by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
No user |
வரலாற்றில் இன்று
Page 15 of 24 • 1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24
வரலாற்றில் இன்று
நவம்பர் 01
1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.
1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.
1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.
1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.
1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.
194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.
1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.
1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.
1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.
1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.
2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
0069 பெட்ரியாக்கும் என்ற இடத்தில் இடம்பெற்ற போரின் பின்னர், விட்டேலியஸ் என்பவன் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
1492 வாசனைப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பஸ் ஸ்பெயின் அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
1524 இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.
1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா கூட்டணியில் இருந்து விலகியது.
1864 அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரோலினாவின் பிளைமவுத் நகரைத் தாக்கினர்.
1895 சீன-ஜப்பான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது.
1941 இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியப் பேரரசு ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1961 அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார்.
1969 செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1970 அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
1971 முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1975 கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நாம் பென்னைக் கைப்பற்றினர். கம்போடிய அரசு சரணடைந்தது.
1986 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
2004 இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1025 போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான்.
1797 நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.
1835 ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1880 மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் கொல்லப்பட்டனர்.
1906 அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1909 ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டாள்.
1912 கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.
1930 பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது.
1941 ஜெர்மனியப் படைகள் ஏதன்சை நெருங்கும் போது கிறீஸ் பிரதமர் அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ் தற்கொலை செய்து கொண்டார்.
1942 இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
1945 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹெலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
1949 அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
1954 கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1955: புகழ்பெற்ற பௌதிகவியல் விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் காலமானார்.
1955: இந்தோனேஷியாவின் பான்டூங் நகரில் நடைபெற்ற முதலாவது ஆசிய-ஆபிரிக்க மாநாட்டில் 29 நாடுகள் பங்குபற்றின.
1958 இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
1980 சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார்.
1983 லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1988: ஈரானிய கடற்படைக்கு எதிராக அமெரிக்கா பாரிய கடற்படைத் தாக்குதலை ஆரம்பித்தது.
1992: ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி மொஹமட் நஜிபுல்லாவின் அரசாங்கத்திற்கு எதிரகா ஜெனரரல் அப்துல் ரஸித் டோஸ்டம், அஹமட் ஷா மசூத்துடன் இணைந்து காபூல் நகரை கைப்பற்ற கிளர்ச்சி செய்தார்.
1993 பாகிஸ்தான் அதிபர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
1996 லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களினால் 198 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் காயமடைந்தனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1587 ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.
1775 அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
1810 வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.
1839: லண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு முடியரசாக்கப்பட்டது.
1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினார் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1892 ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.
1902 குவாத்தமாலாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
1904 கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தது.
1928 ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியுமான தொகுதி வெளிவந்தது.
1936 பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கப்பட்டது.
1954 உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
1971 முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1975 இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
1988 அன்னை பூபதி மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணா நோன்பிருந்து இறந்தார்.
1989 அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1993 ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க FBIஇன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. 81 பேர் கொல்லப்பட்டனர்.
1995 அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானாதில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
1995 சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
1999 ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.
2006 நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1534 இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.
1653 ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1657 அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.
1792 பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்பித்தன.
1859 சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
1862 லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர்.
1889: ஜேர்மனின் முன்னாள் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் பிறந்தார்.
1902 பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
1914 ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
1926 திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1945 இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.
1945 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
1945 அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
1959: அடோல்வ் ஹிட்லரின் பிறந்த தினத்தையொட்டி ஜேர்மனியில் தேசிய விடுமுறைத் தினம் அறிவிக்கப்பட்டது.
1961 கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.
1967 சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர்.
1968 தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
1972 அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
1978 தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
1998 கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
1998 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
1999 கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.
2007 டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.
2008: ஜப்பானில் நடைபெறும் 'இன்டி ஜப்பான் 300' காரோட்டப் பந்தயத்தில் டெனிகா பட்ரிக் எனும் பெண் வெற்றி பெற்று இப்போட்டியில் வென்ற முதல் பெண் எனும் பெருமையைப் பெற்றார்.
2010: மெக்ஸிகோ வளைகுடாவில் பிரித்தானிய நிறுவனமொன்றுக்குச் சொந்தமான டீப்வாட்டர் ஹொரைஸன் எண்ணெய் அகழ்வுத்தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து; அத்திலாந்திக் சமுத்திரத்தில் பாரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
0753 கி.மு : ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர்.
0043 கி.மு : ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம்பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், ஹேர்ட்டியஸ் இச்சமரில் கொல்லப்பட்டான்.
1509 ஏழாம் ஹென்றியின் இறப்புக்குப் பின்னர் அவனது மகன் எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1526 பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
1792 பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.
1822 இலங்கையில் அமெரிக்கத் திருச்சபையின் குருக்களாக (pastor) முதற்தடவையாக உள்ளூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஜோர்டன் லொட்ஜ், நத்தானியேல் நைல்ஸ், சார்ல்ஸ் ஹொட்ஜ், எபனேசர் போர்ட்டர் ஆகியோர் தெரிவானார்கள்.
1863 கடவுளின் தூதர் தாமே என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
1916 இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
1944 பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945 இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
1960 பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
1962: சியாட்டில் உலக சந்தை திறக்கப்பட்டது. 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவில் திறக்கப்பட்ட முதலாவது உலக சந்தை இது.
1967 கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜ் பப்படபவுலோஸ் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
1975 வியட்நாம் போர்: தெற்கு வியட்நாம் அதிபர் நூயென் வான் டியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
1987 இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
1989 பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
1993: பொலிவியாவின் முன்னாள் சர்வாதிகாரி லூயிஸ் கார்சியா மேஸாவுக்கு கொலை, களவு, மோசடி, அரசியலமைப்பு மீறல் குற்றச்சாட்டில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்தது.
1994 சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1500 பிரேசிலைக் கண்ட முதல் ஐரோப்பியர் போர்த்துக்கீசரான பேதுரோ கப்ரால்.
1863 அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.
1889 நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி (Guthrie) ஆகியவற்றில் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.
1898 அமெரிக்க கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு ஸ்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.
1906: நவீன ஒலிம்பிக் போட்டிகளின் 10 ஆவது ஆண்டு நிறைவையொட்டி விசேடஒலிம்பி போட்டியொன்று ஏதென்ஸில் ஆரம்பமானது.
1912 ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்டா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
1915 முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர (Ypres) ஜெர்மனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.
1944 இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஒல்லாந்தியா என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1945 இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.
1945 இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
1970 முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது.
1983 ஹிட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற ஜெர்மனிய இதழ் அறிவித்தது.
1992 மெக்சிக்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.
1997 அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1997 பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
2000 ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
2004 வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
2005: போர்க்காலத்தில் ஜப்பான் இழைத்த தவறுகளுக்காக அந்நாட்டு பிரதமர் ஜுனிசிரோ யொய்சுமி மன்னிப்பு கோரினார்.
2006 நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.
2006 இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
2010: மெக்ஸிகோ வளைகுடாவில் 'டீப் வாட்டர் ஹொரைஸன்; எண்ணெய் அகழ்வு நிலையம் வெடிப்புக்குள்ளாகி 2 நாட்களாக தீப்பற்றிய நிலையில் கடலில் மூழ்கியது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1343 எஸ்தோனியாவில் ஜெர்மனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
1635 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1639 புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.
1660 சுவீடன், மற்றும் போலந்து ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
1661: பிரிட்டனில் இரண்டாம் சார்ள்ஸ் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1867 சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.
1896 நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் (Koster and Bial's Music Hall) "வாட்வில்லி" குழுவினரால் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் விட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.
1905 யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.
1927: துருக்கி, சிறுவர் தினத்தை தேசிய விடுமுறைத் தினமாகக் கொண்டாடிய உலகின் முதல் நாடாகியது.
1932 நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.
1940 மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடாத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் கொல்லப்பட்டனர்.
1941 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறினார்.
1948 அரபு-இஸ்ரேல் போர் 1948: இஸ்ரேலின் முக்கிய துறைமுகம் ஹைஃபா பாலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
1966 முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.
1982 கொங்க் குடியரசு அமைக்கப்பட்டது.
1984 எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
1987 ஐக்கிய அமெரிக்காவின் கொனெக்ரிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1990 நமீபியா ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது.
1990: இலங்கையின் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான லலித் அத்துலத் முதலி கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1993 இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.
1993 இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1993 எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
1997 அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1704 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை "த பொஸ்டன்" நாளிதழ் வெளியிடப்பட்டது.
1863 கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1877 ஓட்டோமான் பேரரசு மீது ரஷ்யா போரை அறிவித்தது.
1898: ஸ்பெய்னுக்கு எதிராக அமெரிக்கா யுத்தப் பிரகடனம்.
1904: லித்துவேனியாவில் 40 வருடங்களாக அமுலில் இருந்த ஊடகத் தடை நீக்கப்பட்டது.
1908 லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
1913 வானளாவிக் கோபுரம் வூல்வேர்த் கோபுரம் நியூயார்க் நகரில் கட்டப்பட்டது.
1915 ஆர்மீனிய இனப்படுகொலை: கொன்ஸ்டன்டீனபோலில் பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏனையோர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
1918: உலகில் முதல் தடவையாக இராணுவத் தாங்கிகளுக்குhன சமர், பிரான்ஸில் அமெரிக்க, ஜேர்மனிய படைகளுக்கிடையில் இடம்பெற்றது.
1926: 3 ஆவது நாடொன்று தாக்குதல் நடத்தும்போது நடுநிலை வகிப்பதற்கு இணங்கும் ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் ஜேர்மனியும் கையெழுத்திட்டன.
1955 இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவெறி, மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1961 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த "வாசா" என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.
1965 டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1967 சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1968 மொரீசியஸ் ஐநாவின் உறுப்பு நாடாகியது.
1970 முதல் சீனச் செய்மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்பட்டது.
1970 காம்பியா பொதுநலவாய அமைப்பினுள் குடியரசாகியது.
1981 முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமானது.
1990 டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1993 இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.
1993 லண்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
2005: உலகின் முதலாவது குளோனிங் நாயான ஸ்னப்பி, தென் கொரியாவில் பிறந்தது.
2006 நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
2007 பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1607 எண்பதாண்டுப் போர்: கிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் ஸ்பானிய கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.
1829 மேற்கு அவுஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1859: பிரித்தானிய, பிரெஞ்சு பொறியியலாளர்கள் சுயஸ் கால்வாய் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தனர்.
1961 அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தனர்.
1862 அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.
1864 அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.
1898 ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
1915 முதலாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டனர்.
1916 அயர்லாந்தில் இராணுவச் சட்டத்தை ஐக்கிய இராச்சியம் பிறப்பித்தது.
1916 அன்சாக் நாள் முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது.
1945 நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது.
1961 ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார்.
1966 தாஷ்கெண்ட் நகரத்தின் பெரும் பகுதி நிலநடுக்கத்தால் அழிந்தது. 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1974 போர்த்துக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1981: ஜப்பானின் சுராகா நகரிலுள்ள அணு மின் உலையில் 100 ஊழியர்கள் கதிர்வீச்சு தாக்கத்திற்குள்ளாகினர்.
1982 காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.
1983 பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
1983 ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் "ஹிட்லரின் நாட்குறிப்புகள்" நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் "ஸ்டேர்ன்" இதழ் வெளியிட்டது.
1986 சுவாசிலாந்தின் மன்னனாக மூன்றாம் முசுவாட்டி முடிசூடினார்.
1988 இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் மரண தண்டனை விதித்தது.
2005 இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எதியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
2005 ஜப்பானில் தொடருந்து விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர்.
2007: ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸினின் இறுதிக் கிரியை இடம்பெற்றது.
2006 கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொலைதாரியினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
2011: அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சூறாவளியினால் சுமார் 300 பேர்பலி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1802 நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.
1805 ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.
1865 அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரோலினாவின் டேர்ஹம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.
1865 அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.
1937 ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினின் கேர்னிக்கா நகரம் ஜெர்மனியினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1942: சீனாவில் இடம்பெற்ற சுரங்க விபத்தொன்றில், 1549 பேர் உயிரிழந்தனர்.
1945 இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.
1954 பிரெஞ்சு இந்தோசீனா, மற்றும் வியட்நாமில்வில் அமைதியைக் கொண்டுவரும் முகாமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1956: உலகின் முதலாவது கொள்கலன் கபப்லான எஸ்.எஸ். ஐடெக்ஸ் எக்ஸ், அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
1960: ஏப்ரல் புரட்சியின் காரணமாக, தென்கொரிய ஜனாதிபதி சிங்மன் றீ ராஜினாமா செய்தார்.
1962 நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
1963: லிபியாவில் அரசியலமைப்பு திருதத்தப்பட்டது. பெண்களும் தேர்தலில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டனர்.
1964 தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
1981 மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1982 தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1986 உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
1989: பங்களாதேஷில் டோர்னடோ சுழல்காற்றின் காரணமாக 1300 பேர் பலியாகினர்.
1994 ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.
1994 உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.
2005 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1124 முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.
1296 இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான்.
1521 நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
1522 மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.
1565 பிலிப்பீன்சின் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நாடு சேபு (Cebu) அமைக்கப்பட்டது.
1667 குருடரான ஜோன் மில்ட்டன் தான் எழுதிய பரடைஸ் லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.
1813 1812 போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க்கை கைப்பற்றினர்.
1840 லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது.
1865 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.
1904 அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்தது.
1909 துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.
1941 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்கத் தலைநகர் ஏத்தன்ஸ் நகரை அடைந்தனர்.
1945 இரண்டாம் உலகப் போர்: கடைசி நாசி ஜெர்மன் படைகள் பின்லாந்தில் இருந்து வெளியேறினர்.
1945 இரண்டாம் உலகப் போர்: நாசிக் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான வோல்கிஷெர் பியோபாக்டர் நிறுத்தப்பட்டது.
1945: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினி ஜேர்மன் சிப்பாய் போல் வேடமணிந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது கிளர்ச்சியாளர்ளால் கைது செய்யப்பட்டார்.
1959 மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.
1960 பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐநாவின் நேரடி ஆட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.
1961 சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1967 கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸோ 67 கண்காட்சி ஆரம்பமானது.
1974 அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக வாஷிங்டன் டிசியில் 10,000ற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.
1981 Xerox PARC முதன் முறையாக கணனி mouse ஐ அறிமுகப்படுத்தியது.
1992 சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1993 காபோனில் இடம்பெற்ற விமான விபத்தில் காம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1994 தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
1996: லெபனான் யுத்தம் முடிவுற்றது.
2001 தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
2002 நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.
2005: எயார்பஸ் A380 எனும் பாரிய விமானம் தனது முதல் பறப்பை பிரான்ஸில் மேற்கொண்டது.
2007 எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செம்படையின் நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1192 ஜெருசலேம் மன்னன் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான்.
1792 பிரான்ஸ் ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.
1862 அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் அட்மிரல் டேவிட் ஃபராகுட் கூட்டமைப்பிடம் இருந்து லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினான்.
1876 இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
1920 அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1930: முதலாவது இரவுநேர கூடைப்பந்தாட்டப்போட்டி அமெரிக்காவின் கான்ஸாஸ் நகரில் நடைபெற்றது. 1932: மனிதர்களின் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
1932 மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1945 முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1952 இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1965 டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
1969: பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல் ராஜினாமா செய்தார்;.
1970: வியட்நாமில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அமெரிக்கத் துருப்புகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் அதிகாரிமளித்தார்.
1978 ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது டாவூட் கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1995 பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.
1996 அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.
2000 இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
2001 கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.
2005 இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
2008: சீனாவில் ஷான்டோங் நகரில் ரயில் விபத்தொன்றில் 72 பேர் பலியாகினர்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1952 இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
நல்லது நடந்திருக்கு...
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1672 | பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான். |
1770 | ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டான். | |
1862 | அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது. | |
1882 | பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது. | |
1903 | கனடாவின் அல்பேர்ட்டாவில் 30 மில்லியன் கன மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டனர். | |
1916 | முதலாம் உலகப் போர்: பிரித்தானிய இந்தியப் படைகள் ஓட்டோமான் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தனர். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது. | |
1945 | இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தின் பல பகுதிகளிலும் உணவுப்பொதிகளை விமானத்தில் இருந்து வீசும் மானா நடவடிக்கையை ஐக்கிய இராச்சிய வான்படையினர் ஆரம்பித்தனர். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர் ஏவா பிரௌன் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்து மணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் ஏப்ரல் 30இல் தற்கொலை புரிந்து கொண்டனர். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டாக்கவ் என்ற இடத்தில் இருந்த வதை முகாமை அமெரிக்கப் படைகள் விடுவித்தனர். | |
1946 | ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஹிடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர். 1953: அமெரிக்காவில் முதல் தடவையாக பரீட்சார்த்த முப்பரிமா தொலைக்காட்சி ஒளிபரப்பு நடத்தப்பட்டது. | |
[You must be registered and logged in to see this image.] | 1970 | வியட்நாம் போர்: அமெரிக்க மற்றும் தென் வியட்நாம் படைகள் வியட் கொங் போராளிகளைத் தேடி கம்போடியாவை முற்றுகையிட்டன. |
1975 | வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரை விட்டு புறப்பட்டனர். | |
1986 | லொஸ் ஏஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன. | |
1991 | வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். 1992: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கறுப்பின கார் சாரதியொருவரை தாக்கிய பொலிஸார் நிரபராதிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து இடம்பெற்ற பாரிய வன்முறைகளில் 53 பேர் பலியாகினர். பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. | |
[You must be registered and logged in to see this image.] | 1995 | நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 1997: 1993 ஆம் ஆண்டின் இரசாயன ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. 2004: செப்டெம்பர்11 தாக்குதல் தொடர்பான விசாரணைக்குழுவிம் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், உப ஜனாதிபதி டிக் செனி ஆகியோர் சாட்சியமளித்தனர். |
[You must be registered and logged in to see this image.] | 2005 | 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது. |
2007 | வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின. |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 0313 | ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். |
1006 | மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. | |
1483 | இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை அங்கு இருந்தது. 1492: இந்தியாவுக்கு வழி கண்டுபிடிப்பதற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கு ஸ்பெய்ன் அங்கீகாரம் வழங்கியது. | |
[You must be registered and logged in to see this image.] | 1803 | ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. |
1838 | நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது. | |
1900 | ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது. 1938: இங்கிலாந்தின் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கப்பட்டது. | |
[You must be registered and logged in to see this image.] | 1945 | அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர். |
1975 | வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. | |
1982 | திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. | |
1991 | யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். | |
1993 | ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில் உலகளாவிய வலையமைப்பு பிறந்தது. | |
1999 | ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது. 2004: ஈராக்கின் அபு கிறைப் சிறைச்சாலையில் கைதிகள் சித்திரவதை செய்யப்படும் காட்சிகள் கொண்ட புகைப்படங்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டன. | |
[You must be registered and logged in to see this image.] | 2006 | ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 2010: உலகின் மிகப்பெரிய உலக வர்த்தக சந்தை, சீனாவின் ஷாங்காய் நகரில் திறந்து வைக்கப்பட்டது. |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1328 | ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. |
1707 | இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது. | |
1778 | அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார். | |
1834 | பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின. | |
1840 | உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது. | |
1851 | லண்டனில் பெரும் பொருட்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது. | |
1886 | ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. | |
1891 | பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர். | |
1898 | அமெரிக்க கடற்படையினர் மணிலா விரிகுடாவில் ஸ்பானிய கடற்படைக் கப்பலை தாக்கியழித்தனர். | |
1900 | ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். | |
1915 | ஆர்.எம்.எஸ். லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 அவதும் கடசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் கொல்லப்பட்டனர். | |
1925 | சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும். | |
1930 | புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. | |
1931 | நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. | |
1940 | கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன. | |
1941 | இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்க தீவான கிறீட் மீது மிகப் பெரும் வான் தாக்குதலை நிகழ்த்தினர். | |
1945 | சோவியத் இராணுவத்தினர் பேர்லினில் நாடாளுமன்றக்க் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள். | |
1946 | மேற்கு அவுஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். | |
1948 | கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டாது. கிம் உல்-சுங் அதன் முதலாவது அதிபரானார். | |
1950 | குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது. | |
1956 | இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. | |
1960 | மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது. | |
1961 | கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார். | |
1977 | தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர். | |
1978 | ஜப்பானியரான நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதரானார். | |
1987 | இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு ஈடித் ஸ்டெயின் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார். | |
1989 | இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர். | |
1993 | இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார். 1994: 3 தடவை போர்மியூலா வன் உலக சம்பியன் பட்டம் வென்ற பிரேஸில் வீரர் அயர்ட்டன் சென்னா இத்தாலியில் நடைபெற்ற போட்டியொன்றின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 2003: ஈராக்கில் பாரிய இராணுவ தாக்குதல் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்தார். | |
[You must be registered and logged in to see this image.] | 2004 | சைப்பிரஸ், செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலவாக்கியா,, சிலவேனியா ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன. |
2006 | புவேர்ட்டோ ரிக்கோ அரசு நாட்டின் பணவீக்கம் காரணமாக பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் மூடியது. | |
2011 | அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் அமெரிக்கப் படையினரால் பாக்கித்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1568 | ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள். |
1808 | மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். | |
1814 | முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார். | |
1876 | பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது. | |
1885 | புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான். | |
1889 | எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது. | |
1928 | அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் படத்தினை வரைந்தார். | |
1933 | ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர். | |
1952 | உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது. | |
1964 | வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது. | |
1964 | 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர். 1969: குயின் எலிஸபெத்2 கப்பல் தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது. | |
[You must be registered and logged in to see this image.] | 1982 | போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 1997: பிரிட்டனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் டொனி பிளேயர் தலைமையிலான தொழிற்கட்சி பெரு வெற்றி பெற்றது. 1998: ஐரோப்பிய மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. |
[You must be registered and logged in to see this image.] | 2002 | கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர். |
2004 | நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர். | |
2006 | குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 2008: மியன்மாரில் வீசிய சூறாவளியினால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர். | |
[You must be registered and logged in to see this image.] | 2009 | வல்லிபுரக்குறிச்சி மருதடி தான்றோன்றியீஸ்வரர் தேர். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
மே3 உலக பத்திரிகை சுதந்திர நாள்
[You must be registered and logged in to see this image.] | 1494 | ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார். |
1802 | வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது. | |
1814 | பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டு போர்ட்டோஃபெராய்யோ நகரை அடைந்தான். | |
1815 | டொலெண்டீனோ என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் நேப்பில்ஸ் மன்னன் முராட் ஆஸ்திரியர்களால் தோற்கடிக்கப்பட்டான். | |
1879 | யாழ்ப்பாணம், கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பரானது. | |
1901 | புளோரிடாவின் ஜாக்கன்ஸ்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர். 1913: இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிஷ்சந்திரா வெளியிடப்பட்டது. | |
[You must be registered and logged in to see this image.] | 1916 | உயிர்த்த ஞாயிரன்று இடம்பெற்ற கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட ஐரிஷ் தலைவர்கள் டப்ளின் நகரில் தூக்கிலிடப்பட்டார்கள். |
1939 | சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார். | |
1941 | பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது. | |
1942 | இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய கடற்படையினர் சொலமன் தீவுகளின் துளகி தீவைக் கைப்பற்றினர். | |
1959 | முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. | |
1962 | டோக்கியோவில் பயணிகள் தொடருந்துகள் சரக்கு தொடருந்துடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர். 1969 - மூன்றாவது இந்தியக் குடியரசுத் தலைவர் சாகிர் ஹுசைன் இறந்தார். | |
[You must be registered and logged in to see this image.] | 1973 | சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கோபுரமானது. |
1979 | மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமர் ஆனார். | |
1986 | கொழும்பு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர். | |
1999 | ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லகோமா நகரை சூறாவளி தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டும் 665 பேர் காயமும் அடைந்தனர். 2001: 1947 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள்; ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக அமெரிக்கா அவ்வாணைக்குழுவில் தனது ஆசனத்தை இழந்தது. | |
[You must be registered and logged in to see this image.] | 2002 | இந்தியாவின் ராஜஸ்தானில் இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர். |
2006 | ஆர்மீனியாவின் பயணிகள் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
[You must be registered and logged in to see this image.] | 1493 | திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார். |
1494 | கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார். | |
1626 | டச்சு பயணி பீட்டர் மின்யூயிட் மான்ஹட்டன் தீவை அடைந்தார். | |
1799 | நான்காம் மைசூர்ப் போர்: திப்பு சுல்தான் பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது. | |
1814 | பிரான்ஸ் மன்னன் முதலாம் நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட நிலையில் எல்பா தீவை அடைந்தான். | |
1855 | அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றும் நோக்கில் 60 பேருடன் சான் பிரான்சிஸ்கோவை விட்டுப் புறப்பட்டார். | |
1886 | ஹேமார்க்கெட் கலகம்: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். | |
1904 | பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது. | |
1912 | ரோட்ஸ் என்ற கிரேக்கத் தீவை இத்தாலி ஆக்கிரமித்தது. | |
1919 | மே நான்கு இயக்கம்: சீனாவின் பகுதிகள் ஜப்பானுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் இடம்பெற்றது. | |
1924 | பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. | |
1930 | பிரித்தானியக் காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். | |
1942 | இரண்டாம் உலகப் போர்: ஜப்பானினால் முதல் நாள் ஆக்கிரமிக்கப்பட்ட துளகி தீவின் (சொலமன் தீவுகள்) மீது அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர். | |
1945 | இரண்டாம் உலகப் போர்: வடக்கு ஜெர்மனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது. | |
1949 | அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். | |
1949 | இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில் டொரினோ உதைபந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர். | |
1973 | சியேர்ஸ் கோபுரம், சிகாகோவில் உள்ள வானளாவி, கட்டி முடிக்கப்பட்டது. | |
1979 | மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார். | |
1982 | போக்லாந்து போர்: பிரித்தானியாவின் போர்க்கப்பல் ஒன்று ஆர்ஜெண்டீனாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர். | |
1994 | இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபினுக்கும், பாலஸ்தீன அதிபர் யாசர் அரபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. | |
2000 | லண்டனின் முதலாவது நகரத் தந்தையாக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார். | |
2002 | நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் கொல்லப்பட்டனர். |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 15 of 24 • 1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24
» வரலாற்றில் இன்று Today in History
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிரோஷிமா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #2
» பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3