தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரலாற்றில் இன்று

Page 14 of 24 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24  Next

View previous topic View next topic Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Nov 01, 2012 11:54 am

First topic message reminder :

நவம்பர் 01


1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.

1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.



1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.


1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.


1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.


194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.


1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.


1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.

1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.

1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.


2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.

[You must be registered and logged in to see this link.]

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down


வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Apr 06, 2013 10:37 am

ஏப்ரல் 04

1721: சேர் ரொபர்ட் வால்போல் பிரிட்டனின் முதலாவது பிரதமரானார்.

1814: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் முதல் தடவையாக பதவியிலிருந்து நீக்கப்பட்டர்.

1818: 13 கோடுகளும் 20 நட்சத்திரங்களும் கொண்ட அமெரிக்க தேசிய கொடி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

1905: இந்தியாவில் காங்க்ரா பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால 20,000 பேர் பலி.

1939: ஈராக்கில் இரண்டாம் பைஸால் மன்னரானார்.

1945: சோவியத் யூனியன் இராணுவம் ஹங்கேரியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

1968: அமெரக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்டார்.


1975: மைக்ரோ சொப்ட் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1979: பாகிஸ்தானில் பதவி கவிழ்;க்கப்பட்ட பிரதமர் ஸுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Apr 06, 2013 10:37 am

ஏப்ரல் 05

1792: அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டன் சட்டமூலமொன்றின் மீது தனது வீட்டோ அதிகாரத்தை பிரயோகப்படுத்தினார். அமெரிக்காவில் இந்த அதிகாரம் பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்.

1879: பொலிவியா, பெருவுக்கு எதிராக சிலி போர் தொடுத்தது.

1930: இந்தியாவில் பிரித்தானியரின் சட்டத்தை மீறி மகாத்மா காந்தி உப்பு தயாரிக்கும் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1932: பின்லாந்தில் மதுபான தடை நீக்கப்பட்டது.

1942: 2 ஆம் உலக யுத்தத்தின்போது ஜப்பானிய கடற்படை விமானங்கள் கொழும்பில் குண்டுவீசின். இதன்போது பிரித்தானிய கடற்படை கப்பல்களான எம்.எம்.எஸ். கோர்ன்வால், எச்.எம்.எஸ் டோர்சென்ஷயர் ஆகியன மூழ்கடிக்கப்பட்டன.

1955: பிரிட்டனில் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸடன் சர்ச்சில் ராஜினாமா.

1956: கியூப ஜனாதிபதிக்கு எதிராக பிடெல் காஸ்ட்ரோ போர் பிரகடனம்.

1956: எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார்.

1971: சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கிளர்ச்சியை ஆரம்பித்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Sat Apr 06, 2013 10:38 am

ஏப்ரல் 06

1917: முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது.

1919: இந்தியாவில் மகாத்மா காந்தி பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்.

1930: மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார்.

1965: முதலாவது தகவல் தொடர்பு செய்மதியான ஏர்லி பேர்ட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1994: ருவாண்டா ஜனாதிபதி ஜூவெனல் ஹபியாரிமானாவும் புரூண்டி ஜனாதிபதி சைபிரியன் என்டயாமிராவும் பயணம் செய்த விமானம் ருவாண்டாவில் சுட்டுவீழ்த்தப்பட்டதில் இருவரும் பலியாகினர்.

2005: ஈராக்கில் குர்திஷ் தலைவரான ஜலால் தலபானி பிரதமரானார்.

2009: இத்தாலியில் 6.3 ரிச்சடர் அளவிலான பூகம்பம் தாக்கியதால் 307 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Apr 11, 2013 9:36 pm

ஏப்ரல் 07


1927: முதலாவது தொலைதூர தொலைக்காட்சி ஒளிபரப்பு வாஷிங்டன் டி.சி நகரிலிருந்து நியூயோர்க் நகருக்கு மேற்கொள்ளப்பட்டது.
1939:அல்பேனியா மீது இத்தாலி படையெடுத்தது.
1943: உக்ரேனின் டேராபோவ்லியா நகரில் 1100 யூதர்கள் உள்ளாடைகள் வரை ஆடைகள் களையப்பட்டு அருகிலுள்ள கிராமொன்றுக்கு பேரணியாக கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946: பிரான்ஸிடமிரந்து சிரியா சுதந்திரம் பெற்றது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
1948: உலக சுகாதார ஸ்தாபனம் ஐ.நாவினால் அமைக்கப்பட்டது.
1978: நியூத்திரன் குண்டு தயாரிப்புத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஒத்திவைத்தார்.
2003: அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கின் பாக்தாத் நகரை கைப்பற்றின.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Apr 11, 2013 9:38 pm

ஏப்ரல் 08


1929: இந்திய சுதந்திர போராட்டத்தின்போது பகத் சிங், பதுகேஷ்வர் தத் ஆகியோர் டெல்லி சட்டசபையில் குண்டுவீசினர்.
1950: இந்தியாவும் பாகிஸ்தானும் லியாகத் - நேரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
1961: பாரசீக வளைகுடாவில் எம்.வி. தாரா கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தில் 281 பேர் பலி.
1970: எகிப்தில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசியதால் 46 பாடசாலை சிறார்கள் பலி.
1973: உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ காலமானார்.
1985: சுமார் 2000 பேர் பலியான போபால் விச வாயு கசிவுக்கு சம்பவத்திற்காக யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா வழக்குத் தொடுத்தது.
1992: இதய சத்திர சிகிச்சைக்கான குருதி பரிமாற்றத்தின் மூலம் தனக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டதாக ஓய்வு பெற்ற அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான ஆர்தர் ஆஷ் அறிவித்தார்.
2004: டார்பூர் மோதலை முடிக்கு கொண்டுவரும் முகமாக சூடான் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
2005: பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பரின் இறுதிக்கிரியையில் சுமார் 40 லட்சம் பேர் பங்குபற்றினர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Apr 11, 2013 9:39 pm

ஏப்ரல் 09

1867: ரஷ்யாவிடமிருந்து அலாஸ்கா பிராந்தியத்தை வாங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

1947: அமெரிக்காவின் கான்ஸாஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட டோர்னாடோ சூறாவளியினால் 181 பேர் பலி.

1957: சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

1967: போயிங் 737 ரக விமானத்தின் கன்னிப் பறப்பு இடம்பெற்றது.

1992: பனாமாவின் முன்னாள் சர்வாதிகாரி மனுவல் நொரிகாவுக்கு போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்தது.

1999: நைஜீரிய ஜனாதிபதி இப்ராஹிம் பாரே மெய்னாஸ்ஸரா சுட்டுக்கொல்லப்பட்டார்.

2003: பாக்தாத் நகரம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததையடுத்து ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் பாரிய உருவச்சிலை வீழ்த்தப்பட்டது.

2005: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர்ஸுக்கும் கமீலா பார்கருக்கும் திருமணம் நடைபெற்றது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by ஸ்ரீராம் Thu Apr 11, 2013 9:41 pm

ஆவலுடன் எதிர் பார்க்கும் பகுதி...
வாங்க முகைதீன். பகிர்வுக்கு நன்றி...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Apr 11, 2013 9:42 pm

ஏப்ரல் 10

1658 ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.

1710 காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.

1741 புரூசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.

1790 ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.

1815 இந்தோனீசியாவில் டம்போரா மலை தீக்கக்கியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.

1821 கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.

1826 துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.

1848 இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.

1864 முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.

1868 அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மாட்டுமே கொல்லப்பட்டனர்.

1869 கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.

1912 டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.

1919 மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1963 ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.

1972 வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.

1979 டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

1984 ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1985 ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1991 இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.

1992 லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.

1998 அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.

2002 விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.

2006 இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by முரளிராஜா Thu Apr 11, 2013 9:43 pm

தாங்கள் இப்பொழுது கேரளாவிலா உள்ளீர் முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Apr 11, 2013 9:44 pm

ஏப்ரல் 11

1079 போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்டானிஸ்லாஸ் தூக்கிலிடப்பட்டார்.

1831 உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.

1865 ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.

1899 ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.

1905 ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.

1921 விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.

1955 ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

1957 பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.

1965 ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.

1970 அப்போலோ 13 ஏவப்பட்டது.

1979 தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.

1981 தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.

1987 இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.

2002 வெனிசுவேலாவில் அதிபர் ஹியூகோ சாவெஸ் இற்கெதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது.

2007 அல்ஜீரியாவின் தாலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Apr 11, 2013 9:45 pm

இல்ல தல நாகர்கோவிலில் உள்ளேன்.

வீட்டிற்கு வாருங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by முரளிராஜா Thu Apr 11, 2013 9:47 pm

ஒ சரி
நாகர்கோவில் வந்து முஹைதீன் என்று சொன்னால் போதுமா ? புன்முறுவல்
உங்கள் கைபேசி என்னை எனக்கு தனிமடல் அனுப்புங்கள்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Apr 11, 2013 9:50 pm

உங்க அளவுக்கு நான் பிரபல்யம் கிடையாது தல நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by ஸ்ரீராம் Thu Apr 11, 2013 10:04 pm

mohaideen wrote:உங்க அளவுக்கு நான் பிரபல்யம் கிடையாது தல நக்கல்

உண்மைதான் முகைதீன் தல தலதான். நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by முரளிராஜா Thu Apr 11, 2013 10:23 pm

ராம் நம்ம முகைதீன் இப்பதான் போன்ல பேசினார்
அவர்கிட்ட நீங்க ரொம்ப நல்லவர்னு பொய் சொல்லி இருக்கேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 12, 2013 7:15 am

முரளிராஜா wrote:ராம் நம்ம முகைதீன் இப்பதான் போன்ல பேசினார்
அவர்கிட்ட நீங்க ரொம்ப நல்லவர்னு பொய் சொல்லி இருக்கேன் புன்முறுவல்

அறிந்து கொண்டேன்... வரலாற்றில் இன்றையும்....

உங்கள் பொய்ப் பேச்சையும்... பொய்யும் உண்மையே... எப்பூடீ!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Fri Apr 12, 2013 2:11 pm

ஏப்ரல் 12

1633 ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.

1832 இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையைபிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.

1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.

1864 அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1865 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டணி இராணுவத்திடம் வீழ்ந்தது.

1927 ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1955 ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.

1961 சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்.

1980 லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.

1981 முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டது.

1983 பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.

1996 யாஹூ! இனது முதற் பொதுப் பங்கு வழங்கல்.

2007 இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by மகா பிரபு Fri Apr 12, 2013 4:51 pm

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by ரானுஜா Fri Apr 12, 2013 5:57 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Mon Apr 15, 2013 1:37 pm

ஏப்ரல் 13

1111 ஐந்தாம் ஹென்றி புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான்.

1605 ரஷ்யாவின் சார் மன்னன் பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார் மன்னனானான்.

1796: இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு யானையொன்று கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவில் காணப்பட்ட முதலாவது யானை இது.

1829 பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.

1849 ஹங்கேரி நாடு குடியரசானது.

1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்ட்டர் கோட்டை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தது.

1868 பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் மக்டாலாவைக் கைப்பற்றியதில் அபினீசியப் போர் முடிவுக்கு வந்தது.

1873 ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 105 கறுப்பினத்தவரும் 3 வெள்ளையினத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

1919 ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.

1930 மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.

1939 இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1941 ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.

1943 இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக ஜெர்மனி அறிவித்தது.

1945 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரம் போர் மற்றும் அரசியல் கைதிகள் நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1953 இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.

1954 காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.

1970 அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.

1974 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது.

1975 லெபனானில் 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1979 இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1984 இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது.

1987 மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்தானது.

1997 டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.

2006 கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது.

2007 பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Mon Apr 15, 2013 1:39 pm

ஏப்ரல் 14

1699 கால்சா என்ற சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு குருகோவிந்த் சிங் அடிக்கல் நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.

1828 நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதலாவது பதிவுக்கான காப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.

1845: ஆஸ்திரியாவிலிருந்து பிரிவதாக ஹங்கேரி சுதந்திர பிரகடனம் செய்தது.

1849 ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.

1865 அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.

1894 தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.

1912 பிரித்தானியாவின் பயணிகள் கப்பல் டைட்டானிக் வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது. அடுத்த நாள் இது 1,503 பேருடன் கடலில் மூழ்கியது.

1915 துருக்கி ஆர்மீனியாவை முற்றுகையிட்டது.

1940 இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய கடற்படையினர் நோர்வேயின் நம்சோஸ் என்ற இடத்தில் தரையிறங்கினர்.

1944 பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1958 சோவியத்தின் ஸ்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்று வட்டத்தில் இருந்து வீழ்ந்தது.

1978 ஜோர்ஜியாவில் ஜோர்ஜிய மொழியின் அரசியல் அந்தஸ்தை மாற்றும் சோவியத் ஆட்சியாளரின் முயற்சிக்கெதிராக திபிலீசியில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

1979: உகண்டாவில் இடி அமீன் பதவி விலகியதையடுத்து யூசுபு லுலே ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1986 மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5 இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1986 வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

1988 சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.

1999 யூகொஸ்லாவியாவில் நேட்டோ படைகள் அல்பேனிய அகதிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி ஒன்றின் மேல் குண்டுவீச்சு நடத்தியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

1999 அவுஸ்திரேலியா, சிட்னியில் பலமான பனிக்கட்டி மழை பொழிந்ததில் A$ 1.7 பில்லியன் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.

2002: வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் 2 நாட்கள் பதவியிலிருந்து விலகியிருந்தபின் மீண்டும் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.

2007 தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 35 பேர் கொல்லப்பட்டனர்.

2010: சீனாவில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் சுமார் 2700 பேர் பலி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Mon Apr 15, 2013 1:42 pm

ஏப்ரல் 15

1450 பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.

1755 சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்.

1815 சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.

1865 ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அதிபரானார்.

1896: முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா கிறீஸின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது.

1892 ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1912 இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.[You must be registered and logged in to see this image.]

1923 இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.

1940 இரண்டாம் உலகப் போர்: நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.

1941 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1943 கூட்டுப் படைகளின் போர் விமானம் ஒன்றில் இருந்து மினேர்வா தானுந்து தொழிற்சாலை மீது வீசப்பட்ட குண்டு குறி தவறி பெல்ஜியத்தின் மோர்ட்செல் நகர் மீது வீழ்ந்ததில் 936 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1945 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.

1976 தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

1986 லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது.

1989 இங்கிலாந்தின் ஹில்ஸ்பரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர்.

1989 சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

1997 மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் கொல்லப்பட்டனர்.

2002 ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் கொல்லப்பட்டனர்.

2010: ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சாம்பல் பரவியதால் ஐரோப்பாவின் பல பகுதிகள் வான் போக்குவரத்து பலநாட்கள் பாதிக்கப்பட்டது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by முழுமுதலோன் Mon Apr 15, 2013 3:02 pm

பகிர்ந்த தகவல்களுக்கு நன்றி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 15, 2013 5:49 pm

தெரிந்து கொண்டோம்... நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by mohaideen Thu Apr 18, 2013 9:41 am

ஏப்ரல் 16

1346 தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது.

1444 இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

1582 ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா என்பவன் ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தான்.

1818: அமெரிக்க – கனேடிய எல்லை தொடர்பான ரஸ் - பகொட் உடன்படிக்கையை அமெரிக்கா அங்கீகரித்தது.

1853 இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.

1876 பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.

1885 இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.

1912 ஹரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.

1917 நாடு கடந்த நிலையில் பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.

1919 அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.

1925 பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.

1944: பெல்கிரேட் நகரில் நேசநாடுகளின் படைகள் குண்டுவீச ஆரம்பித்தன. இத்தாக்குதலில் சுமார் 1100 பேர் பலியாகினர்.

1945 இரண்டாம் உலகப் போர்: செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.

1945 இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.

1947 ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் துறைமுகத்தில் நிற சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் கொல்லப்பட்டனர்.

1947 சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.

1966 முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.

1972 நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1992: மொஸாம்பிக்கில் பி.கத்ரினா எனும் எண்ணெய் தாங்கி கப்பல் மூழ்கியதால் சுமார் 60,000 தொன் மசகு எண்ணெய் கடலில் கலந்தது.

2001: இந்தியா - பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் 5 நாள் எல்லை மோதல் ஆரம்பிமானது.

2007 ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வரலாற்றில் இன்று - Page 14 Empty Re: வரலாற்றில் இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 24 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19 ... 24  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum