ஸ்டேஷன் திரும்பிய இன்ஸ்பெக்டர் திலீப்பை பார்த்து ஏன் கொலை செய்திங்க என்று கேட்டு கண்டு பிடித்திருக்கலாம் இப்போதெல்லாம் ஒவ்வொரு ஸ்டேஷன் உள்ள காமிரா காட்சிகள் control ரூமில் பதிவாகும் ஆகவே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வசதியாக
இப்போதைக்கு என பதில் இதுதான் இது இன்னும் வளரும்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
சிறப்பானதொரு புதிரை பதிவு செய்த அன்பு தம்பி ஸ்ரீராமுக்கு இந்த பாடலை சமர்ப்பணம் செய்கிறேன் கண்டு கேட்டு இரசியுங்கள் @ஸ்ரீராம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
வாவ் பரவாயில்லை சரியான பதிலை முகநூலிலும், தளத்திலும் பதிவிட்டு இருக்கீங்க. யார் உண்மையான துப்பறியும் புலிக்கு உரியவர் என்பதை நாளை காலை மீதி கதையை சொல்லும் போது சொல்கிறேன். இப்ப எனக்கு நேரம் மிக மிக குறைவு. பணி சுமை அதிகம்.
நீங்க சொன்ன பதில்கள் நூறு சதவீதம் சரியா என கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். இருந்தாலும் 85% சதவீதம் சிலர் சரியாக ஊகித்து பதில் சொல்லி இருக்கிறார்கள்.
@முழுமுதலோன் அண்ணா நல்லதொரு பாடலுக்கு நன்றி!!!
நாளை பார்க்கிறேன்.
நீங்க சொன்ன பதில்கள் நூறு சதவீதம் சரியா என கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். இருந்தாலும் 85% சதவீதம் சிலர் சரியாக ஊகித்து பதில் சொல்லி இருக்கிறார்கள்.
@முழுமுதலோன் அண்ணா நல்லதொரு பாடலுக்கு நன்றி!!!
நாளை பார்க்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
இன்று மீண்டும் ஒரு முறை படித்ததில் கிழ்கண்ட பதில் கிடைத்தது
இப்ப சொல்லுங்க இதுக்கு சாதகமாக ஏதேனும் கை ரேகை ரிப்போர்ட்ல ஏதாவது விஷயம் இருக்கா?
சார் சுரேஷ் உடலுக்கு பக்கத்தில் கிடந்த சில தலையணைகளில் எந்த கைரேகையும் சரியா கிடைக்கவில்லை. கொலை செய்ய வந்தவன் தகுந்த முன் ஏற்பாட்டொடு வந்து இருக்கான் சார். அவன் கையில் கிலௌஸ் போன்ற ஏதேனும் அணிந்து இருக்க வாய்ப்பு இருக்கு மற்ற பொருள்கள் அனைத்திலும் அழுத்தமான கைரேகைகள் எதுவும் கிடைக்கலை சார். ஆனால் அந்த காதலர் தின வாழ்த்து அட்டையில் மட்டும் சுரேஷ் கைரேகையோடு வேறு ஒரு கை ரேகையும் பதிவாகி இருக்கு சார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் திலிப் கையுறை யை பயன்படுத்தியதால் அவனுடைய கைரேகை பதிய வாய்ப்பு இல்லை மேலும் மற்றவர்களின் கைரேகை அங்கு பதிந்து இருக்கும் போது இவனுடைய கைரேகை இல்லாதது ஒரு சந்தேகம் வந்திருக்கலாம்
மேலும் அலாரம் கடிகாரத்தில் ஒரு வெப் camera பொருந்தி இருந்து அதில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் காட்டி கொடுத்திருக்கலாம்
{அந்த காதலர் தின வாழ்த்து அட்டையில் மட்டும் சுரேஷ் கைரேகையோடு வேறு ஒரு கை ரேகையும் பதிவாகி இருக்கு சார்.}
திலீப்பும் சுரேசும் சேர்ந்து ஒன்றாக சென்று அந்த அட்டையை வாங்கி இருக்கலாம் அப்போது திலீப்பின் கைரேகை அதில் படிந்து இருக்கும் அந்த கை ரேகையை வைத்து கூட திலிப் தான் கொலையாளி என்று கண்டு அறிந்து இருக்காலாம்
இந்த புதிரை எந்தவிதமான கோணங்களிலும் யோசிக்கலாம் ஆனால் நீங்கள் எவ்வாறு யோசித்து விடை தர போகிறிர்கள் என்று எனக்கு தெரியவில்லை
பொதுவாக இது போன்ற crime கதைகளுக்கு விடைகள் பல்வேறு கோணங்களில் தரலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து இருந்தாலும் உங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர் நோக்கி கொண்டு உள்ளோம்
@ஸ்ரீராம்

Last edited by முழுமுதலோன் on Wed Mar 04, 2015 10:55 am; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
சரி இன்ஸ்பெக்டர் எப்படி திலீப்தான் குற்றவாளி என கண்டுபிடித்தான் என்பதை பார்ப்போம்.
உண்மையை சொன்னால் திலீப் கைரேகை அலாரத்தில் கூட பதியவில்லை. கைரேகை நிபுணர்கள் ஒரு அங்குலம் கூட விடாமல் அலசி இருக்கும் போது அலாரத்தையும் விட்டு வைக்கவில்லை என்பது இன்ஸ்பெக்டர்க்கு தெரியும்.
பின்னர் எப்படி கண்டுபிடித்தார்.? திலீப்க்கா இன்ஸ்பெக்டர் விரித்த வலையில் பொறியாகதான் அந்த அலாரத்தை பயன்படுத்திக்கொண்டார். சரி சற்று விரிவாக பார்ப்போம்.
1. இன்ஸ்பெக்டர் அந்த மூன்று பேரையும் பார்க்கும் போதே திலீப் மட்டும் துயரபடுவதில் சற்று செயற்கைதனம் இருப்பதை கவனித்தார்.
2. மேலும் சந்துரு பேசும் போது “ரொம்ப அதிகமா யார்கிட்டையும் பேச மாட்டான் சார், அவன் உண்டு அவன் வேலை உண்டுனு இருப்பான். அப்புறம் தினமும் காலையில் அலாரம் வச்சு எழுவான் 5 மணிக்கு வாக்கிங் போவான்…” என சொல்லிக்கொண்டு போகும் போது இன்ஸ்பெக்டர் "வாட்..." என்ற போது மற்ற மூவரை விட திலீப் சற்று கலங்கிதான் போனான். அதை ஓரக்கண்ணால் கவனித்த இன்ஸ்பெக்டர் மேலும் சில வார்த்தைகளை அழுத்தம் கொடுத்துபேசி திலீபை சற்று கலவர படுத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் திலீப் ஒருவனை கொலை செய்வது இதுதான் முதல் முறை என்னதான் பார்த்து பார்த்து கவனமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒரு சின்ன விஷயத்தில் கோட்டை விடுவான் அந்த பதட்டம் கொலை செய்த அந்த நேரத்தில் திலிபுக்கு மிக மிக அதிகமாகவே இருக்கும். அதனால் அலாரத்தை கையுறைக்கொண்டு அணைத்தோமா அல்லது வெறும் கையால் அணைத்தோமா என்ற மன போராட்டத்தை கிளப்பி விட்டது. (கொலை செய்வதே நோக்கமாக இருப்பவர்களே தன்னை அறியாமல் தடயத்தை விட்டு செல்கிறார்கள், கத்துகுட்டியான இவன் என்ன செய்வான்.)
உடனே இன்ஸ்பெக்டர் ஒரு வேலை செய்தார். அந்த அலாரத்தை சுரேஷ் கொலையுண்ட வீட்டில் எடுத்து வந்தவர், ஒரு கான்ஸ்டபிள் மூலம் திலீப் கண்படவே தன் தனியறையில் கண்ணில்படுமாறு வைக்க பணித்தார். மேலும் ஒரு கான்ஸ்டபிலை அழைத்து திலிபுடன் நான் பேச தொடங்கிய சில நிமிடங்களில் நீங்கள் வந்து ஏசி போனில் அழைப்பதாக என்னிடம் சொல்லி விட்டு நீ வெளியே போய் விடு என பணித்தார். எல்லாம் திட்டப்படி நடந்தது. கான்ஸ்டபிள் பின்னாடியே இன்ஸ்பெக்டர் போக அந்த அறையை ஒரு நோட்டம் விட்டான் திலீப் சில வினாடிகளில் அந்த அலாரம் தெரிந்தது. உடனே விரைந்து சென்று தன் கர்சீப்பால் அந்த ஆலாரத்தில் இல்லாத தன் கை ரேகைகளை அழித்து விட்டு விரைவாக வந்து உட்கார்ந்துக்கொண்டான். இதை அனைத்தையும் அந்த ரூமில் இருந்த ரகசிய சிசிடிவி காமிரா மூலம் கவனித்த இன்ஸ்பெக்டர் அந்த வீடியோவை லேப்டாபிள் பதித்துக்கொண்டார். அதன் பிறகு நடந்தது உங்களுக்கே தெரியும்.
திலீப் இப்போது ஏழு ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையை கழித்து வருகிறான். ஒரு பெண்ணிற்க்காக தன் உயிர் நண்பனை கொலை செய்தோமே என்று வருந்தி வருகிறான். அவன் வெளியில் வரும் போதாவது நல்ல மனிதனாக வரட்டும்.
சரி பிப்ரவரி 14 அன்று என்ன நடந்தது?
இதை வேற நான் மேலும் மூன்று பக்கம் எழுத வேண்டுமா? அது ஒரு முக்கோண காதல் கதை. அதை நண்பர்களான உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.
இந்த கதையை நான் எழுத தொடங்கும் போது கதாபாத்திரங்கள் பெயர்கள் தளத்தில் இருந்து தேர்ந்தெடுத்தேன். பின்னர் இது கொலை பின்னணி கொண்ட கதை என்பதால் அதை தவிர்த்து விட்டேன்.
இந்த கதைக்கு உருவம் கொடுக்க சில இரவுகள் சரியாக தூங்காமல் வீனடித்து இருக்கிறேன் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.
மீண்டும் ஒரு கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.
நட்புடன்
உங்கள் ஸ்ரீராம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
சரி வெற்றியாளர் யார்?
இதன் விடையை முதலில் முழுமுதலோன் அண்ணாதான் சொல்வார் என எதிர் பார்த்தேன். நான் கதை பதிவிட்ட பின்னர்தான் கவனித்தேன் அண்ணன் தளத்திலிருந்து 25 நிமிடங்களுக்கு முன்னே சென்று விட்டார் என்பதை. எனவே அவருக்கு தனிமடல் அனுப்பி வைத்துவிட்டு முகநூலில் பதிவிட்டேன்.
முகநூலில் பதிவிட்ட 15வது நிமிடத்தில் (நேரம்: 1:57pm) பிரபல பதிவரான ராஜபாட்டை ராஜா மேலையூர் அவர்கள் சரியான கிளைமாக்ஸ் பதிலை சொன்னார். எனவே அவர்தான் முதல் வெற்றியாளர்.
அடுத்த அரை மணி நேரத்தில் முழுமுதலோன் அண்ணா தனி மடலில் வேற ஒரு ஒரு பாயிண்ட் மேற்கோள்காட்டி சொன்னார். அடுத்த 20 நிமிடம் கழித்து தளத்தில் அந்த க்ளைமாக்ஸ் பதிலை சொன்னார். ராஜாவை விட ஒரு சில பாயிண்ட்கள் அதிகம் சொல்லி இருந்தாலும் முழுமுதலோன் அண்ணா இரண்டாம் இடத்தை பிடிக்கிறார். (அந்த நேரத்தில் அண்ணன் தளத்தில் இல்லாததால் அவர் இரண்டாம் இடம் பிடிக்க நேர்ந்தது என்றே எண்ணுகிறேன்.)
மூன்றாவது வெற்றியாளர். பிரசாந்த் பாபு. இவரும் முகநூலில் க்ளைமாக்ஸ் விடையை தந்தவர்.
இதை தவிர வாட்ஸ்ஆப்ல யாரும் சொல்லவில்லை.

வெற்றி பெற்ற +முயற்சி செய்த அனைவருக்கும்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
புதிருக்கான விடையை மிகவும் இரத்தின சுருக்கமாக பதிவு செய்த அன்பு தம்பி ஸ்ரீராமுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
ஸ்ரீராமுக்கு ஒரு சிறப்பு பாடல் சமர்ப்பணம்
@ஸ்ரீராம்
ஸ்ரீராமுக்கு ஒரு சிறப்பு பாடல் சமர்ப்பணம்
@ஸ்ரீராம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
நன்றி அண்ணா வீடியோ சூப்பர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|