Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
Page 1 of 1 • Share
புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
உறவுகளுக்கு மீண்டும் ஒரு புதிர் போட்டி
நீடாமங்கலத்தின் ஜமீன் செந்தில் அவர்களுக்கு பறவைகள் மற்றும் மிருகங்களை வேட்டையாடுவது என்றால் மிகவும் பிரியம் ஒரு நாள் வேட்டைக்குச்சென்று திரும்பிய செந்தில் தன் வேட்டை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தான் வேட்டையாடிக் கொண்டுவந்திருந்த ஒரு கொக்கைச் சமையல் காரரிடம் கொடுத்து இரவு உணவுக்கு சுவையாகச் சமைத்து வைக்கும்படி கூறினார்.
சமையல்காரன் அந்தக் கொக்கை உறித்து, பக்குவமாக மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். நன்றாக வெந்ததும், குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசை அடக்க முடியாமல் கொக்கின் ஒரு காலை எடுத்து ருசி பார்த்தவன் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கால் முழுவதையும் தின்றுவிட்டான். உண்ட பின்புதான், ஜமீன் கேட்டால் என்ன செய்வது என்ற பயம் ஏற்பட்டது. சரி...சரி எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என்று தெம்பாக இருந்தான்.
சாப்பாட்டு நேரம் வந்தது. ஜமீனும் சாப்பிட வந்து அமர்ந்தார். சமையல்காரன் சோறு போட்டு, கறிக்குழம்பை பறிமாறினான். சாப்பிட ஆரம்பித்த அவர், கொக்கின் ஒரு காலை எடுத்து ருசி பார்த்தார். மிகுந்த சுவையாக இருந்ததினால், அடுத்த காலையும் போடச் சொன்னார்.
திகைத்தான் சமையல்காரன். என்ன பேசுவது என்று ஒரு கணம் யோசித்தான். பிறகு மனதைத் திடப்படுத்திக்கொண்டு, " ஐயா.....கொக்குக்கு ஒரு கால்தானே இருக்கும். நீங்கள் பார்த்ததில்லையா?...எப்படி இல்லாத ஒரு காலைக் கொண்டு வரமுடியும்" என்றான்.
அப்போது சமையல்காரனுடன் வாதிட விரும்பாத ஜமீன் " சரி நாளைக்குக் காலையில் கொக்குக்கு ஒரு கால்தானா? இல்லை இரண்டு கால்களா என்பதைப் பார்த்துக்கொள்வோம்" என்று கூறிவிட்டு உணவை முடித்தார்.
மறுநாள் காலையில், வேலைக்காரனை அழைத்துக்கொண்டு வயல் வெளிப்பக்கமாகப் போனார் ஜமீன் . அங்கே குளக்கரைப்பக்கம் இருந்த ஒரு சிறு ஓடையில் கொக்குகள் நின்றிருந்தன.. சமையல்காரனிடம் கொக்குகளைக் காட்டிய ஜமீன் " இப்போது நன்றாகப் பார். கொக்குக்கு எத்தனை கால்கள்" என்று கேட்டார்.
"ஐய்யா நீங்களே நன்றாகப் பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரு காலில்தானே நிற்கின்றன.
எனவே கொக்குக்கு ஒரு கால்தான்" என்றான் சமையல்காரன்.
"அப்படியா" என்று சிரித்த ஜமீன், சூ....என்று கூறி கொக்குகளை விரட்டினார். ஒரு காலில் நின்றிருந்த கொக்குகள் எல்லாம், இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி வானத்தில் எழும்பிப் பறந்தன.
சமையல்காரனை கேலிப் புண்ணகையுடன் பார்த்த ஜமீன் இப்போது என்ன சொல்கிறாய். கொக்குக்கு எத்தனை கால்கள். ஒரு காலா.....அல்லது இரண்டு கால்களா?" என்றார்.
ஜமீன் இப்படிக் கேட்டதும் ஒரு கணம் திகைத்த சமையல்காரன் தனது சாதுர்யமான பதிலைக் கூறியதும், ஜமினுக்கு சமையல்காரன் மேல் இருந்த கோபம் எல்லாம் பறந்துபோனது.
அவனது பதிலை ரசித்துச் சிரித்த ஜமீன், அவன் செய்த தவறை மன்னித்தார்.
நண்பர்களே...................நீங்கள் இப்போது கூறுங்கள்.
சமையல்காரன் அப்படி என்ன ரசிக்கும்படியான பதிலை கூறியிருப்பான்.?
விடை தெரிந்தவர்கள் உடனே பதிவு செய்யுங்கள் ...
தெரியாதவர்கள் கொஞ்சம் யோசித்து பதிவு செய்யுங்க ...
சரியான விடை நாளை காலை பதிவு செய்யப்படும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
நீங்கள் நின்று கொண்டிருந்த கொக்கை வேட்டையாடி இருப்பீர்கள் என்று சொல்லி இருப்பான்
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
புதிர் பதிவுக்கு நன்றி அண்ணா. முழுவதும் படித்தேன்.
ஐய்யா நீங்கள் ஒற்றை காலில் நின்ற கொக்கின் காலை பார்த்து சுட்டதால் ஒரு கால் துண்டாக உடைந்து போய் இருக்கும். மற்றொரு காலைதான் நீங்க நேற்று இரவு சாப்பிட்டீர்கள். என்று சொல்லி இருப்பான்.
சரியா அண்ணா. ?
"ஐய்யா நீங்களே நன்றாகப் பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரு காலில்தானே நிற்கின்றன.
ஐய்யா நீங்கள் ஒற்றை காலில் நின்ற கொக்கின் காலை பார்த்து சுட்டதால் ஒரு கால் துண்டாக உடைந்து போய் இருக்கும். மற்றொரு காலைதான் நீங்க நேற்று இரவு சாப்பிட்டீர்கள். என்று சொல்லி இருப்பான்.
சரியா அண்ணா. ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
2.
கரகாட்டக்காரன் வாழை பழம் காமடி போல அந்த கால்தான் இது என்று சமையல்காரர் சொல்லி இருப்பாரோ.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
அருமை அருமை நன்றாக சிந்தனை செய்து பதிலை அளித்துள்ளிர்கள்
ஆனால் சமையல்காரன் சொன்ன சாதுரியமான பதில் இது வல்ல
இந்த புதிருக்கான பதில் இந்த புதிரிலயே உள்ளது ஸ்ரீராம் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டு பிடித்து விடுவார் என எண்ணுகிறேன்
இது கொஞ்சம் வித்தியாசமான் பதில்
மீண்டும் ஒரு முறை மந்திரவாதி போல புதிரை படியுங்கள் உடனே விடை கிட்டும்
ஆனால் சமையல்காரன் சொன்ன சாதுரியமான பதில் இது வல்ல
இந்த புதிருக்கான பதில் இந்த புதிரிலயே உள்ளது ஸ்ரீராம் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டு பிடித்து விடுவார் என எண்ணுகிறேன்
இது கொஞ்சம் வித்தியாசமான் பதில்
மீண்டும் ஒரு முறை மந்திரவாதி போல புதிரை படியுங்கள் உடனே விடை கிட்டும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
ஓ அப்படியா. சரி படிக்கிறேன் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
உங்களின் பதிலை பார்த்த பின்னரே சரியான விடையை பதிவு செய்கிறேன் @ஸ்ரீராம் உங்களுக்கு ஒரு குளுவும் கொடுத்து உள்ளேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
பலமாக யோசித்தும் கண்டுபிடிக்கவில்லையே அண்ணா
வெற்றி உங்களுக்குதான் போல...
வெற்றி உங்களுக்குதான் போல...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
யோசித்து யோசித்து தலை வலியே வந்துட்டு. நீங்களே விடையை சொல்லி விடுங்க அண்ணா.
உங்கள் அடுத்த புதிரில் தீவிரமா முயற்சி செய்கிறேன்.
உங்கள் அடுத்த புதிரில் தீவிரமா முயற்சி செய்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
புதிர் விடை :
"ஐயா.....இப்போது நீங்கள் கொக்கைப் பார்த்து சூ........ என்றதும் ஒரு கால், இரண்டு கால்களாக மாறியதே?...அதேபோல நீங்கள் உணவருந்தும்போதும் சூ என்று கூறியிருந்தால் ஒருகால் இரண்டு கால்களாக மாறியிருக்கும்"என்று கூறி இருப்பான்
இது தான் அந்த புதிரின் சரியான விடை
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் முழுமுதலோனின் வாழ்த்துக்கள்
மீண்டும் அடுத்த போட்டியில் நாளை சந்திப்போம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி #38 சரியான பதிலை சொல்லுங்க !!பரிசினை வெல்லுங்க !!
"ஐயா.....இப்போது நீங்கள் கொக்கைப் பார்த்து சூ........ என்றதும் ஒரு கால், இரண்டு கால்களாக மாறியதே?...அதேபோல நீங்கள் உணவருந்தும்போதும் சூ என்று கூறியிருந்தால் ஒருகால் இரண்டு கால்களாக மாறியிருக்கும்"என்று கூறி இருப்பான்.
இத நான் யோசிக்க விட்டேனே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் விருந்து - போட்டி எண் 31
» புதிர் விருந்து - போட்டி எண் 33
» திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
» புதிர் விருந்து - போட்டி எண் 33
» திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #45
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|