தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ஸ்ரீராம் Wed Mar 05, 2014 5:23 pm

First topic message reminder :

சென்னை நகரில் ரோபோக்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பல இருந்தாலும் இரண்டு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அவற்றில் முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்க்கொண்டது வடபழனியில் உள்ள GK இன்போ சிஸ்டம்ஸ்தான், அதன் நிறுவனர் திரு. கணபதி கேசவன் மார்க்கெட்டில் புது புது டிசைன்களில் ரோபோக்களை தயாரித்து வெளியீட்டு தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அதன் காரணமாக தொழில் ரீதியாக பொறாமை அதிகரித்து வந்தது .

தனக்கு இந்த நிலை தொடர்ந்தால் நிலமை மோசமாகிவிடும் என உணர்ந்த இரண்டாம் இடத்தில் இருக்கும் எஸ்‌ஆர்‌கே சிஸ்டம்ஸ் சுனில் ஷர்மா உடனடியாக நிறுவன மேலாளர்களையும், இயக்குனர்களையும் அழைத்து கூட்டம் போட்டு விவாதித்தனர், திரு. கணபதி கேசவன் நேர்மையாக தொழில் செய்பவர், தன்னிடம் உள்ள அனைத்து பணியாளர்களுடன் தேரடி தொடர்பு வைத்து இருப்பதால், தொழிலாளிகளும் கடுமையாக உழைக்கிறார்கள், அவர்களில் ஒருவரை கூட நாம் விலை கொடுத்து வாங்க முடியாது, மேலும் அவருடன் நேரடியாக போட்டி போட்டு ஜெயிக்க முடியாது, மறைமுகமாதான் வெல்லவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த விஷயம் திரு. கணபதி கேசவன் அவர்களின் காதுக்கும் எட்டியது, அவர் மனம் சஞ்சலப்பட்டது, என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை, தெரிந்தாலும் எச்சரிக்கையாக இருக்கலாம். அந்த நேரத்தில் அவரது கார் அண்ணா சாலையில் அண்ணா தியட்டர் எதிரே உள்ள சிக்னலில் நின்றுக்கொண்டிருந்தது, தியாட்டார் வாசலில் தெரிந்த ஒரு பெரிய பேனர் ஒன்றை கவனித்தார், சிறிது நேரத்தில் பச்சை சிக்னல் கிடைத்து கார் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு நிறுவன பெயர் பழகையை கவனித்தார், சற்று முன் கண்ட சினிமா பேனருக்கும் அந்த பெயர் பழகைக்கும் ஒரு சம்பந்தம் இருந்தது, அது ஒரு பிரபல துப்பறியும் நிறுவனம் (Deductive Agency). உடனே காரை நிறுத்த சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி ஏஜன்சி உள்ளே சென்றார், வாசலில் நின்ற செக்யூரிட்டி தேவையான தகவல்களை பதிந்து உள்ளே செல்ல அனுமதித்தார், உள்ளே அந்நிறுவனராக இருந்த முரளிராஜாவை சந்தித்து தன் கேள்விப்பட்ட தொழில் பிரச்சனையை எடுத்துக்கூறி தனக்கு உதவும்மாறு கேட்டார். அவரும் கண்டிப்பாக உதவுகிறோம் இங்கே எங்களிடம் பல துப்பறியும் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை தேந்தெடுத்துக்கொள்ளுங்கள் என பட்டியலை நீட்டினார்.

அந்த பட்டியலில் மகா பிரபு, இனியவன், ஸ்ரீராம், மொகைதீன், ரமேஷ், முத்து, சசிகுமார், செந்தில்... என பெரிதாக நீண்டது, பட்டியலை வாங்கி அதில் லில்ஸ்டில் உள்ளவர்களை ஒருமுறை பார்த்தவர், மூன்றாவதாக இருந்த ஸ்ரீராம் என்ற துப்பறியும் ஏஜெண்டை தேந்தெடுத்து மற்ற விவரங்களையும் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் கணபதி கேசவன். இப்போது அவருக்கு சற்று மன பாரம் குறைந்திருந்தது.

அன்று மாலை பொழுதிலேயே ஸ்ரீராம் GK இன்போ சிஸ்டம்ஸ் வந்துவிட்டார், அவரை அன்புடன் வரவேற்ற திரு. கணபதி கேசவன், ஸ்ரீராம்க்கு தனியாக அக்சஸ் கார்டை தந்து உள்ளே அழைத்து சென்று வரும் ஆபத்துகள், பிரச்சனைகள் பற்றி அனைத்தையும் விவாதித்தார். கொஞ்சம் நாட்களுக்கு புதிதாக யாரையும் பணியில் அமர்த்தவேண்டாம் என்ற ஸ்ரீராம் அந்நிறுவனத்தில் வெளிப்புற காமிராக்கள் கூடுதலாக அமைக்கவேண்டும் என
கேட்டுக்கொண்டார், அதை ஆமோதித்த நிறுவனர் அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுமார் செக்யூரிட்டிகளுக்கு ஆணையிட்டார். அன்றைய தினமே ஸ்ரீராம் தனது பணியை ஆரம்பித்தார் செக்யூரிட்டிகள் அனைவரும் விழிப்புடன் இருந்தனர். அவ்வப்போது கன்ரோல் ரூமில் தெருவை நோட்டமிட்டனர். ஸ்ரீராம் பகல் நேரங்களில் ஓய்வு எடுத்துக்கொள்வார். நாட்கள் சில உருண்டோடியது எந்த பிரச்சனையும் இதுவரை நடைபெறவில்லை. திரு. கணபதி கேசவன் அவர்களுக்கும் தனக்கு வந்த செய்தி தவறாக இருக்குமோ என நினைத்தார், இருப்பினும் அனைவரையும் விழிப்புடன் இருக்க சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.

அன்றைய தினம் இரவு நல்ல மழை கொட்டி தீர்த்தது, இந்த நேரத்தில் கண்காணிப்பு காமிராவில் ஒரு பெண் அருகில் ஓடி வருவதாக கண்ட்ரோல் ரூம் மானிட்டரில் தெரிந்தது, ஸ்ரீராம் உடனே அங்கிருந்து அலுவலக வாசலை அடைந்த நேரத்தில் அந்த பெண்ணும் வாசலில் வந்து அந்த கண்ணாடி கதவை தட்டினாள். ஸ்ரீராம் தனது அக்சஸ் கார்ட் மூலம் கண்ணாடி கதவை திறந்து என்னாச்சு யார் நீ என்றான், அந்த பெண் ஜீன்ஸ் பேண்டும், டீ ஷர்ட்டும் அணிந்து இருந்தாள், அவள் தான் லிபார்ட்டி அருகில் வாசிப்பதாகவும், தோழி வீட்டிற்கு பார்ட்டிக்கு வந்தவள் அங்கிருந்து லேட்டாக கிளம்பியதால் வரும் வழியில் தன்னை ஐந்தாறு பேர் துரத்தி வருவதாக சொன்னாள். ஸ்ரீராம் வெளியில் எட்டி பார்த்தபோது சற்று தூரத்தில் சிலர் ஓடி வருவது தெரிந்தது. அந்த நேரத்தில் வானத்தில் மின்னல் தோன்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அவர்கள் கையில் ஆயுதங்களுடன் வருவதை கண்ட ஸ்ரீராம், உடனே கதவை மூடி, அனைவரையும் எச்சரிக்கையாக இருக்க செய்து விட்டு அந்த பெண்ணின் கையை பிடித்து விடுவிடுவேன இழுத்துக்கொண்டு போய் ரிசப்னிஸ்ட் பயன்படுத்தும் அறையில் உள்ளே தள்ளி ரூமின் வெளியே உள்ள தாழ்பாளை போட்டு விட்டு திரும்பினான். ஒரு செக்யூரிட்டி அங்கே வந்து சார் இந்த பெண்ணை துரத்திக்கொண்டு வந்தவர்கள் அனைவரும் நேராக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றான். ஸ்ரீராம் புன்னகைத்தவாறே உடனே கணபதி கேசவன் அவர்களுக்கும், போலீஸ்க்கும் தகவல் தருமாறு பணித்தார் செக்யூரிட்டிகள் சற்று ஆச்சிரியப்பட்டாலும் இருபக்கமும் தகவல் கொடுக்கப்பட்டது.

மறுநாள் காலை போலீஸ் ஸ்டேஷனில் அந்த பெண்ணை போலீஸ் முறைப்படி விசாரித்ததில் எல்லா விஷயங்களை சொல்லிவிட்டால், தான் எஸ்‌ஆர்‌கே சிஸ்டம்ஸ் சுனில் சர்மாவால் அனுப்பப்பட்டவள் என்றும், தன்னிடம் சில அதிதொழில்நுட்பம்‌ வாய்ந்த கண்ணுக்கு புழப்படாத பாட்டரி மூலம் இயங்கும் காமிராவை கொடுத்து அதை அங்கே சில இடங்களில் பொருத்திட பணித்தார் என்றாள். அதனால் அவர்கள் தயாரிக்கும் மாடலை/பொருளை அவர்களுக்கு முன்பே தயாரித்து மார்க்கட்டில் கிடைக்கும்படி செய்தால் GK இன்போ சிஸ்டம்ஸ் நாளடைவில் படுத்து விடும் என திட்டம்தீட்டப்பட்டது என தெரிந்தது, உடனடியாக சுனில் ஷர்மாவையும் கைது செய்தனர்.

அஸ்சிஸ்டன்ட் கமிஷ்னர் ஜேக் ஸ்ரீராமை நோக்கி நீங்க எப்படி கண்டுபிடித்தீர்கள் என்றார்?

ஸ்ரீராம் சொல்ல தொடங்கினார்.....................

சரி கேள்வி என்னவென்றால் ஸ்ரீராம் எப்படி இந்த பெண்தான் குற்றவாளியென்று கண்டுபிடித்தார்.?

சரியான பதிலை சொல்பவர்கள் என் அடுத்த துப்பறியும் கதையின் நாயகனாக வருவார்.

இந்த கதையை சில வாரங்களாக அவ்வப்போது வோர்டில் எழுதி வந்தேன், இன்று பதிவிட்டு இருக்கிறேன். கதையில் தவறுறிந்தால் சுட்டி காட்டுங்கள். அடுத்த புதிரில் சந்திக்கலாம்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முழுமுதலோன் Fri Mar 07, 2014 12:44 pm

ஜேக் wrote:திரு. கணபதி கேசவன் நேர்மையாக தொழில் செய்பவர், தன்னிடம் உள்ள அனைத்து பணியாளர்களுடன் தேரடி தொடர்பு வைத்து இருப்பதால், தொழிலாளிகளும் கடுமையாக உழைக்கிறார்கள்,

சாப்பிட போறேன் வரிங்களா ஜேக் நல்ல சுவையான உணவு காத்து கிட்டு இருக்கு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முரளிராஜா Fri Mar 07, 2014 12:46 pm

ஜேக் wrote:
முழுமுதலோன் wrote:எங்க நம்ம தலையை காணோம்

பிரபுவை பாராட் விட்டீர்கள்தானே... இப்ப பாருங்க... உடனே சிக்கிரமா எங்கிருந்தாலும் உடனே வந்துவிடுவார் பாருங்கள்.... நக்கல் 
வந்துட்டோம்ல  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ஜேக் Fri Mar 07, 2014 12:46 pm

அசைவம்தானே... நக்கல்  இதோ நான் உடனே முள்ளியை அழைச்சிட்டு வர்றேன் நக்கல் நக்கல் நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முரளிராஜா Fri Mar 07, 2014 12:48 pm

ஜேக் wrote:அசைவம்தானே... நக்கல்  இதோ நான் உடனே முள்ளியை அழைச்சிட்டு வர்றேன் நக்கல் நக்கல் நக்கல் 
வாழ்த்தியமைக்கு நன்றி ஜேக் 
ஆனா நீங்க நினைக்கற மாதிரி அசைவம் கிடையாது  அண்ணா வீட்ல  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by செந்தில் Fri Mar 07, 2014 1:13 pm

முரளிராஜா wrote:மன்னிக்கவும் அண்ணா இன்று எனக்கு திருமண நாள் அதான் வர இயலவில்லை 
காலையிலேயே வைத்திஸ்வரன் கோயில் போய்விட்டேன்  புன்முறுவல்

கொண்டாட்டம் வாழ்த்துக்கள் அண்ணா  கொண்டாட்டம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by மகா பிரபு Fri Mar 07, 2014 1:47 pm

நன்றி நன்றி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ந.கணேசன் Fri Mar 07, 2014 1:55 pm

இந்த விளையாட்டுக் கெல்லாம் நான் வரலே சார்...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ஸ்ரீராம் Fri Mar 07, 2014 2:20 pm

ஜேக் wrote:சந்தேகம் 2:

ஐந்து பேர் துரத்தி வருவதாக சொன்ன அந்தப் பெண்ணின் முகத்தில் கொஞ்சம் கூட பதட்டமோ, பயமோ, படபடப்போ இல்லாது கண்டு ராம் ஆச்சரியப்பட்டார்.

சந்தேகம் 3:

கையைப் பிடித்து இழுத்து அறையில் தள்ளி அடைத்தவுடன் மறுபேச்சின்றி உள்ளே இருக்கிறாள். காரணம்... தனக்கு உள்ளே நுழைய கிடைத்த அரிய சந்தர்ப்பம் என கருதினாள்.

சந்தேகம்: 4:

அறியாத ஒரு நபர் காப்பாற்றுகிறேன் பேர்வழி என சொல்லி தன் கையை தொட அனுமதித்த செயல் நெருடலை ஏற்படுத்துகிறது.

சந்தேகம் 5:

ரிசஷப்னில் பெரும்பாலும் பெண்களும் இருப்பார்கள் . அப்படியிருக்க... அறைக்குள் தள்ளி அடைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியிருந்தும், அப் பெண் இந்நிலையை கண்டு துளிகூட அச்சப்படவில்லை. பதட்டப்படவில்லை.

சந்தேகம் 6:

முன்பின் அறிந்திராத அறையில் சென்று பாதுகாப்பை தேடியது ஆச்சரியம். அதுவும் தனியாக.

இதில் எதுசரி என தாங்கள்தான் கூற வேண்டும்.

தொடர்ந்து கலக்குரிங்க ஜேக். முக்கியமான துப்பு இருக்கும் இடத்திற்க்கு அருகில் வருகிறீர்கள், அப்புறம் அதை தவிர மற்ற விஷயங்களை சொல்றீங்க.

இன்னும் முயற்ச்சியுங்கள்; மாலை நான் விடை அறிவிப்பேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ரானுஜா Fri Mar 07, 2014 2:49 pm

அட இப்பவே சொல்லுங்க ராம்..........சாயந்திரம் நான் வீட்டுக்கு போயிடுவேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முரளிராஜா Fri Mar 07, 2014 3:02 pm

அக்காவின் ஆர்வத்தை பாருங்கள் ஸ்ரீ ராம்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ரானுஜா Fri Mar 07, 2014 3:10 pm

முரளிராஜா wrote:அக்காவின் ஆர்வத்தை பாருங்கள் ஸ்ரீ ராம்  புன்முறுவல்

எனக்கு துப்பறியும் க்ரைம் கதை ரொம்ப பிடிக்கும். ஏன் உங்களுக்கு ஆர்வமில்லையா பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ஸ்ரீராம் Fri Mar 07, 2014 5:40 pm

சரி விடையை சொல்லிவிடுகிறேன்:

ஸ்ரீராம் ஏன் அந்த பெண்ணின் கையை பிடித்து அழைத்து போகணும்? போய் அந்த ரூமில் இருங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றல்லவா சொல்லி இருக்கவேண்டும். ஆனால் அவ்வண்ணம் செய்தமைக்கு காரணம் இருக்கிறது.

உண்மையிலேயே ஒரு பெண் தன் உயிருக்கு பயந்து தறிகெட்டு ஓடி வந்தால் அவளது இதயம் அதிக வேகமாக இயங்கும், மூச்சு அதிகம் விட வேண்டிவரும். பொதுவாக மனிதர்கள் ஒரு நிமிடத்தில் 16 -18 தடவை மூச்சை உள் இழுத்து வெளியில் விடுகின்றனர். இது போன்ற நேரங்களில் இரண்டு மூன்று மடங்கு மேல் மூச்சு விடுவார்கள். எந்த ஒரு டாக்டரோ அல்லது இது போன்ற துப்பறியும் நிபுணர்கள் ஒருவரின் கையை சிறிது நேரம் பிடித்து நாடி பார்த்தாலே அந்த நபரின் மூச்சின் அளவை/வேகத்தை எளிதாக கணிக்க முடியும். மேலும் நிஜமாகவே பயத்துடன் பெண் ஓடி வரும்போது முகம் சிவந்து வெளிறி விடும். முகத்தில் ஒரு விதமான பய ரேகை தென்படும்.

சுனில் சர்மாவின் திட்டத்தின் படி சிலரை ஆயுதங்களுடன் துரத்தி வரும்படி முன் ஏற்பாடோடு அருகில் உள்ள தெரு முனையில் ஆரம்பித்து நாடகம் தொடங்கியது, திட்டமிட்டபடி அப்பெண் நிறுவனத்தின் கண்ணாடி கதவுகளை தட்டினாள், ஸ்ரீராம் கண்ணாடி கதவை திறந்து விவரம் கேட்டார், பின்னால் துரத்தி வந்தவர்களையும் பார்த்தார், அப்போது அந்த பெண்ணின் முகத்தை பார்த்தார், பெண்ணின் முகத்தில் எந்த விதமான பய ரேகையும் தெரியவில்லை, முகம் சாதாரமாக இருந்தது, இது சந்தேகத்தை கிளப்பிவிட அவள் கையை பிடித்து விடு விடுவேன அழைத்து செல்வது போல அவள் நாடியை கவனித்த போதே தெரிந்துவிட்டது அந்த பெண் உயிருக்கு பயந்து ஓடி வரவில்லை, நிறுவனத்துக்கு ஏதோ சதி செய்யவே வந்திருப்பவள்.

இப்ப புரியுதா உறவுகளே?

கடந்த இரண்டு நாட்களாக பலர் பல்வேறு விதங்களில் விடைகள் குவிந்தது நிறுவனர் திரு. கணபதி கேசவன் அவர்களும் கமிஷ்னர் ஜெக்கும் பல இடங்களில் நெருங்கி வந்தார்கள்.

அடுத்த புதிரின் கதாநாயகனை அடுத்த புதிரில் பாருங்கள்....

மீண்டும் அடுத்த துப்பறியும் புதிரில் சந்திக்கலாம். நன்றி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ரானுஜா Fri Mar 07, 2014 6:14 pm

சூப்பர் நன்றி ஸ்ரீராம் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முரளிராஜா Fri Mar 07, 2014 6:42 pm

இன்னிக்காது நிம்மதியா தூங்குங்க அக்கா  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முரளிராஜா Fri Mar 07, 2014 7:52 pm

ராம் அந்த பெண்ணை கைய பிடித்து இழுத்தப்பவே சந்தேகப்பட்டேன்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by மகா பிரபு Fri Mar 07, 2014 8:45 pm

வாழ்த்துக்கள் அண்ணா. இதற்காக பல தகவல்களை திரட்டி உள்ளீர்கள்.

கமிஷனர் மற்றும் GK நிறுவனர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ஜேக் Fri Mar 07, 2014 9:22 pm

முரளிராஜா wrote:ராம் அந்த பெண்ணை கைய பிடித்து இழுத்தப்பவே சந்தேகப்பட்டேன்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

புதிருக்கு எந்த ஒரு பதிலும் சொல்லா விட்டால் இப்படிப்பட்ட சந்தேகம்தான் வரும் பயந்து ஓடு  பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முரளிராஜா Fri Mar 07, 2014 10:43 pm

நக்கல்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முழுமுதலோன் Sat Mar 08, 2014 9:54 am

ப்பூ... இவ்வளவு தானா !!! நான் என்னவோ எதோ என்று நினைத்து விட்டேன் ... இருந்தாலும் கையை பிடித்து ஆளை நோட்டம் பார்க்கிற அளவுக்கு நீங்கள் தேறி விட்டிர்கள் . பொதுவாக சொல்லுவார்கள் கண் அளப்பதை கை அளக்காது என்று ஆனால் நீங்கள் கையை பிடித்து ...

எப்படி இருந்தாலும் வாழ்த்துக்கள் .....

இந்த புதிரின் மூலம் தம்பி ஸ்ரீராம் தனது  சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் மனப்பூர்வமாக மகிழ்ச்சியாக நிறைவேற்றி கொண்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை .....

நம் அனைவரின் பெயரையும் புதிரில் பதிவிட்டு உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த அன்புத்தம்பிக்கு 
மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ....

வாழ்க வளமுடன் ......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முரளிராஜா Sat Mar 08, 2014 10:00 am

முழுமுதலோன் wrote:

இந்த புதிரின் மூலம் தம்பி ஸ்ரீராம் தனது  சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் மனப்பூர்வமாக மகிழ்ச்சியாக நிறைவேற்றி கொண்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை .....

ஹா ஹா முற்றுலும் உண்மை அண்ணா  நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ஸ்ரீராம் Sat Mar 08, 2014 10:16 am

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் அண்ணா. இதற்காக பல தகவல்களை திரட்டி உள்ளீர்கள்.

கமிஷனர் மற்றும் GK நிறுவனர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

அது உண்மைதான் தம்பி.

இந்த சிறுகதையை எழுத ஆரம்பித்த போதே பல விஷயங்களுக்கு ஆதாரங்கள் தேவைப்படாது. இணையத்தில் தேடி பெற்றுக்கொண்டேன்.

தினம் வீட்டில் இருந்து அழுவலகம் மவுண்ட் ரோட் வழியாக செல்லும்போதெல்லாம் அந்த துப்பறியும் நிறுவனங்களை பார்த்தபடியே செல்வேன்.

இப்படி திரட்டிய விஷயங்கள் தான் இந்த சிறுகதை.

குறிப்பு: அடுத்த புதிர் ஒரு கொலை வழக்கு, நம்ம கதாநாயகன் அதில் அசிஸ்டண்ட் கமிஷ்னராக வருகிறார்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ஸ்ரீராம் Sat Mar 08, 2014 10:17 am

முழுமுதலோன் wrote:
இந்த புதிரின் மூலம் தம்பி ஸ்ரீராம் தனது  சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் மனப்பூர்வமாக மகிழ்ச்சியாக நிறைவேற்றி கொண்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை .....

அது என்ன அண்ணா?  அதிர்ச்சி அதிர்ச்சி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முழுமுதலோன் Sat Mar 08, 2014 10:32 am

ஸ்ரீராம் wrote:குறிப்பு: அடுத்த புதிர் ஒரு கொலை வழக்கு

G K நிறுவன அதிபரை தயவு செய்து கொலை செய்ய வேண்டாம் காரணம் இன்னும் அமர்க்களத்தில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது ....சுகமான குடும்ப சுமைகளை சுமந்து கொண்டுள்ளார் .... என்னற்ற பொறுப்புகள் அவரிடம் அதிகமாக உள்ளது . எனவே அவரை விட்டு விடுங்கள் ..... பொழைத்து போகட்டும் ..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by ஸ்ரீராம் Sat Mar 08, 2014 10:39 am

முழுமுதலோன் wrote:
ஸ்ரீராம் wrote:குறிப்பு: அடுத்த புதிர் ஒரு கொலை வழக்கு

G K நிறுவன அதிபரை தயவு செய்து கொலை செய்ய வேண்டாம் காரணம் இன்னும் அமர்க்களத்தில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது ....சுகமான குடும்ப சுமைகளை சுமந்து கொண்டுள்ளார் .... என்னற்ற பொறுப்புகள் அவரிடம் அதிகமாக உள்ளது . எனவே அவரை விட்டு விடுங்கள் ..... பொழைத்து போகட்டும் ..

அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் அண்ணா.

நான் கேட்ட கேள்விக்கு பதிலே காணோம் அண்ணா புன்முறுவல்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by முரளிராஜா Sat Mar 08, 2014 10:41 am

ஸ்ரீராம் wrote:
முழுமுதலோன் wrote:
இந்த புதிரின் மூலம் தம்பி ஸ்ரீராம் தனது  சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் மனப்பூர்வமாக மகிழ்ச்சியாக நிறைவேற்றி கொண்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை .....

அது என்ன அண்ணா?  அதிர்ச்சி அதிர்ச்சி
ஒரு பெண்ணை கைய பிடித்து இழுத்து கொண்டு போய் விட்டு
ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி எப்படிதான் உங்களால் இப்படி கேள்வி கேட்க முடியுதோ  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26 - Page 3 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum