by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
No user |
வரலாற்றில் இன்று
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
வரலாற்றில் இன்று
நவம்பர் 01
1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.
1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.
1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.
1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.
1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.
194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.
1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.
1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.
1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.
1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.
2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]
1903: சிகாகோ நகரில் அரங்கமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 600 பேர் பலி.
1922: சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப்பட்டது. 22,402,200 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட மிகப்பெரிய நாடாக அது விளங்கியது.
1943: அந்தமானின் போர்ட் பிளெயர் நகரில் இந்திய சுதந்திரக்கொடியை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஏற்றினார்.
1965: பிலிப்பைன்ஸில் பேர்டினன்ட் மார்கோஸ் ஜனாதிபதியானார்.
1993: இஸ்ரேலும் வத்திகானும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தன.
1996: இந்தியாவின் அஸாம் மாநில ரயில் குண்டுவெடிப்பில 26 பேர் பலி.
1997: அல்ஜீரியாவில் கிளர்ச்சியின் காரணமாக 400 பேர் பலி.
2004: ஆர்ஜென்டீனாவின் புவனேர்ஸ் அயர்ஸ் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் 194 பேர் பலி.
2006: மட்ரிட் நகரில் சர்வதேச விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு.
2006: ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் 148 ஷியா இனத்தவர்களை கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டுதூக்கிலிடப்பட்டார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]
1492 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.
1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பல அங்காடி உரிமையாளர்கள் தமது அங்காடிகளின் பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
1862 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.
1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது
1909 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.
1909 - வானொலியின் தந்தை என்று போற்றப்படும் மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
1946 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1963 - மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.
1981 - கானாவில் இடம்பெற்ற இராணிவப் புரட்சியில் அதிபர் ஹில்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
1986: பியூர்ட்டோ ரிக்கோவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 97 பேர் பலி.
1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அதிபராகத் தெர்ர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன
1992: செக்கஸ்லோவாக்கியா நாடானது செக் குடியரசு, ஸ்லோவாக்கியா என இரு நாடுகளாக பிரிந்தது.
1994 - பீனிக்ஸ் தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
1999 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
2006 - ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]கி.மு. 45: ஜூலியன் கலண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1600: ஸ்கொட்லாந்தில் வருடம் ஆரம்பிக்கும் தினம் மார்ச் 25 இலிருந்து ஜனவரி முதலாம் திகதிக்கு மாற்றப்பட்டது.
1772: முதலாவது பயணக் காசோலை லண்டனில் விநியோகிக்கப்பட்டது.
1800: டச்சு கிழக்கிந்திய கம்பனி கலைக்கப்பட்டது.
1804: ஹெய்ட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவடைந்தது.
1808: அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டது.
1833: பாக்லாந்து தீவுகளுக்கு பிரிட்டன் உரிமை கோரியது.
1872: இலங்கையில் பிரித்தானிய நாணயத்திற்குப் பதிலாக ரூபா நாணயம் பாவனைக்கு வந்தது.
1877: பிரிட்டனின் விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் ஆட்சித் தலைவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.
1899: கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுற்றது.
1949: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தம் ஐ.நா.வின் போர் நிறுத்த தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.
1958: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னோடியாக அமைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஸ்தாபிக்கப்பட்டது.
1959: கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியை கவிழ்த்தன.
1978: எயார் இந்தியா விமானம் மும்பையில் விபத்துக்குள்ளானதால் 213 பேர் பலி.
1984: பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் பெற்றது.
2002: ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளில் யூரோ நாணயம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.
2007: ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் ,கொழும்பில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
2007: இந்தோனேஷியாவில் 102 பயணிகளுடன் விமானமொன்று காணாமல் போனது.
2009: தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 66 பேர் பலி.
2010: பாகிஸ்தானில் கரப்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 105 பேர் பலி. நூற்றுக்கும் அதிகமானோர் காயம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]533: பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட மேர்கூரியஸ் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் என்ற பெயரை சூடிக்கொண்டார். பாப்பரசராக தெரிவானபின் புதிய பெயரை சூடிக்கொண்ட முதல் பாப்பரசர் இவர்.
1833: பாக்லாந்தில் மீண்டும் பிரித்தானிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
1942: ஜப்பானிய படைகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றின.
1955: பனாமா ஜனாதிபதி ஜோஸ் அன்டானியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
1959: சோவியத் யூனியன் லூனா 1 விண்கலத்தை ஏவியது.
1971: ஸ்கொட்லாந்தில் இரு கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியின்போது ஏற்பட்ட மோதலில் 66 ரசிகர்கள் கொல்லப்பட்டனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1431: பிரான்ஸில் ஆங்கிலப் படைகளை எதிர்த்து போராடிய ஜோன் ஒவ் ஆர்க் எனும் சிறுமி ஆயர் பியர் கௌசோனிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டாள்.
1496: லியார்னோடா டாவின்சி மேற்கொண்ட பறக்கும் இயந்திர சோதனை தோல்வியுற்றது.[You must be registered and logged in to see this image.]
1521: பாப்பரசர் 10 ஆம் லியோ, மார்டின் லூதரை சமூகப் பிரஷ்ட் செய்தார்.
1815: பிரஷ்யா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியன ரகசிய பாதுகாப்புக் கூட்டணி அமைத்தன.
1925: இத்தாலியில் பெனிட்டோ முசோலினி அதிகாரத்திற்கு வந்தார்.
1947: அமெரிக்க நாடாளுமன்ற விவாதங்கள் முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.
1956: ஈபில் கோபுரத்தின் மேற்பகுதி தீயினால் சேதமடைந்தது.
1957: ஹமில்டன் கைக்கடிகார நிறுவனம் முதலாவது இலத்திரனியல் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது.
1958: மேற்கிந்திய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1959: அலாஸ்கா, அமெரிக்காவின் 49 ஆவது மாநிலமாக்கப்பட்டது.
1961: கியூபாவுடனான உறவை அமெரிக்கா துண்டித்தது.
1962: பாப்பரசர் 23 ஆம் அருளப்பர் பிடெல் காஸ்ட்ரோவை சமூகப் பிரஷ்டம் செய்தார்.
1990: பனாமா முன்னாள் ஜனாதிபதி மனுவல் நொரீகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.
1993: மொஸ்கோவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸின் ஆகியோர் அணுவாயுத குறைப்பு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.
1994: ரஷ்யாவில் விமான விபத்தொன்றில் 125 பேர் பலி.
1999: செவ்வாய் கிரகத்தை நோக்கி மார்ஸ் போலார் லாண்டர் விண்கலம் ஏவப்பட்டது.
2004: எகிப்திய விமானமொன்று செங்கடலில் வீழ்ந்ததால் 148 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.]கி.மு. 45: ரஷ்பினா சமரில் டைட்டஸ் லாபீனஸை ஜூலியஸ் சீசர் தோற்கடித்தார்.
1642: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், நாடாளுமன்ற அங்கத்தவர்களை கைது செய்வதற்கு படையினரை அனுப்பியதையடுத்து சிவில் யுத்தம் மூண்டது.
1762: ஸ்பெய்ன் மற்றும் நேப்பிள்ஸ் மீது பிரிட்டன் யுத்தப் பிரகடனம் செய்தது.
1865: நியூயோர்க் பங்குச் சந்தை தனது முதலாவது நிரந்தர தலைமையகத்தை நியூயோர்க் நகர வோல் ஸ்ரீட்டில் திறந்தது.
1948: பிரிட்டனிடமிருந்து பர்மா சுதந்திரம் பெற்றது.
1951: கொரிய யுத்தத்தில் சீன-வடகொரிய படைகள் சியோல் நகரை கைப்பற்றின.
2004: நாசாவினால் ஏவப்பட்ட மார்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
2007: அமெரிக்காவில் முதலாவது பெண் சபாநாயகராக நான்ஸி பெலோஸி தெரிவானார்.
2010: உலகின் மிக உயர்ந்த கட்டிடமான கட்டிடமான 'புர்ஜ் கலீபா' (2717 அடி) துபாயில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1846: அமெரிக்காவின் ஓரிகன் பிராந்தியத்தை பிரிட்டனுடன் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.
1854: சான் பிரான்ஸிஸ்கோவில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 300 பேர் பலி.[You must be registered and logged in to see this image.]
1896: வில்லியம் ரொஞ்ஜன் கதிர்வீச்சொன்றை கண்டுபிடித்ததாக ஆஸ்திரிய பத்திரிகையொன்று செய்திவெளியிட்டது. இக்கதிர்வீச்சு எக்ஸ்றே கதிர் எனப் பிரபலமாகியது.
1909: பனாமாவின் சுதந்திரத்தை கொலம்பியா அங்கீகரித்தது.
1925 - திருமதி. நெலி டெய்லர் ராஸ் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஆளுநர்.
1933 - அமெரிக்காவின் புகழ் பெற்ற கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது.
1940 - கத்தோலிக்கக் காலண்டர்படி செயிண்ட் சைமன் ஸ்டைலெட்ஸ் தினம். தனக்குக் கடவுளிடத்திலுள்ள தீவிர பக்தியைக் காட்டுவதற்காக ஒரு தூணின் உச்சியிலேயே 37 ஆண்டுகள் வாழ்ந்தவர்.
1940: எவ்.எம். வானொலி முதல்தடவையாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது.
1971: உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
1976: கம்போடியாவின் பெயர் 'ஜனநாயக கம்பூச்சியா' என மாற்றப்பட்டது.
1993: ஸ்கொட்லாந்துக்கு அருகில் எண்ணெய் தாங்கி கப்பலொன்று மூழ்கியதால் 84,700 தொன் எண்ணெய் கடலில் கசிந்தது.
1999 - ஹரியானாவில் கிறித்தவர் வெளியேறக் காலக்கெடு விதித்தல்.
2000: அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித்தலைவர் குமார் பொன்னம்பலம் வெள்ளவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1721: பிரிட்டனில் 'சௌத் ஸீ' குமிழ் மோசடி குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.[You must be registered and logged in to see this image.]
1752 - ஆம் ஆண்டு வரை சிலநாடுகளில் இன்று தான் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது.
1838: சாமுவேல் மோர்ஸ் இலத்திரனியல் டெலிகிராவ் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டார்.
1929: அன்னை திரேஸா இந்தியாவில் வறிய மக்களுக்கான தனது சேவையை ஆரம்பிப்பதற்கு கல்கத்தாவை சென்றடைந்தார்.
1931: தோமஸ் அல்வா எடிஸன் தனது கடைசி காப்புரிமைக்கு வி;ண்ணப்பித்தார்.
1950: சீன மக்கள் குடியரசை பிரிட்டன் அங்கீகரித்தது. அதற்கு பதிலடியாக சீனக் குடியரசு (தாய்வான்) பிரிட்டனுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்தது.
1953: முதலாவது ஆசிய சோசலிஷ மாநாடு பர்மாவின் தலைநகர் ரங்கூனில் நடைபெற்றது.
1959 - உலகின் முதல் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. ரஷ்யாவின் காஸ்மிக் ராக்கெட் எனும் அந்தச் செயற்கைக் கோள் புவியை விட்டு 800 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மேலே சென்று சுற்றுப் பாதையை அடைந்தது.
1994: அமெரிக்க ஸ்கேட்டிங் வீராங்கனை நான்ஸி கேரிங்கன், தனது போட்டியாளரினால் ஏவப்பட்ட குழுவினால் முழங்காலில் அடித்து காயப்படுத்தப்பட்டார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1610: கலிலியோ கலிலி ஜூபிட்டர் கிரகத்தின் நான்கு பெரிய சந்திரன்களை முதல் தடவையாக அவதானித்தார்.
1782: அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கியான அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
1785: பிரான்ஸை சேர்ந்த ஜீன் பியரி பிளங்கர்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் ஜெவ்ரி ஆகியோர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸுக்கு பலூனில் பறந்தனர்.
[You must be registered and logged in to see this image.]1797: இத்தாலியின் நவீன தேசிய கொடி பாவனைக்கு வந்தது.
1919: சேர்பியாவுடன் மொன்டேநீக்ரோ இணைப்பதற்கு எதிராக மொன்டேநீக்ரோ கெரில்லாக்கள் கிளர்ச்சி செய்தனர். இப்போராட்டம் தோல்வியில் முடிவுற்றது.
1927: அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடான முதலாவது தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1949 - ஜீன்ஸ் எனப்படும் மரபணுக் கூறின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது தெற்கு லிபோர்னியா பல்கலைக்கழகம்.
1950: அமெரிக்காவின் டெவன்போர்ட் நகர வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலி.
1952: அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன், அமெரிக்காவிடம் ஐதரசன் குண்டுகள் இருப்பதாக அறிவித்தார்.
1954: நியூயோர்க் நகரில் ஐ.பி.எம். தலைமையகத்தில் கணினி மூலம் மொழிபெயர்ப்பு செய்துகாண்பிக்கப்பட்டது.
1959: கியூபாவில் பிடெல்காஸ்ட்ரோவின் அரசாங்கத்தை அமெரிக்கா அங்கீகரித்தது.
1972: ஸ்பெய்னில் இடம்பெற்ற விமான விபத்தில் 104 பேர் பலி.
1980: 3 வருடங்கள் அதிகாரத்தை இழந்திருந்த இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியது.
1990: இத்தாலியின் பைஸா சாய்ந்த கோபுரம் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
1999: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மீதான நாடாளுமன்ற குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1297: மொனாக்கோ சுதந்திரம்பெற்றது.
1811: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் சார்ள்ஸ் டெஸ்லான்ட்ஸ் என்பவர் தலைமையில் கறுப்பின அடிமைகள் மேற்கொண்ட கலகம் முறியடிக்கப்பட்டது.[You must be registered and logged in to see this image.]
1835: அமெரிக்காவின் தேசிய கடன் தொகை முதல் தடவையாக பூச்சியம் ஆகியது.
1912: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
1917 - பிரிட்டனில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 2 மில்லியன் மரங்கள் நடப்பட்டன. மரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதே அதற்குக் காரணம்.
1938 - இந்தியாவில் முதல் வண்ணத் திரைப்படம் வெளியானது. இம்பீரியல் பிலிம் கம்பெனிக்காக அர்தேஷிர் இரானி என்பவர் தயாரித்த அந்தப் படத்தின் பெயர் "கிஸான்கன்யா."
1664 - கலிலியோ தூக்குமேடையைச் சந்தித்த நாள்.
1973: நெதர்லாந்தில் ரயில் விபத்தில் 93 பேர் பலி.
1973: அமெரிக்க வாட்டர்கேட் விவகாரத்தில் வாட்டர்கேட்டிலுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்திற்குள் சட்ட விரோதமாக புகுந்த 7 நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பமாகின.
1978: வெளிநாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமாக, வங்காளத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ விடுதலை செய்தார்.
1989: பிரிட்டனில் வீதியொன்றில் விமானம் விழுந்ததால் 47 பேர் பலி.
1996: ஸயர் நாட்டில் விமானமொன்று கோளாறுக்குள்ளாகி சந்தையொன்றில் விழுந்ததால் 350 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1951 - டாக்டர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் முதன் முதலாக தனது உதவியாளரான ஸ்டூவர்ட் கிராட்டாக் என்பவருக்கு பென்சிலின் மூலம் சிகிச்சை அளித்தார்.
1768: லண்டனில் முதலாவது நவீன சர்க்கஸ் கண்காட்சி நடைபெற்றது.
1776: சேர் ஹம்பரி டேவி, சுரங்க ஊழியர்களுக்கான டேவி விளக்கை பரிசோதித்தார்.
[You must be registered and logged in to see this image.]
1822: போர்த்துக்கேய இளவரசர் முதலாம் பெட்ரோ மன்னரின் உத்தரவை மீறி பிரேஸிலில் தங்கியிருக்கத் தீர்மானித்தார்.
1927: கனடாவில் திரையரங்கொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் பலி.
1970: சிங்கப்பூரில் உயர் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.
1980 - மெக்காவிலுள்ள மசூதியைத் தாக்கியதற்காக சவூதி அரேபியாவில் 63 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.
1991: குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பதற்கான முயற்சியாக அமெரிக்க,ஈராக் பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்தித்தனர்.
1995 - விண்வெளியில் அதிக காலம் வாழ்ந்த பெருமையைப் பெற்றார் ரஷ்ய விண்வெளி வீரரான வலேரி பொலியகோவ்.
2005: சூடான் அரசாங்கத்திற்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் எனும் தீவிரவாதக் குழுவுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கென்யாவில் கையெழுத்திடப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
» வரலாற்றில் இன்று Today in History
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிரோஷிமா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #2
» பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3