தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 21 of 25 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue May 06, 2014 9:35 am

319 பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?

(பொ-ள்.) பொழிப்பு அகலம்நுட்பம் எச்சம் இந்நான்கின் நூல் கொழித்துஅகலம் காட்டாதார் சொற்கள்-பொழிப்புரைஅகலவுரை நுட்பவுரை எச்சவுரை யென்னும் இந்நால்வகையுரைகளாலும் நூலை ஆராய்ந்து தெரிந்து அதன்விரிந்த பொருட்பெருக்கை விளக்கிக்காட்டாதவருடைய சொற்கள், பழிப்பு இல் நிரை ஆமாசேர்க்கும் நெடு குன்ற நாட-பழித்தலில்லாதகாட்டாக்களின் இனத்தைத் தமது செழுமையால்தம்மாட்டு வருவிக்கும் உயர்ந்த மலைகளையுடையநாடனே!; நூலிற்கு நான்கு உரையாமோ-நூலிற்குச்சிறந்த உரையாகுமோ? ஆகாவென்க.

(க-து.) ஏதொன்றையும் நால்வகையுரைகளாலும் விளக்கிப் பேசவேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed May 07, 2014 9:43 am

320 இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்குங் கருவியரோ? -இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.

(பொ-ள்.) இற்பிறப்பு இல்லார்எனைத்து நூல் கற்பினும் சொல் பிறரைக் காக்கும்கருவியரோ-உயர்ந்த குடிப்பிறப் பில்லாதவர்எவ்வளவு நூல்கள் பயின்றாலும் ஏனைக் கல்லாதவரின்வழுச்சொற்களை இகழாது அடக்கும் பொறுமையாகியகருவியை யுடையவராவரோ? ஆகார்; இற்பிறந்தநல்லறிவாளர் - ஆனால் உயர்குடியுட் பிறந்த சிறந்தஅறிவுடையவர், நவின்ற நூல் தேற்றாதார்புல்லறிவுதாம் அறிவது இல்-புலனெறியுலகில்அடிப்பட்டுப் பழகிவரும் நூல்களின் நுண்பொருள்தெளியப்பெறாத கல்லாமையுடையவரது சிற்றறிவைத்தாம் ஆராய்ந்து காண்பதில்லை.

(க-து.) நூலறிவின் சிறப்போடுகுடிப்பிறப்பு மாண்பு மிருப்பின், புலவர்கட்குப்பொறுமையும் பெருந்தன்மையும் மிகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ந.கணேசன் Wed May 07, 2014 11:32 am

இன்றைய நாலடியார் சிந்தனை நன்று சார்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu May 08, 2014 9:49 am

பொருட்பால்
33. புல்லறிவாண்மை
[தாழ்ந்த அறிவையே உயர்ந்த அறிவாகக் கருதிக்கொண்டு ஒழுகும் இயல்பு.]

321 அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.

(பொ-ள்.) அருளின் அறம் உரைக்கும்அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர்புலவர்-அருள் காரணமாக அறம் அறிவுறுத்தும் அன்புடையபெரியயோரது வாய்மொழியை அறிவுடையோர்பெரும்பயனுடையதாக மதித்தேற்றுக்கொள்வர்; பாற்கூழை மூழை சுவையுணராதாங்கு பொருளல்லா ஏழை அதனைஇகழ்ந்துரைக்கும் - ஆனால் அகப்பை பாலடிசிற்சுவையுணராமைபோல ஒரு பொருளாகக் கருதற்கில்லாதஅறிவிலான் அவ்வாய் மொழியை மதியாதுஇகழ்ந்துரைப்பான்.

(க-து.) புல்லறிவாளர் நல்லோர்பொருளுரையை மதியாதொழுகுவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri May 09, 2014 11:01 am

322 அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்விய கொளல்தேற்றா தாங்கு.

(பொ-ள்.) கவ்வித் தோல்தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின்செவ்விகொளல் தேற்றாதாங்கு - தொரைக் கவ்வித்தின்னும் புலையருடைய நாய்கள் பாலடிசிலின்நன்மையைத் தெரிந்து கொள்ளாமைபோல,அவ்வியமில்லார் அறத்தாறு உரைக்குங்கால்செவ்வியரல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் -அழுக்காறு முதலிய மனமாசுகளில்லாதவர் அறநெறிஅறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப்புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங்கேட்கமாட்டார்.

(க-து.) புல்லறிவுடைய கீழ்மக்கள்சான்றோர் அறிவுரைகளை ஏலார்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat May 10, 2014 9:32 am

323 இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் -தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்?

(பொ-ள்.) இமைக்குமளவில் தம்இன்னுயிர் போம் மார்க்கம் எனைத்தானும் தாம்கண்டிருந்தும் -கண்ணிமைக்கும் அத்துணைச் சிறுபொழுதில் தமது இனிய உயிரானது பிரிந்துபோம்இயல்பை எவ்வகையாலுந் தாம் தெரிந்திருந்தும்,தினைத் துணையும் நன்றி புரிகல்லா நாண் இல்மடமாக்கள் பொன்றிலென் பொன்றாக்கால்என்-உலகில் உயிரோடிருப்பதற்குள்தினையளவாயினும் நற்செயல்கள் செய்து பிறவியைப்பயனுடையதாக்கிக் கொள்ளாத வெட்கமில்லாஅறியாமை மாந்தர் இறந்தாலென்ன, இறவாதுஇருந்தாலென்ன? இரண்டும் ஒன்றே.

(க-து.) புல்லறிவுடையோர் தமதுவாழ்க்கையைப் பயனுடையதாக்கி இன்புறல் அறியார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun May 11, 2014 10:24 am

324 உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும்
கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள்.

(பொ-ள்.) உள நாள் சில, உயிர்க்குஏமம் இன்று, பலர் தூற்றும் பழி -இவ்வுலகில் உயிர்வாழ்ந்திருக்கும் நாட்கள் சில, அச் சிலநாட்களிலும் உயிர்க்குப் பாதுகாப்பில்லை, பலர்தூற்றும் பழி வேறு; பலருள்ளும் கண்டாரோடெல்லாம்நகாஅது எவன் ஒருவன் தண்டித் தனிப்பகை கோள்-ஆதலால், பலரோடும் மகிழ்ந்தொழுகாது விலகிஎதிர்ப்பட்டவரோ டெல்லாம் ஒருவன் கடும்பகைகொள்ளுதல் ஏன்?

(க-து.) பலரோடும் அளவளாவி மகிழாதுவிலகிப் பகைகொள்ளுதல் புல்லறிவாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed May 14, 2014 3:55 pm

325 எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; -வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.

(பொ-ள்.) எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்று எள்ளி ஒருவன் ஒருவனைவைதான்-ஒருவன் சென்று கலந்திருந்த தக்கோர்அவையின் முன் ஒருவன் போய் அவனை இகழ்ந்துதிட்டினானாக, வைய வயப்பட்டான்வாளா இருப்பானேல்வைதான் வியத்தக்கான் வாழும் எனின்-அவ்வாறுதிட்ட அதற்கு உட்பட்டவன் பொறுமையோடு சும்மாஇருந்துவிடுவானாயின் அந்நிலையில் வைதவன்நன்னிலைமையில் உயிர்வாழ்வா னென்றால் அவன்வியக்கத்தக்கவனே யாவான். (உயிர்வாழ்தல்அரிதென்றபடி.)

(க-து.) பலர் நடுவில் பிறரை வைதல்புல்லறிவின் இயல்பாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu May 15, 2014 10:12 am

326 மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்
தொழுத்தையாற் கூறப் படும்.

(பொ-ள்.) மூப்பு மேல் வாராமைமுன்னே அறவினையை ஊக்கி அதன்கண் முயலாதான் -கிழத்தனம் மேல் எழுந்து தோன்றாததற்கு முன்உலகில் அறச்செயலைத் தொடங்கி அதன்கண்முயன்றுவராதவன், நூக்கிப் புறத்திரு போக என்னும்இன்னாச்சொல் இல்லுள் தொழுத்தையால் கூறப்படும்- பின்பு வீட்டில் ஏவற்காரியாலும் நெட்டித்தள்ளப்பட்டு ‘வெளிப்புறத்தில் இரு' ‘ஒழிந்துபோ'என்னுங் கொடுஞ் சொற்களுஞ் சொல்லப்படுவான்.

(க-து.) புல்லறிவாளர் நல்லது செய்யஅறியாராய்ப் பிறரால் இகழவும் படுவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ந.கணேசன் Thu May 15, 2014 10:43 am

நல்லது செய்ய வேண்டும் என்று சொல்கிற நாலடியார் மிக நன்










இன்றைய நாலடியார் நன்று.




ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat May 17, 2014 9:11 am

327 தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமாஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.

(பொ-ள்.) புல்லறிவினார்தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார்ஏமம் சார் நல்நெறியும் சேர்கலார்தாழ்ந்தஅறிவினையுடையோர் தாமாகிலும் இன்புறல் அறியார்,தகுதியுடைய பிறர்க்கும் நன்மை செய்ய அறியார்,தம்முயிர்க்கு அரணாக அமைந்தஅறவொழுக்கங்களையும் சேர்ந்தொழுகார்; தாம்மயங்கி ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ் நாளைப்போக்குவார் - தாம் மதிமயங்கி முன்னைநல்வினையாற் கிடைத்த செல்வச் செழுமையில்அழந்தி வீணே தம் வாழ் நாளைக் கழித்தொழிவர்.

(க-து.) புல்லறிவாளர் தம்வாழ்நாளைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படவொட்டாமல் வீணாக்கிக்ளொள்வர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Sat May 17, 2014 11:09 am

மிக அருமையான தொடர் பதிவு,
மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Sat May 17, 2014 12:10 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by செந்தில் Sat May 17, 2014 5:52 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun May 18, 2014 9:36 am

328 சிறுகாலை யேதமக்குச்செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.

(பொ-ள்.) சிறுகாலையே தமக்குச்செல்வுழி வல்சி இறுக இறுகத் தோட் கோப்புக்கொள்ளார் - இளம் பருவத்திலேயே தமதுசெல்லுமிடமாகிய மறுமைக்கு, அறமாகிய உணவு அழுந்தஅழுந்தக் கட்டுணவு தேடிக்கொள்ளாதவராய்; இறுகிஇறுகிப் பின் அறிவாம் என்று இருக்கும்பேதையார்-பொருளில் இறுக்கம் மிகக் கொண்டுஅறவினையைப் பிற்காலத்திற் காண்போம் என்றுசெம்மாந்திருக்கும் புல்லறிவினார்; கைகாட்டும்பொன்னும் புளிவிளங்காயாம்-இறுதிக்காலத்திற்சாக்காட்டுத் துன்பத்தினால் அறநினைவு வந்துஅந்நிலையிற் பேச நாவெழாமையால்அயலிலுள்ளார்க்கு அறஞ்செய்ம்மினெனக் கைக்குறியாகக் காட்டும் பொன்னும் அவராற்புளிச்சுவையுள்ள விளங்காய் கேட்டலாகக் கருதிமறுக்கப்படும்.

(க-து.) புல்லறிவு எதனையுங்காலத்திற் செய்து கொள்ளாது ஏமாந்து பின் கவலும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon May 19, 2014 2:16 pm

329 வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி, - மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.

(பொ-ள்.) வெறுமையிடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரேயாகி - கையிற்பொருளில்லாத வறுமைக் காலத்தும் மிக்கநோயுண்டான நேரத்தும் மறுமைக்குரியஅறநினைவினராயிருந்து, ஆற்றிய காலத்து - செல்வம்முதலியவற்றால் ஆற்றல் வாய்ந்த காலத்தில்,மறுமையை ஐந்தை யனைத்தானுஞ் சிந்தியார்சிற்றறிவினார் - அம்மறுமைக்குரிய அறத்தைச் சிறுகடுகி னளவாயினும் புல்லறிவினார் கருதார்.

(க-து.) புல்லறிவு,துன்பக்காலத்தில் மட்டுமே நன்மையை நினையும்இயல்புடையது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Mon May 19, 2014 4:40 pm

படித்தேன் பயன்பெற்றேன்
தொடருங்கள் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue May 20, 2014 10:07 am

330 என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை, - அன்னோ
அளவிறந்த காதற்றம் ஆருயி ரன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு.

(பொ-ள்.) அன்னோ அளவிறந்தகாதல் தம் ஆருயிரன்னார்க் கொள இழைக்கும்கூற்றமும் கண்டு - ஐயோ, தம்பால் அளவு கடந்தஅன்பினையுடைய தம் ஆருயிரன்ன உறவினரை உயிர்பிரித்துக்கொள்ள முயலுங் கூற்றுவனையும் உலகிற்பார்த்துக்கொண்டு, என்னே இவ் வுடம்பு பெற்றும்அறம் நினையார் கொன்னே தம் வாழ்நாளைக்கழிப்பர் - ஆ! பெறற்கரிய இம் மக்களுடம்பைப்பெற்றும் அறத்தை நினையாதவராய்ப்புல்லறிவினார் தம் வாழ்நாளை வீணேகழிக்கின்றனர்!

(க-து.) புல்லறிவானது, செய்திகளைநேரிற் கண்டும் தெளிவுபெறாதஇயல்புடையதாயிருக்கின்றது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முரளிராஜா Tue May 20, 2014 11:41 am

நாலடியார் பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed May 21, 2014 9:03 am

34. பேதைமை
[யாதும் அறியாமை என்பதுணர்த்தும்
]

331 கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.


(பொ-ள்.) கொலை வல் பெரு கூற்றம்கோள் பார்ப்ப ஈண்டை வலையகத்துச்செம்மாப்பார் மாண்பு - கொல்லுந் தொழிலில்வல்லமையுடையோனாகிய ஆற்றலிற் பெரிய கூற்றுவன்தம் உயிர்கொள்ளுதலை எதிர்நோக்கிக்கொண்டிருக்க இவ் வுலகப் பற்றாகியவலையிற்கிடந்து அதன்கட் களித்திருப்பாரதுஏழைமையியல்பு, கொலைஞர் உலை ஏற்றித் தீ மடுப்பஆமை நிலையறியாது. அந்நீர் படிந்தாடி யற்று -தன்னைக் கொல்லுங் கொலைஞர் தன்னை உலையில்இட்டு அடுப்பிலேற்றித் தீக்கொளுவ ஆமைநிலையறியாது அவ்வுலை நீரில் மூழ்கி விளையாடிமகிழ்ந்தாற்போன்றது.

(க-து.) பேதைமை தனக்கு வரும்இடுக்கணையறியாது களித்திருக்கும் இயல்புடையது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ந.கணேசன் Wed May 21, 2014 10:29 am

பேதமையை வலியுறுத்தும் இன்றைய நாலடியார் அருமை.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Wed May 21, 2014 10:49 am

நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா

ந.க.துறைவன் wrote:பேதமையை வலியுறுத்தும் இன்றைய நாலடியார் அருமை.

உண்மைதான்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu May 22, 2014 10:00 am

332 பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.

(பொ-ள்.) இல்செய் குறைவினைநீக்கி அறவினை மற்றறிவாம் என்றிருப்பார்மாண்பு- குடும்பத்துக்குச் செய்யவேண்டிய குறைகளைச்செய்து தீர்த்து அறச்செயல்களைப் பின்புகருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கியிருப்பாரது இழிதகைமை, பெருங்கடல் ஆடியசென்றார் ஒருங்கு உடன் ஓசை அவிந்தபின் ஆடுதும்என்றற்று - பெரிய கடலில் நீராடுதற்குச்சென்றவர், முழுதும் ஒருசேர அலையொலி அடங்கியபின்நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.

(க-து.) நடவாத தொன்றை நினைவதுபேதைமையின் இயல்பு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri May 23, 2014 9:29 am

333 குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.

(பொ-ள்.) குலம் தவம் கல்வி குடிமைமூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக்கண்ணும் -நல்லிணக்கம் தவவொழுக்கம் கல்வியறிவு குடிவளம்ஆண்டில் மூத்தோராதல் என்னும் ஐந்தும்தடையின்றிப் பெற்றவிடத்தும்; நலம் சான்ற மைஅறுதொல்சீர் உலகம் அறியாமை நெய் இலாப்பால்சோற்றின் நேர்-இன்பம் நிரம்பிய தீதற்றதொன்மையாகிய இயல்பினையுடைய வீட்டுலகவொழுக்கம் அறியானாயிருத்தல் நெய் இல்லாதபாலடிசிலுக்கு ஒப்பாகும்.

(க-து.) உறுதிப்பொரு ளறியாமைபேதைமையின் இயல்பு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Fri May 23, 2014 12:03 pm

அருமை அருமை அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 21 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 25 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum