Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 14 of 17 • Share
Page 14 of 17 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கிச்சு கிச்சுத் தாம்பூலத்தில்
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன் கண்கள்
என் திசையை மாற்றிய
வழிகாட்டி மரம்
என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும்
ஓடி வந்துவிட முடியாது!
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
எல்லோரும்
ஏறிக்கொள்ளலாம்
என் திசையை மாற்றிய
வழிகாட்டி மரம்
என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும்
ஓடி வந்துவிட முடியாது!
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
எல்லோரும்
ஏறிக்கொள்ளலாம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
rammalar wrote:
நோவாவின் பேழை என்றால் என்ன?
-
நன்றி - http://marmamanaulagam.blogspot.in/2011/12/blog-post_10.html
நோவாவின் பேழை

கிறித்துவர்களின் புனித நூலான விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்தில் நோவாவினுடைய கதை வருகிறது. உலகில் பாவங்கள் அதிகரித்து மனிதர்கள் தீய குணங்கள் உடையவர்களாக இருந்ததினால் இறைவன் இவ்வுலகை மீண்டும் புதுப்பிக்க எண்ணினார். எனவே, மனிதர்களில் நற்குணங்கள் கொண்டவரும் நீதிமானாகவும் திகழ்ந்த நோவவினை தேர்ந்தெடுத்து அவரிடம் உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஒரு ஜோடி விலங்கினங்களும் அவற்றுடன் நோவா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்காக பேழையை உருவாக்குமாறு கட்டளையிட்டார். நோவா பேழையை உருவாக்கியவுடன் தான் பூமிக்கு பெருவெள்ளத்தை அனுப்புவதாகவும் அதில் உலகில் உள்ள அனைத்தும் அழிக்கப்படும் நீயும், உன் குடும்பத்தாரும், எஞ்சிய பேழையிலிருக்கும் உயிரினங்கள் மட்டுமே ஜீவிதிருபீர்கள். வெள்ளம் வடிந்தவுடன் புதுவுலகில் நீங்கள் மேன்மையான வாழ்வை வாழுங்கள் என கட்டளையிட்டார். அதன்படி நோவாவும் பேழையை செய்து முடிக்க பெருவெள்ளம் பூமியை ஆட்க்கொண்டது. அனைத்து உயிரினங்களும் மாண்டன பேழையில் எஞ்சியிருந்தவர்களை தவிர. விவிலியத்தின் கூற்றுப்படி வெள்ளம் வடிந்து நோவாவின் பேழை அரராத் என்னும் மலையின் கீழ் கரை ஒதுங்கியதாக உள்ளது. உலகிலுள்ள அனைத்து தொன்மங்களிலும் இதுப்போன்ற கதைகள் ஏராளம் உள்ளன. முகமதியர்களின் தொன்மமான குரான் இவரை நுவா இஸ்லாம் என்றழைக்கிறது. குரானிலும் அரராத் மலையினை அல்ஜூடி அன்று குறிப்பிட்டு அதனை 'பேழையின் உறைவிடம்' என்று கூறுகிறது.
இதனை ஆதாரமாகக்கொண்டு நோவாவின் பேழைக்கான தேடுதலை தொடங்கிய நேஷனல் ஜியோகிராபிக் தொலைகாட்சி குழுமத்தினர் 2009ஆம் அக்டோபர் மாதம் நோவாவின் பேழையை கண்டுப்பிடித்துள்ளனர். அவ்விடத்தில் செய்யப்பட்ட அனைத்து சோதனைகளும் அது நோவாவின் பேழைதான் என்று நிரூபிக்க போதுமானவையாக உள்ளதாக அவர்கள் தெரிவிகின்றனர். நோவாவின் பேழைக்கான தேடுதலின் கண்ணொளி கீழே.
https://www.youtube.com/watch?v=3PSZNYdfawQ&feature=player_embeded
மேலும் அறிய
http://www.arkdiscovery.com/noah's_ark.htm
விவிலியத்திலும் குரானிலும் மட்டுமல்ல கிரேக்க, இந்து புராணங்களிலும் இவ்வாறான கதைகள் உள்ளன. இந்துக்கள் இவ்வாறாக ஏற்ப்பட்ட பெருவெள்ளத்தினை பிரளையம் என்றும் ஊழிக்காலம் என்றும் அழைக்கிறது. பிரதோஷங்கள் ஏழு வகைப்படும் அவற்றில் ஏழாவதான பிரளையக்கால பிரதோஷத்தினை யாரும் தரிசிக்க முடியாது அன்று இறைவன் ஊழித்தாண்டவம் ஆடுவார் என்று இந்து சமயத்தினரால் நம்பப்படுகிறது. எது எப்படியோ எந்தவொரு தொன்மமும் மனிதனுக்கு நேரிடையாக செய்திகளை வழங்குவதில்லை நாம் தான் அவற்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.
---
நன்றி - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B4%E0%AF%88
நோவாவின் பேழை என்பது நோவா, யாவே கடவுளின் கட்டளைப்படி கட்டிய பெரிய ஒரு கப்பலாகும். பெரு வெள்ளப்பெருக்கு ஒன்றிலிலிருந்து நோவாவையும் அவனது குடும்பத்தையும் உலகில் உள்ள விலங்கு இனங்களையும் காக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. இந்த சம்பவம் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் நூலில் 6 தொடக்கம் 9 ஆம் அதிகாரங்களில் காணப்படுகிறது.
18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், புவியியல், மற்றும் அது சார்ந்த்த துறைகளின் வளர்சி மூலம் ஒரு சில வரலாற்றாய்வாளரால் மட்டுமே வெள்ளப்பெருக்கு ஒன்றை நியாயப்படுத்த முடிந்தது. ஆனாலும் பல விவிலிய ஆய்வாளர்கள் நோவாவின் பேழை தரைத்தட்டியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள அரராத் மலை[1] (வடகிழக்கு துருக்கி) சார்ந்த பிரதேசங்களில் ஆய்வுகளை தொடர்ந்த வண்ணமேயுள்ளனர்.
விவிலிய உறை[தொகு]
வெள்ளப் பெருக்கு:சிசுடீன் ஆலயம்,மைகல் அன்ஞ்சலோ
விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, கடவுள் மனிதரின் தீய செயல்களை கண்டு கோபமுற்றவராக உலகை அழிக்க எண்ணினார். அவர் அம்மனிதரிடையே ஒரே ஒரு நீதிமானாக நோவாவைக் கண்டு, மனித வம்சம் அவர் மூலமாக பூமியி நிலைக்கும் படியாக, நோவாவை காப்பற்ற எண்ணினார். அவர் நோவாவை அழைத்து ஒரு பேழையை செய்யச் சொல்லி அதனுள் அதனுள் அவரது மனைவி,மகன்களான சேம்,ஆம் சாபேத்து என்பவர்களையும் அவர்களின் மனைவியினரையும் உற்பிரவேசிக்க சொன்னார். மேலதிகமாக உலகில் உள்ள எல்ல விலங்குகளிலும் ஒவ்வொரு சோடியையும் விலங்குகளுக்கும் குடும்பத்தாருக்கும் வேண்டிய உணவையும் பேழைகுள் சேர்க்கச் சொன்னார்.[2]
நோவா கடவுள் கூறியபடியே பேழையைக் கட்டி முடித்த பின்பு அவருடைய குடும்பமும் விலங்குகளும் பேழையுள் சென்றது. ஏழுநாள் சென்றபிறகு, "பாதாளத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன" மழை 40 இரவும் பகலும் மழை தொடர்ந்து பெய்தது. இந்த சம்பவத்துக்கு முன்னதாக பூமியில் மழை பெய்த்தாக எந்த குறிப்பும் விவிலியத்தில் காணப்படவில்லை. "வானத்தின் மதகுகள்" என்பது ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஆகயத்துக்கு மேல் இருந்த நீர்[3] பூமியை நோக்கி வீழ்ந்த்தை குறிக்கிறது. வெள்ளம் உலகின் உய்ர்ந்த மலைகளையும் 20 அடிக்கு மேல் மூடியது. நோவாவையும் அவரோடு பேழையிலிருந்த குடும்பதாரையும் விலங்குகளையும் தவிர அனைத்தும் இறந்து போயிற்று.[4]
புறா ஒலிவ இலையுடன் திரும்புதல்
சுமார் 220 நாட்களுக்குப் பிறகு, பேழை அரராத் மலையில் தங்கிற்று, நீர் மேலும் 40 நாட்களுக்கு வழிந்தோடிய போது மலைச்சிகரங்கள் தென்பட்டது. அப்போது நோவா ஒரு காகத்தை வெளியே விட்டார்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த நீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. பின்பு நோவா, பூமியில் நீர் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டார்.பூமிமீதெங்கும் நீர் இருந்தபடியால், திரும்பிப் பேழையிலே அவரிடத்தில் வந்தது. பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டார். அந்தப் புறா சாயங்காலத்தில் அவரிடத்தில் வந்து சேர்ந்தது;அது கொத்திக் கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதன் மூலமாக நோவா பூமியின்மேல் நீர் குறைந்து போயிற்று என்று அறிந்தார். பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவர் புறாவை வெளியே விட்டார்; அது திரும்ப வரவில்லை. அப்பொழுது நோவாவும், அவரின் குமாரரும், அவரின் மனைவியும், குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டு புறப்பட்டு வந்தார்கள்.பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் இனமினமாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.அப்பொழுது நோவா கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டார். அப்பொழுது கடவுள் இனி நான் மனிதன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல சீவன்களையும் சங்கரிப்பதில்லை என்று நோவாவோடு உடன்படிக்கை பன்னினார்.[5]
தமது உறுதிமொழியை நினவுகூறும் வகயில், கடவுள் வானவில்லை முகிலின் மீது வைத்து," பூமிக்கு மேலாக முகில்களை தோற்றுவிக்கும் போது இவ்வில் தோன்றும், அப்போது இவ்வுடன்படிக்கையை நினைவுகூறுவேன்" என்றார்.[6]
இவ்வெள்ளப்பிரலயத்திற்குப் பிறகு விவிலியத்தில் மனிதரின் வயது திடிரென குறைந்தது கவனிக்க தக்கதாகும்.வெள்ளதுக்கு முன்னர் மனிதர் சுமார் 900 ஆண்டுகள் வாழ்ந்தாக கூறப்பட்டுள்ள போதும் வெள்ளப்பெருக்கு பின்னர் மன்னிதனின் வயது 100 ஆக குறந்தது.
பன்னூல் எடுகோட்பாடும் ஊழிவெள்ளமும்[தொகு]
திருச் சட்டச் சுருள்
பேழையை பற்றிய 87 விவிலிய வசனங்கள் சில சந்தர்ப்பங்களில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது: "மனிதன் பாவ வழியில் போனான் அவனை அழிக்க வேண்டும், ஆனால் நோவா நீதிமானானபடியாள் அவரை காப்பாற்ற வேண்டும்" என்ற வசனம் ஏன் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது? (ஆதியாகமம்6:5-8,6:11-13) [7] நோவாவுக்கு எத்தனை சோடி விலங்குகள் பேழையில் சேர்க்க கட்டளையிடப்பட்டது, இரண்டு சோடிகளா? அல்லது ஏழு சோடிகளா? [8] மழை எத்தனை நாட்கள் நீடித்தது 40 நாட்களா? 150 நாட்களா? [9] போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவை பேழைக்கு மட்டும் பொதுவான ஒன்றல்ல, மாறாக ஐந்து திருச்சட்ட நூல்களில் உள்ள பல சம்பவங்கள் கேள்விகுட்படுத்தப்பட்டுள்ளன. இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் செய்யப்பட்ட பல ஆராய்சிகளின் மூலம் முன்வைக்கப்பட்ட கருதுகோள் "பன்னூல் எடுகோட்பாடு " என அழைக்கப்படுகிறது.
இக்கருதுகோளின் பாடி, ஐந்து திருச்சட்ட நூல்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் என்பன கி.மு. ஐந்தாம் நூற்றாணடளவில் நான்கு மூல நூல்களை கொண்டு எழுதப்பட்டவையாகும். பேழையை பற்றிய சம்பவம் இவற்றில் இரண்டான,ஆசாரிய மூலம் (Priestly source) மற்றும் யாவே மூலம் (Jahwist) என்பவற்றை பயன்பாடுத்தி எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்விரண்டு மூலங்களில் முதலாவதான, யாவே மூலம் [10] கி.மு. 920 அளவில் யூத இராச்சியத்தில் எழுதப்பட்டதாகும். யாவே மூலம், ஆசாரிய மூலத்தை விட எளிமையான நடையைக் கொண்டுள்ளது. அதன்படி:கடவுள் 40 நாட்களுக்கு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார். நோவாவும் அவனது குடும்பத்தாரும், விலங்குகளும் (தூய விலங்குகளில் 7 அல்லது 7 சோடிகள், எபிரேய பதம் குழப்பம்மானது) நோவா பலிப்பீடத்தை கட்டி கடவுளுக்கு தகனப்பலி இடுகிறார். கடவுள் மனிதனை இனி நீரால் அழிப்பதில்லை என உறுதிக்கொள்கிறார். யாவே மூலத்தில் கடவுளுக்கும் நோவாவுக்குமிடையான உடன்படிகைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆசாரிய மூலத்தின் உறை [11] வட இஸ்ரவேல் இராச்சியத்தில் கி.மு.722க்கும் கி.மு. 586 க்குமிடையே எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. ஆசாரிய மூலத்தின் உறை யாவே மூலத்தை விட கூடுதலான தகவல்களை கொண்டிருக்கிறது; உதாரணமாக, பேழையின் பரிமாணங்கள், மேலும் கடவுள் செய்த உடன்படிக்கை என்பவற்றை குறிப்பிடலாம்.
பேழை சம்பவத்தின் அடியான மனிதரின் பொல்லாப்பும், கடவுளின் கோபமும் அதனால் வெள்ளம் மூலம் மக்களை அழித்தல் பின்பு வருந்தி இவ்வாறு இனி செய்யமாட்டேன் என கூறியது போன்றவை யாவே மூலத்தி ஆசிரியர்களுக்குரிய பாணியாகும். இவர்கள் கடவுளை மனிதன் போன்ற இயல்பில் வைத்து நோக்கினார்கள். ஆசாரிய மூலத்தில் கடவுள் ஆசாரியர் (குருக்கள்) மூலமாகவன்றி நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதவராக நோக்கப்படுகிறார்.
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கஜல் சிறப்பு. அதற்கான விளக்கம் அறிந்தேன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
எல்லோரும்
ஏறிக்கொள்ளலாம்
[/quote]
அருமை பாராட்டுக்கள்



சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவா!
என் காதல்
கை கூடியிருந்தால்
உன்னை
கை கழுவி விட்டிருப்பேன்
காதலியின்
கட்டளைகளால்
என் உலகம்
சுருங்கிப்போனது
அன்று
எத்தனை பிரச்சினைகள்
இருந்தபோதும்
மகிழ்ச்சி மட்டுமே
நம் மனத்திற்கு வாய்த்திருந்திருக்கிறது
என் காதல்
கை கூடியிருந்தால்
உன்னை
கை கழுவி விட்டிருப்பேன்
காதலியின்
கட்டளைகளால்
என் உலகம்
சுருங்கிப்போனது
அன்று
எத்தனை பிரச்சினைகள்
இருந்தபோதும்
மகிழ்ச்சி மட்டுமே
நம் மனத்திற்கு வாய்த்திருந்திருக்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காலம் நேரம் தெரியாமல்
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையைக் கூட
நீ கேட்க தயாராக இல்லை
வந்த வழியே செல்கிறாய்
இதயத்தில்
புதியதாய்
ஒரு வலி உண்டாகிறது
காதலில்
வரமே சாபங்களாகிறது!
பேசிக்கொண்டிருப்போம்
இன்று
ஒரு வார்த்தையைக் கூட
நீ கேட்க தயாராக இல்லை
வந்த வழியே செல்கிறாய்
இதயத்தில்
புதியதாய்
ஒரு வலி உண்டாகிறது
காதலில்
வரமே சாபங்களாகிறது!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவா!
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்
நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட
தாலிக்கயிறு?
நீ
எந்தக் கதவைத் தட்டினாலும்
திறக்கிறாய்
நீ
அதிசய நிலவு
என் நினைவுகள்
உன்னில்
வளர்வதேயில்லை
நாம்
நம்பிக்கையின்
வார்த்தைகளால்
திருமணம் செய்துகொண்டோம்
நமக்கு ஏன்
நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட
தாலிக்கயிறு?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ பாதை
நான் பயணி
காதல் பாதை
எவ்விடத்தில் முடியும்?
காதலின் நிழல்
சோகம்
எல்லோரும்
அங்கேதான்
இளைப்பாற வேண்டும்
கை நழுவிப் போனவளே!
வா,
புதுப் பாதையில்
விரல் கோர்த்து
நடப்போம்
நான் பயணி
காதல் பாதை
எவ்விடத்தில் முடியும்?
காதலின் நிழல்
சோகம்
எல்லோரும்
அங்கேதான்
இளைப்பாற வேண்டும்
கை நழுவிப் போனவளே!
வா,
புதுப் பாதையில்
விரல் கோர்த்து
நடப்போம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி wrote:கை நழுவிப் போனவளே!
வா,
புதுப் பாதையில்
விரல் கோர்த்து
நடப்போம்
அருமை அருமை கூப்பிட்டால் வருவாளோ
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
முழுமுதலோன் wrote:கவியருவி wrote:கை நழுவிப் போனவளே!
வா,
புதுப் பாதையில்
விரல் கோர்த்து
நடப்போம்
அருமை அருமை கூப்பிட்டால் வருவாளோ
ஒரு ஏக்கம்தான்!!!. கூப்பிட்டுப் பார்த்தேன் ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டாள். அதனால் எழுதிய கவிதை இது.
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன் பக்கம்
நியாயங்கள் இருக்கலாம்
என் பக்கம்
சிறு தவறும் இல்லை
உன்னை இழந்தது
சோகம்தான்
பரவாயில்லை
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றைப்
பெற முடியும்
இறைவா!
என் நினைவுகள்
அவனுக்கு
மகிழ்ச்சியை மட்டுமே
தர வேண்டும்
நியாயங்கள் இருக்கலாம்
என் பக்கம்
சிறு தவறும் இல்லை
உன்னை இழந்தது
சோகம்தான்
பரவாயில்லை
ஒன்றை இழந்துதான்
இன்னொன்றைப்
பெற முடியும்
இறைவா!
என் நினைவுகள்
அவனுக்கு
மகிழ்ச்சியை மட்டுமே
தர வேண்டும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:முழுமுதலோன் wrote:கவியருவி wrote:கை நழுவிப் போனவளே!
வா,
புதுப் பாதையில்
விரல் கோர்த்து
நடப்போம்
அருமை அருமை கூப்பிட்டால் வருவாளோ






Page 14 of 17 • 1 ... 8 ... 13, 14, 15, 16, 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 14 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|